World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australia: Socialist Equality Party announces its 2010 election candidates

ஆஸ்திரேலியா: சோசலிச சமத்துவக் கட்சி அதன் 2010 தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்கிறது

By the Socialist Equality Party (Australia)
19 July 2010

Back to screen version

ஆகஸ்ட் 21 அன்று நடக்க உள்ள 2010 கூட்டாட்சித் தேர்தலுக்கு தன் வேட்பாளர்களை அறிவிப்பதில் சோசலிச சமத்துவக் கட்சி பெருமிதம் அடைகிறது. அதன் பிரச்சார நடவடிக்கைகளில் SEP சிக்கன நடவடிக்கை திட்டம், இராணுவ வாதம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்று கில்லார்டின் தொழிற் கட்சி அரசாங்கம் மற்றும் ஆபோட்டின் தலைமையிலான லிபரல்-தேசிய எதிர்ப்பு ஆகியவை இரண்டினாலும் தொடரப்படுபவை, மற்றும் உலகெங்கிலும் அரசாங்கங்கள் ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இடையே தொடரும் தாக்குதல்களுக்கும் எதிராக ஒரு சோசலிச மாற்றீட்டை முன்வைக்கிறது.

நியூ சௌத் வேல்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியாவில் பத்து பிரதிநிதிகள் மன்ற இடங்களுக்கு போட்டியிடும். மேலும் விக்டோரியாவிலும், நியூ சௌத் வேல்ஸிலும் above-the-line கட்சி இடங்களுக்காகப் போட்டியிடும்: இது ஆஸ்திரேலியாவின் இரு அதிக மக்கள் இருக்கும் மாநிலங்களாகும் SEP க்கு அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க உதவும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான 62 வயதான நிக் பீம்ஸ், NSW வில் செனட்டிற்காக போட்டியிடுகிறார். கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருப்பார். 1972ல் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரான பீம்ஸ், மார்க்சிச அரசியல் பொருளாதாரம் மற்றும் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்கள் போராட்டங்கள் பற்றி எழுதும் நன்கு அறியப்பட்டுள்ள எழுத்தாளர் ஆவார்.

ஆங்கில இலக்கிய பட்ட முதுகலை மாணவியாக NSW பல்கலைக்கழகத்தில் பயிலும் காப்ரியலா ஜாபாலா 47, 1997 முதல் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினராக இருப்பவர் NSW செனட்டிற்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளர் ஆவார்.

சிட்னி மாநிலத்தில் சோசலிச சமத்துவக் கட்சி அதன் வேட்பாளர்களை ஆறு கீழ்மன்ற தொகுதிகளில் நிறுத்துகிறது: கிங்ஸ்போர்ட்-ஸ்மித், கிரேண்ட்லர், ரீட், பரமட்டா, ப்ளாக்ஸ்லாந்து மற்றும் பௌலர் என்பவை அவை.

22 வயதான, ஹாம்பைட்ஸ் NSW பல்கலைக் கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் இயக்கத்தின் உறுப்பினர், மற்றும் 2007ல் இருந்து சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினராகவும் உள்ளார். இவர் தெற்கு சிட்னியில் முக்கியமாக தொழிலாள வர்க்கத்தின் தொகுதியாக உள்ள கிங்ஸ்போர்ட்-ஸ்மித்தில் இருந்து போட்டியிடுவார். இத்தொகுதியில் பாட்டனி பே துறைமுகப் பகுதிகள், சிட்னி விமான நிலையம், அலெக்சாண்ட்ரியாவின் மென் தொழில்கள் மற்றும் NSW பல்கலைக் கழகம், கடற்கரைப் புறநகரங்களான மரௌபா மற்றும் கூகி ஆகியவை உள்ளன. தொழிற் கட்சியின் சுற்றுச் சூழல் மந்திரி, முன்னாள் ராக்ஸ்டார் பாடகர் பீட்டர் கரேட்டிற்கு எதிராக சவால் விடுகிறார்.

40 வயதான ஜேம்ஸ் கோகன், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய அமைப்பாளர் கிரேண்ட்லர் என்னும் மேலை உள்பகுதி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்; இதில் மாணவர்கள், நகர்ப்புர தொழில் தேர்ச்சி உடையவர்கள் மற்றும் குடியேறியவர்கள் வசிக்கின்றனர். உலக சோசலிச வலைத் தளத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புக்கள் பற்றி பரந்த அளவில் எழுதியுள்ள கோகன் நீண்ட நாளாக தொழிற் கட்சி பிரிவின் தலைவராக உள்ள உள்கட்டமைப்பு மந்திரி ஆன்டனி அல்பனீஸை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

47 வயதான கரோலின் கென்னட், ஒரு முன்னாள் செவிலியர்; இப்பொழுது Macquaire பல்கலைக் கழகத்தில் கணக்கு விரிவுரையாளராக உள்ளார்; இவர் ரீட் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்; இதில் பெரும்பாலும் பரமட்டா ஆற்றின் தெற்குக் கரையில் தொழிலாளர் வசிக்கும் பகுதிகள், சிட்னியில் மிக வறிய பகுதிகளில் ஒன்றான ஆபர்ன் உட்பட அடங்கியுள்ளன. தேசிய மேல் நிலை கல்வித்துறைச் சங்கத்தின் பல்கலைக் கழகக் கிளையின் தலைவர் என்ற முறையில் கென்னட்டினுடைய சங்கம் ருட்/கில்லார்ட் அரசாங்கங்களின் சந்தைச் சார்பில் மேல் நிலைக் கல்வியை மறுகட்டமைப்புக் கொள்கைக்கு கொடுத்த ஆதரவை எதிர்த்துள்ளார். இவர் சோசலிச சமத்துவக் கட்சியில் 2007ல் இணைந்தார்; திருமணமாகி ஐந்து குழந்தைகளையும் மூன்று பேரக்குழந்தைகளையும் கொண்டுள்ளார்.

42 வயதான கிறைஸ் கோர்டன், பல்கலைக் கழக கணக்கு ஆசிரியராக இருப்பதுடன் ஐந்து ஆண்டுகளாக சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினராகவும் உள்ளார்; இவர் பரமட்டா தொகுதியில் நிற்கிறார்; ஏற்கனவே இத்தொகுதியில் 2007ல் போட்டியிட்டுள்ளார். பரமட்டா நகரம் மேற்குப் புறநகர்ப்பகுதிகளுக்கு வணிக மையம் ஆகும்; முக்கிய ஆலைகள் மற்றும் பணியிடங்களுக்கு தாயகம் போன்றது ஆகும்; இதில் பொதுத்துறை அலுவலகங்கள், மிகப் பெரிய வெஸ்ட்மீட் மருத்துவமனை-குழந்தைகள் மருத்துவமனை வளாகம் மற்றும் மேற்கு சிட்னி பல்கலைக்கழக வளாகம் ஆகியவை உள்ளன. இத்தொகுதியின் தற்போதைய உறுப்பினர் தொழிற் கட்சி பின்னிருக்கையில் அமரும் ஜூலி ஓவன்ஸ் ஆவார்.

மற்றொரு முக்கியப் புறநகர்த் தொகுதியான ப்ளாக்ஸ்லாந்தில், கட்சியின் வேட்பாளராக, சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்ட கால தேசியக் குழு உறுப்பினரான 62 வயது ரிச்சர்ட் பிலிப்ஸ் போட்டியிடுகிறார். உலக சோசலிச வலைத் தளத்தின் எழுத்தாளரான பிலிப்ஸ் குறிப்பாக கலைத்துறை கட்டுரைகளை எழுதியுள்ளார். பாங்க்ஸ்டௌனை மையமாகக் கொண்ட தொகுதி ஆஸ்திரேலியாவிலேயே கலாச்சார ரீதியாக பல வேற்றுமைகளைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாகும்; இங்கு 40 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள். ஒருகாலத்தில் முக்கிய வேலைகள் கொடுக்கும் மையமாக இருந்த இப்பகுதி இப்பொழுது 15 முதல் 19 வரை உள்ள இளைஞர்களிடையே 40 சதவிகிதத்திற்கும் மேலான வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது\இது தேசிய விகிதமான 25.8 ஐ விடக் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும். இத்தொகுதியின் தற்போதைய பிரதிநிதி ஜேசன் கிளேர் ஆவார்\அவர் தொழிற் கட்சியின்பால் பெரும் விசுவாசத்தைக் கொண்டவர், வருங்கால மந்திரி என்று பேசப்படுபவர்.

57 வயதான மைக் ஹெட், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர், மற்றும் மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரையாளர்; தென்மேற்கு வெளித் தொகுதியான பௌலரில் இருந்து போட்டியிடுகிறார். இங்கு பெரிய தொழிலாள வர்க்க புறநகர்களும், இளம் குடும்பங்கள் எழுச்சி பெறும் வீடுகள் தவணையை கொடுப்பதற்குத் திணறும் நிலையில் இருப்பவர்களும் மிக அதிக சொந்தக் கடன் கொண்டவர்களும் வசிக்கும் புதிய வளர்ந்துவரும் பகுதிகள் நிறைந்துள்ளன. முன்னாள் தொழிற்சங்க அதிகாரியான Chris Hayes ஐ எதிர்த்து ஹெட் போட்டியிடுவார். ஹேஸை தொழிற் கட்சியின் பிரிவுத் தலைவர்கள் அருகிலுள்ள வெரிவாவில் இருந்து இங்கு போட்டியிடுமாறு செய்துள்ளனர். அதற்குக் காரணம் அத்தொகுதியில் ஒரு தேர்தல் தொகுதி மறுபங்கீட்டில் அகற்றப்பட்ட தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான Laurie Ferguson அங்கு போட்டியிட இருப்பதுதான்.

சிட்னியில் இருந்து 170 கி.மீட்டர் தொலைவில் வடக்கே உள்ள தொழில்துறை நகரமான நியூகாசிலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக நோயல் ஹோல்ட் போட்டியிடுகிறார். இவர் 2007ம் ஆண்டிலும் ருட்டின் தொழிற் கட்சி அரசாங்கத்தின் வணிகச் சார்பு தன்மை பற்றி எச்சரித்து, இதே இடத்தில் போட்டியிட்டார். சுரங்கத் தொழில், துறைமுகங்கள், இரயில்பாதடைகள் அனைத்தையும் கொண்ட நாட்டின் மிகப் பெரிய தொழில்மையங்களில் நியூகாசிலும் ஒன்றாகும். கடந்த 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிரந்தர வேலைகள் ஆலைமூடல்களினால் தகர்க்கப்பட்டுவிட்டன; பள்ளிகளை விட்டு நீங்கும் இளைஞர்களை இது தற்காலிக, பகுதி நேர வேலைகள் அழைப்பு மையங்கள், சில்லறை விற்பனை, பணித் துறை போன்றவற்றில் போட்டியிட இது தள்ளியுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் 45 வயதான மருத்துவமனைத் தொழிலாளர் ஜோ லோபஸ், 2007லும் அவர் போட்டியிட்ட ஸ்வான் தொகுதியின் வேட்பாளராக உள்ளார். இத்தொகுதியில் சிறு தொழில்கள், ரயில்வே சரக்கு இணைப்புக்கள் மற்றும் பெர்த்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகியவை உள்ளன. இங்கு கர்ட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் நிறையபேர் உள்ளனர்; தற்பொழுது இத்தொகுதி உறுப்பினர் சிறு வித்தியாசத்தில் லேபர் கட்சியின் சார்பாக வெற்றி பெற்ற ஸ்டீவ் அயர்ன்ஸ் ஆவார். 1984ல் இருந்து கட்சியின் உறுப்பினராக உள்ள லோபஸ் ஒருகாலத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவின் gஏற்றம் மிகுந்தh சுரங்கத் தொழில் மாநிலம் என்பதற்கு பதிலாக இப்பொழுது பொதுச் சுகாதாரத் துறையில் போதிய நிதி உதவி அளிக்கப்படாததின் பேரழிவு விளைவுகள் பற்றியும் வாழ்க்கைத்தரச் செலவினங்கள் அதிகரித்துள்ளது பற்றியும் உலக சோசலிச வலைத் தளத்தில் எழுதியுள்ளார்.

விக்டோரியா மாநிலத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் செனட் வேட்பாளர் குழு பாட்ரிக் ஓfகானர், கியோ வோங்விக்சே ஆகியோரைக் கொண்டுள்ளது. 30 வயதான ஒfகானர் கட்சியில் 2004ல் இணைந்தார்; உலக சோசலிச வலைத் தளத்தில் பரந்த அளவிற்கு சர்வதேச, ஆஸ்திரேலிய அரசியல் பற்றி கட்டுரைகளை எழுதியுள்ளார்; அவற்றில் கான்பெர்ராவின் ஆசிய-பசிபிக் பகுதியில் நவகாலனித்துவ வகை செயற்பாடுகளும் அடங்கும். வோங்விக்சே ஒரு 39 வயதான சுகாதாரப் பணியாளர்; இவர் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு இளம் சிறுவனாக அவருடைய குடும்பத்துடன் 1981ல் லாவோஸில் இருந்து வந்தார். இவர் 1996 கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச முன்னோக்கினால் ஈர்க்கப்பட்டார்.

வடக்கு மெல்போர்ன் தொழிலாள வர்க்கத் தொகுதியான கால்வெல்லில், கட்சியின் வேட்பாளர் பீட்டர் பைர்ன் ஆவார். 51வயது கட்டிடக் கலைஞரான இவர், ஒரு கார்த்தொழிலாளியின் மைந்தர் ஆவார்; இவர் 1983ல் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்தார். இரு தசாப்தங்களுக்கும் மேலாக கட்சியின் மெல்போர்ன் பகுதியில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளார்; அதில் கார்த்தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், விமானிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் வேலைகள், அடிப்படை உரிமைகளைக் காத்தல் ஆகியவையும் அடங்கும். போர்ட் மோட்டார் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அத்துடன் தொடர்புடைய கார் உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்களின் தாயகமாகும் கால்வெல். இங்கு தொழிலாளர்கள் தொடர்ச்சியாக ஆலைகள் மூடல், பணிநிலை வெட்டுக்கள் ஆகியவற்றை சந்திக்கின்றனர். ஈராக்கிய மற்றும் பிற குடியேற்றக் குடும்பங்கள் பெருகிய நிலையில், தொகுதி Craigieburn, Sunbury ஆகியவற்றையும் அடக்கியுள்ளது; தவிர புதிய வீட்டு வளர்ச்சிப் பகுதிகள் என வடக்கே ரோக்ஸ்பர்க் பார்க் பகுதியிலுள்ள அடைமான வீடுகள் நிறைந்த புறநகரங்களும் இதில் உள்ளது.

38 வயதான தானியா பாப்டிஸ்ட், 2006ல் கட்சியில் சேர்ந்த ஒரு சட்டத்துறை எழுத்தர், கெல்லிப்ராண்ட் தொகுதியின் வேட்பாளர் ஆவார்; இது Footscray, Altona, Braybrook, Brooklyn, Maidstone, Yaraville, Williamstown ஆகிய புறநகர்த் தொழிலாள வர்க்கத்தினர் வாழும் பகுதிகளை அடக்கியுள்ளது. முன்பு இது மெல்போர்னின் தொழில்துறை இதயத்தானமாக இருந்தது. இங்கு முக்கிய மாமிச உணவுப் பிரிவுகள், தோல் பதனிடும் ஆலைகள், கப்பல் கட்டும் தளங்கள், ஆயுதங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பெட்ரோகெமிக்கல் ஆலைகள், இரயில்வே தொழிற்சாலைகள் மற்றும் கார் கட்டமைப்புப் பிரிவுகள் ஆகியவை இருந்தன. இத்தொழில்கள் பலவும் 1980, 1990 களில் ஹாக், கீட்டிங் தொழிற் கட்சி அரசாங்கங்களால் மூடப்பட்டன. இப்பொழுது முக்கிய பணிநிலையங்கள், ஒரு டோயோடோ கார்த்தயாரிப்பு ஆலை, பெட்ரோ கெமிக்கல் ஆலை மற்றும் Tenix கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் விக்டோரியா பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. சோசலிச சமத்துவக் கட்சியின் செனட் வேட்பாளராக 2007ல் போட்டியிட்ட பாப்டிஸ்ட் இப்பொழுது சுகாதார மந்திரி நிக்கோலோ ரோக்சனை எதிர்த்துப் போட்டியிடுவார்; பிந்தையவர் தொழிற் கட்சியின் நீண்ட கால சுகாதாரச் செலவுகள் குறைப்பதற்கு திட்டமிடுபவர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் அனைவரும் தங்கள் முழு ஆதரவை சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு கொடுக்கும் வகையில், எமது தேர்தல் அறிக்கைகளை வினியோகித்தல், எமது தேர்தல் நிதியான 40,000 டாலருக்கு நன்கொடை அளித்தல், தேர்தல் குழுக் கூட்டங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் கலந்து கொள்ளுதல், நம் வேட்பாளர்களுக்கு வாக்களித்தல், எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை ஒரு புதிய சோசலிச, சர்வதேசிய தொழிலாளர் கட்சியாக கட்டமைக்கும் பணியில் சேருமாறு சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.