சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Gulf oil spill: An American Chernobyl

வளைகுடா எண்ணெய்க் கசிவு: ஒரு அமெரிக்க சேர்நோபில்

Political Committee of the Socialist Equality Party (US)
3 May 2010

Use this version to print | Send feedback

ஒவ்வொரு நாள் கடக்கப்படும்போதும், மெக்சிக்கோ வளைகுடாவில் எண்ணெய் கிணறு தோண்டுதல் மேடையிலுள்ள இயந்திர வெடிப்பினால் உண்டாக்கப்பட்ட பேரழிவின் அளவு பெருகி வருகிறது.உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி) 5,000 முதல் (சில விஞ்ஞானிகளின் மதிப்பீடான) 25,000 எண்ணெய் பீப்பாய்கள் வரை வளைகுடாவிற்குள் ஒவ்வொரு நாளும் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இதை நிறுத்துவதத்திற்குள் மில்லியன்கள், ஏன் பல பத்து மடங்கு மில்லியன் கலன்கள் எண்ணெய் அமெரிக்க சதுப்பு நிலப் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் பரவியிருக்கும்.

 

அமெரிக்க எரிசக்தி தொழில் துறையில் சமீபத்திய இந்த தொழிற் துறைப் பேரழிவில் ஏற்கனவே 11 தொழிலாளிகள் இறந்து விட்டனர். இப்பொழுது மீன்பிடிக்கும் மற்றும் கடல் உணவுத் தொழிற் துறையானது வளைகுடா கடலோரப் பகுதியில் பல ஆண்டுகள், ஏன் ஒரு தலைமுறைக்கு கூட மூடப்பட வேண்டியிருக்கும். இப்பகுதியில் நலிந்த சுற்றுச் சூழல் நிலையின் அழிவை சீராக்க முடியாமற் போகக்கூடும்.

 

இப்பேரழிவில், உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP), அதன் பங்காளிகள், துணை ஒப்பந்தக்காரர்கள், எண்ணெய் தோண்டும் நிறுவனமான டிரான்ஸ் ஓஷன் போன்றவை மற்றும் வெடிப்பிற்கு ஒரு வார காலம் முன்தான் கிணற்று மேடையில் முக்கிய செயற்பாடுகளை நடத்திய ஹாலிபர்ட்டன் ஆகியவை தொடர்பு கொண்டுள்ளன.

 

இப்பேரழிவைத் தோற்றுவித்த மாபெரும் நிறுவனங்களிடம் இதற்கான தீர்வு எதுவும் இல்லை. 15 மாதங்களுக்கு முன்பு ஆழ் நீரில் தோண்டும் திட்டம் முதலில் தொடக்கப்பட்ட போது, "ஒரு தற்செயலான எண்ணெய்க் கசிவானது திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளில் இருந்து ஏற்படும் என்பது இராது" என்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் உறுதிகளைக் கொடுத்திருந்தது. அப்படிக் கசிவு ஏற்பட்டாலும், கடற்கரையோரத்தில் இருந்து உள்ள அதன் தொலைவு (48 மைல்கள்) மற்றும் மேற்கொள்ள இருக்கும் திறன்களினால் அது நிவர்த்தி செய்யப்படும், குறிப்பிடத்தகுந்த பாதகமான விளைவுகள் எதிர்பார்க்கப்படவில்லை" என்று நிறுவனம் கூறியது.

 

வெடிப்பிற்கு பின்னர் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதங்கள் இனி நம்பத்தகுந்தவையாக இல்லை. BP மற்றும் அதன் பங்காளிகள் முதல் தோண்டிய இடம் உறுதியானது, கசிவு இல்லாமல் நன்கு மூடப்பட்டது என்று கூறியிருந்தன. ஆனால் குழாய்கள் இறக்கப்பட்ட பின்னர், குழாய்த் தொடர்புகள் சேதமுற்ற பிறகு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் சிறிது எண்ணெய் சாதாரணமாகத்தான் கசிந்துள்ளது எனக் கூறியது. கசிவை ஒப்புக் கொண்டபின்னரும் கூட, நிறுவனம் கசிவின் தன்மையைக் குறைத்து எடைபோட முற்பட்டது. ஆனால் மதிப்பீடுகள் பல தடவை உயர்ந்துவிட்டன. ஒரு மோசமான இந்த சம்பவத்தில், எண்ணெய்க் கசிவானது நாளொன்றிற்கு 100,000 பீப்பாய்கள் வரை இருக்கக்கூடும்.

 

வியாழன் காலைக்கும் வெள்ளி மாலைக்கும் இடையே, கசிவின் விளைவாகத் தோன்றிய எண்ணெய் திட்டு மூன்று மடங்கு அதிகமாகிக் கிட்டத்தட்ட4,000 சதுர கிலோமீட்டர்களுக்கு பரவியது. லூயிசியானா, அலபாமா மற்றும் மிசிசிபி மாநிலங்கள் மீது பாதிப்பைத் தவிர, கசிவானது புளோரிடா வளைகுடா கடலோரப் பகுதிக்கும் பரவக் கூடும், அங்கிருந்து புளோரிடா கீஸுக்கும் செல்லலாம். அங்குதான் வளைகுடா ஓடை வெள்ளம் மிதந்து கொண்டிருக்கும் கச்சா எண்ணெயை தீபகற்ப அடியைச் சுற்றியும் அட்லான்டிக் கடற்பகுதிக்கும் இழுத்துவிடும்.

 

அமெரிக்க கண்டத்தில் மிக மோசமான பேரழிவு என்று ஏற்கனவே இது கருதப்பட்டு விட்டது. ஒரு நோக்கர் விவரித்துள்ளபடி "நீருக்கடியலான எண்ணெய் எரிமைலையை" நிறுத்தமுடியவில்லை என்றால், அதன் போக்கு எண்ணெய் தோண்டப்பட்டிருக்கும் தளத்தில் இருக்கும் முழு எண்ணெய் திரட்டும் முடியும் வரை தொடரக்கூடும். அது உலகிலேயே மிகப் பெரிய கசிவாகிவிடும்.

 

"ஒபாமாவின் கத்ரீனா" என்ற குறிப்புக்கள் இப்பொழுது வெளிவந்துவிட்ட நிலையில், மற்றொரு ஒப்புமை இன்னும் அறைந்தாற்போல் உள்ளது— அது சேர்னோபில் (Chernobyl) ஆகும். 1985 ல் அணு உலைக்கூட கசிவு உக்ரைன் மற்றும் பேலருஸின் பெரும் பகுதிகளை நச்சிற்கு உட்படுத்தி 50,000 என்று மதிப்பிடப்பட்ட இறப்புக்களை ஏற்படுத்தியது. பொருளாதார வளம் மற்றும் இராணுவ வலிமை என்னும் கூற்றுக்களின் கீழ் ஸ்ராலினிச சோவியத் ஒன்றிய ஆட்சி அழுகி, வெற்றாகப் போய்விட்டது என்பதைத்தான் அது காட்டியது.

 

ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதற்கு ஆரம்பத்தில் காட்டிய விடையிறுப்பு அதை மறைத்து, பேரழிவின் பரப்பையும் குறைத்துக் கூறுவதாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்லத்தான் அதன் அளவு ஒரு பரந்த முழு நனவை அடைந்தது. இந்த வழிவகையில், அது அதிகாரத்துவத்தின் திறமையற்ற தன்மை மற்றும் மக்களின் விதி பற்றிப் பொருட்படுத்தாத் தன்மையையும் அம்பலப்படுத்தியது.

 

அமெரிக்க முதலாளித்துவத்திற்கு கடந்த மூன்று தசாப்தங்கள் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் தன்மைகளில் அழுகிய தன்மையை உடைத்ததாயிற்று. உலகின் மேலாதிக்க இராணுவ சக்தி என்ற தன் நிலையை அமெரிக்கா கெட்டியாக பிடித்துக் கொண்டாலும், அதன் உள் அழுகிய தன்மை ஆழமாகப் போய்விட்டது.

 

"அரசாங்கச் சுமையை உங்கள் முதுகில் இருந்து அகற்றிவிடுங்கள்" என்ற பெயரில், தடையற்ற சந்தை முறையை கட்டவிழ்த்த விதத்தில் பெருநிறுவன அமெரிக்கா சூறையாடுவதற்கு உரிமம் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் நாட்டின் உள்கட்டுமானம் பெரிதும் சரிந்துவிட்டது—இந்த உண்மைதான் 2005 கத்ரீனா சூறாவளிக் காலத்தில் நியூ ஓர்லியன்ஸ் நீர்த்தடுப்பின் தோல்வியை மிக வியப்படையும் விதத்தில் வெளிக்காட்டியது.

 

ஒபாமா நிர்வாகமானது தன் பெருநிறுவன உயரடுக்கிற்கு தாழ்ந்து நிற்கும் தன்மை, அமெரிக்க மக்களுடைய பொதுநலத்தை பொருட்படுத்தாத்தன்மையில் புஷ் நிர்வாகத்திற்கு இணையாக உள்ளது. ஏப்ரல் 20 பேரழிவு வளைகுடா மற்றும் அட்லான்டிக் கடலோரப் பகுதியில் கடலில் எண்ணெய் தோண்டி எடுத்தல் விரிவாக்கப்படுவதற்கு இசைவை அறிவித்து ஒரு மாதத்திற்குள் வந்துள்ளது. எண்ணெய் தோண்டுதல் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டதுடன், எண்ணெய் நிறுவனங்களுக்கு அவருடைய தாழ்ந்த தன்மையையும் அது வெளிப்படுத்தியது.

 

வெடிப்பிற்கு பின்னர், நிர்வாகத்தின் முக்கிய கவலை எண்ணெய் ஏகபோக பெருநிறுவனங்களுக்கு எதிரான மக்களின் பதிலடியை திசை திருப்புவதாகும். பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு எண்ணெய் கிணற்று மேடை நடவடிக்கை கட்டுப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி குற்றம் நடந்த இடத்தின் கட்டுப்பாடு அதைச் செய்தவரிடம் விடப்பட்டுள்ளது.

 

அந்த இடத்தில் இருக்கும் உயர் அரசாங்க அதிகாரியான கடலோரப் பாதுகாப்பு பிரிவின் தளபதி தாட் ஆலன், வெள்ளியன்று பேரழிவைத் தோற்றுவித்ததற்கு காரணமாக இருந்திருக்கூடிய கருவிகள் தோல்வி பற்றி திட்டமிடாததற்காக பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு எதிராக வந்த குறைகூறல்களுக்கு விடையிறுத்தார், "இது ஒரு முன்னோடியில்லாத நிகழ்வு, இத்தகைய பேரழிவு நிகழ்விற்கான திட்டத்தை வரைதல் மிகக் கடினமாகும். ஒரு திட்டத்தில் இல்லாதது பற்றி, நாம் ஒன்றையும் எதிர்பார்ப்பதற்கு இல்லை.’ இத்தகைய அறிக்கை அளிக்கப்படலாம் என்பது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற தன்மைக்கு ஒரு சாட்சியம்தான். அடுத்த நாள் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கம் பற்றி அது அளவுக்கு மீறிக் குவிப்பு காட்டுகிறது. உண்மையில் இப்படி நடந்தது போன்ற ஒரு வெடிப்பு ஏற்படலாம் என்பது முற்றிலும் எதிர்பார்க்கக் கூடியதுதான். இதே போன்ற விபத்துக்கள் மற்ற இடங்களிலும் நடந்துள்ளன—கடந்தாண்டு ஆஸ்திரேலிய கடலோரத்திற்கு அருகே நடந்தது உட்பட. கத்ரினா சூறாவளியைப் போலவே, விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக அமெரிக்க கடலோரப் பகுதிக்கு அருகே ஆழ்கடல் எண்ணெய்க் கிணற்றில் இருந்து தடுக்க முடியாத கசிவைப் பற்றிய கவலையைக் கொண்டிருந்தனர்.

 

முதல் வாரம் பெரிதும் பேரழிவைப் பொருட்படுத்தாமல் இருந்தபின், வெள்ளை மாளிகை ஒரு புகைப்பட நிகழ்வு அனைத்தையும் சரி செய்துவிடும் என்று நம்புகிறது. ஆனால் வளைகுடாவிற்கு ஒபாமாவின் பயணம் அவரோ, அவருடைய அரசாங்கமோ சூழ்ந்திருக்கும் பேரழிவைத் தடுக்க எதையும் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையை மறைக்க முடியாது. நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளபடி, எண்ணெய் கசிவிற்கான தீர்விற்குப் பல மாதங்கள் பிடிக்கலாம். மீண்டும் உலக மக்களுக்கு உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் மாபெரும் நிறுவனங்களின் மகப்பெரிய அழிவுத் திறன் பற்றி நிதானப் போக்கு உடைய நினைவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. உலக நிதியக் கரைப்பில் இருந்து, சுற்றுச் சூழல் பேரழிவு, காலநிலை மாற்றம், வெகுஜன வறுமை மற்றும் நோய்கள் வரை, இந்த நிறுவனங்களின் இலாப நலன்களுக்காக வெகுஜன சமூகம் தாழ்த்தி வைக்கப்பட்டுள்ள நிலை ஒன்றன்பின் ஒன்றாகப் பேரழிவைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

 

இச்சமீபத்திய பேரழிவிற்கு பொறுப்பானவர்கள், பெருநிறுவன நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட, பொறுப்புக் கூறக் கொண்டுவரப்பட்டு, குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்நிறுவனங்கள் பொது உடைமையாக்கப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள் மாற்றப்பட வேண்டும்—அதையொட்டி இயற்கை, சமூகங்களுடன் அதன் உறவுகள் முழு நனவுடன் சமூகத் தேவையை பூர்த்தி செய்ய கட்டுப்படுத்தப்படலாம்—என்பது ஒரு அவசரத் தேவை ஆகும்.