சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany’s ex-defence minister warns of a “cold military putsch”

ஜேர்மனியின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி “இரக்கமற்ற இராணுவ சதி” பற்றி எச்சரிக்கிறார்

By Johannes Stern
24 July 2010

Use this version to print | Send feedback

Spiegel ஓன்லைன் சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு தகவல்படி, ஜேர்மன் இராணுவத்தில் திட்டமிடப்பட்டுள்ள அடிப்படைச் சீர்திருத்தம் ஜேர்மனிய இராணுவத்தின் தலைமை அதிகாரியின் பதவியை வலுப்படுத்துவதை முக்கிய கூறுபாடாகக் கொண்டிருக்கிறது. இந்த இராணுவக் கட்டுப்பாட்டை அமைப்புக்கு மத்தியத்துவப்படுத்தப் படுவதுடன், தலைமை அதிகாரி அவருடைய முக்கிய அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தையும் பெறுவார்.

இதற்கு பதிலாக, இராணவத்தின் பல பிரிவுகளில் (தரைப்படை, விமானப்படை, கடற்படை, மருத்துவப் பணி என) உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சரகத்தில் தங்கள் செல்வாக்கையும் முக்கிய பங்கினையும் இழப்பர்.

ஜேர்மன் இராணுவத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் இப்பொழுது திறைமையாக இல்லை, வழிவகைகள், நடைமுறைகள் தற்போதைய தேவையை நிறைவு செய்வதில்லை என்று பாதுகாப்பு அமைச்சரகம் ஜூன் 30 அன்று வெளியிட்ட “புதிய ஜேர்மன் இராணுவ திட்டத்திற்கான வழிகாட்டுமுறைகளில்“ கூறப்பட்டுள்ளது.

Spiegel கருத்துப்படி பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடர் சூ கூட்டன்பேர்க் (CSU), ஏப்ரல் மாதம் நிறுவிய குழு இராணுவத்தில் இருக்கும் குறைபாடுகளை களைந்து ஒரு புதிய, திறமையான கட்டுப்பாட்டு முறையை கொண்டுவந்து இராணுவம் சீர்திருத்தப்படுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இத்திட்டங்களைப் பற்றிக் கருத்துக் கூறிய முன்னாள் பாதுகாப்பு மந்திரி வில்லி விம்மர் (CDU), “இரக்கமற்ற இராணுவச் சதி” பற்றி எச்சரித்துள்ளார். Freitag வார ஏட்டிற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் விம்மர் “சில இராணுவ வட்டங்கள் வரலாற்றின் படிப்பினைகளுக்கு” திரும்ப வேண்டும், “மூன்றாம் குடியரசின் இராணுவமான Wehrmacht பயன்படுத்தப்பட்ட” தீர்வுகளுக்குத் திரும்ப வேண்டும், “அரசாங்கத்தின் மையத்தில் மீண்டும் இராணுவத் தலைமையை இருத்தும் பிரஷ்ய மரபுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறுகின்றன.” என்றார்.

விம்மரின் கருத்துப்படி இராணுவத்தின் தலைமையிடத்தில் இப்பொழுது “மீண்டும் முன்னைய பெருமைக்கு அது திரும்ப முடியுமா என்ற வாய்ப்பை” சிந்திப்பவர்கள் உள்ளனர். இப்போக்கு இராணுவத்தின்மீது “அரசியல் கொண்டுள்ள மேலாதிகத்தை'' வினாவிற்கு உட்படுத்துகிறது. “இதைத் தொடர்ந்து கட்டாய இராணுவ சேவைக்கு வழிவகுக்கப்படும், அதன் பின் வெளிநாட்டு இராணுவ பணிகளில் பாராளுமன்றம் என்ன செய்ய வேண்டும் என்ற அதிகாரமும் முன்வைக்கப்படும்” என்று அவர் எச்சரித்தார்.

கெய்சர் வில்ஹெல்ம் பேரரசு, வைமார் குடியரசு மற்றும் நாஜிக்காலம் ஆகியவற்றின் கீழ் அடையப்பட்ட அனுபவங்களுக்கு பின்னர் ஜேர்மனியில் இராணுவ தலைமைத் தளபதியின் அதிகாரம் பெரிதும் ஜேர்மனியில் குறைக்கப்பட்டு, இராணுவத்தின் மீதான பாராளுமன்றக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த காலத்தில் இராணுவத் தலைமையின் நிலைமை, அரசாங்கத்திற்குள் அரசாங்கம் என்ற முறையில் இராணுவம் ஓரளவிற்குச் செயல்பட்டது. இது இரு உலகப்போர்கள் மற்றும் நாஜி சர்வாதிகாரம் நிறுவுதல் தயாரிப்பிற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் கணிசமாக உதவியது.

மே 5,1955ல் ஜேர்மனிய ஆயுதப்படைகள் முறையாக மீண்டும் நிறுவப்பட்டபோது, இந்த வரலாற்று அனுபவத்தின் பொருள் “இராணுவத் தலைமை” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் தலைமை அதிகாரி இராணுவத்தின் மிகஉயர்ந்த அதிகாரியாக இருப்பார், அவரது அதிகாரம் இராணுவத்தின் பல பிரிவு அதிகாரிகளும் உத்தரவுகளை அனுப்பவது என்பதோடு மட்டும் இருந்தது. இதில் இராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் கிடையாது. அதாவது போர்க்களத் தளபதி துருப்புக்களுக்கு இடும் அதிகாரம் போன்றது கிடையாது. நீண்டகாலமும் இவருடைய நிலைமை “உத்தரவிடுவதற்கு துருப்புக்கள் இல்லாத தளபதி” என்று விவரிக்கப்பட்டது.

முதலாளித்துவத்தின் நெருக்கடி புதிய சவால்களையும் இடர்களையும் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்திற்கு உள்நாட்டிலும் வெளியேயும் கொடுக்கும் சூழலில், இத்தடைகள் இறுதியில் அகற்றப்பட உள்ளன. இப்பொழுது அமைப்பு “துருப்புக்களுக்குக் கட்டளையிடும் தளபதி தேவை” என்பதுதான்.

இராணுவத்திற்கு கணிசமான அதிகாரங்கள் தேவை என்று கூறும் பின்னணியில், தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) க்குள்ளேயே எச்சரிக்கையை வலியுறுத்தும் குரல்கள் எழுந்துள்ளன. தாராளவாத ஜனநாயகக் கட்சி பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் எல்க்க கொவ் இச்சீர்திருத்தம் பற்றிய திட்டங்களை தனது கட்சி ஏற்கத்தயாராக உள்ளதா இல்லையா என்பது பற்றித் தனக்கு இன்னமும் தெரியாது என்று கூறிவிட்டார்.

சமூக ஜனநாயக கட்சியும் (SPD) மற்றும் பசுமைக் கட்சியும் (Green Party) சற்றே மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன. இரண்டும் கூட்டன்பேர்க்கின் திட்டமான மிக உயர்ந்த இராணுவ அதிகாரிக்கு கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கப்படுவதற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. சமூக ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற பிரிவின் பாதுகாப்புப் பிரிவு செய்தித் தொடர்பாளர் றைனர் ஆர்நோல்ட் Spiegel online இடம் “தலைமை அதிகாரி இராணுவப் படைகளின் அதிகாரிகளின் மேலாளராக செயற்படுவது பொருத்தமானதுதான்“ என்று தான் கருதுவதாகத் தெரிவித்தார்.

இதேபோல், பசுமைவாதிகளின் பாதுகாப்புப் பிரிவுச் செய்தித் தொடர்பாளர் ஒமிட் நொரிபூர் தலைமை அதிகாரிக்கு அதிகாரங்களை விரிவுபடுத்துவது சரியானதுதான் என்று நினைக்கிறார். “போதுமான கட்டுப்பாடுகளும், சமநிலைகளும் அதற்கு ஏற்ப இருக்கும் வரையில் கொள்கையளவில் தலைமை ஆய்வாளரின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கு நான் எதிராக இல்லை.” என்று அவர் கூறினார்.

பசுமைவாதிகளும் சமூக ஜனநாயக கட்சியும் கூட்டன்பேர்க்கின் திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதில் வியப்பேதும் இல்லை. 2002இல் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி ஏற்கனவே தலைமை அதிகாரியின் நிலையை வலுப்படுத்தி, போஸ்ட்டாமில் உள்ள ஆயுதப்படைகளின் நடவடிக்கை கட்டளையகத்தை அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் இருத்தியது. கூட்டன்பேர்க்கின் சீர்திருத்தம் பற்றிய திட்டங்கள் முந்தைய பாதுகாப்பு மந்திரி பீட்டர் ஸ்ட்ருக்கினால் (SPD) ஓரளவு நிறைவேற்றப்படும் விதத்தில் அவர் “இராணுவம் பற்றிய கருத்துப்படிவம் கோடிடப்படுதல்” என்பதை வெளியிட்டபோது எதிர்பார்க்கப்பட்டது. மேலும் 2006ல் வெளிவந்த “ஜேர்மனியின் பாதுகாப்புக் கொள்கை மற்றும் இராணுவம் வருங்காலம் பற்றிய வெள்ளை அறிக்கையுடனும்” அது இணைந்துள்ளது.

“ஜேர்மனியின் பாதுகாப்புக் கொள்கை” என்பது பற்றிய வெள்ளை அறிக்கையில் தடுக்கும் இராணுவத் தாக்குதல்கள், மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் குறுக்கிடுதல், ஏகாதிபத்திய நலன்களை இராணுவ ரீதியாகப் பாதுகாத்தல் ஆகியவை அடங்கியிருந்தன.

இந்த “பணிகள்” புதிய வழிகாட்டு நெறிகளிலும் அடங்கியுள்ளன, ஆனால் இவை இப்பொழுது “சமச்சீரற்ற இயக்கத்திற்கு (asymmetrical dynamics)” கீழ்ப்பட்டவை.

அடுத்த தசாப்தம் “அச்சுறுத்தல் எழுச்சியைக் கொடுக்கும்”, மேலும் “மரபார்ந்த மற்றும் சமச்சீரற்ற இயக்க இடர்களையும்” கொடுக்கும் என்ற விவரிக்கப்பட்டுள்ளது; இதில் புது நாடுகள் அரங்கில் நுழையும், இவற்றின் “பெருகிய அரசியல், பொருளாதார வலிமை நம் மதிப்புக்கள், தரங்கள் மற்றும் நலன்களை” மாற்றும் என்று கூறப்பட்டுள்ளது. நிதிய, பொருளாதார நெருக்கடியின் விளைவுகளும் இப்பொழுது கவலையுடன் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை “அரசியல் ஒழுங்கை மேற்கு உலகம் நிர்ணயிக்கும் சாத்தியப்பாடுகளை” கட்டுப்படுத்தும்.

இந்தப் பின்னணியில் வழிகாட்டி நெறிகள் இராணுவத்தின் பணிகளை மூன்று மட்டங்களில் வரையறுக்கின்றன. மறுபக்கத்தில் ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள் ''மோதலை தடுத்தல்'', நெருக்கடி மேலாண்மை, ''தலையீடுகளுக்கான மிக சாத்தியமானதாக'' உள்ள ''சர்வதேச பயங்கரவாத்த்திற்கு எதிரான'' போராட்டம் என்ற உள்ளடக்கத்தில் செய்யப்படுகின்றது.

ஆனால் இதைத்தவிர தேசிய பாதுகாப்பும் முக்கிய பங்கைக்கொண்டுள்ளது; இதில் “”நீடித்த, ஆழ்ந்த நெருக்கடியின்போது நட்புநாடுகளுக்கு ஆதரவளித்தல்” என்பதும் அடங்கியுள்ளது. இதைத்தவிர “துணை நடவடிக்கைகள்” என்ற பெயரில் ஜேர்மனியிலேயே “பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு”, “அரசியலைமைப்பின் பின்னணியில் இயலக்கூடிய மற்ற தேசியப் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒத்துழைக்கும் திறனும் அடங்கிருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் இராணுவம் ஆப்கானிஸ்தான் போர் போன்ற ஆக்கிரமிப்பு போர்களில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் என்பதுடன் ஜேர்மனிய ஏகாதிபத்திய நலன்களைக் காக்கவும் பயன்படுத்தப்படும். தொழிலாள வர்க்கம் தன் தோள்களில் நெருக்கடியின் சுமையை ஏற்றுவதைத் தடுக்க நடத்தும் போராட்டங்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அடக்கித் தோற்கடிக்கவும் பயன்படுத்தப்படும்.

வழிகாட்டி நெறிகளின்படி, இந்த “பணிகள்” ஒரு தலையீட்டுத் திறன் கொண்ட இராணுவமாக முற்றிலும் மாற்றப்பட்ட இராணுவத்தினால்தான் திறம்படச் செயல்படுத்த முடியும். எனவே அனைத்து வழிவகைகள், நடவடிக்கைகள், மற்றும் இராணுவத்தினுள் இருக்கும் திட்டங்கள் “தலையீடு என்ற நிலைப்பாட்டின்கீழ்” ஆராயப்படும். “தலையீட்டு நோக்குநிலை கவனங்கள் என்பது இராணுவத்திற்கு முழுமையாகப் பொருந்தும். தலையீடு என்பது முக்கிய வழிவகையாகும். தலையீட்டு நோக்குநிலை, இந்த ஒருங்கிணைந்த நிகழ்வுப்போக்கில் இராணுவத்தினை நிரந்தரமாக இணைத்துக்கொள்வது முக்கியமாக்கும்.”

இறுதியில், இந்த இலக்கைக் கருத்திற் கொண்டு, துருப்புக்களின் எண்ணிக்கை 150,000-205,000 படையினர்கள் என்று குறைக்கப்படும். கட்டாய இராணுவ சேவை அகற்றப்பட்டு, முற்றிலும் தொழில்நேர்த்தி உடைய இராணுவம் அமைத்தல் அடிப்படைக் கட்டுமானக்குழுவினால் பரிசீலிக்கப்படுகின்றன.

இராணுவத்தின் மீதான பாராளுமன்றக் கட்டுப்பாடு என்பது இத்தகைய தலையீட்டு நோக்குநிலையுடைய இராணுவத்துடன் பொருந்தி இராது. சமீபத்தில் ஹாம்பேர்க்கில் நகரில் உள்ள இராணுவத்தலைமை கல்வி உயர்கூடத்திற்கு ஆற்றிய முக்கிய உரையில் கூட்டன்பேர்க் இராணுவக் குறுக்கீட்டிற்கு“ பாராளுமன்றம் உடன்பாடு கொடுத்தல் என்ற அரசியலமைப்புத் தேவை, சில சமயம் ஒரு கடினமான வழிவகையாகக்” கூடும் என்று விவரித்தார்.

ஜேர்மனிய மக்களில் 70 சதவிகதத்திற்கும் மேலானவர்கள் ஆப்கானியப் போரை எதிர்த்து செப்டம்பர் 2009ல் ஜேர்மனிய தளபதி ஜோர்ஜ் கிளீன் உத்தரவிட்ட ஒரு நடவடிக்கையில் 150 பேர் கொல்லப்பட்ட குண்டுஸ் படுகொலை போன்ற இராணுவத்தின் குற்றங்கள் பற்றி ஆழ்ந்த சீற்றம் கொண்டுள்ளனர்.

ஆளும் உயரடுக்கு ஆப்கானிஸ்தான் போரைப் பயன்படுத்தி 1945க்குப் பின்னர் இராணுவத்தின்மீது சுமத்தப்பட்ட தடைகளை படிப்படியாக அகற்ற விரும்புகிறது. இராணுவ சீர்திருத்தம் இத்திசையில் கணிமான ஒரு முன்னோக்கிய அடியாகும். பெரும்பாலான மக்கள் போரையும் இராணுவவாதத்தையும் வெறுக்கையில், ஆளும் உயரடுக்கு மீண்டும் சமூகத்தின்மீது இராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத் முனைகின்றது.

தன்னுடைய முக்கிய உரையில், மக்களிடம் இருந்து அவர் கோருவதை கூட்டன்பேர்க் தெளிவாக்கியுள்ளார். வருங்காலத்தில் கூட்டாட்சியைப் பொறுத்த வரை “குறுக்கீடுகளும், போர்களும்” அதிகமாக இருக்கும். இராணுவப் பிரிவுகளும், “குறிப்பாக சமூகமும்” “தலையீடு செய்வதற்குத் தயார் நிலையில் இருப்பதுடன்”, “தியாகங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்.” “பொதுவாகத் தயார்நிலையில் இல்லாத ஒரு சமூகம், இராணுவப்பிரிவின் பாதிப்பிற்கு வெளியே இருக்கும் நிலையில், இராணுவம் தியாகம் செய்யத் தயார் என்னும்போது, அதன் பொருள் வீழ்ச்சி என்பது தவிர்க்க முடியாதது.”

1930களுக்குப் பின்னர் முதலாளித்துவத்தின் மிக ஆழ்ந்த நெருக்கடிக்கு நடுவே இவைதான் ஜேர்மனிய ஆளும்வர்க்கத்தின் சொற்கள் ஆகும். ஜனநாயக மரபுகள் இல்லாத நிலையில், ஜேர்மனிய முதலாளித்துவம் எப்பொழுதும் பொருளாதார நெருக்கடிக்கு இராணுவத்தை வலுப்படுத்துதல், சர்வாதிகார அமைப்புக்கள் நிறுவுதல், போர்கள் என்றுதான் விடையிறுப்பைக் காட்டியுள்ளது. இந்த “மரபுதான்” இப்பொழுது புதுப்பிக்கப்படுகிறது. தன்னுடைய இராணுவத் தலைமைக்கான உரையில் “மரபைக் பாதுகாத்தல்” நாஜிக்காலத்தில் “கடினமாக்கப்பட்டது” என்று கூட்டன்பேர்க் கூறும்போது, “பழைய ஜேர்மனிய இராணுவ வரலாற்றில் 1933க்கு முன் வெளிப்படையாக அனைத்துத் தொடர்புகளும் பிரிக்கப்பட்டிருந்தன” என்பதின் பொருள் அதுதான்.