World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Mass protests greet Sarkozy visit to Haiti

வெகுஜன எதிர்ப்புக்களால் சார்க்கோசிக்கு ஹைய்ட்டிய பயணத்தில் வரவேற்பு

By Alex Lantier
19 February 2010

Use this version to print | Send feedback

பெப்ருவரி 17ம் தேதி ஒரு-நாள் பயணமாக பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஹைய்ட்டிக்கு சென்றிருந்தபோது, மேற்கத்தைய ஆதரவு பெற்றிருந்த Preval அரசாங்கத்திற்கு வெகுஜன எதிர்ப்பு அதிகரிப்பையும், மற்றும் நாட்டை எப்படி மறுகட்டமைப்பது பற்றி சர்வதேச பதட்டங்களும் நிறைந்திருந்தன. ஜனவரி 12 பேரழிவினால் 200,000 மக்களுக்கும் மேல் கொல்லப்பட்டும், 250,000 பேருக்கும் மேலாக காயமும் அடைந்தனர். அமெரிக்க இராணுவமானது நிலநடுக்கத்திற்கு பின்னர் நாட்டின் உள்கட்டுமானத்தின் பெரும் பகுதிகளை அழித்திருந்த ஹைய்ட்டியை ஆக்கிரமித்துள்ளது.

ஹைய்ட்டிக்கு முதல் தடவையாக வரும் பிரெஞ்சு ஜனாதிபதியான சார்க்கோசி தெருக்களில் ஆயிரக்கணக்கான ஹைய்ட்டியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி Jean-Bertrand Aristide நாடு திரும்ப வேண்டும் என்று கோரிய ஆயிரக்கணக்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் வரவேற்கப்பட்டார். 2004-ல் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு ஆதரவிற்குட்பட்ட ஆட்சிமாற்றத்தால் அகற்றப்பட்டபின், அரிஸ்டைட் ஒரு முன்னாள் பிரெஞ்சுக் காலனித்துவ பகுதியான மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு நாடு கடத்தப்பட்டார். அரிஸ்டைடின் கீழ் 1990-களில் முன்னாள் பிரதமராக இருந்த ஜனதிபதி ரேனே பிரேவல் ஆட்சி மாற்றத்தால் நிறுவப்பட்டிருந்த Boniface Alexandre ன் தற்காலிக அரசாங்கம் மேற்பார்வையிட்ட தேர்தல்களில் 2006ல் அதிகாரத்திற்கு வந்தார்.

பிரேவல் ஜனாதிபதி அரண்மனைக்கு வெளியே கூட்டத்தில் பேச முயன்றார். ஆனால் கூட்டம் அவரை பேசவிடாமல் தடுத்துவிட்டது. பிரேவல் தன் மெய்க்காப்பாளர்களுடன் ஆடம்பர ஜீப் ஒன்றில் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

அரிஸ்டைடின் புகைப்படங்களை உயர்த்திப் பிடித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்பு பிரெஞ்சு அடிமைக் காலனியாக இருந்த ஹைய்ட்டி பிரான்சிற்கு கொடுத்த $21 பில்லியனை சார்க்கோசி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கோரினர். 1825-ம் ஆண்டு பிரான்சின் அரசர் பத்தாம் சார்ல்ஸ்--1830 புரட்சியில் அகற்றப்பட்டவர்--ஹைய்ட்டி 90 மில்லியன் தங்க பிராங்குகளை சுதந்திரத்திற்காக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஹைய்ட்டியின் அடிமைகளை 1794ல் பிரெஞ்சு புரட்சி அரசாங்கம் விடுவித்திருந்தது. இதன் பின் நெப்போலியன் கட்டுப்பாட்டின்கீழ் அடிமை முறையை மீட்க வந்த படைகளை துரத்தி அனுப்பி 1804ல் தன் சுதந்திரத்தை அறிவித்தது.

பத்தாம் சார்ல்ஸுக்கு கொடுக்கப்பட்ட பிணைத்தொகை இன்றைய மதிப்பில் 21.7 பில்லியன் டாலருக்கு ஒப்பாகும். இப்பணத்தை கொடுப்பதற்கு ஹைய்ட்டிக்கு 122 ஆண்டுகள் ஆயின. ஒப்புமையில் ஹைய்ட்டியை நிலநடுக்கத்திற்குப்பின் மறுகட்டமைக்க 14 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இது 2007ல் சார்க்கோசி அதிகாரத்திற்கு வந்த பின்னர் செல்வந்த வர்க்கத்திற்கு ஓராண்டிற்கு கொடுத்த வரிக் குறைப்புக்களையும் விட குறைவாகும்.

சார்க்கோசியின் வருகை ஹைய்ட்டியை ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின்கீழ் ஆக்கிரமிப்புச் சக்திகள் மற்றும் உதவி அமைப்புக்களுடன் கூட்டாக மாற்ற உள்ள நடவடிக்கைகளுக்கு நடுவே வந்துள்ளது. ஹைய்ட்டியின் சட்டமன்றத் தேர்தல்கள், முன்பு பெப்ருவரி 28 - மார்ச்3 ல் நடப்பதாக இருந்தவை காலவரையறையற்று ஒத்திப் போடப்பட்டுள்ளன.

குறிப்பாக ஹைய்ட்டிய அரசாங்கத்தை எடுத்துக் கொள்ள அமெரிக்கா தயாரித்து வருகிறது. பெப்ருவரி 11 அன்று Miami Herald அமெரிக்க அரச நிர்வாக உயர்மட்ட ஹைய்ட்டிய அதிகாரிகளுக்கு இடைக்கால ஹைய்ட்டி மீட்பு குழு பெப்ருவரி முன்பகுதியில் தேவை என்று கூறியதாக அறிவித்திருந்தது. அத்திட்டத்தின் ஒரு பிரதியை வைத்திருந்த Herald குழுவின் "உயர் முன்னுரிமை" ஹைய்ட்டிய வளர்ச்சி அதிகாரத்தை அடுத்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு உதவியுடன் ஒரு ஹய்ட்டிய வளர்ச்சி அதிகாரத்தை திட்டமிட்டு ஒருங்கிணைப்பதாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இக்குழுவிற்கு ஹைய்ட்டிய "பிரதம மந்திரியும் மீட்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள மூத்த சர்வதேசப் புகழ் பெற்ற நபர் ஒருவரும் இணைத் தலைவர்களாக இருப்பர்" என்று Herald கூறியுள்ளது. இந்த நபர் ஒருவேளை முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது அவர் சமீபத்தில் ஹைய்ட்டிக்கு அமெரிக்க விசேட தூதராக இருந்தார். அவர் வெளியுறவுத்துறைச் செயலர் ஹில்லாரி கிளின்டனின் கணவர் ஆவார்.

டிரினிடி வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ரோபர்ட் மாகுர், இத்திட்டத்தைப் பற்றி உயர்வாகப் பேசியவர் Herald இடம் "இது நில நடுக்கத்திற்கு நீண்ட காலம் முன்னரே ஹில்லாரி கிளின்டன் எண்ணியிருந்த கருத்துக்கு ஒப்பாக உள்ளது" என்றார்.

அமெரிக்கத் திட்டம் மறுகட்டுமைப்பு திட்டங்களில் இத்தகைய வெளிப்படையான அமெரிக்க பங்கை விரும்பாத முதலாளித்துவ சக்திகளின் எதிர்ப்பை தூண்டியுள்ளது. கனேடிய அரசாங்கம் உலக வங்கியின் மேற்பார்வையில் அமைக்கப்படும் ஒரு அறக்கட்டளைக்கு நிதிகளை அனுப்பும் திட்டத்தை பரிசீலிக்கிறது.

இதே போன்ற அமெரிக்க இடைத்தொடர்பு வளர்ச்சி வங்கியை இழுக்கும் திட்டத்தைக் கொண்ட அமெரிக்க பொருளாதார வல்லுனர் Jeffrey Sachs அமெரிக்க அரச அலுவலகத் திட்டத்தை குறைகூறினார்: "இதை ஒரு அமெரிக்க அரசியல் முயற்சியாகக் காணாமல், ஒரு பலரும் இணைந்து செயல்பட வேண்டிய திட்டமாகக் காணவேண்டும்" என்றார். மறுகட்டமைப்பிற்கான திட்டத்திற்கு பொறுப்பு ஹைய்ட்டிய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று வாதிட்ட சாஷ்ஸ் மறுகட்டமைப்பு நிறுவனம் "ஹைய்ட்டிய ஜனாதிபதி மற்றும் சர்வதேச நபர்கள் என்று கலந்து இருக்கும் அமைப்பாக இருக்கக்கூடாது" என்றார்.

அத்தகைய "மறுகட்டமைப்பு" திட்டங்களின் ஆரம்ப விவரங்கள் ஜனவரி 25 மொன்ட்ரியல் மாநாட்டிற்குப்பின் வெளிவந்தன. இதில் குறைந்த பட்சத்திற்கும் குறைவான ஊதியம் ஆடைத் தயாரிப்புத்துறைக்கு (நாள் ஒன்றிற்கு $2.98), ஹைய்ட்டியை மிக அதிகமாக தொழிலாளர்களை சுரண்டும் ஏற்றுமதி வழிவகைப் பகுதியாக பயன்படுத்தும் திட்டமும் அடங்கியுள்ளது. ஐ.நா. அறிக்கை ஒன்றில், பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் எழுதியது: "வறுமை மற்றும் ஒப்புமையில் கட்டுப்பாடுகள் இல்லாத தொழிலாளர் சந்தையில், ஹைய்ட்டியின் தொழிலாளர் செலவினங்கள் சீனாவுடன் முற்றிலும் போட்டித் தன்மை வாய்ந்தவை. பிந்தையதுதான் உலகின் குறிப்பான அடையாளமாக உள்ளது."

ஹைய்ட்டிக்கு சார்க்கோசி அவருடைய பயணம், பாரிஸுக்கும் வாஷங்டனுக்கும் எப்படி மேற்கொண்டு வழிநடத்துவது என்பது பற்றிய கருத்து வேறுபாடுகளை பிரதிபலித்த ஊகங்களுக்கு இடையே வந்துள்ளது. Port-au-Prince விமான நிலையத்திற்கு வந்த சார்க்கோசி, நகரத்தின் மோசமான சேதமுற்ற பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் சிறிது நேரம் சுற்றிப்பார்த்து, பின்னர் பிரேவலுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

சார்க்கோசி நடந்து கொண்ட முறை நம்பிக்கையற்றதன்மை, ஏகாதிபத்திய செருக்கு இரண்டும் கலந்ததாக இருந்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் கைப்பாவை அரசாங்கத்திற்கு அவர் கூறினார்: "ஹைய்ட்டிய மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர்! ....திரு ஜனாதிபதி, திரு பிரதம மந்திரி, மந்திரிகளே, நீங்கள் உங்களுக்கு உரிய ஒரு தேசிய திட்டத்தை தளமாகக் கொள்வதற்கு ஒரு தேசிய ஒருமித்த உணர்வைப் பெற வேண்டும். ஹைட்டியர்களுக்கே ஹைட்டி!."

ஒரு உதவிப் பொதியாக பிரான்சிற்கு ஹைய்ட்டி தற்பொழுது பாக்கி இருக்கும் கடன்கள் 56 மில்லியன் யூரோக்கள் அடங்கிய, 326 மில்லியன் யூரோக்களை ($447 மில்லியன்) அவர் அறிவித்தார். இந்தப் பணம் ஹைய்ட்டியை மறுகட்டமைக்கத் தேவைப்படும் பரந்த செலவுகளோடு விகிதமே இல்லாமல் இருந்தாலும், சார்க்கோசி உபதேசித்தார்: "திரு ஜனாதிபதி, நான் கூறலாம் என்றால், முன்பு மறு கட்டமைத்தது போல் செய்யாதீர்கள்."

"செல்வம் அனைவருக்கும் ஆதாயத்தைத் தரவேண்டும்" என்று பிரேவல் ஆட்சியை கடிந்து கொண்ட பின்னர் சார்க்கோசி ஒரு குறிப்பிடத்தக்க ஒப்புதலைக் கொடுத்தார்: "என் நாட்டில், உங்கள் நாட்டைப்போலவே, ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களிடம் மிகத் தீவிரமாக செல்வம் குவிந்திருப்பது ஒரு பிரச்சினைதான்."

பிரான்சில் புதிய சுற்று ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு முயல்கையில், செல்வந்தர்களுக்கு அதே நேரத்தில் வரிக் குறைப்புக்களை தக்க வைத்துக் கொண்டிருக்கையில், இந்தப் பிரச்சினை அவருடைய கொள்கைகளே முக்கிய பங்கைக் கொண்டு அதிகப்படுத்துவது ஆகும்.

சார்க்கோசி அமெரிக்க அரச நிர்வாகத்தின் திட்டங்களை உட்குறிப்பாக குறைகூறும் வகையில் தெரிவித்தார்: "ஹைய்ட்டிக்கு ஒன்றும் சர்வதேச காப்பு தேவை இல்லை--அதிலும் குறிப்பாக நீங்கள் உலகில் வறிய நாடுகளில் ஒன்றாக இருக்கும்போது, உலகில் மிகப் பெரிய வன்முறைப் பேரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில்."

ஹைய்ட்டி மறுகட்டமைப்பு பற்றி தீவிரமாக இருக்கும் நாடுகளுக்கு இடையே உள்ள போட்டி பற்றி கேட்கப்பட்டதற்கு, சார்க்கோசி ஹைய்ட்டியில் பெருகும் அரசியல் எதிர்ப்பு பற்றிய அச்சங்களை சுட்டிக்காட்டினார்: "முதலில் ஹைய்ட்டிக்குள் போட்டிகள் கூடாது." பின் அவர் கூறினார், "உங்கள் அரசியல் உண்மை நிலையை நான் அறிவேன்--30க்கும் மேற்பட்ட அரசியலமைப்புக்கள், ஏராளமான நாட்டுத் தலைவர்கள் படுகொலைகள்....உலகம் அறிந்ததிலேயே இழிவான சர்வாதிகாரங்களில் ஒன்று, போன்றவற்றை."

1986 ல் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் சர்வாதிகாரி Jean-Claude "Baby Doc" Duvalier பிரான்சிற்கு தப்பி சென்றதையும், அங்கு முறையான அரசியல் தஞ்சம் பெறாவிட்டாலும் ஆடம்பர வாழ்வைக் கொண்டிருந்தார் என்பதையும் சார்க்கோசி கூறவில்லை. 1998ல் Duvalier ஐ சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்று கொண்டுவரப்பட்ட சட்ட நடவடிக்கையை செயல்படுத்த பிரெஞ்சு அரசாங்கம் மறுத்துவிட்டது.

சார்க்கோசி தொடர்ந்தார்: "ஹைய்ட்டியிடம் நட்பு கொண்ட நாடுகளுக்கு இடையே உள்ள போட்டிகளை பொறுத்தவரையில்....அப்படி ஏதும் இராது. அமெரிக்கர்கள் நல்ல பணி புரிந்துள்ளனர். அவர்களிடம் ஒரு மில்லியன் ஹைய்ட்டியர்கள் (குடியேறியவர்கள்) உள்ளனர், அவர்கள் 900 கி.மீ. தொலைவில் உள்ளனர். யாரும் போதுமானது செய்யவில்லை என்று நான் கூறமாட்டேன். பின்னர் ஒரு அவசர நெருக்கடி நிலையில், எவரும் சற்று முன்பின் விஷயங்களை செய்வர், சிறு அழுத்தங்களை தூண்டக்கூடும். அடிப்படையோடு ஒப்பிடும்போது அது தீவிரமல்ல--அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், பிரேசிலியர்கள், கனேடியர்கள் மற்றும் பலரும், நாங்கள் ஒன்றாகக் கை கோர்த்து உங்களுக்கு தொடர்ந்து உதவுவோம்."

இந்த அறிவிப்பு அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் பொறுப்பற்ற பொருட்படுத்தா தன்மையினால் ஹைய்ட்டிய உயிர்கள் இழக்கப்பட்டன என்ற உதவி அமைப்பு அதிகாரிகள் கூறிய பரந்த குறைகூறலை நிராகரிக்கிறது. அமெரிக்க இராணுவம் Port-au-Prince விமான நிலையத்தைக் கைப்பற்றி மனிதாபிமான உதவிகள் கொண்டுவந்த விமானங்களை தடுத்தது.அதையொட்டி பல்லாயிரக்கணக்கான ஹைய்ட்டியர்கள் தொற்று நோய் காயம் மற்றும் போதுமான எதிர்ப்பு மருந்துகள், அடிப்படை மருத்துவப் பொருட்கள் இல்லாததால் உயிரிழந்தனர். மேலும் காயமுற்ற ஹைய்ட்டியர்களை USS Carn Vinson என்னும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், ஹைய்ட்டிக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததில் சேர்க்கவும் அதிகாரிகள் மறுத்து, தற்காலிகமாக புளோரிடாவிற்கு செல்லும் மீட்பு விமானங்களையும் தடைக்கு உட்படுத்தினர்.

1825ல் ஹைய்ட்டியிடம் இருந்து பறிக்கப்பட்ட 21 பில்லியன் டாலரை திருப்பிக் கொடுப்பது பற்றி பரிசீலிக்க சார்க்கோசி அப்பட்டமாக மறுத்தவிட்டார். "பிரான்ஸுக்கு ஹைய்ட்டி கொடுக்க வேண்டிய கடன்களை கொடுப்பது என்று நான் முடிவெடுத்துள்ளேன்....இது நம் நாடுகளுக்கு இடையே கூடுதல் ஒத்துழைப்பிற்கான சூழலை உருவாக்கும் என்று நம்புகிறேன்."

ஹைய்ட்டியை மறுகட்டமைக்கத் தேவைப்படும் 14 பில்லியன் டாலர் செலவு என்ற நிலையில், பிரான்ஸ் இன்னும் உதவி கொடுக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, "நாம் ஒன்றும் ஹைய்ட்டியை சமூக உதவி பெற்று வாழும் நிலைக்கு உட்படுத்திவிடக்கூடாது, ஒரு தனியார்துறை எழுச்சி பெறுவதை வதை செய்துவிடக்கூடாது,"

சார்க்கோசி பேசிய பின்னர் பிரேவல் வருங்காலத்தில் தேர்தல்கள் நடத்துவது பற்றிய வினாக்களுக்கு விடை கூறினார். வாக்காளர் பட்டியலில் இருந்து "இறந்து விட்ட வாக்களார்கள் பெயரில் மோசடி" நடப்பதை தடுப்பதில் அரசாங்கம் இடர்பாடுகளைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். நிலநடுக்கம் இதை கிட்டத்தட்ட இயலாதாக்கிவிட்டது என்று கூறினார். "இன்று மிக அதிக அளவில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என்று உள்ளனர். வாக்காளர் அட்டைகளை இழந்தவர்களைவிட வாக்குப் போடும் திறன் உடையவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்."

மக்கள் தற்பொழுது இருக்கும் நிலையில் தான் தேர்தல் நடத்த விரும்பவில்லை என்றும் பிரேவல் உட்குறிப்பாகக் காட்டினார். "மக்களுடைய உணர்வு என்ற பிரச்சினையும் உள்ளது--இந்த கடினச் சூழலில், நாம் உடனடியாக தேர்தல் நடத்தப்போகிறோம் என்று எவரேனும் கெளரவமாகக் கூறமுடியுமா?"

டிசம்பரில் நடப்பதாக இருக்கும் ஜனாதிபதி தேர்தல்கள் உரிய நேரத்தில் நடக்குமா என்று கேட்கப்பட்டதற்கு பிரேவல் அவை காலவரையறையற்று ஒத்திப் போடப்பட்டுள்ளன, ஆக்கிரமித்துள்ள சக்திகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்றார். "நமக்கு போதுமான, அசாதாரண கருவி தேர்தல்கள் நடத்தத் தேவைப்படும்" என்றும் அவர் கூறினார்.

அவர் தொடர்ந்தார்: "அரசியல் வர்க்கம் மற்றும் சிவில் சமூகம், இத்தேர்தலுக்கு அதிகம் நிதி கொடுக்கும் சர்வதேச சமூகம் இவற்றின் ஒருமித்த உணர்வுடன் நாம் ஒரு சூத்திரம் கண்டுபிடித்து பாராளுமன்ற, உள்ளூர் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை நடத்த வேண்டும். அவ்வளவுதான் இப்பொழுது கூறமுடியும்."