World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Iranian regime mounts display of "national unity" on anniversary of anti-Shah revolution

ஷா-எதிர்ப்பு புரட்சியின் ஆண்டுவிழாவில் ஈரானிய ஆட்சி "தேசிய ஐக்கியத்தை" உயர்த்திக் காட்டுகிறது

By Keith Jones
12 February 2010

Use this version to print | Send feedback

நூறாயிரக்கணக்கான ஈரானியர்கள் மத்திய தெஹ்ரானில் அஜாதி அல்லது சுதந்திரச் சதுக்கத்தில் நேற்று குழுமினர். அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரி ஷா ரேசா பஹ்லாவியின் மிருகத்தன ஆட்சியை மக்கள் எழுச்சி அகற்றிய 31வது ஆண்டு விழா ஈரான் முழுவதும் நடைபெற்ற 800 இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ஈரானுக்கு எதிரான தங்கள் அச்சுறுத்தல்களை அதிகப்படுத்தியிருக்கும் சூழ்நிலையில், ஈரானின் பச்சை அலை முதலாளித்துவ எதிர்க்கட்சி அரசாங்கத்தின் சட்டபூர்வத்தன்மையை சவாலுக்கு விட்டிருக்கையில், இஸ்லாமிய குடியரசின் ஆளும் உயரடுக்கு மகத்தான தேசிய ஐக்கியம் மற்றும் மக்கள் ஆதரவைத் திரட்டிக் காட்ட உறுதி பூண்டிருந்தது.

ஆர்ப்பாட்டக்கார்கள் உத்தியோகபூர்வமாக இஸ்லாமியக் குடியரசை நிறுவிய அயோதுல்லா கோமேனி, குடியரசின் தற்பொழுதைய உயர் தலைவர் அல்லது காப்பாளராகிய அயோதுல்லா காமேனி ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை எடுத்துச் சென்றதுடன் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.

அஜதி சதுக்கத்தில் கூட்டத்திற்கு உரையாற்றி ஈரானின் ஜனதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த விரும்புவதால் ஈரானையும் அதன் அணுத் திட்டத்தையும் "மேலாதிக்க சக்திகள்" எதிர்க்கின்றன என்று குற்றம் சாட்டினார். ஒரு சுதந்திரமான, முன்னேற்றமான, சக்தி வாய்ந்த ஈரான் அந்த இலக்கிற்கு தடை என்று கருதப்படுகிறது. இதுதான் கடந்த 31 ஆண்டுகளாக ஈரானிய நாட்டிற்கு காட்டப்படும் எதிர்ப்பின் பின் உள்ள இரகசியமாகும்" என்றார் அவர்.

பின்னர், பெரும் சக்திகளை மீறி ஈரான் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் மருத்துவ அணுக்களை (isotopes) தயாரிக்கும் ஆராய்ச்சி அணு உலைக்கு தேவையான எரிபொருளுக்காக யுரேனியத்தை 20 சதவிகித அடர்த்தி உடையதாக உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டது என்று அஹ்மதிநெஜாட் அறிவித்தார்.

"எமது அணுசக்தி செயல்கள் அனைத்தும் வெளிப்படையானவை, சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையில் நடைபெறுகின்றன." என்றார்.

"நாம் அணுகுண்டு தயாரிக்கவில்லை என்று கூறினால், அது உண்மையானது, அணுகுண்டு தயாரிப்பை நாம் நம்பவில்லை. ஒரு குண்டு தயாரிக்க விரும்பினால் அது பற்றி அறிவிப்போம்." என்று அவர் தொடர்ந்து கூறினார்.

இஸ்லாமிய குடியரசின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள், நினைவுநாட்களை நடத்தும் பொறுப்பு கொண்ட இஸ்லாமிய பிரச்சார ஒருங்கிணைப்புக் குழு (The Council for Coordination of Islamic Propagation) அறிக்கை ஒன்றை கலந்து கொண்டவர்கள் சார்பில் வெளியிட்டது. அது நியாயமான காப்பாளர் அல்லது உயர் தலைவரின் ஆட்சி (velayat-e-faqih) தேசிய ஒற்றுமைக்கும் அரசாங்கத்தின் குடியரசு மற்றும் இஸ்லாமிய தன்மை ஆகியவற்றிற்கும் முக்கிய உறுதி என்னும் மதசார்புக் கொள்கையை பிரகடனப்படுத்தியது.

நேற்றைய நினைவுநாள் நிகழ்ச்சிகளை 1979 புரட்சியின் உண்மையான வாரிசு காமேனி-அஹ்மதிநெஜாட் ஆட்சி என்ற கூற்றை எதிர்க்கப் பயன்படுத்தப்போவதாக பச்சை அலை எதிர்ப்பு இயக்கம் கூறியது.

ஜூன் 2009 ஜனாதிபதி தேர்தலில் அஹ்மதிநெஜாட்டை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய பச்சை அலைத் தலைவர்களான ஹொசைன் மெளசவி, மே்ஹதி கரெளபி மற்றும் முன்னாள் ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் கடாமி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களைப் அதிகளவில் நேற்று கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். இஸ்லாமியக் குடியரசின் சட்டபூர்வதன்மையை சவாலுக்கு உட்படுத்த வேண்டாம், பாதுகாப்புப் படைகள் அல்லது அரசாங்க சார்பு பசிஜ் (Basij) போராளிகளுடன் மோத வேண்டாம் என்ற எச்சரிக்கைகளையும் அழைப்புடன் விடுத்தனர்.

அமெரிக்க சமூகத்திலும் மேலை செய்தி ஊடகத்திலும் உள்ள வலதுசாரித் தலைமையிலான ஈரானிய குடியபெயர்ந்த சமூகத்தினரின் பச்சை அலை ஆதரவாளர்களும் பின்னடிக்கவில்லை. டிசம்பர் 27 அஷுரா தின எதிர்ப்புக்களில் நடந்தது போல் பழையபடி வேண்டும் என்று அவர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தனர். அப்பொழுது பல ஆயிரக்கணக்கான எதிர்த்தரப்பினர் தெருக்களுக்கு வந்து, உத்தியோகபூர்வ நினைவு நாட்களைத் தங்களுடையதாக்கி மற்றும் குழப்பி, சில சமயம் தங்கள் சொந்த விருப்பிலேயே பொலிஸுடனும் பஸ்ஜியுடனும் மோதினர்.

இவ்விதத்தில் இஸ்லாமிய குடியரசின் முந்தைய உயர் அதிகாரியும், இப்பொழுது Voice of America வின் பேர்சிய மொழி ஒலிபரப்புக்களில் வாடிக்கையாக தோன்றுபவருமான Mohusen Sazegara, "பெப்ருவரி 11 ஒரு முக்கியமான நாள்--எதிர்த்தரப்பின் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் நிலைப்பாட்டின் மூலம் அதிகாரச் சமநிலையைத் தங்கள் பக்கம் மாற்றிக்கொள்ள முடியும்" என்று அறிவித்தார்.

ஈரானிய அரசாங்கம் செய்தி ஊடகத்தின்மீது சுமத்தியுள்ள தடைகளினால் நேற்றைய நடவடிக்கைகளில் எதிர்த்தரப்பு பங்கு பற்றி துல்லியமாகக் கூறுவது முடியாது என்றாலும், அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்ப்புக்களை ஒதுக்கி, அடக்கிவிட்டது என்பது தெளிவு. தன்னுடைய ஆதரவாளர்களை பெருகிய அளில் திரட்டியதின்மூலமும் மகத்தான பாதுகாப்பு நடவடிக்கை மூலமும் இதைச் செய்துள்ளது.

ஈரானிய ஆட்சிக்கு ஆதவைக் கொடுக்காத டைம் இதழ்கூட "ஈரானின் ஆண்டுவிழா: எதிர்த்தரப்பு எங்கே?" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் அதிக எதிர்ப்பு அடையாளங்கள் இல்லை என்பதை ஒப்புக் கொண்டது. அஜதி சதுக்கத்தில் அஹ்மதிநெஜாட்டின் ஒரு மணி நேரப் பேச்சில் "ஒரே ஒரு எதிர்ப்பு நிகழ்வுதான் இருந்தது" என்று குறிப்பிட்டது. ஒரு ஆர்ப்பாட்டக்காரர் கோமேனி படத்தின் குறுக்கே x போட்டிருந்தார்; அது பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது.

"ஒரு பக்கத் தெருவில் 20 பஸிஜ் மோட்டார் சைக்கிள்களின் அருகே இருந்த இளம் ஓட்டிகள் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டுர் இருந்தனர். இது முந்தைய எதிர்ப்புக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மை உடையது ஆகும். அப்பொழுது பெரும்பாலான பஸிஜ்கள் இடைவிடாமல் உலவிய வகையில் தெஹ்ரானின் பல சதுக்கங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கவனித்துவந்தனர். எங்காவது சிறு அளவில் பூசல்கள் நடந்திருந்தால் அவை மிகச் சிறியவை, பெரிதும் தனிமைப்படுத்தப்பட்டவை என்றுதான் இருந்தன."பல தகவல்கள்படி, எதிர்த்தரப்பு ஆதரவு வலைத்தளத்தில் வந்த கருத்துக்கள் உட்பட, பொதுவாக ஈரான் முழுவதும் இப்படித்தான் இருந்தது என்று தெரியவருகிறது. எதிர்த்தரப்பு ஊர்வலங்களில் ஒரு சில ஆயிரம் பேர்தான் இருந்தனர்; பல இடங்களில் அதுவும் கிடையாது.

சந்தேகத்திற்கு இடமில்லாமல், அரசாங்கம் அதிகளவில் எதிர் ஊர்வலங்களை வெற்றிகொள்வதற்கு உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளை நடாத்தி முன்னரைப்போல் ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தியவை மீண்டும் வராமல் தடுத்துவிட்டது.

மெளசவியும் கரெளபியும் உடல்ரீதியாகவே தடுத்து அஜதி சதுக்கம் அல்லது வேறு எந்த எதிர்த்தரப்பு கூடும் இடத்திற்கு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு விட்டனர். பல்லாயிரக்கணக்கான படைகள் தெஹ்ரான் தெருக்களில் காணப்பட்டன. இணையதளம், கையடக்கதொலைபேசி மூலம் தகவல் கொடுப்பது தடைக்கு உட்பட்டது.

பெப்ருவரி 11 நினைவுதினத்திற்கு முந்தைய தினங்களில், அரசாங்க அதிகாரிகள் எதிர்த்தரப்பினரின் எதிர்ப்புக்கள் பொறுத்துக் கொள்ள முடியாதவை என்று உறுதி கொண்டனர். இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் பிரிவின் தலைவரான ஜெனரல் ஹொசைன் ஹமதானி, "அன்றைய தினம் எதிர்த்தரப்பின்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று எச்சரித்திருந்தார். தெஹ்ரானின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை தலைவர் அஹ்மத் கடாமி ஷா அகற்றப்பட்டதின் ஆண்டு நினைவு நாளன்று எதிர்த்தரப்பு "மெளனமாக்கப்படும், தலையெடுக்கமுடியாமல் அழிக்கப்படும்" என்றார்.

மற்றொரு மிரட்டும் செயலில், எதிர்க்கட்சி எதிர்ப்புக்களில் தொடர்பு கொண்டதற்காக சமீபத்தில் ஒன்பது பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வளவு கூறப்பட்டாலும், அரசாங்கத்தின் பாதுகாப்பு கெடுபிடிகளை எதிர்த்தரப்பு முறிக்க முடியாமல் போனது அதன் குறுகிய சமூகத் தளத்தைத்தான் காட்டுகிறது.

பச்சை அலை அல்லது புரட்சி என்பது மேலைச் செய்தி ஊடகம், ஒபாமா நிர்வாகம், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி, ஜேர்மனியில் அங்கேலா மேர்க்கெல், பிரிட்டனின் கோர்டன் பிரெளன் (பலரில் முக்கியமானவர்களால்) "ஜனநாயகப்படுத்தும் இயக்கம் என்று" ஊக்குவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது ஈரானிய முதலாளித்துவ மற்றும் மதகுருமார் நடைமுறையில் ஒரு சிறு பிரிவிற்காகத்தான் குரல் கொடுக்கிறது. அது தன்னுடைய சலுகைகளை பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் ஈரானின் பொருளாதாரத்தை புதிய தாராளவாத சீர்திருத்தத்திற்கு உட்படுத்துவது, அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ளுவது ஆகியவற்றின் மூலம் செய்ய முனைகிறது.

அதன் பெருவாரியான பரந்த ஆதரவு மத்தியதர வகுப்பில் இருந்து வந்தது. தெஹ்ரானில் குறிப்பாக மத்தியதர உயரடுக்கு மற்றும் பிற நகர்ப்புற மையங்களில் இருந்து வந்தது. இந்த தட்டு இஸ்லாமிய ஆட்சி சுமத்தும் பல பிற்போக்குத்தன சமயத் தடைகளை எதிர்க்கிறது. ஆனால் இரு தசாப்த "பொருளாதார சீர்திருத்தத்தின்" விளைவாக பெருகிய வறுமை, பொருளாதார பாதுகாப்பற்ற தன்மையால் தாக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வறியவர்களின் சமூகத் தேவைகள் மற்றும் விழைவுகள் பற்றி பொருட்படுத்துவது மட்டுமல்லாது அப்பட்டமாக விரோதப் போக்கைக் கொண்டுள்ளது.

ஈரானின் "மேலை நாகரிகம் நிறைந்த" மத்தியதர வகுப்பு, அவற்றின் உறவினர்கள், நெருக்கமானவர்கள் என்று ஈரானின் வெளியேறிய சமூகத்தின் இருப்பவர்கள் கொடுத்த அறிக்கைகள் காட்டுவதின்படி, ஷா அகற்றப்பட்டதற்கு எப்போதாவது ஆதரவு கொடுத்திருந்தால் அதற்காக வருந்தும் கணிசமான பிரிவைக் கொண்டுள்ளது.

நேற்றைய எதிர்த்தரப்பின் பிசுபிசுப்பான ஆர்ப்பாட்டங்கள், பச்சைத் தொடர்பு உடைய இஸ்லாமிய நடைமுறைக்குள் அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள் ஈரானுக்கு எதிரான மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள பிளவுகள், உறுதியற்ற தன்மை ஆகியவற்றையும் பிரதிபலிக்கக்கூடும்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்பொழுது இஸ்லாமியக் குடியரசின் இரு முக்கிய ஆட்சிக் குழுக்களின் தலைவருமான ஹஷேமி ரப்சஞ்சானி மெளசவியின் ஜனாதிபதி வேட்பு மனுவிற்கு ஆதரவு கொடுத்து, பின்னர் தேர்தல்கள் திருடப்பட்டன என்ற கூற்றுக்களுக்கும் ஆதரவு கொடுத்தார். ஆனால் இவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்த நேற்றைய நிகழ்விற்கு முன் ரப்சஞ்சானி "தேசிய ஒற்றுமை"யின் தேவையை வலியுறுத்தி இஸ்லாமிய குடியரசின்மீது வந்துள்ள அழுத்தத்திற்கு அதுதான் விடையிறுக்கும் என்றார்.

அக்மதிநெஜான்-காமேனி ஆட்சி தன் பங்கிற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மிரட்டுதலுக்கு ஈரானிய மக்களின் முறையான எதிர்ப்பைப் பயன்படுத்த முற்படுகிறது. அதேபோல் மக்களிடைய பரந்த அளவில் சீர்திருத்த/பச்சைக்குழுவின் புதிய தாராளக் கொள்கைக்கான விரோதப் போக்கையும் பயன்படுத்துகிறது.

தன்னுடைய புரட்சிதின உரையில் அஹ்மதிநெஜாட் ஈரானின் அடிமைப்பட்டிருந்த வரலாறு, பெரும் சக்திகளின் ஆதிக்கத்தில், குறிப்பாக பிரிட்டிஷ், அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்குக் கீழ் தாழ்ந்திருந்ததையும் சுட்டிக்காட்டி, அஹ்மதிநெஜாட் ஈரான் இனி அச்சுறுத்தப்படமுடியாது என்ற உறுதியைக் கொடுத்தார். வாஷிங்டன், அதன் நட்பு நாடுகளின் பாசாங்குத்தனத்தை எள்ளி நகையாடி, "அவை அணுசக்தி பிரச்சினையை போலிக் காரணமாகக் காட்டுகின்றன" என்றும் "அவற்றின் கிடங்குகளில் ஏராள அணுவாயுதங்கள் நிறைந்துள்ளன" என்றும் கூறினார். "இத்தொழில்நுட்பத்தின் மீது அவை ஏகபோக உரிமை கொண்டுள்ளன, ஈரானிய நாடு அத்தகைய தொழில்நுட்பத்தை பெறாமல் தடுக்க முற்படுகின்றன." என்றார்.

முதலாளித்துவத்தின் எதிர்ப்பாளர்போல் தன்னை அஹ்மதிநெஜாட் காட்டிக் கொண்டார். அரசியலமைப்பின் 44வது விதி காமேனியின் ஒப்புதலுடன் பழையபடி எழுதப்படும் வரை முக்கியமான பொருளாதாரத்தின் அனைத்துப்பிரிவுகளும் அரசாங்கத்தின் கைகளில் இருக்க வேண்டும், ஈரானின் பொருளாதார சக்திக்கு விலை மானியங்கள் அவசியமானது என்று எடுத்துக் காட்டியிருந்தார்.

இவர் இவ்வாறு தைரியமாகச் செய்ய முடிந்ததற்குக் காரணமே பச்சை எதிர்ப்பின் வலதுசாரி எதிர்ப்புத் தன்மையின்மூலம்தான் ஓரளவிற்கு விளக்கப்படும்; அது தொடர்ந்து அவரை அதிக பணத்தை சமூகநலத் திட்டங்களுக்கும் ஏழைகளுக்கும் செலவழிப்பதாகத் தொடர்ந்து தாக்கி வந்தன.

அவருடைய அரசாங்கம் தனியார்மயம் ஆக்குவதையும் அதிகரித்துள்ளது என்பதோடு, அண்மையில் ஐந்து ஆண்டுகளுக்குள் $100 பில்லியன் மதிப்பு உடைய விலைக்கான மானியத்தொகைகள் உணவு, எரிபொருள் இன்னும் அடிப்படைப் பொருட்கள், பணிகள் மீது படிப்படியாக குறைக்கப்பட்டுவிடும் திட்டம்மும் ஏற்கப்பட்டுவிட்டது. மில்லியன் கணக்கான, ஏன் பல மில்லியன் கணக்கான ஈரானியர்களுக்கு இந்த மானியத்தொகைகள் முக்கியமான உயிர்நாடியைக் கொடுத்து பெரும் வறுமையில் அவர்களைத் தள்ளாமல் காப்பாற்றியுள்ளன.

தன்னுடைய உரையில் மார்க்சிச கண்டனத்தையும் அஹ்மதிநெஜாட் சேர்த்திருந்தார். இது ஒன்றும் தேவையற்று கூறப்பட்ட கருத்து அல்ல.

இஸ்லாமியக் குடியரசின் மூன்று தசாப்தக்காலமும் அதன் முதலாளித்துவ-மதகுருமார் ஆளும் உயரடுக்கு இரக்கமற்ற முறையில் தொழிலாள வர்க்கத்தையும் இடதுசாரிகளையும் ஒடுக்கியுள்ளது. ஏனெனில் 1979 புரட்சியின் அவர்களுடைய அனுபவம் தொழிலாள வர்க்கத்தின் அச்சுறுத்தல் ஒரு புதிய சமத்துவ சமூக ஒழுங்கிற்கு ஆதரவு என்று வெளிப்படக்கூடும் என்று காட்டியது.

அந்த சாத்தியப்பாடு அடையப்படவில்லை என்றால், அதற்குக் காரணம் தொழிலாள வர்க்கம் தவறாக திசைதிருப்பப்பட்டதுதான். ஸ்ராலினிச டுடே கட்சியும் (Tudeh party) பிற மார்சிச, சோசலிஸ்ட் எனக் கூறிக் கொள்ளும் குழுக்களும் தொழிலாள வர்க்கத்தை கோமேனிக்கும் ஷியா மதகுருமார்களின் ஒரு பிரிவின்கீழும் அடிபணியச்செய்துவிட்டன. புரட்சி "ஏகாதிபத்திய எதிர்ப்பு" முதலாளித்துவ தேசிய ஆட்சி உறுதிப்படுத்துவதற்கு அப்பால் செல்லாது, செல்ல முடியாது என்ற காரணம் கூறப்பட்டது.

ஏகாதிபத்திய சக்திகள் ஈரானுடன் மோதலுக்கு தயாரிப்பு நடத்துதல், இஸ்லாமியக் குடியரசிற்குள் சமூக நிலைமைகள் கொதிநிலைக்கு வந்துள்ளது என்ற தன்மையில் முக்கியமாக உள்ள விடயம் ஈரானிய முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் அனைத்து பிரிவுகளுககும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தின் வளர்ச்சி என்பதுதான்.