World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Rapid increase in poverty for pensioners

ஜேர்மனி: ஓய்வூதியம் பெறுவோரின் வறுமை விரைவில் அதிகரிக்கின்றது

By Elisabeth Steinart
26 March 2010

Use this version to print | Send feedback

வயது முதிர்ந்தவர்களிடையே பரந்த முறையில் மீண்டும் வறுமை வந்துள்ளது தவிர்க்க முடியாதது. குறிப்பாக கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் வீழ்ச்சியடையும் ஓய்வூதியங்களை எதிர்கொள்கின்றனர். கடந்த வாரம் பொருளாதார ஆய்விற்கான ஜேர்மன் நிறுவனம் (DIW) வெளியிட்டுள்ள ஆய்வு இந்த முடிவிற்குத்தான் வந்துள்ளது.

ஓய்வூதியக் குறைப்புக்களால் மில்லியன் கணக்கான ஜேர்மனிய மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவர் என்று அறிக்கை அறிவிக்கிறது. வேலையின்மை விகிதம் கடந்த பல ஆண்டுகளாக அதிகமாக இருந்த நிலைமையில் மோசமான Hartz IV சமூகநல உதவித் தொகைகள், இன்னும் பிற குறைவூதிய உழைப்பு உள்ள நிலையில், மக்களின் பரந்த அடுக்கு தனது ஓய்வு பெற்ற ஆண்டுகளை கடும் வறுமையில் கழிக்கும் தன்மையை எதிர்கொள்கிறது. DIW நிதானத்துடன் கொடுத்த புள்ளி விவரங்கள் எந்த அளவிற்கு சமூக ஜனநாயகக் கட்சி -பசுமைக் கட்சி கூட்டணி (1998-2005), பின்னர் பழைமைவாதக் கட்சிகள் சமூக ஜனநாயக கட்சியுடன் கொண்ட கூட்டணி நாட்டின் சமூக நல முறையை தகர்த்துள்ளன என்பதை தெளிவாக்குகின்றன.

கிழக்கு ஜேர்மனியில் ஓய்வூதியங்கள் மாதம் ஒன்றிற்கு சராசரியாக கிட்டத்தட்ட 600 யூரோக்கள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும், மகளிர் பெறும் சராசரி 500 யூரோக்களுக்கும் குறைவாக இருக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.

மேற்கு, கிழக்கு ஜேர்மனியில் வேலைச்சந்தையின் தன்மையை அடிப்படையில் மாற்றிய பல கூட்டாட்சி அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் வருங்கால ஓய்வூதிய வருமானங்களை எப்படி பாதிக்கும் என்று ஆய்வு பகுத்தாய்கிறது. பல தசாப்தங்களாக ஒரு பெரும் குறைவூதிய தொழிலாளர் பிரிவு ஒன்று ஜேர்மனியில் நிறுவப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலை ஒப்பந்தங்களில் எந்தவித ஓய்வூதிய நலன்களையும் கொண்டிக்கவில்லை, அல்லது பெரிதும் குறைந்துவிட்ட ஓய்வூதியத்தைத்தான் பெறுவர்.

இப்போக்கு முன்னாள் அதிபர் ஹெல்முட் கோல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் CDU) அறிமுகப்படுத்திய ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்டங்கள் மற்றும் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணி அறிமுகப்படுத்திய சட்டங்களினால் ஓய்வூதிங்களில் குறைப்பை தீவிரமாக்கிவிட்டது.

2005 மற்றும் 1937 முதல் 1971 வரையிலான பிறந்த ஆண்டுகள் ஆகியவற்றை தனது கணக்கிடும் மாதிரியாக கொண்டு, ஐந்து ஆண்டுகள் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்ட விதத்தில் இந்த ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. இதில் வேலைச் சந்தை வளர்ச்சியின் அனைத்துக் கூறுபாடுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சமீபத்திய ஓய்வூதியச் சீர்திருத்தங்கள் பற்றிய தன் மதிப்பீட்டில், இந்த ஆய்வு ஊதியங்கள் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 1.7 சதவிகிதம் அதிகரிக்கும் என்ற அடிப்படையை கொண்டுள்ளது.

உண்மையில், கூட்டாட்சி புள்ளிவிவரங்கள் அலுவலகக் கருத்துப்படி, 2009ம் ஆண்டு சராசரி மொத்த வருமானங்கள் 0.4 சதவிகிதம் குறைந்தன. ஜேர்மனிய கூட்டாட்சிக் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து இவ்விதம் முதல் தடவையாக நிகழ்ந்துள்ளது. இச்சரிவு குறுகிய நேர பணி அதிகம் பெருகியதால் ஏற்பட்டது.

ஊதியங்கள் மிக அதிக நம்பிக்கையுடன் ஆண்டிற்கு 1.7 சதவிகிதம் உயரும் என்ற அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கு ஜேர்மனியில் ஆண்களுக்கு ஓய்வூதியங்களில் ஒப்புமையில் சற்று குறைவும், மகளிருக்கு சற்று அதிகரிப்பையும் கணித்துள்ளது.

ஆனால் கிழக்கு ஜேர்மனியில் ஆண்கள், மகளிர் இருவருமே வருங்காலத்தில் தங்கள் ஓய்வூதியங்கள் அதிகம் சரியும் என்று எதிர்பார்க்க வேண்டும். DIW ஆராய்ச்சியாளர்கள் 1990ல் மறு இணைப்பிற்கு பின் மேலாதிக்கம் செலுத்தியுள்ள உயர்ந்த அளவு வேலையின்மையை இப்போக்கிற்கு காரணம் காட்டுகின்றனர். நீண்ட கால வேலையின்மை தவிர, கிழக்கு ஜேர்மனிய தொழிலாளர்கள் வேலைகளை மாற்றுதல், வேலைப் பயிற்சித் திட்டங்களில் பங்கு பெறுதல், மேற்கு ஜேர்மனி சக ஊழியரை விட குறைவான ஊதியங்களை பெறுதல் ஆகியவை இதற்குக் காரணமாகும்.

கிழக்கு ஜேர்மனியில் வேலையின்மையில் அதிக ஏற்றம், கிடைக்கும் முழுநேர வேலைகள் குறைவாக இருக்கும் என்று ஆய்வு எதிர்பார்க்கிறது. இது மகளிருக்கும் அதிக கல்வித் தகுதி படைத்த ஆண்களுக்கும் பொருந்தும். 1967-1971ல் பிறந்த குறைந்த கல்விகற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட கல்வித் தகுதி உடைய கிழக்கு ஜேர்மனிய ஆண்கள் குழுவினருக்கு வேலையின்மைக் காலம் சராரசரியாக 9 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது.

DIW ஆய்வு சமீபத்திய நிதிய நெருக்கடி மற்றும் 1930களில் இருந்து முதலாளித்துவ முறை எதிர்கொண்டுள்ள ஆழ்ந்த நெருக்கடியின் விளைவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது மனதில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக குறைந்த தகுதிகள் உடைய தொழிலாளர்கள் பிரிவினருக்கு 2008 உலகந்தழுவிய நெருக்கடிக்கு முன்னரே குறைந்த ஓய்வுதியங்களுக்கான போக்கு காணப்பட்டது. சராசரிக்கு மேலான உயர் வேலையின்மை விகிதம், நீண்ட கால வேலையின்மை, குறைந்த தகுதி உடைய தொழிலாளர்கள், குறிப்பாக கிழக்கு ஜேர்மனியின் கடந்த 20 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு இதன் பொருள் ஓய்வூதிய நிதியங்களுக்கான செலுத்துகைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் இவை எதிர்வரவிருக்கும் ஆண்டுகளில் ஓய்வூதிய குறைப்பில் பிரதிபலிக்கும் என்பதாகும்.

வயது முதிர்ந்த கிழக்கு ஜேர்மனியர்கள் தற்பொழுது 900 முதல் 1,000 யூரோக்கள் வரை ஓய்வூதியம் என எதிர்பார்க்கலாம். ஆனால் 1962 முதல் 1971க்குள் பிறந்தவர்களுக்கு இந்தத் தரம் 600 யூரோக்கள் என்று சரிந்துவிடும். மகளிரைப் பொறுத்தவரையில், ஓய்வூதியங்கள் 1947-1951 க்கு இடையே பிறந்தவர்களுக்கு அதிகமாக இருக்கும், பின்னர் உறுதியாக குறைந்துகொண்டு செல்லும்.

தங்கள் ஆய்வின் ஒரு பகுதியில் ஆய்வாளர்கள் வேலைச்சந்தையில் இன்னும் சாதகமான நிலை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாற்றீட்டை முன்வைத்துள்ளனர். ஆனால் அத்தகைய வளர்ச்சி நீண்டகால ஓய்வூதியச் சரிவைத் தடுக்க இயலாது என்ற முடிவிற்கு வந்துள்ளனர். முந்தைய பெரும் கூட்டணி அரசாங்கத்தின் (பழைமைவாத கட்சிகள் மற்றும் SPD) முடிவான ஓய்வூதிய வயதை 65ல் இருந்து 67 க்கு உயர்த்துவது என்பதும் இந்த நிகழ்வுப்போக்கில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தாது.

"எனவே, ஒரு சமூக-அரசியல் பார்வையில் இந்த வேலைச்சந்தைப் போக்குகள், ஓய்வூதிய தரங்களைக் நீண்ட காலத்திற்கு குறைத்தல் என்ற முடிவுடன் பிணைந்தவை. அத்துடன் வயது முதிர்ந்தவர்களுடைய வறுமைத் தரத்தை அதிகரித்து சமூகநலன் உதவித் தொகைகளை கூடுதாக நம்பியிருக்க வைக்கும் என்ற அச்சத்தைக் கொடுக்கிறது" என்று DIW ஆய்வு முடிவாகக் கூறுகிறது.

வேலையின்மை மற்றும் நீண்டகால வேலையின்மை ஆகியவை வயது முதிர்ந்த தொழிலாளர் அடுக்குகளிடையே மிக அதிகளவில் இருக்கின்றன என்ற உண்மை இருந்தும், வேலைசெய்யும் காலம் இன்னும் நீட்டிக்கப்பட வேண்டும் DIW ஆய்வின் முற்றிலும் பிற்போக்குத்தன முடிவுரை, சமூக நல உதவித் தொகைகளின் அடிப்படை மட்டத்திற்கு சற்று மேலாக இருக்கும்வரை ஓய்வூதிய நிதிக்கு போதுமான நிதி செலுத்தப்படவேண்டும் என்பதுதான்.