சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

5-The post-war upsurge

யுத்தத்திற்குப் பிந்தைய எழுச்சி

Use this version to print 

120. இரண்டாம் உலக யுத்தம் ஐரோப்பாவிற்கு நெருக்கமாக நிகழ்ந்ததால், பொருளாதார ரீதியாக முதலாளித்துவம் பேரழிவைச் சந்தித்ததுடன், மேலும் பாசிசத்துடனான அதன் ஒத்துழைப்பால் அரசியல்ரீதியாகவும் மதிப்பிழந்திருந்தது. ஹிட்லர் ஆட்சியின் தோல்வியால் கட்டவிழ்த்து விடப்பட்ட சக்திகளை பிரிட்டிஷ் இதழான The Economist பின்வருமாறு விவரித்தது: "புதிய ஒழுங்குமுறையின் (New Order) பொறிவு ஐரோப்பாவிற்கு ஒரு பிரமாண்ட புரட்சிகர உந்துவிசையை அளித்தது. அது அனைத்து தெளிவின்மையையும் தூண்டிவிட்டதுடன், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் அது ஒருபோதும் தீவிரமாகவோ மற்றும் பெருந்திரளான மக்களின் சோசலிச எழுச்சியாகவோ இருக்கவில்லை. குறிப்பிடத்தக்களவில், ஐரோப்பா முழுவதிலும் இருந்த பல்வேறு எதிர்ப்பு குழுக்களுடனான ஒவ்வொரு திட்டமும், வங்கிகள் மற்றும் பெருநிறுவன தொழில்துறைகளை தேசியமயமாக்குவதற்கான கோரிக்கைகளின் அடித்தளத்திலிருந்து எழுந்தன. மேலும் இந்த திட்டங்கள் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளினதும், அத்துடன் சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் ஆதரவையும் பெற்றிருந்தன." முதலாளித்துவத்திற்கு எதிராக இருந்த பரந்த விரோதத்தை மையப்படுத்தி அப்பத்திரிகை குறிப்பிட்டதாவது, 19ம் நூற்றாண்டில் பிரெஞ்ச் சோசலிசத்திற்கான முழக்கம் புருடோனால் (Proudhon) "சொத்து என்பதே திருட்டாகும்," என்று இருந்திருந்தால், இப்போது அது "சொத்து என்பது கூட்டுழைப்பு" என்பதாக இருந்தது."[56] அமெரிக்கா ஒரு பெரும் அழிவிலிருந்து மீண்டிருந்தது. இருந்தபோதினும், பிரபல முதலாளித்துவ பொருளாதார நிபுணரான ஜோசப் ஸ்கூம்பீட்டரின் கருத்துப்படி, "முதலாளித்துவ சமூகத்தின் வீழ்ச்சி மிக தூரத்தில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை."[57] இந்த நிலைமையில் -ஜேர்மன் ஆயுதப்படைகளை தோல்வியடையச் செய்து சோவியத் இராணுவத்தால் பெறப்பட்ட அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி- தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதை சோவியத் ஆட்சியும், ஸ்ராலினிச கட்சிகளும் எதிர்த்ததன் மூலம், யுத்தத்திற்கு பிந்தைய ஒழுங்குமுறையை ஸ்திரப்படுத்துவதில் அவை முக்கிய பங்கு வகித்தன.

121. இதற்கான அரசியல் அடித்தளம் 1943ம் ஆண்டு மே மாதம், கம்யூனிச அகிலம் ஸ்ராலினால் கலைக்கப்பட்ட போது, சோவியத் ஒன்றியம் சோசலிசப் புரட்சியை எதிர்க்கிறது என்று பிரிட்டனுக்கும், அமெரிக்காவிற்கும் ஒரு உத்திரவாதம் வழங்கப்பட்டபோதே அமைக்கப்பட்டுவிட்டது. யுத்தத்திற்கு பிந்தைய ஐரோப்பாவை பிளவுபடுத்தல், முதலாளித்துவம் மேற்கில் அதிகாரத்தை வைத்திருக்கும், சோவியத் ஒன்றியம் கிழக்கு ஐரோப்பாவின் "இடைத்தடை பிரதேசத்தில்" மட்டுமே உரிமை கோரும் என்பதை உருவாக்கியது. இது தெஹ்ரான், யால்டா மற்றும் போட்ஸ்டாம் இல் நடந்த மாநாடுகளில் முடிவு செய்யப்பட்டது.

122. ஸ்ராலினிச கட்சிகள், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதையும், சோசலிசத்தை கட்டமைப்பதையும் வெளிப்படையாகவே எதிர்த்தன. 1943ல் பிரெஞ்சு ஸ்ராலினிசத்தின் ஒரு வெளியீடு, "பழைய அரசியல் வேறுபாடுகள் அனைத்தும் பின்புலத்திற்கு தற்போது தள்ளப்பட்டுள்ளன" என்று அறிவித்தது. ஜூன், 1940ல் பிரெஞ்சு பொறிவிற்கும், யுத்தத்திற்கும் இட்டுச் சென்று கொண்டிருந்த நிகழ்வுகள், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் முக்கியமான எதிரி ஹிட்லர் கிடையாது, மாறாக தொழிலாள வர்க்கம் தான் என்பதை எடுத்துக்காட்டியது. எவ்வாறிருப்பினும், முதலாளித்துவத்துடன் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கு பிரெஞ்சு ஸ்ராலினிசவாதிகளுக்கு இதுவொரு தடையாக இல்லை. "எல்லாவற்றிற்கும் மேலாக, பிரெஞ்சு தேசத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஹிட்லரின் பிரச்சாரத்தால் நஞ்சூட்டப்பட்டவர்களுடனும் கூட, பிரெஞ்சு கம்யூனிஸ்டுகள் நெருக்கமாக கூட்டுறவு செய்து கொண்டிருந்தனர். மேலும் கம்யூனிஸ்டுகளை வாட்டிவதைப்பதற்கு பிரான்ஸுடன் அணுகுவது ஒரு கனத்த வீச்சைப் பெற்றிருக்கிறது, இது குறிப்பிடத்தக்களவில் சரணடையும் வாய்ப்பை எளிமைப்படுத்திக்கொடுத்தது...."[58] இத்தாலியிலும், கிரீஸிலும் அரசியல் நிலைநோக்கு ஒரேமாதிரியாக தான் இருந்தது, ஆனால் ஜேர்மனியில், பாசிச-எதிர்ப்பையும், தொழிற்சாலை குழுக்களையும் கலைப்பதில் வேலைசெய்வதற்காகவும், முதலாளிகள் பங்குபெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிர்வாக அமைப்புகளில் தங்களை அமர்த்திக் கொள்ளவும் மாஸ்கோவிற்கு நாடுகடத்தப்பட்டிருந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகள் மீண்டும் திரும்பி வந்தார்கள். யுத்தத்தின் போதும், அதற்கு பிந்தைய உடனடி காலப்பகுதியின் போதும், ஆசியா முழுவதும் பரவியிருந்த பரந்த காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களில் ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவ தேசியவாத சக்திகளுக்கு ஆதரவளித்துடன், தொழிலாள வர்க்கத்தால் சுயாதீனமாக நடத்தப்பட்ட எவ்வித போராட்டங்களையும் எதிர்த்தனர். இது அவர்களுடைய "இரண்டு-கட்ட" கோட்பாட்டுடன் கோர்த்திருந்தது. அதாவது தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கையில் எடுக்க முன் முதலாளித்துவத்தின் தலைமையின்கீழ் "தேசிய ஜனநாயகத்திற்கு" போராடவேண்டும் என்பதை அக்கோட்பாடு கொண்டிருந்தது. ஜப்பானில், இந்த கோட்பாடு முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின்-- சக்திவாய்ந்த ஆதாரத்தை, அதாவது ஜப்பானிய தொழிலாள வர்க்கத்தின் யுத்த எழுச்சியை ஒடுக்க ஆக்கிரமிப்பு துருப்புகளுக்கு உதவுவதில் பெரும் பாத்திரம் வகித்தது-முகவர்களாக இருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு துருப்பிற்கும், ஜெனரல் மெர்ஆர்த்தருக்கும் முகமன் கூறுவதற்காக கையிலெடுக்கப்பட்டிருந்தது.

123. ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்பானது, மேலாதிக்கமிக்க ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவிற்கு, ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவத்தின் தகர்ந்திருந்த அடித்தளங்களை மீண்டும் கட்டமைப்பதற்கும், யுத்தத்திற்கு பிந்தைய பொருளாதார விரிவை உறுதிப்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் தேவையான அரசியல் நிலைமைகளை ஏற்படுத்திக்கொடுத்தது. அதற்கு பின்னர் வந்த ஆண்டுகளில், பல்வேறு குட்டிமுதலாளித்துவ குழுக்கள் ட்ரொட்ஸ்கிச புரட்சிகர முன்னோக்கின் மீது தாக்குதலை தொடுப்பதற்கான ஆரம்பப்புள்ளியாக முதலாளித்துவத்தின் மறுஸ்திரத்தன்மை பயன்படுத்தப்பட்டது. ட்ரொட்ஸ்கி ஒரு புரட்சியை கணித்தார், ஆனால் அது உருவாகவில்லை. ஆகவே நான்காம் அகிலத்தின் முன்னோக்கு தவறு என்று கூறப்பட்டது. புரட்சிகர போராட்ட தசாப்தங்களில் இருந்து பெறப்பட்ட ஆழ்ந்த உட்பார்வைகளை பிரதிபலித்தும், மிகவும் மாறுபட்ட நிலைமைகளை உள்ளிணைத்தும், ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதாவது: முன்னோக்கு என்பது அதை குறித்த தேதியில் "அடைவதற்குரிய", ஏதோவொரு வகையான வாக்குறுதி குறிப்பல்ல. மாறாக, ஓர் ஒட்டுமொத்த சகாப்தத்திற்கான ஓர் அரசியல் நிலைநோக்காக அது வரையறுக்கப்பட்டது. அவரின் முக்கிய இறுதி அறிக்கைகளில் ஒன்றில், அவர் எழுதுவதாவது: "முதலாளித்துவ உலகை ஒரு நீண்ட மரண வேதனையாக கருதாத வரைக்கும், அது வெளியேறுவதற்கான எந்த வழியும் இல்லை. இதற்கு தசாப்தங்களுக்கும் மேலான நீண்டகாலம், யுத்தங்கள், எழுச்சிகள், தற்காலிக போர்நிறுத்த உடன்பாடுகளின் குறுகிய இடைநிகழ்வுகள், புதிய யுத்தங்கள், மீண்டும் புதிய எழுச்சிகள் என்பன தேவைப்படுகிறது. ஓர் இளம் புரட்சிகர கட்சி அதனை இந்த முன்னோக்கின் அடித்தளத்தில் தான் வைத்துக்கொள்ள வேண்டும். வரலாறு அதனை பரிசோதிக்க, அனுபவங்களை ஒன்றுதிரட்ட, முதிர்ச்சியடைய போதிய வாய்ப்புகளையும், சாத்தியக்கூறுகளையும் அளிக்கும். முன்னணிப்படையினர் எந்தளவிற்கு விரைவாக உறுதியடைந்து இருக்கின்றார்களோ அந்தளவிற்கு இரத்தந்தோய்ந்த எழுச்சிகளின் சகாப்தகாலத்தின் அளவு குறைக்கப்படும் போது, அந்தளவிற்கு நம்முடைய பூமி குறைவான பேரழிவுகளால் பாதிக்கப்படும். ஆனால் பாட்டாளிகளின் தலைமையாக ஒரு புரட்சிகர கட்சி எவ்வகையிலேனும் இல்லாதவரையில், மாபெரும் வரலாற்று பிரச்சினை தீர்க்கப்படாது. வேகம் மற்றும் கால இடைவெளிகளைப் பற்றிய கேள்வி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது; ஆனால் பொதுவான வரலாற்று முன்னோக்கையோ அல்லது நம்முடைய கொள்கையின் திசையையோ மாற்றாது. முடிவான தீர்மானம் மிகவும் எளிமையான ஒன்று தான்: பாட்டாளிகளின் முன்னணிப்படையை படிப்பிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்குமான பணியை பத்து-மடங்கு சக்தியுடன் செய்ய வேண்டியதே தேவையாய் இருக்கிறது. முக்கியமாக, நான்காம் அகிலத்தின் பணி இதில் தான் அமைந்திருக்கிறது."[59]

ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டிக்கொடுப்புகள்

124. ஆகஸ்ட் 1945ல் நடந்த அதன் 14வது தேசிய காங்கிரசில், அமைதி மற்றும் சுதந்திரத்தை நேசிக்கும் சக்திகளின் ஒரு மிகப் பெரிய கூட்டணியாக உருவான, "மூன்று பெரியவை" என்றழைக்கப்பட்ட பிரிட்டன், சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்காவினால் தெஹ்ரான் மற்றும் யால்டாவில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளை ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. அவற்றின் பாத்திரத்தையும் அடுத்துவந்த அமைதியில் அமைத்துக் கொடுத்தது: "ஐரோப்பாவில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்ட போதினும், ஆஸ்திரேலியாவின் யுத்த முயற்சிகளை தளர்த்த வேண்டியதில்லை என்று காங்கிரஸ் அறிவிக்கிறது. உற்பத்தி தொடர்ந்து தக்கவைக்கப்படும், வேலைநிறுத்தங்கள் தவிர்க்கப்படும், தேசிய ஐக்கியம் பிளவுபடுத்தப்படுவது எதிர்க்கப்படும்."[60]

125. ஐரோப்பா, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளின் யுத்தகளங்களில் இருந்து திரும்பி கொண்டிருந்த நூறாயிரக்கணக்கான ஆஸ்திரேலிய தொழிலாளர்கள், 1930களின் நிலைமைகளுக்கு திரும்பாமல் இருக்க எதுவும் உறுதி செய்யப்படவில்லை. யுத்தம் முடியும் தறுவாயில் தொடங்கிய சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் மேம்பாட்டிற்கான முக்கிய தொழில்துறை போராட்டங்கள், யுத்தத்திற்கு பிந்தைய உடனடிக் காலக்கட்டத்திலும் தொடர்ந்தன. 1945-47 ஆகிய ஆண்டுகளில், தொழில்துறை மோதல்களின் விளைவால் சுமார் 5.5 மில்லியன் தொழில் நாட்கள் இழக்கப்பட்டன, அதாவது இது யுத்தம் தொடங்குவதற்கு சற்று முந்தைய ஆண்டுகளில் இருந்ததை விட இரண்டு மடங்காகும். இந்த போராட்டங்கள் பரந்த முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச உணர்வுகளின் அடித்தளத்திலும், மூன்று தசாப்த யுத்தங்களாலும், விரக்தி மற்றும் பாசிசம் ஆகியவற்றாலும் தூண்டிவிடப்பட்டிருந்தன. இப்போது தலைமையில் இருக்கும், அல்லது சங்கங்கள் மூலம் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களில் சுமார் 40 சதவீதத்தினரிடையே பெரும் செல்வாக்கை கொண்டிருந்த ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி (CPA), முதலாளித்துவத்தின் "ஜனநாயக" பிரிவுகள் என்றழைக்கப்பட்ட சீஃப்லே தொழிற்கட்சி அரசாங்கத்துடன் (Chifley Labor government) அதன் கூட்டணியை தொடர்வதாக அறிவித்தது. ஜூலை, 1945ல் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச்செயலாளர் ரிச்சார்ட் டிக்சன் பின்வருமாறு எழுதினார், "சோசலிச முழக்கத்தை எழுப்புவது யுத்தத்திற்கு பிந்தைய உடனடி காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்காக இருக்கும். யுத்தம் முடியும் போது சோசலிச ஆட்சியை உருவாக்குவதற்கான பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் இருக்கும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும். யுத்தத்திற்கு பிந்தைய உடனடிக் காலத்தில் சோசலிச முழுக்கத்தை உயர்த்துவது, மறுகட்டமைப்பு பிரச்சினைகளை நிஜமாக கையாள்வதிலிருந்து நம்மை தடுத்துவிடும் என்பதோடு, மக்களின் முற்போக்கான போராட்டத்தையும் பிளவுபடுத்திவிட்டு, உட்குழுவாதத்தை ஊக்குவிக்கக்கூடும் என்பதால், ஏதோ, எதற்காகவோ நாங்கள் இந்த முடிவுக்கு வந்துவிடவில்லை."[61]

126. யுத்தத்திற்கு பிந்தைய இரண்டு வருட தொழில்துறை எழுச்சியின் போது, வாரத்திற்கு 40 மணிநேர வேலை மற்றும் போதிய சம்பளத்திற்கான போராட்டங்களை ஒடுக்குவதற்கான தொழிலாளர்களை ஏமாற்றிய போலி முயற்சிகளை கொண்டிருந்ததுடன், செஃப்லே தொழிற் கட்சி அரசாங்கத்துடனான "ஐக்கிய முன்னணி" என்றழைக்கப்பட்டதையும் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி கைகொண்டிருந்தது. ஆனால், செப்டம்பர், 1947ல் மாஸ்கோவில் இருந்த ஸ்ராலினிச ஆட்சி ஒரு "இடது" திருப்பத்தை எடுத்தது. பனிப்போர் தொடர்ந்து கொண்டிருந்ததால், கம்யூனிச செய்தித் தொடர்பு அமைப்பின் (Communist Information Bureau - Cominform) ஸ்தாபக மாநாடு, உலகம் தற்போது அமெரிக்காவின் தலைமையில் ஜனநாயக-எதிர்ப்பு ஏகாதிபத்திய முகாமாகவும், சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் ஒரு ஜனநாயக ஏகாதிபத்திய-எதிர்ப்பு முகாமாகவும் என இரண்டு மிகப்பெரும் முகாம்களாக பிரிந்து கொண்டிருக்கிறது என்று அறிவித்தது. அப்போதிருந்து வலது-சாரிகளால் சோசலிஸ்டுகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டன. இந்த "புதிய-பாதைக்கு" ஒத்தபடி, தொழிற் கட்சி மீதான அதன் விமர்சனங்களை ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி அதிகரித்ததுடன், தொழிலாள வர்க்கத்திற்குள் சீர்திருத்தவாதத்துடனான பிளவு அதிகரித்து வருவதாக குறிப்பிட்டது. உண்மையில், யுத்தத்திற்கு பிந்தைய எழுச்சி சிறிதுசிறிதாக தணிந்து கொண்டிருந்தது, தொழிற் கட்சி சீர்திருத்தவாதிகளுக்கு ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவும் குறைவில்லாமல் இருந்ததால், அவர்கள் அவர்களின் நிலையை வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 1949ன் ஆரம்ப வாக்கில், பனிப்போர் தீவிரமடைந்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் லேன்ஸ் ஷார்க்கே தொழிற் கட்சி தலைவர்களை, "போர்விரும்பிகள் மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களின் நெருங்கிய கூட்டாளிகள், இவர்கள் ஹிட்லர் மற்றும் முசோலினி மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் இருந்தது போன்று இவர்களும் தொழிலாளர்களுக்கு எதிரானவர்கள்" என்று கூறி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.[62]

127. ஸ்ராலினிஸ்டுகளின் குழப்பங்களும், திருப்பங்களும் மற்றும் இதன் விளைவாக ஏற்பட்ட தொழிலாள வர்க்கத்திற்கு அளிக்கப்பட்ட தவறான அரசியல் கற்பிதல்களும் வரலாற்றில் 1949ல் நடந்த சுரங்க தொழிலாளர் போராட்டத்தின் விளைவில் ஒரு குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தியது. ஜூன் 1949ல், சம்பள உயர்வுகள் மற்றும் வாரத்திற்கு 35 மணிநேர வேலை ஆகியவற்றை உள்ளடக்கிய நீண்டகாலம் நிலுவையில் விடப்பட்டிருந்த மேம்பாட்டு கோரிக்கைகளை வலியுறுத்த சுரங்க தொழிலாளர்களில் பத்தில் ஒரு பங்கு பெரும்பான்மையினர் வாக்களித்தனர். இந்தப் போராட்டம் நேருக்குநேராக தொழிற் கட்சி அரசாங்கத்துடன் ஒரு மோதலுக்கு இட்டுச் சென்றது. அந்த அரசாங்கம் நடுவர் தீர்ப்பு முறையைக் கொண்டுவருவதற்காக போராட்டத்தை பிளக்க முடிவு செய்தது. அது தொடங்கிய இரண்டு நாட்களுக்கு உள்ளாகவே, தொழிற் கட்சி அரசாங்கம், சுரங்கத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட போராட்ட உதவி தொகை உட்பட போராட்டத்திற்கு உதவும் எவ்வித நிதியையும் தடுக்கும் அவசரகால சட்டத்தை உடனடியாக கொண்டு வந்தது. ஆகஸ்ட் 1ல், சுரங்கங்களை தோண்ட செஃப்லே துருப்புகளை அனுப்பினார். புலம்பெயர்ந்தோர்துறை மந்திரியும், பின்னர் தொழிற் கட்சியின் தலைவருமான ஆர்தர் கால்வெல், ஒரு சிட்னி பொதுக்கூட்டத்தில் கூறுகையில், கம்யூனிஸ்டுகளை தடுப்புமுகாம்களில் இடவேண்டும், மேலும் "அவர்களுக்கு எதிராக நாட்டின் அனைத்து ஆதாரங்களையும் அரசாங்கம் பயன்படுத்த வேண்டும். நாங்கள் அவர்கள் மீது இராணுவத்தையும், கப்பற்படையையும், விமானப்படையும் பயன்படுத்துவோம்" என்று தெரிவித்தார். தொழிற் கட்சியின் "இடதில்" நின்ற லெஸ்ஸி ஹேய்டென் பின்வருமாறு அறிவித்தார்: "சுரங்க தொழிலாளர்கள் கூட்டமைப்பில் இருக்கும் கம்யூனிஸ்டுகள், சமரசமான அமைப்புமுறையின் செயல்பாட்டிற்கும் மற்றும் நிலக்கரி சுரங்கங்களின் நடுவர் தீர்ப்பிற்கும் எதிராக மோதும் ஒரு நீண்ட நிலைத்த கொள்கையை கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக, இவர்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களும் இல்லை, ஆஸ்திரேலியாவின் மீது ஆர்வம் கொண்டவர்களும் இல்லை. அவர்களின் கொள்கை வேறு இடங்களில் இருந்து தூண்டிவிடப்படுகிறது, இவர்கள் வேறு நாட்டை, வேறு தேசத்தைச் சேர்ந்த நீண்டகால காழ்புணர்ச்சியுடன் வேலை செய்து வருகிறார்கள்..." என்றார். தொழிற் கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக கணிசமான வெறுப்பு இருந்ததுடன், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கு இடையே ஸ்ராலினிஸ்டுகள் கொண்டிருந்த பாத்திரத்தின் மீது அங்கே ஆழமான நம்பிக்கையின்மையும் இருந்தது. இதன் விளைவாக, சுரங்கத் தொழிலாளர்கள் நிராகரிக்கப்பட்டு, ஏழு வாரங்களுக்கு பின்னர், மீண்டும் வேலைக்கு திரும்ப தூண்டப்பட்டார்கள்.

128. சுரங்கத் தொழிலாளர்களின் தோல்வி, யுத்தத்திற்கு பின்னர் தொழிலாள வர்க்கத்திடையே எழுந்த உடனடி எழுச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. வெளிநாட்டிலிருந்து தூண்டிவிடப்பட்ட கம்யூனிச சதி என்று, தொழிற் கட்சி அரசாங்கம் வேலைநிறுத்தத்தின் மீது அளித்த தாக்குதல், ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களுக்கு அரசியலை வடிவமைப்பதில், கம்யூனிச எதிர்ப்பு பனிப்போர் சூழலை ஊட்டிவளர்க்க உதவியது. இது வெறுமனே ஒரு சித்தாந்தம் சார்ந்த விஷயமல்ல. தொழிற் கட்சியானது, பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பு (ASIO) என்பதை ஏற்படுத்தியது. இது இடதுசாரி அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக வேவுபார்த்தல் மற்றும் ஆத்திரமூட்டல் ஆகியவற்றை செய்தது. யுத்தத்திற்கு பிந்தைய அரசியல் நிலைமையை ஸ்திரப்படுத்த, தொழிற் கட்சிக்கு உதவுவதில் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியும் முக்கிய பாத்திரம் வகித்ததுடன், 1949ல் மீண்டும் தாராளவாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கான பாதையையும் திறந்துவிட்டது.

யுத்தத்திற்கு பிந்தைய ஸ்திரப்பாடும், பப்லோவாதத்தின் தோற்றமும்

129. முதலாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஏற்பட்டது போலவே, இந்த யுத்தத்திற்கு பின்னரும் தொழிலாள வர்க்கம் தீவிரமயப்படுவதை ஆஸ்திரேலிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எதிர்நோக்கினார்கள். இது ஆஸ்திரேலிய தொழிற்கட்சிக்குள், அதன் தலைமைக்கு எதிராக, ஓர் இடதுசாரி உருவாக்கத்தைக் காணும், அது ஒரு பிளவிற்கு இட்டுச் செல்லும் என்று நம்பினார்கள். 1941ல், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, முதலில் பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்காக ட்ரொட்ஸ்கியால் அறிவுறுத்தப்பட்ட ஓர் உத்தியை அமெரிக்க கம்யூனிஸ்ட் கழகம் (CLA) கைக்கொண்டது. "பிரெஞ்சு திருப்பத்தில்" இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட அது, இடது நோக்கி நகரும் உறுப்பினர்கள் மத்தியில் அரசியல் வேலைகளை அபிவிருத்தி செய்வதையும், அவர்களை நான்காம் அகிலத்திற்கு வென்றெடுப்பதையும் உள்ளடக்கி இருந்தது. ஒரிகிளாஸ் தொழிலாளர் சோசலிச குழுவை (LSG) ஸ்தாபித்தார். இது NSW ஆஸ்திரேலிய தொழிற் கட்சிக்குள் இயங்கியது. 1942ல் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் அவர்தம் முன்னோக்கை அமைத்தார், அதுவாவது: "தொழிற் கட்சி கூட்டுப் பாராளுமன்றத்தின் அதிகாரத்தில் இருக்கிறார்கள், ஆனால் தற்போது எந்த நேரத்திலும் ஒரு பிளவு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன, இது எதிர்தரப்பில் ஒரு புதிய தொழிற் கட்சி தலைமையுடன், தொழிலாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, மேலும் மேலும் தீவிர பேச்சுக்களை பயன்படுத்தி ―தாராளவாத தொழிற் கட்சியிலிருந்து சமூக ஜனநாயக கட்சிக்கு முன்னேற்றுவதற்கான― பொனாபார்டிசத்தை நோக்கிய ஒரு கூட்டணி அரசாங்கத்தை நிறுவுவதில் முடியக்கூடும். பிரெஞ்சு திருப்பத்தின் வாக்கில், நாம் இவ்வாறு இருக்க நாம் நோக்கம் கொள்ள வேண்டும்..."[63] என்றார். எவ்வாறிருப்பினும், 1930களைப் போலவே நிகழ்வுகள் நடந்துவிடவில்லை. யுத்தத்தின் கடைசி நிலைகளும், யுத்தத்திற்கு பிந்தைய உடனடி ஆண்டுகளும் தொழிலாள வர்க்கத்திடையே ஒரு தீவிரமயமாக்கலை சந்தித்தன என்ற போதினும், அவை தொழிற் கட்சிக்குள் ஒரு முரண்பாட்டை உயர்த்திவிடவில்லை. மாறாக, நாஜி ஜேர்மனியின் இராணுவத் தோல்வியில் சோவியத் இராணுவத்தின் பங்களிப்பின் விளைவாக வென்றெடுக்க முடிந்திருந்த அரசியல் செல்வாக்கின் காரணமாக, அது கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்குத் தான் இட்டுச் சென்றது.

130. இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து, நான்காம் அகிலம் ஒரு சிக்கலான நிலைமையை முகங்கொடுத்தது. 1940களின் இறுதி வாக்கில், ஸ்ராலினிச கட்சிகளின் காட்டிக்கொடுப்புகளின் காரணமாக, முதலாளித்துவம் அதன் ஆட்சியை மீண்டும் ஸ்திரப்படுத்திக் கொண்டு, யுத்தத்திற்கு பிந்தைய ஒரு பொருளாதார விரிவாக்கத்திற்கான அடித்தளத்தை அதனால் அமைத்துக் கொள்ள முடிந்தது. புதிய நிலைமைகளால் உருவான அரசியல் நெருக்கடிகள், நான்காம் அகிலத்தின் செயலாளர் மிசேல் பப்லோவினால் முன்னிறுத்தப்பட்ட சீர்திருத்தப்பட்ட முன்னோக்கினால் இயக்கத்திற்குள் அவற்றின் வெளிப்பாடுகளைக் கண்டது.

131. யுத்தத்திற்கு பிந்தைய உடன்பாடுகளையும், பனிப்போரின் அரசியல் கட்டமைப்பையும் ஏற்றுக்கொண்டு, பப்லோ வாதிட்டதாவது: "எமது இயக்கத்தை பொறுத்தவரையில் புறநிலை யதார்த்தம் என்பது முதலாளித்துவ ஆட்சியின் மற்றும் ஸ்ராலினிச உலகம் என்ற இரண்டாகவே இருக்கின்றது." இங்கு தொழிலாள வர்க்கத்தின் அனைத்துவிதமான சுயாதீனப்பட்ட பாத்திரமும், மற்றும் அவ்வாறே நான்காம் அகிலமும் கைவிடப்பட்டிருந்தது. ஆகஸ்ட், 1951ல் நடைபெற்ற நான்காம் அகிலத்தின் மூன்றாம் உலக மாநாட்டின் அவர் அறிக்கையில், அவருடைய முன்னோக்கின் தீர்க்கமான கலைப்புவாத முடிவுகளை பப்லோ வரைந்து காட்டினார். அவர் அறிவித்ததாவது: ஒவ்வொரு நாட்டிலும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்வதற்காக நிகழும் பெருந்திரளான போராட்டத்திற்குள் நிஜமாக ஒருங்கிணைவதற்கு, அல்லது செல்வாக்கு பெற்ற இந்த போராட்டத்தின் ஒரு முக்கியமான நிகழ்வில் ஒருங்கிணைவதற்கான, இயக்கத்தின் அனைத்து அழைப்புகளுக்கும், உத்தியோகபூர்வ சுதந்திரம் அல்லது வேறு எதுவாயினும் அவற்றிற்கு, அடிபணிவதற்கான தேவையை புரிந்து கொள்ளாத எந்தவொரு ட்ரொட்ஸ்கிச இயக்கமும் இருக்க முடியாது." நான்காம் அகிலம் அதன் 1988 முன்னோக்குகளின் தீர்மானமான, உலக முதலாளித்துவ நெருக்கடியும், நான்காம் அகிலத்தின் பணிகளும் என்பதில் பின்வருமாறு வரைந்து காட்டியது, பப்லோ அவருடைய நெருங்கிய கூட்டாளியான ஏர்னெஸ்ட் மன்டேலின் உதவியுடன், "பாட்டாளிகளின் சுயாதீனமான மற்றும் முன்னணிப் பாத்திரத்தை அடிப்படையாக வைத்திருக்கும் ஒரு மைய உலக மூலோபாயத்தை புறக்கணிக்க முன்மொழிந்தார். இதன்மூலம், மேலோங்கி இருந்த தேசிய நிலைமைகளால் வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பவாத உத்திகளால் வழிநடத்தப்பட்டு வந்த தேசிய கட்சிகளின் ஒரு தொகுப்பிற்குள் நான்காம் அகிலத்தை சிதைக்க அவர் விரும்பினார்."[64] இந்த முன்னோக்கு நான்காம் அகிலத்தின் கன்னைகளை, ஒரு நாட்டின் தொழிலாளர் இயக்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தி வந்த எந்தவிதமான அரசியல் சக்தியிடமும், அது ஸ்ராலிசம், சமூக ஜனநாயகம், தேசிய முதலாளித்துவம் அல்லது தீவிர குட்டி-முதலாளித்துவம் என எவ்வாறாக இருந்தாலும் அவற்றிற்றகு அடிபணியச் செய்ய வலியுறுத்தியது.

132. பெப்ரவரி 1952ல், பப்லோ அவரின் ஒரு சிறப்பு வகை நுழைவுவாதம் (entrism sui generis) என்ற ஆய்வுக்கட்டுரையை நான்காம் அகிலத்தின் அனைத்துலக பிரதிநிதிகள் குழுவிற்கு முன்வைத்தார். முன்னதாக, சுயாதீனமான கட்சிகளை கட்டுவதற்கான மூலோபாயத்திற்கு முழுவதுமாக அடிபணிந்த ஓர் உத்தியாக, பிற கட்சிகளுக்குள் நுழைவதை ட்ரொட்ஸ்கிச இயக்கம் கொண்டிருந்தது. இப்போது, திரளான சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் செல்வாக்கு பெற்றிருக்கும் தொழிலாளர் இயங்கங்கள் இருக்கும் நாடுகளில் அந்த முன்னோக்கு அகைவிடப்பட்டிருந்தது. பப்லோ எழுதினார்: "யுத்தத்திற்கு முன்னர், மிக குறிப்பாக 1934 மற்றும் 1938 க்கு இடையில், ஹிட்லரின் வெற்றி மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதும், தொழிலாளர் இயக்கத்தின் மீதும் பாசிசம் காட்டியிருந்த அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு பின்னர், சமூக ஜனநாயகம் உட்பட, போராட்டத்திற்கு உடன்படாத ஸ்ராலினிச கட்சிகளுக்குள் நுழைவதை ட்ரொட்ஸ்கி ஒரு உத்தியாக கருதினார். ஆனால் இந்த உத்தி வரம்பிற்குட்பட்ட புறநிலைமைகளுடன் ஒரு நிலையில்லாத, குறுகிய காலத்திற்கான பாத்திரத்தை கொண்டிருந்தது. இந்த கட்சிகளில் நுழைவதை எது உள்ளடக்கி இருந்ததென்றால், தற்காலிகமாக இடதிற்கு திரும்புபவர்களிடம் இருந்து பயனடைவது, வெளியேற இருந்த உறுப்பினர்களை அணிதிரட்டுவது அல்லது அங்கே உருவாகி கொண்டிருந்த மற்றும் சில இடதுசாரிப் போக்குகளை கருத்திலெடுத்து வெளியேற்றுவதாகும். இந்த கட்சிகளுக்குள் இருந்து கொண்டு யுத்த மற்றும் புரட்சிப்பணிகளை முகங்கொடுப்பதென்பது அங்கே விஷயமாக இருக்கவில்லை. உள்ளே நுழைவதையும், அந்த கட்சிகளுக்குள் இருந்து செயல்படுவதையும் செய்வதற்கான ஒட்டுமொத்த கருத்தும் இந்த முன்னோக்கினால் வரையறுக்கப்பட்டது. இன்று நம்மை கவலைப்பட வைக்கும் நுழைவுவாதம் துல்லியமாக அம்மாதிரியான நுழைவுவாதம் கிடையாது. உடனடியாக அவற்றிலிருந்து வெளியே வருவதற்காக நாம் இந்த கட்சிகளுக்குள் நுழைவதே இல்லை. புதிய நிலைமைகளின்கீழ், இந்த கட்சிகள் உருவாக்கும் மத்தியவாத போக்குகளைப் பார்த்து, அதில் நிலவும் பெரிய வாய்ப்புகளை சேகரித்து நீண்ட காலத்திற்கு அங்கேயே இருப்பதற்காகவே அவற்றிற்குள் நாம் உள்ளே நுழைகிறோம். இந்த மத்தியவாதப் போக்குகள் தான், அந்தந்த நாட்டில் பெரும்திரளான மக்களிடையே தீவிரமயப்படுதலையும், புறநிலையான புரட்சிகர நிகழ்முறைகளுக்குமான ஒரு மொத்த அரங்கத்தையும் அமைக்க இட்டுச்செல்கின்றன."[65]

133. 1905 என்ற அவருடைய புத்தகத்தில் ட்ரொட்ஸ்கி, சந்தர்ப்பவாதத்தின் உளவியல் மூலங்களை காத்திருக்க இயலாத அதன் தன்மையாக பாத்திரப்படுத்தினார். "ஒரு காலத்தில் நட்பு மற்றும் விரோத சமூக சக்திகள், அவற்றிற்கிடையிலான முரண்பாடுகளினாலும், இடைத்தொடர்புகளினாலும் உள்ள தாக்கத்தால் ஒரு மொத்த அரசியல் இயங்காநிலை உருவாகிறது. முரண்பாடுகள் தீவிரமடைவதால் இந்த உள்ளார்ந்த போக்குகள் வளர்ச்சியடையும் போது அரசியல் சமநிலையை குழப்ப தவறுவதுமட்டுமல்லாது, மாறாக அது அதை வலிமைப்படுத்துகிறது, பின்னர் அது இருந்தது போலவே, அதை நிரந்தரமாக்குகிறது―இது போன்ற காலங்களில் பொறுமையிழப்பால் ஆட்கொள்ளப்பட்ட சந்தர்ப்பவாதம், நடைமுறையில் வரலாறு அப்போதைக்கு தயாராகாமல் இருக்கும் போதே, 'புதிய' வழிகளையும், கருவிகளையும் தேடுகின்றது. அதன் சொந்த இயலாமை மற்றும் நம்பிக்கையின்மையால் சோர்ந்து போய், அதன் "கூட்டுக்களை" தேடிச்செல்கின்றது."[66] புரட்சிகர கட்சியைக்கட்டுவதோடு தொடர்புபட்ட பிரச்சினையை எதிர்கொள்ளவதில் நம்பிக்கையில்லாமல் வளர்ந்திருப்பவர்களுக்கும், புரட்சிகரப் போராளிகளை பயிற்றுவிப்பதற்கு தேவையான பொறுமையான போராட்டத்தினை முதல் இடத்தில் வைக்கமுடியாத குட்டி முதலாளித்துவத்தின் பொறுமையற்ற கன்னைகளுக்கும், மேலும் குறிப்பாக தேசிய சூழலின் அழுத்தங்களால் எளிதில் பாதிப்படையக்கூடியவர்களாக இருந்தவர்களுக்கும் பப்லோவின் முன்னோக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. அது "நிஜமான பெருந்திரளான மக்கள் இயக்கத்திற்குள் ஒன்றிணைவதற்கான" ஒரு பாதையை அளித்தது"; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்தவாத அமைப்புகளுக்குள் சேரவும், அவர்களின் சொந்த தேசியவாத தந்திரோபாய அபிவிருத்தியில் ஒருமுகப்படவும் ஒரு பாதையை அளித்தது.

134. 1950 களின் தொடக்கத்தில், யுத்தத்திற்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சியின் விளைவாக ஆஸ்திரேலிய முதலாளித்துவம் விரைவான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு மதிப்பீட்டின்படி, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, வாழ்க்கைத் தரங்கள் உலகிலேயே உயர்ந்தவைகளில் ஒன்றாக இருந்தது. சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த தோல்விக்கு பின்னர் 1950ல் இழந்த நாட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருந்ததுடன், யுத்தத்திற்கு பிந்தைய வேலைநிறுத்த போராட்டங்கள் சிறுக சிறுக தணிந்தன. பொருளாதார எழுச்சி மற்றும் பனிப்போரின் தொடக்கத்துடன், நன்கு அறியப்பட்ட பல ஆஸ்திரேலிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இயக்கத்தை விட்டு ஏற்கனவே வெளியேறி இருந்தார்கள். அவர்களில் மிகவும் குறிப்பிட வேண்டியவர், லௌரி ஷோர்ட். 1933ல் ஷோர்ட் இளம் பிராயத்தவராக அமைப்பில் சேர்ந்தார், பின்னர் யுத்த முடிவில், கப்பல் பட்டறை போராட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். ஆனால் 1948 இறுதி வாக்கில், எத்தனையோ நபர்கள் இதற்கு முன்னர் குறிப்பட்டது போல, இன்றும் குறிப்பிட்டு வருவதைப் போல, "யதார்த்தவாதத்தை" பின்பற்றப்போவதாக முறையிட்டு, ஏறக்குறைய அவர் இயக்கத்திலிருந்து வெளியேறி இருந்தார். "பொருளாதார நிலைமைகளால் தவிர்க்கமுடியாமல் மக்கள் தீவிரப்படுத்தப்பட்டனர் என்பது யதார்த்தத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டிருக்கிறது என்ற முறையீட்டை என்னால் பார்க்க முடிந்தது. இது வெறுமனே நடந்துவிடவில்லை. நான் ட்ரொட்ஸ்கிஸ்டாக இருந்த காலத்தில், ஆஸ்திரேலியாவில் 50 திற்கும் மேற்பட்டவர்கள் எவரும் மின்னொளியைப் பார்த்திருக்கவில்லை. முதலாளித்துவ கொடுமைகளும், அவற்றால் வீசப்படுபவரையும் தவிர்க்கவே முடியாதவையோ என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு." புதிய சாத்தியக்கூறுகள் திறந்து கொண்டு வந்தன, அவருடைய வரலாற்றை எழுதியவரால் பின்னர் குறிப்பிடப்பட்டது போல, "வழக்கத்திற்கு மாறாக―அவரின் தேவையுணர்வின் நலன் கருதியும், அத்துடன் அரசியலின் தீவிர இடதின் விளிம்பில் இருந்தும் பல ஆண்டுகளாக கிடைத்த அனுபவங்களால்―தொழிற்சங்கத்திற்குள்ளும், பரந்த தொழிலாளர் இயக்கங்களுக்குள்ளும் அரும்பிவந்த கம்யூனிச-எதிர்ப்பிலிருந்த ஆதாயத்தை பெறுவதில் ஷோர்ட் திறமை பெற்றிருந்தார்." [67] ஷோர்ட், பனிப்போரால் கிடைத்த சந்தர்ப்பங்களை சாதகமாக பயன்படுத்தி, ஐக்கிய இரும்புத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் (FIA) தேசிய செயலாளராகவும், தொழிற் கட்சியில் வலதுசாரி கம்யூனிச எதிர்ப்பின் ஓர் அரணாகவும் ஆனார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அவருடைய நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான ஜேம்ஸ் மெக்கிளெல்லேண்ட்டும், அதே காலத்தில் தான் இயக்கத்தை விட்டு விலகினார். அவர் FIA இற்காக தொழிலாளர்களின் நஷ்டஈடு வழக்குகளைப் பின்தொடர்வதற்கான, ஆதாயமளிக்கும் சட்ட நடவடிக்கைகளை உருவாக்க இருந்தார். பின்னர் "Diamond Jim" கூட்டு பாராளுமன்றத்திற்குள் நுழைந்த அவர், விட்டலெம் அரசாங்கத்தில் ஒரு மந்திரியானார். இந்த அரசாங்கம், 1940களில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த கவர்னர்-ஜெர்னல் சேர் ஜோன் கேரால் 1975ல் தூக்கி எறியப்பட்டது. அவர்களின் பரிணாமம், முதலும் கடைசியுமாக அல்லாமல், முதலாளித்துவ ஆட்சிகளின் சேவையில் ஒரு சமயத்தில் தீவிரப்படுதலுடன் இருந்தவர்கள் மற்றும் "இடதுகள்" என்ற மட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

135. ஒரிகிளாஸ் தலைமையிலான தொழிலாளர் சோசலிச குழுவும் (Labor Socialist Group), 1952 ஈஸ்டரில் நடந்த அதன் ஆண்டு பொதுமாநாட்டில் பப்லோவின் நுழைவுவாத (entrism sui generis) முன்னோக்கை ஏற்றுக் கொண்டது. ஆஸ்திரேலிய தொழிற்கட்சியில் சேர்வதற்கான ஒரிகிளாஸின் முயற்சி நிராகரிக்கப்பட்டது அவர் ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியாக மிக நன்றாக அறியப்பட்டிருந்தார். உள்ளே நுழைவதற்காக அவர் ஆசிரியராக இருந்த The Socialist பத்திரிகை இல்லாதொழிக்கப்பட வேண்டியதாக இருந்தது. தொழிற் கட்சிக்கு எவ்விதத்திலும் அது எதிர்ப்பு காட்டாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் இறுதி பதிப்புகளை ஒரிகிளாஸ் திருத்தினார். இறுதியாக ஆகஸ்ட் 1952ல் பதிப்பை முற்றிலுமாக இல்லாதொழித்துக்கட்டினார்.

136. பப்லோ முறையிட்ட உணர்வுகளை, "பழைய ட்ரொட்ஸ்கிசத்தை தூக்கிவீசு" என்ற கோஷத்துடன் அவருடைய ஆதரவாளர்கள் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியில் (SWP) வெளிப்படுத்தினார்கள். இதேபோன்ற கருத்து, ஒரு நீண்டகால ஆஸ்திரேலிய ட்ரொட்ஸ்கிஸ்ட்டின் மகளான, ஆஸ்திரேலிய ஆதரவாளர் Winifred Bradley-னாலும், அக்டோபர் 1953 இல் சோசலிச தொழிலாளர் கட்சியின் இதழான நான்காம் அகிலம் என்பதில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் ஒலிக்கப்பட்டது: "லியோன் ட்ரொட்ஸ்கி 13 ஆண்டுகளுக்கு முன்னர், 1940ல் இறந்தார். உலகளவில் சோசலிசத்தை கட்டி விரும்ப எழுந்த ஒரு புதிய தலைமுறையில் நானும் ஓர் உறுப்பினராக இருக்கிறேன். இந்த புதிய தலைமுறைக்கு, லியோன் ட்ரொட்ஸ்கி எப்போது உயிரோடு இருந்தார் என்பதை கூட நினைவில் வைத்திருக்க முடியாது. மாஸ்கோ வழக்குகளின் நாட்களிலும், மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய முன்னணியின் காலங்களிலும் நாம் பிறந்திருக்கவே மாட்டோம் என்பதால் அவற்றை நம்மால் நினைவில் வைத்திருக்க முடியாது. இரண்டாம் உலக யுத்தத்தையும் கூட நாம் மிகவும் குறைவாகவே நினைவில் கொண்டிருப்போம், யுத்தத்திற்கு பிந்திய காலகட்டம் மட்டும் தான் நாம் அறிந்திருக்கும் காலகட்டமாக இருக்கிறது. பழைய மற்றும் புதிய ஒழுங்குமுறைகளான முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் பற்றிய இறுதிப்போட்டி நம்முடைய மத்திய வயதில் ஏற்படும் என்பது குறித்து மட்டுமே நாம் உண்மையில் நனவோடு இருக்கிறோம். 12 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த ஒரு மனிதரின் மேற்கோளின் மீது, அந்த மனிதர் எந்தளவிற்கு புத்திசாலியாக இருந்திருந்தாலும் கூட, அவருடைய சிந்தனைகள் எந்தளவிற்கு ஆழமாக சரியாக இருந்தாலும் கூட, 1945ல் இருந்து எவ்வித ஆதரவும் இல்லாமல், அதன்மீது ஒரு விவாதத்தை முன்வைப்பதும், அதை நிரூபிப்பதும் நம்மை திருப்திப்படுத்தாது. லியோன் ட்ரொட்ஸ்கி ஒரு குறிப்பிட்ட காலத்திற்காகவும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்காகவும் எழுதினார்... குறிப்பாக இந்த நூற்றாண்டில், பன்னிரெண்டு ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலமாகும், 1933-41 வரையிலான காலக்கட்டம் என்பது 1945-53 வரையிலான காலக்கட்டத்தைப் போன்றதல்ல..."[68]

137. நவம்பர் 16, 1953ல் சோசலிச தொழிலாளர் கட்சியின் பத்திரிகை The Militant, பப்லோவின் கலைப்புவாத முன்னோக்கை தோல்வி அடையச் செய்வதற்காக மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஒன்று சேர்க்க அழைப்பு விடுத்த ஜேம்ஸ் பி. கனனின் பகிரங்க கடிதத்தைப் பிரசுரித்தது. அக்கடிதத்தில், கனென் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளை தொகுத்தளித்தார்:

(1) முதலாளித்துவம் மரணப் பிடியிலிருக்கும்போது, உலக நாகரீகத்தை, மோசமாகிவரும் பொருளாதார மந்த நிலைகள், உலகப்போர்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான பாசிசத்தின் வெளிப்பாடுகளால் ஒழித்துக்கட்ட அச்சுறுத்துகின்றது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு இந்த ஆபத்தின் தன்மையின் சாத்தியப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

(2) இத்தகைய படுபாதாளத்தை நோக்கிய சரிவானது, உலக அளவில் முதலாளித்துவத்தை திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தால் மாற்றீடு செய்வதன் மூலம் மட்டுமே தவிர்க்கப்பட முடியும், மற்றும் இவ்வாறு அதன் ஆரம்ப காலங்களில் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட திருகு புரி வடிவிலான முன்னேற்றத்தைத் தொடருதலை அது புதுப்பிக்கும்.

(3) இத்தகைய பணி சமுதாயத்தின் ஒரேயொரு உண்மையான புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் தலைமையினால் தான் சாத்தியமாகும். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்வதற்கு சமூக சக்திகளுக்கு இடையிலான உலக உறவுகளின் நிலைமை முன்னொருபோதும் இல்லாதவாறு சாதகமாக இருக்கின்றபோதிலும், தொழிலாள வர்க்கமானது ஒரு தலைமை நெருக்கடிக்கு முகங்கொடுக்கிறது.

(4) சர்வதேச அளவில் இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும், லெனின் உருவாக்கிய பாணியிலான புரட்சிகர சோசலிச கட்சிகளை அமைக்கவேண்டும். இவை ஜனநாயகத்தையும், மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக ஒன்றிணைக்கும் ஒரு போராடக்கூடிய கட்சியாக இருக்கவேண்டும். அதாவது முடிவுகளை எடுப்பதில் ஜனநாயக ரீதியானதாகவும், நடைமுறைப்படுத்துவதில் மத்தியத்துவமும், தலைமையை கட்சியின் அங்கத்தவர்கள் கட்டுப்படுத்தக் கூடியதாகவும், அம்முடிவுகளை மிகவும் கட்டுப்பாடான முறையில் கட்சியின் அங்கத்தவர்கள் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.

(5) இந்தக் குறிக்கோள் நிறைவேறுவதற்கு தடைக் கல்லாக இருப்பது ஸ்ராலினிசம்தான். 1917 அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி தொழிலாளர்களை ஸ்ராலினிசம் தன் பக்கம் ஈர்த்த பின்னர், அவர்களது நம்பிக்கையைச் சிதைக்கின்ற வகையில் ஸ்ராலினிசம் செயல்பட்டு, தொழிலாளர்களை சமுக ஜனநாயகத்தின் பிடியில் சிக்கச் செய்ததுடன், பின்னர் மந்த நிலைக்கு கொண்டு சென்றது, அல்லது திரும்பவும் முதலாளித்துவத்தின் நப்பாசைகளில் வீழ்த்திவிட்டது. இத்தகைய துரோக நடவடிக்கைகளின் நேரடியான பலன்களான பாசிசத்தின் வளர்ச்சியும், அல்லது மன்னராட்சிகள் ஆதரவு சக்திகளின் வெளிப்பாடுகளின் மூலமும், மற்றும் முதலாளித்துவம் தோற்றுவிக்கும் புதிதான போர்கள் மூலமும் தொழிலாள வர்க்கம் விலையை செலுத்துகின்றது. எனவேதான், நான்காம் அகிலம் ஸ்ராலினிசத்திற்கு எதிராக, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகர முறையில் தூக்கி வீசுவதை தனது முக்கிய கடமைகளுள் ஒன்றாக ஆரம்பத்தில் இருந்தே வகுத்துக்கொண்டது.

(6) நான்காம் அகிலத்தின் பல பகுதிகளும், கட்சிகளும், அதற்கு ஆதரவான குழுக்களும் தங்களது தந்திரோபாய செயல்பாட்டில் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவ கைக்கூலிகளையும் (தேசியவாத குழுக்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவம்) எதிர்த்துப் போராடுவது மிக முக்கியமாக இருந்ததுடன், அதேநேரத்தில் ஸ்ராலினிசத்திற்கு அடிபணிந்துவிடாமலும், ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணியாது இறுதி ஆய்வுகளில் ஏகாதிபத்தியத்தின் குட்டி முதலாளித்துவ கைக்கூலியான ஸ்ராலினிசத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவதென்பதை தெரிந்திருக்கவேண்டியிருந்தது.[69]

138. இந்த பகிரங்கக் கடிதம் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஸ்தாபகத்திற்கான வேலைத்திட்டரீதியான அடித்தளத்தை அளித்தது. ஜேம்ஸ் பி. கனன் மற்றும் ஜெரி ஹீலி (பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலைவர்) ஆகியோருடனான அவரின் முந்தைய அரசியல் கூட்டுறவின் காரணமாக, ஒரிகிளாஸ் அதை ஆதரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெப்ரவரி 1954 இல் பப்லோவிற்கு ஆதரவைத் தெரிவித்து அவர் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எழுதியதாவது: "கனனின் நிலைப்பாட்டிற்கு இ[அ]ங்கிருந்து ஆதரவு இல்லை. மாறாக ஆஸ்திரேலிய பிரிவு ஒருமனதாக கனனின் பகிரங்கக்கடிதத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறது." பகிரங்க கடிதத்தின் மீது தொழிலாளர் சோசலிச குழு (LSG) இன் நிராகரிப்பு, ஓர் உறுதியான அரசியல் நிலைநோக்கை மூலத்தில் கொண்டிருந்தது. அதன் தீர்மானங்களை ஏற்று கொள்வதற்கு, சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான தொடர்ச்சியான அரசியல் போராட்டம் தேவைப்படும். எவ்வாறிருப்பினும், பப்லோ முன்னோக்கின் அடித்தளத்திலான இதுபோன்றதொரு முன்னோக்கு, தொழிற்கட்சிக்குள் "ஆழமான நுழைவையும்", தேசிய சூழலுக்குள் பொருந்தச் செய்வதையும் வழியமைக்கின்றது.

139. பகிரங்க கடிதத்தை எதிர்ப்பதற்கான ஒரிகிளாஸ் குழுவின் முடிவு, ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பு என்பதில் இருந்து கலைக்கப்பட்டுவிடப்பட்ட நிலையை எடுத்துக்காட்டியது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, பெரும் சிக்கலான சூழ்நிலைகளின் மூலமாக, ஒருகிளாஸும் அவருடைய ஆதரவாளர்களும் மார்க்சிச கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்திற்கான ஒரு போராட்டத்தை நடத்தி வந்தார்கள். ஸ்ராலினிஸ்டுகளின் தாக்குதல், தொழிற்சங்க அதிகாரத்துவ தாக்குதல் மற்றும் முதலாளித்துவ அரசுகளின் தாக்குதல்களையும் அவர்கள் தாங்கி நின்றிருந்தார்கள்---இதில் எதனாலும் அவர்களின் அமைப்பை அழித்துவிட முடியவில்லை. வர்க்கப் போராட்டத்தின் அந்தந்தநிலைமை மற்றும் மாற்றங்கள் என்னவாக இருந்தபோதினும், கொள்கைரீதியான அரசியல் நிலைப்பாட்டிற்கான ஒரு போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் உயிர்வாழும் இயக்கத்துடன் வெளிப்படையாக தொடர்புகொள்ள வேண்டும் என்பதன் மீது ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் கருத்தைப் புறகணித்த பப்லோவின் சந்தர்ப்பவாத முன்னோக்கின் விளைவாக அதன் அழிவு ஏற்பட்டது.

140. ஒரிகிளாஸ் குழுவின் அரசியல் கலைப்பு, ஸ்ராலினிசத்தின் ஓர் ஆழ்ந்த நெருக்கடியில் இருந்து வந்தது என்ற உண்மையைப் பற்றிய கசப்பான கேலிப்பேச்சுகள் அப்போது நிலவின. பெப்ரவரி 1956ல், கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாட்டில் சோவியத் பிரதமர் நிகிதா குருச்ஷேவ், சில ஸ்ராலினிச குற்றங்களை குற்றஞ்சாட்டி அவருடைய "இரகசிய உரையை" வாசித்தார். நவம்பர் 1956 ஹங்கேரி மீதான சோவியத்தின் தாக்குதலைத் தொடர்ந்து வெளியான அந்த உரை, முக்கியமான வரலாற்று மற்றும் அரசியல் கேள்விகளை தெளிவுபடுத்த ஒரு முக்கியமான வாய்ப்பை ஏற்படுத்தி அளிக்கும் வகையில், சர்வதேச அளவில் ஸ்ராலினிச கட்சிகளின் அதிகாரங்களுக்குள் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால் அது பிரிட்டனில் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்பட்டது, அங்கே பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தன்னுடைய பங்களிப்பை வலுப்படுத்தி இருந்த ஜெரி ஹீலி, ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை கட்டி எழுப்புவதற்கு போராடினார்.

141. ஒரு "சுய-சீர்திருத்த" நிகழ்வுபோக்கை செய்யக்கூடிய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தகமையின் வெளிப்பாடே குருச்ஷேவின் நடவடிக்கை என்று பப்லோவாதிகள் கூறி வந்ததால், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நெருக்கடிக்குள் ஒரிகிளாஸ் குழு எவ்வித தலையீட்டையும் செய்யவில்லை. 1958ல் பப்லோவாதத்தின் பாதிப்பு இந்தளவிற்கு இருந்தது, கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினிஸ்டுகள் ஒருங்கிணைந்த இரும்பு தொழிலாளர்கள் வாரியத்தின் தலைமைக்கான ஒரு தேர்தலில் லௌரி ஷோர்ட்டுக்கு எதிராக ஒரிகிளாஸ் ஐயும் கூட நிற்க வைத்தார்கள்.

142. ஆஸ்திரேலியாவில் ஒரிகிளாஸ் குழுவின் கலைப்பு, ஒரு சர்வதேச நிகழ்வுபோக்கின் ஒரு பாகமாக இருந்தது. அதன் 1988 முன்னோக்குகளின் தீர்மானத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பின்வருமாறு விளக்கியது: "பப்லோவாதிகளின் சந்தர்ப்பவாதம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ட்ரொட்ஸ்கிச போராளிகளை நிலைகுலைய செய்ததுடன், அத்துடன் இறுதியாக நான்காம் அகிலத்தின் பெரும் பகுதியையும் அழித்தது. ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாள வர்க்கத்தை ஒரு வெற்றிகரமான சவாலிலிருந்து வெளிப்படையான ஆபத்திற்கு திசை திருப்புவதில் பப்லோவாதிகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்கள்.[70] ஆஸ்திரேலியாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராளிகள் எண்ணிக்கையில் எப்போதும் சிறியதாகத்தான் இருந்திருக்கின்றனர். ஆனால் அந்த இயக்கம் 1930 களிலிருந்து 1940 கள் வரையில் முக்கியமான போராட்டங்களை எடுத்துக் கொண்டிருந்தது என்பதுடன், வரலாற்று அனுபவ வளத்தையும் ஒன்றுதிரட்டி இருந்தது. 1954ல், உலக முதலாளித்துவம் யுத்தத்திற்கு பின்னர் ஸ்திரத்தன்மை அடைந்ததால் உருவான அழுத்தங்களினூடாக பப்லோவாதத்தாலும் நிராயுதபாணியாக்கப்பட்டு, அது கலைக்கப்பட்டது. ஒரு தசாப்தத்திற்கு சிறிது பின்னர், யுத்தத்திற்கு பிந்தைய ஒழுங்குமுறை உடையத் தொடங்கியது, இது இளைஞர்களை தீவிரமடையச் செய்ததுடன், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களையும் மீண்டும் கொண்டு வரும் நிலைக்கு இட்டுச் சென்றது. ஒரிகிளாஸ் குழுவால் இந்த அழுத்தங்களை தடுக்க முடிந்திருந்ததால், அதன் அனுபவங்கள் புதிய ட்ரொட்ஸ்கிச போராளிகளைப் பயிற்றுவிக்கவும், கற்பிப்பதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

143. இறுதிப்பகுப்பாய்வில், நான்காம் அகிலத்தை தாக்கிய புரட்சிகர போக்குகளே வர்க்க சக்திகளின் ஒரு விரோதமான சமநிலையின் விளைவாக இருந்தது. யுத்தத்திற்கு பிந்தைய வளர்ச்சியின் போது, விரிவடைந்து வந்த ஓர் உலகப் பொருளாதாரத்தின் கட்டமைப்பிற்குள், முதலாளித்துவத்தால் வர்க்க சமரசம் மற்றும் தேசிய நெறிமுறைகளின் அடிப்படையில் கொள்கைகளை நிறுவ முடிந்தது. இந்த நிலைமைகளின் போது தான், சோசலிசத்தை எட்டுவதற்கு தொழிலாள வர்க்கத்தால் எடுக்கப்படும் சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் அபிவிருத்தி மற்றும் அதன் வரலாற்று பாத்திரத்தின் நனவு ஆகியவை தேவைப்படுகிறது என்ற கருத்தை நிராகரித்த பப்லோவாத கோட்பாடுகளின்கீழ், அது அதனை விரிவாக்கி கொண்டது. முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருந்த ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அமைப்புகளிலிருந்து முன்னாள் காலனித்துவ நாடுகளில் இருந்த குட்டி-முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் வரையிலுமான ஏனைய சக்திகள், ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிவதில் தொழிலாள வர்க்கத்திற்கு பதிலீடாகலாம் என்ற முடிவிற்கு வந்தனர்.

144. 1961ல், பப்லோவாதிகளுடன் அமெரிக்க சோசலித தொழிலாளர் கட்சியின் மறுஐக்கியத்திற்கு எதிரான அவர்களின் போராட்டத்தின் போது, சோசலிச தொழிலாளர் கழகத்தின் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நான்காம் அகிலத்திற்குள் சீர்திருத்தவாதம் உருவாவதை அடிக்கோடிட்டு புறநிலை நிகழ்வுபோக்கை குறிப்பிட்டுக் காட்டினார்கள்: "தொழிலாள வர்க்கத்தின் தவறான தலைவர்கள் ஒரு பாத்திரத்தையும், ஒரு சித்தாந்தத்தையும் கொண்டிருக்கிறார்கள், இது அதன் தற்போதைய அபிவிருத்தி நிலையில் ஏகாதிபத்தியத்தின் புறநிலை தேவைகளைக் கொண்டிருக்கிறது. அனைத்துவித சந்தர்ப்பவாதங்களும், தற்போது சில அபிவிருத்தியடைந்த நாடுகளின் தொழிலாளர் அதிகாரத்துவத்தின் மீது மட்டும் சார்ந்திருக்கவில்லை, மாறாக நவீன அரச ஏகபோக முதலாளித்துவத்தின் கீழும், முதலாளித்துவம் அல்லாத உலகத்துடனான அதன் குறிப்பிட்ட உறவுகளின் கீழும் உலக மக்களின் புதிய தட்டுக்களை சார்ந்திருக்கின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் தொழில்துறை மற்றும் நிதி மூலதனம், இராணுமயமாக்கம் மற்றும் அரசின் பொருளாதாரத்தின் அதிகாரத்துவமயமாக்கல் ஆகியவற்றின் ஒரு மாபெரும் திரட்சியை எட்டிவிட்டன, மேலும் அதன் விளைவாக ஒரு புதிய மத்திய தட்டு செயலதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் பெரும் வங்கிகளின், தனியுடைமைகளின், அரசின், இராணுவ மற்றும் பாதுகாப்பு 'இயந்திரங்களின்', 'சமூக சேவைகளின்' அதிகாரத்துவவாதிகள், மற்றும் 'பொதுக்கருத்தை' திரிபுபடுத்தி கூறும் கருவிகள் ஆகியவை உருவாகிவிட்டன. மூலதனத்திற்கான சர்வதேச தேவைகள், மத்திய தட்டுக்களாலேயே நம்பிக்கையாக நிர்வகிக்கப்படுகின்றன. பின்தங்கிய நாடுகளில், ஏகாதிபத்தியம் தமது அரச அலுவலகத்தை கையளித்துவிட்டு வந்த தேசியவாத குட்டி முதலாளித்துவத்தை கொண்டிருக்கும் வர்க்கங்களுக்குள் அவை அவற்றின் ஆதரவாளர்களை காணுகின்றன. .... ஆகவே இவ்வாறு ஏகாதிபத்திய அபிவிருத்தியின் தற்போதைய முக்கியமான நிலைமையில் சந்தர்ப்பவாதம் நிலவுவதற்கான புறநிலை வர்க்க காரணங்கள் இருக்கின்றன."

145. 1987ல் இந்த பகுப்பாய்வை தொகுத்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியதாவது: "இவ்வாறு இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர், திரிபுவாதம் நான்காம் அகிலத்தை தாக்கியதானது, ஒரு வர்க்க தோற்றப்பாடாகும். அது ஏகாதிபத்தியத்தின் மாறிவரும் அரசியல் தேவைகளையே பிரதிபலித்தது. தொழிலாள வர்க்க புரட்சியின் தோற்றத்தை எதிர்கொண்ட வகையில், ஏகாதிபத்தியம் அதன் நலன்களுக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஓர் இடைத்தாங்கி பாத்திரத்தை வகிக்க, அது ஒரு புதிய மத்தியதர வர்க்கத்திற்கான சாத்தியக்கூறுகளை திறந்துவிட வேண்டியதாக இருந்தது. இந்த ஏகாதிபத்தியத்தின் அடிப்படைத் தேவைகளையும், குட்டி முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களையும் பப்லோவாத திருத்தல்வாதம் முக்கிய அரசியல் சூத்திரமாக உருவாக்கி, அதாவது ட்ரொட்ஸ்கிச இயக்கம் இந்த சக்திகளுக்கு அடிபணிந்துபோவதை நியாயப்படுத்தியது. இது பல்வேறு மத்தியதர வர்க்க மாற்றீடுகள் அல்ல தொழிலாள வர்க்கமே முதன்மையான வரலாற்று பாத்திரம் வகிக்கும் பாட்டாளி வர்க்க புரட்சியின் மூலம் பழைய முதலாளித்துவ அரசு அழிக்கப்படாமல் அரசு இயந்திரங்களின் மீதிருந்த அதன் கட்டுப்பாடுகளை கொண்டு குட்டி முதலாளித்துவத்தால் சோசலிசத்தை உருவாக்க முடியும் என்ற பிரயோசனமற்ற நப்பாசையை வளர்த்தெடுத்தது."[71]

தொடரும்......

பின்குறிப்புகள்:

56. Philip Armstrong, Andrew Glyn & John Harrison, Capitalism since World War II, Fontana, London, 1984, p. 23.[back]

57. Ibid., p. 43.[back] 58. Robert Black, Stalinism in Britain, New Park, London, 1970, p. 218.[back]

59. Leon Trotsky, ‘Manifesto of the Fourth International on the Imperialist War and the Proletarian World Revolution’, Writings of Leon Trotsky: 1939–40, Pathfinder, New York, 1977, p. 218.[back]

60. Betrayal: A History of the Communist Party of Australia, op. cit., p. 95.[back]

61. "Post-War Policy and the National Congress", Communist Review, no. 47, July 1945, Communist Party of Australia, Sydney, p. 540.[back]

62. "The Reformists Serve Reaction", Communist Review, no. 92, April 1949, Communist Party of Australia, Sydney, p. 112.[back]

63. Red Hot: The Life and Times of Nick Origlass, op. cit., p. 103.[back]

64. The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, Perspectives Resolution of the International Committee of the Fourth International, August 1988, Labor Publications, Detroit, p. 14.[back]

65. Michel Pablo, ‘The Building of the Revolutionary Party’ (excerpts of report to IEC Tenth Plenum), SWP International Information Bulletin, June 1952, reprinted in I.S. Documents, vol. 1, p. 34.[back]

66. Leon Trotsky, 1905, Penguin, Hammondsworth, 1971, p. 315.[back]

67. Susanna Short, Laurie Short: A Political Life, Allen and Unwin, Sydney, 1992, pp. 88–89.[back]

68. David North, The Heritage We Defend: A Contribution to the History of the Fourth International, Labor Publications, Detroit, 1988, p. 221.[back]

69. Ibid., pp. 231–232.[back]

70. The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, op. cit., p. 16.[back]

71. ‘Editorial’ Fourth International, vol. 14, no. 1, March 1987, p. iii.[back]