World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German trade union boss to celebrate birthday in the chancellery

ஜேர்மனிய தொழிற்சங்கத் தலைவர் பிறந்த நாளை அதிபர் அலுவலகத்தில் கொண்டாடுகிறார்

By Ulrich Rippert
15 March 2010

Use this version to print | Send feedback

பல நேரமும் அதிக வியப்பில்லாத செய்திகள், சமூக நிகழ்வுகள் பற்றிய உட்பார்வையை கொடுக்கின்றன. அவ்விதத்தில்தான் ஐரோப்பாவின் மிகப் பெரிய தொழிற்சங்கமான IG Metall (IGM) ன் தலைவர் பெர்த்தோல்ட் ஹூபர் (Berthold Huber) அவருடைய 60வது பிறந்த நாளை மார்ச் 17ல் ஜேர்மனிய அரசாங்கத் தலைவரின் சொந்த அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்தில் கொண்டாட இருக்கிறார் என்பதும் ஆகும்.

ஹூபரைப் பாராட்டத்தான் வேண்டும். இதுவும் முற்றிலும் பொருத்தமானதுதான். பிறந்த நாள் கொண்டாடுபவருடன் விருந்தில் அதிபர் அங்கேலா மேர்க்கெல், ஜேர்மனிய முதலாளிகள் சங்கத்தின் தலைவர் மார்ட்டின் கனேஜிசர், சீமென்ஸின் தலைவர் பீட்டர் லோஷ்ஷர் மற்றும் வோல்க்ஸ்வாகனின் முதலாளி மார்ட்டின் வின்டர்கோன் ஆகியோர் இருப்பர்.

Süddeutsche Zeitung பத்திரிகையில் வந்துள்ள ஒரு தகவல்படி, ஏராளமான பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் தலைவர்களும் விருந்தாளிகள் பட்டியலில் அடங்கியிருப்பர். "தொழிலாளர்கள் பிரதிநிதிகளில் மேர்க்கெலுக்கு மிகவும் பிடித்தவரான ஒப்பலின் கிளவுஸ் பிரன்ஸும் விருந்தினர் பட்டியலில் இருப்பார்" என்று செய்தித்தாள் கூறுகிறது. "Porsche ன் ஊவ குக்கும் கலந்து கொள்வார்."

தொழிலாளர் இயக்கத்திற்கு இந்த முழு விவகாரமும் முக்கிய படிப்பினையைக் கொடுக்கிறது. தொழிற்சங்கங்கள் எந்தப் புறம் ஆதரவைக் கொடுக்கின்றன என்பதை இது முற்றிலும் தெளிவாக்கி, எந்த அளவிற்கு அரசாங்கத்துடன் அவர்கள் ஒத்துழைப்பை கொடுக்கின்றனர் என்பதையும் தெரிவிக்கிறது. ஹீபரின் பிறந்த நாள் விருந்து ஒரு அடையாள நிகழ்வு ஆகும். இது தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் கருவிகளாக மிகத்தெளிவாக மாறியிருப்பதை உறுதிபடுத்துகிறது.

70 ஆண்டுகளுக்கு முன்பு, தான் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்புதான் ட்ரொட்ஸ்கி எழுதிய "ஏகாதிபத்திய வீழ்ச்சி சகாப்தத்தின் போது தொழிற்சங்கங்கள்" கீழ்க்கண்ட சொற்றொடருடன் அது தொடங்கியது: "இந்த வளர்ச்சியில் ஒரு பொதுக் கூறுபாடு உள்ளது, தற்கால தொழிற்சங்க அமைப்புக்கள் உலகம் முழுவதும் அநேகமாக வீழ்ச்சிக்கு உட்பட்டுள்ள என்ற கூறலாம்: இவை அரச அதிகாரத்துடன் பெருகிய முறையில் நெருக்கமாக செல்லுகின்றன.":

இப்போக்கு அரசாங்கத்துடன் இணையும் தன்மையைக் கொண்டிருக்கும் உண்மை தொழிற்சங்க அமைப்புக்கள் பலவற்றின் கூறுபாடுகளாக ஆகிவிட்டது. அவை அரசியல்தன்மை அற்றவை, சமூக ஜனநாயகத்தை சேர்ந்தவை, "கம்யூனிச", அரச நிராகரிப்புவாதிகள் என்று எப்படி இருந்தாலும் இது தனிப்பட்ட ஒருவரின் நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினை அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் ஏகபோக உரிமை நிறுவனங்களால் பொருளாதாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. கடந்த காலத்தில் இருந்த இந்நிலைமைகளின் கீழ் அனைத்துத் தொழிற்சங்கங்களும் பல நிறுவனங்களுக்கு இடையே இருந்த போட்டியைத்தான் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் இப்பொழுது, ட்ரொட்ஸ்கி எழுதியுள்ளபடி, "ஒரு மையப்படுத்தப்பட்டுள்ள முதலாளித்துவ விரோதியை அவை எதிர்கொள்கின்றன, அதுவோ அரசாங்க அதிகாரத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது--சீர்திருத்தவாத நிலைப்பாட்டில் அவை இருக்கும் வரை, அதாவது தனியார் சொத்துரிமைக்கு ஏற்பட அவை தம்மை மாற்றிக் கொண்ட நிலைப்பாட்டில் இருக்கும் வரை, தங்களை முதலாளித்துவ அரசாங்கத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு அத்துடன் ஒத்துழைக்கப் போட்டியிடுகின்றன."

இந்த வரிகள் எழுதப்பட்ட நாளில் இருந்து, பல அரசியல் அமைப்புக்களும் குழுக்களும் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு தவறு என்று நிரூபிக்க முயன்றன. போருக்குப் பிந்தைய காலத்தில், தொழிற்சங்கங்கள் சில ஊதிய உயர்வுகள் மற்றும் சமூக முன்னேற்றங்களை சில காலத்திற்குப் பெற முடிந்தது; அவை தொழிற்சங்கங்கள் ஒரு முற்போக்கான பங்கை வகிக்க முடியும் என்று அறிவித்தன, சமூக முன்னேற்றங்கள் மற்றும் சோசலிசத்தை நோக்கிய முன்னேற்றம் தொழிற்சங்கங்களால்தான் அடையப்பட முடியும் என்று கூடக் கூறின.

இன்றுவரை, சமூக ஜனநாயகத்தினர், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் அனைத்துவகை பப்லோவாதிகளும் தொழிற்சங்கங்கள் பற்றிய அடிப்படைக் குறைகூறலை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்க அதிகாரத்துவக் அமைப்புகளுக்குத் அடிபணிய செய்ய முற்படுகின்றன.

அதிபரின் அலுவலகத்தில் ஹீபரின் பிறந்தநாள் விருந்து அத்தகைய சந்தர்ப்பவாத கருத்துக்களை அகற்ற உதவுகிறது. அவர் கொடுத்த அழைப்பிற்காக அதிபரை ஹூபர் பெரிதும் பாராட்டினார். அக்கடிதத்தில் அவர், "அன்பு திருமதி அதிபர் அவர்களே" என்று ஆரம்பித்திருந்தார். இந்த அழைப்பு IGM செயலர்கள் ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டபின் வந்துள்ளது. அந்த ஒப்பந்தம் இரு ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். அதில் ஊழியர்களுக்கு உண்மை ஊதியக் குறைப்புக்கள் ஏற்படும் என்பதோடு, அரசாங்கத்தின் பிரிவுகளுக்கு தொழிற்சங்கம் பாதுகாப்பு கொடுக்கும் என்பதையும் உறுதிபடுத்துகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்கு ஆணையிட்ட சேமிப்புத் திட்டம் ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் தாக்குதல்களுக்கு ஒரு முன்னோடி ஆகும். மக்கள் எழுச்சி பெருகுகையில், IGM, Verdi, இன்னும் பிற ஜேர்மனிய தொழிற்சங்கங்கள் நீண்டகால ஒப்பந்தங்களுக்கு உடன்படும் விதத்தில் தொழிலாளர்களை கட்டுப்படுத்தி, திருப்தி செய்ய முயல்கின்றன. இப்பொழுது ஹூபரும் பிற தொழிற்சாலை தொழிலாளர் குழுத் தலைவர்களும் அரசாங்கத்திற்கு இந்தச் சமாதான நோக்கத்தை கொடுப்பதற்காக வெகுமதி கொடுக்கப்படுகின்றனர்.

தொழிலாளர்கள் அதிபர் அலுவலகம் கொடுத்த அழைப்பிதழிற்கு ஹூபர் கொடுத்த விளக்கத்தை வரவேற்று, எதிர்வரவிருக்கும் போராட்டங்களில் தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் இன்னும் கடுமையாக அரசாங்கத்தின் செயற்பட்டியலை செயல்படுத்தும் என்ற உண்மைக்குத் தயார் செய்ய வேண்டும். இந்த வளர்ச்சி தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களையும் அவை அரசாங்கத்தின் கொள்கையை பாதுகாப்பதை முறையாக எதிர்ப்பதற்கு தொழிற்சாலைக்குழு கட்டமைக்கப்படுவது மிக அவசியம் என்பதைக் காட்டுகிறது.