சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US and EU impose extra sanctions on Iran

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மேலதிக பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது சுமத்துகின்றன

By Peter Symonds
19 June 2010

Use this version to print | Send feedback

ஈரான் மீது அதன் அணுசக்தி திட்டங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை அதிகப்படுத்தும் விதத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த வாரம் கூடுதலான பொருளாதாரத் தடைகளைச் சுமத்தியது. இவை கடந்த வாரம் ஐ.நா. கொண்டு வந்த ஒரு தீர்மானத்தை விட அதிகமானது ஆகும். சமீபத்திய நடவடிக்கைகளானது ஈரானுடன் மோதலை விரிவாக்க அரங்கம் அமைத்துள்ளன. ஈரான் சமீபத்திய ஐ.நா. தீர்மானத்தை "சட்ட விரோதமானது" என்று கண்டித்துள்ளது.

ஒபாமா நிர்வாகம் பல மாதங்களாக சீனா மற்றும் ரஷ்யாவை ஒரு நான்காவது ஐ.நா. தீர்மானத்தை ஈரானுக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான ஆதரவைக் கொடுக்க வலியுறுத்தி வந்துள்ளது. அவை இரண்டும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் தடுப்பதிகாரம் செலுத்தும் உரிமை உடைய நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும். மாஸ்கோவும், பெய்ஜிங்கும் இறுதியில் தங்கள் ஈரானிய பொருளாதார நலன்கள் பாதிக்கப்படாத விதத்தில் உத்தரவாதம் செய்யும் சில திருத்தங்களுக்கு பின்னர் அதற்கு உடன்பட்டன. இத்தீர்மானம் ஜூன் 9 அன்று 12-2 என்ற விதத்தில், பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகள் எதிராகவும், லெபனான் வாக்களிக்காத நிலையிலும் ஏற்கப்பட்டது.

வெள்ளை மாளிகையை பொறுத்தவரை, ஐ.நா வின் ஈரானுக்கு எதிரான வாக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாலும் விதித்த ஒருதலைப்பட்ச அபராதங்கள் பரந்த பிரச்சாரத்தின் முதல் கட்டம் தான். திரைக்குப் பின்னால், அமெரிக்கா ஏற்கனவே ஒரு மூலோபாயத்தைத் தயாரிப்பதற்காக, தொடர்ச்சியான பேச்சுக்களை ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளுடன் நடத்தியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவையும் அடங்கும். சமீபத்திய ஐ.நா. தீர்மானம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல முறையும் மேலதிக பொருளாரத் தடைகளை நெறிப்படுத்த அது ஏற்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளாதகக் கூறப்படுகிறது.

ஈரானின் மிகப் பெரிய வணிகப் பங்காளி என்னும் முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு ஒபாமா நிர்வாகம் தெஹ்ரானைச் சுற்றிப் பொருளாதாரத் தூக்குக் கயிற்றை இறுக்குவதற்கான முயற்சிகளில் மையப்பகுதியைக் கொண்டுள்ளது. வியாழனன்று நடந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் கடுமையான புதிய நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்ட ஒப்புக் கொண்டனர். அவற்றில் இயற்கை எண்ணெய் எரிவாயு, திரவப்படுத்துதல், சுத்திகரிப்பு மாற்றம் ஆகியவைகளுக்கான தொழில்நுட்பத் தடைகளும் அடங்குகின்றன. நடவடிக்கைகளானது வணிகம், நிதியியல், போக்குவரத்து, ஈரானிய வங்கிகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்பு பிரிவு (IRGG) ஆகியவற்றை இலக்காக கொண்டுள்ளன. இறுதிப் பொருளாரத் தடைகள் பற்றிய விதிகள் ஜூலை 26 ஐ ஒட்டி இயற்றப்படும்.

எண்ணெய், எரிவாயுத் தொழில்நுட்பத்தின் மீதான தடைகள் குறிப்பிடத்தக்க வகையில் கடுமையானவை. ஏனெனில் ஈரானியப் பொருளாதாரமும் அரசாங்க நிதியங்களும் மிக அதிக அளவில் எரிசக்தி ஏற்றுமதிகளை நம்பியுள்ளன. ஈரான் அதன் பெட்ரோல் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கை இறக்குமதி செய்யும் கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் அதனிடம் தேவையான சுத்திகரிப்பு செய்யும் திறன் கிடையாது. மேலும் நாட்டின் எரிசக்தி உள்கட்டுமானம் ஏற்கனவே பெரும் முதலீட்டுத் தேவையைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத் தடைகள் மிகவும் தேவைப்பட்ட நிலைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை இன்னும் கடினமாக்கிவிடும்.

ஈரானிய மக்கள் மீது தான் இலக்கு கொள்ளவில்லை என்ற ஒபாமா நிர்வாகத்தின் கூற்று, சமீபத்திய தடைகளான நிதிய, வங்கிமுறை மற்றும் முக்கிய எரிசக்தித் துறைகளைத்தான் இலக்கு கொண்டுள்ளது என்பதானது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளை அதிகரித்து சாதாரண உழைக்கும் மக்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரானின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 1.8 சதவிகிதம்தான் இருந்தது. உத்தியோகபூர்வ வேலையின்மை 11.9 சதவிகிதம், மற்றும் பணவீக்கம் 9.8 சதவிகிதம் என்று இருந்தது. ஈரானின் புள்ளி விபர நிறுவனத்தின்படி, மொத்த 73 மில்லியன் மக்களில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் "மிகவும் வறிய நிலையில்" வாழ்கின்றனர், மற்றொரு 30 மில்லியன் மக்கள் "ஒப்புமையில் வறுமை" என்ற விதத்தில் வாழ்கின்றனர்.

புதனன்று ஈரானுக்கு எதிராகக் கூடுதலான பொருளாதாரத் தடைகளை அறிவித்து, Post Bank of Iran, Javedan Mehr Toos மற்றும் ஈரானின் மிகப் பெரிய கப்பல் நிறுவனங்களின் சார்பில் செயல்படுபவை எனக்கூறப்படும் ஐந்து நிறுவனங்களையும் கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது. IRGC மற்றும் துணை இராணுவ Baaij Resistance Force ன் உயர் தளபதிகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், தனிநபர்களுடன் வணிகம் நடத்த அமெரிக்க நிறுவனங்கள் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அவை ஏதேனும் சொத்துக்கள் கொண்டிருந்தால் அவை முடக்கப்படும்.

ஆனால் அமெரிக்க காங்கிரஸ் இன்னும் கடுமையான சட்டத்தை பெட்ரோலியப் பொருட்களை முற்றிலும் ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்யும் நோக்கம் உடையதையும் தயாரித்துவருகிறது. அமெரிக்க அல்லது வெளிநாட்டு நிறுவனம் ஏதேனும் ஈரானுக்கு பெட்ரோல் பொருட்களை விற்றால் அவை புதிய சட்டத்தின்படி தண்டனைக்கு உட்படும். பெரும்பாலான முக்கிய எரிசக்தி நிறுவனங்கள் இதை ஏற்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படும். இல்லாவிடின் அவைகளின் பரந்த அமெரிக்காவுடனான வணிக நலன்கள் பாதிக்கப்படும். பெட்ரோலியப் பொருட்களுக்கான தடை என்னும் அச்சுறுத்தலே பல எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களை ஈரானியச் சந்தையில் இருந்து சமீபத்திய மாதங்களில் வெளியேற்றச் செய்துள்ளது--இதில் பிரிட்டிஷ் பெட்ரோலியம், ரோயல் டட்ச் ஷெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விலோல் குழு மற்றும் கிளென்கோர் இன்டர்நேஷனல் ஆகியவை அடங்கும்.

தொலைவிளைவுகளை உடைய இச்சட்ட இயற்றலுக்கு ஜனாதிபதி ஒபாமா இன்னும் உடன்படவில்லை. அது ஈரானில் பொருளாதார, சமூக நெருக்கடியை உயர்த்திவிடும் என்பதோடு, முக்கிய சக்திகளுக்கு இடையேயும் பிளவுகளை அதிகரிக்கும். குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வந்துள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, பெரு நிறுவனங்கள் தங்கள் விற்பனையை நிறுத்தினாலும், ஈரான் பெட்ரோல் பொருட்களை அமெரிக்காவுடன் தொடர்பு இல்லாத சிறு நிறுவனங்கள் இணையம் மூலம் வாங்க முடியும். ஆனால் அத்தகைய வாங்குதல்கள் மிக அதிக விலையில் இருக்கும். அது பற்றாக்குறைகளுக்கு வழி செய்வதுடன் நாட்டிற்குள் இன்னும் அதிக பணவீக்கத்திற்கும் வழிவகை செய்யும்.

ஈரானுக்கு பெட்ரோலியப் பொருட்களை விற்கும் சீன பெருநிறுவனங்களைத் தண்டிப்பதற்கு சட்டம் பயன்படுத்தப்பட்டால், அமெரிக்க-சீன உறவுகள் விரைவில் சீர்குலையும். சமீபத்திய ஐ.நா. தீர்மானத்திற்கு தயக்கத்துடன்தான் பெய்ஜிங் ஆதரவு கொடுத்தது--அதன் ஈரானுடனான பொருளாதார நலன்கள் காக்கப்படும் என்ற உத்தரவாதம் கொடுத்த பின்னர். சீனா தற்பொழுது ஈரானின் மிகப் பெரிய ஒற்றை வணிகப் பங்காளி நாடு ஆகும். அது ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளைப் பெரிதும் நம்பியுள்ளது. வாஷிங்டன், அதன் நட்பு நாடுகள் கூடுதல் பொருளாதாரத் தடைகளைத் தயாரிக்கின்றன என்பதை நன்கு அறிந்தும், பெய்ஜிங் அவற்றின் நெறியை ஏற்கும் என்ற அவசியம் இல்லை.

உண்மையில் ஒபாமா நிர்வாகம் சமீபத்திய ஐ.நா. தீர்மானத்தை ஒரு திரையாக அதன் ஆக்கிரோஷச் செயல்கள் என்று சொல்லக்கூடியவற்றைச் செய்யப் பயன்படுத்துகிறது. ஈரானுக்கு எதிராக வெளிப்படையான இராணுவ நடவடிக்கையை இன்னும் தயாரிக்கவில்லை என்றாலும், ஒபாமா ஒருதலைப்பட்ச தடைகளைச் சுமத்தியுள்ளது, "புதிய விருப்பமுடையோர் கூட்டணி மூலம்" என்பது ஒரு ஆத்திரமூட்டும் தன்மையுடைய செயல் ஆகும். அது மோதலில் முடியக்கூடும். 1941ல் பசிபிக்கில் அமெரிக்கா ஜப்பான் மீது எரிபொருள் அளிப்புக்களுக்குத் தடை விதித்தவுடன் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய எண்ணெய் வயல்கள் மீது பரந்த முதலீட்டிற்கான திட்டத்தை பெய்ஜிங் தொடர்ந்தால் சீனாவுடனான அமெரிக்க அழுத்தங்கள் அதிகரிக்கும். ஏற்கனவே ஐரோப்பிய நிறுவனங்களானது ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளான தொழில்நுட்ப மாற்றம், முதலீடு ஆகியவற்றை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்ற கவலை கொண்டுள்ளன. வாஷிங்டன் போஸ்ட்டிடம் ஒரு பெயர் சொல்ல விரும்பாத இராஜதந்திரி கூறினார்: "சீனாதான் அறையில் இருக்கும் யானை."; ஆனால் சீனா ஒரு சர்வதேச வெளியேற்றத்தால் இலாபத்தை அடையாது, ஏனெனில் அது அரசியல் அழுத்தங்களைச் சந்திக்கக் கூடும் என்ற நம்பிக்கை அதற்கு இருக்கிறது."

சமீபத்திய பொருளாதாரத் தடைகள் பற்றி பல கணிப்புக்கள் அமெரிக்கத் தலைமையிலான ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தில் அதன் அணுசக்தித் திட்டங்கள் பற்றி அதிக அக்கறை கொள்ளவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. பலமுறை தொடர்ச்சியாக அணுவாயுதங்களை தயாரிக்கவில்லை என்று ஈரான் மறுத்துத்தான் வந்துள்ளது. அணுவாயுதப் பரவா உடன்படிக்கையில் (NPT) அது கையெழுத்திட்டுள்ள நாடு ஆகும். ஈரானானது அணுசக்தி நிலையங்களைக் கண்காணிக்கவும் பரிசோதிக்கவும் சர்வதேச அணு சக்தி அமைப்பை அனுமதிக்கிறது, ஆனால் NPT யின் கீழ் தன்னுடைய யுரேனிய அடர்த்தியாக்கல் செய்யும் உரிமை உண்டு என்று அது வலியுறுத்துகிறது. ஒரு கனரக நீர்நிலை உலையைக் கட்டமைக்க முயல்கிறது-- இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வாஷிங்டன் கோருகிறது.

முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷைப் போலவே ஒபாமாவும் அணுசக்திப் பிரச்சினையை தெஹ்ரானில் அமெரிக்க விழைவுகளான எரிசக்திச் செழிப்பு உடைய மத்திய கிழக்கு, மத்திய ஆசியப்பகுதிகளில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு இணக்கம் காட்டும் ஆட்சியை ஈரானில் அமைப்பதற்குப் பயன்படுத்துகிறார். கடந்த மூன்று தசாப்தங்களாக இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை வாஷிங்டன் தொடர்ந்து வருகிறது. இதையொட்டி அதன் ஐரோப்பிய, ஆசியப் போட்டி நாடுகள் ஈரானுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன. கடுமையான சர்வதேசத் தடைகளால் பாதிக்கப்படாத பொருளாதார நலன்களைக் கொண்ட ஒரே பெரிய சக்தி அமெரிக்காதான்.

புதிய அபராதங்களைச் சுமத்துகையில் ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து தோற்றுவிட்ட ஜனாதிபதி வேட்பாளர் மீர் ஹொசைன் மௌசவியின் தலைமையில் நடக்கும் பசுமை இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறது. அவர் அமெரிக்காவுடனும் அதன் நட்பு நாடுகளுடனும் முன்னேற்ற உறவுகளை நாடுவதுடன் ஒரு சந்தைச் சார்பு செயற்பட்டியலையும் விரும்புகிறார். கடந்த ஆண்டு ஈரானிய ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, தேர்தல் விளைவுகளில் தில்லு முல்லுகள் இருந்தன என்ற மௌசவியின் கூற்றிற்கும், அவருக்கும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சர்வதேசப் பிரச்சார ஆதரவைக் கொடுத்தன. அமெரிக்காவிடம் இருந்து ஒதுக்கி வைத்துக் கொள்ள முற்பட்டுள்ள மௌசவி இந்த வாரம் புதிய தடைகள் மக்கள் வாழ்வைப் பாதிக்கின்றன என்று "எதிர்த்துள்ளார்"; ஆனால் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாட்டின் "தந்திரமற்ற, வெற்றுத் தீர உணர்வுடைய வெளியுறவுக் கொள்கைகளை" மீண்டும் குறைகூறியுள்ளார். தன் பங்கிற்கு அஹ்மதி நெஜாட்டின் ஆட்சி அணுப்பிரச்சினையைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய பொருளாதாரச் சுமைகளை அது செலுத்தும் நேரத்தில், தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதுடன், அரசியல் எதிர்ப்பை அடக்குவதற்காகவும் பயன்படுத்துகிறது.

பசுமை இயக்கத்திற்கு ஆதரவு, அதே நேரத்தில் பொருளாதாரத் தடைகள் என்பவை மட்டும் ஒபாமாவின் மூலோபாயத்தின் முக்கிய கூறுபாடுகள் அல்ல. அவருடைய நிர்வாகம் இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதையும் தள்ளிவிடவில்லை-- நேரடியாகவோ அல்லது ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு பச்சை விளக்கு காட்டுவதின் மூலமோ ஈரானுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட்டுள்ளது, அதிலும் குறிப்பாக பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றமதி மீது என்பது, வன்முறை மோதலுக்கான ஆபத்துக்களைத்தான் உயர்த்திக் காட்டுகிறது.