World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Government declares martial law in central Chile after earthquake

மத்திய சிலியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து இராணுவச் சட்டத்தை அரசாங்கம் அறிவிக்கிறது

By Rafael Azul
2 March 2010

Use this version to print | Send feedback

ஜனாதிபதி Michelle Bachelet இன் சிலி அராசங்கம் சனிக்கிழமை பேரழிவு கொடுத்த நிலநடுக்கத்தை அடுத்து மத்திய சிலியின் சில பகுதிகளில் இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான படையினர் Maule மற்றும் Bio Bio இன்னும் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்திருக்கின்றனர்.

ஜனாதிபதி பேஷேலெட் ஒழுங்கை பாதுகாக்கவும் உதவிகளை விநியோகிக்கவும் இது தேவை என்ற போலிக்காரணம் காட்டி முற்றுகை நிலைமையை அறிவித்துள்ளார். அரசாங்க அதிகாரிகள் கொள்ளை அடிப்பவர்கள் என்று கூறப்படுபவர்களைக் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீட்பு முயற்சி மற்றும் உதவி முயற்சிகளில் தலையிடுகின்றனர் என்றும் கூறியுள்ளனர். 1989-ல் பினோசே இராணுவ சர்வாதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டபின் சிலியில் முதல் தடைவயாக இப்பொழுதுதான் முற்றுகை நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அதிகளவான 8.8 அளவு நிலநடுக்கமும், பின்னர் ஏற்பட்ட சுனாமியின் விளைவினால் இறப்பு எண்ணிக்கை 723 என்று உள்ளது. இன்னும் இது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது காணவில்லை என்று கூறப்படும் பலரும் கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது சிலர் இடிபாடுகளுக்கு இடையே புதைந்திருக்கலாம். கிட்டத்தட்ட 1.5 மில்லியன் வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன, பல சுனாமியால் தகர்க்கப்பட்டுவிட்டன.

காயமுற்றவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் எண்ணிக்கை உறுதியாகவில்லை. ஆனால் பல ஆயிரங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. சிலியின் இரண்டாவது பெரிய நகரமான Concepcion- ல் 48 பேர் ஒரு சரிந்த 15 மாடிக்கட்டிடத்தின் கீழ் உயிரோடு அகப்பட்டுக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

உணவைப் பெறுவதற்கான முயற்சிகள் மிக அதிகமாக மக்கள் வசிக்கும் ஏழைப் பகுதிகளான சிலியின் தலைநகரான சன்டியாகோவின் தெற்குப் பகுதியிலும், கான்செப்சியனிலும் உள்ளன. கான்செப்சியனின் மேயர் Jacqueline Van Rysselberghe அரசாங்கத் துருப்புக்கள் வேண்டும் என்று கோரியவர்களில் முதலாவதாக இருந்தார். நகரப் பொலிஸ் மக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டைப் போட்ட பின்னர் இந்தக் கோரிக்கை வந்துள்ளது. "கடற்படையினரும், தரைப்படையினரும் தெருக்களில் இருக்க வேண்டும், ஏனெனில் இங்கு பெரும் குழப்பம் உள்ளது" என்று Van Rysselberghe கூறினார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பசியை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை Van Rysselberghe-யே ஒப்புக் கொண்டார். "உணவுப் பிரச்சினையை நாம் தீர்க்காவிட்டால், வெடிப்புத்தன்மை நிறைந்த நிலைமையை எதிர்கொள்ள நேரிடும்" என்றார் அவர். இந்த அம்மையாருடைய சொற்கள்தான் Bio Bio மேயர் Jaime Tohar ஆலும் எதிரொலிக்கப்பட்டன. "ஒரு பரபரப்பான நாள் இது. நிலநடுக்கும் பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இறந்தவர் எண்ணிக்கை அதிகமாகும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். இன்னும் பலர் இடிபாடுகளுக்குக் கீழே புதைந்துள்ளனர்." என்றார் அவர்.

மேலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி என்ற இரட்டைத் தாக்குதல்கள் சிலிய கட்டுமானத்தின் நிலையை வெளிப்படுத்தியுள்ளன. மிக அடிப்படை வசதிகளான, மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் போக்குவரத்து ஆகியவை நின்று போய்விட்டன.

சுனாமியினால் கடலோரத்தில் உள்ள Constitucion, Lloca மற்றும் Dichato இன்னும் பல நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பல மூன்று நாட்களுக்கு பின்னரும் தொடர்பற்று உள்ளன. Constitucion முனிசிபல் அதிகாரி Cesar Arrellano, "எங்களை அனைவரும் மறந்து விட்டனர் என்று தோன்றுகிறது. எவருடனும் தொடர்பு இல்லாததால் இந்த நிலை போலும்" என்று கூறியதாக லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

ஆர்ஜென்டினாவின் நாளேடு Pagina 12 ஆனது கான்செப்சியன் நகரவாசி ஒருவர் ஒரு கடையிலிருந்து உணவை எடுத்துக் கொண்டிருந்த போது "இது என்னுடைய குழந்தைகளுக்கு. அவர்களுக்கு உணவளிக்க வேறு வழி எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. பல்பொருள் அங்காடியில் இருந்து திரும்பிய மற்றொரு பெண்மணி, "நாங்கள் சாப்பிட வேண்டும்" என்றார்.

பாதுகாப்பு மந்திரி Francisco Vidal இராணுவம் "எதிர்ப்பு வராத" பங்கை ஆற்றும் என்றார். ஆனால் Concepcion-ல் இருந்து வரும் தகவல்கள் எப்படித் துருப்புக்கள் காத்திருந்து மக்கள் பொருட்களுடன் செல்லும் போது அவர்களது பொருட்களை பிடுங்கியும் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்பீய்ச்சுதல் மூலம் விரட்டியடிக்கின்றனர் என்று தெரிவிக்கின்றன. இந்த காட்சிகள் பினோசே சர்வாதிகாரத்தை நினைவுபடுத்துகின்றன. Talcahuano என்று Concepcion-க்கு அருகே இருக்கும் நகரத்தில் வாழைப்பழங்கள், சர்க்கரை மற்றும் எண்ணெய் இவற்றைக் கொண்டிருந்ததாக கருதப்பட்ட கப்பலில் இருந்து வந்த பெரிய கன்டைனர் டிரக்கை மக்கள் திறக்க முயற்சிக்கையில் அவர்களை அடக்கினர்.

பொலிஸும் இராணுவமும் இதுவரை 105 பேருக்கு மேல் கைது செய்துள்ளனர். இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் இராணுவத்தால் கான்செப்சியனில் கொல்லப்பட்டார். மற்றொருவர் சிகுவயன்டே நகரில் ஊரடங்கு உத்தரவிற்குப் பின்னர் நடந்து சென்றபோது கொல்லப்பட்டார். எவர் செய்தது என்பது தெரியவில்லை.

அரசாங்க அதிகாரிகள் இப்பொழுது கடற்படையினர் சுனாமி ஆபத்து பற்றிய எச்சரிக்கையை வால்பரைசோ கடலோரப்பகுதியில் இருந்து 813 கிலோமீட்டர் தொலைவில் (500 மைல்கள்) இருக்கும் Juan Fernandez தீவுகளுக்கு தாமதாமாகக் கொடுத்தது என்று கூறுகின்றனர். தீவில் பாதிப் பகுதியை சுனாமி வெள்ளமாக்கிவிட்டது. குறைந்தது ஆறு பேராவது இறந்து போயினார்கள். டஜன் கணக்கானவர்களின் நிலைமை தெரியவில்லை. Concepcion, Talcauano, Curico, San Javier, Linares மற்றும் Talca இன்னும் சிறிய கடலோர நகரங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இரட்டை ஆபத்துக்களால் வீடுகளை இழந்து வெளியில் உறங்குகின்றனர்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்ட்டுள்ள பினேரா ஒரு பில்லியனர் வணிகர் மற்றும் வலதுசாரி ஆவார். இவர் பினோசே சர்வாதிகாரத்துடனும் அமெரிக்காவுடனும் நெருக்கமான தொடர்புகளை கொண்டவர். இவர் மார்ச் 11-ம் தேதி பதவி ஏற்கவுள்ளார். துருப்புக்கள் அழைக்கப்பட்டு ஒழுங்கை மீட்க வேண்டும் என்ற கருத்திற்கு வலுவாக ஆதரவு கொடுத்துள்ளார். பினேராவும் பாஷேலெட்டும் நூறாயிரக்கணக்கான சிலியக் குடும்பங்களின் நிலைமை பற்றிய ஆழ்ந்த பொருட்படுத்தாத தன்மையத்தான் காட்டியுள்ளனர்.

கடந்த பெப்ருவரியில், பினேராவின் தேர்தல் இரு தசாப்தங்கள் Concertacion அரசாங்கங்களுக்கு பின்னர் வந்தது. அது சோசலிச மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக கட்சிகளின் கூட்டைக் கொண்டிருந்தன. தொடர்ச்சியான Concertacion ஆட்சிகள் பினோசேயின் தடையற்ற சந்தைக் கொள்கைகளைத்தான் நிலைநிறுத்தின. சிலியின் குடும்பங்களில் 20 சதவிகிதம் கிட்டத்தட்ட வறுமைக் கோட்டின்கீழ் உள்ள நிலையில், சிலி தென் அமெரிக்காவிலேயே மிக அதிக சமத்துவமற்ற வருமான தரத்தை கொண்டுள்ளது. பிரேசில் மற்றும் கொலம்பியா இரண்டும்தான் இதை விட அதிக மோசமாகும்.

இப்பொழுது நெருக்கடியை பயன்படுத்தி பினேரா "சிலியை மறு கட்டமைக்க பொது-தனியார் கூட்டு" வேண்டும் என்ற அழைப்பை புதுப்பித்துள்ளார். உண்மையில் பினேரா இந்தக் "கூட்டு" சிலிய சமூகமும் அரசாங்க நிறுவனங்களும், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாபத் தேவைகளுக்கு கீழ்ப்படுத்தப்படும் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது இரகசியமல்ல.