சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The new normal

புதிய வாடிக்கை

Alex Lantier
14 July 2010

Use this version to print | Send feedback

கிரேக்கக் கடன் நெருக்கடியினால் உந்துதல் பெற்ற உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பீதி ஒரு 750 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய பிணையெடுப்பு என்ற அறிவிப்பை தொடர்ந்து நின்றுபோன பின்னர், இந்தப்பிணையெடுப்பு ஐரோப்பிய, சர்வதேச அரசியலில் ஒரு தீவிர மறுதகவமைவிற்கான நிகழ்வு என்பது தெளிவாயிற்று. பொருளாதார நெருக்கடி ஒரு தற்காலிக சிதைவு என்ற கூறப்பட்ட கருத்துக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. மாறாக, தொழிலாள வர்க்கம் தொடர்ந்து வறிய நிலையில் தள்ளப்படுவது என்பது ஒரு “புதிய வாடிக்கையாகி” உள்ளது.

கிரேக்க மற்றும் சர்வதேசக் கடன்களுக்கு எப்படி நிதியளிப்பது என்பது பற்றி ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே கடுமையான உட்பூசல்களையும், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பற்றிய அச்சங்களினால் பங்குச் சந்தையில் விரைவில் விற்பனைகளை தடுத்து நிறுத்தும் விதத்திலும் இப்பிணையெடுப்பு வடிவமைக்கப்பட்டது. யூரோவையே பிரான்ஸ் கைவிடக்கூடும் என்ற அச்சறுத்துல்களுக்கு பின்னர் இது ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் Jean Claude Trichet ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிக அழுத்தம் நிறைந்துவிட்டது என்று எச்சரித்தார்.

ஆளும் வர்க்கம் பொது நாணயத்தை கலைத்துவிடுவதில் இயல்பாக எழும் ஆபத்துக்களான ஐரோப்பிய வணிகம், ஜேர்மனிய ஏற்றுமதிகள் சரிவு, பிராங்கோ-ஜேர்மனியப் போர் வரக்கூடிய வாய்ப்புகளை சிந்தித்து, தொழிலாளர்கள் மீது யூரோவைக் காப்பாற்றுவதால் வரும் சுமையை சுமத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

பிணை எடுப்பை திருப்பிக் கொடுப்பதற்கான நிதி, பெரும் வங்கிகளுக்கு பெரும் இலாப பணங்களை அள்ளிக் கொடுக்கும் மற்றொரு செயல், உண்மையில் முன்னோடியில்லாத வகையில் சமூகநலக் குறைப்புக்களில் இருந்துதான் பெறப்படும். இந்த முடிவிற்கு ஆதரவை மே மாதம் நிறுவப்பட்ட பிரிட்டனின் கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் அரசாங்கம் கொடுத்துடன், கடந்த மாதம் டொரோன்டோவில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய சக்திகளால் முறையாக ஒப்புக் கொள்ளவும் பட்டது. G20 அறிக்கை, “தீவிர நிதிய சவால்களுக்கு உட்பட்டுள்ள நாடுகள் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்த வேண்டும்” –அதாவது வரவு-செலவுத் திட்டக் குறைப்புச் செய்ய வேண்டும்— என்று அறிவித்தது.

சிக்கன நடவடிக்கைகளானது கிரேக்க, ஸ்பெயின் நாட்டின் சிதைந்த பொருளாதாரங்களுக்கும் அப்பால் விரிவடைந்துள்ளன. அவ்விரு நாடுகளிலும் ஒவ்வொரு சில வாரங்களிலும் தொழிலாளர்கள் புதிய குறைப்புக்களை எதிர்கொள்கின்றனர். இவை மேற்கத்தைய உலகம் முழுவதும் சமூக வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்தை உடையன.

பிரிட்டனில் 85 முதல் 100 பில்லியன் பவுண்டுகள் வெட்டுக்கள் என்பது 1.3 மில்லியன் வேலை இழப்புக்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மிகப் பெரும் வீடற்ற நிலை, உள்கட்டுமான பராமரிப்பு, பொதுப் பணிகள் பராமரிப்பு வீழ்ச்சி மற்றும் 25 முதல் 40 சதவிகிதம் வரை உள்ளூராட்சி வரவு-செலவுத் திட்டக் குறைப்பு ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மனி 80 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களைத் திட்டமிட்டுள்ளது.

பிரான்சில் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மிக அதிக ஓய்வூதியத் வெட்டுக்களை திட்டமிட்டிருப்பதுடன் உள்ளூர் அரசாங்க வரவு-செலவுத் திட்டத்திலும் 10 சதவிகிதக் குறைப்பிற்கு திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் செல்வாக்கு தொடர்புடைய லிலியன் பெத்தன்கூர் போன்ற பில்லியனர்களுக்கு 30 மில்லியன் யூரோக்களை வரிச்சலுகைகளாக வழங்குகிறார்.

இக்கொள்கை மாற்றம் காட்டுவது அமெரிக்க அரசாங்கம் சமீபத்தில் வேலையின்மை நலன்களை விரிவாக்க மறுத்துள்ளதின் முக்கியத்துவத்திலும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது—இந்த முடிவு பல மில்லியன் தொழிலாளார்களை மிக வறிய நிலைக்குத் தள்ளும். மாறாக, ஒபாமா நிர்வாகம் அதன் தேசிய ஏற்றுமதி முயற்சியை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இது கடந்த ஜனவரியில் ஜனாதிபதியின் காங்கிரசுக்கு ஆற்றிய வருடாந்த உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை அமெரிக்க ஏற்றுமதிகளை இருமடங்காக அதிகரிக்கும் நோக்கம் கொண்டுள்ளது. அதற்கு அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியங்களில் மிருகத்தன குறைப்புடன், அவர்களுடைய உற்பத்தித்திறன் அதிகரித்தலும் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நிலைமையானது சீனா, இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் உள்ள வறிய தொழிலாளர்களுடன் போட்டியிடுமாறு கட்டாயப்படுத்தப்படும்.

தங்கள் கொள்கைகள் வெகுஜன தொழிலாள வர்க்க எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்பதை ஆளும் வர்க்கம் உணர்கிறது. எனவே அவர்களுடைய சிக்கன நடவடிக்கைகளானது சர்வாதிகாரம், போர் ஆகியவற்றை முறைப்படுத்தும் செய்தி ஊடகத்துடன் சேர்ந்துள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்கள், தற்காலிகமாக ஐரோப்பாவிற்குள் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தவிர்க்கும் என்றாலும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் சீனா போன்ற எழுச்சி பெறும் நாடுகளுக்கும் இடையே அழுத்தங்களை அதிகரிக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் சிக்கன நடவடிக்கைகள் மேலை நாடுகளின் பொருளாதார, மூலோபாய வலிமையை ஒப்புமையில் புதிதாகத் தொழில்துறை வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளுடன் குறைப்பதுடன், நடைமுறையில் உள்ள சர்வதேச ஒழுங்கையும் அச்சுறுத்தும்.

பைனான்ஸியல் டைம்ஸ் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப், விரைவில் அரிப்பிற்கு உட்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை தவிர, "மேற்கு அதன் உச்சக்கட்டத்தை குறைந்தபட்சம் தமது நிதிய பலத்தை பயன்படுத்தி அரசு அதிகாரங்களை ஆதிக்கம் செலுத்தி தமக்கு கூடுதல் இலாபத்தை அடையும் அளவிற்கு வந்துவிட்டது--இன்னும் பகிரங்கமாகக் கூற வேண்டும் என்றால், உலகின் இயற்கை, மனித இருப்புக்களை கொள்ளை அடித்ததின் மூலம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்சூழ்நிலையில், மேற்கு நிதியப் பிரபுத்துவத்தின் தனிச் சலுகைகளைக் பாதுகாப்பதற்கு இராணுவச் சக்தி பயன்படுத்தப்படுவது பெருகிய முறையில் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்புடைத்ததாகத் தெரிகிறது. சமீபத்திய International Herald Tribune கட்டுரை ஒன்று இன்னும் கூடுதலான ஐரோப்பிய இராணுவச் செலவுகள் வேண்டும் என்று கோருகிறது. பிரான்சின் வெளிநாட்டு உறவு வல்லுனர் Therese Delpech, சீனாவின் உலகம் முழுவதும் எழுச்சி பெறும் பொருளாதார முக்கியத்துவத்தினால் ஆசியா ஒரு “மூலோபாயத் தலைவலி” என்று கருதப்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளார். ஒரு அமெரிக்க—சீன மோதல் வந்தால், ஐரோப்பா பெய்ஜிங்கிற்கு எதிராக போர்தொடுக்கத் தயாராக இருக்க வேண்டும், “மத்திய கிழக்கில், உதாரணத்திற்கு, சீனாவிற்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படும் கடல்வழிப் பாதைகளை தடுப்பதற்கு உதவுவதற்கு ” என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு எதிர்ப்பு, வெளிநாட்டு எதிர்ப்பு இரண்டுமே வன்முறைத் தாக்குதலுக்கு இலக்காக வேண்டும்—இதுதான் டொரோன்டோவில் G20 எதிர்ப்புக்களுக்கு பொலிஸ் காட்டிய அடக்குமுறையில் வெளிப்பட்டுள்ளது. அதேபோல் கொழும்பில் பொலிஸ் பெருமளவு மக்களைக் கைது செய்திருப்பது, தாய்லாந்து இராணுவம் மே மாதம் சிவப்புச் சட்டை எதிர்ப்பாளர்களை படுகொலை செய்தது ஆகியவற்றிலும் வெளிப்பட்டுள்ளது. இந்த அடக்குமுறையின் அடிப்படையில் இருப்பது அத்தகைய நடவடிக்கைகள் தான் ஆளும் வர்க்கங்களை அவற்றின் சலுகைகளை தக்க வைத்துக்கொள்ள உதவும் என்னும் பெருகிய உணர்வைக் காட்டுகின்றன.

சமீபத்தில் Globe and Mail கருத்து ஒன்றில், தலையங்கம் எழுதும் Neil Reynolds ஜனநாயகம் “அமைதியான முறையில்” சமூக நல அரசு முறையை அகற்ற முடியுமா எனக்கேட்டு, விடையையும் கொடுக்கிறார்: “இல்லை, அது முடியாது.” இத்தாலியை குறித்துக்காட்டி அவர் அரசாங்கக் கடனை குறைத்து, அரசாங்கச் செலவையும் குறைக்க முடிந்த வரலாற்றின் ஒரே சக்தி 1922ல் அதிகாரத்தை எடுத்துக்கொண்ட முசோலினியின் பாசிச ஆட்சி தான் என்று கூறியுள்ளார்.

இத்தகைய கருத்துக்கள் முதலாளித்துவத்தின் ஆழ்ந்த அரசியல் மற்றும் அறநெறி நெருக்கடியை உயர்த்திக் காட்டுகின்றன. 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் தோற்றுவித்த அதே வறுமை, குருதி கொட்டுதல் என்பதைக் கட்டவிழ்க்கும் முறை என்று தான் இது அம்பலமாகிறது. சமூக நலக் குறைப்புக்களைச் செய்து, போருக்கு தயாரிப்பதற்கான உந்துதலில் ஆளும் வர்க்கங்கள் அரசாங்கங்களை, ஆளும் வர்க்கத்தின் பொருள்சார் நலன்களைச் செயல்படுத்தும் ஒரே நோக்கத்தைக் கொண்ட ஆயுதமேந்திய ஆட்களின் அமைப்புக்களின் தொகுப்புத்தான் என்ற மார்க்சிச வரையறையின் தூய விளக்கமாக வேதியல் முறையில் மாற்றுகின்றன.

இதுவரை தொழிலாளர்கள் சமூகப் பிற்போக்குத்தனம் மற்றும் போருக்கு கூட்டு எதிர்ப்பைக் காட்டுவதில் இருந்து தடுக்கப்படுவதைத்தான் கண்டுள்ளனர். இதற்குக் காரணம் இருக்கும் அரசியல் அமைப்புக்கள் மத்தியதர மோசடிக்காரர்கள் அல்லது வலதுசாரி தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரால் வழிநடத்தப்படுவதால்தான். அவர்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான, சோசலிசத்திற்கு ஆதரவான போராட்டத்திற்கு விரோதம் காட்டுபவர்கள். கிரேக்கம் அல்லது பிரான்சில் நடக்கும் ஒருநாள் “பொது வேலைநிறுத்தங்கள் கூட” ஒருவித அரசியல் நிழல் குத்துச்சண்டைதான். இதில் தொழிற்சங்க அதிகாரிகளால் மக்கள் எதிர்ப்பு கட்டுப்படுத்தப்பட்டு, சிதைக்கப்படுகின்றன —பின் அவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தி, குறைப்புக்களைச் செயல்படுத்த உதவத் தயாராகின்றனர்.

தொழிலாளர்கள் சமூகப் பிற்போக்குத்தனம் மற்றும் போர் என்னும் ஆளும் வர்க்கக் கொள்கைகளை இந்த துரோக அமைப்புக்களில் இருந்து முறித்துக் கொண்டு சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகரப் போராட்டம் நடத்துவதின் மூலம்தான் எதிர்க்க முடியும்.