சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US media demands Greek-style austerity for American workers

அமெரிக்க தொழிலாளர்களுக்கும் கிரேக்க மாதிரியிலான சிக்கன நடவடிக்கையை அமெரிக்கச் செய்தி ஊடகம் கோருகிறது

Jerry White
14 May 2010

Use this version to print | Send feedback

சமீபத்திய நாட்களில் அமெரிக்க தாராளவாதத்தின் பதாகையை சுமக்கும் நியூ யோர்க் டைம்ஸ் தலைமையில் அமெரிக்கச் செய்தி ஊடகம் கிரேக்கத்தில் உள்ள தங்கள் சகோதரர்கள் போல் அமெரிக்க தொழிலாளர்களும் மிக நீண்ட காலமாக உயர்ந்த வாழ்வு நடத்திவருகின்றனர். இவர்கள் கடுமையான, நிரந்தர வெட்டுக்களை அவர்களுடைய வாழ்க்கைத் தரங்களில் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

மே 9 கட்டுரையில் டைம்ஸின் கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் உள்ள தொழிலாளர்கள் “கற்பனைப் பல் கதையை” (கீழே விழும் பற்களுக்கு பணம் கிடைக்கும் என்ற சிறுகுழந்தைகள் நம்பிக்கை) நம்புவதற்காக அவர்களை கண்டிப்பதுடன், தொழிலாளர்கள் விலை ஏதும் கொடுக்காமல் அரசாங்கப் பணிகளை எதிர்பார்க்கின்றனர் என்றும் கண்டித்துள்ளார். அமெரிக்காவில் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், வளமையை மரபியமாகப் பெற்றதாக கருதப்பட்ட குழந்தைகள் அதிகம் பிறந்த தலைமுறையால், “அனைத்துச் செல்வங்களும் பசியுடன் உள்ள செடிகளை அழிக்கும் தத்துவெட்டி கூட்டங்களைப் போல் உட்கொள்ளப்பட்டுவிட்டன” என்று ப்ரீட்மன் கூறினார்.

’மேலை நாடுகளில் பெரும்பாலும் அரசியல் என்பது வாக்களார்களுக்கு அனைத்தையும் கொடுக்கப்படுவது என்று இருந்த 65 ஆண்டுகளுக்கு பின்னர், இப்பொழுது அது பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்படுவதாக இருக்கும். “கற்பனைப் பல்” அரசியலுக்கு விடைகொடுப்போம், பல் அடிவேர் அரசியலை வரவேற்போம்’ (பல் வேர்கள் திருத்தப்படுவது, நீண்டகால அடிப்படையில் பயன் தரும்) என்று அவர் கூறினார்.

தன்னுடைய மனதில் இருப்பதை விவரிக்கும் விதத்தில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஏதென்ஸில் தான் ஒரு உணவுவிடுதி உயரடுக்கில் கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவுடன் சந்தித்தது பற்றி எழுதினார். பரந்த எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக பாப்பாண்ட்ரூவைப் புகழும் டைம்ஸ் கட்டுரையாளர் அரசாங்கம் ஒரு “புரட்சியை” நடாத்தியதற்கு பாராட்டியுள்ளார். இதில் ஓய்வூதியத் தகுதி வயது அதிகரிக்கப்பட்டுள்ளது, ஊதியங்களும், ஓய்வூதியத் தொகைகளும் பொதுத் துறை ஊழியர்களுக்கு குறைக்கப்பட்டுவிட்டன, பிற்போக்குத்தன நுகர்வு வரிகள் சுமத்தப்பட்டுள்ளன, மற்றும் நாட்டின் பொது உடைமை நிறுனங்களில் மூன்றில் இரு பங்கு அழிக்கப்படுதல் ஆகியவை அடங்கும்.

டைம்ஸின் முதல் பக்கத்தில் “கிரேக்க கடன் நெருக்கடி, சிலர் அமெரிக்காவுடன் சமாந்திரமான தன்மைகளை காண்கின்றனர்” என்ற தலைப்பில் மே 11 அன்று ஒரு கட்டுரை வந்தது. இதை எழுதிய டேவிட் லியோன்ஹர்ட் செய்தி ஊடகத்தின் பிரச்சாரத்தை ஒபாமாவின் சுகாதாரப் காப்புறுதி முழுமாற்றத்திற்கு ஆதரவு கொடுப்பதில் முன்னின்று, சாதாரண மக்கள் பெறக்கூடிய மருத்துவ சிகிச்சைகளின் மீதான கட்டுப்படுத்தல்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தார் (‘உண்மையில், பங்கீட்டு முறை என்பது பொருளாதார வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத பகுதி’ என்று எழுதினார்.)

“கிரேக்கத்தில் உள்ள எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் செயல்களைக் கண்டு-மற்ற பெரும் கடன்கள் உள்ள ஐரோப்பிய நாடுகளிலும் இப்படித்தான்-ஏன் இதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது எனக்கு வியப்பாக உள்ளது.” அவர்களால் இயலுமானதைவிட மிக அதிமான தாராள அரசாங்க நலன்களை அனுபவித்து வருகின்றனர்….” என்று லியோன்ஹர்ட் எழுதியுள்ளார்.

“ஆயினும் உங்களின் பின்னணியில் அமெரிக்காவில் மட்டும் நிலைமை வேறுவிதமாக உள்ளதா என்ற உறுத்தும் கேள்வி உள்ளது?... இரு நாடுகளிலுமே மக்கள் கொடுக்கும் நிதியைவிட பெரிய அரசாங்கங்கள்தான் உள்ளன. சில அரசியல்வாதிகள் ஊதாரிகள் என்றாலும், பிரச்சினைக்கு முக்கிய ஆதாரம் அவர்கள் அல்ல. மக்கள் ஆகிய நாங்கள் தான் காரணம்.”

“மக்கள்” தங்கள் சக்திக்கு மீறிய வசதிகளுடன் வாழ்வது பற்றிய உரைகளும், தியாகங்கள் பற்றிய கோரிக்களைகளை, குறிப்பாக லியோன்ஹர்ட் மற்றும் ப்ரீட்மன் போன்றவர்களிடம் இருந்நு கேட்பது உயர்ந்த அனுபவம்தான். ப்ரீட்மன் ஒரு உரை நிகழ்ச்சிக்கு $50,000 பெறுபவர், ஒரு பல பில்லியன் டாலர்கள் கொண்ட சொத்துக்களின் தொழிலதிபரின் வாரிசைத் திருமணம் புரிந்துள்ளவர். வாஷிங்டோனியன் ஏட்டின்படி, இத்தம்பதிகள் வாஷிங்டன் டி.சி. புறநகர்ப்பகுதியல் 11,400 சதுர அடி வீட்டின் சொந்தக்காரர்கள்; அதன் மதிப்பு 2,006 ல் $9.3 மில்லியன் ஆகும்.

இந்த வட்டங்களில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது பாரிய வெட்டுக்கள் சுமத்தப்பட வேண்டும் என்பது இயல்பாக ஏற்கப்படுகிறது. ஆனால் நிதியப் பிரபுத்துவத்தின் தனிப்பட்ட சொத்துக்களுக்குள் உட்செலுத்தப்படும் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் பற்றியும், அவர்கள் செல்வக் குவிப்பை அதிகரிப்பதற்கு முழுப் பொருளாதாரம் அடிபணியவைக்கப்படுவது பற்றியும் ஒரு சொல்கூட கூறப்படுவது இல்லை.

கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகள் உலகிற்கு சமூகத்தின் மிகப்பெரிய சுமை சாதாரண தொழிலாளர்கள் அல்லர், ஒட்டுண்ணித்தன நிதிய அடுக்கின் உற்பத்தித்திறன் அற்ற, சமூக விரோத நடவடவடிக்கைகள்தான் என்பதைக் காட்டியுள்ளன. இந்த தன்னலக்குழுவின் கொடூர நுகர்வு மற்றும் சமூகத்தின் செல்வத்தை அபரிக்கும் முறையும் உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியிலேயே ஒரு சிறிய காரணி அல்ல.

முக்கியமாக நிதிய ஊகக்காரர்களின் மோசமான கடன்களை பல அரசாங்கங்களின் கணக்குகளில் மாற்றி எழுதியுள்ளதின் மூலம் முழு நாடுகளையும் திவாலாக்குதல், உயரடுக்கின் மிகஅதிக செல்வக்கொழிப்பிற்காக தொழிலாளர்களிடம் கடுமையான சிக்கனங்களை கோர பயன்படுத்தப்படுகிறது.

நான்கு மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்கள் -பாங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிக்ரூப், கோல்ட்மன் சாஷ்ஸ் மற்றும் ஜே.பி. மோர்கன்- இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஒவ்வொரு வணிக தினத்தன்றும் இலாபம் ஈட்டின என்று நிதியப் பதிவுகள் கூறுகின்றன. வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பின் மூலம் பயனடைந்த இவை அனைத்தும் நாணயம், பாவனைப்பொருட்கள், கிரேக்கம் உட்பட அரசாங்கக் கடன் சந்தைகள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை பற்றிய பந்தயங்களில் நூற்றுக்கணக்கான மில்லியன்களை இலாபமாக பெற்றுள்ளன.

அதே நேரத்தில், முக்கியமாக வேலைக் குறைப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள், பொதுநலச் சலுகைகள் இழப்புக்கள், மற்றும் 2009ல் தொழிலாளர் உற்பத்தித் திறனில் பெரிய வகையில் 3.8 சதவிகித அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டதால் பெருநிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்து விட்டது. இதன் விளைவாக பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள், இலாபங்கள் குறைந்தவுடன் பங்கு விருப்பங்களை கொண்டவர்கள் இப்பொழுது பணம் குவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று “அமெரிக்காவில் உயர்மட்டத் தலைமை நிர்வாக அதிகாரிகள் வாழ்விலேயே ஒருமுறை பெறக்கூடிய பெரும் செல்வத்தை ஈட்டுகின்றனர்” என்ற தலைப்பில் அசோசியேட்டட் பிரஸ் தகவல் ஒன்று கூறுகிறது. உதாரணமாக யாஹூவின் கரோல் பார்ட்ஸ் அவருடைய முதல் ஆண்டு வேலையிலேயே $47.2 மில்லியன் பொதியைப் பெற்றார். இதில் 90 சதவிகிதம் பங்கு வெகுமதி, மேலதிகபங்கு பத்திரங்கள் மூலம் கிடைத்தது.

இத்தகைய பெரும் செல்வக்குவிப்புக்கள் நிகழ்கையில், மந்த நிலையின்போது தொழிலாளர்கள் இழந்துவிட்ட ஊதியங்கள், நலன்கள் ஆகியவற்றை மீட்க நடவடிக்கை ஏதும் இல்லை. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) கடந்த ஆண்டு உண்மை ஊதியங்கள் ஜப்பானிலும் அயர்லாந்திலும் 2.7 சதவிகிதம், ஜேர்மனியில் 1.1 சதவிகிதம், அமெரிக்காவில் 0.08 சதவிகிதம் குறைந்துவிட்டதாக ஒரு தகவல் கூறியுள்ளது.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் கட்டற்ற பேராசையும், ஒபாமாவில் இருந்து அடிமட்டம் வரை அதன் தேவைகளுக்கு அரசியல் ஆளும்தட்டினர் முற்றிலும் தாழ்ந்திருத்தலும் பிரான்சில் புரட்சிக்கு முன்பு இருந்த ஆட்சியுடன்தான் ஒப்பிடப்பட முடியும். நிதியப் பிரபுத்துவத்தின் ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊதாரித்தன செலவும் நாடு உடைவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்து இறுதியில் 1789 ல் பிரெஞ்சுப் புரட்சி வெடிப்பதற்குக் காரணமாயிற்று.

சிக்கன நடவடிக்கைகளுக்கான கோரிக்கையை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். இந்த நெருக்கடியை தொழிலாள வர்க்கம் தோற்றுவிக்கவில்லை, இதற்கான விலையையும் அது கொடுக்கக் கூடாது. மாறாக, ஆளும் உயரடுக்கின் தவறாக சேர்க்கப்பட்ட இலாபங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சமூகத்திட்டங்கள், வேலைகள் ஆகியவற்றை அழிப்பதற்குப் பதிலாக முழு சமூகத்தின் நலன்களைப் பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இதில் வேலையற்றோரை கௌரவ ஊதியங்களும் முழு மருத்துவப் பாதுகாப்பும் உள்ள வேலைகளில் ஈடுபடுத்துவதற்கான பொதுப் பணிகள் திட்டத்திற்கு பல டிரில்லியன் டாலர்கள் ஒதுக்குவது அடங்கி இருக்க வேண்டும். அப்பணிகள் நகரங்கள், புறநகர்ப்பகுதிகள் ஆகியவற்றை மறுகட்டமைக்க, நாட்டின் உள்கட்டுமானத்தை பழுதுபார்க்க மற்றும் உயர்தர வீடுகள், மருத்துவப் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி ஆகியவற்றை அளிக்க உதவ வேண்டும்.

பெருமந்த நிலையின் நடுவே, நான்காம் அகிலத்தின் நிறுவனரான லியோன் ட்ரொட்ஸ்கி இடைமருவு வேலைத்திட்டம் என்பதில், “வங்கிகளின் முக்கிய பதவிகள், கொள்ளைமுறை முதலாளித்துவத்தினரிடம் இருக்கும் வரை ஒன்றுக்கொன்று தங்கள் அழிவுப்பணியில் துணை நிற்கின்ற ஏகாதிபத்திய சர்வாதிகாரம், முதலாளித்துவ அராஜகம் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு தனி தீவிர நடவடிக்கையை எடுப்பது கூட இயலாது. ஒரு ஒருங்கிணைந்த முதலீடு மற்றும் கடன்கள் முறைகளை தோற்றுவிப்பதற்கும், ஒரு பகுத்தறிவார்ந்த திட்டத்தின் மூலம் முழு மக்களுடைய நலன்களைக் காப்பதற்காகவும், அனைத்து வங்கிகளையும் ஓர் ஒற்றை தேசிய நிறுவனமாக இணைத்தல் தேவை. தனியார் வங்கிகள் எடுத்துக் கொள்ளப்படுதல், முழு நிதிய அமைப்புமுறையும் அரசாங்கத்தின் கைகளில் குவிக்கப்படுவதன் மூலமாகத்தான் வெறும் ஏட்டிலும் அதிகாரத்துவ கையிருப்புக்களிலும் இருக்காது அரசாங்கத்திற்கு தேவையான, அவசியமான பொருளாதாய வளங்களை பொருளாதாரத் திட்டத்திற்கு கொடுக்கும்.” என்று வாதிட்டார்.

“அரசாங்கத்தின் அதிகாரமே சுரண்டுபவர்களுடைய கைகளில் இருந்து உழைப்பவர்கள் கைகளுக்கு மாறினால்தான்” வங்கிகள் தேசியமயமாக்கப்படுவது சாதகமான விளைவுகளைக் கொடுக்கும் என்று ட்ரொட்ஸ்கி விளங்கப்படுத்தினார்.

இதை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாள வர்க்கம் தன்னுடைய சொந்த வெகுஜன அரசியல் கட்சியைக் கட்டமைக்க வேண்டும்; அது இரு பெரு வணிகக் கட்சிகளிடம் இருந்தும் சமரசத்திற்கு இடமின்றி சுதந்திரமாக இருக்கவும், முதலாளித்துவத்திற்கு பதிலாக சோசலிசத்தை கொண்டுவரவும் ஒரு தொழிலாளர் அராங்கத்தை நிறுவுவதற்கு தன்னை அர்ப்பணித்து போராடும் அமைப்பாகவும் இருக்க வேண்டும்.