World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP launches election web site

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் வலைத் தளத்தை ஆரம்பித்துள்ளது

13 January 2010

Use this version to print | Send feedback

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு புதிய வலைத் தளத்தை ஆரம்பித்துள்ளது: http://www.socialequality.com/srilanka/index.shtml முதல் தடவையாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஆய்வுகள், தீவில் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று பிரதான மொழிகளிலும் ஒரே வலைத் தளத்தில் கிடைக்கின்றன.

இன்று முதல், ஜனவரி 26 நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சோ.ச.க. மற்றும் அதன் வேட்பாளரும் பொதுச் செயலாளருமான விஜே டயஸும் முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் முழு செய்திகளையும் விபரங்களையும் இந்த வலைத் தளம் வழங்கும். கட்சியின் சகல கொள்கை அறிக்கைகளையும், டயஸின் கருத்துக்கள் மற்றும் அவரது பிரச்சாரம் பற்றிய செய்திகளையும், அதே போல் நாடு பூராவும் சோ.ச.க. நடத்தும் தேர்தல் கூட்டங்கள் பற்றிய செய்திகளையும் தேசிய மற்றும் சர்வதேசிய வாசகர்களால் ஒரே ஒன்லைன் முகவரியில் காணமுடியும்.

பல தசாப்தங்களாக நீண்ட தீவின் உள்நாட்டு யுத்தத்தில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் தீர்க்கமான புள்ளியில் நடக்கும் இந்த ஜனாதிபதி தேர்தலில், உழைக்கும் மக்களுக்கு ஒரு சோசலிச மாற்றீட்டை முன்வைக்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, மற்றும் எதிர்க் கட்சிகளின் வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டி இராணுவவாத வேட்பாளர்களாவர். இருவருமே யுத்தக் குற்றங்கள் மற்றும் தமிழ் பொது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்பாளிகள் ஆவர். அவர்களுக்கு இடையில் அடிப்படை வேலைத்திட்ட வேறுபாடுகள் கிடையாது.

இராஜபக்ஷ, தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் வாழ்க்கைத் தரத்தின் மீதும் "பொருளாதார யுத்தம்" ஒன்றை முன்னெடுப்பதன் பேரில் தனது கைகளைப் பலப்படுத்திக்கொள்வதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆயினும், ஆளும் தட்டின் கணிசமான பகுதியினர், அந்த வயிற்றிலடிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்த ஜெனரல் பொன்சேகா பலம்வாய்ந்த புள்ளி என கருதுகின்றனர்.

சோ.ச.க. வேட்பாளர் விஜே டயஸ், உழைக்கும் மக்களுக்கான ஒரே தீர்வுக்காகப் போராடுகிறார்: அது தெற்காசியாவிலும் அனைத்துலகிலும் சோசலிச குடியரசுகளின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவில் ஒரு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை அமைப்பதாகும்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர், உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வெளியிடப்படும் அன்றாட மார்க்சிய ஆய்வுகளை ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் தொடர்ந்தும் இந்த வலைத் தளம் அபிவிருத்தி செய்து பிரசுரிக்கும்.

அனைவராலும் இலகுவாக காணக்கூடியவாறு இந்த வலைத் தளத்தில் யுனிகோட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் வாசிப்பதற்காக சிலருக்கு தமது கணினியை இற்றைப்படுத்த நேரிடலாம். கீழ்வரும் ஆலோசனைகளை பின்பற்றி அதனை இலகுவாக செய்துகொள்ள முடியும்.

சிங்களம்: http://www.siyabas.lk/sinhala_how_to_install.html

தமிழ்: http://www.siyabas.lk/tamil_how_to_install_in_english.html

விஜே டயஸ் மேற்கொள்ளும் பிரச்சாரத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் எமது கட்சியின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளுக்கு தம்மை பரீட்சியப்படுத்திக்கொள்ளவும் புதிய வலைத் தளத்தை வாசிக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.