சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Ten years since Bush v. Gore: The stolen election of 2000    

புஷ் எதிர் கோர் பத்து ஆண்டுகளுக்குப் பின்: திருடப்பட்ட 2000ம் ஆண்டுத் தேர்தல்

By Patrick Martin
13 December 2010

Use this version to print | Send feedback

அமெரிக்க தலைமை நீதிமன்றம் 2000ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் உறுதியாகத் தலையிட்டு அதன் முடிவை நிர்ணயித்து 10 ஆண்டுகள் முடிவதை டிசம்பர் 12 ஞாயிறு குறிக்கிறது. புளோரிடாவில் வாக்குகள் எண்ணப்பட்டதை அது நிறுத்தி வெள்ளை மாளிகையை ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கு அளித்தது. Bush எதிர்  Gore வழக்கில் 5-4 என்று கொடுக்கப்பட்ட தீர்ப்பு, ஜனநாயகக் கட்சியின் இழிந்த சரண்டைதலுடன் இணைந்து, அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு மைல்கல்லாக விளங்கியது.

அன்றாட வாழ்வில் புஷ் நிர்வாகம் தோற்றுவித்த சங்கடங்களின் சமூக, அரசியல் பின்னணி பெரிதும் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கச் செய்தி ஊடகமும், அரசியல் கருத்துக்களை உருவாக்குவர்களும் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் இருத்திய நிகழ்வில் பத்தாவது ஆண்டு நிறைவைப் பற்றி கணிசமான கவனத்தைக் காட்டும் என்று நினைக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், உண்மையில் பெரும் அதிரச்சியைக் காட்டும் வகையில்தான் ஊடகத்தின் மௌனம் உள்ளது. இரு முக்கியமான தேசிய செய்தித் தாள்களான நியூ யோர்க் டைம்ஸோ அல்லது வாஷிங்டன் போஸ்ட்டோ இந்நிகழ்வைப் பற்றி நினைவு கூரும் கட்டுரைகளை வெளியிடவில்லை. அவற்றின் உதாரணம் பிராந்திய, உள்ளூர் செய்தி ஊடகம் மற்றும் தொலைக்காட்சி இணையங்களாலும் பின்பற்றப்பட்டன. Bush எதிர் Gore வழக்கில் மாறுபட்ட தீர்ப்பைக் கொடுத்த நான்கு நீதிபதிகளில் ஒருவரான மேல்நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் பிரெயர், ஞாயிறன்று ஒரு அபூர்வமான பேட்டியை பாக்ஸ் நியூஸிற்குக் கொடுத்தார். ஆனால் இந்த விடயம்பற்றி விவாதிக்கப்படவில்லை.

ஒரே ஒரு முதலாளித்துவப் பண்டிதர், வலதுசாரிக் கட்டுரையாளர் ஜோர்ஜ் வில் தான் இப்பிரச்சினையை எடுத்துக் கொண்டார். அவரும் தலைமை நீதிமன்ற நடவடிக்கையை மிகக் குறைந்த அல்லது நீடித்த முக்கியத்துவமே இல்லாத நிகழ்ச்சி என்று உதறித்தள்ளி, இத்தீர்ப்பு பற்றிய தீவிர ஆர்வ விவாதங்கள்விரைவில் மறைந்துவிட்டனஎன்றும் தேர்தலுக்குப் பிந்தைய நெருக்கடியினால்மிகக் குறைந்த சேதம்தான் ஏற்பட்டதுஎன்றும் கூறிவிட்டார்.

ஆனால் வில் இன் அதிக கவனமற்ற சர்ச்சை பற்றிய நினைவுகூரலில் முற்றிலும் ஜனநாயக விரோதக் கருத்துக்கள்தான் அடங்கியிருந்தன-“வாக்குகளைத் திறமையின்றிப் போட்டவர்களுடைய வாக்குகள்வெறுமே ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும், நீதிமன்றத்தின் முன் இருந்த முக்கியமான அடிப்படை உரிமைமாநிலச் சட்ட மன்றங்களின் உரிமைகள்என்றும் கூறப்பட்டுள்ளது (புளோரிடாவைப் பொறுத்தவரை அங்கு குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது). அவைதான் வாக்களிக்கும் வழிவகைகள் பற்றியமிக்குயர் அதிகாரத்தைநிர்ணயிக்க முடியும் என்ற வாதம்தான் முன்வைத்து ஏற்கப்பட்டது.

Bush எதிர் Gore வழக்கில் ஐந்து நீதிபதிகள் பெரும்பான்மையுடன் வில் உடன்படுகின்றார். அதாவது மத்தியப் பிரச்சினைக்குரிய விடயம் புளோரிடா மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பது இல்லை, வேறுவிதமாகக் கூறினால் ஒவ்வொரு வாக்கும் எண்ணப்பட வேண்டியதில்லை-மோதலை விரைவான முடிவிற்கு அரசியல் வலது விரும்பும் முடிவிற்குக் கொண்டுவருதல் என்பதுதான். இதையொட்டி மக்கள் மொத்த வாக்குகளின் முடிவு புறக்கணிக்கப்பட்டது. அதுவோ ஜனநாயக்கட்சி வேட்பாளர் அல் கோருக்கு கிடைத்திருந்தது.

பெயரளவிற்குதாராளவாதம்என்றுள்ள ஊடகத்தின் மௌனமும் ஒரு குற்றம் சார்ந்த தன்மை உடையதுதான்மிக நீண்ட காலம் முன்பு என்று இல்லாமல், ஜனநாயகக் கட்சி மற்றும் தாராளவாதச் செய்தி ஊடகம் ஒரு வலதுசாரி நீதித்துறை வழி ஆட்சி மாற்றத்திற்கு சரண்டைந்தது குறித்து வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப்பார்க்க அவை விரும்பவில்லை. ஆனால் அதன் முடிவோ அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக வலதுசாரித்தனம் கொண்ட அரசாங்கம் நிறுவப்பட்டதுதான்.

2000 நவம்பர் 7 தேர்தல்கள்

நவம்பர் 7 செவ்வாய் இரவிலிருந்து நவம்பர் 8 புதன் அதிகாலை வரை நடந்த 2000ம் ஆண்டுத் தேர்தல் தினத்தின் நிகழ்வுகள், அமெரிக்க அரசியலில் மிகவும் அசாதாரணமானவற்றில் ஒன்றாகும். ஆயினும்கூட அவை எந்த அரசியல் பிரச்சினைகளும் தீவிரமாக விவாதிக்கப்படாத மிகச்சாதாரண ஜனாதிபதித் தேர்தலின் தன்மையையடுத்து வந்தன. அரசியல் பண்டிதர்கள் மற்றும் கருத்துக் கணிப்பாளர்களிடையே இருந்த ஒருமித்த உணர்வு அப்பொழுது டெக்சாஸ் ஆளுனராக இருந்த புஷ் ஒரு குறுகிய ஆனால் குறிப்பிடத்தக்களவு வாக்குகளை அதிகமாக அவருடைய ஜனநாயகக் கட்சி எதிர் வேட்பாளர் துணை ஜனாதிபதி அல் கோரைவிடக் கொண்டிருந்தார் என்பதுதான்.

ஆனால் 1998 ஐ போலவே பெரிய குற்ற விசாரணைக்கு நடுவே முக்கிய குடியரசுக் கட்சி ஆதாயங்கள் வரும் என்ற கணிப்புக்கள் தோற்றுவிட்ட நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டபோது அரசியல் ஆளும்தட்டினர் குடியரசுக் கட்சியின் வலதுசாரி வேலைத்திட்டம் பற்றி கொண்டிருந்த வெகுஜன எதிர்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது போல் தோன்றியது. இந்த விரோதப் போக்கு செல்வந்தர்களுக்கு வரிக் குறைப்புக்கள் மற்றும் உள்நாட்டு சமூகநலச் செலவுகள் குறைப்பு ஆகியவற்றைத் தளமாகக் கொண்டிருந்தது.

மிச்சிகன், பென்சில்வேனியா உட்பட பல பெரிய தொழில்துறை வளர்ச்சி அடைந்துள்ள மாநிலங்களில் கோர் வெற்றிபெற்றிருந்தார். ஜனநாயகக் கட்சியினர் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் வெற்றியை அடைந்தனர், பசிபிக் கடலோரப் பகுதியிலும் வெற்றிபெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. புஷ் தெற்கு தென் மேற்கு, ராக்கி மௌன்டன் மாநிலங்கள் மற்றும் ஒகையோவில் ஆதரவு பெற்றார். தேர்தல் முடிவுகள் தேர்வாளர் கூடத்திலுள்ள புளோரிடாவின் 25 வாக்குகள் மூலம் நிர்ணயிக்கப்படும் என்று தோன்றியது.

இரவு 8 மணிக்கு முன்பு பல அமெரிக்கத் தொலைக்காட்சி இணையங்கள் புளோரிடாவில் வெற்றி கோருக்கே என்று அறிவித்தன. நாள் முழுவதும் வாக்காளர்கள் வாக்குகள் போட்டபின் கொடுத்த தகவல்களை ஒட்டி இக்கணிப்பு வந்தது. புஷ் பிரச்சாரகர்கள் உடனடியாக இதை எதிர்கொண்டனர். முன்னோடிகளை முறித்த வகையில், வேட்பாளரை தொலைக்காட்சி காமெராக்கள் முன் நிறுத்தி இணைய தளங்களின் கணிப்புக்களைக் கண்டித்து அவருடைய சகோதரர் ஜெப் ஆளுனராகவும் குடியரசுக்கட்சி மாநில அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் நிலையிலுமுள்ள புளோரிடா அவர் பக்கம்தான் உறுதியாக  நிற்கும் என்று கூறின

இணைய தளங்கள் பின்வாங்கின, கோருக்கான தங்கள் வாழ்த்துக்களை நிறுத்தி வைத்து புளோரிடா முடிவுகள் இன்னும் உறுதியாகவில்லை என்று அறிவித்தன. அதன்பின், புதன்கிழமை அதிகாலையில் பாக்ஸ் நியூஸ் புளோரிடா புஷ்ஷிற்கு வாக்களித்துள்ளது என்று கூறிய முதல் செய்தி நிறுவனமாயிற்று. அதையொட்டி அவரைத் தேர்தலில் வெற்றிபெற்றவர் என்றும் அறிவித்தது.

இணைய தளம் வாக்கு மொத்தங்களை பரிசீலித்து கணிப்புக்களை தயாரிக்கும் முடிவெடுக்கும் குழுவிற்கு தலைவராக இருந்தவர் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் நெருங்கிய உறவினர் ஆன ஜோன் டபுள்யூ எல்லீஸ் ஆவார். Voter News Service  என அழைக்கப்படும் முக்கியச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி இணையங்களின் குழு முடிவு ஏதும் கூறுமுன் எல்லீஸ் ஒருதலைப்பட்சமாக புஷ் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறினார். அதிகாலை 2 மணிக்குப்பின் ஒரு தொலைபேசி விவாதம் புஷ்ஷுடனும் அவருடைய சகோதரர் ஜெப்புடனும் நடந்தது.

மற்ற இணையங்களும் இவ்வாறு தொடர்ந்து புஷ் வெற்றிபெற்றுவிட்டார் என்று கூறியவுடன், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோர், புஷ்ஷிடம் தொலைபேசியில் தான் தோற்றதை ஒப்புக் கொண்டார். ஆனால் தொலைக்காட்சியில் இந்த ஒப்புதல் உரையை நாஷ்வில்லே ஆதரவாளர்கள் முன் பேசுவதற்கு முன்னதாக, பிரச்சாரக உதவியாளர்கள் அவருடன் தொலைபேசியில் புளோரிடா எண்ணிக்கை மிகவும் நெருக்கமாக உள்ளது, உறுதியாக எதையும் கூறுவதற்கு இல்லை என்றனர். கோர் புஷ்ஷிற்கு மீண்டும் தொலைபேசியில் தான் தோற்றுவிட்டதாக ஒப்புக் கொண்டதிலிருந்து பின்வாங்கினார்.

இந்த நிகழ்ச்சிகள் பின்னர் வரவிருப்பதற்கு முக்கியத்துவத்தைக் கொண்டவை. செய்தி ஊடகத் தகவல், கோரின் முன்கூட்டிய ஒப்புதல் ஆகியவை மக்களுக்கு புஷ் புளோரிடாவில்வெற்றி பெற்றுவிட்டார்அதையொட்டி தேசியத் தேர்தலிலும் ஒரு குறுகிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றுவிட்டார் என்ற உணர்வைக் கொடுத்தனநெருக்கடிக்காலம் முழுவதும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருந்த செய்தி ஊடகம் உத்தியோகபூர்வ குடியரசுக் கட்சியின் நிலைப்பாடான புஷ்தான் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதையே கிளிப்பிள்ளை போல் கூறிக்கொண்டிருந்தன. தேசியளவிலான மக்களின் மொத்த வாக்கில் கோரே கணிசமான வாக்கில் வெற்றிபெற்றுவிட்டார், கிட்டத்தட்ட அரை மில்லியன் வாக்குகளில் என்பது, முக்கியத்துவம் இல்லை என்று உதறித்தள்ளப்பட்டது.

புளோரிடாவில் போராட்டம்

அவருடைய பிரச்சாரக் குழுவிற்கு பரந்த அளவில் ஏராளமான முறைகேடுகள் புளோரிடா வாக்களிப்பில் நடந்துள்ளன, இதில் ஜனநாயகக் கட்சிக்கு விழவேண்டிய வாக்குகள் கறுப்பு வாக்காளர்களை ஒருதலைப்பட்சமாக தடை செய்யப்பட்டதும் அடங்கும் என்ற தவகல்கள் வந்த வண்ணம் இருந்ததால், கோரே தான் புஷ்ஷிற்கு ஒப்புதல் கொடுத்ததைப் பின் வாங்கிக் கொண்டார். பாம் பீச் என்னும் ஒரு தொகுதியின் பிரிவில் மட்டும் ஜனாதிபதி வேட்பாளருக்குப் போடப்பட்ட 19,000 வாக்குகள் செல்லுபடியாகாதவை என்று ஒதுக்கப்பட்டன. ஏனெனில் வாக்காளர்கள் வாக்குப் பதிவுச்சீட்டில் இருந்த அமைப்பினால் குழம்பியதால் ஒன்றிற்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்திருந்தனர். மிக அதிகமாக யூதர்கள் வாழும் மற்றொரு பாம் பீச் பிரிவில் ஆயிரக்கணக்கான வாக்குகள் வலதுசாரி சுயேச்சை வேட்பாளர் பாட்ரிக் புஹ்ஹானனுக்குப் பிழையாக வாக்களித்திருந்தனர்.

மியாமி-டேட் பிரிவில் புஷ்ஷிற்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் ஹைட்டிய குடியேற்ற மக்கள் வசித்த பகுதிகளில் வழங்கப்பட்டதாகப் பல தகவல்கள் வந்தன. ஜாக்சன்வில்லே நகரம் அடங்கிய டுவல் பிரிவில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலானவீணானவாக்குகள் தொகுதியில் 14 பிரிவுகளில் இருந்து வந்தன. இவற்றில் பெரும்பாலான மக்கள் கறுப்பு மக்கள், கோருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். சில கறுப்பு மக்கள் பகுதிகளில் வீணானவாக்குகள் எண்ணிக்கை 31 சதவிகிதம் என உயர்ந்திருந்தது.

புளோரிடா சட்டப்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீண்டும் பழையபடி எண்ணப்பட்டதில் புஷ்ஷிற்கு இருந்த ஆதரவு வித்தியாசம் 1,725ல் இருந்து 327 வாக்குகளாகக் குறைந்தன. ஆனால் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் இன்னும் எண்ணப்படவில்லை, அவை நான்கு பெருநகரப் பிரிவுகளில் குவிந்திருந்தன-மியாமி-டேட், ப்ரோவர்ட், வோலிசியா மற்றும் பாம் பீச்; அவ்விடங்களில் கணிசமான ஜனநாயகக் கட்சிப் பெரும்பான்மை இருந்தது. உள்ளூர் அதிகாரிகள் இப்பிரிவுகளில் இயந்திரம் இன்றி கைவழியே வாக்குகளை எண்ணத் தொடங்கினர்.

குடியரசுக் கட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மாநில அரசாங்கம் இப்படி வாக்கு எண்ணப்படுவதை தடுக்க நுழைந்தது. புளோரிடா மாநில அரச செயலர் காதரைன் ஹாரிஸ், புளோரிடா மாநிலத்தில் புஷ் பிரச்சாரத்திற்கு இணைத்தலைவராகவும், ஒரு புஷ் தேர்வாளராகவும் இருந்தவர் முதலில் வாக்குக் கணக்கு எடுத்தல் நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அது நீதிமன்றத்தில் மறுக்கப்பட்டபின் அவர் நவம்பர் 14க்குள் இறுதி விவரங்களை அறிவிக்க வேண்டும் என்பதை விரிவுபடுத்த முடியாது என்றார். அவருடைய நடவடிக்கைகள் முதலில் வாக்கு எண்ணப்படுவதை நிறுத்தியது குறிப்பிட்ட நேரத்திற்குள் வாக்குகள் மறு எண்ணப்படுதலை நான்கு பிரிவுகளில் மூன்றில் முடிக்க முடியாமற் செய்த போதிலும், இந்த முடிவைத்தான் அவர் எடுத்தார்.

அனைத்து வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு திமிர்த்தனமான எதிர்ப்பு காட்டப்பட்டது துவக்கத்திலிருந்து புஷ்ஷின் முகாம் கொண்டிருந்த நிலைப்பாட்டுடன் இயைந்துதான் நின்றது. இதைத்தவிர தவறான தகவல்கள், பொய்களும் சேர்க்கப்பட்டன. புஷ்ஷின் மறு எண்ணப்படுதல் குழுவின் தலைவரான முன்னாள் அரச செயலர் ஜேம்ஸ் பேக்கர் இயந்திரங்கள் மூலம் எண்ணப்படுவது கரங்களால் எண்ணப்படுவதைவிட கூடுதல் நம்பிக்கை உடையது என்று அறிவித்தார். ஆனால் கைகளால் எண்ணப்படுவதுதான் உயர்ந்த தரம் உடையது என்று பெரும்பாலான மாநிலங்களில் ஏற்கப்பட்டுள்ளது. புஷ்ஷே டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு சட்டத்தை அதற்கு ஆதரவாக இயற்றியிருந்தார்.

புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர்கள் தொடர்ச்சியாக புளோரிடா வாக்குகள் பல முறை எண்ணப்பட்டுவிட்டன, ஒவ்வொரு முறையும் குடியரசு வேட்பாளர்தான் வெற்றிபெற்றுள்ளார் என்று அறிவித்த வண்ணம் இருந்தனர். ஆனால் அந்த நேரத்திலும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லை. அத்தகைய பொய்களின் நோக்கம் புஷ்ஷின் வெற்றிக்கு புளோரிடாவில் விழுந்த வாக்குகள் நசுக்கப்படுதல் தேவை என்று போனதுதான்.

ஜனநாயகக் கட்சி மற்றும் கோர் பிரச்சாரக் குழு இந்த வழிவகை ஏமாற்றுத்தன ஆட்சிமுறைக்கு காட்டிய விடையிறுப்பு காலம் தாழ்ந்தும், அரைமனத்துடனும் வந்தது. ஹாரிஸின் முடிவிற்கு எதிராக கோரின் பிரச்சாரக் குழு நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால் மாநிலம் முழுவதும் என்பதற்குப் பதிலாக நான்கு பெரிய நகரங்களில் மட்டும் மறு எண்ணிக்கை போதும் என்று கேட்டுக் கொண்டது. புஷ் பிரச்சாரத்தின் கடுமையான ஒருதலைப்பட்சம் மற்றும் ஆக்கிரோஷத்திற்கு முற்றிலும் மாறாக, புளோரிடா மறு எண்ணல் முயற்சியை இயக்குவதற்கு முன்னாள் அரச செயலர் வாரன் கிறிஸ்டோபரிடம் கோர் ஒப்படைத்தார். அவர் ஒரு பெருநிறுவன வக்கீல், நீதிமன்ற வழக்குகள் மீது விரோதப் போக்கு கொண்டவர். மேலும் அமெரிக்க மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு முறையீடு செய்ய வேண்டும் என்பதை நிராகரித்தவர்.

வாக்களிக்கும் உரிமை பற்றிய பிரச்சினை

வெள்ளி, நவம்பர் 17ம் திகதி புளோரிடாவில் ஒரு உள்ளூர் நீதிபதி அனைத்து வாக்கு எண்ணப்படுதலும் நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டபோது பிரச்சினை ஒரு மோதலுக்கு வந்தது. அத்தீர்ப்பு சில மணி நேரங்களில் புளோரிடா மாநில அரச உச்சநீதி மன்றத்தால் மாற்றப்பட்டது. அது ஹாரிசை மாநிலத் தேர்வாளர் குழு வாக்குகளில் வெற்றி பெற்றவர் என்று அறிவிப்பதைத் தடுத்து நிறுத்தி மியாமி-டேட், பிரோவர்ட் மற்றும் பாம் பீச் பிரிவுளில் எண்ணிக்கை மறுபடியும் தொடங்க வேண்டும், குறைந்த காலத்திற்கேனும் என்று உத்தரவிட்டது.

நான்கு நாட்களுக்குப் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டு மாநில அதிகாரிகள் கையால் எண்ணப்பட்ட வாக்கு முடிவுகளை ஏற்று சான்று கொடுக்க வேண்டும், இது புளோரிடா குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையின் அடிப்படையில், அவர்கள் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது எனக்கூறியது. புளோரிடா மாநில அரசியலமைப்பை மேற்கோளிட்டு ஏழு நீதிபதிகளும் தீர்ப்புரையில், “வாக்களிக்கும் உரிமை என்பது உரிமைகள் பிரகடனத்தில் தலையாய உரிமை ஆகும், இந்த அடிப்படை உரிமை இல்லாவிடின், மற்ற உரிமைகள் அனைத்தும் குறைந்துவிடும்என்று எழுதினார்கள்.

தேர்தல் சட்டங்களின் நோக்கம் சில நுட்பரீதியான கருத்துக்களில் தோற்றதால் ஒருதலைப்பட்சமாக வாக்காளர்களை ஒதுக்கி வைப்பதற்கு அல்ல, “நம் பிரதிநிதித்துவ ஜனநாயக முறையில் ஒவ்வொரு வாக்காளரும் அவருடைய விருப்பத்தைத் தெரிவிக்கும் உரிமையை வசதிப்படுத்திப் பாதுகாப்பதுதான்.”

புஷ்ஷின் குழு இதற்கு நீதிமன்றத்தின் மீது கடுமையான தாக்குதல் என்ற வகையில் விடையிறுத்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு சட்டப்பூர்வ மேல்முறையீட்டை செய்து, மாநில நீதிமன்றத்தின் முடிவிற்கு எதிராக எந்த வழிவகையையும், தேவையானால் வன்முறையைக்கூட கையாள்வது என்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது.

குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த மாநிலச் சட்டமன்றம் சட்டம் ஒன்றை இயற்றித் தலையிட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அது புளோரிடாவில் 25 தேர்வாளர் குழுவிற்கு புஷ்ஷிற்காக வாக்களிக்கும்-வாக்காளர்களில் விருப்பம் எப்படி இருந்தாலும். புளோரிடா சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தகைய நடவடிக்கைக்குத் தயாரிப்பு நடத்தினர். டிசம்பர் 12 தான் மாநிலங்கள் வாஷிங்டனுக்கு தேர்வாளர் குழுப் பட்டியலைக் கொடுக்கும் காலக்கெடு என்ற போலிக்காரணம் இதற்குப் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க தலைநகரில், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் தாங்கள் புளோரிடாவிலிருந்து வரும் ஜனநாயகத் தேர்வுக்குழு உறுப்பினர்களை, ஜனவரி மாதம் உத்தியோகபூர்வமாக தேர்வாளர் குழு வாக்குகள் எண்ணப்படுகையில் ஏற்க மாட்டோம் என்ற கருத்தைத் தெரிவித்தனர்.

புஷ்ஷின் பிரச்சாரம் இராணுவமும் தலையிட வேண்டும் என்ற பகிரங்க முறையீட்டைச் செய்தது. அப்பிரச்சாரகர்கள் கோரின் பிரச்சாரமும் புளோரிடா ஜனநாயகக் கட்சியும் வெளிநாட்டில் இருக்கும் இராணுவத்தினரின் வாக்குகளை ஒதுக்க முற்படுவதாகக் கூறினர். புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் மார்க் ராசிகோட், “நான் கூறுவதற்கு வருத்தப்படுகிறேன், ஆனால் துணை ஜனாதிபதியின் வக்கீல்கள் போருக்குச் சென்றுள்ளனர். என்னுடைய கருத்தில் அவர்கள் நம் ஆயுதப்படையினரில் பணியாற்றுபவர்களுக்கு எதிராகச் சென்றுள்ளனர்என்று அறிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பிற்கு மறுநாள் புஷ்ஷின் ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்று மியாமி-டேட் பிரிவின் பிரச்சாரகர் குழுவை முற்றுகையிட்டு, ஜனநாயகக் கட்சி வக்கீல் ஒருவரைத் தாக்கியதுடன், கைகளால் எண்ணுவதில் ஈடுபட்டுள்ளவர்களைத் தாக்கப் போவதாகவும் அச்சுறுத்தினர். சில மணி நேரங்கள் கழித்து ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டின் கீழிருந்த குழு அது மறு எண்ணிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கை நூற்றுக்கணக்கான கோர் ஆதரவாளர்கள், மூல இயந்திரக் கணக்கில் பதிவாகாதவர்களின் வாக்குகளை திறமையுடன் அகற்றிவிட்டது.

பாம் பீச் மற்றும் பிரோவர்ட் மறு எண்ணிக்கைகளின் முடிவு புஷ்ஷின்  மாநிலம் தழுவிய முன்னிலையை 537 வாக்குகள் என்று குறைத்தன. மாநிலத்தில் மிகப் பெரிய தொகுதியான, ஜனநாயகக் கட்சிக்குப் பெரும் ஆதரவளித்திருந்த மியாமி-டேட் இதேபோன்ற மறு எண்ணப்படல் நடத்தியிருந்தால், மிகச் சிறிய புஷ்ஷின் முன்னிலை அழிக்கப்பட்டிருக்கும் என்பது ஏற்பட்டிருக்கக் கூடியதே. இந்நிலையில் ஜனநாயகக் கட்சியினர் மியாமி-டேயில் சரண்டைந்தது காதரைன் ஹாரிஸை புஷ்தான் மாநில தேர்வாளர் குழு வாக்குகளில் வெற்றிபெற்றவர் என்று நவம்பர் 26ம் தேதி அறிவிக்க உதவியது.

உயர் நீதிமன்றம் தலையிடுகின்றது

குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டிருந்த அதிகப் பெரும்பான்மை கொண்ட கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் புஷ் பிரச்சாரகர்கள் கோரிய புளோரிடா மறு எண்ணிக்கை பற்றிய சட்ட அதிகாரத்தை எடுத்துக் கொள்ள மறுத்ததுஇதற்காக அது புளோரிடா தலைமை நீதிமன்றம் மாநிலச் சட்டம் பற்றி விளக்கம் கொடுத்து இறுதித் தீர்ப்புக்கள் வழங்கும் உரிமையை தான் கொண்டிருப்பதை காட்டியது. புஷ் பிரச்சாரகர்கள் அமெரிக்கத் தலைமை நீதிமன்றத்திற்கு முறையீடு செய்தனர். அது டிசம்பர் 1ம் தேதி வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது.

மூன்று வலதுசாரி நீதிபதிகள், தலைமை நீதிபதி வில்லியம் ரெஹ்ன்க்விஸ்ட், நீதிபதி ஆன்டோயின் ஸ்கேலியா மற்றும் நீதிபதி கிளாரன்ஸ் தோமஸ் ஆகியோர் விசாரணையில் முன்னின்றனர். புளோரிடா மாநில உயர் நீதிமன்றம் வாக்களிப்பதை மிக உயர்ந்ததாக காட்டிஅமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது விதியை மீறுவது என்ற கருத்தைத் தெரிவித்தனர். அது மாநிலச் சட்ட மன்றங்களுக்குத்தான் எப்படி தேர்வாளர் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற முடிவைக் கொடுத்திருந்தது. ஜனாதிபதிக்கு இதில் அரசியலமைப்பு உரிமை ஏதும் இல்லை என்று ஸ்கேலியா கூறினார்.

அதேபோல் மிதவாதப்போக்கிலிருந்து தாராளவாதிகள் வரை இருந்த நான்கு உறுப்பினர்கள் பிரிவோ, கோரின் வக்கீல் லாரன்ஸ் டிரைப்போ இத்தகைய சர்வாதிகாரவாதத்தின் மீது நேரடித் தாக்குதலை மேற்கொள்ளவில்லை. டிரைப் செய்யக்கூடியதெல்லாம், “இப்படி மக்கள் வாக்குகளைத் தகர்ப்பது, இதுதான் நடப்பது அனைத்தும், மக்களை வாக்கிழக்கச் செய்வது நல்லது அல்லஎன்று தடுமாற்றத்துடன் முணுமுணுக்க முடிந்ததுதான்.

டிசம்பர் 4ம் திகதி, திங்களன்று, அமெரிக்க உயர்நீதிமன்றம் ஒரு ஒருமனதான தீர்ப்பை அளித்தது. இதன்படி வழக்கு மீண்டும் புளோரிடா தலைமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுக் கட்சியின் மாநில அதிகாரிகளை எந்த அடிப்படையில் புளோரிடா நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர் என்பதைத் தெளிவாக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஒருமனதான தீர்ப்பில் இரண்டாவது விதி பற்றிய வாதமும் இருந்தது. இத்தீர்ப்பு ரெஹ்ன்க்விஸ்ட், ஸ்கேலியா மற்றும் தோமசால் கொடுக்கப்பட்டது.

புளோரிடா உயர்நீதிமன்றம் மீண்டும் புஷ் மற்றும் கோர் பிரச்சாரக் குழுவினர் முன்வைத்த வாதங்களைக் கேட்டது, அதே போல் பல பிரிவுகளில் மறு எண்ணிக்கைக்கு எதிரான கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களையும் பரிசீலித்தது. வெள்ளியன்று, டிசம்பர் 8ம் திகதி, அது அனைத்துதவறானவாக்குகளும்” (துளையிடப்பட்ட அட்டையில் வாக்காளர்கள் வாக்கைக் கண்டுபிடிக்க முடியாத வாக்குச் சீட்டுக்கள்) அனைத்து புளோரிடா தொகுதிகளிலும் மறு எண்ணிக்கைக்கு உட்பட வேண்டும் என்றது. இதையொட்டி வாக்காளர்கள் விருப்பம் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்படும், வாக்கு எண்ணப்படும்.

பெரும்பான்மை மக்கள் இறைமையின் அடிப்படைக் கோட்பாடுகளை மீண்டும் உறுதிபடுத்தியது: “தேர்தல் முடிவுகள் மக்கள் விருப்பத்தால் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்னும் இந்த அடிப்படைக் கோட்பாடுதான், புளோரிடா சட்டமன்றத்தால் இயற்றப்பட்டுள்ள சட்டத்தொகுப்பின் அஸ்திவாரத்தை நிறுவுகிறது. இந்நீதிமன்றம் அதைத்தான் தொடர்ச்சியாக தேர்தல் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்துகிறது. நாம் நம் ஜனநாயக சமூகத்தில் கட்டுமானத்தின் சாரத்தைப் பற்றி ஆராய்கிறோம்என்று பெரும்பான்மைத் தீர்ப்பு கூறியது.

புஷ் பிரச்சாரகர்கள் உடனே இம்முடிவை எதிர்த்து அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஒரு நாள் கழிந்தபின், புளோரிடா முழுவதும் தேர்தல் அதிகாரிகள் மறு எண்ணிக்கை தொடங்கியபோது, உயர்நீதிமன்றம் ஒரு அவசரக்கால உத்தரவைப் பிறப்பித்து அதை நிறுத்தியது. 5-4 என்ற விகிதத்தில் வெளியிடப்பட்ட தீர்ப்பு ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கு, மனுதாரருக்கு, “ஈடுசெய்யப்பட முடியாத தீங்குஇதனால் விளையும் என்று கண்டது-அதாவது வாக்குகள் முறையாக எண்ணப்பட்டால் அது அவருக்கு ஜனாதிபதி பதவியை இழக்கச் செய்துவிடும் என்று.

நான்கு நபர்களைக் கொண்ட தாராளவாதச் சிறுபான்மை கூட்டாட்சி நீதிமன்றங்கள் மரபார்ந்த முறையில் மாநில நீதிமன்றங்களுக்கு மாநில அரசியலமைப்பு, மாநிலத் தேர்தல்கள் பற்றிய விளக்கங்களுக்கு மதிப்புக்கொடுத்தபோது, ஐந்து நபர்களைக் கொண்ட பெரும்பான்மைமாநில உரிமைகளுக்கு ஆதரவு என்ற தங்கள் வாடிக்கையான நிலைப்பாட்டைக் கைவிட்டது. அதுவும் குடியரசுக் கட்சி, அதன் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களுடைய நலன்கள் வரும்போது.

மூன்று நாட்களுக்குப் பிறகு இதே 5-4 பெரும்பான்மை அதன் இறுதித் தீர்ப்பில்  நிலைமையில் மறு எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய தாமதமான ஒரு சரியான சிக்கலான நிலையான (இது அதன் ஆணையால்தான் ஏற்பட்டது), தேர்வாளர்களுக்கு சான்றிதழ் கொடுக்கும் டிசம்பர் காலக்கெடுவிற்குள்  மறு எண்ணிக்கை நடத்தப்பட முடியாது என்று அறிவித்தது. இதையொட்டி தேர்வுக்குழு புஷ்ஷின் சார்பாளர்களுக்கு என்று குடியரசுக் கட்சிக் கட்டுப்பாட்டில் இருந்த மாநில அரசாங்கத்தின் முடிவு உறுதி செய்யப்பட்டது.

இரு தீவிர வலதுசாரி  உறுப்பினர்கள் மற்ற இரு கன்சர்வேடிவ்களிடமிருந்து உடன்பாட்டைப் பெற முடியாததால்-அதாவது சாண்ட்ரா டே ஓகானர், ஆன்டனி கென்னடி ஆகியோருடையதை-ஸ்கேலியாவின் விதி II பற்றிய கூற்றான அமெரிக்க மக்களுக்கு ஜனாதிபதிக்கு வாக்களிக்கும் அரசியலமைப்பு உரிமை இல்லை என்ற தளத்தை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றப் பெரும்பான்மை முற்றிலும் புதிய சட்ட வாதம் மூலம் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விளைவை ஆதரிக்க முடிவெடுத்தது. அதாவது புஷ் வெள்ளைமாளிகையில் இருத்தப்பட வேண்டும் என்பதை.

புளோரிடா நீதிமன்றத் தீர்ப்பான 64 பிரிவுகளிலுள்ள தேர்தல் அதிகாரிகள், அரசியலமைப்பு 14ம் திருத்தத்தின்படி தேவையானசட்டம் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்என்பதை மீறும்  நோக்கமுடைய வகையில், வாக்காளர் விருப்பத் தரங்களை நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். முன்னோடியில்லாத இழிந்த தன்மையில் ரெஹ்ன்க்விஸ்ட், ஸ்கேலியா மற்றும் தோமஸ், தவிர்க்க முடியாமல் எப்பொழுதும்சமமான பாதுகாப்புவாதத்திற்கு விரோதமானவர்கள்-அதுவும் மனுதாரர்கள் கறுப்பினத்தவர்கள், ஹிஸ்பானிக், பெண்கள், வறியவர் அல்லது அரசியலில் அனுகூலமற்று இருப்பவர்களிடம் இருந்து வந்தால், இப்பொழுது ஒரு முன்னாள் ஜனாதிபதியின் மில்லியனர் மகனின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தைத் தழுவினர்.

நீதிபதி ஜோன் போல் ஸ்டீவன்ஸ், சிறுபான்மை எதிர்த்தீர்ப்பில் எழுதினார்: “இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவருடைய அடையாளத்தை முழு உறுதியுடன் ஒருக்காலும் நாம் அறிய முடியாவிட்டாலும், தோற்றவருடைய அடையாளம் தெளிவாகிறது. இது சட்டத்தின் நடைமுறைக்கு நடுநிலைப் பாதுகாப்பாளர் என்ற நீதிபதி மீதுள்ள நாட்டின் நம்பிக்கையாகும்.”

ஜனநாயகக் கட்சியினர் சரணடைதல்

வெளிப்படையாக ஒருபக்க ஆதரவையும் ஜனநாயக விரோதப் போக்கையும் கொண்டிருந்த உயர் நீதிமன்றப் பெரும்பான்மைகளுக்கு கோர் பிரச்சாரக் குழு நிபந்தனையற்று சரண்டைந்தது இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்ட ஒரு நாளைக்கு முன் டிசம்பர் 11 நடைபெற்ற விசாரணையின் போது நன்கு புலனாயிற்று. கோரின் முக்கிய வக்கீல் டேவிட் போல்ஸ் ஸ்கேலியாவின் நிலைப்பாட்டில் அடங்கியிருந்த ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் பற்றி ஏதும் பேசவில்லை. இருஊசலாடும்நீதிபதிகள் ஓகானர், கென்னடி ஆகியோரை சட்டவகை நுட்பம் காட்டி முறையிட்டார்.

கோரின் பிரச்சாரத்தின் பொதுச் செய்தித் தொடர்பாளர்களும் ஜனநாயகக் கட்சியும் பலமுறையும் உயர்நீதிமன்றத்தின் நடுநிலைமை, நியாய உணர்வு பற்றி தங்கள் முழு நம்பிக்கையை அறிவித்தனர். அதேபோல் என்ன முடிவு கொடுக்கப்பட்டாலும் அதற்கு இணங்கும் உறுதியையும் கூறினர். தீர்ப்புக் கூறப்பட்டபோது, கோர் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி தான் சரண்டைந்ததை அறிவித்து ஜோர்ஜ் டபுள்யூ புஷ் ஜனாதிபதித் தன்மையையும் நெறியானது என்று தழுவினார்.

புளோரிடா நெருக்கடிக்கு முன்பே கோர் பிரச்சாரத்தின் முழு நடவடிக்கையும் இச்சரண்டைதலின் முன்னிழலைக் கொண்டிருந்தது. கோர் தன்னுடைய துணை ஜனாதிபதி வேட்பாளராக செனட்டர் ஜோசப் லீபர்மான்னை தேர்ந்தெடுத்தார். அவர் செனட் ஜனநாயகக் கட்சியிலேயே அதிக வலதுசாரித் தன்மை கொண்டவர். இதற்குக் காரணம் ஒருவேளை அவர் முன்பு பகிரங்கமாக ஜனாதிபதி பில் கிளின்டனை மோனிக்கா லெவின்ஸ்கி பாலியல் ஊழலில் பகிரங்கமாகக் கண்டித்து இருக்கக்கூடும்.

புளோரிடா நெருக்கடி முழுவதும் லீபர்மன் கிட்டத்தட்ட ஒரு குடியரசுக் கட்சி சொத்துப் போல்தான் செயல்பட்டார். வாக்கு எண்ணப்படுதல், தேர்தல் கடத்தப்படுதல் ஆகிய முயற்சிகளை அடக்குவதில்தான் தீவிரமாக இருந்தார். மேலும் புஷ் முகாமில் இருந்து வந்த வாதங்களையும் அடிக்கடி எதிரொலித்தார்.

ஆனால் கோர் தான் இதற்கு வழிவகுத்தார். ஆரம்பத்தில் நான்கு பிரிவுகளில் மறு எண்ணப்படல் போதும் என்று வரையறுத்தார். நீதிமன்றங்கள் மீது முழுக்குவிப்புக் காட்டும் வழிவகைக்கு ஆதரவாக தொழிலாளர் வர்க்க ஆதரவைத் திரட்டும் ஒரு பொது அரசியல் பிரச்சாரம் துவக்கப்படுவதையும் எதிர்த்தார். ஒரு கட்டத்தில், வெளிநாடுகளிலிருந்த இராணுவத் துருப்பினர் முறையற்று வாக்குகள் போட்ட வினா எழுந்தபோது, கோர் பிரச்சினையைப் பெரிதுபடுத்த வேண்டாம், இராணுவத்தைப் பகைத்துக் கொண்டு அவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்று கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சான்றுகள்

2000 தேர்தல் நெருக்கடியில் ஆபத்திற்குட்பட்ட ஜனநாயக உரிமைகளின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி உலக சோசலிச வலைத் தளம்  உடனடியாக இனம்கண்டிருந்தது. சோசலிஸ்ட்டுக்கள் என்ற முறையில் அது  இரு பெரு வணிகக் கட்சிகளின் கொள்கையை எதிர்த்தது. கோருக்கோ ஜனநாயகக் கட்சிக்கோ நாம் அரசியல் ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் சிறிதும் தளர்வின்றி நாம் புஷ் பிரச்சார முயற்சி, தீவிரவாதிகள் தேர்தலைத் திருடுவது போன்ற முயற்சியை எதிர்த்தோம். மேலும் பிரச்சார முயற்சி அமெரிக்க மக்களுக்குப் பேரழிவான தாக்கங்களைக் கொண்டுள்ளது என்றும் எச்சரித்தோம்.

2000 தேர்தல் தினத்தன்று வெளியிட்ட முதல் அறிக்கையிலேயே நாங்கள் எழுதினோம்: “2000 ஆண்டுத் தேர்தல்களின் நெருக்கடி சமூக முரண்பாடுகளின் வளர்ச்சியைத் தீவிரமான கட்டத்தில் பிரதிபலிக்கும் வகையில் அவை இருக்கும் அரசியல், அரசியலமைப்பு, வடிவமைப்பிற்குள் தீர்க்கப்பட முடியாது என்பதைப் பிரதிபலிக்கிறது…. மிகவும் அடிப்படையானது சமூக சமத்துவமின்மையில் மாபெரும் வளர்ச்சி ஆகும். இது 1920 களுக்குப் பின்னர் அமெரிக்காவில் காணப்படாத விகிதங்களை அடைந்துவிட்டது. பெரும் செல்வம் கொழித்த உயர்மட்டத்திற்கும் பெரும்பாலான மக்களுக்கும் இடையேயுள்ள பிளவு ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் பொருந்தியிருக்க முடியாதது ஆகும்.”

உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு சில நாட்கள் முன்புதான் சிட்னியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் WSWS உடைய சர்வதேச ஆசிரியர்குழுத் தலைவர் டேவிட் நோர்த் கூறினார்: “இந்த நீதிமன்றத்தின் முடிவு என்ன என்பது எந்த அளவிற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் மரபார்ந்த ஜனநாயக, அரசியல் நெறிகளை முறிப்பதற்குத் தயாராக உள்ளது என்பதை வெளிப்படுத்தும். வாக்கு மோசடிக்கும், வாக்குகளை நசுக்குவதற்கும் ஒப்புதல் கொடுக்க அது தயாராக உள்ளதா? வெள்ளை மாளிகையில் அப்பட்டமான சட்டவிரோத, ஜனநாயக விரோத வழிவகைகளைக் கையாளும்  ஒரு வேட்பாளரை இருத்த அது தயாரா?’

புளோரிடா நெருக்கடி தேனீர்க் கோப்பைக்குள் ஒரு புயல் என்று அறிவித்து அதன் முக்கியத்துவத்தை உதறித் தள்ளவிட்ட அதி தீவிரமற்ற மத்தியதர வகுப்புஇடதுஅமைப்புக்கள் போலன்றி, மார்க்சிச இயக்கம் அதன் பகுப்பாய்வை எப்படி அரசியல் நெருக்கடி ஏற்பட்டது, அமெரிக்காவில் வர்க்க மோதல்கள் தீவிரமாவதின் வெளிப்பாடாக இருந்தது என்று புரிந்து கொண்ட தன்மையில் அளித்தது.

அமெரிக்கா இப்பொழுது முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளின் மிகச் சமத்துவமற்ற நிலையைக் கொண்டுள்ளது, சமூகத்தின் மேற்பரப்பில் வெளிப்படையான வர்க்க மோதல் இல்லாவிடினும்கூட சமூக அழுத்தங்கள் மிகத் தீவிரமாகிவிட்டன என்று நோர்த் விளக்கினார். “உண்மையில், சமூக சமத்துவமின்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில், அரசியல் உணர்மையுடனான வர்க்கப் போராட்டம் இல்லாத நிலையில், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் சமூக அழுத்தங்களை தீவிரமாக கொண்டுள்ளதைத்தான் காட்டுகிறது.”

2000 ஆண்டுத் தேர்தலை பற்றிய நெருக்கடி ஒரு அமெரிக்க நெருக்கடி மட்டும் அல்ல, ஒரு உலக நெருக்கடி, ஏனெனில் இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஸ்திரமின்மையைப் பிரதிபலிக்கிறது, இதுதான் 20ம் நூற்றாண்டு முழுவதும் உலக ஏகாதிபத்தியத்தின் பாதுகாவலனாக இருந்தது என்று நோர்த் முடிவுரையாகக் கூறினார்.

மார்க்சிசத்தின் சாத்தியப்பாட்டை சந்தேகப்பட்டவர்கள் அல்லது மறுத்த அனைவருடைய அடிப்படை நம்பிக்கை இறுதியில் முதலாளித்துவம் எத்தகைய பிரச்சினையை உலகில் எப்பகுதியில் எதிர்கொண்டாலும் அமெரிக்க முதலாளித்துவம் அதைக் காப்பாற்றிவிடும் என்று இருந்ததுஎன்றார் நோர்த். “இப்பொழுது அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வுகள் உலக முதலாளித்துவத்தின் விவகாரங்கள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையின் கீழ் பாதுகாப்பாக இருந்த நீடித்த காலம் முடிவடைந்து விட்டது என்பதைக் காட்டுகின்றன. அத்தகைய பங்கை இனி அமெரிக்கா கொள்ள முடியாது. எப்படி நீடித்தாலும், 2000ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.”

இந்த நெருக்கடிக்காலம் முழுவதும் பொய், ஆத்திரமூட்டுதல் ஆகியவற்றின் மூலம் மக்களுடைய விருப்பத்திற்கு எதிராக இருத்தப்பட்ட ஒரு அரசாங்கம் உள்நாடு, வெளிநாட்டுக் கொள்கைகளில் தன்னை ஒரே மாதிரியாகத்தான் நடத்திக் கொள்ளும் என்று WSWS  எச்சரித்தது. இந்த எச்சரிக்கைகள் சரியென மீண்டும் மீண்டும் இதைத் தொடர்ந்த தசாப்தத்தில் நிரூபிக்கப்பட்டன: ஆப்கானிஸ்தான், ஈராக்கில் இரு சட்ட விரோத ஆக்கிரமிப்புப் போர்கள்; கூட்டாட்சி அரசாங்கத்தின் பொலிஸ் அதிகாரங்களின் கட்டமைப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரானது என்ற போலிக்காரணம் காட்டப்பட்டு வளர்க்கப்பட்டது; உண்மையில் அது அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக இயக்கப்படுவது ஆகும். இது வோல் ஸ்ட்ரீட் 2008ல் சரிவுற்றதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இப்பொழுது பெரும் மந்தநிலைக் காலத்திற்கு பின்னர் உலகம் முழுவதும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சரிந்துவிட்டது.

மேலதிக வாசிப்பிற்கு

WSWS ஆசிரியர்குழுத் தலைவர் டேவிட் நோர்த்  ஆஸ்திரேலியாவில் சிட்னியில்  தலைமை நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் கொடுத்த உரை பற்றி கீழே உள்ளதைப் பார்க்கவும்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருக்கடியின் அரசியல் சிறப்பு முக்கியத்துவமும் வரலாற்று தாக்கங்களும்

2000 தேர்தல் நெருக்கடி பற்றி WSWS கொடுத்த அன்றாடப் பகுப்பாய்வைக் காண கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்ட கட்டுரைகளையும், ஆசிரியர் குழு அறிக்கைகளையும் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

தொழிலாள வர்க்கமும் 2000ம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தல்களும்

அரசியல் குற்றச்சாட்டு தொடக்கம் கறைபடிந்த தேர்தல் வரை: ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான சதி தொடர்கிறது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: குடியரசுக் கட்சி வலதுசாரிகள் வன்முறைக்கு தயார் செய்கிறார்கள்

அமெரிக்க தேர்தல் நெருக்கடியில் நீதிமன்றத் தீர்ப்புகள் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்

புளோரிடா மாநில வாக்குகள் மீள எண்ணப்படுவதற்கு உயர்நீதிமன்றம் தடை: அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஒரு கரிநாள்