World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

London conference on Afghanistan: Occupation will last for years to come

லண்டனில் ஆப்கானிஸ்தான் பற்றிய மாநாடு: ஆக்கிரமிப்பு பல ஆண்டுகள் நீடிக்கும்

By Chris Marsden
29 January 2010

Use this version to print | Send feedback

லண்டனில் ஆப்கானிஸ்தான் பற்றி நடந்த மாநாடு நாட்டில் இராணுவ ஆக்கிரமிப்பு இன்னும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இருக்கும் என்பதைக் காட்டியது. ஆப்கான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் கருத்தில் 15 ஆண்டுகள் கூட இது நீடிக்கலாம்.

2011ல் அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்படும் என்னும் ஜனாதிபதி ஒபாமா கூற்று இப்பொழுது இல்லை. இதற்குப் பதிலாக ஒவ்வொரு பிராந்தியத்திற்கு பொறுப்பு மாற்றம் என்பது வந்துள்ளது. இது பல ஆண்டுகள் பிடிக்கும், "தளநிலைமையை பொறுத்து இராணுவத்தால் முடிவெடுக்கப்படும்."

தற்பொழுது தலிபான் எழுச்சியுடன் தொடர்புடைய பல ஆப்கானிய போர்ப்பிரபுக்களை கர்சாயுடன் அதிகாரப் பகிர்வு கொடுத்து இணைப்பதற்கான ஒருமித்த முயற்சி உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜேர்மனி இன்னும் பல நாடுகள் கொடுக்கும் $650 மில்லியன் ஒதுக்கு நிதியை பயன்படுத்தி 12,500 ஆப்கானியப் போராளிகளை பிரிக்கும் முயற்சியும் உள்ளது (இதில் $147 மில்லியன்தான் உறுதியளிக்கப்பட்டுள்ளது). எழுச்சி ஒன்றும் ஒரு விருப்புரிமை அல்ல என்று தலிபான்களை "நம்பவைக்க" பெரும் இராணுவத் தாக்குதலும் இருக்கும்.

சர்வதேச பாதுகாப்பு நிதியைப் பொறுத்தவரையில், பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் அதன் நோக்கம், எழுச்சியில் பங்கு பெறுவதைத் தவிர வேறு வழி "ஏதும் இல்லாதவர்களுக்கு ஒரு பொருளாதார மாற்றீட்டை அளிப்பதுதான்" என்றார்.

ஆப்கானிய ஜனாதிபதி கர்சாய் கூறினார்: "நம்முடைய திட்டம் வெற்றி அடைவதற்கு, சவுதி அரேபிய மன்னர் மாட்சிமை தங்கிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசிஸ் முக்கிய பங்கைப் பெறுவார், சமாதான வழிவகைக்கு வழிகாட்டி உதவுவார் என்று நாம் நம்புவோமாக."

"எங்கள் நண்பர்கள் அனைவரையும் குறிப்பாக பாக்கிஸ்தானை, நம் சமாதானம், சமரச முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்குமாறு கோருகிறோம்" என்றும் அவர் வாதிட்டார்.

சமாதானம், சமரசம், மறு இணைப்பு ஆகியவற்றிற்கு ஒரு தேசியக் குழுவை நிறுவியதைத் தொடர்ந்து, "சமாதானக் குழு" அமைக்க, அதாவது மூத்தவர்கள் குழு ஒன்று அப்துல்லா அரசருடன் "ஒரு முக்கிய பங்கை" கொண்டு செயல்படும் என்று கர்சாய் கூறினார்.

கொள்கையின் முக்கிய நோக்கம் பல போர்ப் பிரபுக்களையும் கருத்தில் கொண்டு இயக்கப்படுவது ஆகும். அவர்களுக்கு அரசாங்கத்தில் பங்கு கொடுக்கப்படும். தலிபான் ஆட்சி அகற்றப்பட வேண்டும், அது ஒசாமா பில் லேடனுக்கு பாதுகாப்பு கொடுத்தது, அல் குவேடாவுடன் தொடர்புகள் கொண்டது என்று கூறப்பட்ட நிலையில் 2001ல் போர் தொடக்கப்பட்ட பின்னணியில், இத்திட்டத்தில் உள்ள இழிந்த தன்மை அசாதாரணமானது.

பின் லாடன் பெயர் இப்பொழுது அதிகம் குறிப்பிடப்படுவது இல்லை. தலிபான் தலைவர் முல்லா முகம்மது ஒமர் இன்னும் பிறருடன் அமெரிக்க நேரடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் இப்பொழுது ஆப்கானிஸ்தானின் "அரசியல் தளத்தின்" ஒரு பகுதி என்று விவரிக்கிறார்.

ஆப்கானிதானில் உள்ள அமெரிக்க தளபதி ஜேனரல் ஸ்டான்லி மக்கிரிஸ்டல் பைனான்ஸியல் டைம்ஸிடம் லண்டன் மாநாட்டிற்கு முன்னதாக, "கடந்த காலம் என்று இல்லாமல், வருங்காலம் பற்றி ஒரு முக்கியத்துவம் காட்டினால் எந்த ஆப்கானியரும் அதில் ஒரு பங்கைப் பெறலாம்." என்றார்.

ஐந்து முன்னள் மூத்த தலிபான் அதிகாரிகள் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் தடுப்புக்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டனர்; அவர்கள் தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ள இது உதவும்.

நீண்ட கால நோக்கம் ஆப்கானிஸ்தானை ஒரு அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காப்பு நாடாகச் செய்வது, அதிகார பகிர்வின் மூலம் ஆளும் வாடிக்கை ஆட்சியை அமைத்தல் என்பதாகும். ஆனால் அடுத்த கட்டத்தில் அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தாக்குதல் விரிவாக்கப்படுவது வலியுறுத்தப்படும். இதற்கு அங்கு ஒபாமாவால் விரிவாக்கத்திற்கு பின் நிறுத்தப்பட்டுள்ள 110,000 படையினர் பயன்படுத்தப்படுவர். "மறு இணைப்பிற்கான நிபந்தனைகளை மறுக்கும் எழுச்சியாளர்களைப் பொறுத்தவரையில், இராணுவ ரீதியாக அவர்களைத் தொடர்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை." என்று பிரெளன் எச்சரித்தார்.

ஹெல்மாண்ட் மாநிலத்தில் 45,000 நேட்டோ துருப்புக்களுக்கு தளபதியான மேஜர் ஜேனரல் நிக் கார்ட்டர், தற்பொழுது தலிபான் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இடங்களில் ஆப்கானிய அரசாங்கத்தின் "கட்டுப்பாடு உறுதி செய்யப்படுவதற்காக" முக்கிய இராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு ஹெல்மாண்டில் உள்ள 10,000 பிரிட்டிஷ் துருப்புக்களும் புதிதாக வந்துள்ள 13,000 அமெரிக்க மரைன்களும் தேவைப்படுவர்.

ஒரு பெயரிடப்படாத லண்டன் தூதர் இதை, "இனிப்பு கொடுத்து தடியடி கொடுக்கும் அணுகுமுறை" என்று விவரித்தார். இதை விளக்கும் விதத்தில், "களத்தில் இன்னும் 40,000 துருப்புக்கள் இந்த ஆண்டு இருக்கும், இது தலிபானுக்கு பெரும் தொந்திரவாக இருக்கும். இனிப்பு என்பது பணம் அளிக்கப்படுதல், ஆப்கானிய அதிகார அமைப்பிலும் ஒரு இடம் அளிக்கப்படுவதும் ஆகும்."

உண்மையில் "இனிப்பு" போர்ப்பிரபுக்களுக்கு கொடுக்கப்படுகிறது, தடியடியோ எழுச்சியாளர்கள், ஆப்கானிய குடிமக்கள் இரு பிரிவுக்கும் கொடுக்கப்படுகிறது.

தலிபானையும் இன்னும் இணையாத பிரிவுகளையும் இராணுவரீதியாக தளர்வுறச் செய்யும் முயற்சி, அரசாங்கத்தில் சேர்க்கும் முயற்சி, குறைந்து 3 ஆண்டுகளாகவது பிடிக்கும் என்று கருதப்படுகிறது. இதில் ஆப்கானியப் படைகள் "ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் பாதுகாப்பிற்கு முழுப் பொறுப்பை எடுப்பர்." அப்படி இருந்தும், பிரெளன் பல முறையும் திரும்பப் படைகளை பெறுவதற்கு கால அட்டவணை கொடுக்க மறுத்துள்ளார். இவை நிலைமையைப் பொறுத்து இருக்கும் என்றும் "நாம் செயல்படும் மாநிலங்களில் ஆப்கானியர்கள் பாதுகாப்பை எடுத்துக் கொள்ளலாம்" என்றும் வலியுறுத்தினார்.

மக்கிரிஸ்டலும் பைனான்ஸியல் டைம்ஸிடம், "இது நிலைமையைப் பொறுத்து இருக்கும் என்றுதான் நம்புகிறேன்; இடைக்காலத்தில் சில நிபந்தனைகள் பற்றி உடன்பாடு இருக்கும்" என்று கூறினார்.

மாநாடு தொடங்குவதற்கு முன்பு வெளிவந்த BBC பேட்டி ஒன்றில், கர்சாய் சற்று குறைந்த நம்பிக்கையைத்தான் காட்டினார். "ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி, ஆயுதம் கொடுப்பதைப் பொறுத்த வரையில் 5 முதல் 10 ஆண்டுகள் போதுமானவை. ஆனால் அவற்றை தொடர்ச்சியாக நீடிக்க வைக்க.... கால அவகாசம் 10 முதல் 15 ஆண்டுகள் பிடிக்கும்."

லண்டன் மாநாடு உலகின் முக்கிய சக்திகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீட்டிற்கு உதவத் தயாராக உள்ளன என்பதை நிரூபிக்கிறது. ஆக்கிரமிப்பு ஒரு புதைநிலமாகிக் கொண்டு வருகிறது என்று பெருகிய கவலைகள் இருந்தும், துருப்புக்களை விழுங்கி, ஏராளமான பொருட்செலவை ஏற்படுத்துகிறது என்றாலும், ஆப்கானிஸ்தானத்திற்கு அருகே உள்ள மூலோபாய எண்ணெய், எரிவாயு செழிப்பு நிறைந்த இடங்களில் அமெரிக்கா அதன் செல்வாக்கை நிறுவதல் பற்றி எந்த நாடும் வெளிப்படையாக விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை.

60 க்கும் மேற்பட்ட நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்டன. அதைத்தவிர நேட்டோ, ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அமெரிக்க விரிவாக்கத்தை ஒபாமா அறிவித்ததில் இருந்து 8,000 கூடுதல் நேட்டோ துருப்புக்களும் ஆப்பிரிக்காவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளன என்று பிரெளன் வலியுறுத்தினார். IASF எனப்படும் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகளில் இன்னும் நான்கு நாடுகளான ஆர்மீனியா, மங்கோலியா, மொன்டிநெக்ரோ, தென் கொரியா ஆகியவை சேர்ந்துள்ளன. இவை நேட்டோ உறுப்பு நாடுகள் இல்லை. இவை கிட்டத்தட்ட 800 கூடுதல் துருப்புக்களை கொடுக்க உள்ளன. அவர்களில் பெரும்பாலானவர்கள் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள். இதன் பொருள் இப்பொழுது 47 நாடுகள் ஆப்கானிஸ்தானில் தலையீடு செய்துள்ளன என்பதாகும். லண்டன் மாநாட்டிற்கு ஒரு நாள் முன்பு ஜேர்மனி இன்னும் ஒரு 500 படையினரை அனுப்புவதாக உறுதியளித்துள்ளது.

இவை அனைத்தும் ஒரு நீடித்த காலத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எதிர்கொள்ளும் பெருகிய பிரச்சினைகளுக்கு இழப்பீட்டைத் தராது. பெருமளவில் கர்சாயைத்தான் வாஷிங்டன் நம்பியுள்ளது; அவருடைய ஊழல் மிகுந்த ஆட்சி அதிக அளவில் செல்வாக்கிழந்துவிட்டது; மேற்கு ஒப்புதல் கொடுத்த தேர்தல் மோசடியினால்தான் அவர் பதவியில் தொடர முடிகிறது.

தங்கள் இராணுவப் போராட்டத்தில் இழப்பு ஏதும் இல்லை என்ற நிலையில்தான் தலிபான்கள் உள்ளனர். அமெரிக்காவின் கையாட்களாக இயங்குவதையும் விரைவில் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. லண்டன் மாநாட்டை வெளிநாட்டு ஆக்கிரமிப்பை நியாப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள "நேரத்தை வீணடிக்கும் செயல்" என்று தலிபான் அறிக்கை ஒன்று கண்டித்தது. "காபூலின் மீதான சமீபத்திய தாக்குதல்கள் உண்மையில் லண்டன் மாநாட்டிற்கு ஒரு தகவல்: தலிபான் பேச்சுநடத்தத் தயாராக இல்லை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிமைகள் போல் இருப்பவர்களுடன் ஒத்துழைத்து ஆட்சியை நிறுவும் விருப்பமும் அதற்கு இல்லை." என அதில் குறிப்பிட்டது.

பிராந்திய சக்திகளைப் பொறுத்தவரையில், வாஷிங்டன் மற்றும் லண்டலில் இருந்து பெருகிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கும் ஈரான் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இது ஆப்கானிஸ்தானில் கூடுதல் இராணுவ நிலைப்பாட்டில் குவிப்பைக் காட்டும் என்று அது கண்டித்தது. பாக்கிஸ்தான் கலந்து கொண்டது, ஆனால் அதன் இரகசியப் பிரிவான ISI தலிபானுடன் பிணைந்துள்ளது. அமெரிக்காவின் பெருகிய விரோதப் போக்கையும் இஸ்லாமாபாத் எதிர்கொள்ளுகிறது.

மாநாட்டிற்கு முன்பு நியூ யோர்க் டைம்ஸ் அமெரிக்காவின் காபூலில் இருந்த தூதர் கார்ல் ஐகென்பெரி எழுதிய இரு இரகசியக்குறிப்புக்களை வெளியிட்டது. அவை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க எதிர்கொள்ளும் நிலைமை பற்றி பேரழிவுத் தீர்ப்பைக் கொடுக்கின்றன. ஒரு ஓய்வு பெற்ற இராணுவ துணை ஜெனரலான ஐகென்பெரி ஆப்கானிஸ்தானத்தில் இரு முறை தனித்தனியே கடமைக்கு சென்று இருந்தார். 2002-03 ல் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளை மறுகட்டமைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார். அன் பின் 2005-07ல் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் படைகளின் தலைவராக இருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் எழுதப்பட்ட இக்குறிப்பு, மக்கிரிஸ்டலின் எழுச்சிக்கு எதிரான வாதம் என்று கொள்ளப்பட்டதில், ஐகென்பெரி அமெரிக்க அதிகமாக நிலைகொள்வது குறித்து எச்சரித்துள்ளார். அவை பல பில்லியன் டாலர்கள் செலவு கொடுக்கும் என்பதுடன் அமெரிக்கா மீது கர்சாய் அரசாங்கம் நம்பியிருக்கும் தன்மையையும் அதிகரிக்கும். இதையொட்டி நாம் எமது படையினரை தாயகத்திற்கு உரிய காலத்தில் திரும்புவது கடினம், இயலாது."

"கர்சாய் ஒரு போதுமான மூலோபாயப் பங்காளி இல்லை" என்று விவரித்த அவர், இறைமையைச் செலுத்தும், மேற்கொள்ளும் பொறுப்பு கர்சாயிடம் இல்லை என்றும் கூறினார். "அவரும் அவருடைய வட்டத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களும் அமெரிக்கா திரும்பிச் செல்ல வேண்டும் என விரும்பவில்லை, நாம் இன்னும் முதலீடு செய்தால் மகிழ்ச்சி அடைவர்" என்று அவர் எழுதினார். "பயங்கரவாதத்திற்கான போரில் அவர்களுடைய நிலத்தை நாம் சுற்றியிருக்கும் சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்த இராணுவத் தளங்களை அமைக்க நாடுகிறோம் என்று அவர்கள் கருதுகின்றனர்."

உறுதியான வகையில் அவர் எச்சரித்து: "ஆப்கானிஸ்தான் உறுதிக்குலைவிற்கு பாக்கிஸ்தான் ஒற்றைப் பெரும் ஆதாரமாக இருக்கும். எல்லைகளில் பாதுகாப்புப் புகலிடங்கள் கொடுக்கும் வரை இப்படித்தான் இருக்கும்". "ஆப்கானிஸ்தானில் நம் இருப்பை பெரிதும் அதிகப்படுத்துகையில், நம்முடைய இடர்பாடுகளுக்கு சிறந்த விடை பாக்கிஸ்தானில் நம் நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதுதான்." இது இராணுவ விரோத நடவடிக்கைகளை விரிவாக்கும் வாய்ப்புக்களை தெளிவுபடுத்துகிறது.

ஒபாமா, பிரெளன் இன்னும் பிறரின் திட்டங்களை அச்சுறுத்தும் மிக ஆபத்தான காரணிகள் ஆப்கான் மக்களிடையே ஆக்கிரமிப்பு பற்றிய பரந்த எதிர்ப்பும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொழிலாளர்களிடையே போர் பற்றி உள்ள மகத்தான எதிர்ப்பும் ஆகும்.