சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australia: Gillard and Abbott stage sham election debate

ஆஸ்திரேலியா: கில்லார்டும் ஆப்போர்ட்டும் ஒரு போலித் தேர்தல் விவாதம் நடத்துகின்றனர்

By Patrick O’Connor, SEP candidate for the Senate in Victoria
26 July 2010

Use this version to print | Send feedback

தொழிற்கட்சி பிரதம மந்திரி ஜூலியா கில்லார்டுக்கும் எதிர்க்கட்சி லிபரல் தலைவர் டோனி ஆப்போர்ட்டிற்கும் இடையே நேற்றைய ஒரே தேர்தல் பிரச்சாரமாக நடந்த விவாதம் இரு தலைவர்களும் அகதிகள், குடியேறுபவர்களுக்கு எதிரான நீண்ட கருத்துக்களைக் கூறியது, உலகப் பொருளாதார நெருக்கடி, ஆப்கானியப் போர், சமூக இடர்பாடுகள் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றம் பற்றி தவிர்த்தது மற்றும் தொடர்ந்த பொய்களை கூறிய தன்மையைத்தான் கொண்டிருந்தது.

உத்தியோகபூர்வ பிரச்சாரத்தைப் போலவே, கவனத்துடன் ஜோடிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒரு வெறுமையைத்தான் கொண்டிருந்தது. கில்லார்டும் ஆப்போர்ட்டும் அவர்களுடைய செய்தி ஊடக, பொது உறவு ஆலோசகர்களால் முன்னதாகவே நல்ல பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தனர். விவாதம் எனக் கூறப்பட்ட நிகழ்வில் இருவருமே “தகவல் கொடுக்கும்” நிலைப்பாட்டைத்தான் கொண்டனர்; இது தலைவர்களின் தொடக்க, முடிவுரைகளின் வாடிக்கையான அறிக்கைகளைச் சுற்றி அமைந்தது. இதில் மூன்று செய்தியாளர்களான, டெய்லி டெலிகிராப்பின் மல்க்கம் வ்ஃவார், ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவ்யூவின் லவ்ரா ரிங்கல் மற்றும் ABC யின் கிறிஸ் ஊல்மான் ஆகியோருடைய வினாக்களுக்கு விடையும் நடுநடுவே கொடுக்கப்பட்டன. இரு முக்கிய கட்சிகளுக்கும் உண்மையான ஆதரவு ஏதும் இல்லை என்பதைத் தெளிவாகக் குறிக்கும் விதத்தில் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட விவாத நேரம் மக்கள் பெரிதும் விரும்பிப் பார்க்கும் சமையல் நிகழ்ச்சியான “Master Chef” ஒளிபரப்பு நேரத்துடன் கலக்காமல் மாற்றியமைக்கப்பட்டது.

இன்றைய Melbourne Age ல் வந்துள்ள தலையங்கம் ஒன்று நிகழ்வு பற்றி செய்தி ஊடகத்தின் எதிர்கொள்ளலை சுருக்கிக் கூறியது. “ஒரு தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதம மந்திரிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரே ஒரு தேசியரீதியான தொலைக்காட்சி விவாதம்தான் அனுமதிப்பது என்பது முன்னரே Age வருத்தப்பட்டு எழுதியது போல் ஜனநாயகத்திற்கு பெரும் பணியற்ற செயல் ஆகும். ஆனால், நேற்று இரவு விவாதத்திற்குப் பின்னர் இதுவும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்: இதைப்போல் இன்னும் இரு விவாதங்கள் நடந்தாலும் ஜனநாயகத்திற்கு எவ்வித நலனும் இருக்கப்போவதில்லை. விவாதம் என்ற சொல்லின் சாதாரண பொருளே இல்லாத ஒரு நிகழ்வு இது. ….தாங்கள் யாரை தேர்ந்தடுப்பது என்பது பற்றி ஆஸ்திரேலியர்கள் இந்த விவாதத்தில் இருந்து சிறிதும் தெளிவடைந்திருக்க மாட்டார்கள்.”

சிட்னி மார்னிங் ஹெரால்ட் கட்டுரையாளர் ஜாக்கொப் சவுல்விக் குறிப்பிடுவது: “இப்பிரச்சாரத்தின் வெற்றிடத்தில் ஒரு ஆர்வம் ஏற்படுத்தலாம் என்பது தொட்டிக்குள் மீன்பிடிப்பது போல்; ஆனால் அனைத்து முக்கிய கொள்கை பற்றிய கருத்துக்களிலும் இது வரை வெளிவந்துள்ள கருத்துக்களில் அடிப்படை நேர்மையற்ற தன்மை இருப்பது வியக்கத்தக்கது.”

இந்த வெற்றுத்தன்மை மற்றும் நேர்மையற்ற தன்மையின் இதயத்தானத்தில் இருப்பது, தொழிற்கட்சி அல்லது லிபரல் கட்சிக்கு உண்மையான சமூகச் சீர்திருத்தத் திட்டத்தை முன்வைக்க இயலாத தன்மைதான். ஒரு முந்தைய காலக்கட்டத்தில், கட்சித் தலைவர்கள் சமூக இடரை நீக்கும் குறிப்பிட்ட கொள்கைகளை விரிவாக்குவர், சமூகநலம் பெறும் வாய்ப்பை அதிகமாக்குவர், சமூகப் பணிகள், உள்கட்டுமானம் ஆகியவற்றை முன்னேற்றுவிப்பர்-இவ்வளவும் வெறும் வனப்புரையில் இருந்து முற்றிலும் கடினமானவை என்றாலும்கூட. இன்று அத்தகைய விவாதங்கள் நடைபெறுவதில்லை. ஏனெனில் இரு கட்சிகளுடைய மையச் செயற்பட்டியலும் தொழிலாள வர்க்கத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த சமூக நலன்களை அகற்றுதல், வாழ்க்கைத் தரங்களைக்குறைத்தல், சமூகநலச் செலவுகளைக் குறைத்தல், சந்தை ஆணைப்படிதான் சுகாதாரம் மற்றும் கல்விக்கான வாய்ப்புக்களை அளித்தல் என்று போய்விட்டது.

இச்சிக்கன நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு கிடையாது. எனவே அவை பற்றிக் குறிப்பிடப்படுவதில்லை. மாறாக பிரச்சாரம் முடிவில்லாத வகையில் ஒருபுறம் அரசியலில் வெற்றுத்தன்மை உடைய கோஷங்களை எழுப்புதல், மறுபுறம் பிற்போக்குத்தன திசைதிருப்பல்கள் மற்றும் எவரையேனும் பலிகடாவாக ஆக்குதல் என்ற ஆதிக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

கூடியிருந்த செய்தியாளர்கள் தொடுத்த முதல் கேள்வி இக்குறிப்பைக் காட்டியது-கில்லார்டும் ஆப்போர்ட்டும் “வெகுஜன எதிர்ப்பிற்கு எதிராக நிற்பது உண்மையான தலைவரின் அடையாளம் என்பதை ஒப்புக் கொள்ளுகிறார்களா?” என்று கேட்கப்பட்டனர்

“இந்த வெகுஜனம் பற்றிய குறிப்பிற்கு இருவரில் எவரும் எதிர்ப்புக்கூறவில்லை. MySchool and NAPLAN என்னும் தரப்படுத்தலுள்ள தேர்வு முறை சுமத்துவது பற்றிய தான் பள்ளி ஆசிரியைகளுடன் மோதியதை கில்லார்ட் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். அது பொதுக் கல்வி முறையை இன்னும் இல்லாதொழிக்கும். “ஆசிரியர்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தை உற்றுநோக்குவது ஒன்றும் எளிதல்ல….நான் அப்பொழுது அதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அது செய்து முடிக்கப்பட்டது.”

பல பிரச்சினைகளில் தொழிற்கட்சி பிரதம மந்திரி ஆப்போர்ட்டிற்கு வலது புறம் உறுதியாக நின்றார்-குறிப்பாக பெருநிறுவனங்களின் மீதான வரிகள் பற்றி. லிபரல் கட்சி இருக்கும் விகிதத்தை தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்திற்கு எதிராக கில்லார்ட் தான் வரிவிகிதத்தை 30ல் இருந்து 29 என்று குறைக்கும் தன் உறுதிமொழி பற்றி வலியுறுத்தினார். முழு ஊதியத்தைத் தாய்மார்களுக்கு 26 வாரங்களுக்கு இத்திட்டம் கொடுக்கும் ஒரு $2.7 பில்லியன் தாய்மைப்பேறு விடுப்புத் திட்டத்திற்காக நிதியளிப்பவதற்கு ஆப்போர்ட்டின் திட்டமான ஆஸ்திரேலியாவின் 3,200 பெருநிறுவனங்களின் இலாபங்கள்மீது 1.7சதவிகிதம் சிறப்பு வரி விதிப்பு என்பதை கில்லார்ட் தாக்கிப் பேசினார்.

பெரு வணிகம் மற்றும் நிதிய மூலதனத்தின் ஆதரவைப் பெறுவதில் தன் உறுதிப்பாட்டையும் கில்லார்டின் தாக்குதல் தெளிவாக்கியது. மார்ச் மாதம் முன்னதாகத் தனது லிபரல் கட்சியினர் எவரையும் கலந்து பேசாமல் தாய்மைப்பேறு விடுப்புத் திட்டத்தை ஆப்போர்ட் அறிவித்தபோது, அது பெருவணிகம் மற்றும் செய்தி ஊடகத்தில் இருந்து பரபரப்பான எதிர்ப்புக் குரல்களை எழுப்பியது. ஆளும் உயரடுக்கைப் பொறுத்தவரை, திட்டம் ஆப்போர்ட்டின் தலைமையிலான அரசாங்கம் நிலைக்குமா என்பது பற்றி தீவிர வினாக்களை எழுப்பியது. ஆயினும்கூட லிபரல் தலைவர் நேற்றைய விவாதத்திலும் திட்டம் பற்றி ஆர்வத்துடன் பேசினார். பெண் வாக்களார்களைப் பொறுத்தவரை கில்லார்டைவிட பின்தங்கி இவர் இருக்கிறார் என்னும் கருத்துக் கணிப்புக்கள் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தாய்மைப்பேறு விடுப்பை தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள பெருகிய நிதிய இடர்பாட்டுடன் ஆப்போர்ட் தொடர்புபடுத்தினார். “வாழ்க்கைச் செலவினங்களுடன் போராடும் குடும்பங்களுக்கு ஒரு நியாயமான செயல்” என்ற குறிப்புடன் அவருடைய ஆரம்ப உரை இருந்தது; “ஒரு பெரும் அடைமானத் தொகை, மளிகைப் பொருட்கள் விலை உயர்வு, பள்ளிக் கட்டணங்கள் இவற்றுடன் குடும்பத்தை நடத்துவதற்கான போராட்டம்” பற்றித் தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறினார். இத்தகைய வெற்றுப் பேச்சுக்களின் தன்மை மளிகைப் பொருட்களின் விலையைக் குறைக்க லிபரல் அரசாங்கம் என்ன செய்யும் என்ற வினாவிற்கு விடையளிக்க முடியாத போது விரைவில் வெளிப்பட்டது.

இந்த விவாதம் அகதிகள், குடியேறுவோர் பற்றி நீண்ட கருத்துப் பறிமாற்றங்களின் ஆதிக்கத்தையும் கொண்டிருந்தது. இரு தலைவர்கள் மற்றும் கூடியிருந்த செய்தியாளர்கள் பலமுறையும் “படகுகளை” நிறுத்துவது பற்றிக் குறிப்பிட்டனர். கில்லார்டோ, ஆப்போர்ட்டோ ஒருமுறைகூட சர்வதேசச் சட்டம், ஆஸ்திரேலியாவில் அகதிகள் முறையான. சட்டபூர்வ, ஜனநாயக உரிமைகளைக் கோரும் நிலைப்பாடு பற்றிக் குறிப்பிடவில்லை. மாறாக அவர்கள் கிழக்குத் தீமோரா அல்லது நௌருவாவா அகதிகள் காவல் மையத்திற்கு உகந்த இடமாக இருக்கும் என்பது பற்றி மோதிக்கொண்டனர். “சற்றே ஆழ்ந்து கவனித்தால், இங்கு அதிக அளவு தொழிற்கட்சிக்கும் லிபரலுக்கும் உடன்பாடு இருப்பது பெருகிய முறையில் உண்மை என்பது தெரியவரும்” என்று கில்லார்ட் சரியாகக் கூறினார்.

குடியேற்றம் பற்றி இரு தலைவர்களும் கடந்த காலத்தில் வந்த எண்ணிக்கை, வருங்காலத்தைப் பற்றிய கணிப்புக்கள் ஆகியவை பற்றி வாதிட்டனர். வெள்ளை ஆஸ்திரேலியா, தொழிற்கட்சியின் இனவெறி மற்றும் தேசியவாதம் ஆகிய பிற்போக்குத்தன கிணற்றில் இருந்து ஆழ்ந்த முறையில் கருத்துக்களை கில்லார்ட் எடுத்துக் கொண்டார். “ஒரு நிலைத்து நிற்கும், பெரியதானதல்லாத ஆஸ்திரேலியாவிற்கு” தன் ஆதரவை அவர் அறிவித்து அதுதான் ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையை பாதுகாக்கத் தேவை என்றும், ஒருவர் சொந்தவீட்டிற்கு விழைவது, கௌரவமான பணியை நாடுவது, சுகாதரம், கல்வி இவற்றை அடைவது, வாழ்விற்கு பரந்த அகலமான இடங்கள் கிடைப்பது“ ஆகியவை அனைவருக்கும் தேவை என்று வலியுறுத்தினார்.

பெரும்பாலான மக்களை எதிர்கொண்டுள்ள அவசரப் பிரச்சினைகள் பற்றி எவ்விதத் தீவிர விவாதமும் இல்லை. தங்கள் தொடக்க, முடிவுரைகளில் இரு தலைவர்களில் எவரும் உலகப் பொருளாதார நெருக்கடி பற்றிக் குறிப்பிடவில்லை. அதைப் பற்றி கேட்கப்பட்ட ஒரே ஒரு வினாவிற்கு விடையிறுக்கையில், கில்லார்ட், தொழிற்கட்சியின் ஊக்கப் பொதி நடவடிக்கைகளின் தாக்கங்கள் பற்றி பெருமை பேசுகையில், சர்வதேச அளவில் “நலிந்த தன்மைகள், சில தொந்திரவுகளின் அடையாளங்கள் இருப்பதாக” வெறுமே ஒப்புக் கொண்டார். உண்மை என்ன என்றால் உத்தியோகபூர்வ மந்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள முதலாளித்துவநாடுகள் வெகு சிலவற்றில் ஆஸ்திரேலியாவும் அடங்கியிருப்பது சீன உந்துதல் பெற்ற கனிப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதுதான். ஆயினும் ஒரு முறைகூட சீனா பற்றி விவாதத்தில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், இப்பொழுது ஊக்கப் பொதியில் இருந்து சிக்கன நடவடிக்கைகளுக்கு மாற்றுதலைத் தூண்டி ஒருங்கிணைந்த உலக மாற்றத்திற்குக் காரணமாக உள்ள சர்வதேச அளவில் பரவிவரும் அரசாங்கக் கடன்கள் நெருக்கடி பற்றியும் எந்த விவாதமும் இல்லை.

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை, தேவைப்படும் வரை அமெரிக்கத் தலைமையில் அங்கு நடக்கும் போரில் ஆஸ்திரேலியா பங்கெடுக்கும் என்ற உடன்பாடு இருந்தது. “எத்தனை காலம் அங்கு இருப்போம் என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடு என்று இல்லாமல், பணி முடியும் வரை என்று கூறலாம்” என்று கில்லார்ட் வலியுறுத்தினார்.

கில்லார்ட் பிரதமராக இருத்தப்படுவதற்குக் காரணமான கெவின் ரூட் அரசியல் சதி பற்றி மக்கள் கொண்ட கவலையையும் எதிர்ப்பையும் ஆப்போர்ட் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முயன்றார். ஆனால் அந்த நிகழ்வை இயக்கிய சக்தி வாய்ந்த பெருவணிக நலன்களைப் பற்றி அவர் விவாதிக்க முடியவில்லை; ஏனெனில் அவரும் அதே சக்திகளுக்குத்தான் கட்டுப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் கில்லார்ட் பின்பக்க கதவு வழியே உயர்த்தப்பட்டதில் தெரியவந்துள்ள மக்களுக்கு எதிரான சதி தொடர்கிறது என்ற உண்மையைத்தான் விவாதம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு கவனத்துடன் நடத்தப்பட்ட விவாதம், பொதுக்கூட்டங்களோ மற்ற நிகழ்வுகளோ, மக்கள் அறைகூவல் விடுதல் ஒருபுறம் இருக்க, சாதாரண மக்கள் வினா கூட இரு முக்கிய நடைமுறைக் கட்சித் தலைவர்களிடம் எழுப்ப முடியாமல் அமைந்த வகையில் இந்தப் பிரச்சாரத்திற்கு செயற்கை தன்மையைக் கொடுத்தது.