World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
SWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Haiti's tragedy: A crime of US imperialism

ஹைட்டியின் பேரவலம் : அமெரிக்க ஏகாதிபத்தியத்தினுடைய ஒரு குற்றம்

Bill Van Auken
21 January 2010

Use this version to print | Send feedback

ஜனவரி 12ம் திகதி நிலநடுக்கம் ஹைட்டி மக்கள் மீது ஏற்படுத்திய பாரிய இறப்புக்களும் துன்பங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரிய சர்வதேச குற்றத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது; ஒரு நூற்றாண்டு அடக்குமுறையினால் இப்பேரழிவிற்கு அது வகை செய்ததுடன் இப்பொழுது இப்பேரழிவையும் தன் நோக்கங்களுக்கு பயன்படுத்துகிறது.

200,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ள இறந்தவர்கள், கால் மில்லியனுக்கும் மேலாக காயமுற்றவர்கள் மற்றும் வீடுகள் அழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மூன்று மில்லியன் மக்கள் ஆகியோர் இயற்கைப் பேரழிவினால் மட்டும் பாதிக்கப்படவில்லை. அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத நிலை, Port-au-Prince ல் மட்டமான கட்டமைப்புத் தரம் மற்றும் இதை எதிர்கொள்ளுவதற்கு ஹைட்டிய அரசாங்கம் ஏற்பாடு ஏதும் செய்ய முடியாத நிலை ஆகியவைகள் அனைத்தும் இந்தப் பெரும் சோகத்தை நிர்ணயிக்கும் காரணங்கள் ஆகுகின்றன.

இந்தச் சமூக நிலைமைகள் ஹைட்டிக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயுள்ள நீடித்த உறவுகளின் விளைவுகள் ஆகும்; 1915ல் ஆரம்பித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இத்தீவை அமெரிக்க மரின் கடற்படையினர் ஆக்கிரமித்ததிலிருந்து அமெரிக்கா இந்த நாட்டை நடைமுறையில் ஒரு காலனி நாடாகத்தான் நடத்தி வந்தது.

பின் இது மூன்று தசாப்த கால Duvaliers உடைய சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கொடுத்துடன், குடும்பத்தின் வங்கிக் கணக்குகளுக்கு சென்ற தொடர்ச்சியான கடன்களைக் கொடுத்தது; இது ஹைட்டிய மக்களை வறுமையில் தள்ளி அக்கடன்களை அடைக்கவும் செய்தது.

1980 மற்றும் 1990 களில் வாஷிங்டன் தடையற்ற சந்தைக் கொள்கைகளை ஊக்குவித்தது; அவை ஹைட்டிய விவசாயத்திற்கான பாதுகாப்புக்களை அகற்றி, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சேவைகளை தனியார்மயமாக்கின. இதன் விளைவுகளானது வெகுஜன வறுமை, பெருகிய முறையில் மிக ஏழ்மை நிலையில் உள்ள விவசாயிகள் Port-au-Prince ன் சேரிப் பகுதிகளில் குடியேறியது, நாட்டின் அரசாங்கம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவைகளை வெறுமையாக்கியது போன்றவையாகும்--இந்த நிலைமைகள்தான் இப்பொழுது கூட்டாகச் சேர்ந்து நிலநடுக்கத்தின் சமூக, மனித இழப்புக்களையும் அதிகப்படுத்தியுள்ளன.

தற்பொழுது ஒரு முழுமையான வாரமாக உலகம் அவதானித்துக் கொண்டிருக்கையில், மில்லியன் கணக்கான ஹைட்டியர்கள் சுகாதாரப் பராமரிப்பு, உணவு, நீர் மற்றும் உறைவிடம் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளார்கள்; அமெரிக்க இராணுவச் சரக்கு விமானங்கள் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரையும் மரின்களையும் ஏற்றிச் செல்வதுடன் அமெரிக்க கடற்படையும் கடலோர பாதுகாப்பு கப்பல்களும் தப்பி ஓட முயல்பவர்களை தடுக்கும் விதத்தில் ஹைட்டியின் கடலோரப் பகுதிகளில் ரோந்து சுற்றுகின்றன.

ஒருங்கிணைந்த மீட்பு முயற்சி இல்லாதது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; வேதனை தரும் மிக மெதுவாக வரப்பெறும் உணவு, நீர், மருந்து ஆகியவை போதுமான அளவு இல்லை என்பதும் முறையாகச் செயல்படாததால்தான். அமெரிக்க இராணுவம், ஈராக்கில் கால் மில்லியன் துருப்புக்களை அனுப்பி பாக்தாத்தை இரு வாரங்களுக்குள் வெற்றி கொண்டது. நீர், உணவு மற்றும் பிற அளிப்புக்கள் நில நடுக்கத்தில் தப்பிப் பிழைத்து அதிர்ச்சியில் இருக்கும், 700 மைல் தொலைவே அமெரிக்காவில் இருந்து உள்ள நாட்டிற்கு அனுப்ப முடியவில்லை என்பது இழிவான பொய் ஆகும்.

இன அழிப்புக் கொலைக்கு ஒப்பாக மனித உயிர் பற்றி சிறிதும் பொருட்படுத்தாத தன்மையை கொண்டிருப்பதுடன், வேண்டுமென்றே செயல்படுத்தப்படும் தீய தன்மையுடைய கொள்கைதான் இதில் உள்ளது.

ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் உறுதியான கணிப்புக்கள் செய்யப்பட்டன. அமெரிக்க முதலாளித்துவம் நீண்ட நாட்களாக உபரித் தொழிலாளர்கள் எனக் கருதும் மக்கள் தொகுப்பினை ஒரு வறிய மற்றும் நீண்டகாலம் வேலையற்று இருக்கும் காயமுற்ற உறுப்பினர்களைக் காப்பாற்றுவதில் என்ன பயன்? அமெரிக்காவிற்குள்ளேயே சுகாதாரப் பாதுகாப்பை பங்கீடு செய்யும் நடவடிக்கை இருக்கையில், ஏன் மக்களை இடிபாடுகளில் இருந்து தோண்டி எடுத்து சுகாதாரப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்?

மக்கள் இடியுண்ட கட்டிடங்களில் இருந்து உயிரோடு வெளியே இழுக்கப்படுகையிலேயே அமெரிக்க மற்றும் ஐ.நா. அதிகாரிகள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளினால் பயன் இருக்காது என்று வலியுறுத்தினார்கள்.

மிகக்குறைந்த பட்சமாக, உயிர்களை பாதுகாப்பது ஹைட்டியில் அமெரிக்கத் தலையீட்டின் முன்னுரிமையாக இல்லை. எங்கெல்லாம் மீட்பு, உதவி நடவடிக்கைகள் வாஷிங்டனின் முக்கிய குவிப்பான அந்நாட்டை இராணுவ ஆக்கிரமிப்பு செய்தல் என்பதற்கு எதிராக வந்ததோ, அங்கெல்லாம் மீட்பு முயற்சிகள் ஒதுக்கப்பட்டன.

அமெரிக்க இராணுவத்தினரையும் விநியோகங்களையும் கொண்டுவரும் சரக்கு விமானங்கள் திரும்பிச் செல்லும்போது ஆளில்லாமல் செல்லுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரப் பாதுகாப்பு அற்ற மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் உடல் உறுப்புக்களை இழக்கும் நிலையை எதிர்கொண்டுள்ள காயமுற்ற ஹைட்டியர்களை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று குணப்படுத்தி உயிர்களைக் காப்பாற்றலாம் என்ற விருப்பம் காணப்படவில்லை.

அமெரிக்க இராணுவத்தின் செயற்பாடு அப்பட்டமான முறையில் இருக்க, அதன் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வதும் ஐ.நா. சமாதானப்படைக்கு தலைமை தாங்குவதுமான பிரேசில் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வாஷிங்டனிடமிருந்து எதிர்ப்பை பதிவு செய்தன. பிரெஞ்சு கூட்டுறவுக்கான அரச செயலாளர் Alain Joyandet ஐ.நா.வை வாஷிங்டனின் பங்கைப் பற்றி தெளிவுபடுத்துமாறு கோரினார்; இப்பணி "ஹைட்டிக்கு உதவவே ஒழிய அதை ஆக்கிரமிக்க அல்ல" என்றார் அவர்.

மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல குழுக்கள் பகிரங்கமாக அமெரிக்க இராணுவம் நடந்துகொண்டுள்ள முறையை கண்டித்துள்ளன.

எல்லைகளற்ற மருத்துவர்கள் (Medecins Sans Frontieres MSF). செவ்வாயன்று 12 டன்கள் மிகத் தேவையான மருந்துப் பொருட்களை சுமந்து வந்திருந்த அதன் சரக்கு விமானம் மூன்று முறைகள் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் Port-au-Prince விமான நிலையத்தில் இருந்து ஞாயிறு இரவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது என்றும், அதற்கு இறங்க அனுமதி கிடைக்கும் என்ற உத்தரவாதத்திற்கும் பின்னும் இவ்வாறு நடந்தது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஜனவரி 14ம் திகதியிலிருந்து அமைப்பின் ஐந்து விமானங்கள் டொமினிக் குடியரசிற்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. இதன் விளைவாக நூற்றுக்கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டனர் என்றும் நூற்றுக்கணக்கான ஹைட்டியர்கள் தொடர்ந்து காயத்திற்கு உட்படுகின்றனர் என்றும் அது கூறியுள்ளது.

"நோயாளிகளுக்கு வலியைக் குறைக்க போதுமான மொர்பைன் எங்களிடம் இல்லை" என்று MSF ன் Choscal மருத்துவமனையின் மருத்துவப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் Rosa Crestani கூறினார். "உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், கருவிகள் ஆகியவற்றைக் கொண்டுவரும் விமானங்கள் திருப்பி அனுப்பப்படல், அதே நேரத்தில் இங்கு நோயாளிகள் உயிரிழத்தல் என்பது ஏற்கத்தக்கது அல்ல. நாட்டில் நுழையும் மருந்து விநியோகங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்."

இதேபோல் ஒரு ஸ்பெயின் நாட்டு உதவிக்குழு Port-au-Prince ல் செவ்வாயன்று மட்ரிட்டில் செய்தியாளர் கூட்டத்தில் ஹைட்டிய நிலநடுக்கத்தை எதிர்கொள்ளுவதில் அமெரிக்க இராணுவமயமாக்குதலைக் கண்டித்ததுடன், அத்தகைய "பாதுகாப்பு பற்றித் தீவிரச் சிந்தனை" மற்றய உயிர்களை காப்பாற்றுவதையும் தடை செய்கிறது என்றது. இக்குழுவான Intervencion, Ayuda y Emergencia இலங்கையில் இருந்து துருக்கி வரை பேரழிவுகளை எதிர்கொள்கையில் இதேபோன்ற செயற்பாடுகளை அது கண்டதில்லை என்றும் கூறியது.

அமெரிக்காவின் "உதவி" முயற்சியின் உண்மைத் தன்மை ஜனாதிபதி பாரக் ஒபாமா அவருக்கு முன்பு பதவியில் இருந்த ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்று பில் கிளின்டனையும் அவற்றிற்குத் தலைமை தாங்குவதற்கு தேர்ந்தெடுத்ததில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்கள் கரங்களில் ஹைட்டிய இரத்தத்தைத்தான் கொண்டுள்ளனர். 2004ல் நடந்த ஆட்சி மாற்றத்தை புஷ் நிர்வாகம் தூண்டியது; அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி Jean-Bertrand Aristide கடத்தப்பட்டு பின்னர் நாடுகடத்தபட்டதும் நடந்தது; இத்துடன் CIA இடம் பயிற்சி பெற்ற கொலைப் படைப் பிரிவு ஆயிரக்கணக்கான மக்களை கொன்றது. கிளின்டன் 1994ல் ஹைட்டிக்கு துருப்புக்களை அனுப்பினார்.

ஜனநாயகக் கட்சியின் கிளின்டன் தான் மிகவும் அப்பட்டமான முறையில் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் அணுகுமுறையை வெளியிட்டுள்ளார்; அது ஹைட்டியின் அடக்கப்பட்ட மக்கள் பற்றி அதிக மறைப்பு இல்லாத இனவெறி வெறுப்பைக் கொண்டுள்ளது.

செய்தி ஊடகப் பேட்டிகளில் கிளின்டன் ஜனாதிபதி Rene Preval அரசாங்கத்தை வாஷிங்டன் கோரிக்கைகளுக்கு தாழ்ந்து நடப்பதற்கு பாராட்டியுள்ளார். நில நடுக்கத்தில் இருந்து முன்பு இருந்ததை விட நல்லமுறையில் ஹைட்டி வெளிவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்; வெகுஜன படுகொலையையும் சமூக அழிவையும் முன்னேற்றத்திற்கு விரைவான பாதைபோல் காட்டுகிறார்; அது கூடுதலான அமெரிக்க முதலீட்டைக் கொண்டு அளக்க வேண்டியது போலும்.

இதுதான் வாஷிங்டனின் உண்மையானதும் தீயதுமான நோக்கம் ஆகும். இது நாட்டின் பெரும் அவலத்தை இன்னும் நேரடியான காலனித்துவ வகைக் கட்டுப்பாட்டை சுமத்தவும் அமெரிக்க நிறுவனங்கள் மகத்தான இலாபங்களை பெற அடிமைத்தனம் நிறைந்த தொழிலாளர் தொகுப்பை வறிய ஊதியம் கொடுத்து சுரண்டவும் ஆகிய நோக்கங்களைக் கொண்டது.

அதே நேரத்தில், நீண்ட காலமாக தன் "கொல்லைப் புறம்" என்று கருதும் பகுதியில் தன் ஆதிக்கத்தை மறுபடியும் உறுதிப்படுத்த, Yankee ஏகாதிபத்தியத்தின் பிறப்பிடத்தின் மீது உறுதிபடுத்தவிழைகிறது. மேலை உலகில் வணிகத்திற்கும் முதலீட்டிற்கும், ஐரோப்பா மற்றும் சீனா என்று தன் போட்டியாளர்களின் பெருகிய சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்பகுதியில் உள்ள நாடுகளின்மீது தன் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில், வாஷிங்டன் அதன் நலன்களை தொடர இராணுவ வலிமையை பயன்படுத்துகிறது.

பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அமெரிக்க செய்தி ஊடகம் குறிப்பிடத்தக்க வகையில் இழிந்த பங்கை இந்த வழிவகைக்கு ஆதரவு கொடுக்கும் முறையில் செய்கிறது. அமெரிக்க இராணுவத்தின் பங்கை அது புகழ்ந்துள்ளது; அதே நேரத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் உதவி மற்றும் மீட்புப் பணிகளின் தடையாக குறுக்கே இருப்பதை மறைக்கிறது.

அதே நேரத்தில் இது "கொள்ளை அடிப்பவர்களை" பற்றி பரபரப்பான செய்திகளை வெளியிடுகிறது--பெரும்பாலும் பசியில் உள்ள மக்கள் இடிபாடுகளுக்கு இடையே ஏதேனும் கிடைக்குமா என்று தேடுபவர்கள் பற்றி; இதற்குக் காரணம் பெருமளவு இராணுவப் படையை இறக்கியிருப்பதற்கு போலிக்காரணம் கண்டுபிடிப்பது ஆகும். இந்தச் சூழ்நிலையில் உண்மையான குற்றவாளிகள் கொள்ளை அடிப்பவர்கள் என்று கூறப்படுபவர்கள் அல்ல; பதுக்கிவைப்பவர்கள் அதாவது சமூகத்திற்கு முக்கிய தேவைகளை தனியார் இலாப முறையைக் கொண்டு கட்டுப்படுத்துபவர்களும், பட்டினியில் வாடும் மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு கொடுக்காதவர்களும்தான் கொள்ளையர்கள்.

ஹைட்டிய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களானது உலகெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் நிலைமைகள்மீது நடக்கும் தாக்குதலில் இருந்து பிரிக்கப்பட முடியாதவை. இவை முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியினால் உந்துதல் பெறுகின்றன. ஹைட்டி தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு நூற்றாண்டிற்கும் மேலான காலம் தோற்றுவித்த சூழ்நிலையில் இருந்து மீட்டல் என்பது அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்தி இலாபமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதின்மூலம்தான் முடியும்.