சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Hundreds of school rebuilds scrapped by British government

நூற்றுக்கணக்கான பள்ளிகள் மறுகட்டமைக்கப்படுவது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைவிடப்படுகிறது

By Tania Kent and Liz Smith
16 July 2010

Use this version to print | Send feedback

கன்சர்வேடிவ் கட்சியின் கல்வி மந்திரி மைக்கேல் கோவ் ஜூலை 5ம் தேதி முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்தின் 55 பில்லியன் பவுண்டுகள் பள்ளிக் கட்டிடங்கள் திட்டத்தை இரத்து செய்து விட்டதாக அறிவித்தார். புதிய கட்டிடங்கள், வசதிகள் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான இடைநிலை, ஆரம்ப பள்ளிகளின் நம்பிக்கைகள் தகர்ந்து போயின.

கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் கூட்டணி 715 புதிய பள்ளிகளுக்கான திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டது. மேலும் இன்னும் 123 கல்விக் கூடங்கள் பற்றிய நிலைப்பாடு ஒவ்வொன்றாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த முடிவு பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கட்டமைப்புத் தொழில்துறையிலுள்ளவர்கள் என்று பலரின் சீற்றத்தையும் இகழ்வுணர்வையும் தூண்டியுள்ளது. அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு என்பது தொடர்ந்து கட்டமைப்பு நடக்க உள்ள பள்ளிகள் அல்லது திட்டம் அகற்றப்பட்டுவிட்ட பள்ளிகள் பற்றி அறிக்கையில் 25 தவறுகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் மறுகட்டமைப்பு தொடரும் என்று தொடக்கத்தில் கூறப்பட்ட டஜன் கணக்கான பள்ளிகள் சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாறு நடக்காது என்பதைக் கண்டன. தவறுகள் பற்றி அவமானகரமான மன்னிப்பை பகிரங்கமாக கேட்கும் கட்டாயத்திற்கு பாராளுமன்றத்தில் கோவ் தள்ளப்பட்டார். இன்னும் முக்கியமான முறையில் அவர் தன்னுடைய முடிவில் இருந்து மாறவில்லை.

கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் கூட்டணியின் குறுகிய கால ஆட்சியில் இது மூன்றாவது பெரிய கல்வித்துறை குறுக்கீடு ஆகும். BSF எனப்படும் வருங்காலத்திற்கான பள்ளிகள் கட்டும் திட்டத்தை கைவிட்டமை பள்ளிகளில் மூலதன முதலீடுகள் பில்லியன் கணக்கை உடனடியாகக் கைவிடுவதாகும். ஆனால் இது நூற்றுக்கணக்கான அரச நிதி பெறும் பள்ளிகள் மூடப்பட்டு அவற்றிற்குப் பதிலாக கல்விக் கூடங்கள், “இலவசப் பள்ளிகள்” கொண்டுவரும் திட்டத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளது.

BSF என்பது தொழிற் கட்சி அரசாங்கம் 2004 முதல் 2023 வரை தனியார் நிதி முன்முயற்சியின் கீழ் 3.500 இடைநிலைப் பள்ளிகளை மறுகட்டமைத்தல் அல்லது புது வசதிகள் கொடுத்தல் என்ற திட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டது. 2007ல் இத்திட்டம் 1.9 பில்லியன் பவுண்டுகள் கூடுதலான திட்டத்துடன் ஆரம்ப பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. உலகிலேயே பெரும் விழைவு கூடிய, மிகப் பெரிய பள்ளிக் கட்டிடத் திட்டம் என்று பறைசாற்றப்பட்டது. ஆனால் இன்றுவரை 180 மறுகட்டமைப்புக்கள் தான் நடந்துள்ளன, இன்னும் ஒரு 231 பள்ளிகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பொது நிதிகள் மாபெரும் முறையில் தனியார் துறைக்கு மாற்றப்பட்டுள்ளன. கட்டிடங்களும் அவை தொடர்புடைய நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பெரும் பண மழையைப் பெற்றன. திட்டத்திலோ அதிக அதிகாரத்துவமும் பெரும் கூடுதல் செலவுகளும் ஏற்பட்டிருந்தன. பல பள்ளிகளுக்கு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை ஆகின்றன. இதன் பின் பல ஆலோசகர்கள், வணிகர்கள் என்று ஏலம் விட்டு உடன்பாடு காண அவகாசம் பிடிக்கிறது.

கூட்டாட்சி அரசாங்கம் இந்தத் திட்டத்தை நீக்குவதற்கே காரணப்படுத்த பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் இப்படி வெட்டு நடத்துவது பல பள்ளிகளை பழுதுகளுடன் இருக்க வைக்கும். நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் சிதைந்த நிலையில் உள்ள பள்ளிகளை பட்டியலிடமுடியும். அதே போல் நீண்டகால பழுதுநிலை, அதிக மாணவர்கள் நிறைந்து, ஆபத்தான தன்மையில் இருக்கும் பள்ளிகளையும் பட்டியலிட முடியும்.

பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாமில் உள்ள சாண்ட்வெல்லில், பல பள்ளிகள் பொறுக்க முடியாத நிலைமையில் உள்ளன. 1857ம் ஆண்டு 500 குழந்தைகளுக்காகக் கட்டப்பட்ட Perryfields High School இப்பொழுது 1,000 மாணவர்களைக் கொண்டு, 1970 களில் இருந்து தற்காலிக வகுப்பறைகளை பயன்படுத்துகிறது. இப்பகுதியில் உள்ள மற்றொரு பள்ளி 25 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் தற்காலிக வகுப்பறைகளை 40 ஆண்டுகளாக கொண்டுள்ளது.

தன்னுடைய சொந்த தொகுதியில் உள்ள ஏராளமான மக்களையே அரசாங்கம் கோபப்படுத்தியுள்ளது. இதில் டோரி மற்றும் லிபரல் டெமக்ராட் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். நிதிய நெருக்கடியினால் ஏற்கனவே பெரும் பாதிப்பிற்கு உட்பட்ட பல கட்டமைப்பு நிறுவனங்கள் தங்கள் வேலைகளில் 70 சதவிகிதம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றன. லிவர்பூல் நகரவை 1,500 முழு நேர வேலை இழப்புக்களும், இதன் விளைவாக அதில் 1,000 கட்டமைப்புப் பணிகள் அடங்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

சிக்கன நடவடிக்கைப் பொதி கட்டவிழ்த்துவிடுவது பற்றி ஆதரவு கொடுக்கும் வலதுசாரி செய்தி ஊடகம் கூட அவருடைய பெரும் தவறினால் முக்கிய பிரச்சார வெட்டுக்களை சிக்கல்படுத்தி விட்டதாக கோவின் மீது சீற்றம் கொண்டுள்ளன.

ஜூலை 10ம் திகதி Sunday Telegraph “கடந்த வார இறுதியில் பல தொடர்ச்சியான கூட்டங்களில் திருவாளர் கோவ் பல முறையும் உயர்மட்ட அதிகாரிகளால் BSF ன் 55 பில்லியன் பவுண்டுகள் பள்ளிக் கட்டிடங்கள் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரு சுரங்கம் போன்றது என்றும் ஒரே முடிவில் அகற்றப்பட்டு விடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

“திட்டத்தை விடும் தன் விருப்பம் பற்றி மட்டுமே மந்திரி அறிவிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டார்—அதேபோல் உள்ளூர் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை பேச்சுக்களையும் தொடக்குவதாக அறிவித்திருக்க வேண்டும்.”

இச்செய்தித்தாள் மேற்கோளிட்ட ஒரு பெயரிடப்படாத உள் அதிகாரி, “அவர் திட்டமிட்டதை செயல்படுத்த வேண்டாம் என்று மைக்கேல் வலுவாக எச்சரிக்கப்பட்டார்—ஆனால் அவருடைய உறுதியை எவரும் மாற்றவில்லை. தவறுகள் அனைத்துடனும் பட்டியல் அவசரமாக வெளியிடப்பட்டது, இதன் விளைவை நாம் அனைவரும் பார்க்கிறோம்” என்றார்.

BSF ஐ அகற்றும் அறிவிப்பு வந்த தினம் கூட பட்டியலின் பல மாதிரிகள் கல்வித்துறை செயலரால் இன்னமும் தயாரிக்கப்பட்டு வந்தன, “எந்தப் பள்ளிகளில் பணி நிறுத்தப்படும் என்பதற்கான அளவு கோல்கள், எவை மறு பரிசீலனைக்கு உட்படும், இவை தொடர்ந்து செயல்படுத்தப்படலாம் போன்றவை மக்கள் மத்தியில் அறிவிப்பதற்கு சில மணி நேரம் முன்புதான் முடிவெடுக்கப்பட்டது” என்று செய்தித்தாள் குறைகூறியுள்ளது.

இதற்கு மறுநாள் செய்தித்தாளின் தலையங்கம், “பற்றாக்குறையின் அளவைக் காணும்போது, செலவினங்கள் இயன்றளவு குறைக்கப்பட வேண்டும் என்பது தவிர்க்கப்பட முடியாது. இந்த செல்வாக்கற்ற, ஆனால் தேவையான பணியில் இருந்து பின்வாங்க தயாராக இல்லாதது பற்றிக் கூட்டணி பாராட்டப்படத்தான் வேண்டும்” என்று வலியுறுத்தியது.

இதன் பின்னர் அது எச்சரித்தது, “வெட்டுக்கள் முக்கியம் என்றாலும், அவற்றை தொடர்ந்து சீற்றங்கள், கசப்பு உணர்வு, எதிர்ப்புக்கள் இருந்தாலும்— இந்த வார நிகழ்வுகள் தொழிற் கட்சி இயன்ற அளவு அவற்றை கட்சி அடிப்படை காரணத்தில் அதிகரிக்கும் என்பதை உறுதிபடுத்துகின்றன. இச்சூழ்நிலையில், மந்திரிகள் தங்கள் வாதங்களும் சான்றுகளும் உறுதியாக உள்ளனவா என்பதை திட்டத்தைப் பற்றி பகிரங்கமாக்கும் முன் கவனமாக இருந்திருக்க வேண்டும். கூட்டணியின் திட்டம் —அதில் திருவாளர் கோவின் பங்கு—மிக முக்கியம், ஆனால் ஆபத்திற்கு உரியது, எளிதில் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடக்கூடாதது.”

குழந்தைகள் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் முடிவு அல்லது மில்லியன் கணக்கானவர்கள் பாதிப்பிற்கு உட்படுவதை பற்றி அக்கறை இல்லை. எப்படி மிக சீற்றம் நிறைந்த, பரந்த பொது எதிர்ப்பை தூண்டாமல் சிக்கன நடவடிக்கையை சுமத்துவது என்பதுதான் கவலை. ஜூலை 8ம் திகதி Economist ஆனது கோவிற்கு “கொடுக்கும் தகவலை எளிதாக்க வேண்டும்” ஆனால் வெட்டுக்களை செயல்படுத்த வேண்டும்” என்பது பற்றிய ஆலோசனையை மீண்டும் கொடுத்தது.

திட்டத்தை அகற்றுவது என்பது ஏப்ரல் மாதம் கூட்டணியின் கல்வித்துறைக் கொள்கைகளின் மத்திய நிலைப்பாட்டை ஒட்டி கருதப்பட வேண்டும்— “இலவசப் பள்ளிகள்” திட்டம், கல்விக்கூடங்களின் பெரும் விரிவாக்கம் அவற்றில் இருந்தன. கிட்டத்தட்ட 700 குழுக்கள் “இலவசப் பள்ளிகள்” திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன. இருக்கும் அரசாங்கப் பள்ளிகளின் வரவு-செலவுத் திட்டத்தைக் குறைத்தல், ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தல், பள்ளிகளை மூடல் என்ற விதத்தில் பணம் பெறப்பட்டு, இப்பள்ளிகள் கட்டப்பட்டுப் பராமரிக்கப்படும்.

உள்ளூர் ஆட்சியின் கட்டுப்பாடு மற்றும் தேசிய பாடத்திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் வராத இலவசப் பள்ளிகள் அருகிலுள்ள அரசாங்க பள்ளிகளுடன் போட்டியிட்டு அவற்றை மூடும் கட்டாயத்திற்கு தள்ளும். அனைத்துப் பள்ளிகளும் “இலவசம் அல்லது கல்விக்கூடம்” என இருக்க வேண்டும் என்று அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. மொத்தத்தில் 1,700 கல்விக்கூடங்கள் அடுத்த சில ஆண்டுகளில் திறக்கப்படும். இவை பெருகிய முறையில் தனியாரால் நடத்தப்படும்.

அனைத்து திட்ட விதிகளும் இலவசப் பள்ளியை நடத்துவதற்காக அகற்றப்பட்டுவிடும். அவை அலுவலகங்களில், உபயோகத்தில் இல்லாத இடிந்த கிடங்குகள், கார் நிறுத்தும் இடங்கள் ஆகியவற்றில் அமைக்கப்படலாம். இலவசப் பள்ளியை ஆரம்பிக்க விரும்பும் அமைப்புக்கள் இருக்கும் கட்டிடங்களை “பயன்பாட்டு மாற்றத்திற்காக” திட்ட மாற்ற அனுமதி கோர வேண்டிய தேவையில்லை. கட்டிட விதிகள் முறையும் இதையொட்டி அகற்றப்படுகின்றன.

50 மில்லியன் பவுண்டுகள் ஆரம்ப மூலதன நிதியளிப்பு (நான்கு அல்லது ஐந்து பள்ளிகளை மட்டும் தோற்றுவிக்கும்) அரசாங்கப் பள்ளிகளுக்கு பாடத்திட்டத்தின் இந்த முக்கிய கூறுபாட்டிற்கு ஆதரவு தருவதற்கு ஒதுக்கி வைத்துள்ள IT வரவு-செலவு திட்டத்தில் வெட்டுக்கள் மூலம் சேகரிக்கப்படும். ஆரம்பத் திட்டமானது இலவசப் பள்ளி உணவு வரவு-செலவு திட்டத்தில் இருந்து நிதியை எடுத்தல் என்பது ஆகும். இது சீற்றத்தைக் கிளப்பியதால் திரும்பப் பெறப்பட்டது. BSF வரவு-செலவு திட்டத்தின் சில கூறுபாடுகள் இப்பள்ளிகளுக்கு திருப்பப்படும். அவை நிலத்தை வைத்திருக்கும் தனியார் துறை அறக் கட்டளையாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்குமே அன்றி, அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்காது.

தொழிற் கட்சியின் கீழ் வந்த கல்வியை தனியார் மயமாக்குதல் என்பது இன்னும் விரிவாக்கப்படுவதுதான் கூட்டணியின் கல்விக் கொள்கை ஆகும். இது இலவச, விரிவான கல்வி பற்றிய கருத்துக்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும். பிரிட்டனுக்குள்ளேயே பரந்த பிரிவுகளின் சீற்றத்தையும், விரோதப்போக்கையும் இந்த நடவடிக்கைகள் எதிர்கொண்டுள்ளன என்றாலும், கற்பிப்பவர்களின் சங்கங்கள் இந்தத் தாக்குதலுக்கு எதிராக உள்ளூர் கூட்டங்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துதல் போன்றவற்றை செய்ய மறுத்து விட்டன. அதற்குப் பதிலாக பள்ளி வாரியாகக் கணக்கெடுத்து எத்தகைய நடவடிக்கை வேண்டும் என்பது பற்றியும், கடிதம் எழுதுதுல், விண்ணப்பங்கள் அனுப்புதல், டோரிக் கட்சி மாநாட்டில் செல்வாக்கு குழுக்களை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைத்தான் மேற்கோண்டுள்ளது.