World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan: Zardari and his PPP-led government weakened by clash with judiciary

பாக்கிஸ்தான்: ஜர்தாரியும் அவருடைய PPP தலைமையிலான அரசாங்கமும் நீதித்துறையுடன் மோதலில் வலுவிழக்கின்றன

By Sampath Perera
6 March 2010

Use this version to print | Send feedback

பாக்கிஸ்தானிய ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியும் அந்நாட்டின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கமும் நீதித்துறை நியமனங்கள் பற்றிய மோதலின் விளைவாக அவற்றின் அதிகாரம் மற்றும் கெளரவத்திற்கு மேலும் ஒரு பலத்த அடியினால் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானியும் மற்றய PPP மூத்த தலைவர்களும் வாடிக்கையாக இடைக்கால தேர்தல்கள் தவிர்க்க முடியாதவை அல்ல, ஜனாதிபதியும் அரசாங்கமும் முழு பதவிக்கால ஆட்சி நடைபெறும் என்று அறிக்கைகளை விடும் அளவிற்கு ஜனாதிபதி, மக்கள் அரசாங்கத்தின் மீதான நிலைப்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இராணுவ உயர் கட்டுப்பாட்டகம் பெருகியமுறையில் சிவிலிய கட்டுப்பாட்டில் இருந்து தன்னுடைய சுதந்திரத்தை உறுதிபடுத்துவதுடன் நாட்டின் இராணுவ, புவிசார்-அரசியல் விவகாரங்களில் தன்னுடைய மேலாதிக்கத்தையும் வலுப்படுத்த முற்படுகிறது.

சிவிலிய அரசியல் அதிகாரிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே உள்ள உறவின் உண்மையான தன்மை கடந்த மாதக் கடைசியில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் உள்நாட்டு மந்திரியும், ஜர்தாரியின் முக்கிய ஆலோசகருமான ரெஹ்மான் மாலிகின் பகிரங்கமாக செய்தி ஊடகங்களில் வெளிவந்த தகவலான பாக்கிஸ்தான் பாதுகாப்புப் பிரிவுகள் ஒரு மூத்த தாலிபன் தலைவர் முல்லா அப்துல் கானி பரடரை கைது செய்தன என்பதை மறுத்து, இராணுவமானது மீண்டும் பரடர் தன் காவலில்தான் பல நாட்களாக உள்ளார் என்பதை அறிவித்தது.

பெப்ருவரி 13-ம் தேதி ஜர்தாரி நாட்டின் தலைமை நீதிமன்றத்திற்கு ஒரு நீதிபதியையும் மற்றும் லாகூர் உயர்நீதிமன்றத்திற்கு ஒரு நீதிபதியையும் நியமித்தார். ஆனால் இந்த நியமனங்களில் அவர் தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி இப்டிகார் மகம்மத் செளத்ரியின் பரிந்துரைகளை புறக்கணித்து நியமித்தவர்கள் தகுதி பற்றியும் செளதரியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. ஒரு சில மணி நேரத்தில் தலைமை நீதிமன்றம் இதற்குப் பதிலடி கொடுத்தது. நீதித்துறை நியமனங்கள் தலைமை நீதிபதியை கேட்காமல் செய்யப்பட்டதால் அவை அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவித்து பெப்ருவரி 18-ம் தேதி இது பற்றிய வழக்கில் அரசாங்கத்தின் தலைமை வக்கீல் கருத்துத் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே இருந்த மோதலில் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷரப் நவம்பர் 2007-ல் செளதரியையும் மற்றய தலைமை நீதிமன்ற நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்திருந்ததை திரும்பப் பெற்று அவர்களை மீண்டும் பதவியில் இருத்த வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கு பெற்ற பல வக்கீல்களும் இந்த மோதலில் விரைவில் சேர்ந்து கொண்டனர். "நீதித்துறையை அச்சுறுத்தும் முயற்சி, மற்றவர்களைவிட ஜனாதிபதி சக்திவாய்ந்தவர் என்று காட்டிக் கொள்ளும் தகவலைக் கொடுக்கிறது" என்று தலைமை நீதிமன்ற வக்கீல் சங்கத்தின் தலைவர் காஜி முகம்மத் அன்வர் பெப்ருவரி 15 அன்று ரொய்ட்டரிடம் தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் (PML-N) உடைய தலைவர் மற்றும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி தலைவரும், PPP, ஜர்தாரி-புட்டோ குடும்பத்தின் கடுமையான எதிர்ப்பாளருமான நவாஸ் ஷெரிப் நீதிபதிகளின் நிலைப்பாட்டிற்கு தன் ஆதரவை அறிவிப்பதில் விரைவில் ஊக்கம் காட்டினார். PPP ஆனது சர்வதேச நாணய நிதியத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதாலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு அடிமைத்தான ஆதரவைக் கொடுப்பதாலும் மக்களிடையே செல்வாக்கை முன்னாள் ஜனாதிபதி முஷரப் கடைசி நாட்களில் இழந்த அளவிற்கு இப்பொழுது இழந்துநிற்கும் ஜர்தாரியை "ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்" என்று ஷரிப் அறிவித்தார்.

பல முன்னைய நெருக்கடிகளைப் போலவே, PPP யின் கூட்டணி பங்காளிக் கட்சிகளும் ஜர்தாரியின் நடவடிக்கைகளில் இருந்து தங்களை விரைவாக ஒதுக்கி வைத்துக் கொண்டுவிட்டன.

ஜர்தாரி தன்னுடைய அதிகார வரம்பை மீறிச் செயல்படவில்லை என்று முதலில் மறுத்த ஜனாதிபதியும் அரசாங்கமும், ஒரு அவமானகரமான பின்வாங்குதலை செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டனர். ஆனால் அதற்கு முன் நீதிபதிகள் பிரச்சினை பற்றி பாக்கிஸ்தானின் இராணுவத் தலைவர் தளபதி கியானி வெளிப்படையாக ஜனாதிபதியையும், பிரதம மந்திரியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நெருக்கடியை முடிப்பதற்கு PPP தலைமை பெரும் நம்பிக்கையின்மையை கொண்டிருந்தது. இதையொட்டி கிலானி ஒரு பொதுக் கூட்டத்தில் தலைமை நீதிபதியை சந்தித்து அரசாங்கத்தின் சரணடைதலை அறிவித்தார். இதன்பின், ஜர்தாரி தன்னுடைய நீதித்துறை நியமனங்களை இரத்து செய்து, செளதரியின் ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருந்த பல நீதிபதிகளை உயர் நீதிமன்றத்திற்கும், தலைமை நீதிமன்றத்திற்கும் நியமித்தார்.

ஆனால் இந்த உடன்பாடு ஏற்பட்ட உடனேயே செளதரி மீண்டும் ஜர்தாரி, மற்றும் அரசாங்கத்திற்கு ஒரு சவால் விடுத்தார்.

நீதிபதிகள் ஒற்றுமையாக இருந்ததுதான் நவம்பர் 3, 2007- ல் ஏற்பட்ட நிலைமை போன்றது மீண்டும் வராமல் தடுக்கப்பட்டதற்கு காரணம் என்று செளதரி கூறினார். ஜர்தாரி இரு நீதிபதிகளை நியமித்ததை முஷரப் 2007-ல் நெருக்கடிக் காலத்தை அறிவித்ததுடன் ஒப்பிட்டார். ஜர்தாரியின் நியமனங்கள் அரசியலமைப்பு நெறியின் படி வினாவிற்கு உட்பட்டவை என்றாலும், முஷரப் நடவடிக்கைகளில் இருந்த தன்மை இதில் இருந்ததாகக் கூறுவதற்கில்லை. நெருக்கடியை அறிவித்த நிலையில், தளபதி ஒரு இரண்டாவது ஆட்சி மாற்றத்திற்கு ஒப்பான செயலில் ஈடுபட்டு, தனக்கு ஆதரவு கொடுப்பவர்களை வைத்து நீதித்துறையை நிரப்ப முற்பட்டதுடன் எதிர்க்கட்சியை மிரட்டியும், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் பதவியை திருட சட்ட-அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்துவும் முற்பட்டிருந்தார்.

பெப்ருவரி 19-ம் தேதி செளதரி NAB எனப்படும் தேசிய பொறுப்புக் கூறும் அமைப்பின் தலைவருக்கு அழைப்பு பிறப்பித்து தேசிய சமரச உத்தரவின் (NRO) கீழ் மூடப்பட்டிருந்த வழக்குகளை மீண்டும் விசாரித்து குற்றச்சாட்டுக்கள் தொடுப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அக்டோபர் 2007-ல் முஷரப் மற்றும் ஜர்தாரி, அவருடைய மறைந்த மனைவி பெனாசீர் பூட்டோ ஆகியோருக்கு இடைய ஏற்பட்ட ஒரு உடன்பாடுதான் NRO ஆகும். இது புஷ் நிர்வாகத்தின் ஆதரவுடன் நடந்தது. இதன் நோக்கம் ஆட்டம் கொண்டிருந்த தளபதியின் ஆட்சியை நிலைநிறுத்துவது ஆகும். பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஊழல் மற்றும் பிற குற்ற வழக்குகள் PPP தலைவர்கள் மற்றய அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் மந்திரிகளுக்கு எதிராக போடப்பட்டிருந்தவற்றை திரும்பப் பெறுவதாக ஒப்புக் கொண்டது. உண்மையில் அவற்றின் தன்மை எப்படி இருந்தாலும் இராணுவ ஆட்சியால் அவை திரிக்கப்பட்டு இருந்தன. மேலும் 2008 பாராளுமன்றத் தேர்தல்களில் பூட்டோ போட்டியிடலாம் என்றும் அதற்கு ஈடாக PPP, ஜனாதிபதி தேர்தலில் முஷரப் "மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு" போலி வாக்குகள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் இருந்தது.

கடந்த ஆண்டுக் கடைசியில் செளதரி தலைமையில் ஒரு தலைமை நீதிமன்றத் தீர்ப்பின்படி NRO அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்பட்டது. இது பல PPP தலைவர்கள் மீதும், முஷரப் மற்றும் மாலிக் மீதும் பல குற்றவியல் வழக்குகளைத் தொடுக்க வகை செய்தது. அரசியலமப்பின்படி பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு குற்றச்சாட்டுகளில் இருந்து மொத்த விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறினாலும், NRO அகற்றப்பட்டது பெரும் சங்கடத்தை அதற்கு விளைவித்ததுடன், PPP-யின் ஆயுட்கால இணைத் தலைவரும் பூட்டோ சமுகத்தின் தற்போதைய தலைவருமான ஜர்தாரிக்கு இது சட்டபூர்வ மற்றும் அரசியல் அச்சுறுத்தலைக் கொடுக்கும் திறனைக் கொண்டிருந்தது.

பெப்ருவரி 19 அன்று விசாரணையில் செளதரி NAB-யும் அரசாங்கமும் 1990-களில் பெனாசீர் பிரதம மந்திரியாக இருந்தபோது பூட்டோக்கள் ஊழல் மூலம் பெற்றதாகக் கூறப்படும் $60 மில்லியன் தொகை பற்றிய ஊழல் வழக்கை சுவிட்ஸர்லாந்து மீண்டும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். NRO ஏற்றுக் கொள்ளப்பட்டு இஸ்லாமாபாத்தின் அழுத்தத்தின்பேரில் சுவிஸ் அரசாங்கம் ஜர்தாரி மற்றும் பூட்டோ விவகாரங்களில் தன் விசாரணையை மூடிவிட்டது.

சுவிஸ் வழக்கு பற்றிய செளதரியின் உத்தரவு அரசாங்கங்களுக்கு இடையேயான உறவுகள் பிரச்சினை என்பதால் ஏற்கப்படுவதற்கு இல்லை என்று அரசாங்கம் எதிர்த்துள்ளது. அதன் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாததால் தன்னை தண்டிக்கலாம் என்று அச்சப்பட்டுள்ள NAB தலைவர் நவீட் அஹ்சன் இராஜிநாமா செய்துவிட்டார். அரசாங்க வக்கீல் ஜர்தாரிக்கு வாதிட தயக்கம் காட்டிய நிலையில் கிலானி, கே.கே.ஆகாவை (பூட்டோ, ஜர்தாரிக்கு பல வழக்குகளில் செயலாற்றியவர்) கூடுதல் தலைமை வக்கீலாக நியமித்துள்ளார். இவர் தலைமை நீதிமன்றத்தில் ஜர்தாரி வழக்கிற்கு வாதாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள், செய்தி ஊடகம், போலி சமூக நல அமைப்புக்கள் மற்றும் பாகிஸ்தான் தொழிற் கட்சி போன்றவை செளதரியை ஜனநாயக பாதுகாப்பாளர் போலவும், ஊழலுக்கு விரோதி என்பது போலவும் சித்தரிக்கின்றன. முஷரப்பிற்கு எதிராக முன்பும், ஜர்தாரிக்கு எதிராக இப்பொழுதும் அவரை ஒரு கவனக் குவிப்புப் புள்ளியாக செய்துள்ளன.

ஆனால் செளதரியே நீண்டகாலம் நீதித்துறை சார்பில் முஷரப் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து, தலைமை நீதிமன்ற நீதிபதி என்னும் முறையில் பாக்கிஸ்தானிய முதலாளித்துவத்தின் செல்வம், சலுகைகள் ஆகியவற்றை செயல்படுத்தும் ஆட்சியை சட்ட நெறிப்படுத்தியுள்ளார்.

2000-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷரிப்பின் ஆட்சியை முஷரப் அகற்றியதை நியாயப்படுத்திய சட்டத் தீர்ப்பை அளித்த தலைமை நீதிமன்ற நீதிபதிகளில் செளதரியும் இருந்தார். அதேபோல் 2005-ல் முஷரப் இராணுவத் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் இரு பதவிகளில் இருக்காலம் என்று கூறிய அரசியலமைப்பின் 17-வது திருத்தத்தை முறைப்படுத்திய நீதிபதிகளில் ஒருவராகவும் இருந்தார்.

இராணுவமானது ஜர்தாரி மற்றும் அராசங்கத்தின் சட்டபூர்வ, அரசியலமைப்பு இடர்பாடுகளால் ஏற்பட்டுள்ள செல்வாக்கிழப்பு மற்றும் ஆப்-பாக் போருக்கு ஆதரவைக்காட்டுவதால் அமெரிக்கா தன்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பதையும் பயன்படுத்தி தன் அரசியல் மற்றும் பொருளாதார சக்தியை மீண்டும் உறுதிபடுத்த முயல்கிறது.

செய்தி ஊடகத்தில் இருந்து கிட்டத்தட்ட எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில் இராணுவத் தலைவர் கியானி ஓய்வூதிய வயதை கடந்த இரு முக்கிய அதிகாரிகளின் பதவிக் காலத்தை அரசாங்க உத்தரவை எதிர்பாராமல் அதிகப்படுத்தியுள்ளார். கியானியின் நோக்கங்களில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் முடிய இருக்கும் தன்னுடைய அதிகாரத்திற்கு ஒருதலைப்பட்ச விரிவாக்கம் கொடுப்பது ஆகும்.

ஆனால் செளதரி தலைமையில் இருக்கும் நீதித்துறைக்கும் இராணுவத்திற்கும் இடையே பிணைப்பு இருப்பதற்கும் சான்றுகள் உள்ளன.

தலைமை நீதிமன்ற பிரிவானது அரசாங்க விரோதிகள் பலர் "காணாமற் போனது" பற்றி விசாரிப்பது--இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பலோச்சி தேசியவாதிகள், இன்னும் பலர் என--சமீபத்தில் அது காணாமற் போனது பற்றிய அரசாங்க உளவுத்துறை பிரிவுகளின் பங்கு பற்றி ஆராயாது என்று கூறிவிட்டது. நீதிமன்ற முடிவிற்கு விளக்கம் கொடுக்கையில் நீதிமன்றம், "தான் பாதுகாப்பு பிரிவுகளுக்கு விரோதமாக இல்லை என்பதால் அதன் தோற்றத்தை அழிக்கவோ, சிதைக்கவோ முற்படத் தயாராக இல்லை" என்று கூறியதாக Dawn தெரிவித்துள்ளது.

இதையொட்டி பெப்ருவரி 21 அன்று Daily Times தலையங்கம் எழுதியது: "உளவுத்துறை அமைப்புக்களானது சட்டம், அரசியலமப்பு இவற்றை முற்றிலும் மீறிய விதத்தில் ஆயிரக்கணக்கான நபர்கள் "காணாமற் போவதின்" பின்னணியில் உள்ளது என்று பரந்த அளவில் கருதப்படுவதால், தலைமை நீதிமன்றம் காணாமற் போனவர்களுடைய உறவினர்கள் குடும்பங்களுக்கு நீதியளிக்க வேண்டிய உறுதிப்பாட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது என்று தோன்றுகிறது. மக்களுக்கு நீதி அளிப்பேன் என்று சொன்ன ஒரு தலைமை நீதிபதி கூறியிருப்பதின் பொருள் இப்படி இருக்கக்கூடாது."

பாக்கிஸ்தானின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் வெற்றுத்தன முதலாளித்துவ உயரடுக்கு, அதன் அரசாங்கக் கருவிகளின் எந்தப் பிரிவைப் பின்பற்றினாலும் ஜனநாயக, சமூக உரிமைகளை வெல்ல முடியாது. பென்டகன்-பாக்கிஸ்தான் இராணுவப் பிணைப்பு மற்றும் இலாப முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் சுயாதீன அரசியல் அணிதிரட்டுதல் தேவைப்படுகிறது.