சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Bettencourt tax-evasion scandal rocks French government

பெத்தென்கூர் வரி தவிர்ப்பு ஊழல் பிரெஞ்சு அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது

By Alex Lantier
7 July 2010

Use this version to print | Send feedback

உழைக்கும் மக்களிடம் இருந்து பெரும் சமூக நலக் குறைப்புக்களைக் கோருகையில், பிரஞ்சு அதிகாரிகள் பில்லியனர் பெண்மணியான லிலியன் பெத்தென்கூர் இடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அவர் வரிகளை ஏய்ப்பதற்கு உதவினார்கள் என்ற வெளிப்பாடுகளைக் கண்டு பிரபலமான இகழ்வு பெருகியுள்ளது. 87 வயதான பெத்தென்கூர் இன் நிகர சொத்து மதிப்பு 17 பில்லியன் யூரோ ஆகும். இவை பெருமளவில் அலங்காரப் பொருட்கள் பெருநிறுவனமான L’Oreal ன் பங்குகளாக உள்ளன. இது அவரை பிரான்சில் செல்வம் அதிகம் படைத்த பெண்மணி என்று ஆக்கியுள்ளது.

நேற்று Mediapart செய்தி வலைத் தளம் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியை பெத்தென்கூர் விவகாரத்தில் தொடர்புபடுத்திய உட்குறிப்புக்கள் கொண்ட பேட்டிகளை வெளியிட்டது. பெத்தென்கூர் இன் முன்னாள் கணக்காளரும் தற்பொழுது விசாரணைக்கு உட்பட்டவருமான கிளேர் T. ஐ அவர் முன்னைய இரவு பொலிசிடம் சாட்சியளித்த பின்னர் அது பேட்டி கண்டது.

கணக்காளரின் சாட்சியம், பெத்தென்கூர் சட்டவிரோதமாக சார்க்கோசியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி கொடுத்தார் என்று தெரிவிக்கிறது. இது ஆளும் வர்க்கத்தில் சார்க்கோசியின் அரசியல் நிலைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சத்தைக் கொண்டுள்ளது. அதையொட்டி அவரை நிதியச் சந்தைகளும் அரசியல் ஸ்தாபனமும் கோரும் வெட்டுக்களைச் செயல்படுத்துவது இயலாதது என்று ஆக்கிவிடும். சார்க்கோசி பற்றிய கருத்துக் கணிப்பு அளவுகள் சமீபத்தில் மிகக் குறைந்ததாக 26 சதவிகிதத்தில் இருந்தன.

பெத்தென்கூர் இன் வங்கிக் கணக்குகளில் இருந்து தான் வாரம் ஒன்றிற்கு 50,000 யூரோ எடுப்பது வழக்கம் என்று கிளேர் T. விளக்கினார். “இது மருத்துவர்கள், முடிதிருத்துபவர்கள் மற்றும் சிறுபணியாளர்கள் ஆகியோருக்குச் செல்லும். ஒரு பகுதி அரசியல்வாதிகளுக்கும் செல்லும்…. வீட்டில் வாடிக்கையாக நிறைய அரசியல்வாதிகள் வருவார்கள். அவர்கள் முக்கியமாக தேர்தல் நேரத்தில் தான் வருவார்கள். ‘Dédé’ [லிலியான் உடைய மறைந்த கணவர் ஆந்திரே பெத்தென்கூர்] தன்னுடைய பணத்தை அதிகமாகவே பரப்பி வைப்பார். வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒரு பணப் பையை பெறுவர். சிலர் 100,000 யூரோ, 200,000 யூரோ என்று கூடப் பெறுவர்.”

ஒரு நாள் பெத்தென்கூர் இன் நிதி ஆலோசகர் Patrice de Maistre அவரை சற்றே அதிகப்பணமான 150,000 யூரோவை வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டுவருமாறு கூறினார். ஏன் இந்தத் தேவை என்று கேட்டதற்கு de Maistre: “இது சார்க்கோசியின் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதியளிப்பதற்கு! பிரச்சாரத்திற்கு நிதி திரட்டும் பொறுப்புடைய நபரான எரிக் வோர்த் (Eric Woerth) இடம் இதை நான் கொடுக்கப் போகிறேன், 50,000 யூரோ போதாது.” என்று விடையிறுத்தார்.

இப்பணம் அந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சார்க்கோசியின் தேர்தலுக்கு முன்பு மார்ச் 26, 2007ல் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. தான் எதற்குப் பணத்தைக் கொடுத்தாரோ, அது பெத்தென்கூர் இற்கு கிடைத்தது. Mediapart ல் முதலில் வந்துள்ள தகவலின்படி தேர்தலுக்குப் பின்னர் சார்க்கோசி அறிவித்த செல்வந்தர்களுக்கான வரிச்சலுகையில் இருந்து வரித்தள்ளுபடி மார்ச் 2008ல் லிலியான் பெத்தென்கூர் இற்கு 30 மில்லியன் யூரோ சலுகை அளித்தது.

சார்க்கோசி பல நேரமும் இரவு விருந்திற்கு வருவது வழக்கம் என்று Claire T. கூறினார். “நிக்கோலா சார்க்கோசிக்கும் அவருடைய பணப்பை கிடைத்தது. அது தரைத்தளத்தில் உணவு அருந்தும் அறைக்கு அருகே இருந்த சிறு உட்காரும் அறைகளில் ஒன்றில் கொடுக்கப்பட்டது. பொதுவாக இது விருந்திற்கு பின்னர் கொடுக்கப்படும். வீட்டில் அனைவருக்கும் இது பற்றித் தெரியும். திரு. மற்றும் திருமதி பெத்தென்கூர்க்கு சற்று காது மந்தமாக இருந்ததால், அவர்கள் இரைந்து பேசுவார்கள். நாங்கள் பல நேரமும் கேட்கக் கூடாததை கேட்போம். தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், வீட்டில் அனைவருக்கும் சார்க்கோசி பெத்தென்கூர்களைப் பார்க்க வருவது பணம் பெறுவதற்கு என்று தெரியும். அவர் வாடிக்கையாக வருபவர் ஆவார்.”

“குறைந்தபட்சம் 1995ல் இருந்து ஒருமுறைகூட பெத்தென்கூர் தணிக்கைக்கு உட்பட்டது இல்லை. மிகக் குறைந்த நிலையில் இருக்கும் வரி ஆய்வாளரைக் கூட நான் பார்த்தது இல்லை. அதை நான் உறுதியாகக் கூறமுடியும். வரி அதிகாரிகளிடம் இருந்து எந்தக் கவலையும் எங்களுக்கு வந்ததில்லை என்பதை நீங்கள் கூறமுடியும்.” என்று அவர் உறுதிபடுத்தினார்.

லிலியானுடைய மகள், François-Marie Banier அவருடைய தாயாரையும் அவருடைய காதலர் François-Marie Banier மீதும் கிட்டத்தட்ட 1 பில்லியன் யூரோ சொத்துக்கள் மீது கட்டுப்பாடு பற்றி வழக்குத் தொடுத்தபோது பெத்தென்கூர் விவகாரம் வெளிவந்தது. பெத்தென்கூர்-மெயர்ஸ், 63 வயது சமூக உயர்மட்ட புகைப்படக்காரர் “சில வலுவற்ற நிலைகளில்” இருந்து இலாபம் அடைந்து தன்னுடைய குடும்பத்தை மோசம் செய்வதாகவும் கூற்றம் சாட்டியுள்ளார். 18 மாத சட்ட வழக்கிற்குப் பின்னர் கடந்த ஜூலை மாதம் விசாரணை தொடங்கியது.

ஜூன் 16ம் தேதி Mediapart ஆனது பெத்தென்கூர்டின் தனிப்பணியாள் பனியர் மற்றும் பெத்தென்கூர்ட்டிடம் இருந்து சட்டபூர்வ நடவடிக்கை வரும் திறன் இருந்ததற்கு எதிராக இரகசியமாக கொடுத்த தகவல்களில் இருந்து சிறு குறிப்புக்களை வெளியிட்டது. இவை பெத்தென்கூர் சுவிட்ஸர்லாந்து மற்றும் சிங்கப்பூர் மற்றும் சேஷல்ஸிலுள்ள D’Arros தீவு ஆகியவற்றில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இவை பிரெஞ்சு வரிவிதிப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை.

வோர்த்திற்கு எதிராக நலன்களின் சச்சரவு என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இது வழிவகுத்தது. இப்பொழுது அவர் தொழிற்சங்கங்களுடன் சார்க்கோசியின் சமூகக் கொள்கையின் முக்கிய தளம் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்துகிறார்—அதாவது மிகவும் செல்வாக்கற்ற ஓய்வூதியக் குறைப்புக்கள் பற்றி, இதில் ஓய்வூதிய வயது இரு ஆண்டுகள் உயர்த்தப்படுவதும் அடங்கியுள்ளது. அவருடைய மனைவி ஃபுளோரன்ஸ் நவம்பர் 2007ல் பெத்தென்கூர்டின் நிதி இருப்புக்களை நிர்வகிக்கும் நிறுவனமான Clymene ல் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மாதத்திற்கு குறைந்தது 13,000 யூரோ சம்பளமும், ஆண்டு போனசாக 50,000 யூரோவும் பெற்றுக்கொண்டார்.

தனிப்பணியாளர் பதிவு செய்துள்ளவற்றில் ஒன்றில் de Maistre பெத்தென்கூர்டிடம் கூறுகிறார்: “அவரை வேலைக்கு எடுத்துக் கொண்டதில் நான் ஒரு தவறு செய்துவிட்டேன்…. இது போல் மந்திரியின் மனைவியை வேலைக்கு வைத்துக் கொள்வது ஒரு கூடுதல் புள்ளி அல்ல எதிர்மறைதான்… பிரான்சில் நீங்கள் அதிக செல்வம் உடைய பெண்மணி என்று இருக்கையில், ஒரு மந்திரியின் மனைவி உங்களுக்காக வேலை பார்க்கிறார் என்றால், செய்தித் தாட்கள் அனைத்தும், ஆம் எல்லாம் இணைந்து நிற்கின்றன என்பது போன்றவற்றைக் கூறுவார்கள். நான் அதைச் செய்யும்போது அவருடைய கணவர் நிதி மந்திரியாக இருந்தார். அவர் என்னை அவ்வாறு செய்யச் சொன்னார் என்று ஒப்புக் கொள்ளுவேன். அவருடைய மகிழ்ச்சிக்காக நான் அவ்வாறு செய்தேன்.”

இப்படி இழிந்த முறையில் அரசாங்கத்திற்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் இடையே உள்ள உறவுகள் அராசங்கம் மற்றும் அது செயல்படுத்தும் கொள்கைகளின் வர்க்கத் தன்மைக்கு சக்திவாய்ந்த நிரூபணம் ஆகும். சார்க்கோசி கோரும் சமூக நலக் குறைப்புக்கள், முதலாளித்துவ உயரடுக்கின் சலுகைகள், சுகபோக வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை பாதுகாப்பவை ஆகும்—இந்த நிதியப் பிரபுத்துவம் தொழிலாளர்களின் தேவைகள் பற்றி முற்றிலும் வெறுப்பிற்கிடமாகத்தான் உள்ளது.

சர்வதேச முதலாளித்துவத்திற்குள் வோர்த் மேற்பார்வையிடும் குறைப்புக்கள் அரசாங்கப் பற்றாக்குறைகளை குறைத்த யூரோவின் உறுதிப்பாட்டைத் தக்க வைப்பதற்கு முக்கியம் என்று காணப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம் அதிக வரம்பு என்னும் மஸ்ட்ரிக்ட் கட்டுப்பாட்டின்படி வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையைக் குறைப்பதற்கே, அதே நேரத்தில் பெத்தென்கூர் இன்னும் அவரைப் போன்ற சக பில்லியனர்களுக்கு வரிவிலக்குகளை தக்க வைப்பதற்கும் பிரெஞ்சு அரசாங்கம் சமூக நலக் குறைப்புக்களில் 100 யூரோ பில்லியனை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடைமுறைப்படுத்துவதற்கு உறுதி கொண்டுள்ளது.

முக்கிய சர்வதேச வங்கிகளும் கடன் தர அமைப்புக்களும் பிரான்சின் கடன் வாங்கும் செலவுகளை அதிகரிக்கும் வகையில் இந்த பெரும் வெட்டுக்களை அது செயல்படுத்தாவிட்டால், அதன் AAA கடன் தரத்தை அகற்றுவதாக அச்சுறுத்தியுள்ளன.

தற்பொழுது அரசாங்கம் வோர்த்திற்கு ஆதரவாக உள்ளது. குற்றச்சாட்டுகள் “எவ்வித உண்மையையும் கொண்டிருக்கவில்லை” என்று சார்க்கோசி உதறித்தள்ளியுள்ளார். இது “நம் காலத்தின் இழிவை” பிரதிபலிக்கிறது என்றார். வெட்டுக்கள் தொடரும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

“ஆண்டவனே, ஒரு தேர்தல் வரும். நாம் சீர்திருத்தங்களை செய்யமுடியாது என்றுகூறி நாம் திருப்தி அடைய முடியாது.’ நான் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்; கடைசி வினாடி வரை என் பணியைத் தொடர்வேன்” என்று அவர் அறிவித்தார்.

“நிக்கோலா சார்க்கோசி என்னிடத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது சரியே. என்னைத் தாக்குபவர்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த நான் இராஜிநாமா செய்வேன் என்ற நினைப்பிற்கு இடமில்லை.” என்றார் வோர்த்.

ஆனால் அரசாங்க அதிகாரிகள் இராஜிநாமா செய்ய வேண்டும் என்பதற்கு பெருகிய அழுத்தங்களின் அடையாளம் காணப்படுகின்றன. நேற்றைக்கு முந்தைய தினம் இரு இளநிலை மந்திரிகள் இராஜிநாமா செய்தனர்—Alain Joyandet, வெளிநாட்டு ஒத்துழைப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர், பாரிஸ் பகுதி விவகாரங்கள் தலைவர் Christian Blanc—ஒப்புமையில் சிறு அளவு நிதியத் தவறு இழைத்தவர்கள் என்ற வதந்திகளுக்கு இடையே Joyandet பொது நிதிகளில் 116,500 யூரோவை மார்ட்டினிக்கிற்கு செல்ல தனி ஜெட் விமானத்தை ஹைட்டி மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளுவதற்கு எனவும், Blanc சுருட்டுக்கள் வாங்கிய விதத்தில் 12,000 யூரோவை தன் துறைக் கணக்கில் எழுதியதற்கும்.

Le Telegramme இல் Anain Joannes கூறினார்: “இரு மந்திரிகளும் கட்டாய இராஜிநாமாவிற்கு உட்படுத்தப்பட்டது அரசாங்கமானது எரிக் வோர்த்தை காப்பாற்ற இலக்கு கொண்டதை தெரிவிக்கிறது. ஆனால் மூன்றாமவரை காப்பாற்ற இருவரைப் பலி கொடுப்பது என்பது, அதுவும் மூன்றாமவர் பெரும் அச்சுறுத்தலில் உள்ளபோது என்பது, உயர்மட்டத்தில் உள்ள பெரும் பீதியைக் காட்டுகிறது.”

முக்கிய முதலாளித்துவ எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS), காபினெட் மாற்றத்திற்கு அழைப்பு கொடுத்துள்ளது. இதையொட்டி அரசாங்கம் அதன் வெட்டுக்களை இதைவிட அரசியலில் குறைந்த சமரசம் கொண்ட குழுவின் மூலம் தொடரலாம் என. இது ஆளும் வர்க்கத்திற்குள் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் சில சமூக நலச் செலவுகள் வெட்டப்பட வேண்டும் என்ற தேவையில் உள்ள பரந்த உடன்பாட்டை பிரதிபலிக்கிறது.

PS ன் முன்னாள் செயலாளர் Francois Holland, “காபினெட் மாற்றம் தேவைதான். ஆனால் அது என் வேலை அல்ல. அது குடியரசு ஜனாதிபதியின் வேலை. ஆனால் என் வேலை தற்போதைய குழு இழிவிற்றுள்ளது என்பதைக் கூறுவது ஆகும்” என்றார்.

PS ன் செய்தித் தொடர்பாளர் Benoît Hamon, கூறினார்: “திரு வோர்த் நம் பொது நலன்களுக்கு தேவையான சீர்திருத்தங்களை செய்யும் பணி கொடுக்கப்பட்டுள்ளார் என்று நான் கூறுகிறேன், மீண்டும் வலியுறுத்துகிறேன்—இவை ஓய்வூதிய சீர்திருத்தங்கள், இந்தப் பணியை தொடர்ந்து செய்யும் நிலைமையிலோ, நெறியிலோ அவர் இல்லை.”

PS அதிகாரிகளின் தற்போதைய நிலைப்பாடு எப்படி இருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள் சமூக வெட்டுக்களைச் செயல்படுத்த அவரால் முடியவில்லை என்றால் சார்க்கோசியின் மீது இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கருதுகின்றனர் என்பதில் ஐயமில்லை. ஜனாதிபதியாக ஒரு இரண்டாவது பதவி காலம் வரை வாய்ப்பை அவர் பெறுவது பற்றி பெருகிய ஊகங்கள் வந்துவிட்டன.

பெத்தென்கூர் பற்றி வந்துள்ள தகவல்கள் உயர்மட்ட நீதித்துறை அதிகாரிகளிடம் இருந்து ஆகும். அவர்கள் பெத்தென்கூர் மீது விசாரணை நடத்துபவர்கள் Mediapart ற்கு அவர்கள் வாடிக்கையாக செய்தியைக் கசியவிடுகின்றனர். இந்த ஏடோ மிக உயர்ந்த நம்பகத் தன்மையை உடையது.

எட்வி ப்ளெனெல் தலைமையில் ஒரு செய்தியாளர்கள் குழுவினால் இது நிறுவப்பட்டது. அவர் பிரான்சின் நாளேடான Le Monde இன் ஆசிரியராகவும், Ligue Communiste Revolutionnaire (LCR) உடைய முன்னாள் உறுப்பினராகவும் இருந்தவராவர். 2007 ல் PS ஜனாதிபதி வேட்பாளர் செகோலீன் ரோயலினால் அது தொடக்கப்பட்ட பின் பகிரங்கமாக இசைவைப் பெற்றது.

பெத்தென்கூர் விசாரணைக்கு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவில் இருந்தும் கொடுக்கப்படும் ஆதரவு முற்றிலும் பாசாங்குத்தன்மையுடையதாகும். சார்க்கோசி-வோர்த் திட்டமிட்டுள்ள ஓய்வூதிய வெட்டுக்களுக்கு பரந்த ஆதரவு இருப்பது மட்டும் இல்லாமல், லிலியான் பெத்தென்கூர் இன் அரசியல் வாழ்வு, அவருடைய சொத்துக்களின் தோற்றம், அரசியல் ஸ்தாபனம் முழுவதும் அவர் கொண்டுள்ள தொடர்புகளை பற்றி வெளியே கூறுவது தவிர்க்கப்பட வேண்டிய தேவை என்பது பற்றி ஒற்றுமை உள்ளது. அதிகமாக அறியப்பட்டாலும், இந்த விவரங்கள் தற்போதைய ஊழலில் செய்தி ஊடகத்தினால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளன.

L’Oreal ஐ நிறுவிய லிலியனின் தந்தை Eugene Schueller, பாசிசக்குழு La Cagoule க்கும் 1930 களின் இரண்டாம் பகுதியில் நிதி அளித்தார். La Cagoule பிரான்சில் யூத மற்றும் கம்யூனிஸ்ட் இலக்குகளுக்கு எதிரான அதன் வன்முறைத் தாக்குதலால் பரந்த முறையில் அஞ்சப்பட்டதுடன், வெறுக்கவும்பட்டது. இவற்றுள் யூத ஆலயங்கள் மீது குண்டுவீச்சு, சோவியத் அதிகாரிகளதும், பாசிச சர்வாதிகாரி பெனிடோ முசோலினி இடம் இருந்து தப்பி ஓடி வந்த இத்தாலியர்கள் ஆகியோருரின் படுகொலையும் அடங்கும். ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் போது அது ஜெனரல் பிரான்ஸிஸ்கோ பிராங்கோவின் பாசிச எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் கொடுத்தது.

இரண்டாம் உலகப் போரின் போது La Cagoule பிரான்சில் நாஜி ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் அதன் உறுப்பினர்களில் சிலர் நாஜி ஜேர்மனி தோற்கும் என்று தெரிந்தவுடன் விசுவாசத்தை மாற்றிக் கொண்டனர். La Cagoule, கிழக்கு முன்னணி எல்லையில் சோவியத்திற்கு எதிராக நாஜிக்களுடன் சேர்ந்து போரிட தன்னார்வ சக்தி ஒன்றான Legion res Volontaires Francais என்பதை நிறுவ உதவியது.

1930 களில் La Cagoule தீவிரமாக இருந்த போது Schueller ஐ சந்தித்த சில இளைஞர்கள் பின்னர் பிரெஞ்சு அரசியலில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். இவர்களுள் அவருடைய வருங்கால மருமகனான ஆந்திரே பெத்தென்கூரும் இருந்தார். அவர் நவம்பர் 2007ல் இறந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக PS ன் வருங்காலத் தலைவரும் பிரான்சில் 1981 முதல் 1995 வரை ஜனாதிபதியாக இருந்த பிரான்சுவா மித்திரோனும் இருந்தார்.

நாஜி ஆக்கிரமிப்பின் போது, ஆந்திரே பெத்தென்கூர் நாஜிக்கள் நிதியளித்த செய்தித்தாள் La Terre Francaise (பிரெஞ்சு நிலம்) என்பதில் எழுதி வந்தார். 1941 ஈஸ்டர் பதிப்பில், அவர் யூதர்களை “பாசாங்குத்தனமான பாரிசிக்கள் (Pharisees - a member of an ancient Jewish sect, distinguished by strict observance of the traditional and written law, and commonly held to have pretensions to superior sanctity) என்றும்” “அவர்கள் இனம் எல்லாக் காலத்திலும் ஏசுவைக் கொன்ற குருதியின் கறையைக் கொண்டிருக்கும்” என்றும் கண்டித்தார். இந்த எழுத்துக்கள் பின்னர் பதவி நீக்கப்பட்ட L’Oreal குழு உறுப்பினர் Jean Frydman ஆல் 1994ல் வெளியிடப்பட்டன. பெத்தென்கூர் அவற்றை ஒப்புக்கொண்டு இந்த எழுத்துக்கள் அவருடையது தான், ஆனால் “இளமையின் தவறுகளால் நேர்ந்தவை” என்றார்.

அவர் தான் பிரெஞ்சு எதிர்ப்பு அணியில் 1943ல் சேர்ந்ததாகக் கூறினார் ---குறிப்பாக அப்பொழுது விஷ்ஷி அதிகாரியாக இருந்த மித்திரோன் வழிநடத்திய கருக்குழுவில். தான் மித்திரோன் லண்டனுக்கு நவம்பர் 1943ல் விமானம் மூலம் தப்பிச் செல்ல உதவியதாகவும் பெத்தென்கூர் கூறினார்.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் டு கோலின் கீழ் பெத்தென்கூர் பணி புரிந்தார். பின்னர் அரசியலில் முக்கிய பங்கைத் தொடர்ந்தார். 1950 களில் இருந்து 1970கள் வரை தொடர்ந்த பழமைவாத, சமூக ஜனநாயக அரசாங்கங்களில் அவர் உயர் பதவிகளை வகித்தார். 1995 வரை நோர்மண்டியின் செனட்டர் என்ற சட்டசபை பதவியையும் வகித்தார்.

நாஜி ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலையை தொடர்ந்து அவருடைய சாட்சியம் —அத்துடன் மித்திரோன் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் Jacques Sadoul ஆகியோருடையதும்— Schueller நாஜிக்களுடன் ஒத்துழைத்தார் என்பதற்காக பெற இருந்த தண்டனையை தவிர்க்க உதவியது; இத்தீர்ப்பு L’Oreal ல் அவருடைய பங்குகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வழி செய்திருக்கும். இன்றளவும் இப்பணம் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்கு தொழிலாள வர்க்க எதிர்ப்புக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்கச் செலவழிக்கப்படுகிறது