சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Madrid subway shut down by mass strike

மட்ரீட்டில் நிலத்தடி ரயில் பெரும் வேலைநிறுத்தத்தினால் மூடப்பட்டது

By Alex Lantier
30 June 2010

Use this version to print | Send feedback

மட்ரீட் பிராந்திய அராசங்கம் சுமத்தியிருந்த குறைந்த பட்ச பணி விதிகளைப் புறக்கணித்து, நேற்று மட்ரீட்டின் நிலத்தடி ரயில் ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு மட்ரீட் நிலத்தடி ரயில்கள் இயக்கத்தை மூடிவிட்டனர். நகரம் முழுவதும் இதையொட்டி விரைவில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்தன. நிலத்தடி ரயில் அமைப்பு முறையில் நாள் ஒன்றிற்கு 2 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். பஸ் மற்றும் டாக்ஸி சேவைகள் வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள் பயணம் செய்யும் பெரும் தேவைக்கு உட்பட்டன.

வலதுசாரி மக்கள் முன்னணி (PP) எஸ்பெரன்ச அகுர் (Esperanza Aguirre) தலைமையிலான மட்ரீட் பிராந்திய அரசாங்கம் மெட்ரோ தொழிலாளர்கள் ஊதியத்தில் 5 சதவிகித வெட்டுக்களை கோரியதும், ஜூன் 22 அன்று தொழிலாளர்கள் பெருமன்றத்தில் கூடி தொழிற்சங்கங்கள் முன்வைத்த மூன்று நாள் வேலைநிறுத்தம் ஜூன் 28ல் இருந்து என்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஜூன் 24ம் திகதி தொழிலாளர்கள் மட்ரீட் பிராந்திய சட்டமன்றத்தின் முன் “வெளியேறுக! வெளியேறுக!” என்ற கோஷமிட்டுத் தேசிய பொலிசுடன் மோதிய விதத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முதல் நாள் வேலைநிறுத்தங்களை அடுத்து —குறைந்த பட்ச பணி விதிகள் சாதாரண பணித்தரம் 50 சதவிகிதம் இருக்க வேண்டும் என்ற தொழிலாளர்களை கட்டாயப்படுத்துவது— 7,500 மொத்தம் என்று உள்ள தொழிலாளர் தொகுப்பில் 4,000 பேர் கொண்ட மன்றம் ஒன்று கூடி நேற்று ஒரு முழு வேலைநிறுத்தம் தேவை என வாக்களித்தது. நேற்று தொழிலாளர்கள் இந்த மொத்த வேலைநிறுத்தம் இன்றும் தொடர்வதற்கு வாக்களித்து, வேலைநிறுத்தத்தை தொடர்வதா என்பது பற்றி முடிவெடுக்க இன்று காலை கூடுவது என்றும் தீர்மானித்தனர்.

ரயில் நிலையங்கள், ரயில் பணியகங்கள் ஆகியவற்றை சுற்றித் தொழிலாளர்கள் திறமையுடன் மறியல் செய்தனர். மெட்ரோ நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் 8 வது வழிப் போக்குவரத்தைத் திறக்கும் முயற்சியை மறியல்கள் முறியடித்தன. இந்த வழி விமான நிலையத்தை அரசாங்க அமைச்சரகங்களுடனும் நகர மையப்பகுதியுடனும் இணைக்கிறது. வேலைநிறுத்தத்தை முறியடிக்க முற்பட்டவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

நேற்று மெட்ரோ நிர்வாகம் அதன் அனைத்து ரயில் நிலையங்களையும் மூடிவிடும் முடிவெடுத்தது. “முழுத் தடங்களிலும் குறைந்த பட்ச பணி விதிகள் நிறைவேற்றப்படவில்லை” என்றும் சுட்டிக்காட்டியது. நாளையும் மெட்ரோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தால், தனியார் பஸ் நிறுவனங்களை வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் கருவிகளாக ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

பொதுத் தொழிற் சங்கம் (UGT- General Union of Labour) உடைய பொதுச் செயலாளர் Teodoro Pinuelas நேற்றைய வேலைநிறுத்தத்தை ஒரு “வெற்றி” என்று கூறினார். “முன் எப்பொழுதையும் விட மறியல்கள் கூடுதலான தகவல்களைக் கொடுக்கின்றன, வேலைநிறுத்தத்தில் இருப்பவர்களுக்கு நிறுத்தம் பற்றி ஆதரவு கொடுக்க வாதங்கள் தேவை இல்லை” என்று அவர் El Pais இடம் கூறினார்.

UGT, CC.OO (தொழிலாளர்கள் ஆணைகள் தொழிற் சங்கம்) உடைய பிரதிநிதிகள் மற்றும் நடத்துனர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மெட்ரோ மற்றும் பிராந்திய அதிகாரிகளை நேற்றுச் சந்தித்துப் பேசினர். கூட்டத்திற்கு பின்னர் தொழிற்சங்கத்தினர் ஊதியம் பற்றி உருப்படியான திட்டங்கள் எதையும் தாங்கள் பெறவில்லை என்றனர்.

வேலை நிறுத்தக்காரர்களை மட்ரீட் அதிகாரிகள் வெறித்தனமாகக் கண்டித்து குறைந்த பணி முறைக்கு வராத தொழிலாளர்கள் பற்றிய கோப்புக்களை ஆராயப் போவதாக அச்சுறுத்தினர். மட்ரீட் போக்குவரத்துத் துறை குழு உறுப்பினர் Jose Ignacio Echeverria “வேலைநிறுத்தம் ஏற்கனவே ஒரு வேலைநிறுத்தம் ஆகாது” என்றும், “குறைந்தபட்ச பணி விதிகளை நிறைவேற்றாதது ஒரு குற்றம் ஆகும்” என்றார். மேலும் வேலைநிறுத்தம் “அரசியல் தன்மை உடையது” என்றும் “குறைந்த பட்ச பணி விதிகள் மதிக்கப்படாவிட்டால், பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை” என்றும் சேர்த்துக் கொண்டார்.

தேசிய அரசாங்கத்தின் அதிகாரிகள், ஸ்பானிய சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE) இன் பிரதம மந்திரி ஜோஸ் ரோட்ரிக்ஸ் சாப்பாதேரோவும் வேலைநிறுத்தத்தை எதிர்த்துள்ளார். தொழிலாளர் துறை மந்திரி Celestino Corbacho “வேலைநிறுத்தம் செய்யும் உரிமை மற்ற குடிமக்கள் பல இடங்களுக்குச் செல்லும் உரிமையுடன் தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார். இதேபோல் பொருளாதார மந்திரி Elena Salgado வும் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையைத் தான் மதித்தாலும் குறைந்தபட்சப் பணி விதிகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த நிலைப்பாடு ஏமாற்றுத்தனமும் அபத்தமானதும் ஆகும்: குறைந்தபட்சப் பணி விதிகளே இயல்பாக வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை மீறுகின்றன. ஏனெனில் அதன் தேவை ஒரு குறைந்த அளவிலான எண்ணிக்கையிலாவது தொழிலாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பது அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையைத் தடுக்கிறது. வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது உட்குறிப்பாக சால்கடோ சட்டபூர்வ நடவடிக்கை என்று அச்சுறுத்தியுள்ளார். நீதிமன்றங்கள் “தவறான” முறையில் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பொருளாதார நெருக்கடிக் காலம் முழுவதும் தொழிற்சங்கங்கள் “முற்றிலும் அபத்தமான அணுகுமுறையைத்தான்” காட்டியுள்ளன என்றும் கூறினார். இந்த நடவடிக்கை “தன்னை வருங்காலத்திலும் இருத்திக் கொள்ளும் என்று” தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இப்படித் தவிர்க்கும் விதத்தில் கருத்துக்களை கூறிய சால்கடோ தொழிற்சங்கங்கள், PSOE மற்றும் அதன் குட்டி முதலாளித்துவத்தில் உள்ள நட்பு அமைப்புக்கள் ஒன்றையொன்று கட்டுப்பாட்டை விட்டு வேலைநிறுத்தம் சென்றுவிடாமல் தடுக்க நம்பியுள்ளன என்றும் ஐரோப்பா முழுவதும் வெறுக்கப்படும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு அரசியல் சவாலையும் தொடுக்கின்றன என்ற குறிப்பைக் காட்டியுள்ளார். உண்மையில் தற்போதைய வேலைநிறுத்தம் வெடித்து நிலத்தடி இரயில் முறையை நிறுத்தியதற்குக் காரணமே தொழிலாளர்கள் வெகுஜனக் கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியதுதான். வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிடாமல் தொழிற்சங்கங்கள் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

இது கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் பெருகும் தொழிலாளர்களின் எதிர்ப்புணர்விற்கு சான்று ஆகும்—இந்த நிலைப்பாடு அவர்களை PSOE அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கு விரோதமாக இருத்துகின்றது. உண்மையில், UGT மரபார்ந்த முறையில் PSOE உடன் இணைந்துள்ளது, CC.OO அரசியலளவில் Unite Left என்னும் PSOE க்கு நெருக்கமாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஒரு குடை போன்ற குழுவிற்கு நெருக்கமானதாகும்.

மட்ரீட் வேலைநிறுத்தம் சுயாதீன பணியிட அமைப்புக்கள் நிறுவப்படுதலை, அரசாங்கத்திற்கு அரசியல் முறையில் எதிர்ப்பைத் தளமாக கொண்டவை அமைக்கப்பட வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதுதான் இப்பொழுது சிக்கன கொள்கைகளுக்கு உண்மையான தொழிலாள வர்க்கத்தின் வெளிப்பாட்டிற்கு மிகவும் முக்கியம் ஆகும்.

இப்போராட்டங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தளம் அமைக்கவில்லை. ஆயினும் இவை அரசியல் நடைமுறை மற்றும் தொழிற்சங்கங்களுக்கு பிணைந்து நிற்கும் நிலையில், தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும். ஐரோப்பியக் கடன் நெருக்கடி தொடங்கியதில் இருந்தே தொழிற்சங்கங்கள் கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் ஐரோப்பா முழுவதும் அரசியல்வாதிகளும் வங்கிகளும் கோரியுள்ள இதே போன்ற சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கு சபாத்தேரோவுடன் ஒத்துழைத்து வருகின்றன.

ஜனவரி மாதம், சபாத்தேரோ இரகசியமாக UGT தலைவர் Candido Mendez, CC.OO தலைவர் Ignacio Toxi ஆகியோரைச் சந்தித்து அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை திட்டத்தைத் தயாரித்தார். இதற்குக் குறைந்தது 50 பில்லியன் யூரோ வெட்டுக்கள் அரசாங்கச் செலவுகளில் செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் சபாத்தேரோ கொண்டுள்ள வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போதைய 11.4 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதமாக குறைக்கும் இலக்கு அடையப்பட முடியும். ஓய்வூதிய வயதை இரு ஆண்டுகள் 67க்கு என்று உயர்த்தவும் சபாத்தேரோ திட்டமிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளினால் PSOE யும் வங்கிகளும் பல தசாப்தங்களாக தொடரப்படும் வலதுசாரிக் கொள்கைகளினாலும், சமீபத்தில் வெடித்த வீட்டுக் குமிழியின் விளைவுகளாலும் பேரழிவிற்கு உட்பட்டுவிட்ட தொழிலாள வர்க்கத்தை இன்னும் கொள்ளை அடிக்க முற்படுகின்றனர். வேலையின்மை இப்பொழுது அதிர்ச்சியூட்டும் 22 சதவிகிதத்தில் உள்ளது, இளைஞர்களிடையே வேலையின்மை கிட்டத்தட்ட 40 சதவிகிதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும்கூட, தொழிற்சங்கங்கள் கடந்த பெப்ருவரி வரை கூட வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடவில்லை. அப்பொழுது அவர்கள் ஒரு பயனற்ற ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்து அரசாங்கம் தன் கொள்கையை மிருதுவாக்க வேண்டும் எனக்கேட்கும் முன்னோக்கை கொண்டிருந்தனர். அதே நேரத்தில், மெண்டஸ், “சமூக அமைதி அனைவருடைய சொத்தும், பொறுப்பும் ஆகும்… நாங்கள் அதை முறிக்கப் போவதில்லை, வருங்காலத்திலும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.” என்றார்

ஸ்பெயினில் நடக்கும் சமூக வெட்டுக்களை நிறுத்த வேலைநிறுத்தம் ஒன்றும் செய்யவில்லை. மாறாக அவை வங்கிகள் அரசியல் நிலமைமையை அளக்க அனுமதித்தன. ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது: “எதிர்ப்புக்களின் அளவு, சோசலிஸ்ட் பிரதம மந்திரி ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் சபாத்தேரோவிற்கு எதிராக முதலில் நடப்பது, சர்வதேச முதலீட்டாளர்களால் ஓய்வூதிய வயதை 65ல் இருந்து 67க்கு உயர்த்துவதற்கும் 50 பில்லியன் யூரோ சிக்கன நடவடிக்கைக்கு எதிராகவும் வரும் சமூகச் சீற்றத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் திணறுமா என்ற அடையாளத்தை பார்க்க கண்காணிக்கப்படுகிறது.”

வெட்டுக்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கச் சீற்றம் பெருகிய நிலையில், சர்வதேச வங்கிகளும் ஸ்பெயினுக்கு கடன் கொடுப்பதை படிப்படியாக நிறுத்திவிட்டன. ஸ்பெயினில் ஒரு பொது வேலை நிறுத்தம் பற்றிப் பெருகிய விவாதம் இருக்கையில், தொழிற்சங்கங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடவடிக்கை எடுப்பதைத் தாமதப்படுத்த அழுத்தம் கொடுத்துள்ளன—செப்டம்பர் 9 அன்று நடக்க இருக்கும் வெகுஜன ஆர்ப்பாட்டம் வரை. பின்னர் செப்டம்பர் 29 அன்று ஒரு ஐரோப்பிய நடவடிக்கை தினம் உள்ளது. இத்திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் அடிப்படையில் பெப்ரவரி மாத வேலைநிறுத்தத்தில் இருந்து மாறுபட்டவை அல்ல.

தொழிலாள வர்க்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு அரசியல் மோதலை தொழிற்சங்கங்கள் ஆழ்ந்து அச்சத்துடன் நோக்கி எதிர்க்கின்றன. ஜூன் 15 அன்று நடந்த கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் CC.OO தலைவர் Ignacio Toxo மற்றும் மென்டஸ், செப்டம்பர் 29 நடவடிக்கை “அரசாங்கத்தை மாற்றவதற்காக இல்லை” என்று அறிவித்து அது தன் திசையை மாற்றிக் கொள்ளுவதற்காக என்று கூறினார். முன்பும் டோக்சோ “ஒரு பொது வேலைநிறுத்தம் ஸ்பெயினில் நடந்தால் மிக மோசமான செயலாகும்.” என்று எச்சரித்தார்.

இதேபோல், நடத்துனர்கள் தொழிற்சங்க செயலாளர், மட்ரீட்டில் தற்போதைய மெட்ரோ வேலைநிறுத்தக் குழுவை வழிநடத்துபவர், El Pais இடம் நேற்று கூறினார்: “மெட்ரோத் தொழிலாளர்கள் அரசியலை தொழிற்சங்க இயக்கத்துடன் ஒருபொழுதும் கலக்க விரும்பவில்லை. நாங்கள் ஜூன் மாதம் முடிவுகளை விரும்புகிறோம். எதையும் செப்டம்பர் வரை தள்ளிப்போட விரும்பவில்லை.” ஆனால் அழுத்தத்தின் கீழ் நிர்வாகம் எதைத் தற்காலிகமாகக் கொடுக்கும், மற்ற தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற அழைப்பை தவிர்த்தல் என்ற முன்னோக்கு, ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் இன்னும் தோல்விகளுக்கு சரியான முறையாகும்.

அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் எல்லா இடங்களிலும் தொடர்ந்த பொருளாதாரச் சரிவை எதிர்பார்க்கும் நிலையில், தொழிற்சங்கங்கள் அதிகம் பேரம் பேசக்கூடியது குறைப்புக்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட வேண்டும், குறைக்கப்பட வேண்டும் என்பதுதான். தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபின், மே 26 வந்த அறிவிப்பு ஒன்று, மட்ரீட் அதிகாரிகள் குப்பைத் துறைத் தொழிலாளர்கள் நிலைமை இன்னும் பாதிக்கப்படும் என்றது—இதில் 200 பணிக்குறைப்புக்கள், குறிப்பிடப்படாத ஊதியக்குறைப்பு, ஓய்வு நேர மாற்றியமைப்பு ஆகியவை உள்ளன—UGT மற்றும் CC.OO இரண்டும் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை ஜூனை 21 முதல் நடத்த அழைப்பு விடுத்தன. தொழிற்சங்கங்கள் இதன் பின் ஒரு கடைசி நேர விற்றலைச் செய்து வேலைநிறுத்தத்தை தவிர்த்தன. இதில் ஊதிய முடக்கம் மற்றும் இரு ஆண்டுகளுக்கு வேலை இழப்புக்கள் ஒத்திவைப்பு ஆகியவை அடங்கியிருந்தன.