World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German pilots strike against Lufthansa

லுப்ட்ஹான்சாவிற்கு எதிராக ஜேர்மன் விமானிகள் வேலைநிறுத்தம்

By Peter Schwarz
22 February 2010

Use this version to print | Send feedback

Cockpit என்னும் ஜேர்மனிய விமான ஓட்டிகள் சங்கம் திங்கன்று தொடங்கி Lufthansa, Lufthansa சரக்கு மற்றும் ஜேர்மன் விங்ஸ் ஆகியவற்றின் பணிகளில் வேலைநிறுத்தத்தை தொடக்க உள்ளன. 4.500 விமானிகள் 4 நாட்கள் விமானம் ஓட்டாமல் இருப்பதாகத் திட்டமிட்டுள்ளனர். ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான Lufthansa அப்படியே ஸ்தம்பித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 94 சதவிகித விமான ஓட்டிகள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

விமானிகள் சங்கம் கூடுதல் ஊதியங்களைக் கோரவில்லை. தற்பொழுதைய வேலைகள், ஊதியங்கள், பணிநிலைகள் ஆகியவற்றைக் காப்பதில்தான் முரண்பாடு மையம் கொண்டுள்ளது. விமானிகள் Lufthansa கூடுதலான பயணங்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதையும் அல்லது புதிதாகத் தோற்றுவிக்கப்படும் துணை நிறுவனங்கள் மூலம் நடத்துவதை நிறுத்த விரும்புகின்றனர். புதிய துணை நிறுவனங்களின் ஊதியங்கள் 20 முதல் 25 சதவிகிதம் வரை குறைவு ஆகும். விமான நிறுவனம் இந்த மூலோபாயத்தை வெற்றிகரமாகக் கடைபிடித்தால், ஒரு நீண்டகாலத்தில் பல விமானிகளின் ஊதியங்களும் வேலைகளும் ஆபத்திற்கு உட்பட்டுவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றர்.

Cockpit தொழிற்சங்கம் Lufthansa அதன் துணை நிறுவனங்களான CityLine, German Wings, Austrian Airlines, Lufthansa Italia, Brussels Airlines, Swiss, British Midland ஆகியவற்றை அதிக விமானப் பயணங்களுக்கு பயன்படுத்தாமல் இருந்தாலோ அவற்றை மூன்றாம் நபர்கள் செயற்பாட்டிற்கு விடாவிட்டாலோ ஊதிய அதிகரிப்பை கூட நிறுத்திக்கொள்ளும் அளவிற்குச் சென்றிருந்தனர். ஆனால் Lufthansa இந்த வேண்டுகோளை உறுதியாக நிராகரித்துவிட்டது.

மிகக் கடுமையான போட்டி இருக்கும் சந்தையில் தன்னுடைய ஊழியர்களின் முதுகில் விலைப் போரின் சுமையை இறக்க விரும்பும் தன் விருப்பத்தில் எந்தத் தடையையும் நிறுவனம் விரும்பவில்லை. விமானிகள் தொழில்வழங்குனரின் சுதந்திரத்திற்கு வரம்பிட விரும்பவதாக அது குற்றம்சாட்டியுள்ளது. "மற்ற நிறுவனங்கள் செய்வதைத்தான் நாங்களும் செய்கின்றோம். மற்றொரு நாட்டில் துணை நிறுவனத்தை அமைப்பது, அங்குள்ள வேலைநிலைமைப்படி ஊழியர்களை நியமிப்பது என்பவைதான் அவை" என்று Lufthansa நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்ரெபான் லவுரர் கூறினார்.

தற்பொழுதைய மோதலுக்கு ஒரு நீண்டகால வரலாறு உள்ளது. 1992ல் கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்பாட்டில் இந்த மோதலின் மையம் உள்ளது. அதன்படி 70 இருக்கைகளுக்கு மேல் உள்ள அனைத்து விமானங்களும் Lufthansa விமானிகளால் இயக்கப்படவேண்டும். அந்த நேரத்தில் இதற்கு Lufthansa ஒப்புக் கொண்டது. ஏனெனில் தொழிற்சங்கங்கள் கடுமையான ஊதிய வெட்டுக்கள், கூடுதல் நேரப்படிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன. அதற்குக் காரணம் பிரச்சனையில் இருந்த நிர்வாகத்திற்கு உதவுவதுதான்.

இப்பொழுது Lufthansa நிர்வாகம் 1992ல் அது மேற்கோண்ட உடன்பாடு காலம் கடந்துவிட்டது என்று கருதுகிறது. பயணக் கட்டணங்களில் சரிவு என்பது 50 முதல் 70 இருக்கைகள் வரை நிறைந்திருக்கும் விமானங்களை இயக்குவது இலாபமல்ல என்று போய்விட்டது. அதனால் நிர்வாகம் 95 முதல் 110 இருக்கைகள் வரை இருக்கும் விமானங்களை Bombardier and Embraer போன்ற உற்பத்தியாளர்கள் இடம் வாங்கி Lufthansa துணை நிறுவனங்களில் உள்ள குறைவூதிய விமானிகள் மூலம் இயக்க விரும்புகிறது.

விமானிகளின் சங்கம் இந்தமுறை படிப்படியாக அனைத்து நடைமுறையில் இருக்கும் கூட்டு ஒப்பந்தங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் என்று அஞ்சுகின்றது. எதிர்வரவிருக்கும் தொழில்துறை மோதல் "Lufthansa விமானிகளின் பணி எல்லைகளைவிட மிக அதிமானது" என்று Cockpit பேச்சுவார்த்தைகள் நடத்தும் தோமஸ் ஸ்ருர்ம் கூறினார்.

1992 மறுகட்டமைப்பு உடன்பாட்டின் ஒரு பகுதியாக ஊதியக்குறைப்புக்கள் ஒப்புக் கொள்ளப்பட்டது, நடவடிக்கைகளை அதிகரித்து Lufthansa விற்கு அதிக இலாபத்தைக் கொடுத்தன. நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு அதிக பங்கு இலாபத்தொகைகளை கொடுத்து இயக்கனர்களின் ஊதியங்களையும் அதிகப்படுத்தியது. ஆனால் Lufthansa பழைய ஊதியத் தரங்களுக்கு மீண்டும் வர மறுத்துள்ளது. இதை நியாயப்படுத்தும் வகையில் குறைந்த அளவு ஊழியர் செலவினங்கள்தான் அது புதிதாக நிறுவியுள்ள போட்டித்தன்மைக்கு முக்கிய ஆதாரம் என்றும் அது அகற்றப்பட முடியாதது என்றும் கூறுகிறது.

இந்தப் பின்னணியில்தான் Lufthansa விமானிகள் இன்றுவரையிலான மிகப்பெரிய வேலைநிறுத்தத்தில் 2001ல் ஈடுபட்டனர். பல வாரங்களாக அவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தங்களை நடத்தினர், கடந்த பத்து ஆண்டுகளாக இழக்கப்பட்ட வருமானத்தை ஈடுசெய்யும் வகையில் 32 சதவிகித ஊதிய உயர்வு வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

Cockpit தொழிற்சங்கம் முன்னதாக DAG உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தில் இருந்து பிரிந்தது. அத்துடன் அது 1973ல் இருந்து ஒத்துழைத்து வந்தது. பணிகள் மற்றும் பொதுத்துறை சங்கமான DAG பின்னர் கரைந்துவிட்ட Verdi தொழிற்சங்கம் வெளிப்படையாக 2001ல் வேலைநிறுத்தத்தை எதிர்த்தது. முக்கிய அதிகாரிகள் விமானிகளை "சமூக டார்வினியர்கள், நன்மைகளில் மிக அதிகப்பங்கை ஒரு குழு அல்லது பிரிவு தொழிலாளர்களுக்காக பெறவிரும்புபவர்கள்" என்று சாடினர். இதேபோல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மன் இரயில்வே சாரதிகள் ஊதிய உயர்விற்கு வேலைநிறுத்தம் செய்தபோதும் Verdi எதிர்த்தது.

Cockpit இறுதியில் விட்டுக் கொடுத்து நடுவர் தீர்ப்பு ஒன்றை ஏற்றது. அது Lufthansa ஆரம்பத்தில் கொடுத்ததை விட சற்று அதிகமாக இருந்தது. இந்த வேலைநிறுத்தத்தை ஒட்டி Verdi இன் செல்வாக்கு Lufthansaவில் தொடர்ந்து சரியத் துவங்கியது. விமானிகளைத் தவிர, ஏனைய பணியாளர்கள் இப்பொழுது பெரும்பாலும் தனியான தொழிற்சங்கமான UFO என்று அழைக்கப்படுவதில் உள்ளனர்.

2008TM Lufthansaவில் தரைப்பிரிவு ஊழியர்களுக்காக ஒரு வேலைநிறுத்தம் நடத்தும் கட்டாயத்திற்கு Verdi உட்பட்டது. ஏனெனில் அது உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க விரும்பியது. Verdiயின் உறுப்பினர்கள் 90 சதவிகிதத்தினர் 9.8 சதவிகித ஊதிய உயர்விற்காக வேலைநிறுத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் பாதிப்பைக் குறைக்கும் வகையில் Verdiயால் நடத்தப்பட்ட வேலைநிறுத்தம் காட்டிக் கொடுப்பில் முடிந்துவிட்டது. இறுதி வாக்களிப்பில் 51 சதவிகிதத்தினர்தான் உடன்பாட்டிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதற்கிடையில் Lufthansa உடன் சமரசத்தை Cockpit நாடியது. 2009 துவக்கத்தில் தொழிற்சங்கம் தான் பிராந்திய விமானம் பற்றிய பிரச்சினையில் "98 சதவிகித உடன்பாட்டை" அடைந்துவிட்டதாக குறிப்புக் காட்டியது. ஆனால் உறுப்பினர்கள் இதற்கு எதிராக கிளர்ச்சி செயதனர். பேச்சுவார்த்தைகள் குழுவில் இருந்த பல பிரதிநிதிகள் சங்கத்தின் நிர்வாகக் குழுவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதி சமரசத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் வந்த தொழிற்சங்கத் தேர்தல்களில் இன்னும் ஆக்கிரோசமான போக்கிற்காக வாதிட்டவர்கள் நிர்வாகக்குழுவில் தெளிவான பெரும்பான்மையைப் பெற்றனர்.

அப்பொழுது முதல் Lufthansa பிடிவாதமாக Cockpitஐ சந்திக்க மறுத்துவிட்டது. விமானிகளின் பணி நிலைமைகளை நிர்ணயிக்கும் ஒப்பந்தம் 2006ல் இரத்து செய்யப்பட்டாலும், ஊதிய அடிப்படையை நிர்ணயிக்கும் ஒப்பந்தம் ஏப்ரல் 2009 ல் இருந்து செயல்படுத்தப்படவில்லை. Cockpitஇன் பேச்சுவார்த்தை நடத்துபவரான மார்க்கஸ் ஜேர்மான், "இன்றுவரை நிலுவையில் இருக்கும் உடன்பாடுகள் பற்றி ஒரு பேச்சுவார்த்தைக்குக்கூட அழைப்பைப் பெறவில்லை" என்றார்.

தன்னுடைய 50 இருக்கைகள் கொண்ட விமானங்க்கள் அனைத்தையும் ஒரு காலக்கெடுவிற்குள் மாற்று இல்லாமல் அகற்றுதல் என்னும்Lufthansaவின் முடிவு "நிறுவனம் துணை நிறுவனங்களுடன் கொண்டுள்ள ஒப்பந்தங்கள், குறைந்த ஊதிய அமைப்பை உள்ளடக்கியது, வேலை வெட்டுக்களுக்கு எதிராக பாதுகாப்பு ஏதும் தரவில்லை" என்று ஜேர்மான் கூறினார். நூற்றுக்கணக்கான விமான ஓட்டிகள் வேலைகளை இழந்து கொண்டிருக்கின்றனர்.

எவ்விதமான எதிர்ப்பினையும் நெரித்துவிட மூத்த நிர்வாகத்துடன் இணைந்திருக்கும் DAG, Verdi உடன் Cockpit முறித்துக் கொண்டதால்தான், நிலைமை வேலைநிறுத்தம் வரை வந்துள்ளது. ஆனால்Cockpit இன் மட்டுப்படுத்தப்பட்ட முன்னோக்கு வெற்றிகரமான விளைவுகளைப் பெறுவதற்கு முற்றிலும் போதாது.

Lufthansaவிற்கு மட்டும் இந்த நிலை தனியானதல்ல. ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்களும் முதலாளிகள் சங்கங்களும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியில் செலவை தொழிலாளர்களின் மீது சுமத்த விரும்புகின்றனர். பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள், சமூக நலப் பணிகளை அகற்றுவது ஆகியவை எல்லா இடங்களிலும் செயற்பட்டியலில் உள்ளன. இந்த சூழ்நிலையில் Lufthansa விமானிகளுக்கு சலுகைகளைக் கொடுக்கத் தயாராக இருக்காது.

இதுதான் செய்தி ஊடகம் வேலைநிறுத்தத்திற்கு எதிராக வெறியுடன் எழுதுவதில் காணப்படுகிறது. Süddeutsche Zeitung பத்திரிகை "சிறந்த ஊதியம் பெறும்" விமானிகள் ஆதரவையோ பரிவுணர்வையோ எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளது. இவர்கள் "நிலைமையை உணராமல் இருக்கின்றனர்" என்று செய்தித்தாள் கூறியுள்ளது.

வலதுசாரி Springer-Verlag பதிப்பாளரின் பிரச்சார ஏடான Bild கீழ்க்கண்ட தலைப்பை வெளியிட்டது: "ஜேர்மனிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. ஆடம்பர வேலைநிறுத்தத்திற்கு எதிராக சீற்ற அலை."

Verdi உம் DGB தொழிற்சங்க கூட்டமைப்பும் 2001 ஐ போலவே விமானிகளை தனிமைப்படுத்த இயன்ற அனைத்தையும் செய்யும்.

Lufthansa ஒரு நெருக்கடி காலஅட்டவணையை தயாரித்துள்ளது. மூத்த அலுவலர்களையும் வாடகைக்கு எடுக்கப்படும் விமானங்களையும் பயன்படுத்தி வேலைநிறுத்தத்தின் பாதிப்பைக் குறைக்கப் பார்க்கிறது. அதே நேரத்தில் நிறுவனம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளது.

நான்கு நாட்கள் வேலைநிறுத்தம் Lufthansaவிற்கு 100 மில்லியன் யூரோக்கள் இழப்பை ஏற்படுத்தலாம். எனவே இது பொருத்தமற்றது, சட்டவிரோதமானது என்று துணைத்தலைவர் கிறிஸ்ரோப் பிரன்ஸ் கூறியுள்ளார். நிறுவனத்தின் வக்கீல்கள் சட்ட நிலைபற்றி ஆராய்கின்றனர்; தொழிற்சங்கத்திடம் இருந்து இழப்பீட்டிற்கு வழக்குப் பதிவு செய்யலாம். Lufthansa ஒப்புமையில் சிறிய விமான ஓட்டிகள் சங்கத்தை மண்டியிட வைப்பதற்கு மிகஅதிக இழப்பீட்டு தொகையைக் கேட்கும் என்பது தெளிவு.

விமானிகள் இத்தாக்குதல்களை எதிர்கொள்ளுவதற்கு தங்களை பரந்த ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியாகக் காணவேண்டும். Lufthansa மற்றும் அதன் துணை நிறுவனங்களில் இருக்கும் மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து, பொதுத்துறை, தனியார் துறைகளில் இருக்கும் மற்ற தொழிலாளர்களுடனும் சேர்ந்து நெருக்கடியின் சுமை தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் ஏற்றப்படும் முயற்சிகள் அனைத்தையும் எதிர்க்க வேண்டும்.