World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Witch-hunt against the unemployed in Germany

ஜேர்மனியில் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு எதிராக சூனிய வேட்டை

By Dietmar Henning
10 February 2010

Use this version to print | Send feedback

ஜேர்மனியில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கையில், அரசியல்வாதிகளும் பொருளாதார "வல்லுனர்களும்" மற்றும் செய்தி ஊடகத்தின் பிரிவினரினதும் வேலையற்றோர் மீது நடத்தும் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு அரசாங்கத்தின் "பொருளாதார வல்லுனர்" ஆலோசகர் Wolfgang Franz வேலையற்றோருக்கான அடிப்படை நிதியுதவி (Hartz IV) தற்போதைய தரமான அற்பத் தொகை 359 யூரோவில் இருந்து மாதத்திற்கு 250 யூரோ எனக் குறைக்கப்பட வேண்டும் என்று முறையிட்டுள்ளார். இத்திட்டத்திற்கு ஆதரவை நாடும் வகையில் அவர் வேலையின்மை கொடுப்பனவுகள் "சீர்திருத்தங்கள்" என்று தனது தலைமையில் தனியார் சிந்தனைக் குழு ஒன்று பாராளுமன்றத்திற்கு கொடுத்துள்ள அறிக்கையில் பொருளாதார அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையம் செய்த ஆய்வை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாத நடுவில் ஹெஸ்ஸ பிரதம மந்திரியும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) யின் துணைத் தலைவருமான Roland Koch அனைத்து வேலையின்மை நலன்கள் பெறுவோரும் எந்த வேலை கிடைத்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். வேலையற்றோருக்கான நலன்கள் திட்டத்தை, அதிலுள்ள ஆதாயங்களை பலர் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஹெஸ்ஸவில் உள்ள கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) அதன் தீவிர வலதுசாரிக் கொள்கைகள் மற்றும் அதன் பிற்போக்குத்தன பிரச்சாரங்களுக்கு எரியூட்டும் ஆத்திரமூட்டும் கோஷங்களுக்காக பெயர் பெற்றது. 1990 களில் அதன் சட்டபூர்வ தேர்தல் நிதியின் மூலம் சேர்ந்த கட்சிக்கு கிடைத்த பல மில்லியன் யூரோக்கள் நன்கொடைகளை குடியேற்ற எதிர்ப்பு தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்க பயன்படுத்தியது. அதன்பின், முறையற்ற வகையில் நிதி பயன்படுத்தப்படுகிறது என்ற அவதூறு எழுந்தவுடன், Koch ஆத்திரமூட்டும்வகையில் அந்த நன்கொடைகள் "யூத மரபு சொத்துக்களில்" இருந்து வந்தவை என்றார். 1999ல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து Koch தன்டனுடைய அதிகாரத்தை, விமர்னத்தை தவிர்க்கவும் பொய்ப்பிரச்சாரத்திற்கும் பயன்படுத்துகிறார்.

கடந்த செவ்வாயன்று Süddeutsche Zeitung பத்திரிகை "வேலையின்மை கொடுப்பனவுகளை தவறாக பயன்படுத்தப்படுதல் அதிகரிக்கிறது" என்ற தலைப்பில் எழுதியது: முக்கிய கட்டுரை மத்திய தொழிற்துறை அமைப்பு (BA) ஆண்டு அறிக்கை ஒன்றில் இருந்து சுருக்கத்தை மேற்கோளிட்டுள்ளது; அதில் 2009ம் ஆண்டு 165,000 போலியான நலன்கள் பெறுவோர் எண்ணிக்கை இருந்தது என்றும் அதனால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அபராதங்களும், தண்டனையும் வழங்கப்பட்டது என்றும், இது 2008 ஐ விட 1.8 சதவிகிதம் அதிகம் என்றும் கூறப்பட்டிருந்தது.

மற்ற செய்தி ஏடுகளும் இதைத் தொடர்ந்து இதே போன்ற தலைப்புக்களை வெளியிட்டன. "தவறான பயன்பாடு" என்பது முக்கியமாக "நீண்டகாலமாக வேலையில்லாமல் இருப்பவர்கள் அவர்கள் தகுதிக்கு அதிகமாக உதவி பெறும் நோக்கத்துடன் வேலை வழங்கும் மையத்திற்கும் சமூகசேவை அமைப்பிற்கும் தவறான தகவலை, கொடுத்தனர்" என்று Süddeutsche Zeitung எழுதியது.

மத்திய தொழிற்துறை அமைப்பு கொடுத்துள்ள எண்ணிக்கையை கவனமாக மதிப்பிடப்படும்போது, இத்தகைய ஆபத்து தரும் தலைப்புக்களும் கொடூர கதைகளும் நீண்ட காலம் வேலையற்று இருக்கும் ஏழைகள் மீது அப்பட்டமான சூனிய வேட்டை என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை எனத் தெரிய வரும். 2009ல் சராசரியாக 6.5 மில்லியன் மக்கள் Hartz IV (அடிப்படை அரசாங்க வேலையின்மை நலன்கள்) ஐ பெற்றுவந்தனர். அரசாங்க புள்ளி விவரங்கள்படி, "தவறான பெறுதல்கள்" 1.9 சதவிகிதத்தைவிட இருந்தது இல்லை. "தவறு அதிகமாகிவிட்டது" என்று கூறப்பட்டதை நன்கு ஆராயும்போது உண்மையில் ஒதுக்கத்தக்க 0.1 சதவிகிதமாகத்தான் உள்ளது.

மேலும், 165,000 "தவறான உதவிபெறுதல்களில்" எளிய முறைகேடுகள், தக்க வழிவகையை பின் பற்றாதது போன்றவை உள்ளன. இதனால் மக்கள் அபராதம் செலுத்த நேரிடும். சில தவறுகள் வெறும் சந்தேகத்திற்கு உரியவைதான்.

மத்திய தொழிற்துறை அமைப்பே இப்புள்ளிவிவரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்று ஆலோசனை கூறியுள்ளது; "பிழையாக உதவிபெறுதல்களின்" அளவு மொத்த உதவி பெறுவோர் எண்ணிக்கையில், மொத்த உதவி கொடுக்கப்படுவதில், ஒப்புமையில் மிகக் குறைந்தது என்று கூறியுள்ளது.

உதவி பெறுவோருக்கு சார்பான அமைப்புக்கள் Hartz IV உதவி பெறுபவர்களை செய்தி ஊடகங்கள் பலிகடாக்கள் ஆக்குவது பற்றி எச்சரித்துள்ளன; அரசாங்கம் "விதிவிலக்குகளுக்குப் பதிலாக நடைமுறையில் முக்கியத்துவம் காட்ட வேண்டும்" என்றும் கூறியுள்ளன. அவற்றின் முக்கிய செய்தித்தொடர்பாளர் Ulrich Schneider "அரசியல்வாதிகள் அவர்கள் மீது குற்றம்சாட்டாமல் வேலையற்று இருக்கும் 6.3 மில்லியன் மக்கள்மீது கவனம் காட்ட வேண்டும், வறுமையில் இருந்து அவர்கள் நீங்கி வேலைக்கு வருவதற்கு வகை செய்ய வேண்டும்" என்று அறிவித்தார்.

உதவி பெறுபவர்கள் மத்திய தொழிற்துறை அமைப்பின் தீர்ப்பிற்கு எதிராக முறையீடு செய்தல்

165,000 தவறாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவங்களை பொறுத்தவரை, இந்த படிவங்களைப் பார்த்தவர்கள் எவருக்கும் தவறான தகவலை தவறிப்போய் எழுதுவது எவ்வளவு எளிது என்பது தெரியவரும். அதே நேரத்தில் உதவி பெறுபவர்கள் நலன்களை வழங்கும் அதிகாரிகள் முடிவுகளுக்கு எதிராக தொடுக்கும் முறையீடுகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாகிவிட்டது. ஜேர்மனிய சமூக உதவி நீதிமன்றங்கள் அத்தகைய முறையீடுகள் கடந்த ஆண்டு 193,199 ஐ பதிவு செய்தன. இது முந்தைய ஆண்டை விட 10 சதவிகிதம், 19,363 அதிகம் ஆகும். 2008ல் இத்தகைய எண்ணிக்கை ஏற்கனவே முந்தைய ஆண்டை காட்டிலும் 28 சதவிகிதம் அதிகமாகும்.

பேர்லினில் உள்ள மிகப் பெரிய சமூக உரிமை கோரும் நீதிமன்றத்தின் தலைவர் Sabine Schudoma கிட்டத்தட்ட 27,000 முறையீடுகள் உதவி நல தீர்ப்புக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு பரிசீலிக்கப்பட்டன என்றார். இது முந்தைய ஆண்டை காட்டிலும் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் அதிகம் ஆகும். "விதிவிலக்குத்தான் சட்டமாக இருக்கிறது" என்று அவர் கூறினார். "அலை போன்ற முறையீடுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கின்றன--நம்மைப் பொறுத்தவரையில் 'அன்றாடம் அதிகரிக்கிறது'. இந்த முறையீடுகளில் 51 சதவிகிதம் பகுதி வெற்றியாவது பெறுகின்றன என்பது 'குறிப்பிடத்தக்க வகையில் வியப்பாகும்" என்று அவர் கூறியுள்ளார்.

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநில சிறு சமூக உரிமை நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் "நலன்கள் வழங்கும் முடிவுகளுக்கு எதிராக வெள்ளமென முறையீடுகளை" கவனிக்க வேண்டியுள்ளது என்று Westdeutsche Allgemeine Zeitung கூறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்ஸன், டியுஸ்பேர்க், முல்ஹெய்ம் போன்ற பெரு நகரங்களில் வேலையில்லாதவர்கள் பற்றிய மனுக்கள்தான். டியுஸ்பேர்க்கில் உள்ள சமூக உரிமை நீதிமன்றம் 2009ல் 20 சதவிகிதம் முறையீடுகள் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கோரல்கள் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் 27,500க்கும் மேல் உள்ளன. இது கிட்டத்தட்ட 8 சதவிகிதம் அதிகமாகும். இங்கும் ஒவ்வொரு இரண்டாம் முறையீடும் நீண்ட காலமாக வேலையில் இல்லாதவர்களின் மனுக்கள் வெற்றி பெற்றுள்ளன.

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா கூட்டாட்சி சமூக நீதிமன்றங்களின் தலைவர் Jürgen Brand நலன்கள் கோரும் விண்ணப்பங்களை வகைப்படுத்தும் அமைப்புக்கள் பல நேரமும் சட்டத்தில் கோருபவர்களின் உரிமைகள் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை என்றால், அவர்கள் கோருவது மறுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் முடிவு எடுப்பதாக அறிவித்தார். வேலையற்றோருக்கான அரச அமைப்புக்கள் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக கடுமையாக பரிசீலிக்கின்றன என்று அவர் உறுதிபடுத்தினார். அமைப்பு ஊழியர்களோ தங்கள் முடிவுகளை நியாயப்படுத்தும் விதத்தில் நீதிமன்றத்தில் "இத்தகைய தீர்ப்புக்களை நான் கொடுக்கவில்லை என்றால் நிதி வழங்கலுக்கு பொறுப்பான அதிகாரி என்மீது ஆத்திரமடைவார்" என்று கூறுகின்றனர்.

Koch திட்டங்களுக்கு விடையிறுக்கும் விதத்தில் Brand கூறினார்: "ஹெஸ்ஸவிற்கு வாழ்த்துக்கள்: நீங்கள் திட்டமிடுவது ஏற்கனவே இங்கு நடந்து கொண்டிருக்கிறது." வழங்கும் வேலையை எவரேனும் ஏற்க மறுத்தால் அடிப்படை நலன்கள் குறைந்த பட்ச 359 யூரோவில் இருந்து 250 யூரோவாகக் குறைக்கப்படுகிறது. இரண்டாம் தடவையும் மறுத்தால், இன்னும் 100 யூரோக்கள் குறைக்கப்படும். மூன்றம் முறையும் மறுத்தால், அவர்கள் வீட்டுக்கான உதவியை இழக்க நேரிடும். "இது கடுமையான தடைக் கொள்கை ஆகும்" என்றார் Brand. வேலை வழங்கும் மையங்கள் இக்கொள்கையைத்தான் அடிக்கடி பயன்படுத்துகின்றன. டியுஸ்பேர்க்கில் மட்டும் வேலையின்மை 13.3 சதவிகிதம் என்றுள்ள நிலையில் மூன்றில் ஒரு பகுதி, 25 வயதிற்கு உட்பட்ட கிட்டத்தட்ட 3,000 வேலையற்றோர் முழு உதவிகளையும் இழந்துவிட்டனர்.

நிலைமை இப்படி இருக்கையில், அடிப்படை குறைந்தபட்ச தொகை முற்றிலும் வாழ பற்றாக்குறையாக உள்ள நிலையில் (80 சென்டுகள் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்க அனுமதிக்கப்படுகிறது), நீண்டகால வேலையில்லாதவர்களில் 98 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் தங்கள் கோரல் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்கின்றனர் என்பது இன்னும் வியப்புத்தான்.

இந்த விகிதம் மில்லியனர், மற்றும் பில்லியர்கள் தங்கள் வருமான வரி அறிவிப்பு படிவத்தை நிரப்பும்போது ஏற்படுவதில்லை. ஜேர்மனிய வரிவிதிப்பு வல்லுனர் Hans-Lother Merten 600 பில்லியன் யூரோ மதிப்புடைய சொத்துக்கள் செல்வம் படைத்த ஜேர்மனியர்களால் வெளிநாட்டில் உள்ள வரி ஏமாற்றும் புகலிடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது முக்கிய அரசாங்க அரசியல்வாதிகள் (முக்கியமாக CDU, FDP இல் உள்ளவர்கள்) 1,500 வரி ஏமாற்று செய்யும் ஜேர்மனியர்கள் பற்றிய குறுந்தகடு (CD) பெறுவதைத் தடுக்க முற்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் வங்கியான HSBCயின் முன்னாள் தகவல் தொடர்பு மேலாளரால் ஜேர்மன் அரசாங்கத்திற்கு விற்க விரும்புவதாக கூறும் குறுந்தகட்டில் முன்னாள் செல்வந்தர்கள், கொழுத்த செல்வந்தர்கள் ஜேர்மனிய அரசாங்கத்திற்கு வரிபாக்கியில் 200 மில்லியன் யூரோ கொடுக்க கட்டாயப்படுத்தும் தகவலைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஒவ்வொருவரும் சராசரியாக 130,000 யூரோ கட்டப்படாத வரிகள் என்பதைவிட அதிகமாகும். இந்தப் பணம் வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாட வேண்டிய வேலையில்லாதவர்களுடைய கைகளுக்கு எட்டாதாகும்.