சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The WikiLeaks cables and the US-Australia alliance

விக்கிலீக்ஸ் கசிவும் அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டும்

Patrick O’Connor
15 December 2010

 Use this version to print | Send feedback

கசிந்திருக்கும் அமெரிக்க இராஜதந்திர ஆவணங்கள் எந்த அசாதாரண மட்டத்திற்கு அமெரிக்க அரசானது நாளாந்த ஆஸ்திரேலிய அரசியல் செயல்பாட்டில் தலையீடு செய்து வந்திருக்கிறது என்பதை விரிவாய் எடுத்துக் காட்டியிருக்கிறது. அமெரிக்காவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் உண்மையான தன்மையை அது தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

இரகசிய உளவாளிகள் மற்றும் முகவர்கள் (இவர்கள் ஒவ்வொரு நாடாளுமன்றக் கட்சியிலும் மும்முரமாய் இயங்கி வருகின்றனர்),தொழிற்சங்கங்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு அரசியல் ஸ்தாபனங்களின் ஒரு வலைப்பின்னலின் மூலமாக, அமெரிக்க அரசாங்கமும் உளவு அமைப்புகளும் ஆஸ்திரேலிய அரசியல் வாழ்வின் மும்முரமான பங்கேற்பாளர்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த சக்திகளுக்கான பிரதான வழியாக இருப்பது ஆஸ்திரேலிய தொழிற் கட்சி. கடந்த நூற்றாண்டு முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதியாக காட்டி வந்திருக்கக் கூடிய இந்த கட்சி தான் ஆஸ்திரேலிய முதலாளித்துவ அரசுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதில் மிக முக்கியமான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவை அமெரிக்காவின் ஒரு வாடிக்கையாளர் அரசு என வருணிப்பதும் கூட எந்த வகையிலும் மிகைப்படுத்தப்பட்டதாய் ஆகாது என்பதையே விக்கிலீக்ஸ் கசிவு விளங்கப்படுத்துகிறது. இது நிச்சயமாக சமீபத்திய அபிவிருத்தி அல்ல. ஆனால் முன்னர் ஒருபோதும்,

நாட்டின்ஜனநாயக அமைப்பு என்று சொல்லப்படுவதன் சக்தி உண்மையாக எங்கே தங்கியிருக்கிறது என்பதை விளங்கப்படுத்துகின்ற வகையில் சாதாரண மக்களின் கண்களுக்கு முன்பாக அமெரிக்க திரைமறைவு இராஜதந்திர நடவடிக்கைகள் இந்த அளவு பகிரங்கமாக அம்பலப்பட்டிருக்கவில்லை.

சென்ற ஜூன் மாதத்தில் பிரதமர் கெவின் ரூட் வெளியேற்றப்பட்டது அமெரிக்காவினால் செய்யப்பட்ட ஒரு கவிழ்ப்பு தான் என்பதை விக்கிலீக்ஸ் கசிவு சந்தேகத்திற்கிடமில்லாத விடயமாக ஆக்கியிருக்கிறது என்பது தான் மிகக் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

2008 பிப்ரவரியில், தொழிற் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள்ளாகவே,  ரூட் பற்றிய கவலை அமெரிக்காவிற்கு வந்து விட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளின் சமயத்தில் அது தீவிரப்பட்டது. அமெரிக்காவிடம் முதலில் ஆலோசனை பெறாமலேயே இராஜதந்திர முன்முயற்சிகளை (2008ன் மத்தியில் முன்மொழியப்பட்டஆசிய பசிபிக் சமுதாயம் போன்றவை) தொடக்க பிரதமர் கொண்டிருந்த ஆர்வத்தின் மீது அவர்கள் கவனத்தைக் குவித்தனர். ரூடின் பல்வேறு தந்திரங்களும் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராய்ச் செல்லும் நோக்கம் கொண்டவை அல்ல என்றாலும் கூட, கிழக்கு ஆசியாவிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் அமெரிக்க எதிரியான சீனாவிற்கு எதிராக அமெரிக்க மேலாதிக்கத்தை காப்பாற்றுவதற்கான அமெரிக்க நிர்வாகத்தின் முயற்சிகளுடன் அவை முரண்பட்டவையாக இருந்தன.

அமெரிக்க முதலாளித்துவத்தின் கட்டுப்படுத்த முடியாத வீழ்ச்சியாலும், தனது உலக மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அதன் இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கு செய்கிற பொறுப்பற்ற செயலினாலும் உந்தப்பட்டு, பெருகி வந்த பிராந்திய பதற்றங்கள் உலகளாவிய புவி-மூலோபாய சக்திகளின் சமநிலையில் ஆழமான மாற்றங்களை வெளிப்படுத்தியது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, சீனாவுக்கு எதிரான இராஜதந்திர மற்றும் இராணுவ சுற்றிவளைப்பில் ஆஸ்திரேலியாவுக்கென ஒதுக்கிய இடத்தை அது ஏற்றுக் கொள்வதே ஆஸ்திரேலியாவுக்கான பாத்திரம். பிரதிபலனாக, தெற்கு  பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் சொந்த கபளீகர செயல்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கும்.

2008 மற்றும் 2009 முழுவதிலுமே, ரூட் ஏதோவொரு தவறான ஆசாமியாகத் தான் ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளால் பார்க்கப்படுவது அதிகரித்து வந்தது. சீனா தொடர்பாக அவர் மீது நம்பிக்கை வைக்க முடியவில்லை என்பதோடு ஆப்கானிஸ்தான் போரிலும் போதுமான உறுதிப்பாடற்று இருந்தார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்களது உளவாளிகளின் துணையுடன், தூதரக அலுவலர்கள் மாற்று முயற்சிகளுக்கு ஆள்சேர்க்கத் தொடங்கினர். 2008ன் மத்தியில் துணைப் பிரதமரான ஜூலியா கிலார்டு தான் ரூடிற்குப் பின் அநேகமாய் பிரதமராவார் என்று அடையாளம் காணப்பட்டார். கட்சியின்இடது அம்சங்களில் இருந்த அவரது மூலங்கள் அவரது வலது-சாரி, அமெரிக்க ஆதரவு தன்மைகளில் எந்தவொரு களங்கமாகவும் இல்லை என்று தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க புள்ளிகள் தனிப்பட்ட வகையில் அமெரிக்க அதிகாரிகளுக்கு உறுதியளித்தனர். தனக்கு திறக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளைக் குறித்து தெளிவாய் விழிப்பு கொண்ட கிலார்ட், அமெரிக்க தூதரகம் மற்றும் இஸ்ரேல் அரசாங்கத்துடன் கூடுதல் சாதகமாக நடந்து கொள்வதன் மூலம் பதிலிறுப்பு செய்தார். அவர் திடீரென்று அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் பெரும் அனுதாபத்தை பெற்றுக் கொண்டாரா அல்லது அவரது நடவடிக்கைகள் வெறுமனே “ALP தலைவராக என்ன செய்ய வேண்டும் என்று அவர் கருதுவதின் பிரதிபலிப்பா என்று ஒரு அதிகாரி ஆச்சரியம் கொண்டார்.

தயாரிப்பின்றி மனதிலிருந்து வெளிப்பட்ட இந்த கருத்து தொழிற்கட்சியின் அரசியல் சாமுத்திரிகா இலட்சணத்தை சுட்டிக் காட்டுகிறது. தொழிற்கட்சி எந்திரம், தாயகத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பெரு வணிக நலன்களை அமல்படுத்துவதற்கான ஒரு சாதனமாகவும் அமெரிக்காவின் உலக திட்டநிரலைக் கொண்டுசெல்லும் ஒரு பெல்ட் ஆகவும் ஆகியிருக்கிறதே அன்றி வேறொன்றுமில்லை.

அமெரிக்க அதிகாரிகளுடன் நெருக்கமான உறவுகளைப் பராமரித்து வந்த தொழிற்கட்சியின் வலதுசாரி கன்னையின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களால், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு எதிரான ஜனநாயக விரோத கவிழ்ப்பு முயற்சி ஆஸ்திரேலிய மக்களின் முதுகுக்குப் பின்னால் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், சம்பந்தப்பட்ட முன்னணி நிர்வாகியான செனட்டர் மார்க் ஆர்பிப், இப்போது தூதரகத்தின் இரகசியபாதுகாக்கப்பட்ட மூலங்களில் ஒருவராக அறியப்பட்டு வருபவர் ஆவார். ஆஸ்திரேலிய அரசியலில் தலையீடு செய்த ஒரு நெடிய வரலாற்றை அமெரிக்கா கொண்டிருக்கிறது. இதில் மிகக் குறிப்பிடத்தக்க சம்பவம் 1975 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது கஃப் விட்லேமின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஒரு ஸ்திரம்குலைக்கும் பிரச்சாரத்தை சிஐஏ அதிகரித்தது. இது நவம்பர் 11 கவிழ்ப்பில் வந்து முடிந்தது. 

ரூட் அகற்றப்பட்ட உடனடியான பிந்தைய சமயத்தில், உலக சோசலிச வலைத் தளம் எழுதுகையில், ஜூன் 23-24 சமயத்தில் நடந்த கேவலமான சம்பவங்களில் அமெரிக்காவின் பிரதான பாத்திரம் குறித்து சுட்டிக் காட்டியிருந்தது. அது மட்டும் தான் அவ்வாறு எழுதியிருந்தது. கிலார்ட் பதவியமர்த்தப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னர் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் பின்வருமாறு விளக்கியது: “முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, முதலாளித்துவ அமைப்புமுறையின் சென்ற பெரும் உலகளாவிய நெருக்கடியின் மத்தியில், அரசு எந்திர மேலிடங்களும் அத்தோடு அமெரிக்க சிஐஏ உள்ளிட்ட உளவு அமைப்புகளும் சம்பந்தப்பட்டிருந்த ஒரு கவிழ்ப்பில் விட்லேமின் தொழிற்கட்சி அரசாங்கம் நீக்கப்பட்டது. ரூட் வெளியேற்றப்பட்டிருந்ததிலும் இந்த சக்திகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தன அல்லது குறைந்தபட்சம் அதனை முன்கூட்டி அறிந்து வைத்திருந்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”

அந்த அறிக்கை இவ்வாறு முடித்தது: “புவி-அரசியல் மாற்றங்களுடன் ஆஸ்திரேலியா தீவிர உணர்நிலையில் இருக்கிறது. சாய்கோனில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தோல்வியுற்று, தென் கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கு மிகப்பெரும் நிச்சயமற்ற நிலைமை நிலவியதான சூழ்நிலையில், ஏழு மாதங்களுக்குள்ளாக விட்லேமின் அரசாங்கம் பதவிநீக்கப்பட்டது. இன்றோ, புவி-அரசியல் நிலைமைகளின் மைய அம்சங்களில் ஒன்றாக அமெரிக்கா மற்றும் சீனா இடையில் அதிகரித்து வரும் பதற்றம் இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா பொருளாதார ரீதியாக சீனாவைச் சார்ந்தும் அதேசமயத்தில் அரசியல்ரீதியாக அமெரிக்காவுக்கு அடிபணிந்து இருக்கிறதுமான நிலைமைகளின் கீழ் இச்சூழ்நிலை உள்ளது. தெற்கு பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் முழுவதிலும், ‘சீனா காரணி என்பது இப்போது பெரும் அரசியல் விவகாரப் பிரச்சினையாக உள்ளது.” (காணவும்: “ஆஸ்திரேலிய தொழிற்கட்சி கவிழ்ப்பு: தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு எச்சரிக்கை”)  

ஆறு மாதங்களுக்கும் குறைவானதொரு காலத்தில், இந்த பகுப்பாய்வு முழுக்க சரியென நிரூபணமானது. இந்த கவிழ்ப்பே, சோ... அறிக்கையில் அடையாளம் காணப்பட்டிருந்த வெடிப்புமிக்க புவிமூலோபாய பதற்றங்களும் அவற்றுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்குள்ளாக சமூக ஏற்றத்தாழ்வின் முன்கண்டிராத அளவுகளால் எரியூட்டப்பட்டிருந்த ஆழமுற்ற வர்க்க குரோதங்களும் இனியும் பழைய நாடாளுமன்றவாத சட்டகத்திற்குள்ளாக சமாளிக்கப்பட முடியாது என்கிற உண்மையின் ஒரு வெளிப்பாடாகவே அமைந்தது. மேலும், ஆஸ்திரேலிய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான எந்த உறுதிப்பாட்டையும் பராமரிக்கின்ற உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபகத்தின் எந்த ஒரு பிரிவும் இருக்கவில்லை என்பதையும் அது விளங்கப்படுத்தியது.  

சீனாவுக்கு எதிராக படைவலிமையைப் பயன்படுத்துவதை பரிசீலிக்குமாறு ரூட் அமெரிக்க வெளியுறவுச் செயலரை வலியுறுத்தி இருந்ததும், 2006ல் அப்போதைய தொழிற்கட்சி தலைவரான கிம் பீஸ்லி சீனாவுக்கு எதிராக அமெரிக்கா போர் நடத்தினால் அப்போது ஆஸ்திரேலியா போரில் அமெரிக்காவின் பக்கம் இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு வாக்குறுதி அளித்திருந்ததும் விக்கிலீக்ஸ் கசிவுகளால் வெளிப்பட்டிருக்கின்றன. இந்த அசாதாரணமான வாக்குறுதிகள் எல்லாம் ஒருபோதும் பொது அரங்கிற்கு வரவில்லை.

முதலாம் உலகப் போரில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பாதுகாக்க ஆஸ்திரேலியாகடைசி உயிரும் கடைசி ஷில்லிங்கும் உள்ளவரை போராடும் என்று தொழிற்கட்சி தலைவர்கள் தங்களது பிரிட்டிஷ் மேலதிகாரிகளுக்கு வாக்குறுதியளித்தனர். ஒரு நூற்றாண்டின் பின்னர், அவர்களின் சகாக்கள் மக்களின் தலைவிதியை பொறுப்பற்ற அமெரிக்க போர் எந்திரத்துடன் பிணைத்து அதன் பாதுகாப்பை பொறுப்பற்ற வகையில் அபாயத்திற்குள்ளாக்கி இருக்கின்றனர். பிராந்தியத்தின் அணு ஆயுதம் தாங்கிய போட்டி நாடுகளுக்கு இடையே தீ பற்றியெரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இது நிகழ்கிறது.

ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கு ஒரு அணு ஆயுத பெருங்கேட்டிற்கு உறுதிப்பாடு கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தை எதிர்நோக்கும் நெருக்கும் பணியாக இருப்பது அதன் சொந்த சுயாதீனமான அரசியல் பதிலடியை அபிவிருத்தி செய்வதாகும். இதற்கு தொழிற்கட்சியில் இருந்தும், தொழிற்சங்கங்களில் இருந்தும் மற்றும் பசுமைவாதிகள் உள்ளிட்ட அதன் பல்வேறு ஒட்டு அமைப்புகளில் இருந்தும் நனவுடன் முறித்துக் கொள்வதும், அமெரிக்க, சீன மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு ஒரு புதிய வெகுஜன புரட்சிகர சோசலிசக் கட்சியை அபிவிருத்தி செய்வதற்குப் போராடுவதும் அவசியமாய் உள்ளது. அந்த கட்சி தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலியப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி ஆகும்.