சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

The “Hegel renaissance” and other questions

A comment on The Cambridge Companion to Hegel and Nineteenth-Century Philosophy

"ஹெகலின் மறுமலர்ச்சியும்", பிற பிரச்சினைகளும்

The Cambridge Companion to Hegel and Nineteenth-Century Philosophy என்ற புத்தகத்திற்கு ஒரு விமர்சனம்

By Alexander Fangmann
5 November 2009

Use this version to print | Send feedback

நூலின் பெயர்: The Cambridge Companion to Hegel and Nineteenth-Century Philosophy; தொகுத்தவர்: Frederick C. Beiser: வெளியீடு: Cambridge University Press, 2008 New York and Cambridge (UK). Paperback (ISBN-13: 9780521539388), விலை: $32.99. 

ஃப்ரெடரிக் சி. பேசரால் தொகுக்கப்பட்ட The Cambridge Companion to Hegel and Nineteenth-Century Philosophy புத்தகத்தை கடந்த ஆண்டு பார்க்க நேரிட்டது. Cambridge Companion இன் தொகுப்பு ஒரு குறிப்பிட்ட மெய்யியலின் மீதோ அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீதோ பல அறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பைக் கொண்டிருக்கிறது. அவை அவற்றின் விஷயங்களில் அறிமுக ஆதார வேலையாக எழுதப்பட்டிருக்கின்றன என்பதுடன் பெரும்பாலும் அவை மேல்நிலை பள்ளிகளிலும், இளங்கலை கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்களாக பயன்படுத்தப்படுகின்றன. அதன் தொகுப்பாளர்களும், அதில் பங்களித்திருப்பவர்களும் பொதுவாக ஏனைய மெய்யியல் ஆய்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்கள். இந்த தொகுப்பு புதிய ஆராய்ச்சிகளையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது. அந்த காரணத்திற்காக, இந்த கட்டுரைகளில் இருப்பவை கல்வித்துறை மெய்யியலிலும், அதைச் சுற்றியும் இருக்கும் ஒரு பரந்த மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் அறிஞர்களின் தற்போதைய நிலைமையை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கக்கூடும். இந்த ஆராய்ச்சியின் மிகவும் சுவாரசியமான கண்டுபிடிப்புகளில் சிலவற்றை ஆராய்வதும், அதன் மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகளில் சிலவற்றை விமர்சிப்பதுமே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.  

"திகைப்பூட்டும் ஹெகல் மறுமலர்ச்சி" என்று பேசரின் முகவுரை குறிப்பிடுவது போல, 1993இல் The Cambridge Companion to Hegel வெளியிடப்பட்டதிலிருந்து, ஹெகலைக் குறித்த ஆர்வம் கணிசமாக உயர்ந்துள்ளது. அவருடைய மெய்யியல் மீது பெரும் எண்ணிக்கையிலான ஆய்வுப்பணிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. பேசரின் கருத்துப்படி, இதுவே இந்த புதிய கட்டுரைகள் தொகுப்பின் தயாரிப்பிற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் ஹெகலைக் குறித்த Cambridge Companion இன் முதல் வெளியீட்டில் இல்லாத, இயற்கை மற்றும் மத மெய்யியல் போன்ற சில குறிப்பிட்ட தலைப்புகளின் கட்டுரைகளையும் மற்றும் இளம் கல்வியாளர்களின் எழுத்துக்களையும் அத்துடன் ஏற்கனவே இருக்கும் அனுபவவாதிகளின் புதிய கட்டுரைகளையும் சேர்ப்பதற்கான விருப்பமும் இதன் தயாரிப்பிற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஹெகலின் பணிக்கும், ஏனைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபல்யமானவர்கள் -எடுத்துக்காட்டாக மார்க்ஸ் போன்ற - பிரபல்யமானவர்களுக்கும் இடையிலான தொடர்பை புத்தகத்தின் தலைப்பு வலியுறுத்துகிற போதினும், பேசர் அவருடைய முகவுரையில் குறிப்பிட்டதைப் போல, இதை புதிய கட்டுரைகள் சேர்க்கப்பட்ட The Cambridge Companion to Hegel இன் இரண்டாம் தொகுதியாகவே பெருமளவிற்கு உணர முடிகிறது. ஹெகலின் சமகாலத்திய மற்றும் அவரைப் பின்பற்றிய ஏனைய மெய்யியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின், வரலாற்றை அடிப்படையாக கொள்ளாத-வரலாற்றைச் சாராத சிந்தனையாளர்களின் ஆதாரங்கள் இதில் மிக குறைவாகவே காட்டப்பட்டிருக்கின்றன. உண்மையில், Cambridge Companion மூலநூல், ஆலன் உட்டால் எழுதப்பட்ட “Hegel and Marxism,” அத்துடன் பீட்டர் ஹெல்டனால் எழுதப்பட்ட “Hegel and Analytic Philosophy” ஆகிய கட்டுரைகளைக் கொண்டிருந்தது. ஆனால் இந்த புதிய தொகுதியில் பேசருக்கு அறிமுகமானவர்களை தவிர வேறு நபர்களின் கட்டுரைகள் இடம் பெறவில்லை. இந்த தொகுதி, 1831இல் ஹெகலின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய சிந்தனை எவ்வாறு உள்வாங்கப்பட்டிருக்கிறது என்பதை நேரடியாக கையாள்கிறது.

மிக முக்கிய குறைபாடாக இருக்கும் இது, ஹெகல் ஆய்வுகளின் ஆரம்ப காலகட்டங்களிலிருந்து ஒருபடி பின்னோக்கி சென்றிருப்பதைக் குறிக்கிறது. ஹெகலிய கருத்துக்களை ஏனைய சிந்தனையாளர்கள் (குறிப்பாக மார்க்ஸ்) உள்வாங்கியதை ஆராயாமல் ஹெகலை ஒருவர் புரிந்து கொள்வதென்பது அர்த்தமற்றதும், பின்னோக்கிய வீழ்ச்சியுமே ஆகும். ஹெகலுடைய கருத்துக்கள் வெறுமனே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மேதையின் கைவண்ணத்தில் வந்தவை அல்ல; அவை உள்வாங்கப்பட்டவிதம் மற்றும் அவற்றின் அபிவிருத்தி ஆகியவற்றால் மட்டும் தான் அவற்றின் உண்மையான முக்கியத்துவத்தையும், அர்த்தத்தையும் அளவிட முடியும். மார்க்ஸூம், ஏங்கல்ஸூம் ஹெகலிய முறையைக் குறித்து மிக பிரகாசமான விமர்சனங்களை மட்டும் அளிக்கவில்லை. ஹெகலால் செய்யப்பட்ட தத்துவார்த்த அபிவிருத்திகளைப் பாராட்டிய மற்றும் அவற்றை ஒரு விஞ்ஞான சடவாத அடித்தளத்தில் கொண்டு போய் நிறுத்திய முதல் சிந்தனையாளர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். ஹெகலை இல்லாமல் செய்யவும், அவரை அகநிலைவாதத்தின் பல வடிவத்தில் திருப்பவும் மெய்யியலாளர்களால் (Schopenhauer, Nietzsche மற்றும் நவ-கான்டியன்கள், நேர்மறைவாதிகள், இதரபிறரால்) தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில் மார்க்ஸூம், ஏங்கல்ஸூம் இல்லையென்றால், இந்த தொகுதியே உருவாக்கப்படாமல் போயிருக்கலாம்.

வெளிப்படையாக இருக்கும் இந்த விசித்தரமான இயல்நிகழ்வுக்கு பேசர் ஒரு விளக்கம் அளிக்க முயற்சிக்கிறார், அதாவது: மெய்யியல் பேராசிரியர்களின் ஒரு பிரிவினரிடையே ஹெகல் மீதான தீவிர ஆர்வம் சார்புரீதியாக சமீபத்தில் வளர்ந்திருக்கிறது. அவர் குறிப்பிடுகிறார், “ஆர்வத்தில் ஏற்பட்டிருக்கும் இதுபோன்றவொரு எழுச்சி எந்தவொரு மெய்யியலாளருக்கும், அதுவும் குறிப்பாக சில ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்டவராக கருதப்பட்ட ஒருவருக்குக் குறிப்பிடத்தக்கதாகும். (1) ஆங்கிலம்-பேசும் நாடுகளில் கல்வித்துறை மெய்யியலாளர்கள், ஹெகலை ஒன்றுக்கும் உதவாத குழப்பவாதியாகவும், பாசிசம் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு ஓர் அறிவுஜீவித்தனமான அடித்தளம் அளிப்பதில் பொறுப்பாகி இருந்த ஓர் அபாயகரமான வெற்றுவார்த்தையாடளானாகவும் (charlatan) கருதி பெரும்பாலும் ஹெகலை புறக்கணித்தார்கள் என்பதில் எந்த பெரிய இரகசியமும் இல்லை. ஜேம்ஸ் பேர்ன்ஹாம் அவருடைய “Science and Style”இல் “the century-dead arch-muddler of human thought” ("நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன மனித சிந்தனையின் பிரதான-குழப்பவாதி) என்று ஹெகலை பாத்திரப்படுத்திய விதம், இன்றும்கூட மெய்யியலாளர்களின் ஒரு கணிசமான பிரிவினரின் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

'ஹெகலினுடைய சிந்தனை மார்க்ஸிற்கும், மார்க்சிசத்திற்கும் இட்டுச்சென்றதாக பார்க்கப்பட்டது' என்ற உண்மையிலிருந்து தான் ஹெகல் மீதான பெரும் அதிருப்தி உணர்வு அதன் ஆதாரங்களைக் காண்கிறது. ஆனால், சோவியத் ஒன்றியத்தின் சிதைவு மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச அரசுகளின் பொறிவிற்குப் பின்னர், “நன்மைக்கோ அல்லது தீமைக்கோ-மார்க்சிசம் அதன் பெருமையிலிருந்து ஒரு செங்குத்தான சரிவைச் சந்தித்தது. அவ்வேளையில் மார்க்ஸின் நட்சத்திர அந்தஸ்து வீழ்ந்த உடனே, ஹெகலினுடையது மேலெழுந்தது," என்பதை பேசர் ஒப்புக்கொள்கிறார். பாதையிலிருந்து மார்க்சிசம் வெளியேறியதும், ஹெகல் மீண்டும் அரசியல்ரீதியாக அச்சுறுத்தலில்லாதவராக நோக்கப்பட்டதுடன்; மேலும் "லைப்னிஜ் மற்றும் கான்ட் ஆகியோருக்கு அருகில் அவர் தலைசிறந்த மெய்யியலாளர்கள் கூட்டத்தில் தம்முடைய இடத்தை மீண்டும் பெற்றார்" என்பது தெளிவான உட்குறிப்பாக இருக்கிறது. (2) மெய்யியல் பணிகளை மதிப்பிடுவது பெரும்பாலும் அதன் பிரபலத்தன்மை மற்றும் வாதங்களின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இருந்தது! கல்வித்துறையால் அவை ஏற்கப்படுவது அல்லது நிராகரிக்கப்படுவதென்பது அரசியல்ரீதியாக கவனிக்கப்படுவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தது என்ற இந்த கருத்து அரிதாகத்தான் வெளிப்படுத்தப்படுகிறது.

ஹெகலை உயிர்ப்பிக்கும் ஆர்வத்தில் கல்வித்துறையின் பொருள்விளக்கங்களே (interpretations) பெரும்பாலும் பெரும் பங்குவகிக்கின்றன என்று பேசர் அவருடைய கட்டுரையின் மீதிப்பகுதியில் விளக்குகிறார். சமகாலத்திய மெய்யியல் பிரச்சினைகளை மேலும் அதிகப்படுத்துவதற்காக அவை "காலக்குளறுபடியுடன்" ஹெகலை விளங்கப்படுத்தி இருக்கின்றன. பேசரின் மதிப்பீட்டில், ராபர்ட் பிபினும் ராபர்ட் பிராண்டமும் (Robert Pippin, Robert Brandom) இந்த "காலக்குளறுபடி" அணுகுமுறையின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். பல்வேறு விஷயங்களில் வித்தியாசப்பட்டிருக்கும் இவர்கள், மாறாநிலைவாதம் மற்றும் மத பரிமாணங்களை சமகாலத்திய மெய்யியல் சுவைகளுக்கு ஏற்ப இன்னும் ஏற்புடையதாக ஆக்க, அவர்களின் விளக்கங்களையும் கூட ஹெகலின் சொந்த நிலைப்பாடாக காட்டி, ஹெகலின் சிந்தனையில் இருந்த அவற்றின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்வதில் பெரும் பங்காற்றினர். அத்தகைய வேலைகள் மிகவும் சுவாரசியமாக இருந்தன என்று அவர் குறிப்பிடும் அதேவேளையில், ஹெகலினுடைய உண்மையான நிலைப்பாடு என்ன? அவர் ஏன் அதைக் கொண்டிருந்தார் என்பதைக் கண்டறிய, இன்னும் அதிகளவில் ஹெகலின் "பழைய" ஆர்வங்களை எதிர்கால பணிகள் கையிலெடுக்கும் என்றும், இரண்டாவது கேள்வி மட்டும் சமகாலத்திய மெய்யியல் பிரச்சினைகளுக்குப் பொருந்துமா என்பதில் அவற்றிற்குக் கவலை அளிக்கக்கூடும் என்றும் பேசர் குறிப்பிடுகிறார்.

ஹெகலைக் குறித்த பிபினின் விளக்கம் மிகவும் செல்வாக்கு பெற்றது (குறைந்தபட்சம் பேராசிரியர்கள் வட்டாரத்திலாவது) என்றபோதினும், அவருடைய அணுகுமுறையில் வெறுமனே "காலக்குளறுபடி" மட்டுமே இல்லை என்று தான் கூற வேண்டும். அது மிகவும் திருத்தப்பட்டிருந்தது. பிபினின் ஹெகல் ஒரு கான்டியனாக இருந்தார்; கான்டின் அடிப்படை கட்டமைப்பிற்குப் பொறுப்பேற்று கொண்டவராக, புறவுலகத்திற்கான ஓர் அகநிலை அடித்தளத்தை அளிப்பதற்காக அவருடைய திட்டத்தைக் கொண்டு செல்பவராக இருக்கிறார். கான்டினிசத்தைக் குறித்த ஹெகலின் கடுமையான விமர்சனங்களை இந்த விளக்க-வரிகள் விட்டுவிடுகின்றன. குறிப்பாக மனிதனின் காரணகாரிய ஆய்வு (reason) மற்றும் மனித அறிவு (knowledge) மீதான கான்டின் கட்டுப்படுத்தல்களை விட்டுவிடுகின்றன. இது இறுதியில் ஹெகலின் ஓர் அகநிலை பதிப்பாக மாறிவிடுகிறது. கல்விக்கூடங்களில் இதுபோன்ற கருத்துக்கள் பரவலாக ஏற்கப்பட்டிருக்கும் நிலைமையில், பிபினின் வேலை ஒரு கணிசமான வாசகர்களை கண்டது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பிபினையும், ஏனையவர்களையும் குறித்த பேசரின் கல்லூரி கால விமர்சனங்களும், வெளியில் தெரியாத பிற விமர்சனங்களும் இதேபோன்ற வாதங்களை முன்னுக்குக் கொண்டு வருவது துரதிருஷ்டவசமாக இருக்கிறது. ஹெகலைக் குறித்த மேதமையில் எவ்வித கணிசமான முன்னேற்றத்தையும் எட்ட வேண்டுமானால், முழுவதுமாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் அவர்களின் பணியை வெளிப்படுத்திக் காட்ட வேண்டியது அவசியப்படுகிறது.

ஹெகலின் வாழ்க்கை வரலாறு

டெர்ரி பின்கார்டு எழுதிய  Hegel: A Biography என்ற புத்தகத்தின் ஒரு சுருக்க பதிப்பான “Hegel: A Life” என்பதில் அவருடைய பங்களிப்பு, ஹெகலின் அறிவுஜீவிய உழைப்புகளை அவற்றின் முறையான பிரத்யேக மற்றும் வரலாற்று சூழலுக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது. பின்கார்டின் மெய்யியல் நிலைநோக்கில் குறைபாடுகள் இருந்தபோதினும், அவருடைய வரலாற்றுரீதியிலான பணி எல்லாவகையிலும் சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் அமைகிறது. ஹெகலைக் குறித்து நாம் காணும் மிகவும் சுவாரசியமான விஷயங்களில், வூட்டெம்பேர்க் நகர குட்டி-முதலாளித்துவத்திடம் அவருடைய பின்புலம் குறித்த விஷயமும் இருக்கிறது. அவருடைய தந்தை அரசு கருவூலத்தில் ஒரு சிறிய அதிகாரியாக இருந்தார், அவருடைய அன்னை ஸ்வாபியன் புரொடெஸ்டண்ட் (Swabian Protestant) சீர்திருத்தவாதிகளின் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். அவர்களின் குறிப்பிட்ட புரொடெஸ்டண்ட் மற்றும் உள்நாட்டு பாரம்பரியம் ஏதோவொருவகை பிராந்திய பெருமையைக் கொண்டிருந்த போதினும், அந்த காலக்கட்டத்தில் நிலவிய புதிய கருத்துக்களுக்கும் அவர்கள் செவி கொடுத்தார்கள். அத்துடன் "அவர்கள் காலத்திய அறிவொளி-சார்ந்த இதழ்களுக்கும்" சந்தா செலுத்தி வந்தார்கள். பின்கார்டின் கருத்துப்படி, “அவர்கள் குடும்ப உறவுகளின் அடிப்படையில் அல்லாமல், படிப்பு மற்றும் திறமையில் முதன்மையில் இருப்பது, அவற்றை ஊக்குவிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பளித்தார்கள். (17)     

சமூக நிலைப்பாடு மீதான இந்த மனோபாவம் ஹெகலின் ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதுமே இருந்தது. அதனோடு சேர்ந்து, எல்லாவகை மனிதர்களும் அவருக்கு அறிமுகமாகி இருந்தார்கள்; மேலும் அவர் "படிக்காதவர்களோடு" சீட்டு விளையாடுவதும் உண்டு; “பேர்லின் சமூகத்தில் இருந்த கலைத்துவ நபர்களுடனும் மற்றும் போஹிமியன்களுடனும் அவர் நட்பு கொண்டிருந்தார். (41) செல்வமோ அல்லது தொடர்புகளோ அல்ல, திறமை தான் தொழில் மற்றும் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது என்ற அவருடைய நம்பிக்கையானது, மாணவர் விரிவுரை (student lecture) கட்டணங்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கான தேர்வு கட்டணங்கள் போன்றவற்றை அவர் கைவிட்டதிலிருந்து அதனை அதுவே வெளிப்படுத்திக் காட்டியது. அந்த காலகட்டத்தில் இத்தகைய கட்டணங்கள் தான் பல்கலைக்கழக போதனையாளர்களுக்கு வழக்கமான ஊதியமாக அளிக்கப்பட்டு வந்தது. "பல்கலைக்கழக கல்விவிஞ்ஞானம் ஆகியவற்றிற்கு மாறாக, 'நரி-வேட்டையாளர்களின்' மோசமான அறியாமையைத் தான் அவர்கள் மதிப்பிடுகிறார்கள்" என்பது ஆங்கிலேயர்களின் சீர்திருத்த சட்டவரைவின் மீது அவர் எழுதிய ஒரு விமர்சனத்தில்,அவர் ஆங்கிலேயரை எந்த மட்டத்தில் வைத்திருந்தார் என்பதை வெளிப்படுத்தியது. (49)

ஹெகலின் மீதும், அவருடைய சிந்தனையின் மீதும் இருந்த பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் அனைவரும் அறிந்த ஒன்று தான். 1789இல், டூபிங்கன் நகரில் இருந்த புரொடெஸ்டண்ட் தத்துவார்த்த பாடசாலையில் ஹெகல் ஒரு மாணவராக இருந்தார். அப்போது சமீபத்தில் தான் அவர், தாம் ஒரு மதகுருவாக மாற விரும்பவில்லை என்று முடிவெடுத்திருந்தார். அவருடன் தங்கியிருந்த பெட்ரிக் ஹோல்டெர்லின் மற்றும் பெட்ரிக் ஸ்கெல்லிங்கும் கூட இதே உணர்வுடன் இருந்தார்கள். ஏனென்றால் வூட்டெம்பேர்க் பிரபு  அல்சாஸில் சிறிது நிலங்களைக் கொண்டிருந்தார், புரட்சி குறித்த செய்தி வேறிடங்களையும் விட இன்னும் வேகத்துடனும், ஒழுங்கமைப்புடனும் பாடசாலையையும் வந்தடைந்திருந்தது. (19) (பெட்ரிக் ஹோல்டெர்லின் செல்வாக்குமிக்க உண்மையான ஒரு கவிஞராக ஆனார். ஹெகல் புகழ் பெறாமல் இருந்திருந்தால், இரண்டாமவர் அதாவது பெட்ரிக் ஸ்கெல்லிங் புகழ்பெற்ற ஜேர்மன் கருத்துவாத மெய்யியலாளராக ஆகியிருப்பார்.) 

பிரான்ஸில் நடந்த நிகழ்வுகள் குறித்து அந்த மூவரும் பெரிதும் உற்சாகத்தோடு இருந்தனர். மேலும் பாடசாலையில் இருந்த மூத்த மாணவர்களில் ஒருவரான கார்ல் இமானுவேல் டெய்ஜாலினால் அவர்களுடைய கண்ணோட்டங்கள் பலப்படுத்தப்பட்டன. இந்த கார்ல் இமானுவேல் ஒரு தீவிர கான்டியன்வாதியாகவும், ஜாகோபினின் அனுதாபியாகவும் இருந்தார்; அவர் சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் மீதான புரட்சிகர அழைப்புகளுக்கும் கான்டின் மெய்யியலுக்கும் இடையில் ஓர் ஆழ்ந்த இணக்கம் இருப்பதாக கண்டார். அப்போதிருந்து ஒவ்வொரு ஆண்டு ஜூலை 14ஆம் தேதியும் மற்றும் அவருடைய வாழ்வின் இறுதிகட்டத்தின் அருகாமையில் இருந்த போதும், பேர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாற்றின் மெய்யியலைக் குறித்த தம்முடைய உரைகளிலும் ஹெகல் Bastille இன் துன்பத்தை நினைவுகூர்வார். அவர் புரட்சியை ஓர் "அருமையான விடியலாக" குறிப்பிடுவதுண்டு.       

புரட்சியை ஒட்டி, அரசாங்கங்கள் ஜேர்மனி முழுவதும் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தின. சில சீர்திருத்தங்கள் பாவரியா போன்ற இடங்களில் நெப்போலியனின் ஆக்கிரமிப்பின் காரணமாகவும், சில சீர்திருத்தங்கள் புரட்சியின் அச்சத்தாலும் நடந்தேறின. 1807இல் இருந்து 1808 வரை, ஹெகல் ஒரு நெப்போலிய ஆதரவு செய்தியிதழான Bamberger Zeitung இதழைத் தொகுத்து வந்தார். பிரெஞ்சு துருப்பின் நடமாட்டங்கள் குறித்து தகவல்கள் வெளியிட்டமைக்காக" (இந்த செய்திகள் ஏற்கனவே ஏனைய செய்தியிதழ்களில் வெளியாகி இருந்தன) அதிகாரிகளுடன் பிரச்சினையைச் சந்திக்கும் வரையில் அவர் அதிலேயே இருந்தார். (31) இந்த அத்தியாயம், தெளிவாக அவரை இதழியலில் இருந்து வெளியேற உந்தியது. அத்துடன் அவர் பல்கலைக்கழகத்தில் தமக்கு ஓர் ஆசிரியப் பணி கிடைக்கச் செய்யுமாறு தம்முடைய தோழர் இமானுவேல் நீத்தாமரிடம் முறையிடவும் செய்தது. அவருடைய பள்ளி நாட்களில் இருந்து ஹெகலின் பழைய தோழராக இருந்து வந்த நீத்தாமர், பாவரியாவில் கல்வி சீர்திருத்த அதிகாரியாக ஆகியிருந்தார். ஒரு கூட்டாளி தேவைப்பட்ட நிலையில், அவர் ஹெகலை நூரெம்பேர்கில் ஒரு உடற்பயிற்சி ஆசிரியராக நியமித்தார். இந்த பதவியில் வளர்ச்சிபெற்ற ஹெகல், பின்னர் பாவரியா பாடசாலைகளில் ஆய்வாளராக கூடுதல் பொறுப்பு வகித்தார். ஹெகலின் அதிருஷ்டங்கள் பெரும்பாலும் அரசாங்க சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கைச் சார்ந்திருக்கும். இதற்கு கைமாறாக அவர் பெரும்பாலும் அரசியல் பிரச்சினைகளைச் சுற்றி நடக்கும் அறிவுஜீவிய விவாதங்களில் தலையிடுவார். பின்னர் அத்தகைய பிரச்சினைகளில் அவர் மிக நேரடியாகவும் ஈடுபடத் தொடங்கினார்.

எது பகுத்தறிவுவாய்ந்ததோ அதுவே உண்மையானது; எது உண்மையானதோ அது பகுத்தறிவுவாய்ந்தது" (“what is rational is actual, and what is actual is rational”) என்ற வாசகத்துடன் ஹெகல் புருஷ்ய அரசிற்கு ஆதரவாளராக இருந்தார் என்பது தான் பலர் ஹெகலைக் குறித்து அறியும் முதல் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. 1802இல் பிரசுரிக்கப்பட்ட உரிமையின் மெய்யியல் (Philosophy of Right) இன் முகவுரையை அவர் இந்த வாக்கியத்தைக் கொண்டு தான் முடித்திருந்தார். சுற்றியிருந்த நிகழ்வுகளின் அடிப்படையில் பின்கார்டு விவரிக்கிறார்: பெரும்பாலும் ஒவ்வொருவரும் அந்த வாக்கியத்தை ஒடுக்குமுறை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஓர் அறிக்கையாகவே விளக்கமளித்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதே முகவுரையில் ஹெகல், மெய்யியல்வாதி J.F. Fries மற்றும் இறைமையியல்வாதி Wilhelm de Wetteஆகியோர் மீது தாக்குதல்களையும் சேர்த்திருந்தார். பழமைவாத எழுத்தாளர் August von Kotzebue யின் படுகொலையை ஒட்டி எழுந்த எழுச்சியில், ஜேர்மன் கூட்டமைப்பு முழுவதும் மெட்டர்னிக்கால் கொண்டு வரப்பட்ட சட்டத்தால், இவர்கள் இருவரும் "ஏமாற்றும் வாய்ஜாலக்காரர்கள்" என்று குற்றஞ்சாட்டப்பட்டு அல்லது அவ்வாறு பாத்திரப்படுத்தப்பட்டு அவர்களின் ஆசிரியப் பணியை இழந்தார்கள். அந்த இரண்டு சிந்தனையாளர்கள் மீதான ஹெகலின் தாக்குதல் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக பார்க்கப்பட்டது. ஆனால், பின்கான்டின் கருத்துப்படி, “அவருடைய முன்மொழிவின் இந்த விளக்கத்தால் ஹெகல் பின்னோக்கி எடுத்துச்செல்லப்படுகின்றார். அத்துடன், ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக அது செய்யப்பட்டது என்பதை மறுக்க, ஓர் கலைக்களஞ்சியத்தில் அதை சேர்க்கும் அளவிற்கு அது எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. (41)     

ஹெகலிய இயங்கியலும், தர்க்கத்தின் விஞ்ஞானமும்

ஹெகலின் தர்க்கம் பெரும்பாலும் முக்கியமான ஆய்வுக்குரிய ஒரு விஷயமாக எடுத்துக்காட்டப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஹெகல் பிரயோகிக்கும் இயங்கியல் முறை மிகவும் மதிப்பில்லாததாகவும், தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் மற்றும் ஒட்டுமொத்த திருத்தல்வாதத்தின் அம்சமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. தர்க்கத்தின் விஞ்ஞானமும் (Science of Logic) மற்றும் சுருக்கமான கலைக்களஞ்சிய தர்க்கமும் (Encyclopedia Logic) (அவருடைய மாணவர்களுக்கான ஒரு சொற்பொழிவு தொகுப்பாக கருதப்படுவது) இரண்டுமே மிகவும் கடினமான பணிகள் என்பதுடன் மெய்யியல் வகுப்புகளிலும், ஹெகலிய நிபுணர்களாலும் கூட, பரவலாக கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. அக்காரணத்திற்காக, ஹெகலிய தர்க்கமுறை மற்றும் அதன் சிறப்புடைய நோக்கத்தின் மீது வெளிச்சமிட்டுக் காட்ட முயலும் ஸ்டீபன் ஹோல்கேட்டால் எழுதப்பட்ட ''ஹெகலின் தர்க்கவியலை''("Hegel’s Logic”) பாராட்ட வேண்டியதாக உள்ளது. இந்த பணிகளில் ஹெகல், சிந்தனையின் அடிப்படை பிரிவுகளைத் தொகுப்பதிலும், விளக்குவதிலும் பெரும் பிரயத்தனம் செய்திருக்கிறார் என்பதே ஹோல்கேட்டின் வாதமாக இருக்கிறது. (112)        

இந்த மதிப்பாய்வின் வரம்புகளுக்குள், ஹோல்கேட்டின் நீளமான பங்களிப்பை நியாயப்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால் அவர் தொட்டிருக்கும் சில மிகவும் சுவாரசியமான விஷயங்களின் புறவடிவத்தைப் பார்ப்பதே போதுமானதாக இருக்கும். இவற்றில் முதலில் இருப்பது, “இருப்பு" (being) எனும் பிரிவிற்குள் வரும் தர்க்கத்தின் தொடக்க புள்ளியாகும். முற்றிலும் விதிக்கட்டுப்பாடற்ற அல்லது புதிரான (mystical) தொடக்கத்துடனோ அல்லாமல், அல்லது வாதத்தை நகர்த்துவதற்காக அடியிலிருக்கும் ஊகங்கள் மற்றும் முன்கூட்டிய கணிப்புகளை மூடிமறைக்கும் ஒன்றாகவோ அல்லாமல், மாறாக ஹெகல் உண்மையில் சாத்தியப்பட்ட வகையில் மிகவும் ஆழமான நிலைப்பாட்டில் இருந்து தொடங்க முயற்சிக்கிறார் என்று ஹோல்கேட் வாதிடுகிறார்.  

டெஸ்கார்டஸின் பிரபஞ்ச ஐயத்தின் (universal doubt) அஸ்திவாரத்திலிருந்து, சிந்தனையை "அதன் எளிய மற்றும் மிக சுருக்கமான முறையில்" இருந்து ஹெகல் தொடங்குகிறார். எவ்வாறிருப்பினும், எளிமையான மற்றும் மிக சுருக்கமான சிந்தனையானது, டெஸ்கார்டஸ் நினைத்ததைப் போல பகுத்தறிவுக்கொவ்வாத தாக்கங்களை (implications) கொண்டதல்ல, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் சிந்தனையாளரின் இருப்பில், குறைந்தபட்சம் அது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டாவது தங்கியுள்ளது. அனைத்துவிதமான பிரத்யேகத்தன்மையிலும் (particularity) சிக்குண்டிருக்கும் சிந்தனை - “வாய்ப்புக் கிடைக்கும் போது காரணமில்லாததை மிகச் சிறியளவில் மட்டுமே ஏற்றுக்கொள்ளும்" இத்தகைய சிந்தனை, முதலில் சிந்தனை என்றால் என்ன" என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உண்மையில் சிந்திப்பதற்கு ஏதோவொன்று இருந்து கொண்டே இருக்கிறது என்று சிந்தனை எடுத்துக் கொள்கிறது. ஆனால் தர்க்கம் முழு ஆழமுடையதாக இருப்பதற்காக, அதை ஆராய்வதற்காக, இந்த ஏதோவொன்று என்பது எந்தவிதமான பண்புநலனிலும் இருக்கலாம் என்பதை ஏற்க முடியாது. இதுவரையில் அது இருக்கும் தன்மையிலிருந்து தான் அதை எடுத்தாள முடியும். இதுவரையில் அது இருக்கும் தன்மை என்பது மிகவும் வெளிப்பாடற்று இருக்கிறது. (120)   

இவ்வித ஆராய்ச்சியில் இருப்பின் இந்த தொடக்க வகைப்பாடு, அதன் மிகவும் மறைபொருளாக உள்ள தன்மையிலும் மற்றும் வரையறுக்க முடியாததன்மையிலும், “அது நம் கண் முன்னாலேயே ஒன்றுமில்லாததற்குள் (nothing) மறைந்துவிடுகிறது.” (128) எந்தவித வேறுபட்ட பண்புநலனையும் கொண்டிருக்காமல், சுத்தமான இருப்பின் சிந்தனை முற்றிலும் வெறுமையாக இருக்கிறது என்பதுடன், அது நடைமுறையில் ஒன்றுமில்லாத சிந்தனைக்குச் சமமாக இருக்கிறது. ஆனால் இந்த ஒன்றுமில்லாததன்மையையும் ஓரளவிற்கு உள்ளவாறே ஏதோவொன்றாக மட்டுமே இருக்க முடியும். ஆகவே ஒன்றுமில்லாததன்மை இருப்பிற்குள் தான் மீண்டும் வந்து விழுகிறது. ஓர் ஒன்றுமில்லாததன்மையே சிந்தனையாக இருக்க முடியும் என்பதால், அது ஒன்றுமில்லாததன்மையாக இருக்க முடியாது, மாறாக அது இருப்பாக இருக்கிறது. இத்தகைய தூய்மையின் வகைப்பாடுகள் ஒவ்வொன்றும் "தர்க்கரீதியாக ஸ்திரமின்மைக்குத் திரும்புகின்றன என்பதுடன் அதன் எதிர்தரப்பிற்குள் சென்று அதுவே காணாமல் போகின்றன... ஒவ்வொன்றும் ஒன்றுமில்லாததாக இருப்பதையும், ஆனால் அதன் சொந்த காணாமல் போகும் தன்மையின் நிகழ்முறையையும் எடுத்துக்காட்டுகின்றன.உண்மையில், அவையெல்லாம் என்னவாக இருக்கின்றன என்றால் "மாறிக்கொண்டே இருப்பதாக" இருக்கின்றன.” (129)

தர்க்கத்தில் மீதமிருப்பவையும், மேலே குறிப்பிடப்பட்ட இருப்பு, ஒன்றுமில்லாதன்மை மற்றும் மாறிக்கொண்டே இருப்பது ஆகியவற்றைச் சார்ந்து, அவற்றைப் போன்றே, அவற்றையொத்து முன்னேறுகின்றன. இவ்வகையில் ஒவ்வொரு வெற்றிகரமான கோட்பாடும் மற்றொன்றுக்கு வழி அமைத்து கொடுக்கிறது. அதேநேரம் மீதமிருப்பவை அனைத்துவித கோட்பாட்டையும் சார்ந்திருப்பதைப் போன்று அறிவித்துக்கொண்டு அதையே பின்தொடர்கின்றன-இருப்பினும் ஒரு வகைப்பாட்டில் இருந்து இன்னொன்றுக்கு நகர்வதில் பல்வேறு மாறுபாடுகள் இருக்கின்றன என்பதும் உண்மையே. ஹெகல் முடிவுக்கு வந்திருந்த போது, அவர் ஒவ்வொரு பொது கோட்பாட்டையும் மற்றும் சிந்தனையின் வகைப்பாட்டையும் குறித்து விளக்க முயன்றிருந்தார். மேலும் ஒன்றுடன் ஒன்று அவற்றிற்கு இருந்த முறையான தொடர்பையும் எடுத்துக்காட்டி இருந்தார். முந்தையை சிந்தனையாளர்கள் அடிப்படை தர்க்கம் மற்றும் கருத்தமைவு வகைபாடுகளை-நடப்பில் நிலவுகின்றவைகளையும் மற்றும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளையும் கூட-ஆதாரமில்லாதவைகளாக அல்லது வெறும் சமயோசித-உணர்வுகளாக அவற்றை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளடக்கி விட்டார்கள் என்ற நிலையில், விஞ்ஞானத்திற்கு ஒரு கடினமான மற்றும் முறையான விளக்கமும், அதன் மிக அடிப்படையான கோட்பாட்டுகளின் ஆராய்ச்சியும் தேவைப்படுவதாக ஹெகல் நம்பினார்.

இந்த வகைப்பாடுகள் ஒன்றோடொன்று மிகவும் தொடர்புபட்டவையாக திரும்புகின்றன என்றபோதினும், இந்த தொடர்புதன்மையை 'ஏதோவொருவகையில் இருப்பதாக' கருதமுடியாது, குறைந்தபட்சம் தம்முடைய வாதங்களில் கருதப்படக்கூடாது என்று ஹெகல் குறிப்பிடுகிறார். ஆகவே இத்தகைய கருத்தமைவு தொடர்புகளின் இயங்கியல் பாத்திரம், அவர் அகநிலை விஷயங்களில் திணிக்கும் ஏதோவொன்றாக இருக்கவில்லை. ஹோல்கேட் குறிப்பிடுவதைப் போல, “அனுமான சிந்தனை இயங்கியலாக இருக்க முடியாது என்று ஹெகல் முன்நிபந்தனை விதிக்கவில்லை என்றபோதினும், உண்மையில் அத்தகைய சிந்தனை அதன் சொந்த வகையில் இயங்கியலாக இருப்பதை நிரூபிக்கிறது. ஹெகலைப் பொறுத்தவரையில், இயங்கியல் என்பது வெவ்வேறு விஷயங்களுக்கு இடையிலான ஒரு தொடர்பு அல்ல (எடுத்துக்காட்டாக, ஒரு தனிநபருக்கும், சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு), மாறாக அதுவொரு நிகழ்போக்கு. அதில் ஒரு வகைப்பாடு அல்லது இயல்நிகழ்வு அதன் சொந்த எதிர்தரப்பிற்குள் திரும்புகிறது.” மேலும், “இயங்கியல் என்பது இவ்வாறு ஹெகலினால் உருவாக்கப்பட்ட ஒரு முறையோ அல்லது அது வகைப்பாடுகளின்மீது வெளியிருந்து பெறப்பட்டதோ அல்ல, மாறாக அது இந்த வகைப்பாடுகளுக்கே சொந்தமானதாகும் (மேலும் அது இருப்பின் விஷயங்களைப் தொடர்புபடுத்திக்கொள்கிறது). "அதனை அதற்குள்ளேயே கொண்டிருக்கும் இயங்கியல் உள்ளடக்கத்தின் உட்தன்மையாக இருக்கிறது." (129-130)

எவ்வாறிருப்பினும், முடிந்தவரையில் ஹோல்கேட்டின் கட்டுரை சிறப்பாகவே உள்ளது. அது சமகாலத்திய மெய்யியலில் ஊடுறுவியிருக்கும் அடிப்படை மெய்யியல் வகைப்பாடுகள் மீது நிலவும் அடிப்படை கூச்சல் குழப்பத்திலிருந்து உதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் துரதிருஷ்டவசமான தற்காலிகத்தன்மையான பற்றுகோளும், நம்பிக்கையும் இல்லாததன்மையையும் இந்த தலைப்பில் ஏனைய அறிஞர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. ஹெகலின் தர்க்கம் மீதான லெனின் குறிப்புகள் மற்றும் கருத்துக்களில், அதாவது லெனின் Philosophical Notebooksஇல் ஒருவர் எதிர்கொள்வதைவிட இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. சற்றே தொடர்பற்று இருந்தாலும், இந்த எழுத்துக்கள் சிக்கலில் இருக்கும் மெய்யியலின் அடிப்படை பிரச்சினைகள், குறிப்பாக சடவாதத்திற்கும், கருத்துவாதத்திற்கும் இடையிலான பிரச்சினைகள் மீதான லெனின் சரியான மதிப்பீட்டிலிருந்து பெரும் மதிப்பைப் பெறுகின்றன. ஹெகல் தர்க்கவியலின் முக்கியமான மற்றும் மிக விளக்கமான சடவாத விமர்சனத்தை லெனின் அளித்திருந்த போதினும், இந்த அபிவிருத்தி மெய்யியல் அமைப்பினால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.    

ஹெகலின் கருத்துவாதம்

ஹெகல் கருத்துவாதத்தின் பரந்த விஷயத்தின் மீது எழுதப்பட்ட The Cambridge Companion to Hegel and Nineteenth-Century Philosophy நூலில் ரோபர்ட் ஸ்டெர்னின் பங்களிப்பானது, அந்த தலைச்சிறந்த ஜேர்மன் மெய்யியலாளரின் கருத்துவாதம் எதை நோக்கி இருந்தது என்பதைத் துல்லியமாக பகுத்தளிப்பதற்கான ஒரு முயற்சியாகும். ஹெகல் ஒரு கருத்துவாதியாக இருந்தார் என்பது ஒரு சடவாத முன்னோக்கிலிருந்து நிச்சயமாக தெளிவாக இருக்கிறது என்றபோதினும், இது எதை துல்லியமாக குறிக்கிறது என்பது ஓர் எளிய சாதாரணமான விஷயமில்லை.  

ஸ்டெர்ன் கருத்துப்படி, இரண்டு சற்றே வேறுபட்ட ஆனால் நெருக்கமாக தொடர்புடைய தன்மையில் ஹெகல் ஒரு கருத்துவாதியாக இருக்கிறார். "ஹெகல், 'முடிவுள்ளதே தலைச்சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது' (the finite is ideal) என்பதைக் கைக்கொண்டிருந்த அவருடைய பிரத்யேகதன்மையில் அவர் ஒரு கருத்துவாதியாக இருக்கிறார்; (ஆகவே) மிகவும் பழைமையான (வழமைக்குமாறானவாத-நாமினலிச எதிர்ப்புவாத- antinominalist) தன்மையில் அதை கைக்கொண்டு எல்லைக்குட்பட்ட நபர்களையும், இவ்வுலகில் உள்ள பொருட்களையும் மட்டுமே எடுத்தாளும் ஒரு கருத்துவாதியால் விளக்கத்திற்குப் தேவையான திருப்திகரமான இறுதிப்புள்ளியை வழங்க முடியாது, மாறாக 'பிரபஞ்சங்கள், மூலமுதலான பொருட்களைப்' முன்மாதிரியானதாக எடுத்துக்காட்ட  அவை பயன்படுத்தப்பட்ட போது மட்டும் தான் திருப்திகரமான இறுதிப்புள்ளியை வழங்க முடியும்... அவை நிகழ்கால அனுபவத்திலிருந்து அளிக்கப்படவில்லை, மாறாக அவை 'இயல்நிகழ்வு குறித்த [பிரதிபலிப்பு] சிந்தனையிலிருந்து' மட்டுமே அளிக்கப்பட்டன என்று ஸ்டெர்ன் குறிப்பிடுகிறார். (172)       

ஹெகலின் எழுத்துக்களில் இருக்கும் கருத்துவாதத்தின் இந்த இரண்டு உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கு, ஸ்டெர்ன் அவருடைய கட்டுரையில் முழுமையாக குறிப்பிடும் Science of Logicஇல் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வாக்கியத்தைக் குறிப்பிடுவது உதவியாக இருக்கும்: எல்லைக்குட்பட்டது முன்மாதிரியாக [ideal] இருக்கிறது என்ற கூற்று தான் கருத்துவாதத்தைக் கட்டியமைக்கிறது. எல்லைகுட்பட்டது உண்மையான இருப்பை (veritable being) கொண்டிருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறெதையும் மெய்யியலின் கருத்துவாதம் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு மெய்யியலுமே ஒரு கருத்துவாதம் தான், அல்லது அதன் கோட்பாட்டில் குறைந்தபட்சமாவது கருத்துவாதத்தைக் கொண்டிருக்கும். பின்னர் எந்தளவிற்கு அந்த கோட்பாடு உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது தான் அதிலிருக்கும் பிரச்சினையாக இருக்கிறது. இது மதத்திற்கு எந்தளவிற்கு உண்மையாக இருக்கிறதோ அந்தளவிற்கு மெய்யியலிலும் உண்மையாக இருக்கிறது. மதம் முடிவுள்ளதன்மையை (finitude) ஒரு உண்மையான இருப்பாக (veritable being), முற்றுமுடிவான ஏதோவொன்றாக, நிதர்சனமானதாக அல்லது வரையறுக்கப்பட்டிராத, படைக்கப்பட்டிராத, முழுமையானதாக சமஅளவில்.... அங்கீகரிப்பதில்லை.

முழுமையான, இறுதியான இருப்பை உள்ளபடி இருக்கும் முடிவுள்ள உயிர்களோடு ஏற்றிச் சொல்லும் ஒரு மெய்யியலானது, பழைய அல்லது நவீன மெய்யியலின் கோட்பாடுகள், நீர், அல்லது ஜடம், அல்லது அணுக்களே சிந்தனைகளாக இருக்கின்றன என்ற கோட்பாடு, பிரபஞ்சங்கள், மூலமுதல் பொருட்கள், நமக்கு உடனடியாக தம்மை வெளிப்படுத்திக் காட்டாத விஷயங்கள் (அதாவது அவற்றின் உணர்வுப்பூர்வமான பிரத்யேகதன்மையில்) பற்றிய கோட்பாடு-தேல்ஸ் நீர் தத்துவம் (water of Thales) ஆகிய எந்த மெய்யியலின் பெயருக்குள் வருவதற்கும் தகுதியிழந்துவிடும். இதுவும் கூட அனுபவவாத நீர் தத்துவமாக  இருக்கிறது என்றபோதினும், அதற்காக, அதேநேரத்தில் அனைத்து பொருட்களின் சாரமாகவும் அல்லது அதனுள்ளாகவே இருப்பதுவாகவும் இருக்கிறது. அவ்வாறே, இந்த பொருட்கள் சுயமாக பிழைத்துக் கொள்ளக் கூடியவையோ அல்லது அவற்றை அவையே அடித்தளமாக கொண்டவையோ கூட அல்ல. ஆனால் நீரால் ஒழுங்குப்படுத்தி வைக்கப்பட்டவை, நீரிலிருந்து பெறப்பட்டவை, நீரிலிருந்து வேறுபட்டவை, அதாவது அவையெல்லாம் முன்மாதிரி பொருட்களாக இருக்கின்றன. (SL 154-155)  

எல்லைக்குட்பட்டதே முன்மாதிரியாக உள்ளது" என்று அவர் கூறும் போது, ஹெகல் என்ன மாதிரியான அர்த்தத்தில் குறிப்பிடுகிறார் என்றால் ஒருவரின் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் சாதாரண புறப்பொருட்கள் முற்றுமுதலான மூலப்பொருட்கள் அல்ல, மாறாக சில தன்மையில் அவை கருத்துக்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன என்ற வகையில் குறிப்பிடுகிறார். ஹெகலைப் பொறுத்த வரையில் வெறும் கருத்துக்கள் மட்டுமே இருக்கவில்லை, மாறாக Science of Logicஇல் செய்யப்பட்ட கருத்தமைவு வகைப்பாடுகளும் இருந்தன என்பதும் உண்மையே. இந்த கருத்துருக்கள் மனித வாதங்களில் மட்டுமே செயல்படும் கருத்துருக்கள் அல்ல, மாறாக இருப்பைக் குறித்த வெறும் கருத்தின் மீது பிரதிபலிப்பைக் காட்டியதன் மூலமாக எந்த கருத்துருகளுக்காக அவசியப்பட்ட வகையில் வாதம் இட்டுச் செல்லப்பட்டதோ அதற்கான கருத்துருவாக உள்ளது. இந்த கருத்துருக்கள் புறநிலையாக உள்ளன என்பதுடன் அவை எந்தமாதிரியான விஷயங்கள் என்பதைச் சார்ந்த, அதாவது அவற்றின் ஸ்திரமான பண்புநலனால் அனைத்து புறத்தோற்றங்களும் அவற்றின் சில கலவைகளாலேயே கட்டி அமைக்கப்படுகின்றன. மேலும், இத்தகைய அனைத்து கருத்துருக்களும் முடிவான கருத்தின் அல்லது ஹெகலினிய எல்லையில்லாவைகளின் இயக்கங்களில் இருப்பதால், இத்தகைய புறத்தோற்றங்கள் முடிவானதைச் சார்ந்தும், அவற்றிற்கு அவற்றின் நிஜத்தைக் கொண்டிருக்கும் வகையிலும் இருக்கின்றன.              

எல்லாவற்றிற்கும் பொருந்துகின்ற அல்லது -பல்வேறு விஷயங்களுக்கு பொருத்திப் பார்க்கப்படும் சிவப்பு, இனிப்பு, அல்லது நன்மை போன்ற அருவமான கருத்துருக்கள்- உண்மையில் அவற்றிற்குள்ளேயே தங்கியிருப்பதில்லை, மாறாக அவை தனித்தனி புறத்தோற்றங்களாகவும், உடமைகளாகவும் இருக்கின்றன என்ற மெய்யியல் நிலைப்பாடே, பெயர் போலிக்கோட்பாடாகும் (நாமினலிசம்) (Nominalism) ஆகும். பெயர் போலிகோட்பாடுவாதிகளை (நாமினலிசவாதிகளைப்) பொறுத்த வரையில், இத்தகைய ''எல்லாவற்றிற்கும் பொருந்துபவை'' வெறும் வார்த்தைகள் மட்டுமே, இவற்றை நாம் ஒரேமாதிரியான பண்புநலன்களைக் கொண்ட பொருட்களைக் குழுக்களாக ஆக்க நம்முடைய வசதிக்கேற்ப பயன்படுத்தி கொள்கிறோம். வரலாற்றுரீதியாக, கண்ணுக்குத் தெரியும் பொருட்களை விட இந்த எல்லாவற்றிற்கும் பொருந்துபவை -அதிகளவில் இல்லையென்றாலும் கூட- நிஜமாக இருக்கின்றன என்பதை கைக்கொண்டிருப்பதன் மூலமாககருத்துவாதமானது பெயர் போலிக்கோட்பாட்டு (நாமினலிச) எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் இணைப்பைக் கொண்டிருக்கிறது.

பெயர் போலிக்கோட்பாடு (நாமினலிசம்) அதன் நவீன வடிவங்களில் பெரும்பாலும் அனுபவவாதத்துடன் தொடர்புபட்டிருக்கிறது; அதற்கு உலகுடன் குறிப்பிடத்தக்க வகையில் ஐக்கியம் இல்லை என்பதாலும், பொருட்களுக்கு இடையிலும் அதற்கு அடிப்படை உறவுகள் இல்லை என்பதாலும் ஹெகல் பெயர் போலிக்கோட்பாட்டிற்கு (நாமினலிசத்திற்கு) எதிராக இருக்கிறார். மாறாக, தற்செயலாக சிறந்த முறையில் ஒன்றோடொன்று தொடர்புபட்ட தனித்தனியான பொருட்கள் மட்டுமே இருக்கின்றன என்று அது குறிப்பிடுகிறது. இதுபோன்ற ஒரு வாதத்தின் அடித்தளத்தில் (முழுமையான இருப்பை எல்லைக்கட்டிய விஷயங்களுக்குள் ஏற்றிக் கூறுவது) கட்டமைக்கப்பட்ட ஒரு மெய்யியல், ஹெகலைப் பொறுத்த வரையில், ஒரு மெய்யியலே அல்ல.  

இது ஏனென்றால், இந்த விஷயங்களை மட்டுமே கையாளும் எந்த ஆராய்ச்சியும் அரைகுறையாக தான் இருக்கும்; இந்த உலகம் வேலை செய்யும் நியதியை முழுமையாக விளக்க அதனிடம் கருத்துரு ஆதாரவளங்கள் இருக்காது. தோற்றப்பொருட்கள் ஏன் இருக்கின்றன அவை என்னவாக இருக்கின்றன அவற்றை ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்புபடுத்துவது என்பதை விளக்கும் முந்தைய அனைத்து மெய்யியலிலும் ஏதோவொரு கோட்பாட்டில் அல்லது அணுக்கள், சடம் அல்லது (தேல்ஸைப் பொறுத்த வரையில்) நீர் போன்ற ஏனைய கோட்பாட்டில் இருக்கின்றன. இந்த பொருட்கள் அனைத்தும் பொதுவாக எதைக் கொண்டிருக்கின்றன என்றால் அவை அனைத்தும் கருத்துருவில் மறைபொருட்களாக உள்ளன-அணுக்கள் மற்றும் சடம் அவற்றின் உள்ளார்ந்த வகையில் உணரப்படவில்லை; அவ்வாறே நீரே அனைத்து பொருட்களின் சாரமாக இருந்திருக்கக்கூடும் என்ற தேல்ஸால் விளக்கப்பட்ட கருத்துருவில் நீரும் அவ்வழியிலேயே உணரப்படவில்லை. ஆனால் தமது வழியில் வந்த அல்லது தமது வழியில் கடந்து சென்ற எல்லைக்குட்பட்ட சடப்பொருட்களை எதிர்த்த வகையில், இந்த எல்லையில்லா சடம், அல்லது அணுக்கள், அல்லது நீர் உண்மையாக இல்லை. இவ்வகையில் இது எது நிஜமாக இருக்கிறது என்பதில் இருக்கிறது.  

சில புதிரான பிரச்சினைகளை அவர் கையாள்கிறார் என்றபோதினும், ஹெகலின் கருத்துவாதத்தின் இயல்பைக் குறித்து அறிந்துகொள்ள ஆர்வப்படும் ஒருவருக்கு ஸ்டெர்னின் கட்டுரை அதிகளவில் உதவியாக இருக்காது என்பதை வெளிப்படையாக குறிப்பிட்டாக வேண்டும். ஒரு மெய்யியல் சூழல் செங்குத்தாக கருத்துவாதத்தில் விழுந்த நிலையில் அவர் எழுதுகிறார். அந்த கருத்துவாதம் மெய்யியலை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நனவுபூர்வமாக மறுக்கிறது. இது கருத்துவாதத்தின் தொடக்க புறநிலை பண்புநலனாக்கத்தை ஒழுங்கமைக்க முடியாதபடிக்கு அவரைச் செய்துவிடுகிறது. 

ஆராய்ச்சியின் ஓரளவிற்கு உத்தரவாதமளிக்கும் வரிகளை ஸ்டெர்ன் முதலில் நிராகரிக்கிறார். அந்த வரிகளில், “முழுமையடைந்த சிந்தனை  உலகின் அடித்தளமாக அல்லது அடிஆழத்திலிருக்கும் மூலக்காரணமாக இருக்கிறது" என்ற கண்ணோட்டத்திற்காக ஹெகல் ஒரு கருத்துவாதியாக இருக்கிறார். ஏனென்றால் கான்டின் காட்சிகளின் பகுப்பு மற்றும் பொருட்கள்-அவற்றிற்குள்ளேயே இருக்கின்றன ஆகிய கொள்கைகளை நிராகரித்து, மீண்டும் அதுவொரு விமர்சனத்திற்கு முந்தைய'' மாறாநிலைவாதத்திற்குள் திரும்பக்கூடும். இது கான்டுடனான ஹெகலின் தொடர்பு குறித்த ஓர் அடிப்படை தவறு மட்டுமல்ல (இது கான்டியன் முறையைக் குறித்த அவரின் கடுமையான விமர்சனத்தைத் தட்டிக்கழித்துவிடுகிறது), குறைந்தபட்சமாக கூறுவதானால் பிரச்சினைக்குரிய ஒரு மூலோபாயமாக இருக்கும் ஹெகலின் சொந்த எழுத்துக்களில் கருத்துவாதத்தின் ஒரு கருத்துருவைத் தேடிய ஒரு கட்டுரைக்குள் நுழைவதற்கு ஸ்டெர்னை இட்டுச் செல்கிறது.     

சோவியத் மெய்யியலாளர் ஏவால்ட் இலியெங்கோவ் (Evald Ilyenkov) அவருடைய புத்தகமான இயங்கியல் தர்க்கம் (Dialectical Logic) (1974) என்பதில் செய்திருந்த ஹெகலிய கருத்துவாதத்தின் பண்புநலனாக்கம் இன்னும் அதிகமாக மதிப்புடையதாக இருக்கிறது. மனித சிந்தனையை அனைத்து மனித நடவடிக்கைகள் மீதும் மற்றும் வரலாற்றின் மீதும் திணித்து அதை எவ்வாறு சார்பற்றதன்மைக்கு உள்ளேயும், கடவுள் போன்ற முழுமைக்குள்ளும் ஹெகலால் மாற்றப்படுகிறது என்பதை இலியெங்கோவ் அந்த குறிப்பிடத்தக்க பணியில் விளக்குகிறார்:

சில சக்திகள் பல காலமாக இருப்பதாலும், அதற்கேற்ப 'உலகம் மற்றும் மனிதனின் தெய்வீக படைப்பு' நிகழ்ந்தது என்பதாலும் உண்மையில் ஹெகல் மனிதனையும், அவனுடைய தனிமனிதனை சாராத சிந்தனையையும் மற்றும் தனிச்சிறப்பு கூறுகளற்ற-முழுமுதலான'-எண்ணத்திற்கு எதிரிடையாக நிறுத்தினார். மேலும், தர்க்கத்தை 'முழுமுதலான வடிவமாகவும்', அதைச் சார்ந்து நிஜமான உலகமும், நிஜமான மனித சிந்தனையும் இன்றியமையாத விளைபொருளாக, துணைப்பொருளாக மற்றும் உருவாக்கப்பட்ட ஏதோவொன்றாக இருப்பதை நிரூபித்தன என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.    

ஹெகலின் புறநிலை கருத்துவாதத்தின் குறிப்பிட்ட வடிவம், சிந்தனையை ஒரு புதிய கடவுள் வடிவத்திற்குள், மனிதத்திற்கு வெளியில் இருக்கும் மற்றும் அதன்மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்திக்குள் மாற்றிவிடுவதாக இலியெங்கோவ் வாதிடுகிறார். எவ்வாறிருப்பினும், இந்த விஷயத்தில் ஹெகலின் மருட்சி வெறுமனே மதத்திலிருந்து கடன்வாங்கி உள்ளடக்கப்பட்டதோ அல்லது ஃபயர்பாக்  குறிப்பிட்டதைப் போல வெறுமனே மதத்தின் நனவுத்தன்மையின் துரதிருஷ்டவசமான மறுபிரவேசமோ அல்ல. மாறாக ஒரு மிக ஆழமான ஆதாரத்திலிருந்து வந்தது.

அந்த சோவியத் மெய்யியலாளர் பின்வருமாறு தொடர்கிறார்: சமூக தொழிலாளர்களின் தன்னியல்பாக அபிவிருத்தியடையும் பிரிவின்கீழ் தனி மனிதர்களுக்கும் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த சக்திகளுக்கும் மற்றும் ஒட்டுமொத்தமாக அபிவிருத்தியடைந்த அமைப்பிற்கும் இடையிலான நிஜ உறவுகளின் ஒரு வித்தியாசமான தலைகீழ்மாற்றத்திற்கான தேவை அங்கே எழுந்தது. அதாவது, அவை செயல்பாட்டின் உலகளாவிய (சமூக) கருவிகளாக இருந்தன. இது மெய்யியலில் வேறுபாடு அல்லது மாற்றம் என்று அறியப்படும் ஒரு தலைகீழ்மாற்றமாக இருக்கிறது.

செயல்பாட்டின் சில குறிப்பிட்ட உலகளாவிய நிலைகள் - வர்த்தகங்கள் மற்றும் தொழில்கள் உருவானதைப் போன்றே சிறப்பார்ந்த சமூக அமைப்புகளாகவும்-அதன் சொந்த குறிப்பிட்ட மொழி, பாரம்பரியங்கள் மற்றும் ஏனைய பிறவற்றுடன் இருக்கும் ஜாதியின் ஒரு வகையைப் போல-மற்றும் சார்பற்றதன்மை, வெறுமையான பண்புநலனின் ஏனைய வடிவங்களிலும் ஒழுங்கமைக்கப்பட்டன.

இலியெங்கோவ் பின்வருமாறு தொடர்ந்து செல்கிறார்: இதன் விளைவாக, ஒரு தனிமனிதரோ அல்லது (ஆக்கபூர்வமான சக்தியாக இருந்த) அந்த உலகளாவிய அமைப்போ அதை எடுத்துச்செல்லும் கருவியாக - அதாவது முதன்மை விஷயமாக ஆகக்கூடியது - ஆக முடியும் என்பதை நிரூபிக்கவில்லை, மாறாக, முரண்பட்ட வகையில், அவரிடமிருந்து மேலும் மேலும் விலகிக்கொண்டிருந்த அந்த ஆக்கப்பூர்வமான சக்தி முதன்மை விஷயமாக தோன்றியது. அது வெளியிலிருந்து ஒவ்வொரு தனிநபருக்கும் அவருடைய தொழிலின் கருவிகள் மற்றும் வடிவங்களைக் கட்டளையிடுகிறது...

அதே தலைவிதியும் எண்ணத்தில் விழுந்தது. கல்விசார் அறிஞர்களுக்கு மூளைசார்ந்தும், தத்துவார்த்த வேலைகளிலும் ஈடுபட்டிருந்த தொழில் வல்லுனர்களுக்கு அதுவும் ஒரு சிறப்பு தொழிலாக ஆனது. ஒரு சிறப்பு தொழிலிற்குள் குறிப்பிட்ட நிலைமைகளில் விஞ்ஞானம் சிந்தனை மாற்றமாக இருக்கிறது... விஞ்ஞானி, தொழில்ரீதியிலான தத்துவார்த்தவாதி, அவரின் சொந்த பெயரின், அவரின் சொந்த ஆளுமைத்தன்மையில் அல்லாமல் சாதாரண மனிதர்களுக்குரிய விதிகளைப் பதிக்கிறார்கள். ஆனால் இதை அவர்கள் விஞ்ஞானத்தின் பெயரில், கருத்துருவின் பெயரில், ஒரு முழுமையான பிரபஞ்சத்தின் பெயரில், ஒட்டுமொத்தமாக, சார்பற்றதன்மை சக்தியாக விளங்கப்படுத்துகிறார்கள். இவை அவற்றின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாகவும், முழு அதிகாரமாகவும் ஏனைய மக்கள் முன்னால் தோன்றுகிறது.

அந்த மண்ணிலேயும் கூட, மூளைசார்ந்த, தத்துவார்த்த வேலை சார்ந்த தொழில் நிபுணர்களின் குறிப்பிட்ட கற்பனைகள் எழுந்தன. இந்த கற்பனைகள் துல்லியமாக புறநிலை கருத்துவாதத்தின் மெய்யியலில் அவற்றின் மிக நனவுபூர்வமான வெளிப்பாட்டைக் கைக்கொண்டன. அதாவது, இது மாற்றத்திற்குட்பட்ட சிந்தனையின் சுய-விழிப்புணர்வினுடையது. (Dialectical Logic, Chapter 7)

இலியெங்கோவ் இங்கே கருத்துவாதத்தின் மிகவும் துல்லியமான மற்றும் ஆழமான கருத்துடன் நகர்கிறார். இதில், முதலாவதாக, கருத்துவாதம் மற்றும் சடவாதத்தைப் பிரிக்கும் அடிப்படை வரையறை, சிந்தனையை (மெய்க்கருத்து-ஆன்மாவை) முதன்மையாக கருதுவதா அல்லது இயற்கையை முதன்மையாக கருதுவதா; எதை இரண்டாவதாக கருதுவது என்பதன் மீதான பிரச்சினையில் இருக்கிறது. இதன் அடிப்படையில் ஹெகல் ஒரு கருத்துவாதி என்பதை அவரால் எளிதாக உருவாக்க முடிகிறது. மேலும் வரலாற்று மீதான ஒரு சடவாத புரிதலைக் கொண்டு, ஏனையவைகளில் இருந்து தன்னைப் விலக்கிக் கொண்டிருக்கும் ஹெகலின் கருத்துவாதத்தின் குறிப்பிட்ட இயல்பையும் அவரால் விவரிக்க முடிகிறது.

இருந்தபோதினும், ஸ்ராலினிச ஆட்சியால் திணிக்கப்பட்ட தடைகளுக்குக் கீழே வேலை செய்துகொண்டே, மெய்யியலில் முக்கிய பங்களிப்புகளை செய்த ஏனைய பல சோவியத் மெய்யியலாளர்களின் படைப்புகளைப் போன்றே, இலியெங்கோவ் எழுத்துக்களும் முற்றிலுமாக கல்விசார் மெய்யியலாளர்கள் மத்தியில் புறக்கணிக்கப்படுகிறது. இத்தகைய சோவியத் சிந்தனையாளர்கள் மீதிருந்த தொடர்ச்சியான தடைகளை 'புத்திஜீவித்தனமான தீய நம்பிக்கை' என்று தான் மதிக்க முடியும். மேலும் போலித்தனத்தைக் காட்டும் சிந்தனையாளர்களின் ஒருவகையான நேர்மையின்மையையே இது பிரதிபலிக்கிறது. 

புதிர்வாதமும், ஹெகலின் இயற்கையைக் குறித்த மெய்யியலும்

Glenn Alexander Mageeஆல் எழுதப்பட்டு The Cambridge Companionஇல் வெளியான “Hegel and Mysticism” எனும் கட்டுரை ஹெகலின் கருத்துக்களில் இருந்த சில புதிரான விஷயங்களைக் கையாள்கிறது. ஒருவேளை வேறு எந்த எழுத்துக்களையும் விட இதில் அதிகமாக கூட கையாளப்பட்டிருக்கலாம். குறிப்பிடத்தக்க எதிர்ப்போ அல்லது விமர்சனமோ இல்லாமல் முக்கியமான மெய்யியல் நிகழ்விடங்களில் வெளியிடப்பட்ட பிற்போக்குதன்மை கொண்ட அறிவுஜீவியப் போக்குகளை இது வெளிப்படுத்துகிறது. Frances Yates மற்றும் Betty Jo Teeter Dobbs போன்றவர்களின் எழுத்தை ஒத்திருந்த Mageeயின் எழுத்துக்கள் விஞ்ஞானபூர்வ சிந்தனையின் முற்போக்கான வளர்ச்சியுடன் தொடர்புபட்ட ஒரு வரலாற்று பிரதிநிதியை, ஒரு மத சிந்தனையாளராகவும் அவருடைய எழுத்துக்கள் வரலாற்று அபிவிருத்தியில் மதம் ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்ததாக காட்டுவதாக இருப்பதாகவும் திரித்து கூற முயற்சிக்கிறது.

ஹெகலிய முறையில் இருந்த புதிர்வாதத்தைக் குறிப்பிட அது ஹெகலிய விமர்சனங்களுக்கான பொதுவிடமாக இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இந்த பண்புநலனாக்கம் பரவலாக கவனத்தில் எடுக்கப்பட்ட அவருடைய சிந்தனையின் தெளிவற்ற, குழப்பமான அல்லது மதம் சார்ந்த விஷயங்களை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற நிலையில், அவருடைய கருத்துக்கள் மிக குறுகலாக உணரப்பட்டால், அவற்றின் ஆதாரங்களை மத மெய்யுணர்வுகளில் இருந்து காண்கின்றன என்பது உண்மையே என்று Magee குறிப்பிடுகிறார்.

ஹெகல் மீதான இந்த வகையான மிக வெளிப்படையான பாதிப்பு 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மெய்யுணர்வாதியான Jakob Boehmeயிடமும் இருந்தது. “போஹிமியாவின் எல்லைக்கருகில் லூசாடியாவின் கோர்லிட்ஜில்" காலணி தயாரிப்பாளராக இருந்த Boehme 1600ஆம் ஆண்டில் ஓர் இலட்சியத்தைக் கொண்டிருந்திருக்கலாம். இது அவருடைய பல எழுத்துக்களில் வெளிப்பட்டது. (257) மேகி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “Boehmeஇன் சிந்தனையின் மையத்தில் கடவுள் பற்றிய ஒரு கருத்து தான் இருக்கிறது. இது இயக்கம் சார்ந்ததாகவும், விரிந்ததாகவும் இருக்கிறது. படைக்கப்பட்டிருப்பவைகளுக்கு வெளியே முழுமையாகவும், துல்லியமாகவும் இருக்கும் ஒரு கடவுளை மறுத்துவிட்டு, மாறாக படைப்பின் மூலம் தன்னைத்தானே உருவாக்கி கொள்ளும் ஒரு கடவுளைக் குறித்து Boehme எழுதுகிறார். அதிர்ச்சியளிக்கும் வகையில், படைப்பிற்கு அப்பாற்பட்டு அல்லது அதற்கும் மேம்பட்டு இருக்கும் கடவுள் இன்னும் கடவுளாக இல்லை என்று Boehme குறிப்பிடுகிறார். கடவுள் அவரை அவரே வெளிப்படுத்திக் காட்ட எது நகர்த்திச் செல்கிறது என்றால் சுய-நனவை எட்ட வேண்டும் என்ற விருப்பமே நகர்த்தி செல்கிறது. இந்த செயல்முறையின் இயந்திரத்தன்மை முரண்பாட்டையும், எதிர்ப்பையும் உள்ளடக்கி இருந்ததாக Boehmeஆல் கருதப்பட்டது... படைப்பின் செயல்முறை மற்றும் கடவுளின் சுய-நனவிற்கு வருவது ஆகிய இரண்டும், தவிர்க்க முடியாமல் மனிதனுடன் முழுமையை எட்டுகிறது.” (257)

ஹெகல் மீது இந்த கருத்து தாக்கத்தைக் கொண்டிருந்தது என்பதை புறக்கணித்துவிட முடியாது. கடவுள் என்பதற்கு பதிலாக ஹெகல் அதேமாதிரியிலான முழுமுதலானமை என்பதைக் குறிக்கிறார். ஆனால் Boehmeஇன் கடவுளைப் போன்றே, முழுமையாக இருக்க வேண்டுமானால், ஹெகலின் முழுமையும் சுய-நனவுக்கு வர வேண்டும். இந்த செயல்முறை முரண்பாடுகள் மற்றும் எதிர்ப்புகள் மூலமாக பல படிநிலைகளில் அவற்றை அவையே முன்னேற்றுகின்றன. முதலாவதாக தர்க்கம், பின்னர் இயல்பு, பின்னர் உத்வேகம் (வரலாற்றில் மனிதனின் காரணகாரிய தொடர்பு), கலை, மதம், மெய்யியல் வளர்ச்சியில் முழு வெளிப்பாட்டைக் காணுதல் மற்றும் அதன் முழு வளர்ச்சியில் முழுமையின் அறிவில் விளைவது என்று படிப்படியான படிநிலையின் மூலமாக முன்னேறுகின்றன. ஹெகலிய முறையின் மிக வெளிப்படையான புதிரான தன்மைகளும் மத விஷயங்களும் முந்தைய எழுத்தாளர்களிடமிருந்து கடன்வாங்கப்பட்டன என்று மேகி வெறுமனே குறிப்பிட்டிருந்தால், மேற்கொண்டு விரைவு இல்லாமல் இந்த ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லாத ஆய்விலிருந்து நாம் நகர வேண்டியவர்களாக இருக்கிறோம்.

எவ்வாறிருப்பினும், Magee தெளிவாக அவர் மனதில் ஒரு மிக ஆர்வந்ததும்பிய திட்டத்தைக் கொண்டிருக்கிறார். அவருடைய முடிவுரையில் அவர் எழுதுகிறார்: “மெய்யியலின் நவீன வரலாற்றாளர்கள் இயல்பாகவே அவர்களின் அகநிலை சடத்தை (subject) ஒரேமாதிரியான முற்போக்கான கண்ணாடி மூலமாகவே பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதாவது மூலமுதற்காரணம் அதன் உடற்கூறை வகைப்படுத்துகிறது என்பதுடன் மூடநம்பிக்கையின் இருளையும் படிப்படியாக வெளியேற்றுகிறது என்று காண்கிறார்கள். ஆனால் உடற்கூறின் சிறந்த கருத்தும் மூலமுதற்காரணத்தின் முற்போக்கான வெளிப்பாடும் பகுத்தறிவுக்குப் பொருந்தாததில் வேரூன்றி இருக்கின்றன என்றால், வரலாற்றை Heidegger பார்த்தது போல அதை ஒருவேளை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ளலாம். அதாவது மூடநம்பிக்கையில் இருந்து காரணவிளக்கத்திற்குச் செல்லும் ஓர் அறிவார்ந்த முன்னேற்றமாக அல்லாமல், மாறாக நெகிழ்வற்ற மூடநம்பிக்கைகளின் தொடர்பற்ற மற்றும் தற்செயலான வெற்றியாக பார்க்கப்பட்டது.” (280) 

மெய்யறிவு தன்னையே கட்டவிழ்த்து கொண்டதின் உபவிளைவு தான் வரலாறு என்ற கருத்துவாத ஹெகலிய கருத்தை மார்க்சிஸ்டுகள் நிராகரிக்கிறார்கள் என்றபோதினும், வரலாற்றை விஞ்ஞானபூர்வமாக புரிந்து கொள்வதற்கு வரலாற்று அபிவிருத்தியில் ஹெகல் காட்டிய தலைச்சிறந்த விளக்கம், தர்க்கரீதியான கருத்தாக இருக்கிறது. மேலும் அது ஏதோ வெறுமனே முக்கியமான தனிநபர்களால் தாக்கத்திற்கு உள்ளான வெறும் தற்செயலான நிகழ்வுகளின் ஒரு தொடர்ச்சியாகவோ, அல்லது சொல்லமுடியாத கொடூரங்களால் குறுக்கீடு செய்யப்பட்டோ இருந்துவிடவில்லை. கருத்துவாதத்திற்கு இடையில் ஹெகலினுடைய பகுத்தறிவார்ந்த வரலாற்று புரிதலை மட்டும் மேகி நிராகரித்துவிடவில்லை. அவர் சடவாதமான மார்க்சிசம் உட்பட வரலாற்றின் எல்லா பகுத்தறிவார்ந்த புரிதலையும் நிராகரிக்கிறார். இவற்றுடன் அவர் அவரையே பின்நவீனத்துவவாதிகளின் கூடாரத்திற்குள் நிறுத்திக் கொள்கிறார். மேலும் இதன்மூலம் முற்போக்கான வரலாற்று மாற்றத்தைக் குறித்த சிறப்பார்ந்த கருத்தை வெறுப்பூட்டும் ஒன்று என்று கூறும் ஏனைய அறிவொளி எதிர்ப்பாளர்களோடும் சேர்ந்து விடுகிறார். பகுப்பாய்வின் இறுதியில், இவர் பிற்போக்கான மற்றும் பின்தங்கிய சக்திகளுக்குத் தத்துவார்த்த போர்வையை அளிக்கிறார்.

ஹெகலினுடைய சிந்தனையில் இருந்த ஒரு நேர்மறையான தன்மையைப் புரிந்து கொள்ளாமல், மாறாக ஜேர்மன் அரசியல் மற்றும் பொருளாதார பிற்போக்குத்தனத்தின் சீரழிப்புக்கு ஒத்தவகையில், ஹெகல் மீதிருந்த புதிர்வாதத்தின் தாக்கம் புரிந்து கொள்ளப்பட்டது. அறிவொளியின் தாக்கம் ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை உண்டாக்கி இருந்தது என்றபோதினும், ஜேர்மனின் குட்டி முடியாட்சிகளின் ஆட்சியின்கீழ், சுதந்திர மற்றும் அரைகுறை சுதந்திர மாகாணங்களின் ஒட்டுவேலைப்பாடாகத் தான் இருந்தது. அந்த குட்டி முடியாட்சிகள் ஒவ்வொன்றும் மதம் சார்ந்தும், மதச்சார்பற்றும் இரண்டுவிதத்திலும் அதனதன் சொந்த விதிகளையும் பாரம்பரியங்களையும் கொண்டிருந்தன. இந்த ஒற்றுமையின்மை முதலாளித்துவ சமூக உறவுகளின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. மேலும் அது இயற்கை விஞ்ஞானத்தின் அடிப்படையில் உற்பத்தியைச் சீரமைப்பதையும் உட்கொண்டிருந்தது. இதன்மூலம் உற்பத்தியைப் சீரமைத்தல் நடைமுறையில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உறுதிப்பட்டிருக்கிறது.   

நடைமுறை செயல்பாடு மற்றும் விஞ்ஞானபூர்வ செயல்பாடானது புதிர்வாதத்திற்கு எந்த தத்துவம் இட்டுச் செல்கிறது என்பதன் அடிப்படையில் கலைத்துவிடுகிறது. ஆனால் இதன் புறநிலை அடித்தளம் பல விஷயங்களில் இன்றும் கூட 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த ஜேர்மனியில் தான் தங்கியுள்ளது. பழைய பாரம்பரியங்களுக்கும், அவை தெளிவற்றும், பகுத்தறிவின்றியும் இருந்தபோதினும் கூட, அவற்றிற்கும் ஜேர்மனிக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் அறிவொளியின் புதிய உத்வேகத்திற்கும் இடையில் ஹெகலினால் இன்றும் கூட மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது. ஜேர்மனிக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய உத்வேகத்தைத் தான், அவர் பழைய பாரம்பரியங்களில் பகுத்தறிவுவாத கருத்துக்களைத் துல்லியமாக கொண்டு வந்ததன் மூலமும் புதிய கருத்துக்களின் அடித்தளத்தில் அவற்றின் சீர்திருத்தத்தை வாதிட்டதன் மூலமும் செய்தார்.

மிகப் புதிய விஞ்ஞானரீதியிலான சிந்தனை மற்றும் சாதனைகளில் ஹெகல் அவருடைய அருமையான உள்வாங்கும்தன்மைக்கு, மதிப்பிடுவதற்கு மற்றும் ஆர்வத்திற்குச் சிறிதும் இடமில்லாததால், இதுபோன்றவொரு மறுஇணக்கத்திற்கு அவர் முயற்சியும் கூட செய்யவில்லை. அத்தகைய விஞ்ஞானரீதியிலான சிந்தனை மற்றும் சாதனைகளின் அபிவிருத்தியை மெய்யுணர்வு அல்லது விஞ்ஞானத்திற்கு முந்தைய கருத்துக்களின் உதவியோடு ஊகிக்கவும் கூட அவர் முயலவில்லை. இருப்பினும், அப்போதைய ஆண்டுகளில் பலர், அவர் அவ்வாறு செய்ய முயன்றதாக அவரை சந்தேகித்து வந்தார்கள்.

இவற்றைக் குறித்து கென்னத்  ஆர். வெஸ்ட்பலின் எழுத்துகள், அவருடைய Encyclopedia of the Philosophical Sciences என்பதன் இரண்டாம் பாகமான Philosophy of Nature என்பதில் ஹெகலினுடைய இலட்சியங்கள் மற்றும் முறைகளைக் குறித்து பெரும் அறியாமையை வெளிப்படுத்துகிறது. வரலாற்றுரீதியாக, இந்த பணி பெரும்பாலும் ஹெகலின் ஈர்ப்பிற்கு ஆதாரமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு உதவியிருக்கிறது. விஞ்ஞானரீதியிலான செயல்முறை மற்றும் இயல்திட்டவாதம் (teleology)- இயற்கை நிகழ்ச்சியின் காரணகாரிய தொடர்புகள் தற்செயலானதல்ல) போன்ற கருத்துருக்களின் கையாளுகை ஆகியவற்றின் மீது அது ஒரு முன்கூட்டிய அத்துமீறல்களாக இருந்திருக்கலாம் என்பதால், அவருடைய எல்லா பணியையும் கவனிப்பதற்கு ஒரு சிந்தனையாளராகவும், முக்கிய பிரமுகராகவும் இருப்பதால் அது ஆதாரமாக அமைகிறது.  

பெரும்பாலான ஹெகல்-ஆதரவு அறிவுஜீவிகள் அந்த பணியை ஒரு மனக்குழப்பமாக எடுத்துக் கொண்டார்கள். ஆகவே அவருடைய முறைக்கு மொத்தத்தில் அது மிக முக்கியமான ஒன்றாக இருந்தபோதினும், அது பெரிதும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. அது Logic மற்றும் Philosophy of Spirit (மனிதர்களை மையமாக கொண்டிருந்த ஆய்வுகள்) இரண்டுக்கும் இடையிலான ஒரு தொடர்பை அளிக்கிறது. ஆனால் விஞ்ஞானத்தைக் குறித்த ஹெகலின் பொதுவான பார்வை நம்பிக்கையற்று ஆதாரமில்லாமல் இருந்ததாலோ அல்லது வேண்டுமென்றே வன்மமான ஒன்றாக மாற்றப்பட்டிருந்ததாலோ ஆதாரமில்லாததாக இருக்கிறது. வெஸ்ட்பல் குறிப்பிடுவதைப் போல, சமீபத்திய ஆய்வின் அடிப்படையில், “நிபுணத்துவம் பெறாத வேறு எவரும் குறிப்பிட முடியாத அளவுக்கு ஹெகல் அவருடைய காலத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் மிக ஆழமாக எடுத்துரைத்திருக்கிறார்.” (284)  

அதற்கும் கூடுதலாக, “அவர் நுண்கணிதவியல் கற்பித்தார். அத்துடன் பகுப்பாய்வின் பிரெஞ்சு பாடசாலைகள், குறிப்பாக LaGrangeஐ முன்னிறுத்தி ஒரு தெரிவிக்கப்பட்ட காரணங்களை கொண்டிருந்தமைக்காக கணிதத்தையும் போதியளவிற்குப் புரிந்து கொண்டிருந்தார்.”(284) நியூட்டனின் புவிஈர்ப்புவிசை தத்துவம் ஹெகலை கவர்ந்திருந்தது. அது அவருடைய இயங்கியல் அபிவிருத்தியிலும் ஒரு தாக்கத்தைக் கொண்டிருந்தது, குறிப்பாக எல்லா பொருட்களின் பரஸ்பர தொடர்பு அதை எடுத்துக்காட்டுவதில் தாக்கத்தைக் கொண்டிருந்தது.

விஞ்ஞானத்திற்கு எதிராக ஹெகலின் அதீதபாய்ச்சல்களாக இருந்திருக்கக்கூடிய மிகப் பிரபலமானவைகளில் அவருடைய நியூட்டன் விமர்சனமும் இருக்கிறது. ஒரு நகைப்பிற்குரிய தவறாக காட்டப்படும் கண்டுபிடிப்பாக அது நீண்டகாலமாக பார்க்கப்படுகிறது என்றபோதினும், எட்வர்ட் சி. ஹல்பெர் (Edward C. Halper) ஹெகலின் வாதத்தை மறுகட்டுமானம் செய்யவும், அதைச் சரியாக புரிந்து கொண்டால் அதுவொரு சரியாக தோற்றம் அளிக்கின்றன நியூட்டன் விமர்சனம் என்பதை விளக்கவும் முயற்சிக்கிறார். நியூட்டனின் மூன்று இயக்க விதிகளையும் மற்றும் புவிஈர்ப்புவிசை தத்துவத்தால் நிறுவப்பட்ட சடத்தின் இயல்பையும் அனுமானத்தில் கொண்டு (ஆனால் இது வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை) ஹெகலினுடைய விமர்சனம் சடத்தின் இயல்பின் அடிப்படையில் இருக்கிறது. (320) 

இயங்கிக்கொண்டிருக்கும் சடமோ அல்லது இயங்காதிருக்கும் சடமோ ஒரு புறநிலை விசையால் உந்தப்படாத வரையில் அது உள்ளபடியே இருக்கும் என்பதை "inertia விதி" மறுக்கிறது" என்பதே அடிப்படை கருத்தாகும். (320) சடம் உட்கிடையாக இருக்கும் போது அது செயல்பாட்டிற்கு வருவதில்லை, மாறாக அது செயல்பாடற்றும் கிடந்துவிடுவதில்லை. அதை செயலுக்கும், மாற்றத்திற்கும் கொண்டு வர வேறு ஏதோவொன்றிடமிருந்து அதற்கு ஆற்றலைப் பாய்ச்ச வேண்டியதிருக்கிறது. நியூட்டனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விதிகளும் இதே ஊகங்களைத் தான் கொண்டிருக்கின்றன. “ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும் அதன் தொடக்க இயக்கத்தின் ஆதாரமாக ஒரு புற ஆற்றல் தேவைப்படுகிறது; ஆகவே நியூட்டன் கடவுளை உண்மையென ஏற்றுக்கொள்கிறார்" என்பதே இந்த கண்ணோட்டத்தின் விளைபொருளாக இருக்கிறது. (322)

ஆனால் சடத்தைக் குறித்த இந்த கண்ணோட்டம், ஈர்ப்புவிதியில் பொருளாக ஆகியிருக்கும் சடத்தைக் குறித்த கண்ணோட்டத்தோடு முரண்படுகிறது. ஹால்பர் குறிப்பிடுவதைப் போல, “இந்த விதியின்படி, சடத்தின் ஒவ்வொரு துகளும் சடத்தின் பிற ஒவ்வொரு துகளையும் நோக்கி ஓர் ஈர்ப்புவிசையை உண்டாக்குகிறது... எல்லா சடமும் அதன் இயல்பிலேயே, பிற சடத்தை நோக்கி விழுகிறது, அல்லது அதனை அதுவே இயக்குகிறது.” (322) வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சடம் புவிஈர்ப்பு விசையை உண்டாக்குவதன் மூலம், செயல்பாட்டில் இருக்கிறது. முக்கியமாக சூரிய மண்டலத்தில் கோள்களின் சுற்றுவட்ட பாதைகளால் மெய்ம்மைப்படுத்தப்பட்டதைப் போல, “ஒரு ஈர்ப்பு மையத்தைச் சுற்றி செயலற்ற இயக்கம் நீள்வட்டப்பாதை இயக்கமாக இருக்கிறது" என்பதை குறிப்பிடுவதே இந்த முரண்பாட்டின் ஹெகலினுடைய தீர்மானமாக இருக்கிறது. (335) கெப்லர் குறிப்பிட்டதன்படி, நீள்வட்டத்தில் நகர்வதே சடத்தின் இயல்பு; ஒரேநேர்கோட்டில் நகர்வது அதன் இயல்பல்ல. சடத்தின் கண்ணோட்டம் குறித்த விஷயத்தில் மிகவும் சுவாரசியமாக மேலெழுவது, அதன் இயங்கியல் பாத்திரமாக இருக்கிறது. ஒரு பொருளின் பாகங்கள் பிற பொருட்களை நோக்கி நகர்கின்றன என்ற அதே கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பொருளின் பாகங்களை ஈர்ப்புவிசை மையத்தை நோக்கி ஈர்க்கிறது என்பதால், அதன் இயல்பு அவ்வகையில் அதனிடத்திலிருந்து அதுவே விலகி, அதுவல்லாத பிறவாக மாறுகிறது... சடத்தின் உள் இயல்பு என்னவென்றால் அதற்கு வெளியில் இருக்கும் ஒரு புள்ளியை நோக்கிய நகர்வாக இருக்கிறது.” (334)

இயற்கை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் குறித்தும், இயற்கையின் மெய்யியலை அவருடைய கலைக்களஞ்சியத்தின் மையப்பகுதியில் வைப்பதிலும் அவர் மிகவும் கவனமாக இருந்திருக்கக்கூடும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எவ்வாறிருப்பினும், இது ஏன் இவ்வாறு இருக்கிறது, குறிப்பிட்டு கூறுவதானால், விஞ்ஞானம் முழுமையின் ஓர் உயர் அபிவிருத்தியைக் காட்டுகிறது. அதன்மூலம் அது மூலமுதற்காரணத்தைக் காட்டுகிறது என்பதற்காக ஒருவர் அவருடைய சொந்த விளக்கங்களின் பின்னால் ஓட முடியாது. இதற்கு முரண்பட்ட வகையில், ஹெகலின் பணியில் விஞ்ஞானத்தின் மையத்தன்மை (centrality) ஆற்றல்களின் அபிவிருத்தியாலும் உற்பத்தி உறவுகளாலும் அளிக்கப்பட்ட சக்திவாய்ந்த விசையுடன் பெரிதும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

பிரெடரிக் ஏங்கெல்ஸ்

இதையே ஏங்கெல்ஸ் மிகப் பொருத்தமாக பின்வருமாறு குறிப்பிட்டார், “டெஸ்கார்டஸில் இருந்து ஹெகல் வரைக்கும், ஹோப்பெஸிலிருந்து ஃபயர்பாக் வரையிலான நீண்ட காலக்கட்டத்தின் போது, இந்த மெய்யியலாளர்கள், தாங்கள் எவ்வாறு இருந்தோம் என்று அவர்கள் கருதினார்களோ அவ்வாறே, தூய்மையான மூலமுதற்காரணத்தின் ஆற்றலால் மட்டுமே எவ்விதத்திலும் அழுத்தம் அளிக்கப்பட்டிருக்கவில்லை. இதற்கு முரண்பட்ட வகையில், இயற்கை விஞ்ஞானத்தின் மற்றும் தொழில்துறையின் ஒருபோதும் இல்லாத விரைவான மற்றும் சக்திவாய்ந்த சக்திவாய்ந்த அபிவிருத்தி தான் உண்மையில் அவர்களை முன்னோக்கி தள்ளியது. சடவாதிகள் மத்தியில் இது மிகவும் தெளிவாக இருந்தது. ஆனால் கருத்துவாத முறைகள் அவற்றை அவையே மேலும் மேலும் சடவாத உள்ளடக்கத்தால் நிறைத்து கொண்டது. மேலும் அது சிந்தனைக்கும், சடத்திற்கும் இடையே எதிர்தரப்பை மறுஇணக்கம் செய்ய அனைத்து கடவுளையும் ஏற்கும் விதத்தில் முயன்றது. இவ்வாறு, இறுதியில், அணுகுமுறையிலும் உள்ளடக்கத்திலும் கருத்துவாதரீதியில் தலைகீழாக இருக்கும் ஒரு சடவாதத்தையே ஹெகலிய முறை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.” (Ludwig Feuerbach and the End of Classical German Philosophy, Ch. 02)

முடிவுரை

துரதிருஷ்டவசமாக, ஹெகலின் மெய்யியல் மீது மார்க்சிசத்தால் முன்னிருத்தப்பட்ட விமர்சனங்கள் மற்றும் சவால்களைக் கண்டு கொள்ளாமலும், அந்தவிதத்தில் மட்டுமில்லாமல் அதை மார்க்சிசம் மிஞ்சியிருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ளாமல், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஹெகலின் மெய்யியலே பொருத்தமானது என்று காட்டுவதற்கான ஒரு தெளிவான போக்கு பெரும்பாலான பங்களிப்புகளில் இருக்கிறது. ஹெகலிய மெய்யியலின் மிக முக்கியமான மற்றும் மிக ஆழமான சடவாத அபிவிருத்தியின் இந்த நிராகரிப்பினால், தவிர்க்க முடியாமல் ஹெகலின் புதிர்த்தன்மை மற்றும் கருத்துவாத தன்மைகளின் மீது பல்வேறு பொருள்விளக்கங்களும், பெரும் வலியுறுத்தல்களும்  வைக்கப்படுகின்றன. அதாவது, இவை ஹெகலினுடைய சொந்த எழுத்துக்களாலேயே நியாயப்படுத்தப்பட்டது என்பதையும்விட, நிறையவோ அல்லது குறைவாகவோ கான்டின் மீது வெளிப்படையாக காட்டும் பிற்போக்குத்தன்மைகளாகும்.

இந்த போக்கு சமூக மற்றும் அரசியல் மெய்யியலாளர்கள் மத்தியில் பேசப்படுவதைவிட வேறு எங்கும் அதிகமாக பேசப்படுவதில்லை. இங்கே இது ஒருவகையான காலத்திற்கு ஒத்ததாக்கப்பட்டதாராளவாதத்தைத் தத்துவார்த்தப்படுத்தும் முயற்சியில் அதன் வெளிப்பாடுகளைக் காண்கிறது-வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெரெடரிக் நெவ்கௌசர் (Frederick Neuhouser) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ஆழமான  மற்றும் சகித்துக்கொண்டிருக்கும் ஜன சமூகத்துடன் இணைவதற்கான மனித தேவைகளுடன் தாராளவாத சமூக சிந்தனை தனிநபர்களின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளுக்காக வெளிப்படுத்தும் அதன் கவலைகள் உட்பட அதன் சிறந்த தன்மைகளுடன் முதலாளித்துவம் இணங்குகிறது. (204)  

சமூக ஐக்கியத்தில் முதலாளித்துவம் ஆழமாக துருப்பிடித்து இருக்கிறது என்பதை அறிஞர்கள் ஒப்புக் கொண்டாலும் கூட, ஹெகலிய மாதிரியுடன் கூடிய தேவைகேற்ற சமூக அமைப்புகள் நிறுவப்பட்டிருந்தால், முதலாளித்துவத்தின் மிகுதிகள் அனைத்தும் பல்வேறு சீர்திருத்தங்கள், கவனக்குறைவு மற்றும் அனைத்திற்கும் மேலாக குடிமக்களின் நியாயமான முன்னேற்றத்திற்குத் தேவையான கருவிகளை அளிப்பதன் மூலம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள். எளிய வார்த்தைகளில் கூறுவதானால், இதுவொரு கற்பனையே. 'அரசு என்பது வர்க்கங்களுக்கு இடையில் இருக்கும் ஒரு நடுநிலையான மத்தியஸ்தர்; தனிப்பட்ட முதலாளிகள் தான் முதலாளித்துவத்தின் பிரச்சினை, இலாப அமைப்புமுறை பிரச்சினையில்லை' என்ற தாராளவாத கருத்தின் மிக நவீன வடிவமே இது.       

இந்த புத்தக தொகுப்பில் பல கட்டுரைகள் வெகு சிறப்பாக ஹெகலின் மேதைமையில் இருந்த முற்போக்குத்தன்மைகளைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன என்றபோதினும், குறிப்பாக ஹெகலையும் விஞ்ஞானத்தையும் தொடர்புபடுத்தி கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன என்றபோதினும், இந்த புத்தகம் விளங்கமுடியாதபடிக்கு ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டது. இந்த பிரச்சினைகளை நேர்மையோடு அணுகுவதற்குத் தேவையான கலாச்சார அடித்தளங்களைச் சமகாலத்திய மெய்யியல் கொண்டிருக்கவில்லை என்பதுடன், பரந்து கிடக்கும் கருத்துவாத மற்றும் அகநிலை கண்ணோட்டங்களாலும், அணுகுமுறைகளாலும் இது பெரிதும் சேதப்படுத்தப்படுகிறது.