சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மெய்யியல்

A materialist examination of human consciousness

மனித நனவைப் பற்றிய ஒரு சடவாத ஆய்வு

டேனியல் சி. டென்னெட்டால் எழுதப்பட்ட Consciousness Explained என்ற புத்தகத்தை நான்சி ரூஸ்ஸெல் மதிப்பாய்வு செய்கிறார்

20 January 1999

Use this version to print | Send feedback

1991இல் பிரசுரிக்கப்பட்ட டேனியல் சி. டென்னெட்டின் Consciousness Explained என்ற புத்தகம், பெரும்பான்மையினரின் விவாதத்திற்கு மையமாக இருந்துள்ளது. சாதாரண மக்களையும், விஞ்ஞானிகளையும் கருத்தில் கொண்ட இந்த புத்தகம் நன்கு விற்பனையாகி இருப்பதுடன், அந்த ஆண்டின் சிறந்த 10 புத்தகங்களில் ஒன்று என்றும் நியூயோர்க் டைம்ஸால் விவரிக்கப்பட்டிருந்தது.

Tufts பல்கலைக்கழகத்தின் நுண்ணறிவுசார் ஆய்வுகளுக்கான மையத்தின் (Centre for Cognition Studies) இயக்குனரான டென்னெட், Brainstorms மற்றும் The Mind's I ஆகியவை உட்பட பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். மெய்யியல், உயிரியியல், உளவியல் மற்றும் நரம்பியல் ஆகியவற்றில் பங்களிப்புகளை அளித்திருப்பதுடன், மனம் பற்றிய ஒரு கலப்பு-துறை ஆய்வைப் ( cross-disciplinary inquiry) பிரபலப்படுத்தவும் இவர் உதவியுள்ளார். விவாதத்தின்கீழ் இருக்கும் பிரச்சினைகளை அணுக, மெய்யியல் விவாதங்களான The Nature of Consciousness என்ற சுருக்கத் தொகுதியை இந்த மதிப்பாய்வாளர் ஆய்வு செய்கிறார்.

இயற்கை விஞ்ஞானத்தின் முக்கிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், அதைச் சார்ந்து செயற்கை அறிவு (ARTIFICIAL INTELLIGENCE) பற்றிய புதிய துறையும், நனவைப் பற்றிய ஆய்வில் ஓர் உத்வேகச்சுழலை ஏற்படுத்தி இருக்கிறது. விஞ்ஞான முறையின் மீதும் மற்றும் அதன் முகவுரையான மெய்யியல் சடவாதத்தின் மீதும் மதவாத வலதுசாரிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக பல விஞ்ஞானிகள் தங்கள் வாதங்களை முன்வைத்து உள்ளார்கள். இந்த முரண்பாடுகள், ஆச்சரியமில்லாத வகையில், பெருமளவிற்கு பின்வரும் மிக அடிப்படைக் கேள்விகளான ஜடத்திற்கும் (MATTER), சிந்தனைக்கும் இடையிலான தொடர்பைச் சுற்றியே வருகின்றன. உலகமானது, இயக்கத்தில் ஜடத்தையும், சிந்தனையில் அதன் பிரதிபலிப்பையும் மட்டுமே கொண்டிருக்கிறதா? அல்லது விஞ்ஞானத்தால் விவரிக்க முடியாத வேறு ஏதேனும் சிறப்பு மூளைத்திறனோ (SPECIAL BRAIN STUFF), சிந்தனையோ இருக்கிறதா? நனவு (CONSCIOUSNESS) என்பது ஜடத்தின் உடைமையா, அல்லது அது வேறேதேனும் பொருளா? மனித மூளையால் இந்த உலகைப் புரிந்து கொள்ள முடியுமா?

CONSCIOUSNESS EXPLAINED என்பதில் டென்னெட்டின் பேரார்வமான நோக்கம் என்னவென்றால், நனவைப் பற்றிய புதிரை உடைத்து, முரண்பாடற்ற வகையில் மனதின் சடவாத விளக்கத்தை அளிப்பது அல்லது இந்த திட்டத்தை விஞ்ஞானம் ஏற்று முடிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஓர் அடிப்படை கட்டமைப்பை அளிப்பது என்பதே ஆகும். அவர் பல்வேறு விஞ்ஞானங்களிலிருந்து ஆவலைத்தூண்டும் பொருள்வகைகளை (MATERIAL), எளிய வகையிலும், பெருமளவிற்கு ஆர்வமூட்டும் வடிவத்திலும் அளிக்கிறார். மனதின் இரகசியத்தை முழுமையாக விஞ்ஞானத்தால் விளக்க முடியாது என்று முறையிடும் விஞ்ஞானிகளையும் மற்றும் ஏனையவர்களையும், அதாவது "புதிரானவர்களையும்" (MYSTERIAN) எதிர்க்க அவர் வலியுறுத்துகிறார். "துறந்துவிடுவது" என்ற இருபொருள்வாதத்தின் (DUALISM) மீதான அவரின் உணர்ச்சிமிக்க தாக்குதல்கள் புத்துணர்ச்சி ஊட்டுகின்றன.

நவீன மெய்யியல் செய்வது போலவே, ரேனெ டிஸ்கார்டெஸின் "உடல்-மன பிரச்சினை" என்பதிலிருந்து அவர் தொடங்குகிறார். டிஸ்கார்டெஸ் பண்டைய இருபொருள்வாத நம்பிக்கையை உருவாக்கியவர்: அதாவது, இந்த உலகம் இரண்டு பொருட்களால் ஆனது, ஒன்று சடப்பொருள், மற்றொன்று ஆன்மீகம் என்றார் அவர். நனவுப்பூர்வமான மனதிற்கு பீனியல் சுரப்பியே நுழைவுவாயிலாக இருக்கிறது என்று அவர் முன்னிருத்தினார். உணர்ச்சி உறுப்புகள் (sense organs) பீனியல் சுரப்பி வழியாக மனதிற்குத் தகவல்களைக் கடத்துவதாகவும், அதிலிருந்து மனம் அனைத்திடங்களுக்கும் பரப்புவதாகவும், பின்னர் உடல் இயக்கப்படுவதாகவும் அவர் நம்பினார். நவீன சிந்தனையாளர்கள் பீனியல் சுரப்பியின் இந்த பாத்திரத்தை நிராகரித்தார்கள், ஆனால், மூளைக்குள் ஒரு மைய ''பொருள்மாற்றி'' (interpreter) இருக்கிறது என்ற கருத்தை அவர்களால் தாண்டி வரமுடியவில்லை என்பதை டென்னெட் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

டென்னெட் இந்த சிந்தனைப் பழக்கத்தைக் கார்ட்டிசீயன் சடவாதம் (Cartesian materialism) என்று அழைக்கிறார். இதன் மூலம், ஒரு மைய மூளை-பகுதிக்குள் அனுப்பப்படும் சிந்தனைகளும், உணர்ச்சிகளும் மட்டுமே "நனவுபூர்வமாக ஆகின்றன" என்ற மரபார்ந்த கண்ணோட்டத்தை அவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். அவர் எழுதுகிறார்: "சில மைய சிந்தனைப் பகுதிக்கு புலனறிவு அமைப்புமுறைகள் 'உள்ளீட்டை' அளிப்பதாகவும், இது இவ்வகையில் உடலின் இயக்கத்தைச் சார்ந்திருக்கும் சில துணை மண்டலங்களுக்குக் 'கட்டுப்பாடுகளை' அளிக்கிறது அல்லது அவற்றிற்கு 'வழி' காட்டுவதாகவும் தத்துவவாதிகள் சிந்திக்கிறார்கள்." (Consciousness Explained, பக்கம் 37)

"கார்ட்டிசீயன் தியேட்டர்" என்று அவர் எதை அழைக்கிறாரோ அதன் மீதான டென்னெட்டின் எதிர்ப்பு, நனவு பற்றிய அவருடைய கருத்தை மையப்படுத்தி இருக்கிறது. ஒரு "மைய பொருள்மாற்றி'' என்பதன் போலித்தனத்தை அகற்றுவதன் மூலமாக, மூளையின் பல்வேறு செயல்பாடுகளை ஒரு பரிணாம முன்னோக்கிலிருந்து புரிந்துகொள்ளும் வழியை அவர் திறந்து விடுகிறார். மூளையை ஒரு பிரத்தியேக உறுப்பாக அல்லாமல், இயற்கை மற்றும் வரலாற்றின் ஓர் உருவாக்கமாக அவர் அணுகுகிறார்.

"கார்ட்டிசீயன் தியேட்டர்" என்பதை டென்னெட், நனவின் ஒரு"பன்முக ஆவணங்களின்" (MULTIPLE DRAFTS) மாதிரி என்பதைக் கொண்டு மாற்றி அமைக்கிறார். புலனுணர்ச்சிகளும், சிந்தனைகளும் ஒன்றுக்கொன்று இணையாக, கருத்து விளக்கத்தின் பல்தட நிகழ்வுபோக்குகளாக (MULTI-TRACK PROCESSES OF INTERPRETATION) நடக்கின்றன என்றும், தகவல்கள் பல்வேறு இடங்களில் இருந்து மூளைக்குள் நுழைகின்றன; மனதின் பல்வேறு பாகங்கள் இந்த புலனுணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் "பகுத்து தொகுத்தமைக்கின்றன" என்றும் அவர் வரையறுக்கிறார்.

இந்த "பகுத்து தொகுத்தமைக்கப்பட்டவை", தொடர்பற்ற ஆவணங்களைப் போல, நம்முடைய நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதில் (directing)---அதாவது, தன்னந்தனியாக நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டும் மனமியங்கா நடவடிக்கையை போலில்லாமல்---குறுகிய காலமே வாழும் பாத்திரங்களை வகிக்கின்றன. நம்முடைய கண்கள் ஏறத்தாழ விரைவாக பார்வையை மாற்றி கொண்டே இருக்கின்றன என்றபோதினும், அதாவது ஏறத்தாழ நொடிக்கு ஐந்து விரைவான பார்வைமாற்றம் என்கிற அளவில் நம்முடைய கண்கள் பார்வையை மாற்றுகின்றன என்ற போதினும், நம்முடைய பார்வை தொடர்ச்சியாக தெரிகிறது என்ற உணர்வை ஏற்படுத்துவதே, மூளையின் இந்த "பகுப்பு-தொகுத்தமைக்கும்" வேலைக்கான ஓர் எடுத்துக்காட்டாக கூறலாம். நம்முடைய தலையின் இயக்கத்தைப் போலவே, இந்த இயக்கமும், கண்பார்வைகளில் இருந்து நனவிற்குச் செல்லும் நிகழ்வுபோக்கின் தொடக்கத்திலேயே பகுத்து தொகுத்தமைக்கப்பட்டு விடுகிறது. அதேபோல, மூளையின் பல்வேறு பகுத்து தொகுத்தமைக்கின்ற படிநிலைகளில் நனவின் பல ஆவணங்கள் அங்கே இருக்கின்றன என்று டென்னெட் உறுதியாக கூறுகிறார். தொடர்ச்சியான நிகழ்வுகள் அவற்றை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ செய்த உடன், ஆவணங்கள் எழுதப்படலாம் அல்லது அவை சுழற்சியில் இருந்து திரும்ப எடுத்துக் கொள்ளப்படலாம்.

டென்னெட் பின்னர், மூளையில் நடக்கும் இணை நிகழ்வுபோக்கின் உயிரியியல்ரீதியான எடுத்துக்காட்டுகளை அளிக்கிறார். மேலும் விலங்கின உலகின் முன்னேற்றங்களில் இருக்கும் பல்வேறு செயல்பாடுகளின் மூலங்களையும் (origin of various functions) ஆராய்கிறார். சுற்றுச்சூழலின் முக்கியமான விஷயங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவோ அல்லது எதிர்க்கவோ, உயிரியியல் ரீதியான உறுப்புகளுக்கு நரம்புமண்டலங்கள் உதவுவதால், இயற்கையானது நரம்பு மண்டலங்களின் அபிவிருத்திக்கு உதவுகிறது. சாரத்தில், மூளைகளானது எதிர்நோக்கும் இயந்திரங்களாக (anticipation machines) இருக்கின்றன. எளிய நரம்புமண்டலங்கள் அண்மையிலிருக்கும் எதிர்நோக்கிற்கும், நடத்தைக்கும் மட்டுமே பொருத்தமானது. அது (எளிய நரம்பு மண்டலங்கள்) அடுத்து உடனே முன்னிருக்கும் காலத்தில் என்ன இருக்கிறது என்பதற்கு கணிசமாக பொருந்துவதாக இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

சிறந்த மூளைகள் என்பவை நிறைய தகவல்களை, விரைவாக பிரித்தெடுத்து, முதன்மையாக நின்று பிரச்சினைகளைத் தவிர்க்க அவற்றைப் பயன்படுத்தும். சான்றுகளாக, "மந்தமான பிரதிபலிப்பு", வடிவத்தை அறிந்துகொள்ளும்திறன், மற்றும் இறுதியாக மூளையின் வளைந்து கொடுக்கும் தன்மை அல்லது கற்கும்திறன் ஆகியவை. கற்பதற்கான திறன் என்பது முதன்மையாக மரபணு பரிணாமத்தின் ஒரு விளைவாக இருக்கிறது. ஆனால் தங்களைத்தாங்களே மாற்றி அமைத்துக்கொள்ள முடியாமல் "இறுக்கமாக" இருக்கும் உடன்பிறந்தவர்களுக்கு, விளிம்பில் இருக்கும் சில உயிர்ப்பொருள்களை இது தருகிறது. மேலும் இது பரிணாம நிகழ்வுபோக்கின் மீது மீண்டும் பிரதிபலிப்பதுடன், அதை விரைவும் படுத்துகிறது என்று டென்னெட் விளக்குகிறார்.

மூளையின் சிறந்த ஸ்தூல வளர்ச்சி சுமார் இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியதாகவும், அது சுமார் 150,000 ஆண்டுகளுக்கு முன்னர்---மொழி, சமைத்துண்ணல் மற்றும் விவசாயம் ஆகியவை தொடங்குவதற்கு முன்னதாக முழுமையைப் பெற்றதாகவும் ஆசிரியர் நிரூபிக்க முயற்சிக்கிறார். ஆகவே, கடந்த 10,000 ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அதிநவீன நாகரீகம், விரைவான புதியவழிகளில்--- அதனடியிலிருக்கும் அதிகாரங்களை அதிகப்படுத்தி கொள்ள மென்பொருள் போன்ற ஏதோவொன்றை உருவாக்கியதன் மூலமாக---அந்த மூளையின் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பாதிக்கச் செய்ததால் ஏற்பட்டதாகும் என்று அவர் வரையறுக்கிறார். வடிவத்தை அறிந்து கொள்ளும்திறன் போன்ற "இறுக்கமான" பிரதிபலிப்புகளையும், மற்றும் சமீபத்திய நாகரீகமயமாக்கலின் கலாச்சாரரீதியான பரிவர்த்தனைப் படிப்பினைகளையும் ஆகிய இரண்டு ஆக்கக்கூறுகளையும் தன்னுடைய நனவில் மனிதன் உள்ளடக்கியவனாக இருக்கிறான் என்று டென்னெட் வரையறுக்கிறார். இதன் மூலம் புலனுணர்ச்சிகளும், சிந்தனைகளும் நம்முடைய நிகழ்வுபோக்கின் பல்வேறு வெவ்வேறு நிலைகளில் ஒரேசமயத்தில் நடைபெறுகின்றன என்று அவர் தீர்மானித்தளிக்கிறார்.

டென்னெட் மிகவும் இயந்திரத்தனமாக இருக்கிறாரே? சமூக நனவு இல்லாமல், "மென்பொருளை" போல இருக்கிறாரே? இது போன்ற முன்மாதிரிகள் எவ்வாறு நனவின் ஆக்கபூர்வமான பாத்திரத்தைக் கணக்கிட முடியும்? என்று ஒருவர் கேட்கலாம். அனைத்திற்கும் அப்பாற்பட்டு, மூளையானது, நிகழ்வுகளை "எதிர்நோக்குவதற்கும்" மேலாக, அதற்கும் அதிகப்படியாக பலவற்றைச் செய்து கொண்டிருக்கிறது. இவை இயந்திரத்தனமான சடவாதிகளால் ஒருபோதும் விவரிக்கப்படாத நுண்ணறிவின் "ஆக்கப்பூர்வமான" பக்கமாக இருக்கின்றன. இந்த பிரச்சனைக்குரிய பகுதி இயங்கியல் மெய்யியலாளர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதுபோன்ற நியாயமான கேள்விகளில் நிற்காமல், டென்னெட்டின் உருவகங்களும், உயிரியியல் எடுத்துக்காட்டுகள் பலவும், வாதத்திற்கு சரியாக தோன்றுகிற தன்மையில் மேலோட்டமாக இருக்கின்றன என்பதுடன், விரைவாக வளர்ந்து வரும் மனதைப் பற்றிய ஆய்விற்குள் கவர்ச்சிகரமான ஒருகணநேர பிரகாசத்தை மட்டுமே அளிக்கின்றன.

டென்னெட்டின் பெரும்பாலான முரண்பாடான வாதங்களில், "குவாலியா" (qualia) மீதான அவரின் தாக்குதலும் ஒன்று. இது பின்நவீனத்துவ போக்கில் இருக்கும் மெய்யியலாளர்கள் மத்தியில் வழக்கத்திற்கு வந்திருக்கும் ஒரு வார்த்தையாகும். குவாலியா என்பது, "நம்முடைய உளவியல் வாழ்வின் தோற்றப்பாட்டு விஷயங்களை, அகத்தாய்வு சார்ந்து அணுகக்கூடியது" என்று வரையறுக்கப்படுகிறது. குவாலியா தனிமுறைப்பட்டது; அகநிலைப்பட்டது மற்றும் வார்த்தையால் விவரிக்க முடியாதது. சான்றாக, கருஞ்சிவப்பின் மீதான உங்களின் அனுபவமும் (உங்கள் குவாலியா), என்னுடையதும் அகநிலைப்பட்டது; வேறுபட்டது. கருஞ்சிவப்பு, பல்வலி, உப்புக்காகிதம், இதர பிறவற்றைப் பற்றிய என்னுடைய அனுபவம் எனக்கு மட்டுமே தெரியும். இதில் ஒரு "வியப்பான இடைவெளி" கையாளப்படுகிறது. இது நியூரோன்கள் மற்றும் இரசாயன பரிமாற்றங்களின் ஸ்தூல கட்டமைப்பானது எவ்வாறு மனிதர்களுக்கு உணர்ச்சிகளை உருவாக்கிறது என்ற புரிதலை அடைவதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. மனித உயிர்கள் அவற்றின் சொந்த எண்ணங்களைப் பற்றிய கட்டமைப்பைப் புரிந்து கொள்வதில் நுண்ணறிவார்ந்தமுறை மூடப்பட்டுவிட்டது என்ற நிலைப்பாட்டைப் பலர் எடுக்கிறார்கள்.

"குவாலியாவின்" பயன்கள் வேறுபடக்கூடும் என்ற போதினும், இந்த கருத்துரு பெரியளவில் சந்தேகத்தைக் கிளப்புகிறது. குழப்பமான குருட்டுத்தனம், மக்கள் தங்களின் சொந்த வாழ்க்கையை உற்சாகமாக்கி பார்ப்பதில் இருந்து தடுக்கப்படுதல் மற்றும் தோமஸ் நேகலின் பிரபலமான 1974 கட்டுரையான "WHAT IS IT LIKE TO BE A BAT?" என்பதைச் சார்ந்த கேள்விகள் போன்றவற்றைச் சுற்றியே இந்த நிலைப்பாடுகள் மீதான விவாதங்கள் சுழல்கின்றன. இவற்றை டென்னெட், நனவு மற்றும் குவாலியா பிரச்சினை குறித்த மிகவும் பரவலான மற்றும் செல்வாக்கு பெற்ற சிந்தனைச்சோதனையாக (THOUGHT EXPERIMENT) குறிப்பிடுகிறார். ஆகவே நேகலின் கருத்தை நாம் சற்றே சுருக்கமாக மதிப்பாய்வு செய்வோம்.

ஒரு வௌவாலைப் போல இருப்பது எது என்பதை ஒரு மூன்றாவது நபரின் எந்தளவிலான அறிவு (knowledge) நமக்கு எடுத்துக்காட்டிவிட முடியாது என்பது நேகலின் அடிப்படை முறையீடு. அவர் பின்வரும் எடுத்துக்காட்டை அளிக்கிறார்: தெளிவாக, ஒலி மாற்றுணரி (sonar) என்பது அனுமானிக்கும் ஒரு வடிவமாகும். இது மனிதர்களிடம் இருப்பதைப் போன்ற எந்த புலனுணர்ச்சிகளையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே ஒரு வௌவால் போல இருப்பது எது என்பதை நம்மால் அகநிலையாக கற்பனை செய்வதற்கான எந்த காரணமும் இல்லை.

அவர் குறிப்பிடுகிறார், "அகநிலை செயற்களத்தின் (domain) எல்லா வடிவங்களைப் பற்றிய என்னுடைய யதார்த்தவாதம், மனித கருத்துக்களால் எட்ட முடியாத உண்மைகள் இருக்கின்றன என்ற ஒரு நம்பிக்கையில் குடிகொண்டிருக்கிறது... நம்முடைய கட்டமைப்பு தேவைப்பட்ட வகையிலான கருத்துக்களுடன் செயல்பட நம்மை அனுமதிப்பதில்லை என்பதால்---உயிரினங்கள் முற்றிலுமாக அழுந்துவிட்டாலும் கூட, மனித உயிர்களால் ஒருபோதும் குறிப்பிடவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாத உண்மைகள் இருக்கின்றன என்று ஒருவர் நம்பக்கூடும்" (The Nature of Consciousness, பக்கம் 522). பின்னர் அவர் அனுபவத்தின் மாற்றமுடியாத அகநிலை பண்புக்கு, அதாவது "குவாலியாவிற்கு" ஆதரவு அளிக்கிறார். அவர், "ஓர் அனுபவத்தின் புறநிலை பண்பை அகநிலை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் உணர்ந்தறிகிறது என்பதற்கு அப்பாற்பட்டு, அந்த அனுபவத்தின் புறநிலை பண்பு எதைக் குறிப்பிடுகிறது என்பதை புரிந்துகொள்வது மிகவும் சிரமமாகும்" என்கிறார் (ibid., பக்கம் 523).

இதுபோன்ற சூத்திரமாக்கல்கள் (FORMULATIONS), இம்மானுவேல் கான்டினின் நம்பிக்கையில்லா இருபொருள்வாதத்தையே குறி வைக்கிறது. இவர் தாம் நம்பிய ஓர் உண்மையற்ற உளவியல் வகைகளை முன்னிருத்தினார். இது மனிதனின் உலகைப் பற்றிய உணர்தல்களுக்கு (PERCEPTION) நிபந்தனை விதித்ததோடு, அதை வடிவமைக்கவும் செய்தது. கான்ட் இருபொருள்வாதத்திற்கு ஒரு தொல்சீர் விளக்கத்தை அளித்தார். அதாவது: இயற்கை உலகம் ஒன்று இருந்தது, அதேபோல அறிதலின் உலகம் ஒன்று இருந்தது, ஆனால் "இயற்கை விதிகள்" புறநிலையாக இருக்கவில்லை. மாறாக, அவை பயனுள்ள உளவியல் கட்டமைப்புகளாக இருந்தன.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதன் அவனுடைய உணர்தல்களைக் கொண்டிருக்கிறான், ஆனால் அவன் யதார்த்தத்தின் முக்கியமான இயல்பை அறிந்து கொள்ள முடியாதவனாக இருக்கிறான். இதையே கான்ட், "விஷயம் அதற்குள்ளாகவே இருக்கிறது" (ineffable) என்று அழைத்தார். சடவாதிகள், மிகக் குறிப்பாக மார்க்சியவாதிகள், கான்ட்டின் இருபொருள்வாதத்தை எதிர்த்துடன், புலணுணர்ச்சிகள் நேரடியாக மனிதனுக்கும், புற உலகத்திற்கும் இடையே தொடர்பு கொண்டிருக்கின்றன என்று உறுதியாக வலியுறுத்தினார்கள். "சொல்லுதற்கரியது" என்ற வரையறையின் மூலமாக ஏதோவொன்றைக் குறிக்கும் குவாலியாவைப் பற்றிய கருத்து, புலனறிவிற்கும், உலகம் புரிந்து உணர்ந்துகொண்டிருப்பதற்கும் இடையில், கான்டின் கருத்தினால், ஏதோவொரு தடையை உருவாக்குகிறது. அறிவை நோக்கிய இந்த நம்பிக்கையற்ற நிலைப்பாட்டிற்கான முழுமையான எதிர்ப்பானது, மனிதனின் சமூக பழக்கத்தின் உண்மையாக இருக்கிறது என்று மார்க்சியவாதிகள் எப்போதுமே உறுதியாக கூறி வருகிறார்கள். அவருடைய நடவடிக்கையில், மனிதன் இயற்கையைக் கைப்பற்றவும், அதை அவனுடைய சொந்த தேவைக்காக மாற்றி அமைக்கவுமே, அவனுடைய திறமையை வெளிக்கொணர்ந்து காட்டுகிறான். (உண்மையான ஓர் எடுத்துக்காட்டைக் கூறுவதானால், மனிதன் எதிரொலிஅறிதல் (echolocation) கலையை அபிவிருத்தி செய்திருக்கிறான்--வேக அளவீட்டை அளந்து போலிஸீன் வேக பிடிப்புகளிலும் மற்றும் விண்வெளி கண்டுபிடிப்புகளிலும் இந்த கலை உபயோகப்படுகிறது--இது வௌவ்வால்களை விட உயர்ந்த வகையில் இருக்கிறது! இது ஒரு வௌவ்வாலில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதில் ஒரு பெரிய படி அல்லவா?)

"குவாலியாவை" மறுப்பதற்கான டென்னெட்டின் அணுகுமுறை, மனித மனத்தின் அபிவிருத்தியில் பரிணாமத்தின் பங்களிப்பு வரை இழுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நிறமும் ஒரு குறிப்பிட்ட ஒளியின் அலைவரிசையுடன் தொடர்புபட்டிருக்கிறது என்ற எளிய சிந்தனை தவறென்று நிரூபிக்கப்பட்டிருப்பதால், குவாலியா-தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் நிறம் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வெவ்வேறு அடிப்படை பிரதிபலிக்கும் பண்புகளுடன் கூடிய தரைமட்டங்களை ஒரே நிறத்தில் காணமுடியும் என்றும், நாம் பார்க்கும் பொருட்களில் இருக்கும் நிறங்களுடன் அலைவரிசையானது மறைமுகமாகவே தொடர்புபட்டிருக்கின்றன என்றும் இதில் வரையறுக்கப்படுகிறது.

நிறங்களும் நிறகாட்சிகளும் "ஒன்று மற்றொன்றுக்காக செய்யப்பட்டவை" என்பதே டென்னெட்டின் மறுப்புரையாக இருக்கிறது. இயற்கையில் சில குறிப்பிட்ட பொருட்கள் "பார்க்கப்பட வேண்டியவையாக" இருக்கின்றன. இயற்கையின் பிரதிபலிப்பாகவே விலங்கினங்களில் நிறக்காட்சிகள் பரிணமித்தன. பூச்சிகளுக்கு, அவை மகரந்த சேர்க்கையில் ஈடுபட்ட தாவரங்களின் நிறங்களுடன் இணைந்து அவற்றின் நிறக்காட்சி பரிணமித்தது. நிறக்காட்சியின் வெவ்வேறு அமைப்புமுறைகள் ஒன்றையொன்று சாராமல் பரிணமித்திருக்கின்றன. நிலத்தில் பல்வேறு பிரதிபலிப்பு பண்புகள் இருக்கின்றன என்பதால், அதற்கேற்ப விலங்கினங்கள் அவற்றின் உயிர் வாழ்வதற்கான போராட்டத்திற்கு உதவியாக, அவற்றின் நிறத்தை-அமைக்கும் முறையை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. இயற்கையின் விளைவாகவே நிறம் மற்றும் வாசனையின் வகைகள் பரிணமித்தன.

உள நிலைகள் மற்றும் மனதைப் பற்றிய இந்த அணுகுமுறை சரியானதாகும். டென்னெட்டின் விவரிப்புகளின் வித்தியாசமான புனைவுகோள்கள்--அதாவது, நிறங்கள் இல்லாத உலகங்கள், நனவு இல்லாத மக்கள் (zombies - ஒருவகையான உயிரினங்கள்), இதர பிற--அவற்றின் காரணகாரிய விளக்கங்களை இயற்கையில் இருந்து பெறுவதில்லை, மேலும் இயற்கை உடனான மனிதனின் போராட்டத்தில் இருந்து வரலாற்றுரீதியாக உருவாகி வரும் நனவின் பிரச்சினைகளுக்கு அவை பதில்களையும் காண்பதில்லை. இருபொருள்வாதியான ஹெர் டூரிங்கிற்கு எதிராக ஒரு பொருத்தமான புள்ளியை ஏங்கல்ஸ் அவரின் 1878-ல் வெளியான டூரிங்கிற்கு மறுப்பு என்ற தொகுதியில் குறிப்பிடுகிறார். நனவு மற்றும் சிந்தனையை இயற்கை வெளிப்பாட்டிற்கு ஏதோ எதிரானது என்று எடுத்துக் கொண்டால், "நனவும் இயற்கையும், சிந்தனையும் இருப்பும், சிந்தனையின் விதிகளும் இயற்கையின் விதிகளும், முற்றிலும் வேறுபட்டு இருப்பதாக தெரியும்", ஆனால் இவை மிகவும் நெருக்கமாக தொடர்புடையன என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் நிஜமாகவே சிந்தனை என்றால், நனவு என்றால் என்ன? அவை எங்கிருந்து வருகின்றன? என்ற கேள்வி மேற்கொண்டு எழுப்பப்படும் போது, அவை மனித மூளையின் விளைபொருளாகவே வருகின்றன என்பதும், அத்துடன் மனிதனே இயற்கையின் ஒரு விளைபொருளாக இருக்கிறான் என்பதும், அது அதற்குள்ளிருந்தும், அதன் சுற்றுசூழலோடும் இணைந்து அபிவிருத்தி அடைந்திருக்கிறது என்பது மிகவும் வெளிப்படையாக இருக்கிறது. இதிலிருந்து மனித மூளையின் விளைபொருட்கள் (கடந்த பகுப்பாய்வில் இருந்த இயற்கையின் விளைபொருட்களில் இருந்தும் கூட) இயற்கையின் ஒன்றுக்கொன்றுடனான மீதமிருக்கும் தொடர்புகளுடன் முரண்படுவதில்லை, மாறாக அவற்றுடன் அவை தொடர்புகொள்கின்றன என்பது தானாகவே விளக்கமாக இருக்கிறது" (டூரிங்கிற்கு மறுப்பு, முனேற்றப்பதிப்பகம், பக்கம் 48).

இறுதியாக, டென்னெட் "சுயத்தின் நிஜம்" (REALITY OF SELVES) என்பதைக் கையில் எடுக்கிறார். "சுயம்" என்ற இந்த உயிரியியல் கருத்து ஒரு ஸ்தூலமான விஷயமல்ல, மாறாக இதுவொரு கண்ணுக்குப் புலனாகாத விஷயம்; அதாவது அமைப்பின் ஒரு மூலக்கோட்பாடு (PRINCIPLE OF ORGANIZATION) என்று அவர் குறிப்பிடுகிறார். உயிரியியல்ரீதியாக, நம்முடைய உடல்கள் முழுவதும் வாழும் நுண்ணிய நுண்ணுயிரிகள் (MICROSCROPIC MITES) அல்லது நாம் சார்ந்திருக்கும் பாக்டீரியா, அல்லது ஒருவகையான சிக்கலான உழைப்பைக் கொண்டிருக்கும் கரையான் அல்லது எறும்புகள் போன்ற விலங்கின உலகத்தின் நுண்மையான எல்லைகளை அவர் குறிப்பிடுகிறார். நனவு என்பதைப் போலவே "சுயம்" (SELVES) என்பதும் தொடர்ச்சியானது அல்ல, மாறாக அது தொடர்ச்சியற்றதாகும், அத்துடன் சுயம் என்பது சுயாதீனமற்ற வகையில் இருக்கும் ஆன்ம-அரும்பொருட்கள் அல்ல, ஆனால் அது நம்மை உருவாக்கும் சமூக நிகழ்வுபோக்குகளின் செய்முறை குளறுபடியாக இருக்கிறது என்று அவர் தீர்மானிக்கிறார்.

இதுவொரு மிகவும் முக்கியமான புள்ளியாகும். ஆனால் நிஜத்தைக் கூறவேண்டுமானால், ஹெகலும் அதற்கு பின்னர், மிக விஞ்ஞானபூர்வமாக, மிகச் சிறந்த மார்க்சிசவாதிகளும் தான் இந்த சமூக கருத்துக்களுக்காக முதன்முதலில் போராடினார்கள். மேலும் புறநிலை உண்மைக்கான போராட்டத்திலும் அவற்றின் தொடர்பை எடுத்துக்காட்டினார்கள். மனிதனின் சமூக இருப்பின் விளைவே நனவு. நனவின் அகநிலை பக்கங்களும் இருக்கின்றன--சிந்தனை என்பது மனிதனின் ஒரு பகுதியாகவும், யதார்த்தத்தின் நிபந்தனைக்குட்பட்ட அனுமானமாகவும் இருக்கிறது. ஆனால் இந்த சார்புநிலையிலும் கூட, நிபந்தனைக்குட்பட்ட சிந்தனை இயற்கையில் இருந்து விலகி இல்லை, மாறாக அதன் ஒரு பாகமாக இருக்கிறது.

வி.ஐ. லெனின் இந்த புள்ளியை அபிவிருத்தி செய்கிறார்: "நுண்ணறிவின் (COGNITION) நிகழ்வுபோக்கு நிஜத்திற்கு இட்டுச் செல்கிறது, ஏனென்றால் இயற்கையானது ஸ்தூலமாகவும், கண்ணுக்குப் புலனாகாமலும் இரண்டுமாகவும் (CONCRETE AND ABSTRACT) இருக்கிறது; அது தோற்றப்பாடாகவும், சாரமாகவும் இரண்டுமாகவும் (PHENOMENON AND ESSENCE) இருக்கிறது; அது அக்கணத்திற்குரியதாகவும், தொடர்புடையதாகவும் இரண்டுமாகவும் (MOMENT AND RELATION) இருக்கிறது. மனித கருத்துக்கள் அவற்றின் மறைநிலையிலும், பிரத்யேகத்தன்மையிலும் அகநிலையாக இருக்கின்றன. ஆனால் முழுமையான நிலையில், நிகழ்வுபோக்கில், ஒட்டுமொத்தத்தில், தன்மையில், மூலப்பொருளில் புறநிலையாக இருக்கின்றன" (மெய்யியல் குறிப்புகள், பக்கம் 208). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு தொடர்புபட்ட தவறுகளின் (RELATIVE ERRORS) தொடர்ச்சியில் இருந்தும், மனிதனின் சமூக பழக்கத்தின் முடிவில்லா வரலாற்றில் இருந்துமே முழுமையான அறிவு உணரப்படுகிறது. லெனின் காலத்தில் இருந்த அகநிலைவாதிகள் மற்றும் சார்புநிலைவாதிகளுக்கு எதிராக இருந்த ஒருவகை பின்நவீனத்துவவாத இருபொருள்வாதிகளுக்கு எதிராக இன்று இந்த புள்ளிகள் மிகவும் சக்திமிக்கவையாக இருக்கின்றன.

சடவாதிகளாக, மார்க்சிசவாதிகளாக, நாங்கள் உறுதியாக கூறுவதென்னவென்றால், நனவைப் பற்றிய பதிலளிக்கப்படாத கேள்விகள் இருக்கின்றன, ஆனால் அவை பதிலளிக்கவே முடியாத கேள்வி இல்லை என்கிறோம். நனவு என்பது ஜடத்தின் இயக்கத்தில் இருக்கும் உயர்ந்த பரிணாமத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. மனிதன் இயற்கையின் ஒரு பாகமாகவும், அதன் ஓர் உயர்ந்த விளைபொருளாகவும் இருக்கிறான். "வாழ்க்கை மூளைக்கு உயர்வை அளிக்கிறது," லெனின் தொடர்ந்து எழுதுகையில், "மனித மூளையில் இயற்கை பிரதிபலிக்கப்படுகிறது. இந்த பிரதிபலிப்புகளின் சரியான தன்மைகளை மனிதனுடைய பழக்கத்திலும், நுட்பங்களிலும் பரிசோதிப்பதன் மூலமாகவும், நிறுவுவதின் மூலமாகவும் மனிதன் புறநிலை உண்மையை எட்டுகிறான்." (மெய்யியல் குறிப்புகள், பக்கம் 201)

ஏங்கெல்ஸ் இதையே அவருடைய டூரிங்கிற்கு மறுப்பு என்பதில் வேறொரு வகையில், ஒளிக்கேற்ப தாவரங்கள் மாறிக் கொள்வதையும் (THE ADAPTATION OF PLANTS LIGHT), நனவு என்பது மாற்றத்தை ஏற்றுக்கொள்வதன் மிகவும் முன்னேறிய வடிவமாகும் என்றும் குறிப்பிடுவதன் மூலமாகவும் விளக்குகிறார். அவர் எழுதுகிறார், "இந்த நிகழ்வுபோக்கு ஓர் உயிருள்ள செல் கட்டமைப்பில் நடைபெறுவதாலும், மனித மூளையின் நரம்புகளில் நிகழும் பரிமாற்றத்தைப் போலவே ஊக்குவிக்கும் தன்மையிலும் (FORM OF STIMULATION), அதன் பிரதிபலிப்பிலும் உணரப்படுவதாலும், ஒரேமாதிரியாக வெளிப்படுவது, மாற்றத்தை ஏற்றுக்கொள்வது ஆகிய இரண்டு வகையிலும் பொருந்துகிறது. மாற்றத்தை ஏற்றுக் கொள்வதென்பது முழுமையாக நனவின் மட்டத்தின் மூலமாகவே நிறைவேறுகிறது என்றால், நனவும், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மையும் எங்கிருந்து தொடங்குகின்றன, அத்துடன் அவை எங்கே சென்று முடிகின்றன? நுண்ணுயிரிகளில், பூச்சிகளை உண்ணும் தாவரங்களில், கடற்பாசிகளில், கடலுயிர் வகைகளில், முதல் நரம்புகளில்? டூரிங்கால் இந்த எல்லைக்கோட்டை வரைய முடிந்தால், இயற்கை விஞ்ஞானிகளின் பழைய கசையடிகளுக்கு மிகவும் சிறந்த ஓர் உதவியைச் செய்தவராய் இருப்பார். எங்கெல்லாம் உயிருள்ள போட்டோபிளாசம் இருக்கிறதோ, அங்கெல்லாம் போட்டோபிளாச தூண்டுதல், போட்டோபிளாசத்தின் விளைவு ஆகியவை கண்டறியப்பட வேண்டியவையாக இருக்கின்றன. மெதுவாக மாறும் தூண்டுதல்களின் விளைவு, போட்டோபிளாசமிலும் முன்னோக்கிய மாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. ஒருவேளை அப்படி இல்லை என்றால் அது அழிந்து போய்விடும். இதே வெளிப்பாட்டையும் (EXPRESSION), மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும்தன்மையும், ஏனைய அனைத்து உயிர்களின் உடல்களிலும் பொருத்திப் பார்க்கலாம்" (டூரிங்கிற்கு மறுப்பு, பக்கம் 204).

நனவு என்பது ஜடத்தின் உடைமை (property of matter); அது இயற்கையின் விதிகளைத் தொடர்கிறது; ஆகவே அதை விஞ்ஞானரீதியாக புரிந்து கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டையே மார்க்சிசம் எப்போதும் கொண்டிருக்கிறது. நவீன விஞ்ஞானிகள் மற்றும் மெய்யியலாளர்களால் இயங்கியல் சடவாதம் நிராகரிக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது என்ற பரப்பெல்லை வரையில், பெரும்பாலும் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை காரணமாக, அவர்கள் இந்த சிக்கலான பிரச்சினைகளை அணுகுவதில் மிகவும் கையாலாது இருக்கின்றனர். சடவாதத்தைப் பற்றிய தற்போதைய பழிப்புரைகள் எவ்வாறு வெறுமனே நீண்டகாலத்திற்கு முன்னால் மறுக்கப்பட்ட விவாதங்களைப் பிரதிபலிக்கின்றன என்பதையே இது வெளிப்படுத்திக் காட்டுகிறது: உண்மையில், பின்நவீனத்துவ போக்கின் சார்புவாதம், மூடிமறைத்தல்வாதத்தின் (obscurantism) ஒரு போட்டிக்கு செழிப்பான அடித்தளத்தை அளித்திருக்கிறது. இந்நிலை மாறக்கூடிய ஒரு சூழ்நிலைக்காகவும், அடிப்படை இயற்கை விதிகள் மற்றும் சிந்தனை விதிகளின் இன்றைய நாள் வரைக்குமான மனிதனின் உயர்ந்த மெய்யியல் வெளிப்பாடாக இருக்கும் இயங்கியல் சடவாதத்தின் சீர்மைக்காகவும் மட்டுமே, ஒருவர் பாடுபடுவதென்பது, மீண்டும் இயற்கை ஆய்வுகள் அனைத்திலும் வெளிப்படுத்தப்படும் என்பதுடன், மனிதனின் சமூக மற்றும் விஞ்ஞான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பயன்படுத்தப்படும்.

Consciousness Explained என்பது நிலவுகின்ற ஒருதலைப்பட்சத்தன்மைக்கு எதிராக, விஞ்ஞானம் மற்றும் சடவாதத்திற்கான ஓர் உணர்ச்சிமிக்க ஆதரவை அளிக்கிறது. செயற்கை அறிவு, நரம்பு உயிரியியல் (neurobiology) மற்றும் உளவியல் ஆகியவற்றின் துறைகளில் இருந்து காட்டப்படும் டென்னெடின் எடுத்துக்காட்டுகள் போதியளவிற்கு முழுமையாக இல்லை--இந்த மதிப்புரையாளரும் அதைத் தீர்மானிக்கும் அளவிற்கு இல்லை--என்றாலும் கூட, அவருடைய முறையீடு மனிதனின் சிந்தனையைப் பற்றிய அறிவாற்றலை இறுதிப்படுத்திவிடவில்லை. நனவு உட்பட, உலகை அறிவதிலும், நம்முடைய புரிதலை மேற்கொண்டு செல்வதற்கான குறிப்பிட்ட நம்பத்தகுந்த புனைவுகளையும் கட்டமைக்கும் மனிதனின் திறமையைக் குறைகூறுவதை அவர் நோக்கமாக கொள்கிறார். மேலும் பின்நவீனத்திற்கு எதிராக விஞ்ஞானத்திற்கான ஒரு வீச்சிலும் அவர் தடுமாறி நிற்கிறார். அவருடைய அடுத்த புத்தகமான, Darwin's Dangerous Idea: Evolution and the Meanings of Life என்பதை மதிப்புரை செய்ய முனைகிறேன். அதில் அவர் இருபொருள்வாதத்திற்கு எதிரான அவருடைய வாதத்தைத் தொடர்கிறார்.

புத்தகம்: CONSCIOUSNESS EXPLAINED, எழுதியவர்: டேனியல் சி. டென்னெட், பதிப்பகம்: லிட்டில் பிரௌன் & கம்பெனி, ஆண்டு: 1991

புத்தகம்: The Nature of Consciousness, ஆசிரியர்: நெட் பிளாக், ஓவென் பிளேனெகன் மற்றும் கூவென் குஜெல்டெர், பதிப்பகம்: MIT பதிப்பகம், ஆண்டு: 1997