World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Bush, Clinton and the crimes of US imperialism in Haiti

புஷ், கிளின்டன் மற்றும் ஹைட்டியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள்

Patrick Martin
18 January 2010

Use this version to print | Send feedback

முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளின்டனும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷும் ஹைட்டி நிலநடுக்கத்தை அடுத்து நடக்கும் உதவி முயற்சிகளுக்கு நிதி திரட்டும் அமைப்புக்களில் தலைமை தாங்குவர் என்று அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று தன்னுடைய வானொலி உரையில் ஒபாமா கூறினார்: "இந்த இரு தலைவர்களும் ஹைட்டி மக்களுக்கும் உலகிற்கும் பிழைக்கிடமில்லாத தகவல்களை அளிப்பர். தேவைப்படும் இக் கணத்தில் அமெரிக்கா ஐக்கியப்பட்டு செயற்படும்."

கிளின்டன்-புஷ் நியமனம் பற்றிய தகவல் உண்மையில் குறிப்பிடத்தக்கதுதான்; ஆனால் வெள்ளை மாளிகையும் அமெரிக்கச் செய்தி ஊடகமும் தெரிவித்துள்ளது போல் அல்ல. இரு உடனடி முன்னதாகப் பதவியில் இருந்தவர்களை, 1993 ல் இருந்து காரிபியனில் அமெரிக்க கொள்கைகளை நிறுவியவர்களை தேர்ந்தெடுத்ததில், ஒபாமா ஹைட்டியில் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் பெரும் மனிதச் சோகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளைப் பங்கில் அந்த வறிய, அரை காலனித்துவ நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதைத்தான் நிரூபித்துள்ளார்.

தனித்தனியே எட்டு ஆண்டுகளுக்கு கிளின்டனும் புஷ்ஷும் நேரடியாக ஆழ்ந்த முறையில் தொடர்ச்சியான அரசியல் திரித்தல்களையும் இராணுவக் குறுக்கீடுகளிலும் தொடர்பு கொண்டு இருந்தனர்; அவை வறுமை, பிற்போக்குத்தனம் அடக்குமுறை ஆகியவற்றை ஹைட்டியில் நீடிக்கச் செய்தன; அவை கடந்த செவ்வாயன்று அந்நாட்டைத் தாக்கிய பேரழிவால் அதிகப்பட்டுள்ளன. இருவரும் ஹைட்டிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இரத்தங்ககளை தங்கள் கைகளில் கொண்டவர்கள்.

ஹைட்டியில் முதல் முறையான ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான Jean-Bertrand Aristide ஐ ஒரு இராணுவ ஆட்சி மாற்றம் அகற்றியபோது கிளின்டன் பதவிக்கு வந்திருந்தார். அந்த ஆட்சிமாற்றத்திற்கு புஷ்ஷின் தந்தையின் நிர்வாகத்துடைய ஆதரவு இருந்தது; அவர்தான் Aristide ஒரு தேவையற்ற, ஆபத்தான தீவிர தன்மை கொண்டவர் என்று கண்டவராவர்.

புதிய ஜனநாயகக் கட்சி நிர்வாகம் கொள்கையில் ஒரு தந்திரோபாய மாற்றத்தை எடுத்தது. கிளின்டன், ஹைட்டிய இராணுவ ஆட்சிக் குழுவின்மீது பொருளாதார தடைகளைச் சுமத்தினார்; இது ஹைட்டியின் வளர்ந்து வந்த ஏற்றுமதித் தொழில்களை அழித்தது; அவர் பின் மரைன்களை ஹைட்டிக்கு அனுப்பி வைத்தார்; 20ம் நூற்றாண்டின் மூன்றாம் முறையாக. ஆட்சி மாற்றக் குழுவின் தலைவர் தளபதி Raoul Cedras அகற்றப்படுவதற்காக இது நடந்தது. அமெரிக்கா, Aristide ஐ வாஷிங்டன் அல்லது உள்ளூர் ஹைட்டிய உயரடுக்கின் மேலாதிக்கத்திற்கு சவால் விடமாட்டேன், 1996ல் பதவியில் இருந்து அகல்வேன், மறு தேர்தலை நாடமாட்டேன் என்று அவர் உறுதியளித்த பின்னர் அவரை ஜனாதிபதியாக மீண்டும் பதவியில் இருத்தியது.

குறிப்பிட்ட காலப்படி அரிஸ்டைட் பதவியில் இருந்து அகன்றதும், அவருக்குப் பதிலாக Rene Preval ஆட்சிக்கு வந்தார்; 1996-2001ல் ஜனாதிபதிப் பதவியின் இரு முறையான காலங்களில் முதல் காலத்திற்கு அப்பொழுது வந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் "நிர்வாகக் கட்மைப்பு" ஆணைகளை செயல்படுத்திய திட்டத்தைக் கொண்டுவந்து வேலைகள் குறைக்கப்பட்டு, பொது நலன்கள் குறைக்கப்பட்டு உள்நாட்டு அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகளும் பெரும் அழிவிற்கு உட்படுத்தப்பட்டனர்.

அரிஸ்டைடின் Fanmi Lavalas கட்சி மே 2000த்தில் சட்டமன்றத் தேர்தல்களில் தெளிவான வெற்றி பெற்றபோது, கிளின்டன் நிர்வாகமும் குடியரசுக் கட்டுப்பாட்டிற்குள் இருந்த காங்கிரஸும் தேர்தலை ஏற்க மறுத்து அமெரிக்க உதவியை நிறுத்தின. அரிஸ்டைடே ஜனாதிபதி பதவிக்கு நவம்பர் 2000 தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று திரும்பினார்; ஆனால் பதவியேற்ற புஷ் நிர்வாகத்திடம் கருணையற்ற விரோதியைத்தான் எதிர்கொண்டார்.

முன்று ஆண்டுகளுக்கு ஹைட்டி முறையாக அமெரிக்க உதவி நிறுத்தம் மற்றும் புஷ் நிர்வாகம் சர்வதேச உதவியை தடுத்து அரிஸ்டைட் அரசாங்கத்தை தனிமைப்படுத்த செய்த முயற்சிகளால் வாட்டத்திற்கு உட்பட்டது. இறுதியில் பெப்ருவரி 2004ல் ஹைட்டிய ஆளும் உயரடுக்கு வெளிப்படையான அமெரிக்க ஆதரவுடன் தூண்டிவிட்ட எதிர்ப்புக்களை அடுத்து அமெரிக்க இராணுவம் மீண்டும் அந்நாட்டில் தலையிட்டு, அரிஸ்டைடை நாட்டை விட்டு கடத்தியது.

நாட்டின் நடைமுறைக் கட்டுப்பாட்டை மரைன்கள் ஒரு ஐ.நா. சமாதானம் காக்கும் படையிடம் ஒப்படைத்தனர்; பிரேசில் மிகப் பெரிய எண்ணிக்கையில் துருப்புக்களை கொடுத்து, தொடர்ந்த தேர்ந்தெடுக்கப்படாத ஹைட்டிய பிரதம மந்திரிகளுக்கு 2006 தேர்தல்கள் வரை முட்டுக் கொடுத்து பதவியில் வைத்தது. இவற்றில் Fanmi Lavalas வேட்பாளர்கள் பெரிதும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். Rene Preval இரண்டாம் முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; இந்த பதவிக்காலம் இந்த ஆண்டு கடைசியில் முடிவடையும். ஒருகாலத்தில் ஆதரவாளரவாகவும் அரசியலில் அரிஸ்டைடின் "இரட்டையர் போலும்" விளங்கிய பிரேவல் நீண்ட காலமாக வாஷிங்டன் மற்றும் ஹைட்டிய ஆளும் உயருடக்கு ஆகியவற்றுடன் சமாதானம் செய்து கொண்டுவிட்டார்; அவருடைய இரண்டாம் பதவிக்காலம் வோல் ஸ்ட்ரீட் மற்றும் சர்வதேச நாணய நிறுவனத்தின் பொருளாதார ஆணைகளுக்கு அடிமைத்தனமான ஒப்புதலைக் கொடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

கிளின்டன் மற்றும் புஷ் நிர்வாகங்கள் காலம் முழுவதிலும் IMF இன் கடும் சிக்கன நடவடிக்கைகள் கடைப்படிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது, தாங்கள் பிறந்த நாட்டில் இருந்து அமெரிக்காவில் புகலிடம் நாடி நல்ல வாழ்வைப் பெற விரும்பி ஓடிவரும் ஹைட்டியர்களுக்கு எதிரான கடுமையான அடக்குமுறைத் திட்டத்தை இணைத்திருந்தது. 1992ல் தன்னுடைய முதல் ஜனாதிபதி பதவிக்கால பிரச்சாரத்தில், கிளின்டன் ஹைட்டிய அகதிகள் மீது குற்றம் சாட்டி கட்டாயமாக திரும்பி அனுப்புவது பற்றி குறைகூறியிருந்தார்; ஆனால் அவரே அக்கொள்கைகளை மாறுதலின்றிச் செயல்படுத்தினார். அடுத்த 17 ஆண்டுகளில்--ஒபாமாவிடம் இருந்து எந்த மாறுதலும் இல்லாத நிலையில்--நூற்றுக்கணக்கான அகதிகள் அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு பிரிவினரின் முற்றுகையைத் தவிர்க்கும் விதத்தில் சிறு படகுகளில் வரும்போது உயிரிழந்துள்ளனர்.

இன்னும் சமீப காலத்தில் கிளின்டன் ஹைட்டியில் உத்தியோகபூர்வ ஐ.நா. தூதராக இருந்து, ஊழல் மீக்க பிரேவல் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து, பட்டினி நிலை ஊதியத்தில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்கா நடத்தும் ஆடைகள் தொழில்துறையில் அமெரிக்காவிற்கு இலாபத் தளமாக ஹைட்டியை வளர்க்க முற்பட்டுள்ளார். உணவு பற்றிய கலகங்கள் ஏப்ரல் 2008ல் நாடு முழுவதும் நடந்தன; ஆனால் அது ஒன்றும் பிரேவலை ஆடைகள் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்றுக குறைந்த பட்ச ஊதியம் $1.72 என உயர்த்தியிருக்கும் சட்டத்தை தடுப்பதில் இருந்து தடுத்துவிடவில்லை.

ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷைப் பொறுத்தவரை, மனிதாபிமான பிரச்சாரம் எனக்கருதப்படும் அமைப்பிற்கு இணைத்தலைவர் என்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஹைட்டிய, அமெரிக்க மக்களை அவமதிப்பதிற்கு ஒப்பாகும். ஒபாமா இவரை நியமித்துள்ளது ஜனாநாயகக் கட்சி ஜனாதிபதி தன் தேர்தலுக்குப் பின்னர் மக்கள் புஷ்ஷையும் அவருடைய கட்சியையும் வெறுக்கும் நிலையில், குடியரசுக் கட்சியினருக்கு நல்வாழ்வு அளிக்கும் விதத்தில் கொண்டிருக்கும் அவருடைய அயரா முயற்சிகளை ஒத்துத்தான் உள்ளது.

சிறிதும் மன்னிப்புக் கோரும் நிலையில் இல்லாத போர்க்குற்றவாளி, ஒரு மில்லியன் ஈராக்கியர்களின் படுகொலைக்கு காரணமானவர் என்ற விதத்தில் புஷ்ஷின் உள்நாட்டுச் "சாதனைக்கு" அடையாளம் நியூ ஓர்லீயன்ஸ் மற்றும் வளைகுடா கடலோரத்தில் கத்தரீனா புயல் பேரழிவு கொடுத்தபோது அந்த அழிவைத் தடுப்பதில் பெரும் தோல்வியுற்றதுடன் பின்னர் மீட்பு முயற்சிக்கு திறமையுடன் உதவியளிக்காததும்தான்.

பாரக் ஒபாமா ஹைட்டியில் சமீபத்திய அமெரிக்க முயற்சிக்குள் தேர்ந்து எடுத்துள்ள பொது முகங்களின் சான்று இதுதான். புஷ்ஷும், கிளன்டனும் தொடர்ச்சியாக செய்தி ஊடகங்களில் வார இறுதியில் தோன்றினர்; ஐந்து ஞாயிறுக் கிழமை செய்தி நிகழ்ச்சிகளிலும் தோன்றினர்; இவற்றில் அவர்கள் ஹைட்டிக்கு "உறுதிப்பாடு" மீட்கப்பட வேண்டியது பற்றி வலியுறுத்தினர்; அந்த முயற்சியில் அமெரிக்காவிற்கு உள்ள முக்கிய பங்கையும் வலியுறுத்தினர்.

புஷ்ஷும் கிளின்டனும் ஹைட்டியில் கடந்த நூற்றாண்டில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருந்த தீய, பிற்போக்குத்தன பங்கை உருவகப்படுத்தி நிற்பவர்கள். அவர்களுடைய நிர்வாகங்களின் கொள்கைகள் அந்நாட்டில் கடந்த செவ்வாய் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இறப்பு, பேரழிவைத் தோற்றுவித்தது போல் ஏற்படுத்தின என்று கூறினால் அது மிகையாகாது.