சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greece: Sixth general strike as PASOK passes austerity package

PASOK சிக்கன நடவடிக்கையை தொடர்கையில் கிரேக்கத்தில் ஆறாவது பொது வேலை நிறுத்தம்

By Robert Stevens
9 July 2010

Use this version to print | Send feedback

வியாழனன்று கிரேக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த ஆண்டு ஆறாவது முறையாகப் பொது வேலைநிறுத்தம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தனர். GSEE எனப்படும் கிரேக்கத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, மற்றும் ADEDY எனப்படும் பொதுத்துறை ஆட்சிப் பணியார்களின் கூட்டமைப்பு இரண்டும் PASOK பால்ஹெல்லெனிக் சோசலிச இயக்கத்தின் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் கடும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

ஐரோப்பிய ஒன்றியம் (EU), மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றிடம் இருந்து ஒரு மூன்று ஆண்ட கால 110 பில்லியன் யூரோ கடனைப் பெறவதற்காக அரசாங்கம் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அரசாங்க வரவு-செலவுத் திட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.6 சதவிகிதத்தில் இருந்து 2014 க்குள் 3 சதவிகிதமாகக் குறைக்கும் விதத்தில் PASOK உறுதி கொண்டுள்ளது. இச்சிக்கன நடவடிக்கைகளின் பொருள் நூறாயிரக்கணக்கான வேலை இழப்புக்கள், சமூகநலச் சேவைகள் இழப்புக்கள் மற்றும் ஓய்வூதிய, ஊதியங்கள் 20 சதவிகிதம் குறைப்பு என்பதாகும்.

இந்த எதிர்ப்புக்கள் பாராளுமன்றத்தில் அதே தினம் பின்னர் நடக்கவிருந்த வாக்கெடுப்புடன் ஒரே நேரத்தில் நடந்தன. சட்டம் புதிய சிக்கன நடவடிக்கைகளை சுமத்துகிறது. அவற்றுள் ஓய்வூதியங்கள் மீது கடுமையான தாக்குதல்கள் அடங்கியுள்ளன. சட்டவரைவு ஓய்வூதியம் பெறத் தகுதிக்கான வயதை இப்பொழுதுள்ள 61.4 ல் இருந்து 2015க்குள் 63.5 என உயர்த்துகிறது. முன்னதாக ஓய்வு பெறும் தொழிலாளர்களக்கு அபராதம் விதிக்கிறது மற்றும் முன்கூட்டி ஓய்வு பெறும் வயது 60 என்று நிர்ணயிக்கிறது. சில பிரிவுகளில் 50 வயதில் ஓய்வுபெறக்கூடிய பெண்கள் இப்பொழுது 65 வயது வரை வேலை பார்க்க வேண்டும். ஓய்வூதிய நிதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு முன்கூட்டி ஓய்வு பெறும் தகுதி உடைய பல “கடினமான” பணிகள் அத்தகுதியில் இருந்து அகற்றப்படுகின்றன.

சட்டவரைவு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதை எளிதாக்குவதுடன் அடிப்படை ஊதியங்களையும் குறைத்துள்ளது.

அரசாங்கக் கூற்றின்படி, ஓய்வூதியங்கள் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் குறைக்கப்படும். GSEE ன் ஆய்வு இதை மறுத்து ஓய்வூதியங்கள் 12 சதவிகிதம் சரியும் என்று காட்டுகிறது.

பாராளுமன்றம் 150 க்கு 137 என்ற வாக்கு அடிப்படையில் சட்டவரைவின் முதல் வாசிப்பை புதனன்று ஏற்றது. வியாழனன்று மாலை 300 பேர் கொண்ட மன்றத்தின் PASOK பிரதிநிதிகள் 157 பேரிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் இயற்றப்பட்டது. வாக்களிப்பிற்கு முன் வந்த தகவல்கள் கிரேக்கப் பாராளுமன்றத்தில் உள்ள நிர்வாக ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் தாமதமாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது---அவர்களுடைய ஓய்வூதியங்களும் குறைக்கப்பட உள்ளன.

இத்தகைய பெரும் தாக்குதல்களை அரசாங்கம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பங்கினால் செயல்படுத்த முடிகிறது. தொழிற்சங்கங்கள் ஏழு மாதங்களில் தனித்தனியே ஆறு ஒருநாள் பொதுவேலை நிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தன. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒரு சமூகக் கட்டுப்பாட்டின் வடிவமைப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன—சீற்றத்தை வெளியிடும் வகையில், அதே நேரத்தில் PASOK அதன் தாக்குதல்களை தொடர்கிறது.

வேலைநிறுத்தம் பற்றி முன்னதாக Stathis Anestis என்னும் GSEE தலைவர் கூறினார்: “ஒவ்வொரு வாரமும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய விரும்பவில்லை. ஆனால் ஒவ்வொரு வாரமும் தங்கள் அடிப்படை உரிமைகள் அழிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு அவர்களால் வெறுமனே இருக்க முடியாது.”

ஆனால் அரசாங்கம் ஒவ்வொரு சட்டமாக இயற்ற அனுமதிக்கப்படும் போது தொழிற்சங்கங்களும் இதைத்தான் துல்லியமாகச் செய்கின்றன. அச்சட்டங்கள் பல தசாப்தங்களாகப் போராடி வெற்றி பெற்ற தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைக் கிழித்து எறிந்து வருகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளன. அது தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவை ஆதரவு கொடுத்தன—அப்பொழுதுதான் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு.

வியாழன் வாக்களிப்பிற்கு முன் பேசிய Anestis, சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு ஜனநாயக முகப்பை கொடுக்க முற்பட்டார்: “பாராளுமன்றத்தில் முழுச் சட்டத்தைப் பற்றியும் விவாதம் நடத்துவது இன்னும் ஜனநாயக முறையாக, ஒரு ஜனாதிபதி ஆணை மூலம் கொண்டுவருவதைவிட இருக்கும்.” என்றார் அவர்.

சட்டத்தில் உள்ள தாக்குதல்களின் அளவு பற்றிய குறிப்பு Eleftheros Typos ல் வந்துள்ள கருத்துக்களில் தெளிவாகிறது. “இது ஒரு கறுப்பு வியாழன் ஆகும். நாளையில் இருந்து எதுவுமே முன்போல் இராது. கிரேக்கம் மாறிக்கொண்டிருக்கிறது, தொழிலாளர்களைப் பொறுத்தவரை இடைக்கால சரிவைச் சந்திக்கிறது.” என்று அது கூறியுள்ளது.

இரு தொழிற் சங்கங்களும் தலைநகர் ஏதென்ஸில் தனி அணிவகுப்புக்களை நடத்தின. PAME எனப்படும் KKE கிரேக்க ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கத்தால் நடத்தப்பட்டது. அமைப்பாளர்களின்படி ஏதென்ஸ் எதிர்ப்புக்களில் கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்து கொண்டனர். வடக்கு நகரமான தெசலோனிகியில் 5,000 பேர் பங்கு பெற்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏதென்ஸில் ஆர்ப்பாட்டக்காரர்கள் “சமூகநலப் பாதுகாப்பு, ஓய்வூதிங்களில் கை வைக்காதே”, “செய்த கொடுமைகள் போதும்: இணைந்து செயல்பட்டால், சிக்கன நடவடிக்கையைத் தோற்கடிக்கலாம்” போன்ற கோஷ அட்டைகளை தாங்கி வந்தனர்.

வேறு சிலவற்றில், “நீங்கள் திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்”, “நாங்கள் அழவில்லை, அஞ்சுவதும் இல்லை, உங்கள் நடவடிக்கைகளைத் தடுப்போம்” என்று எழுதப்பட்டிருந்தன.

முன்னைய எதிர்ப்புக்களில் இருந்தது போலவே, கலகப் பிரிவு பொலிசார் நகர மையத்தில் முக்கியமான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தனர். பொலிஸ் பேருந்துகள் பாராளுமன்றக் கட்டிடத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டு சாலைகளை அடைத்தன.

ஒரு 54 வயதுத் தொழிலாளி, தன் ஓய்வூதியங்களை புதிய நடவடிக்கைகள் குறைப்பதைத் தடுக்கும் முயற்சியில் இப்பொழுதே ஓய்வு பெற முயலப்போவதாகக் கூறினார். “இது கொடுமை, நாம் நம்முடைய அளிப்புக்களைக் கொடுத்தோம், வரிகளைக் கொடுத்தோம், ஆனால் ஒன்றுமே நமக்குக் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் அனைத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றனர்.”

GSEE ஒரு அறிக்கையில் தொழில்துறை நடவடிக்கையில் தொழிலாளர்கள் பல வணிகங்களிலும் 80 சதவிகிதத்திற்கு மேல் பங்கு பெற்றனர் என்று கூறியள்ளது. கிரேக்கம் நெடுகிலும் போக்குவரத்து வலையமைப்புகள் பாதிப்பிற்கு உட்பட்டன.

காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நான்கு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்ததை அடுத்து ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பல பயணங்கள் இரத்து செய்யப்பட்டது அல்லது தாமதத்திற்கு உட்பட்டதை தோற்றுவித்தது. 50க்கும் மேற்பட்ட சர்வதேச விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன. ஏதென்ஸில் இரயில்கள், பஸ்கள் மற்றும் டிராலிகள், இன்னும் Pireaus-Kifissia நகர்ப்புற மின் ரயில்களும் இரத்து செய்யப்பட்டன. ஹெலனிக் ரயில்வே அமைப்பின் இரயில் போக்குவரத்துத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். கிரேக்கத்தின் பல தீவுகளுக்கும் படகு சவாரிகள் பான்ஹெலனிக் கடல் தொழிலாளர் கூட்டமைப்பு உறுப்பினர்களின் நடவடிக்கையால் தடைக்கு உட்பட்டன.

நாடு முழுவதும் பொதுப் பணிகளும் பாதிக்கப்பட்டன. மத்திய, உள்ளூர் அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டன, மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் பெயரளவு ஊழியர்களைக் கொண்டுதான் செயல்பட்டன. வேலைநிறுத்தம் மருத்துவமனைகளையும் பாதித்தது – அவசர நோய்களுக்கு மட்டும் சிகிச்சை கொடுக்கப்பட்டது. வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் சில கடைக்காரர்களும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.

24 மணி நேர நடவடிக்கையில் வேலை நிறுத்தம் செய்தவர்களில் ANA-MPA அரசாங்க ஒளிபரப்பு அமைப்புக்களில் வேலை பார்க்கும் ஏதென்ஸ் செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர்.

இந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஆதரவை சிக்கன நடவடிக்கைகளுக்குக் கொடுத்து, அவை “பரந்த அளவில் முறையாக” உள்ளன என்று கூறியது. ஆனால் புதனன்று வேலையின்மை பெப்ருவரியில் மிக அதிக அளவான 12.1 சதவிகிதத்தை அடைந்த பின்னர், இன்னும் மோசமாகக்கூடும் என்றும் எச்சரித்தது.

சர்வதேச நிதிய மூலதனம் மற்றும் கிரேக்க முதலாளித்துவத்திற்கு தலை வணங்கி நடக்கும் PASOK, EU, IMF மற்றும் European Bank கோரிய தாக்குதல்கள் அனைத்தையும் சுமத்தியுள்ளது. இந்த அடிப்படையில் நிதி மந்திரி ஜோர்ஜ் பாபகான்ஸ்டான்னிநோ கிரேக்கத்தின் பற்றாக்குறை இந்த ஆண்டு 42 சதவிகிதம் குறைந்துவிட்டது என்று அறிவிக்க முடிந்தது.

கிரேக்க மத்திய வங்கித் தகவல் தொகுப்பின்படி, பொதுச் செலவு பற்றாக்குறை ஆண்டின் முதல் பகுதியில் 11.5 பில்லியன் யூரோக்கள் என்று முந்தைய ஆண்டு இருந்த 19 பில்லியன் யூரோக்களைவிடக் குறைந்தது. 2010 ன் முதல் ஆண்டுகளில் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவிகிதம் என்று இருந்தது. இது IMF ன் இலக்கான 5.8 சதவிகிதத்தைவிடக் குறைவாகும்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகப் பங்கு, தொழிலாள வர்க்கம் அணிதிரளாமல் அது மேற்கொண்ட முயற்சி ஆகியவை இருந்தபோதிலும், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு பரந்துள்ளது. ஏதென்ஸ் நாளேடான To Vima கடந்த வார இறுதியில் வெளியிட்ட அறிக்கை PASOK க்கு ஆதரவு 23.4 சதவிகிதம்தான் என்று குறைந்துவிட்டதைக் காட்டுகிறது. கடந்த அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல்களில் இது பெற்ற பரந்தளவு வாக்கான 43.9 சதவிகிதத்துடன் ஒப்பிடத்தக்கது. எதிர்க் கட்சியான பழமைவாத புதிய ஜனநாயக கட்சிக்கான ஆதரவும் கடுமையாச் சரிந்துவிட்டது. இது 15.6 சதவிகிதம் என்பது தேர்தலின் போது இருந்த 33.4 விட அதிகம் குறைவு ஆகும். இதே கருத்துக் கணிப்பில் 26.9 சதவிகிதத்தினர் சமீபத்திய சட்டம் திரும்பப்பெற வேண்டும் என்றும், 19 சதவிகிதத்தினர் நடவடிக்கைகள் “பேரழிவை” விளைவிக்கும் என்றும் கூறியுள்ளனர்.