சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

SEP stands candidates to provide socialist alternative

Prime Minister Gillard calls snap Australian election

சோசலிச மாற்றீட்டை வழங்குவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறது

பிரதம மந்திரி கில்லார்ட் குறுகிய காலத்தில் ஆஸ்திரேலிய தேர்தலுக்கு அழைப்பு விடுகிறார்

By Mike Head
19 July 2010

Use this version to print | Send feedback

புதிதாகப் பதவியேற்ற தொழிற் கட்சியின் பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் கடந்த சனியன்று ஆகஸ்ட் 21ம் திகதி ஆஸ்திரேலிய கூட்டாட்சி பாராளுமன்றத்திற்கு தேர்தல்கள் நடத்துவதற்கு அறிவித்துள்ளார். பிரச்சாரத்திற்கு இது சட்டபூர்வமாக மிகக் குறைவான அவகாசத்தையே கொடுக்கிறது.

கில்லார்ட் மற்றும் தொழிற் கட்சித் தலைவர்கள் முன்கூட்டிய தேர்தலை நடத்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பது கெவின் ருட்டை பிரதம மந்திரிப் பதவியில் இருந்து அகற்றிய சதித்திட்டம் மற்றும் அதன் பின்னணியில் இருந்த செயல்திட்டம் பற்றிய அனைத்து பொது விவாதங்களையும் நிறுத்திவிடும் முயற்சியாகும்.

கடந்த வியாழக்கிழமையன்று இவர் நடத்திய தேசிய செய்தி ஊடகக் குழுப் பேச்சின் போது பதவியில் இருந்து ருட் வெளியேற்றப்பட்டது வந்ததன் இரு நாட்களுக்கு பின்னர், இவர் புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுத்தல் என்பது பற்றிப் புதிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

சனிக்கிழமையன்று “ஆட்சி மாற்றக் கசிவு தேர்தல் விருப்புரிமைகளை கொல்லுகிறது” என்ற தலைப்பில் Australian அரசியல் பிரிவு ஆசிரியர் டெனிஸ் ஷனாகன் கூறிய கருத்தாவது: “அடுத்த சில வாரங்களை எப்படியேனும் தள்ளியபின், தன்னை ஒரு புதிய தலைவராக நிறுவி, புதிய தொடக்கத்தைக் காண வேண்டும் என்பதுதான் கில்லர்டின் மாற்றீடு. ஆனால் மேகம் சூழ்ந்தது போன்ற ருட்டின் வெளிப்பாட்டுத் தன்மை மற்றும் பிற உறுதியற்ற கூறுபாடுகள் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது போல் தோன்றுகின்றன.”

சமீபத்திய நாட்கள் பல செய்தித்தாள் தலையங்கங்கள் ருட் அரசியல் படுகொலைக்கு உட்பட்டதில் இருந்து வெளிப்படும் துர்நாற்றத்தை அடக்கும் விதத்தில் ஒரு முன்கூட்டிய தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியதுடன், பொருளாதாரச் சூழ்நிலை மோசமாவதற்குள் புதிய அரசாங்கத்திற்கு திரும்புமாறும் கோரின. அமெரிக்காவில் தொடர்ந்து இருக்கும் வெகுஜன வேலையின்மை, ஐரோப்பாவின் மோசமாகும் அரசாங்க, வங்கிக் கடன்கள் மற்றும் சூடேறியுள்ள சீனப் பொருளாதாரத்தின் மெதுவான வளர்ச்சி ஆகியவை பற்றி அச்சங்கள் ஆளும் வட்டாரங்களிலே பெருகியுள்ளன.

தொழிற் கட்சியின் கன்னை தலைவர்களால் பெரும் சுரங்க நிறுவனங்கள் மற்றும் நிதியச் சந்தைகளின் ஆணையின் பேரில் நடத்தப்பட்ட ருட்டின் பதவி நீக்கம் ஆஸ்திரேலிய வாக்களார்களிடையே ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வார இறுதியில் வெளிவந்த ஒரு கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட 57 சதவிகித வாக்காளர்கள் முன்னாள் பிரதம மந்திரி அகற்றப்பட்ட விதம் மறுதேர்தலில் தொழிற் கட்சியின் வாய்ப்புக்களை குறைக்கும் எனக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.

ஜூன்23-24 சதி பாராளுமன்ற ஜனநாயகத்தின் முகத்திரையை கிழித்தெறிந்து குறைந்த பட்சம் ஓரளவேனும் பெருநிறுவன, நிதிய சக்திகள் இதற்குப் பின்னால் எப்படிச் செயல்படுகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. தொழிற் கட்சித் தலைவர்கள் இப்பொழுது இதை மீண்டும் விரைவில் மூடிவிட முற்படுகின்றனர்.

ஆனால் ருட் அகற்றப்பட்து எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்குத்தான் தேர்தலும் “ஜனநாயக முறையில்” இருக்கும். எந்தக் கட்சி – தொழிற் கட்சி அல்லது லிபரல்-தேசியக் கட்சி கூட்டணி— என்று அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும் அதன் திட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது: அதாவது ஆப்கானிஸ்தானில் நடக்கும் காலவரையற்ற போருக்கு ஆதரவு கொடுக்கவும், சமூக நலச் செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்கள், புதிய அலை போல் சந்தை சார்புடைய “மறுகட்டமைப்பு”, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வேலைகள் இழப்பு, ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் இழப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட வேண்டும்.

தேர்தல் பற்றி அறிவித்த தன் செய்தியாளர் கூட்டத்தில் கில்லார்ட் “முன்னோக்கி செல்லல்” என்னும் சொல்லை 31 நிமிடங்களில் 39 முறை பயன்படுத்தினார். அவருடைய இந்த உரையை “இயந்திரம் பேசியது” போல் இருந்தது என்று ஒரு செய்தித்தாளின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் லிபரல் கட்சித் தலைவர் டோனி ஆபோட்டும் பலமுறை “யதார்த்த நடவடிக்கை” எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இரு கட்சிகளுமே அடுத்த ஐந்து வாரங்களுக்கு “தகவல் அளிக்கும்” தன்மையில் உறுதியாக இருந்து 1930 களின் பெருமந்த நிலைக்குப் பின்னர் வந்துள்ள மிக மோசமான பொருளாதார உலக நெருக்கடியின் கீழ் அவற்றின் கொள்கைகளை திறனாயாமல் தடுப்பதற்கு முயலும்.

கில்லார்ட் சொற்றொடர்களை வெற்றுத்தனமாகப் பயன்படுத்துவது தேர்தலுக்கு விடுத்துள்ள அழைப்பிலேயே தெளிவாகியுள்ளது. ஆஸ்திரேலிய மக்களுக்கு அவர்களுடைய “பிறப்புரிமையான” வாக்களித்தலை தான் கொடுக்க விரும்புவதாகக் கூறிய அவர், புதிய வாக்களார்களுக்கு இன்று காலை 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரை, 11 மணி நேரம்தான் பதிவு செய்துகொள்ள அவகாசம் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 1.4 மில்லியன் தகுதி உடைய வாக்காளர்கள்—பத்தில் ஒருவர், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்—வாக்காளர் பட்டியலில் இல்லை.

கில்லார்ட் நியமிக்கப்பட்டதில் இருந்தே, அவர் ஒவ்வொரு முன்னணியிலும் தளர்வில்லாமல் வலதிற்குத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறார். சுரங்க வரி விதிப்பில் பெரும் இலாபங்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த வரிகளை அகற்றியதுடன்—அதில் கிட்டத்தட்ட 7.5 பில்லியன் டொலர் இழப்பு—அவர் ஆஸ்திரேலிய துருப்புக்கள் காலவரையறையற்று ஆப்கானிஸ்தானில் இருக்கும் என்று உறுதியளித்ததுடன், லிபரல்-தேசிய கூட்டணியை விட மிக அதிகமாக அகதிகளை அரக்கத்தனமாக சித்தரிப்பதிலும் முன்னிற்கும் என்று காட்டியுள்ளார்.

சமீபத்திய நாட்கள் முன்னோடியில்லாத வகையில் தொழிற் கட்சி மற்றும் லிபரல்கள் ஒருங்கிணைந்து நிற்பதைக் கண்டுள்ளன. Australian கருத்துப்படி, “பல பிரச்சினைகளில் இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு சென்டிமீட்டர் இடைவெளி கூட இல்லை.” சனிக்கிழமை லிபரல் தலைவர் டோனி அபோட் தொழிற் கட்சியின் “Fair Work” தொழில்துறை உறவுச் சட்டங்களை கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்தால் மாற்றாமல் வைக்கும் என்று உறுதியளித்தார். தொழிற் கட்சியின் சட்டமோ முந்தைய ஹோவர்டின் லிபரல் அரசாங்கத்தின் “வேலை விருப்பங்கள்” முறையில் இருந்து வேலைநிறுத்த-விரோத விதிகள் அனைத்தையும் தக்க வைத்திருந்தது.

தன்னுடைய பங்கிற்கு கில்லார்ட் முந்தைய ஹோவர்ட் அரசாங்கத்தின் அருகிலுள்ள வறிய நாட்டிலுள்ள காவல் முகாமிற்கு அகதிகளை அகற்றும் கொள்கையை அப்படியே ஏற்றுள்ளார்—ஹோவர்டின் நௌரு, மனுஸ் தீவுகளுக்கு பதிலாக இவர் கிழக்கு திமோரை விரும்புகிறார். மேலும் தனக்கும் ஆபோட்டுக்கும் இடையே தஞ்சம் கோருவோர் பற்றிச் “சில உடன்பாட்டிற்கான கருத்துக்கள் உள்ளன” என்றும் அறிவித்தார். இரு தலைவர்களும் இழிந்த முறையில் ஆஸ்திரேலிய கடல்களுக்கு பல படகுகளில் வந்துள்ள அகதிகளைப் பற்றி, இரு முக்கிய கட்சிகளின் கொள்கைகளாலும் ஏற்பட்டுள்ள பெருகிய பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டினரை கடுமையாக வெறுக்கும் தன்மையின் மூலம் திசைதிருப்ப பயன்படுத்துகின்றன.

நேற்று, தேர்தல் பிரச்சாரத்தின் உத்தியோகபூர்வ முதல் நாளன்று, கில்லார்ட் ஒரு படி மேலே சென்று, குடியேற்றைத் தடுத்து, நாட்டிலுள்ள நெரிசல் மிகுந்த சாலைகள், வறிய போக்குவரத்து முறை, உயரும் வீடுகள், அத்தியாவசிய தேவைகள் செலவீனங்கள், பெரிய நகரங்களில் சமூகப் பணிகள் சரிவு ஆகியவற்றிற்கு கூடுதலான மக்கள் தொகைதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். “நிலையாகத் தக்க வைத்துக் கொள்ளும் மக்கள் தொகை” என்று அவர் கூறுவது பல தசாப்தங்கள் குறைந்த நிதி ஒதுக்குதல் மற்றும் தொழிற் கட்சி , லிபரல் அரசாங்கங்கள் இரண்டுமே நடத்திய தனியார் மயம் ஆகியவற்றின் பாதிப்பில் இருந்து திசை திருப்பும் முயற்சியாகும். அதிக மறைப்பு இல்லாமல் அவர் “வெள்ளை ஆஸ்திரேலியா” உணர்வைத் தூண்டும் வகையில் நாட்டை உலகத்தின் மக்கட் பெருக்கத்திற்கு “புகலிடமாக உள்ளது” என்று கூறினார்.

நிதியச் சந்தைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் கில்லார்டும் அபோட்டும் 2013க்குள் வரவு-செலவுத் திட்ட உபரியைத் தோற்றுவிப்பதாக உறுதியளித்தனர். இதன் பொருள் 2008-09 ல் உலகங்கிலும் நிதியக் கரைப்பு ஏற்பட்டபோது வங்கிகளையும் பெருநிறுவன வணிகத்தையும் முட்டுக் கொடுத்து நிறுத்த அளிக்கப்பட்ட ஊக்கப்பொதிகள் விட்டுச் சென்றுள்ள பெரும் கடன்களை அடைப்பதற்கு சமூக நலச் செலவுகளைக் குறைப்பது என்பதாகும்.

அரசியல் ஸ்தாபனத்தில் மூன்றாவது கட்சியான பசுமைவாதிகள் முறைசாரா கூட்டணியை தொழிற் கட்சி அல்லது லிபரலுடன் “உறதி” நலன்களுக்காகக் ஏற்படுத்தத் தயார் என்ற குறிப்பை விரைவாகக் காட்டியுள்ளது—அதாவது பெருகிய மக்கள் அதிருப்திக்கு எதிராக இருக்கும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு. சனிக்கிழமை தலைவர் Bob Brown தான் கில்லார்ட் மற்றும் ஆபோட்டுடன் பேசியிருப்பதாகவும் எவருடனும் ஒத்துழைக்கத் தயார் என்றும் கூறினார்.

பசுமைவாதிகள் முந்தைய விருப்ப வாக்கை தொழிற் கட்சியுடன் மாற்றிக்கொள்ளும் உடன்பாட்டைக் கொண்டுள்ளது. இது கில்லார்டிற்கு அவருக்கு பதவியில் இருக்கத் தேவையான இரண்டாவது விருப்ப வாக்குகளைக் கொடுக்கும். பசுமைவாதிகளுக்கு மேல் மன்றமான செனட்டில் சமநிலைச் சக்தியைக் கொடுக்கும். இதன் விளைவு நடைமுறையில் தொழிற் கட்சி-பசுமைவாதிகள் கூட்டாட்சி என்று ஏற்கனவே டஸ்மானியா மாநிலத்தில் இருந்ததைப் போல் ஒன்று வருவதாகும். இது நிதியச் சந்தைகளின் கோரிக்கைகளான தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலலைமை மீது மிருகத்தன தாக்குதல்களை சுமத்தவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது தேர்தலில் வேட்பாளர்களை தொழிலாள வர்க்கத்தின் ஒரே உண்மையான மாற்றீடு என்ற வகையில் நிறுத்த முன்வந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள SEP வேட்பாளர்கள், முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை தளமாக கொண்டு, செல்வந்தர் அடுக்கின் நலன்களுக்கு என்று இல்லாமல் சமூகத்தின் பெரும்பான்மையினர் நலன்களுக்காக சமூகத்தை முழுமையாக மறுகட்டமைப்பு செய்ய ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும். (see: “ஆஸ்திரேலியா: சோசலிச சமத்துவக் கட்சி அதன் 2010 தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்கிறது ” ).

லிபரல்களை விட தொழிற் கட்சி அரசாங்கம் மீண்டும் வருவது “குறைந்த தீமை” என்ற பிரச்சாரத்தை அபிவிருத்தி செய்யும் பசுமைவாதிகளுக்கும் போலி “இடது” குழுக்களான Socialist Alliance போன்றவற்றிற்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரமானது தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜனக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைப்பதற்காகப் போராடும். இது மார்க்சிச இயக்கத்தின் சர்வதேசிய, வரலாற்று அஸ்திவாரங்களை தளமாகக் கொண்டிருக்கும். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படும்.