சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French police use live ammunition against riots over police killings

பொலிஸ் கொலைகளை எதிர்க்கும் கலகங்களை அடக்குவதற்கு உண்மையான தோட்டாக் குண்டுகளை பிரெஞ்சுப் பொலிசார் பயன்படுத்துகின்றனர்

By Antoine Lerougetel and Alex Lantier
20 July 2010

Use this version to print | Send feedback

கடந்த வாரத்தில் மத்திய பிரான்ஸிலுள்ள Saing-Aginan கிராமம், மற்றும் Grenoble புறநகர்ப்பகுதி ஆகிய இடங்களில் பொலிசிடம் இருந்து தப்பியோட முயற்சித்த இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக்கொலைகளை அடுத்து வெடித்த கலகத்தை எதிர்கொள்ளும் விதத்தில் பொலிசார் பெருமளவு குவிக்கப்பட்டதுடன், உண்மையான தோட்டாக் குண்டுகளாலும் சுட்டனர்.

தென்கிழக்கு பிரான்ஸில் Grenoble இல் உள்ள Alpine நகரத்தின் சுற்றாடலிலுள்ள பகுதியான La Villeneuve அருகே ஒரு காரை ஜூலை 15-16 இரவு விரட்டிச் செல்லுகையில் பொலிசார் 27 வயதான Karim Boudouda வை அவருடைய வீட்டிற்கு முன்னிலையிலேயே தலையில் சுட்டுக் கொன்றனர்.

அவர் ஒரு கசினோவில் ஆயுதமேந்திய கொள்ளையில் பங்கு பெற்றதாகச் சந்தேகிக்கப்பட்டார். அவருடைய காரின் பின்புறத்தில் கசினோவில் இருந்து திருடப்பட்ட 20,000 யூரோக்கள் கொண்ட பை இருந்ததாகப் பொலிஸார் கூறினர். பௌடௌடாவின் காரில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டைத் தாங்கள் எதிர்கொண்டதாகவும், தற்பாதுகாப்பிற்காகத்தான் அவரைச் சுட்டதாகவும் பொலிசார் கூறினர்.

அதற்கு மறுநாள் இரவு Saint-Aignan அருகே ஒரு பொலிஸ் சோதனைச் சாவடி அருகே நிற்காமல் சென்ற பயணிகள் குழுவில் ஒருவரான Luigi Dequenet ஐ பொலிசார் சுட்டனர்.

ஞாயிறன்று அவருடைய சமூகத்தில் இருந்து 50 பேர்கள் Saint-Aignan பொலிஸ் தலைமையகத்தை கைக்கோடரி மற்றும் இரும்புத் தடிகளால் தாக்கினர். தெருக்களில் வரிசையாக இருந்த மரங்களையும் அவர்கள் வெட்டியதுடன், போக்குவரத்து விளக்குகள் கம்பங்களையும் தகர்த்தனர். கிராமத்தின் மேயர் Liberation இடம், “போக்கிரி கும்பலும் பொலிசும் கணக்குகளைத் தீர்க்க முற்பட்டன” என்றார்.

3,250 மக்கள் கொண்ட கிராமத்திற்கு இரு ஹெலிகாப்டர்கள் மற்றும் 300 பேர்கள் சட்டத்தை அமுல்படுத்த அனுப்பப்பட்டனர்.

கிரெநோபிள் பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர் மீண்டும் கலகம் தொடங்கியது. கரிம் வசித்திருந்த வீட்டிற்கு அருகே உள்ள பூங்கா ஒன்றில் அவருக்காக வெள்ளி மாலை மத குரு நடத்திய பிரார்த்தனைகளை கேட்டபின், 50 இளைஞர்கள் பஸ் நிறுத்தங்கள் மற்றும் ஒரு டிராமை இரும்புத் தடிகளாலும் பேஸ்பால் மட்டைகளாலும் தாக்கினர். பொலிஸ் கூற்றின்படி அன்று இரவு 50 முதல் 60 கார்கள் எரிக்கப்பட்டன. தவிர, கட்டிட வேலைக்கான இயந்திரங்களும் இரு கடைகளும் தீயிடப்பட்டன. மறுநாள் கிட்டத்தட்ட 15 கார்கள் எரிக்கப்பட்டன.

இளைஞர்கள் கைத்துப்பாக்கியால் அவர்கள் மீது சுட்டதாக கூறி சனிக்கிழமை அதிகாலை 2.30 க்கு பொலிஸ் மீண்டும் La Villeneuve குடியிருப்புப் பகுதியில் ஐந்து முறை உண்மையான தோட்டாக்களால் சுட்டனர். பின்னர் ஒவ்வொரு இரவும் அவர்கள் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் சுடப்பட்டன, ஞாயிறு இரு முறை என்றும் கூறினர்—ஆனால் எந்தப் பொலிஸும் காயமுறவில்லை.

உள்துறை மந்திரி Brice Hortefeux சனிக்கிழமை கிரெநோபிளுக்கு சென்றார். “மீண்டும் அங்கு பொது ஒழுங்கையும் அரச அதிகாரத்தையும் நிறுவுவேன்… அவசியமானால் அனைத்து வழிவகைகளையும் கையாண்டு.” என்றார். பின் சிறப்புப் பொலிஸ் பிரிவுகள் “அங்கு தேவைப்படும் வரை, அமைதி திரும்பும் வரை, இருக்கும்” என்றார்.

“இந்த நாட்டில் ஒரு எளிமையான, தெளிவான உண்மை உள்ளது: இங்கு குண்டர்களுக்கும், தவறிழைப்பவர்களுக்கும் எதிர்காலம் இல்லை, ஏனெனில் மக்கள் சக்திதான் எப்பொழுதும் வெற்றியடையும்.” என்றார் அவர்.

ஒரு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்துவதற்கு La Villeneuve விற்கு ஒரு 15 நிமிட மின்னல் வேக வருகையை Hortefeux புரிந்தார். “விரைவாக என்று நான் கூறும்போது உடனடியாக என்பதே அதன் பொருள், அவ்விதத்தில்தான் பொது ஒழுங்கு, அரச அதிகாரம் ஆகியவற்றை மீண்டும் நாங்கள் நிறுவுவோம்.”

அந்த இரவு 300 கனரக ஆயுதம் ஏந்திய பொலிஸ்—பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படைப் பிரிவில் இருந்து 240 பேர் உட்பட—La villeneuve ல் முகாமிட்டனர். தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன, மற்றும் ஒரு பொலிஸ் ஹெலிகாப்டர் பகுதியின் மீது ஒளிவிளக்கை வீசியபடி தலைக்கு மேல் பறந்தது. குறைந்தது நாளை இரவு வரையிலேனும் பொலிஸ் படைகள் பகுதியின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

ஞாயிறன்று Boudouda வின் தாயார் அமைதி காக்க முறையீடு செய்து, Agence France-Presse இடம் தன்னுடைய மகனின் இறப்பில் இருந்த சூழ்நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு போராடப் போவதாக கூறினார். “பொலிசார் முற்றிலும் தவறாக நடந்து கொண்டனர், அவர்கள் முற்றிலும் தவறாக நடந்து கொண்டனர். அரசாங்க வக்கீலைச் சந்தித்து விசாரணை வேண்டும் என்று நான் கோரப்போகிறேன்.”

குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்மணி L’Humanite’ இடம் இமாமின் (மத குருவின்) உரை ஒன்றும் கலகத்தைத் தூண்டவில்லை என்றார். “கரிம் பௌடௌடா இந்த குடியேற்றப் பகுதியை சேர்ந்தவர், கோபத்தை காட்டியிருக்கும் இளைஞர்கள், தங்கள் நண்பரின் மரணத்தை சூழ்ந்துள்ள நிலைமைகளை ஏற்கவில்லை.” என்றும் அவர் கூறினார்.

வெள்ளி இரவில் இருந்து பொலிசார் 20 பேரைக் கைது செய்துள்ளனர். நான்கு பேர் பொலிசார் மீது சுட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஞாயிறு மாலை மேலும் இருவர் கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடைகளை கொள்ளையடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதன் பேரில், ஞாயிற்றுக்கிழமை மூன்று இளைஞர்கள் குற்றவியல் நீதிபதி முன் முறையீடு செய்வதாக இருந்தது. 15 வீடுகளும் சோதனையிடப்பட்டன.

நேற்று Liberation பத்திரிகை La Villeneuve இல் வசிக்கும் மக்களை மேற்கோளிட்டது; “இப்பகுதியினர் இறந்த இளைஞர் மரணத்தை மிக மோசமாகக் கருத்திற் கொண்டுள்ளனர். அவர்கள் (பொலிசார்) அவரை இறக்கும்வரை தரையிலேயே விட்டு, வண்டியில் எடுத்துச் செல்வதற்குப் பதிலாக சடலத்தை தெருவிலேயே விட்டுவைத்தனர்.” இதே போன்ற புகார்களை இப்பகுதியில் பலமுறை தான் கேள்வியுற்றதாக பத்திரிகை கூறியுள்ளது. “அவர்கள் அவர் வசிக்கும் பகுதியிலேயே கொல்லுவதற்கு வந்தனர்…. அவர் தாயார் கண்முன்னாடியே கொன்றனர்.”

இருவரை போலிசார் கொன்றதானது —உள்ளூர் மக்கள் மீது உண்மையான தோட்டாக்களை சுடுவதற்கு பொலிசுக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி— Grenoble, St.Aignan ல் வசிக்கும் மக்களுக்கு எதிரான ஆக்கிரோஷ நடவடிக்கைகள் மட்டும் அல்லாமல் முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். Hortefeux ன் “மின்னல் வேக” La Villeneuve க்கு வருகை, முக்கிய அரசாங்க அதிகாரிகள் இத்தகைய பகுதிகளை ஒரு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நாட்டில் எழுச்சி செய்யும் நகரங்களில் இருந்து மாறுபட்ட விதத்தில் நடத்தப்போவதில்லை என்ற உண்மையைத் தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இது சமூக சமத்துவவமின்மை ஆழ்ந்திருத்தல் மற்றும் இனவெறி, சட்டம்-ஒழுங்கு சீர்படுத்துதல் என்ற பெயரில் கூறப்படும் வனப்புரைகளின் அரசியலளவில் குற்றம் நிறைந்த விளைவுதான். பிரெஞ்சு அரசியல் முழுவதும் இவைதான் இப்பொழுது படர்ந்துள்ளன.

இத்தகைய முறையீடுகளானது செய்தி ஊடகம் நிக்கோலா சார்க்கோசியை அவர் 2007 தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னிருந்து அவரை அது பற்றிக் கொள்வதற்கும் அடிப்படையாக இருந்தன. அவருடைய முக்கிய எதிர்ப்பாளர் செகோலீன் ரோயல் (PS) பிரச்சாரத்திலும் இவை இருந்தன. அரசியல் ஸ்தாபனமானது சமீபத்திய பொலிஸ் வெறித்தனத்தற்கு சிறிதும் தயக்கமின்றி ஆதரவைக் கொடுத்துள்ளது. PS ன் செய்தித் தொடர்பாளர் Benoît Hamon, அரசாங்கத்தை, “பாதுகாப்பற்ற தன்மைக்கு எதிரான போராட்டத்தில்” அதிக எண்ணிக்கையில் எதிர்த்தரப்பினரால் சூழப்பட்டது என்று குறை கூறியுள்ளார்—அதாவது தொழிலாள வர்க்கத்தின் மிக அடக்கப்பட்ட பிரிவுகளுக்கு எதிராக போதுமான பொலிசாரை நிலைநிறுத்தவில்லை என்று.

ZUS (எளிதில் தூண்டப்படும் நகர்புறப் பகுதிகள் —Sensitive Urban Zones) பலவற்றுள் La Villeneuve ம் ஒன்றாகும். சமூக அளவில் பெரும் இழப்பிற்குட்பட்ட இப்பகுதிகளில் பிரான்ஸ் நெடுகிலும் 4.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ZUS ன் தேசிய கண்காணிப்பு பிரிவின் டிசம்பர் மாத அறிக்கையின்படி, வறுமை என்பது இப்பகுதிகளில் தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முன்பே 2008ல் ZUS ல் 18-24 வயதுப் பிரிவிற்குள் வேலையின்மை என்பது 41 சதவிகிதத்தை அடைந்து விட்டிருந்தது.

அரசியல் ஸ்தாபனமானது எழுச்சி பெறும் அதிருப்தியையும் சமூக துன்பநிலையையும் சமாளிக்க பொலிஸ் அடக்குமுறையைக் கையாள முற்படுகிறது. அதே நேரத்தில் மக்களின் மற்ற பிரிவுகளை குழப்பத்தில் வைத்திருக்கும் விதத்தில் குடியேறுபவர்கள் வசிக்கும் புறநகர்ப் பகுதிகள் பற்றி இனவெறித் ஆத்திரமூட்டல்களை நடத்துகிறது.

“கழிசடைகள்” என்று குடியேறியுள்ள இளைஞர்களுக்கு எதிரான இனவெறிக் காழ்ப்பை சார்க்கோசி வெளிப்படுத்தியது, ஒருமுறை பாரிஸ் புறநகரான Clichhy-sous-Bois ல் பொலிசிடம் இருந்து தப்பியோட முயன்ற இரு இளைஞர்களான Zyad Benna, Bouna Traroe இறப்பை ஏற்படுத்தியது. இது மூன்று வார காலம் பிரான்சின் புறநகரங்களில் கலகங்களைத் தூண்டியது. இதற்கு விடையிறுக்கும் விதத்தில் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக் மூன்று மாத கால அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார். அதற்கு “இடது” கட்சிகளின் ஆதரவும் இருந்தது.

2007 ல் இரு இள வயதினரான Larami மற்றும் Moushin பாரிஸ் புறநகர் Villiers-le-Bel ல் பொலிசுடனான மோதலில் கொல்லப்பட்டனர். பொலிசார் அந்த இடத்தை விட்டே ஓடினர். இது மூன்று நாட்கள் கலகத்தைத் தூண்டியது. அப்பொழுது பொலிஸ் அடையாளம் தெரியாத துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் தாங்கள் தாக்கப்பட்டோம் என்றனர். கலகத்தின் போது பிடிக்கப்பட்ட இளைஞர்கள் அவசர நீதிமன்றங்களில் கடுமையான தண்டனையைப் பெற்றனர்.

அரசியல் ஸ்தாபனத்தின் பொலிஸ் நடத்தும் கொலைகளை எளிதில் பொறுத்துக்கொள்ளுதல், இராணுவச் சட்ட முறையிலான அடக்குமுறையை மேற்கொள்ளுதல் என்பதானது பிரான்சில் உலகப் பொருளாதார நெருக்கடி வெடிப்பும், மக்களிடையே வெகுஜன சமூக அதிருப்தியும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இனவெறிச் சூழலை ஊக்கப்படுத்தும் பிற்போக்குத்தனத்தின் விளைபொருள் ஆகும்.

2008-09 வங்கிப் பிணை எடுப்புக்களுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ளும் விதத்தில் சார்க்கோசி, பர்க்காவைத் தடைசெய்தல் மற்றும் ஒரு இனவெறி “தேசிய அடையாள” பிரச்சாரத்தை கொண்டுவந்தார். இவை தொழிலாள வர்க்கத்தை இன மற்றும் நிறப் பின்னணி அடிப்படையில் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது ஆகும். இப்பிரச்சாரங்கள் அரசியல் ஸ்தாபனத்தின் எந்தப் பிரிவில் இருந்தும் உண்மையான எதிர்ப்பை பெறவில்லை. இது இன்னும் கூடுதலான வகையில் இன அழுத்தங்களுக்கு சூடேற்றியுள்ளது. அரசியல்வாதிகளும் செய்தி ஊடக பிரமுகர்களும் குறிப்பாக உலகக் கால்பந்து கோப்பையில் தோற்கடிக்கப்பட்ட பிரெஞ்சுக் குழுவில் இருந்த வெள்ளையரல்லாத உறுப்பினர்களை “கழிசடைகள்” என்று முத்திரையிட்டுக் கண்டித்தனர்.

சமீபத்திய கொலைகளும் அடக்குமுறைகளும் தெளிவாக்குவதுபோல், இத்தகைய முன்னெடுப்புக்கள் உத்தியோகபூர்வ அனுமதி பெற்ற வலுவான ஆற்றலை தொழிலாள வர்க்கத்தின் அதிருப்திக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்பதற்கான அரசியல் அடிப்படையைத்தான் கொண்டுள்ளன.