World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama budget: War, debt and cuts in social services

ஒபாமாவின் வரவு-செலவுத் திட்டம்: யுத்தம், கடன், சமூகசேவைகளில் வெட்டு

By Patrick Martin
2 February 2010

Use this version to print | Send feedback

திங்களன்று முன்வைக்கப்பட்ட 2011 நிதியாண்டிற்கான ஒபாமா நிர்வாகத்தின் வரவு-செலவுத் திட்டம் அடுத்த தசாப்தத்திற்கு பாரிய அமெரிக்க அரசாங்க பற்றாக்குறைகளைக் காட்டும் விதத்தில் இருப்பதோடு, பெரும் இராணுவச் செலவினங்களாலும் அமெரிக்க உலக முதலாளித்துவ நிதிய, பொருளாதார நெருக்கடியின் பாதிப்பினால் எரியூட்டப்பட்ட தன்மையையும் கொண்டுள்ளது. அமெரிக்க தேசியக் கடன் வரவிருக்கும் தசாப்தத்தில் இருமடங்கிற்கும் அதிகமாகும், 8.5 டிரில்லியன் டாலர் அதிகரிக்கும்.

செப்டம்பர் 30, 2010ல் முடியும் இந்த நிதியாண்டில் கூட்டாட்சி பற்றாக்குறை 1.6 டிரில்லியன் டாலர் ஆகும் என்றும் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகாறும் இந்த அளவு பற்றாக்குறை இருந்ததில்லை. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது கிட்டத்தட்ட 11 சதவிகிதம் ஆகும். கடந்த வாரம் காங்கிரஸ் வரவு-செலவுத் திட்ட அலுவலகம் மதிப்பிட்டிருந்த 1.35 டிரில்லியன் டாலரையும் விட இது மிகக் கூடுதல் ஆகும்.

தற்போதைய ஆண்டில் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை வளர்ந்துவிட்டது பெரும்பாலும் மோசமான பொருளாதார நெருக்கடியின் துணை விளைவு எனலாம். அதே நேரத்தில் இது வரி மூலம் கிடைக்கும் வருமானங்களையும் குறைத்து, வேலையின்மை இழப்பீடு மற்ற கட்டாய திட்டங்களுக்கு கூடுதல் பணத்தை ஒதுக்கும் நிலையையும் ஏற்படுத்தியது.

வெள்ளை மாளிகை வரவு-செலவுத் திட்ட இயக்குனர் Peter Orzag இப்பொழுது பல மில்லியன் அமெரிக்க தொழிலாளிகள் ஒபாமாவின் எஞ்சிய நாலாண்டு பதவிக் காலத்திலும் வேலையின்மை பட்டியலில் இருப்பர் என்று கணித்துள்ளார். நிதிஆண்டு 2011ன் வரவு-செலவுத் திட்டம் இந்த ஆண்டு வேலையின்மை சராசரி 10 சதவிகிதம் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. 2011ல் இது 9.2 எனக் குறையலாம், 2012ல் 8.2 எனக் குறையலாம் என்று கூறுகிறது. இந்த இரண்டு சராசரிகளுமே செப்டம்பர்-அக்டோபர் 2008 வோல் ஸ்ட்ரீட் சரிவிற்கு முன் இருந்ததைவிட மிக அதிகமானதாகும்.

இந்த வேலையின்மை மற்றும் பற்றாக்குறை புள்ளிவிவரங்கள்கூட அதிகமாக நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளன. ஏனெனில் அவை இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருக்கம் 2.7 சதவிகிதம் இருக்கும், 2011ல் 3.8 சதவிகிதம், 2012ல் 4.3 இருக்கும், அடுத்த சில ஆண்டுகளுக்கு 4க்கு மேல் இருக்கும் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. அத்தகைய வளர்ச்சி கடைசியாக 1990 களின் dot.com குமிழின்போது ஏற்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தற்போதைய அளவில் தேக்கம் அடைந்துவிட்டால் சரிவிற்கு திரும்புவது ஒருபுறம் இருக்க வேலையின்மை எண்ணிக்கை மிக அதிகமாக இரட்டை இலக்கங்களுக்கு உயரும். அது சர்வதேச நம்பிக்கையை முன்கூட்டியே இழக்க வைத்து டாலருக்கு சரிவை ஏற்படுத்தும். இப்பொழுதுள்ள நிலையில், வெள்ளை மாளிகையால் கருதப்படும் ஒப்புமையில் ஆபத்தற்ற நிலைமை நாட்டின் மொத்த வரலாற்றுக் காலத்தையும் விட அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா அதிக கடனை வாங்க உள்ளது என்பதாகும்.

கூட்டாட்சிக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2011 நிதி ஆண்டு இறுதியில் 69 சதவிகிதம் என்பதில் இருந்து 2020ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 77 சதவிகிதம் என்று கணிக்கப்பட்டுள்ள 80 சதவிகிதத்திற்கு அருகே இருக்கும். அந்த கட்டத்தில்தான் அமெரிக்க அரசாங்கத்தின் கடன்வாங்கும் தன்மை சரிந்துவிடும். முதலீட்டாளர்கள் வாஷிங்டன் அதன் கடன்களை திருப்பிக் கட்டுவதில் வெற்று காகித டாலர்கள் அடித்தால்தான் கொடுக்க முடியும் என்று கருதிவிடுவர்.

இத்தகைய பாரிய புள்ளிவிவரங்களின் பின்னணயில், ஒபாமா "வேலை தோற்றுவிப்பதற்காக" 2011 வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது 100 பில்லியன் டாலர் தான். இது ஒரு வாளியில் ஒரு சொட்டுத் தண்ணீர் என்பது போன்றதாகும். முழு வேலைகளாக இதை மாற்றினாலும், வேறு செலவினங்கள், வணிக இலாபங்கள் இல்லை என்றுகொண்டாலும், இரண்டு மில்லியன் வேலைகள் மொத்தத்தில் 50,000 டாலர் கொடுப்பவை என்று இருக்கும். ஆனால் இந்த நாட்டிலோ இப்பொழுது 20 மில்லியன் மக்கள் வேலையில் இல்லை, அல்லது தகுதிக்கு ஏற்ற வேலையில் இல்லை.

ஆனால் இப்பொழுதுள்ள நிலையில் 100 பில்லியன் டாலரில் ஒரு பென்னி கூட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அல்ல. இது தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டால், அல்லது கூடுதல் ஊதியம் கொடுத்தால் வரிக்குறைப்புக்கள் மூலம் பெருமளவு வணிகர்களுக்கு கொடுக்கப்படும். வேலையின்மை நலன்களை விரிவாக்கவும், மாநில, உள்ளூர் அரசாங்கங்களுக்கு கொடுக்கவும் ஒதுக்கப்படும்.

வெள்ளை மாளிகை, வேலை தோற்றுவித்தல் என்னும் முயற்சியில் குவிப்பு காட்ட முற்படுகையில், இச்செலவு நிர்வாகத்தின் உண்மை முன்னுரிமைகளில் மிகச் சிறியதாக உள்ளது. மகத்தான இராணுவ நிலைப்பாட்டு செலவுகள், தேசியக் கடன் மீது வட்டி கொடுத்தல் ஆகியவை விகிதத்திற்கு அதிகமாக செல்வந்தர்களுக்கும் வெளிநாட்டில் இருந்து கடன் கொடுத்தவர்களுக்கும் செல்லும்.

இந்த நிதியாண்டிற்கு இன்னும் கூடுதலாக 33 பில்லியன் டாலர் போர்ச் செலவிற்கு வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கி வைக்கிறது. இது ஆப்கானிஸ்தானில் ஒபாமா விரிவாக்கியுள்ள 30,000 துருப்புக்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும், ஈராக், ஆப்கானிஸ்தான் இரண்டும் இணைந்து அடுத்த ஆண்டுகளில் செலவு செய்யும் 159 பில்லியன் டாலர்களுக்கும் ஒதுக்கப்படும். வழக்கமான பென்டகன் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ள 549 பில்லியன் டாலருடன் சேர்ந்து, இது அமெரிக்க இராணுவச் செலவை நிதியாண்டு 2011ல் 708 பில்லியன் டாலருக்கும் அதிகமாக்கும். இதைத்தவிர கணிசமான மறைமுகச் செலவுகள் உண்டு. அவற்றுள் எரிபொருள் துறையின் வரவு-செலவுத் திட்டம் அனைத்தும் கிட்டத்தட்ட அடங்கும். அது அணுசக்தி ஆயுதங்கள் தயாரிப்பு வழிவகையை மேற்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிற்கு இந்த ஆண்டு கோரப்பட்டுள்ள கூடுதல் நிதியை கணக்கில் எடுத்துக் கொண்டால், 2010, 2011ல் இரு போர்களுக்கும் அமெரிக்காவின் மொத்தச் செலவு 322 பில்லியன் டாலர் என்று வரும். புஷ் நிர்வாகத்தின் இறுதி இரு ஆண்டுகளில் அது 354 பில்லியன் டாலர் என்று இருந்தது. ஆனால் உறுதிப்படுத்தப்படாத அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும் ஆகஸ்ட் 2010 ஐ ஒட்டி ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று வைத்துக் கொண்டால், இது சிறிய குறைப்புத்தான்.

2011 நிதியாண்டில்தான் ஈராக் போரையும் விட அதிகமாக ஆப்கானிஸ்தான் போருக்கு நிதி ஒதுக்கப்படும் முதல் ஆண்டு ஆகும். இதற்கு காரணம் மிகப்பெரிய இராணுவத்தை நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள பகுதிக்கு தேவையானவற்றை அளிப்பதில் செலவாகும் பாரியளவு பணம் ஆகும். 2012 நிதியாண்டிற்கு குறிப்பாக போருக்கு என பணம் ஒதுக்கப்படவில்லை. 50 பில்லியன் டாலர்தான் தற்காலிகமாக உள்ளது. இராணுவக் கொள்கை, குறிப்பாக ஆப்கானிஸ்தான் பற்றி பின்னர் எடுக்கப்படும் முடிவை ஒட்டித்தான் ஒதுக்கீடு இருக்கும். காபூலில் கைப்பாவை கர்சாய் அரசாங்கத்தின் இழிந்த நிலையைப் பார்க்கும்போது, 2012லும் அதற்குப் பின்னரும் மிக அதிக போர்ச் செலவுகளை எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க அணுசக்தி ஆயுதங்களை அதிகரிக்கவும் ஆயுதங்கள் கிடங்கில் பாதுகாப்பை அதிகரிக்கவும் இன்னும் ஒரு 5 பில்லியன் டாலர்ரை வரவு-செலவுத் திட்டத்தில் நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. இது 40 செனட் குடியரசுக் கட்சியினரும் சுயாதீன ஜனநாயகவாதி ஜோசப் லிபர்மன்னும் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தின் விளைவாகும். அக்கடிதத்தில் அவர்கள் ரஷ்யாவுடன் கொண்டுள்ள அணுசக்தி உடன்பாட்டிற்கு இசைவைத் தருவது நிர்வாகம் ஒரு நவீன அணுவாயுதத் திட்டத்தை, புதிய வசதிகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூமெக்சிகோ மற்றும் டெனசி ஓக் ரிட்ஜில் வைப்பதைப் பொறுத்துத்தான் இருக்கும் என்று கூறியிருந்தனர்

கூட்டாட்சி கடன் வட்டி மற்ற செலவுகளைப் பொறுத்தவரையில், மொத்த வட்டித் தொகை 499 பில்லியன் டாலராக நிதியாண்டு 2011ல் தொடங்கி நிதியாண்டு 2015ல் 888 பில்லியன் டாலர் என உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிகர வட்டிப் பணம் 2011ல் 250 பில்லியன் டாலரில் இருந்து 2015ல் 507 பில்லியன் டாலர் என உயரும். இவற்றில் பெரும் பகுதி செல்வம் படைத்த அமெரிக்க, சர்வதேச முதலீட்டாளர்களுக்குச் செல்லும்

இதனால் செலவழிக்கப்பட்ட பரந்த நிதிக்கு கூட்டாட்சி கொழுத்த பணக்காரர்களுக்கு வட்டி கொடுக்கும். அச்செலவுகள் புஷ் நிர்வாகத்தால் வரிக் குறைப்புக்கள் என்று இதே கொழுத்த பணக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டதுடன் வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பிற்கு புஷ், ஒபாமா நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டது. செல்வந்தர்களை பொறுத்த வரையில், இந்த முற்றிலும் ஒட்டுண்ணித்தன வழிவகையில் உழைக்காமலேயே கூடுதல் வருமானத்தைப் பெற்றுள்ளனர்.

செல்வந்தர்களுக்கு ஒரே பின்னடைவு, 250,000 டாலர் அல்லது அதற்குக் கூடுதலாக வருமானம் உடையவர்களுக்கு புஷ் இனால் கொடுக்கப்பட்ட வரிக்குறைப்புக்கள் இந்த ஆண்டு இறுதியில் முடிந்துவிடும் என்ற ஒபாமா வரவு-செலவுத் திட்ட கருத்துத்தான். பிற புஷ் வரிக் குறைப்புக்கள் அனைத்தும், சாதகமான வணிக குறைப்பு விதிகள் உட்பட இந்த ஆண்டு புதுப்பிக்கப்படும். இதன் விளைவு அடுத்த பத்து ஆண்டுகளில் கூடுதலான 678 பில்லியன் டாலர் பெரும் செல்வம் உடைய குடும்பங்களால் கொடுக்கப்படுவது அதிகரிக்கும்.

இது புதிய வரவு-செலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள வரி உயர்வுகள், செலவுக் குறைப்புக்கள் என்னும் 1.2 டிரில்லியன் டாலரில் கிட்டத்தட்ட பாதியாகும். எஞ்சிய வரி அதிகரிப்புகளான சர்வதேச நிதியங்கள்மீது 120 பில்லியன் டாலர், பிணை எடுக்கப்பட்ட நிதிய அமைப்புக்கள் மீது 90 பில்லியன் டாலர், முறையான வரிகளில் 60 பில்லியன் டாலர் மற்றும் எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள்மீது 38 பில்லியன் டாலர் என்பவை அநேகமாக சுமத்தப்படமாட்டாது. ஏனெனில் அவை கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இணைக்கப்பட்டன. ஆனால் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் அவற்றை நிராகரித்துவிட்டது.

முக்கியமாக திட்டமிடப்பட்டுள்ள 250 பில்லியன் டாலர் செலவினக் குறைப்பு மூன்று ஆண்டு காலத்திற்கு இராணுவச் செலவு தவிர மற்ற விருப்புரிமை செலவுகளை உள்நாட்டு சமூகப் பிரிவுகளில் முடக்குவதின் மூலம் கிடைக்கும். வெள்ளை மாளிகை நேரடியான குறைப்பை முன்வைக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் குறைப்புக்களையும், சில திட்டங்களை அகற்றுவதையும் கொண்டுள்ளது. ஆனால் இக்குறைப்புக்களை பற்றிய முழு விவரங்கள் இன்னும் தெளிவாகவில்லை.

குறிப்பாக அறிவிக்கப்பட்டுள்ள குறைப்புக்களில் Constellation திட்டம் என்னும் நாசாவின் சந்திரனுக்கு போய் திரும்பி வரும் திட்டம் அகற்றப்படுவது ஒன்றாகும். உண்மையில் நாசா அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6 பில்லியன் டாலரைத்தான் ஒரு வணிக வகை விண்வெளிக்கலத்தை தயாரிக்க செலவழிக்கும். இதுவும் தனியார் நிறுவனங்களால் கட்டமைக்கப்படும். அது விண்வெளி வீரர்களை பூமியைச் சுற்றி குறைந்த தொலைவு சுற்றுக்கோளுடன் நிறுத்திவிடும். முன்னாள் நாசாவின் நிர்வாகி Michael Griffin, "இதன் பொருள் அமெரிக்கா சமீபகாலத்தில் மனிதனின் விண்வெளிப் பயணத்தில் கணிசமான பங்கைக் கொண்டிருக்காது என்று முடிவெடுத்திருப்பதைத்தான் காட்டுகிறது" என்றார்.

தன்னுடைய சனிக்கிழமை வாராந்திர வானொலி மற்றும் இணையதள உரையில் ஒபாமா கூட்டாட்சி பற்றாக்குறையை குறைப்பது, அவருடைய நிர்வாகத்தின் வேலைகளை தோற்றுவிப்பது போலவே முக்கியம் என்ற முன்னுரிமையைக் கொண்டுள்ளது என்றார். இந்த வார்த்தைப் பிரயோகம் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இது வலதிற்கு இன்னும் மாற்றம் என்பதைப் பிரதிபலிக்கிறது. தொழிலாள வர்க்கத்திற்கு கடும் சிக்கன நடவடிக்கை இருக்கும். அதே நேரத்தில் வோல் ஸ்ட்ரீட்டிற்கு கூட்டாட்சியின் வரம்பில்லாத ஆதரவு தொடர்ந்து கொடுக்கப்படும்.

ஒரு சுயாதீன கூட்டாட்சிக் குழு, சமூகப் பாதுகாப்பு, மருந்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்ற கட்யாத் திட்டங்களில் குறைப்புக்களை முன்வைப்பதற்கு வேண்டும் என்ற அழைப்பை அவர் வலியுறுத்தினார். இவைதான் கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்தில் பெரும்பகுதியாக உள்ளவை. காங்கிரஸ் குறிப்பிட்டிருந்த "கட்டணம் கொடுத்து பயன்படுத்தவும்" என்ற விதிகள் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்றும வலியுறுத்தினார்; அவற்றை ஒட்டி கூட்டாட்சிச் செலவில் நிகர அதிகரிப்பு தடுக்கப்படும். கூட்டாட்சித் திட்டங்களில் ஏதேனும் கூடுதல் செலவு இருந்தால், மற்றவற்றை குறைத்து சரி செய்யப்பட வேண்டும்.