சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Cameron’s “Big Society:” Thatcherism’s new guise

காமெரோனின் “பெரும் சமூகம்” : தாட்சரிசத்தின் புதிய வேடம்

By Chris Marsden
20 July 2010

Use this version to print | Send feedback

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் “பெரும் சமூகத்” திட்டம் கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் கூட்டணியின் அடுத்த நான்கு ஆண்டுகளில் 85 முதல் 100 பில்லியன் பவுண்டுகளுக்கான வெட்டுக்களை சுமத்தும் முயற்சிகளுக்கு ஒரு கொள்கை ரீதியான நியாயப்படுத்துதலை கொடுக்கிறது.

லிவர்பூலில் அவரது பேச்சு, தாட்சரிச சந்தை அடிப்படைவாதத்தின் மறு உரையாகும், பொதுத் துறையை முற்றிலும் தனியார் மயமாக்குதல் மற்றும் பொதுநலச் செலவு விதிகள் அனைத்தையும் தகர்க்கும் நோக்கத்தைக் கொண்டது.

1987 லேயே மார்க்ரெட் தாட்சர் அனைவரும் அறிந்த விதத்தில் கூறியது, “பல மக்களும் தங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது என்றால் அதைத் தீர்த்து வைப்பது அரசாங்கத்தின் பணி என்று உணர்ந்திருந்த காலத்தை நாம் கடந்து விட்டோம் என்று நினைக்கிறேன். …அவர்கள் தங்கள் பிரச்சினைகளை சமூகத்தின் மீது திணிக்கின்றனர். உங்களுக்குத் தெரியும், சமூகம் என்று ஒன்றும் இல்லை. தனிப்பட்ட ஆண்களும் பெண்களும் உள்ளனர், மற்றும் குடும்பங்கள் உள்ளன. எந்த அரசாங்கமும் மக்கள் மூலமின்றி எதையும் செய்ய முடியாது, மக்கள் முதலில் தங்கள் மூலம் தங்கள் செயலைச் செய்ய வேண்டும்.”

காமரோன் தாட்சரின் வாரிசு, ஆனால் அவர் அதேபோன்ற வெளிப்படைத் தன்மையையோ, விரோதப் போக்கையோ காட்டமுடியாது, ஏனெனில் தாட்சரின் வெட்டுதல் மற்றும் தகர்த்தலின் விளைவுகள் பற்றி மில்லியன் கணக்கான மக்களின் கசப்பு அனுபவத்தை அவர் அறிவார். மாறாக அவர் இழிந்த முறையில் வெட்டுக்களை அறக்கட்டளைகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு “வாய்ப்புக்களை” திறக்கிறது என்றும் தனியார்மயம் தான் “கூடுதலான உள்ளூர் ஜனநாயகத்தை” எளிதாக்கும் வழிவகை என்றும் கூறியுள்ளார்.

காமெரோன் அறிவித்த திட்டத்தில் இல்லாத உண்மைத் தன்மை அவர் பயன்படுத்தியுள்ள வனப்புரையில் முற்றிலும் தலைகீழ் விகிதத்தில் உள்ளது. “பெரும் சமூகம்” பற்றி விளக்குகையில், “பெரும் கலாச்சார மாற்றம்” என்று கூறியுள்ளதுடன் “சுதந்திரம்”, “அதிகாரம் பெறுதல்” போன்ற சொற்களையும் பயன்படுத்தி அவர் நான்கு “முன்னோடி”த் திட்டங்களை லிவர்பூல், கம்ப்ரியாவில் உள்ள ஈடன் பள்ளத்தாக்கு, விண்ட்சர், மெய்டன்ஹெட் மற்றும் லண்டனில் சட்டன் பாரோ ஆகியவையே அவைகள். வேலையின்மையில் உள்ள இளைஞர்களை தொடர்புபடுத்தி, ஒரு மூடப்பட்ட உள்ளூர் pub ஐ திறத்தல், உள்ளூர் அருங்காட்சியகங்களை பராமரிக்கும் தன்னார்வத் திட்டத்தின் மூலம் நடத்துவது இவற்றில் அடங்கியுள்ளன.

இவை இன்னும் பிற திட்டங்களுக்கும் வங்கிகளில் எவரும் உரிமை கோராத, செயலற்று இருக்கும் கணக்குகளின் பணத்தை எடுத்து நிதி அளிக்கப்படும். இந்த முறை நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகளை அளிக்கும் என்று காமெரோன் கூறியுள்ளார். ஆனால் பைனான்சியில் டைம்ஸ் இது 60 மில்லியன் பவுண்டுகளைத்தான் கொண்டுவரும் என்று தெரிவிக்கிறது. மற்றவர்கள் “பெரும் சமூக வங்கிக்கு” இவ்விதத்தில் நிதியளிப்பது சட்டவிரோதமாகக்கூடும் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

நிதானமான திட்டங்களை விட மிக முக்கியமானது அவை வெறும் சிறு இனிப்புப் பொருள்கள்தான் என்ற வேதனைதரும் தகவல் ஆகும்.

திட்டமிடப்பட்டுள்ளதானது 1980 களுக்கு மீண்டும் திரும்புவது மட்டும் அல்ல. தாட்சர் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் மிகவும் சிறிதாக்கும் விதத்தில்தான் டோரிக்கள் இப்பொழுது மேற்கொள்ள இருக்கும் சிக்கன நடவடிக்கைகள் உள்ளன. காமெரோனுடைய உரை பிரிட்டன் “G20 நாடுகளிலேயே மிகப் பெரிய வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை” கொண்டிருப்பதற்குக் காரணம் அரசாங்கம் பல பணிகளையும் பொதுநலச் செலவுகளையும் செய்வதால்தான் என்று குற்றம் சாட்டியுள்ளது.

இப்பொழுது முதல் அரசாங்கம் “வீணாக, மேலிருந்து நிறையப் பணத்தைக் கொட்டும் அரசாங்கத் திட்டங்களில் ஈடுபடாது”, இவை பொதுத்துறை ஊழியர்களை “ஏமாற்றத் திகைப்பில் ஆழ்த்தி, களைப்படைய வைப்பாவைகளாக” மாற்றுவதுடன், திறமையான தனிநபர்களையும் “அரசாங்க உதவியை ஏதும் செய்யாமல் பெறுபவர்களாகவும்” மாற்றுகிறது என்று காமெரோன் கூறியுள்ளார். இதற்குப் பதிலாக இந்த அரசாங்கம் “தன்னார்வம், மக்களுக்கு உதவுதல், சமூக நடவடிக்கை ஆகியவை நிறைந்துள்ள புதிய பண்பாட்டை வளர்த்து, ஆதரவு கொடுக்கும்.” அதையொட்டி “பணத்தை வீணடிக்கும் மத்திய அதிகாரத்துவமுறை அகற்றப்படும்”, “பொதுப் பணிகளை புதிதாக அளிக்க முன்வரும் அறக்கட்டளைகள், சமூக முயற்சியுடையவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பை அளிக்கும்.” இவை அனைத்தும் “ஒரு சிறப்பு ஆர்வம் உடைய சமூகங்களைத் தோற்றுவிக்கும்.”

அறக்கட்டளைகளை சேர்த்துள்ளது ஒரு வெளிப்படையான மோசடி ஆகும். தங்கள் நிதிக் குவிப்பிற்கு மூன்றில் ஒரு பங்கிற்கு அறக்கட்டளைகள் அரசாங்கத்தை நம்பியுள்ளன. இது தவிர்க்க முடியாமல் வெட்டுக்களுக்கு உட்படும். அரசாங்க கொடையை முக்கியமாகப் பெறுபவர்கள்—தொழிலாளர்களின் மீது சுமத்தப்படும் வரிகளில் இருந்து பெறப்படுபவை—தனியார் நிறுவனங்களும் “சமூக ஸ்தாபனங்களும்” (இது அதிகம் மறைத்துக் கூறப்படாத பெருநிறுவனங்கள் தாம்). இதற்கு நிதி கொடுப்பவர்களாக இருப்பவர் தங்கள் வாழ்க்கைக்கும் அடிப்படை வசதிகளுக்கும் அடிப்படை சமூக நலன்களை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் ஆவர்.

காமெரோன் அறிவித்துள்ள பெயரளவுத் திட்டங்களுக்கு பின்னணியில், அரசாங்கத்தின் வெட்டுக்கள் பற்றிய செயல்திட்டம் வேலையின்மையில் வாடுபவர்களை மூன்று முதல் நான்கு மில்லியன்கள் எனத் தள்ளிவிடும். கல்விக் கூடங்கள் மற்றும் தனியார் நடத்தும் “இலவசப் பள்ளிகள்” மூலம் அரசாங்கக் கல்விமுறையை அழித்து, எல்லா இடங்களிலும், தேசிய சுகாதாரப் பணி உட்பட, செலவுகளைக் குறைத்துவிடும்.

“வெளியிலிருந்து வரும் வேலைகளை செய்யும் நிறுவனங்கள் உள்ளூர் அதிகாரங்களின் ஒப்பந்தத்தில் இருந்து பெரும் பரிசு மழை பெறத் தயாராகின்றன. குப்பை சேகரிப்பவர்கள் தொடங்கி பின் அலுவலக அதிகாரத்துவத்தினர் வரை அனைத்திற்கும் உறுதி அளிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு அவர்களுக்கு வரக்கூடிய ஒப்பந்தங்கள் இருமடங்காகும் என்று தெரிகிறது” என்று செய்தித்தாள் கூறுகிறது. “தனியார் சுகாதார நிறுவனங்களும் NHS மாற்றி அமைக்கும் திட்டத்தை ஒட்டி பில்லியன் கணக்கான பவுண்டுகளை எதிர்பார்க்கின்றன. இதில் பொது மருத்துவர்கள் 70 பில்லியன் பவுண்களை செலவழிக்கும் பொறுப்பை ஏற்பர்.”

லிபரல் டெமக்ராட்டுக்கள் இந்த முன்முயற்சிக்கு முழு ஆதரவைக் கொடுத்துள்ளனர். தன்னார்வ மற்றும் அறக்கட்டளைகள் நிறுவனங்களின் கூட்டுக் கூட்டம் ஒன்று டௌனிங் தெருவில் நடந்தபோது, கட்சித் தலைவரும் துணைப் பிரதமருமான நிக் கிளெக் “பெரும் சமூகத்தை” கட்டமைப்பதற்கு “முற்போக்கான மாற்றமும்” “முறையற்ற ஆதாயம் பெறுவோர் எண்ணிக்கையை குறைத்தலும்” தேவை என்றார்.

G20 ல் மிகப் பெரிய வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை பிரிட்டன் கொண்டிருப்பதற்குக் காரணம் ஏற்கனவே 1 டிரில்லியன் பவுண்டுகள் அளவிற்கு நாட்டின் வங்கிகளுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரும் நிதிய நிறுவனங்கள், அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு மட்டும் நலன்கள் கொடுத்த நிதியத் தொகுப்புப் பொதிகளும் இதைத் தொடர்ந்து உள்ளன.

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களால் கட்டமைக்கப்பட்ட சமூகச் சொத்துக்களைச் சூறையாடியதின் விளைவாக வந்துள்ள “அரசாங்கக் கடன் நெருக்கடியை” மேற்கோளிட்டு அரசாங்கம் இப்பொழுது தொழிலாளர்கள் இன்னும் அதிகம் தியாகம் செய்யவேண்டும், அப்பொழுதுதான் பவுண்டு ஆபத்திற்கு உட்படாது என்று அறிவிக்கிறது. இன்னும் தியாகங்கள் என்பது பொருளாதார நெருக்கடியைத் தருவித்த ஊக நடவடிக்கைகளில் ஈடுபட்ட, அதே பிணை எடுக்கப்பட்ட நிறுவனங்களை பழையபடி முட்டுக் கொடுத்து நிறுத்தத்தான் தேவை என்பதை அது குறிப்பிடவில்லை.

“பெரும் சமூகம்” என்பது சமூகப் பேரழிவிற்கு வழிவகையாகும். இதற்கான பொறுப்பு தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் மீது தான் உறுதியாக உள்ளது. அது பதவிக்கு வந்ததில் இருந்து அறிவித்துள்ள ஒவ்வொரு வெட்டு அறிவிப்பிலும், காமெரோனின் “பெரும் சமூக” உரை பிரிட்டனின் தொழிற்சங்கத் தலைவர்களிடம் இருந்து பாசாங்குத்தன வெற்றுக் கருத்துக்களைத்தான் தூண்டியுள்ளது.

தொழிற் கட்சியின் உத்தியோகபூர்வ விடையிறுப்போ, நிழல் காபினெட் அலுவலக மந்திரி Tessa Jowell டோரிக்களின் முயற்சிகள் தங்களுடையதுதான் என்று கூற முற்பட்டார்—காமெரோனின் உரையே “தொழிற் கட்சி அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்திய திட்டத்தை அற்பத்தனமாக வேறுபெயரிட்டுக் கூறுதல்” என்றார்.

தொழிற் கட்சியில் இப்பொழுது நடக்கும் தலைமைக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டேவிட் மில்பாண்ட் பொருளுரை, நோக்கம் என்பவற்றைப் பற்றி குறைகூறுவதற்குப் பதிலாக காமெரோன் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த முற்பட்டார். இந்த நடவடிக்கைகள் பெருவணிகத்திற்கு பெரும் உவப்பு தருகிறது, மேலும் ஒப்பந்த நிறுவனங்கள், சமூக முயற்சிகள் ஆகியவற்றில் தொடர்புடைய பல தொழிற் கட்சி ஆதரவாளர்களுக்கும் பரிசு மழை கொடுக்கும் திறனைக் கொண்டவை என்பதை அவர் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார்.

தொழிலாளர வர்க்கத்தின் எதிர்ப்பை முடக்கித் திசைதிருப்பும் செயலுக்கு தொழிற்சங்கங்களை நம்பியுள்ள முதலாளித்துவமுறை அதன் நெருக்கடித் தன்மையை பயன்படுத்தி சமூக முறையை மாற்றி அமைக்க பெரும் திட்டத்தை செயல்படுத்துகிறது. அவர்களுடைய நோக்கம் இரண்டாம் உலகப் போரை அடுத்து உடனடியாக நிறுவப்பட்ட பொதுநல அரசாங்க கருவிகளையே தகர்த்து அழித்தல் ஆகும். அதற்கு முன்னோடியில்லாத வகையில் செல்வத்தை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெரும் செல்வக்கொழிப்புடையவர்களுக்கு மறுபகிர்வு செய்கின்றனர்.

எனவேதான் காமெரோனின் சொல்லாட்சி, அறம், பொதுத் தர்மம், அனைவரும் வாழ வேண்டும் என்ற கருத்து போன்றவை விக்டோரியா சகாப்த நினைவில் உள்ளது. அது ஒன்று தான் குறிப்பிடத்தக்க நிலைப்பாடு. அதில் இருந்து தான் இந்த நடவடிக்கைளின் பாதிப்பு நிர்ணயிக்கப்பட முடியும்.