சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

BP spill washes ashore in Florida

பிரிட்டிஷ் பெட்ரோலிய கசிவு புளோரிடா கடலோரத்திற்கு ஒதுங்குகிறது

By Tom Eley
5 June 2010

Use this version to print | Send feedback

பிரிட்டிஷ் பெட்ரோலிய எண்ணெய்க் கசிவு தொடர்ந்து பரவுகிறது. வெள்ளியன்று எண்ணெய்க் கசிவு திரட்டுக்கள் புளோரிடாவின் வெள்ளை மணல் கடற்கரைகளில் காணப்பட்டதுடன், மாநிலத்தில் கஷ்டமான நிலையிலுள்ள சுற்றுலாத் தொழிலுக்கு பெரும் பாதிப்பைக் கொடுத்தன. லூயிசியானாவில் கெட்டியான எண்ணெய் கசிவுத் திரட்டுக்கள் உயிரினங்கள் அதிகமாக உள்ள ஆறுகள் கடலில் கலக்கும் இடத்திலும், சதுப்பு நிலங்களிலும் உள்ளே புகுந்தன. இதனால், எண்ணெயில் நனைந்துள்ள பறவகைகள், இறந்த காட்டு விலங்கினங்கள் போன்ற கொடூரமான உதாரணங்கள் தொடர்ந்து பெருகி வருகின்றன.

பிரிட்டிஷ் பெட்ரோலியமும் ஒபாமா நிர்வாகமும் எண்ணெய் கசிவை நிறுத்துவதை இரு உதவிக் குழாய் திட்டங்களில் ஒன்று தோண்டப்பட்டு அதை அடையும் வரை நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு குறைந்த பட்சம் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை ஆகலாம்.

அரசாங்க மற்றும் தனியார் மதிப்பீடுகளில் கூறப்பட்டுள்ள நாள் ஒன்றிற்கு 500,000 கலன்களில் இருந்து கிட்டத்தட்ட 4 மில்லியன் கலன்கள் ஆகும் பரந்தளவில் கசிவு விகிதத்தைக் குறைக்கும் புதிய முயற்சி வெள்ளிக்கிழமை அன்று குறைந்தபட்ச விளைவுகளைத்தான் கொடுத்தது.

துண்டிக்கப்பட்ட மேலேற்றும் குழாய்மீது ஒரு மூடி இடப்படும் முயற்சி ஓரளவிற்கு எண்ணெயை சேகரிக்க முடிகிறது என்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூறினாலும், ஒளிப்பதிவு காட்சிகள் பெரும் பகுதி எண்ணெய் இன்னமும் வளைகுடாவிற்குள் பாய்ந்து வருவதாகத்தான் காட்டுகின்றன. கடலோரப்படையின் தளபதி தாட் ஆலென் இந்த எண்ணையை மூடும் முயற்சியால் நாளொன்றிற்கு 1000 பீப்பாய்கள் காப்பாற்றப்படுகின்றன என்றார். இது உத்தியோகபூர்வ கசிவு பற்றிய மதிப்பீட்டையும் விட மிகவும் குறைந்ததாகும். அதன்படி 12,000 முதல் 19,000 பீப்பாய்கள் கசிகின்றன. மேலும் வியாழனன்று மூடுவதற்கு தயாரிப்பாக மேலேற்றக்குழாயை வெட்டியதின் மூலம் வளைகுடாவிற்குள் 1,200 ல் இருந்து 4,000 பீப்பாய்களை அன்றாடம் அதிகரிக்க விட்டுள்ளது.

ஒரு புதிய மேலேற்றக்குழாயுடன் மேலே இருக்கும் கப்பலுக்கு தொடர்புபடுத்தும் இந்த மூடல்முயற்சி கசிவாகும் எண்ணெயில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் சேகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறின. ஆனால் கசிவுப் போக்கின் துல்லியமான அளவு தெரியவில்லை. ஏனெனில் ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவைக் கொண்டுள்ள பிரிட்டிஷ் பெட்ரோலியம் சுயாதீன பகுப்பாவை அனுமதிக்க மறுக்கிறது. ஆனால் பல விஞ்ஞானிகளும் கசிவின் அளவை சரியாக அளப்பதற்கான வழிவகைகள் உள்ளன என்று கூறியுள்ளனர்.

McClatchy செய்திப்பிரிவின் பகுப்பாய்வின்படி, புதிய மேலேற்றக் குழாய்மூலம் வடிகட்டி வேறு இடத்திற்கு அதை எடுத்துச் செல்லும் முயற்சி ஓரளவிற்கு வெற்றிபெற்றாலும் கசிவு எண்ணெயில் இருந்துகூட பணத்தைப் பெறும் வாய்ப்பு பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு உண்டு. அடுத்து 60 நாட்களில் நிறுவனம் $85 மில்லியனை இந்த எண்ணெயில் இருந்து சம்பாதிக்க முடியும். மத்திய ஆட்சிக்கு குறைவாகவே, $19 மில்லியன் என்று உரிம அனுமதிகள் மூலம் இதே காலத்தில் கிடைக்கும்.

எண்ணெயை வேறு இடத்திற்கு மாற்றுதல் ஒரு பெரிய வெயில்கால புயலோ, சூறாவளியோ வந்தால் மூடப்படும். NOAA எனப்படும் தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வகாம் இந்தப் பருவத்தில் குறிப்பிடத்தக்க வகையில் சூறாவளிப் புயல்கள் இருக்கும் என்று கணித்துள்ளது.

2005ம் ஆண்டில் கத்தரீனா சூறாவளிப்புயல் இப்பொழுது Deepwater Horizon தளம் இருக்கும் இடத்தின் மேலே நேரடியாகச் சென்றது. அதுபோலவே பல முக்கிய சூறாவளிப் புயல்களும் கடந்துள்ளன. ஒரு பெரிய எண்ணெய்க்கசிவு மீது எத்தகைய விளைவுகளைப் புயல் கொள்ளும் என்பது பற்றி விஞ்ஞானிகள் விவாதிக்கின்றனர்; ஆனால் அது மிசிசிபி கழிமுகப் பகுதிக்குள் ஆழ்ந்த விதத்தில் சேதத்தை ஏற்படுத்தும், எதிர்பார்ப்பதை விட அதிகமாக, என்ற பொது உடன்பாடுதான் உள்ளது.

லூயிசியானாவில் ஏற்பட்டுள்ள பரந்த சேதத்தை தவிர, பிளோரிடா அலபாமா மற்றும் மிசிசிபியில் உள்ள கடற்கரைகள் இப்பொழுது கசிவின் பாதிப்பைக் கொண்டுள்ளன. குளிப்பவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மீன்பிடித்தல் ஏற்கனவே வளைகுடாவை ஒட்டி நான்கு மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுவிட்டன. கடந்த வாரம்தான் சுற்றுலாத் தொழிலுக்காக பரபரப்பு அடைந்த ஒபாமா, அமெரிக்க மக்கள் வளைகுடாக் கடலோரப் பகுதிக்கு சுற்றுலா செல்லுமாறும், அதன் கடற்கரைகள் “தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் உள்ளன” என்று அறிவித்தார்.

ஒட்டிக் கொள்ளக்கூடிய தார்ப் பந்துகளின் அலைகள், வெள்ளியன்று புகழ்பெற்ற பென்சகோலா கடற்கரைகளுக்கு அருகே மிதந்துவந்து நீந்துபவர்களை வெளியேறுவதற்கு கட்டாயப்படுத்தியது. லூயிசியானா ஜோன்ஸ்வில்லேயில் இருக்கும் டேவிட் லூகாஸ் நண்பர்கள் குழுவுடன் பென்சகோலா கடற்கரையை விட்டுவிலகினார். அவர்கள் எண்ணெய் கலந்த தண்ணீரால் தள்ளப்பட்டு கரைக்கு வரவேண்டியதாயிற்று. “அங்கு ஒட்டிக் கொள்ளும் பழுப்புநிற திரட்டுக்கள்தான் உள்ளன” என்று அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் லூக்காஸ் கூறினார்.

சுற்றுலாக் காலத்தின் உச்சக் கட்டமாக இருக்க வேண்டிய நேரத்தில் பென்சகோலா கடற்கரை வெறிச்சோடிக்கிடந்ததாக கூறப்படுகிறது. கசிவிற்குச் சற்ற முன்னர் கடற்கரைக்கு சென்றிருந்த 40 வயதான வெண்டி பட்லர், அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தனக்கு ஒரு வேலை கிடைக்கவில்லை என்றார். “உணவு விடுதிகள் தங்கள் குளிர்காலத்தில் பணிபுரியும் ஊழியர்களை குறைந்துக் கொண்டிருக்கின்றனர். அவை புதிதாக எவரையும் வேலைக்கு எடுப்பதில்லை” என்றார் அவர்.

தார் பந்துகள் புளோரிடாவின் நவரே கடற்கரையிலும் குவிந்தன. ஒரு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான எட்டி கின்ல், இப்பேரழிவு அப்பகுதியில் பொருளாதாரத்தை சேதப்படுத்திவிட்டது என்றார். “இது எங்கள் தொழிலையும் பாதித்துள்ளது என்பதைக் கூறத்தேவையில்லை” என்று பென்சகோலா செய்தி இதழிடம் அவர் கூறினார். “நாங்கள் அதிக வேலை செய்வதில்லை, ஏனெனில் வாடகை கொடுத்து தங்கக்கூடியவர்கள் இருக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

அலபாமா வளைகுடாப் பகுதியில் உள்ள கடற்கரைகளையும் “சிவப்பு எண்ணெய் பந்து திரட்டுக்களைக் குவிக்கும் விதத்தில்” இக்கசிவு தாக்கக்கூடும். கென்டக்கியில் இருந்து வந்த சுற்றுலாப்பயணி ஜேனிபர் பவல் தான் திரும்பிச் செல்லுவதாகவும், அநேகமாக பின்னர் கோடையில் வருவதற்கு இல்லை என்றும் கூறினார். “என் குழந்தைகள் இதில் குளிப்பதை நான் விரும்பவில்லை” என்றார். உள்ளுர்ச் செய்தி நிலையத் தகவல்படி “தூய்மைப்படுத்தும் குழுக்கள் எங்கும் காணப்படவில்லை.”

தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு மையம் இந்த வாரம் கணினி மூலம் என்ன நிகழலாம் என்று கண்டறிந்து, கசிவின் படர்தல் விரைவில் பெருகும் என்று கூறியுள்ளனர். சக்தி வாய்ந்த பெருங்கடல் நீரோட்டங்களால் எடுத்துசெல்லப்படும் இந்தக் கசிவுத் திரட்டுக்கள் இன்னும் மூன்று வார காலத்தில் புளோரிடாவைச் சுற்றி வந்தடையும். இன்னும் பத்து நாட்களில் அது வடகரோலினாவிற்கு தன் வழியைக் காணும். அங்கிருந்து அது நாளொன்றிற்கு 100 மைல் வீதம் வடக்கு ஐரோப்பாவிற்கு செல்லக்கூடும் என்று ஆய்வு மாதிரி கூறுகிறது.