World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

ஞிமீutsநீலீமீ ஙிணீஸீளீ ஸீமீts 5 தீவீறீறீவீஷீஸீ ஜீக்ஷீஷீயீவீt வீஸீ 2009

2009TM Deutsche Bank 5 பில்லியன் யூரோ நிகர இலாபத்தை அடைகிறது

By Stefan Steinberg
9 February 2010

Use this version to print | Send feedback

ஜேர்மனியின் மிகப் பெரிய வங்கியான Deutsche Bank கடந்த வாரம் 2009 வணிக ஆண்டிற்கான புள்ளி விவரங்களை வெளியிட்டது. வங்கி மாபெரும் நிகர இலாபமாக 5 பில்லியன் யூரோக்களை ஈட்டியது. அது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பான 4.3 பில்லியன் யூரோ என்பதை விட அதிகமானது. ஓராண்டிற்கு முன்புதான் சர்வதேச நிதிய நெருக்கடியைத் தொடர்ந்து, Deutsche Bank 3.9 பில்லியன் யூரோக்களை நிகர இழப்பாக கொண்டிருந்தது.

வியாழனன்று Deutsche Bankன் தலைமை நிர்வாகி ஜோசெப் அக்கர்மான் 2009ம் ஆண்டு முக்கிய வங்கிகளுக்கு பணம் சம்பாதிக்க முன்னொருபோதிமில்லாத வாய்ப்புக்களைக் கொடுத்தது என்று பெருமை பேசினார். "2009 போல் சாதகமான வங்கி வணிகச்சந்தை முதலீட்டைக் காண்பதற்கு சற்று தாமதம் ஆகும். இதில் பல துறைகளிலும் அதிக முதலீடு மற்றும் அதிக இலாபங்கள் பெற வாய்ப்புக்கள் சாதகமாக இருந்தன" என்று செய்தியாளர்களிம் அக்கர்மான் கூறினார். உண்மையில் 2009ம் ஆண்டு வங்கியின் இலாபங்களில் 67 சதவிகிதம் அதன் முதலீட்டு வங்கிப் பிரிவில் இருந்து வந்தது.

சமீபத்திய புள்ளி விவரங்களை முன்வைக்கையில் அக்கர்மான் Deutsche Bank வரவிருக்கும் ஆண்டில் அதன் இலாபத்தரத்தை இருமடங்காக்க விரும்புவதாகவும், வருடாந்த வரிசெலுத்தும் முன்னரான இலாபம் 10 பில்லியன் யூரோவாகலாம் என்று கணித்து, இது தான் முன்பு கூறியிருந்த வருடாந்த 25சதவிகித சராசரி இலாபத்துடன் ஒத்துள்ளது என்றும் கூறினார். அக்கர்மானுடைய கருத்தில், 15 சதவிகிதம் இலாபவிகிதமான 5 பில்லியன் யூரோ இலாபம் 2009ல் என்பது சற்று குறைவாகும்.

சமீபத்திய இலாப அறிக்கையை ஒட்டி, முதலீட்டு வங்கியாளர்கள் பிரிவிற்கு மேலதிக கொடுப்பனவுகளை 18 சதவிகிதம் அதிகரிப்பதாக Deutsche Bank அறிவித்துள்ளதுடன், அவர்களின் மொத்த ஊதியங்கள் 11.6 பில்லியன் யூரோக்கள் இருக்கும்.

Deutsche Bank ஓராண்டிற்குள் பாரிய இலாபங்களை பெறக்கூடியதாக இருப்பது முற்றிலும் நிதிய நடவடிக்கைகளினால்தான். அதில் டிரில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புடைய கடன்களும் பங்குபத்திரங்கள் அடங்கும். இவை ஜேர்மன் அரசாங்கமும் உலகெங்கிலும் இருக்கும் மற்ற அரசாங்கங்களும் இந்த நெருக்கடிக்கு முதலில் காரணமாக இருந்தவர்களை மீட்பதற்கே கொடுத்த உதவிதான்.

ஜேர்மனிய பிணை எடுப்பு அரசியலில் அக்கர்மான் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். செப்டம்பர் 2008ல் அவர் திவாலாகிவிட்ட Hypo Real Estate (HRE) ஐ மீட்பதற்கு, அதனால் ஜேர்மனிய வங்கி அமைப்புமுறை சரிவைத் தடுப்பதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவுகளை இட்டார். அந்த மீட்பு உடன்பாடு, அக்கர்மான், மற்ற முக்கிய வங்கியாளர்கள் மற்றும் அரசாங்க உள்விவகார செயலாளர் Jörg Asmussen (சமூக ஜனநாயகக் கட்சி) ஆகியோருக்கு இடையே நடந்த விவாதங்களைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது. ஜேர்மனிய அதிபருடன் அக்கர்மான் நள்ளிரவில் தொலைபேசியில் பேசியதை அடுத்து இம்முடிவு வந்தது.

கடந்த இலையுதிர்காலத்தில் மத்திய தேர்தலில் இருந்து, Jörg Asmussen பழைமைவாத கட்சிகள் மற்றும் தடையற்ற சந்தைக்கு ஆதரவு தரும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஆகியவற்றின் கூட்டணியான புதிய ஜேர்மனிய அரசாங்கத்தின் தன்னுடைய முக்கிய பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ள முக்கிய நிதித்துறை ஆலோசகர் ஆவார்.

ஜேர்மனிய வங்கிகளுக்கு 500 பில்லியன் யூரோக்கள் மீட்புப் பொதிகளாக கொடுக்க சட்டவரைவை இயற்ற உதவியவர் Asmussen தான். இதைத்தவிர நூற்றுக்கணக்கான பில்லியன்கள் நிதிய பிரிவினருக்கு அரசாங்கத்தின் "மோசமான வங்கிகள்" ("bad banks") திட்டத்தின்கீழ் உறுதியளிக்கப்பட்டன.

அரசாங்கங்களும் அதை இயக்கும் நபர்களும் மாறலாம்; ஆனால் ஜேர்மனியின் முக்கிய வங்கிகள், அவற்றின் அரசாங்கக் கொள்கைமீது செல்வாக்கு செலுத்துபவர்களின் ஆதிக்கம் பெருகியுள்ளது.

இப்பொழுது Deutsche Bank பிணை எடுப்புப் பொதிகளின் நலன்களால் இலாபத்தை ஈட்டியுள்ளது. பொதியைத் தோற்றுவிக்கவே அது பல பிற ஊக்கப்பொதி நடவடிக்கைகள் அரசாங்கத்தால் செய்யப்பட்டதற்கும் உதவியது. இதன் விளைவு, ஒரு பகுப்பாய்வாளர் கருத்தின்படி, Deutsche Bank "உறுதியாக ஒரு நெருக்கடியைக் கொண்டிருந்தது....பின்னர் மொத்தத்தில் நல்ல இலாபம் கிடைத்தது."

Deutsche Bank போன்ற முக்கிய வங்கிகள் நெருக்கடியில் இருந்து பல விதங்களில் இலாபத்தை ஈட்ட முடிந்தது.

முதலில், ஜேர்மனிய அரசாங்கத்தின் வங்கி பிணை எடுப்புப் பொதிகள் மற்ற பெருவணிகத்திற்கான ஊக்கச் செயற்பாடுகள் பங்குச் சந்தையில் அரசாங்கம் எடுக்கும் கடன்களால் நிதியளிக்கப்படுகிறது. அத்தகைய பத்திர நடவடிக்கைகளில் முக்கிய இடைத்தரகு அமைப்புக்களில் ஒன்று Deutsche Bank ஆகும். இந்த வழிவகையில் அது மகத்தான கட்டணங்களைப் பெறுகிறது.

இரண்டாவதாக, வங்கி நிதியத் துறைக்கு புத்துயிர் கொடுக்கும் மத்திய வங்கிகளின் இதுகாறும் இல்லாத குறைந்த வட்டி விகிதங்கள் மூலமும் இலாபத்தை அடையமுடியும். ஐரோப்பிய மத்திய வங்கி போன்ற கடன் கொடுக்கும் அமைப்புக்களிடம் இருந்து Deutsche Bank கிட்டத்தட்ட பூஜ்ய விகித வட்டியில் கடன் வாங்கி, தன் வாடிக்கையாளர்களிடம் கணிசமான வட்டி விகிதத்தை அவர்களுக்குக் கொடுக்கும் கடன்களில் இருந்து பெற்றது.

இறுதியாக Deutsche Bank நிதிய நெருக்கடி அதன் முக்கிய போட்டியாளர்களான ஜேர்மனிய அரசாங்கத்தின் பாதுகாப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட நெருக்கடிக்குள்ளான Commerzbank போன்றவற்றின் சரிவினையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே "மிகப் பெரியவை, எனவே தோல்வியுறாது" என்று கூறப்படும் வங்கிகளின் அந்தஸ்து, செல்வாக்கு ஆகியவற்றை முக்கிய நிதிய நலன்கள் பற்றி கூறப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற அக்கர்மானின் பிரச்சாரத்தின் மத்தியில் இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.

உண்மையில் தன் வங்கியின் செல்வாக்கும் ஆதாயங்களும் மிக அதிகம் பெருகும் வாய்ப்பை அக்கர்மான் காண்கிறார். சமீபத்திய கருத்து ஒன்றில், Financial Times Deutschland, வங்கி வழக்கங்களைக் கட்டுப்படுத்தும் அமெரிக்கத் திட்டங்களினால் அதன் மிகப்பெரிய அமெரிக்க போட்டி நிறுவனமான கோல்ட்மன் சாஷ்ஸ் (Goldman Sachs) உடைய முக்கிய நிலையினுள் தான் ஊடுருவ உதவும் என்று Deutsche Bank நம்புவதாகக் கூறினார். மிகப் பெரிய அமெரிக்க முதலீட்டு வங்கியான கோல்ட்மன் சாஷ்ஸ் 2009 கடைசிக் காலாண்டில் கிட்டத்தட்ட $5பில்லியன் இலாபத்தை ஈட்டியது.

FTD எழுதுகிறது: " Deutsche Bank இற்கு மிகஅதிக இலாபம் கொடுக்கும் பிரிவாக உள்ள முதலீட்டு வங்கிமுறை.... நான்காம் காலாண்டு இலாபங்கள் கோல்ட்மன் சாஷ்ஸ் போன்ற போட்டியாளர்கள் பெற்றதைவிட மிகக் குறைவாக இருந்தது என்பது அக்கர்மானுக்கு எரிச்சலைத்தான் கொடுத்திருக்கும். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க வங்கிகளை தனியார் முதலீட்டு நிதிகளை செயல்படுத்துவது அல்லது சொத்துரிமை வணிகத்தைத் தடை செய்யும் திட்டங்களை கொண்டுவந்தால், அத்துடன் சேர்ந்துவிட முடியும் என்று அவர் நினைக்கிறார்."

Deutsche Bank இன் அரசியல் செல்வாக்கு சமீபத்தில் டாவோஸ் உலகப் பொருளாதார அரங்கில் அதிகம் புலப்பட்டது. உயர்மட்ட வங்கியாளர்கள், அரசியல்வாதிகளின் உச்சிமாநாட்டின்போது, அக்கர்மான் "குற்றம்சாட்டும் விளையாட்டிற்கு" எதிராக பெரும் எச்சரிக்கை விடுத்தார்--அதாவது வங்கியாளர்களை அவர்களுடைய நடவடிக்கைகளுக்காக பொறுப்பு ஏற்க வேண்டும் எனப்படும் முயற்சி பற்றி. பின்னர் சக வங்கியாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிதி மந்திரிகளை சந்தித்தார். திரைக்குப்பின் நடந்த அவர்கள் கூட்டத்திற்கு பின்னர் ஆக்கர்மான் அங்கிருந்த ஒத்துழைப்பு உணர்வைப் பாராட்டும் வகையில், "வணிகத் தலைவர்கள், அரசியல் மற்றும் கட்டுப்பாட்டுத் தலைவர்களிடையே இதுகாறும் இல்லாத அளவிற்கு சிறந்த உரையாடல் இருந்தது" என்று அறிவித்தார்.

டாவோஸ் அரங்கிற்கு இரு நாட்களுக்குப் பின்னர், ஜேர்மனிய கூட்டாட்சி நிதிய மேற்பார்வை அமைப்பு (Bafin) ஜேர்மனியில் குறுகிய கால விற்பனை மீது இருந்த தடையை அகற்றியது. இந்த அதிக ஊகம் நிறைந்த நடவடிக்கை வகை ஜேர்மனியக் கட்டுப்பாட்டு அதிகாரத்தால் செப்டம்பர் 2008ல் சர்வதேச நிதிய நெருக்கடி வெடித்தவுடன் தடைக்கு உட்பட்டிருந்தது.

வங்கிச் சமூகத்தின் சக்தி செல்வாக்கு பற்றிக் கருத்துக் கூறுகையில், செய்தியாளர் Lucas Zeise ஜேர்மன் சர்வதேச அரசியல் இதழ் பத்திரிகையின் சமீபத்திய பதிப்பில் கூறுவது:

"சொத்து, நிதிய நெருக்கடி வெடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னும் வங்கிகள், நிதியப் பிரிவுகளை கட்டுப்படுத்துவது பற்றி எந்த முன்னேற்றமும் இல்லை. இன்னும் மோசமானது என்னவெனில், ஒரு தீவிர முயற்சிக்கான ஆரம்பமே எடுக்கப்படவில்லை. இந்தக் கணிப்பு ஜேர்மனிக்கு மட்டுமல்லாது அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மற்றும் அதேபோல் சர்வதேச தர கட்டுப்பாட்டிற்கும் பொருந்தும். ஒரு சில சிறிய திருத்தங்கள் மற்றும் முதலீட்டு வங்கிகளின் தனிமூலதன மட்டத்தை சிறிதளவு உயர்த்தும் திட்டங்ளை தவிர (இதை செயல்படுத்த எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ, கூறமுடியாது) தீவிரக் கட்டுப்பாடு பற்றி எதுவும், முற்றிலும் எதுவும், நடக்கவில்லை."