சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

6-The post-war boom and its contradictions

யுத்தத்திற்கு பிந்தைய வளர்ச்சியும், அதன் முரண்பாடுகளும்

Use this version to print 

146. அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் நிதி வலிமையின் அடித்தளத்தின் மீது யுத்தத்திற்கு பிந்தைய உலக முதலாளித்துவத்தின் மறுகட்டமைப்பானது, உலகளாவிய பொருளாதாரத்தின் ஒரு பிரமாண்ட விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. எவ்வாறிருப்பினும், அரசாங்கத்தின் தலையீட்டால் இப்போது முதலாளித்துவ அமைப்புமுறையை நெறிப்படுத்த முடியும் என்ற கேன்சியவாத (Keynesian) அழைப்புகளை கருத்திற்கொண்டு, 1914 உடைவுக்கு இட்டுச் சென்ற இந்த முரண்பாடுகளை இது எடுத்துக்காட்டவில்லை மற்றும் 30 வருட குழப்பநிலையை தீர்த்துவிடும் என உறுதியளிக்கப்பட்டது. அதற்கு மாறாக, அது ஒரு புதிய சமநிலையின்மையின் எழுச்சிக்கு காரணமாகியுள்ளது.

147. அதன் சொந்த சந்தைகளை விரிவாக்குவதற்கும் சமூகப் புரட்சியை தடுப்பதற்கும், யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட பொருளாதாரங்களான மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டையும் மறுஉருவாக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது. ஆனால் 1960களின் பிற்பகுதியில், மேற்கத்திய ஐரோப்பிய சக்திகளும், ஜப்பானும் அமெரிக்காவிற்கு சக்திவாய்ந்த பொருளாதார போட்டியாளர்களாக உருவெடுத்தன. டாலரின் நெருக்கடி மற்றும் செலுத்தமதி நிலுவையின் அதிகரிப்பிலிருந்து அமெரிக்க தலைமையின் நீடித்த வீழ்ச்சி தொடங்கியது.

148. உலகை ஒழுங்கமைக்கும் பணியை முகங்கொடுத்த நிலையில் தான் அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்திற்கு நுழைந்திருந்தது. பாசிசத்திற்கும், இராணுவவாதத்திற்கும் எதிராக ஜனநாயகத்திற்காக போராடுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த நோக்கங்கள் அல்ல, மாறாக அமெரிக்க மூலதனம், சரக்குகள் மற்றும் நிதி ஊடுருவுவதற்கு உலகம் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே ஆகும். பெரும் மந்தநிலை மிகவும் சக்தியுடன் எடுத்துக்காட்டியதுபோல், அமெரிக்க முதலாளித்துவம் தான் அபிவிருத்தியடைந்த கண்டத்தின் கட்டமைப்பை தாண்டி வளர்ந்ததுவிட்டது. இப்போது அதற்கு ஒட்டுமொத்த உலகும் தேவைப்பட்டது. ஒரு ஜேர்மன் சாம்ராஜ்ஜியத்தின் காரணமாக ஐரோப்பாவின் பெரும் பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்கும் ஓர் உலகையோ அல்லது ஆசிய-பசிபிக் பகுதி ஜப்பான் செல்வாக்கின் கீழ் இருக்கும் ஓர் உலகையோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதேபோல, சேர்ச்சிலும் கண்டுபிடிக்க வேண்டியிருந்ததுபோன்று, அது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கும் எதிராக இருந்தது.

149. அமெரிக்காவின் போட்டி சாம்ராஜ்ஜியங்களுடனான அதன் எதிர்ப்பு, அதையொரு ஏகாதிபத்திய-எதிர்ப்பு சக்தியாக நிலைநிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளியது. எவ்வாறிருப்பினும், ஜனநாயக முகமூடி, விரைவிலேயே விலக தொடங்கியது. ஆசியாவின் முன்னாள் காலனி நாடுகளில் எழுந்த பெருந்திரளான மக்களின் புரட்சிகர போராட்டங்களை ஒடுக்குவதற்கான பொறுப்பு அப்போது அமெரிக்காவின் தோள்களில் இருந்தது என்பதையே யுத்த வெற்றி அர்த்தப்படுத்தியது. கொரிய யுத்த போர்நிறுத்தம் கையெழுத்திடப்பட்ட உடனேயே, மே 1954ல் Dien Bien Phu போரில் பிரெஞ்சு இராணுவத்தின் தோல்வியைத் தொடர்ந்து, அமெரிக்கா வியட்நாமில் உடனே நேரடியாக தலையிடத் தொடங்கியது. 1965ல், இந்தோனேஷியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் ஓர் இராணுவ கவிழ்ப்பு நடந்தது, இதில் ஏறத்தாழ ஒரு மில்லியன் தொழிலாளர்களும், விவசாயிகளும் கொல்லப்பட்டதன் விளைவாக இராணுவத் தளபதியாக இருந்த சுகார்டோ ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டார். 1960களின் மத்தியில், வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துருப்புகளை அதிகரித்ததன் மூலம், அதன் உண்மையான முகம் வெளிப்பட்டது. இதற்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பெரும் எதிர்ப்பு உருவானது.

150. 1952 ANZUS கூட்டணி (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை) என்பதன் கீழ் ஆஸ்திரேலிய முதலாளித்துவம் தன்னைத்தானே அமெரிக்காவுடன் இணைத்துக்கொண்டது, அத்துடன் அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் கொள்கைகளை முழுமையாக ஆதரித்தது. ஜூலை 1966ல் ஒரு நியூயோர்க் கூட்டத்தில் பேசுகையில், ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஹரோல்ட் ஹோல்ட் இந்தோனேஷிய இராணுவ கவிழ்ப்புக்கு ஆர்வமூட்டும் குறிப்புகளுடன் தம்முடைய ஆதரவை வெளியிட்டார்: "500,000 முதல் 1 மில்லியன் வரையிலான கம்யூனிச அனுதாபிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது... ஒரு மறுநிலைநோக்கை எட்டுவதற்கு இதுவே பாதுகாப்பான நிலைமை என்று நான் நினைக்கிறேன்." இதேபோல தொழிற் கட்சியும் அந்த இரத்தமூழ்கடிப்பை ஆதரித்தது. "புதிய ஒழுங்குமுறை அரசாங்கம் ஆட்சிக்கு வருவதென்பது (சுகார்டோவின் அரசாங்கம்), விவாத அளவில் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு கிடைக்கும் ஒரு மிகப்பெரிய மூலோபாய ஆதாய நிகழ்வாகும்" என்று பல ஆண்டுகளுக்கு பின்னர், 1992 இல், ஒட்டுமொத்த தொழிற் கட்சியின் சார்பில் பிரதம மந்திரி பால் கீட்டிங் அறிவித்தார். கட்டாயமாக சேர்க்கப்பட்ட இராணுவத்தினரை வியட்நாமில் போராட அனுப்புவதற்கு 1966ல் எடுக்கப்பட்ட முடிவு, வளர்ந்துவரும் சர்வதேச எழுச்சியின் ஒரு பாகமாக இளைஞர்களையும், மாணவர்களையும் ஒரு தீவிரமடையும் தன்மைக்கு இட்டுச் சென்றது.

151. யுத்தத்திற்கு பின்னர் உலக முதலாளித்துவ வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் மீது அப்போது பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது, அத்துடன் தொழிற் கட்சிவாத தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டத்திற்கும், ஆஸ்திரேலிய பிரத்தியேகவாத கருத்தியலுக்கும் முட்டுகொடுத்து கொண்டிருந்த சடத்துவ அடித்தளங்களையும் உடைத்தது.

152. இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னர், இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியுடன் கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் பழுதுபார்த்தல் ஆகியவை முக்கிய தொழிற்துறையாக இருந்தன. யுத்தத்திற்கு பின்னர், அமெரிக்காவினால் செய்யப்பட்ட பன்னாட்டு உற்பத்தியின் முன்னேற்றம், 1948ல் மெல்போர்னில் ஜெனரல் மோட்டார்ஸ் கார் ஆலையில் தொடங்கி, பல பெரிய தொழிற்சாலைகளின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. இவ்வகையில், இது வெளிப்படையான உள்நாட்டு பொருட்களின் தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு உந்துதலை அளித்தது, அதனோடு சேர்த்து எஃகு உற்பத்தியை அதிகரித்ததுடன், உலோக தொழில்துறையின் விரிவாக்கத்தையும் ஏற்படுத்தியது. 1939ல், யுத்தத்திற்கு சற்று முன்னர், உற்பத்தித்துறை மொத்த உள்நாடு உற்பத்தியில் 16.3 சதவீதமும், வேலைவாய்ப்பில் 23.9 சதவீதமும் பங்கு வகித்தது. 1963 வாக்கில், அதுவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27.6 சதவீதமும், வேலைவாய்ப்பில் 28.2 சதவீதமும் பங்கு வகித்தது. தொழில்துறையும், மக்கள்தொகையும் அதிகரித்த நிலையில், உள்கட்டமைப்பும், சேவைகளின் விரிவாக்கமும் தொழிலாள வர்க்கத்தின் அளவையும், சமூக பலத்தையும் பெரிதாக்கி இருந்தது. யுத்தத்திற்கு பிந்தைய புலம்பெயர்வு அலை, வாழ்க்கைத் தர உயர்வு மற்றும் போக்குவரத்து சாதனங்களின் அதிகரிப்பு, குறிப்பாக விமானப் போக்குவரத்து, மற்றும் மிகவும் நவீனமயமான ஊடகமும், தொலைதொடர்பும், குறிப்பாக தொலைக்காட்சி ஆகியவை ஆஸ்திரேலிய கலாச்சார மற்றும் அரசியல் வாழ்க்கையின் உள்முகமாக குறுகிய பாத்திரத்தை உடைக்கத் தொடங்கியது.

153. தொழில்துறை விரிவாக்கத்தினால், பெருமளவிற்கு புலம்பெயர்வின் மூலமாக, வளர்ச்சியைக் கண்ட தொழிலாள வர்க்கம், அதன் அமைப்புரீதியான திறமைகளையும், போர்குணத்தையும் வலுப்படுத்திக் கொண்டு, மத்தியஸ்துவ அமைப்புமுறையின் ஒடுக்குதல்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சனைகளை கொடுக்க தொடங்கியது. 1967-68 இல், உலோக வர்த்தக துறையின் முன்னணி தொழில் வழங்குனர்கள், பொது ஊதியத்திற்குள் இருந்த ஊக்க தொகை (Over-award payment) என்றழைக்கப்பட்டதை உறிஞ்ச விரும்பிய நிலையில், மத்தியஸ்துவ அமைப்புகளின் சக்திகளின் மீது ஒரு பெரும் முரண்பாடு உருவானது. அவை வெற்றிகரமாக தொடர்ச்சியான போராட்டங்களால் தோல்வியடைய செய்யப்பட்டன, அது பல முக்கிய நகரங்களிலிருந்த உலோக தொழிற்சாலைகளில் ஒரு கணிசமான தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களை அமைக்கும் அபிவிருத்தியைக் கொண்டு வந்தது.

154. மத்தியஸ்துவ அமைப்புமுறை சவாலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், "ஆஸ்திரேலிய உடன்படிக்கை" என்றழைக்கப்பட்ட வெள்ளை ஆஸ்திரேலிய கொள்கையின் மற்றொரு மையத்தூணும் படிப்படியாக அழிந்து கொண்டிருந்தது. யுத்தத்திற்கு முன்னர், உலக சந்தையுடனான ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் உறவுமுறை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய முன்மதிப்பீட்டு அமைப்புமுறையால் மத்தியஸ்தம் செய்யப்பட்டு வந்தது, இதில் வேளாண்மை பொருட்கள் பிரிட்டிஷ் சந்தைக்கு அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் உலக சக்தியாக மாறிய அமெரிக்கா, 1956 சூயஸ் கால்வாய் நெருக்கடியின் போது மரணவீச்சைக் கொண்டு வந்து, பிரிட்டனின் பாத்திரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பொருளாதார கட்டமைப்பிற்குள் ஆஸ்திரேலிய முதலாளித்துவம் ஸ்திரமாக ஒருங்கிணைந்த போது, ஏகாதிபத்திய முன்னுரிமை அமைப்புமுறையின் உருக்குலைவுடன், பிரிட்டன் ஐரோப்பாவிற்கு திரும்பியது. இது ஜப்பானின் வேகமான விரிவாக்கத்திலும், மறுகட்டமைப்பிலும் மையப்புள்ளியாக இருந்தது. 1957ல், ஜப்பானுடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வர்த்தக உடன்படிக்கையை கையெழுத்திட்டபோது, அது புதிய நிலைநோக்கை விதிமுறைப்படுத்தியது. இது 1960களின் ஜப்பானிய தொழில்துறை விரிவாக்கத்திற்கு---இந்த விரிவாக்கம் அந்த தசாப்தம் முழுவதும் ஆண்டுக்கு 10 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைக் கண்டது---நிலக்கரி மற்றும் இரும்பின் வினியோக அளவுகளை அதிகரிக்கும் வகையில் ஏற்றுமதியை திறந்துவிட்டது. ஆசியாவுடன், குறிப்பாக ஜப்பானுடன், அதன் பொருளார உறவுகளுக்காக சார்ந்திருக்க வேண்டிய ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் நிலை, உத்தியோகபூர்வமாக ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தத்தை வெள்ளை ஆஸ்திரேலியாவிற்கு ஏற்படுத்தியது. எவ்வாறிருப்பினும், இந்த இனவாதக் கொள்கையுடன் தொழிற் கட்சியும் கைகோர்த்திருந்தது, அது 1960 களின் தொடக்கத்தில், ஆஸ்திரேலிய புலம்பெயர்வு விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த கோரும் எந்தவொரு அமைப்புகளுடனும் அதன் உறுப்பினர்கள் சேர்ந்திருப்பதைத் தடைவிதிக்க முடிவெடுத்தது. அதன் விளைவாக, தொழிற் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் அந்த குழுக்களிலிருந்து இராஜினாமா செய்தார்கள். மேற்கத்திய ஆஸ்திரேலியாவில், தொழிற் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் இவ்வாறு செய்ய மறுத்தபோது, அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இறுதியில் இந்த இனவாத "இலக்கு" 1965ல் நீக்கப்பட்டது.

155. ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இனவாதம், தனிமைப்படுத்தல் மற்றும் வேறுபடுத்தலை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டிய 1950 களின் மத்தியிலிருந்து அமெரிக்காவில் உருவான மக்கள் உரிமை போராட்டம் இயக்கம் ஆஸ்திரேலியாவிலும் கணிசமான தாக்கத்தை கொண்டிருந்தது. அது ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் அசிங்கமான இரகசியங்களின் ஒன்றான, வரலாற்று ரீதியாக பூர்வீகக்குடி மக்களுக்கு எதிராக கையாளப்பட்ட குற்றமிக்க கொள்கைகள் மற்றும் தொடர்ந்து நடந்து வந்த ஒடுக்குமுறை மற்றும் வேறுபடுத்தி வைத்தல் ஆகியவற்றினை பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கியது. 1967ல், ஆஸ்திரேலிய அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான ஒரு வெகுஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மையாக ஏறத்தாழ 91 சதவீதத்தினர் பூர்வீகக்குடி மக்களையும் கருத்தில் கொண்டு சட்டங்களை உருவாக்கவும், அவர்களையும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேர்த்துவிடவும் கூட்டு அரசாங்கத்திற்கு அதிகாரமளிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். குடியுரிமை மற்றும் வாக்களிப்பதற்கான உரிமை ஏற்கனவே உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டிருந்த போதினும், இந்த வெகுஜன வாக்கெடுப்பானது, பூர்வீகக்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார அநியாயங்களை மறுபரிசீலனை செய்ய கூட்டு அரசாங்கத்திற்கு விடப்பட்ட ஓர் அழைப்பாகவே கருதப்பட்டது. 1966 மற்றும் 1967 இல் பூர்வீகக்குடி கால்நடை மேய்ப்பாளர்கள், ஒரே சமமான ஊதிய கோரிக்கைக்கு ஆதரவாக பிரிட்டிஷ் நிலச்சுவான்தாரான லார்டு வெஸ்டேவிற்கு சொந்தமான வேவ் ஹில் கால்நடைப்பண்ணையிலிருந்து வெளியேறினார்கள், இதற்கு நாடு முழுவதிலும் இருந்த தொழிலாளர்கள் ஆதரவளித்தார்கள். நில உரிமைகளின் கோரிக்கைகளை வலியுறுத்திய அவர்களின் போராட்டத்தினை ஓர் ஒருங்கிணைந்த மற்றும் சுயாதீனமான வர்க்க போராட்டமாக அபிவிருத்தியடைவதை சிரச்சேதம் செய்ய கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டது.

தொழிலாள வர்க்கத்தின் மறுஎழுச்சி

156. உலக முதலாளித்துவத்திற்குள் வளர்ந்து வந்த சமநிலையின்மை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த மறுஎழுச்சியால் தூண்டிவிடப்பட்டு, தீவிரப்படுத்தப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகளின் தீர்மானம் பின்வருமாறு விளக்கியது: "1920 க்கு பின்னர், 1968 மற்றும் 1975 க்கு இடையிலான காலப்பகுதி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் புரட்சிகர போராட்டத்தால் குறிக்கப்பட்டது. வியட்நாம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இராணுவ எதிர்ப்பால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிபட்டு கொண்டிருந்த நிலையில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கம், அதன் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்த ஒரு பரந்த எதிர்ப்பை வெளிப்படுத்தின. வரலாற்றிலேயே மிகப் பெரியதான, மே-ஜூன் 1968 இல் நடந்த பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம், தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் சர்வதேச எதிர்ப்பின் எச்சரிக்கையொலியை எழுப்பியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகளில், ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் குழப்பம் நிலவியது. "[72]

157. ஆஸ்திரேலியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 1965ல், பனிப்போரின் அனைத்து கம்யூனிச எதிர்ப்பு வார்த்தைஜாலங்களையும் தூண்டிக்கொண்டு, தாராளவாத அரசாங்கம் வியட்நாமிற்கு துருப்புகளை அனுப்பியது---விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் ஒன்றினால் தான் இவ்வாறு செய்ய முடியும். அதற்கடுத்த ஆண்டு, யுத்தத்திற்கான அதன் பொறுப்பேற்பு மற்றும் கட்டாய ஆள்சேர்ப்பு ஆகியவற்றின் மீதெழுந்த ஒரு பொது தேர்தலிலும் அது எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு பின்னால், அரசியல் நிலை மாறியிருந்தது. 1969 பொது தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியடைந்த நிலையில், அது 7 சதவீதத்திற்கு நெருக்கமான வாக்குகளைப் பதிவு செய்து, பல வாக்காளர் தொகுதிகளை வென்றது. ஆனால் ஆஸ்திரேலிய தேர்தல் முறையின் விளங்காப்போக்கினால், ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கத்தை அமைத்தது. தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர், மே 1969ல், மத்தியஸ்துவ அமைப்புமுறையின் தண்டனை வழங்கும் அதிகாரத்தின்கீழ் விதிக்கப்பட்டிருந்த அபராதத்தை சங்கம் செலுத்த மறுத்ததால், விக்டோரியன் போக்குவரத்து சங்க அதிகாரி கைது செய்யப்பட்டதற்காக ஒரு பொது வேலைநிறுத்தம் வெடித்தது. ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் வாரியத்தின் (ACTU)அனுமதி இல்லாமலேயே, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு இட்டு செல்லும் வகையில், பெருந்திரளான வெளிநடப்புகள் தொடர்ந்தன. சங்கத்தின் அபராதத்தை பெயர்வெளியிடாத ஒருவர் அளித்தபோது தான் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது, இது தலைமைக்கு ஒரு வெற்றியாக கொண்டாட உதவியதுடன், அது அரசாங்கத்துடனான முழு அளவிலான முரண்பாடுகளையும் நீக்கி, வேலைநிறுத்தத்தை விலக்கி கொண்டது. ஆனால், யுத்தத்திற்கு பிந்தைய தொழில்துறை அமைப்புமுறையின் ஒரு முக்கிய உட்கூறாக உருவாகி இருந்த தண்டனை வழங்கும் அதிகாரங்கள் தகர்க்கப்பட்டன.

158 யுத்தத்திற்கு பிந்தைய உடனடிக் காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட அரசியல் செயல்முறைமைகள் அப்போது உடைந்து கொண்டிருந்தன. புதியவைகளின் தயாரிப்பு தொழிற் கட்சியால் கையில் எடுக்கப்பட்டிருந்தது.

159. பெப்ரவரி 1967ல் ஆஸ்திரேலிய தொழிற் கட்சியின் தலைவரான கௌஹ் விட்லேம், தொழிலாள வர்க்கத்தை பாராளுமன்ற ஆட்சிக்கு அடிபணிய வைப்பதே தம்முடைய முதன்மைப் பணியாக கருதுவதாக விவரித்தார். 1949ல் இருந்தே தொழிற் கட்சி அதிகாரத்தில் இல்லை, அது அதிகாரத்திற்கு திரும்பவில்லை என்றால், பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வடிவங்களிலான அரசியல் போராட்டம் உருவாகக்கூடும் என்று விட்டலேம் அஞ்சினார். இரு-கட்சி ஆட்சிமுறை எதிர்காலத்தில் நிலைப்பதற்கான "முடிவாக" அடுத்த தசாப்தம் இருந்தது. ஆகவே, அந்த தேர்தலில் ஒரு தேசிய தொழிற் கட்சி அரசாங்கத்திற்கான சூழ்நிலையை உருவாக்குவதே தம்முடைய முதன்மை நோக்கம் என்று விட்லேம் வாதிட்டார். பாராளுமன்ற கட்சியின் மீது அமைப்புரீதியான பிரிவு, குறிப்பாக இடதுசாரி விக்டோரியன் பிரிவு கொண்டிருந்த கட்டுப்பாடே முக்கிய தடையாக இருப்பதை அவர் பார்த்தார். 1967 முதல் 1970 வரையில், கட்சியை மறுசீரமைக்க விட்லேமும், அவருடைய ஆதரவாளர்களும் ஒரு தொடர்ச்சியான தலையீடுகளை செய்தார்கள். "ஜனநாயகம்" மற்றும் "நவீனமயமாக்கல்" போன்ற வார்த்தைகளில் பயிற்சியளித்தார்கள், கட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து பாராளுமன்ற தலைமையை விடுவிப்பதே அந்த பிரச்சாரத்தின் அடித்தள உந்துதலாக இருந்தது, இவ்வாறு அது முதலாளித்துவத்தின் முறையீடுகளுக்கு அதிகளவில் பிரதிபலிப்பை காட்டி வந்தது. தொழிற் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டுமானால், தம்முடைய "சீர்திருத்தங்கள்" அதற்கு தேவைப்படுகிறது என்று விட்லேம் விளக்கம் அளித்தார். உண்மையில், தாராளவாத/ Country கட்சி கூட்டணி உடைந்து கொண்டிருந்தது. 1966ல் அதற்கு வெற்றியைத் தேடி தந்த வியட்நாம் யுத்தத்திற்கான அதன் ஆதரவு, மேலும் ஆழ்ந்த எதிர்ப்பை தூண்டிவிட்டு கொண்டிருந்தது: அதன் தொழில்துறை உறவுகள் சார்ந்த கொள்கை, பொது வேலைநிறுத்தத்தின் பாதிப்பின்கீழ் பொறிவுக்கு உள்ளானது. தாராளவாத கட்சியின் தலைமைக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் இருந்தன, மேலும் வளர்ந்து வந்த உலக நிதிய குழப்பமும் பொருளாதார மற்றும் செலாவணி கொள்கைகளின்மீது கூட்டணி கூட்டாளிகளுக்கு இடையில் வேறுபாடுகளை உருவாக்கி கொண்டிருந்தது.

160. ஒருபுறம் தாராளவாத அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் கோரிக்கைகளுக்கும், மற்றொருபுறம் முதலாளித்துவத்தின் கோரிக்கைகளுக்கும் இடையில் தொழிற் கட்சியின் தலைமை மாட்டிக்கொண்டிருந்தது. வியட்நாம் யுத்தத்திற்கான அதன் கொள்கை அதன் இருதலைபட்ச அணுகுமுறைக்கான ஒரு வெளிப்படையான வெளிப்பாடாக இருந்தது. அதே நேரத்தில், 1941ல் தொழிற் கட்சி செய்தது போலவே, அமெரிக்கா கூட்டணியுடன் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி தன்னைத்தானே மிகவும் நெருக்கமாக வைத்துக்கொண்டு, வளர்ந்து வந்த யுத்த எதிர்ப்பிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. 1965ல் வியட்நாம் மீதான குண்டுவீச்சு தொடங்கிய போது, தொழிற் கட்சி தலைமையானது "விதிவிலக்கில்லாத" ஓர் அமெரிக்க அறிக்கையைப் போன்றே, "ஆக்கிரமிப்பை எதிர்ப்பதாகவும்", "ஓர் அமைதியான தீர்வை விரும்புவதாகவும்" அறிவித்தது. எவ்வாறிருப்பினும், யுத்த எதிர்ப்பு வலுவடைந்த போதினும், மில்லியன்கணக்கானவர்கள் தங்களின் தொலைக்காட்சி திரைகளில் அதன் கொடூரங்களை இரவில் பார்க்க முடிந்த நிலையில், விட்லேம் தலைமையிலான தொழிற்கட்சியின் வலதுசாரி அதிகளவில் மதிப்பிழந்திருந்தது. "இடதுகள்", குறிப்பாக மெல்போர்ன்னை மையமாக கொண்டிருந்த ஜிம் கேயர்ன்ஸ், யுத்த எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டார். கண்டன அரசியலின் கட்டமைப்பைத் தாண்டி அது செல்லாமல் இருக்க உறுதிப்படுத்துவதே அவர்களின் பணியாக இருந்ததுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆஸ்திரேலிய தொழிற் கட்சி ஆதரவை கொடுத்துக்கொண்டிருந்த போதினும், எதிர்ப்புகளை அக்கட்சியின் பின்னால் திசைதிருப்புவது அதன் நோக்கமாகும்.

161. 1970களின் வாக்கில், முதலாளித்துவத்தின் முக்கிய பிரிவுகள், அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரே கருவியாக இருந்த தொழிற் கட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஆதரவளித்தன. அவர்களில் முர்டோக் பதிப்பகமும் உள்ளடங்கியிருந்தது. எவ்வாறிருப்பினும், அதன் சொந்த சுயாதீனமான கோரிக்கைகளுடன் முன்னோக்கி அழுத்தமளிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அதிகாரத்தை தக்கவைத்திருந்த தாராளவாத ஆட்சியின் உடனடி மறைவு அமையுமென தொழிலாள வர்க்கத்தால் கருதப்பட்டது. யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் மிகப்பெரிய அரசியல் குழப்பத்திற்கான நிலமைகளை உருவாக்க முரண்பாடுகள் உருவாகி கொண்டிருந்தன.

பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் வளர்ச்சியும்

162. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் உலக முதலாளித்துவத்தின் ஸ்திரத்தன்மை, பப்லோவாதிகளின் சந்தர்ப்பவாத தோற்றத்திற்கும் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட, உலகின் பல பாகங்களில் ட்ரொட்ஸ்கிச இயக்கங்களை கலைத்துவிடுவதற்கான புறநிலை நிலைமைகளை உருவாக்கியதுடன், யுத்தத்திற்கு பிந்தைய ஒழுங்குமுறையின் ஆழமான சமநிலையின்மையானது, ஒரு புதிய தலைமுறையின் தீவிரப்படுதலுக்கான உந்துசக்தியாகவும், புரட்சிகர மார்க்சிசத்திற்கான மிகவும் நனவார்ந்த அடுக்களிடையே திருப்பத்தை ஏற்படுத்தவும் இட்டுச் சென்றது.

163. எவ்வாறிருப்பினும், 1966 மற்றும் 1972-க்கு இடையிலான காலக்கட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளின் தோற்றம், ஆழ்ந்த உலக நெருக்கடியின் ஒரு தன்னெழுச்சியான மற்றும் தானியங்கித்தனமான வெளிப்பாடல்ல. அது பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தால் தயாரிக்கப்பட்டது. அதில் கனெனின் 1953ம் ஆண்டின் பகிரங்க கடிதமும், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் பிறழ்வுகள் மற்றும் சர்வதேச பப்லோவாதிகளின் மறுஐக்கியத்தை நோக்கிய அதன் நகர்வுகள் ஆகியவற்றிற்கு எதிராக 1961 முதல் 1963 வரையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டன் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

164. கனன் அவருடைய பகிரங்க கடிதத்தில் வெளிப்படுத்தி இருந்த முக்கியமான பிரச்சினைகளை, 1954ல் அவர் தொகுத்தளித்தார். அவர் குறிப்பிட்டதாவது, சர்வதேச புரட்சியின் அபிவிருத்தியிலும், சமூகத்தின் சோசலிச மாற்றத்திலும் தலைமையின் பிரச்சினை என்பது ஒரு முக்கிய கேள்வியாகும். இது தானாகவே நடக்கும் என்று கூறுவது, செயலளவில், மார்க்சிசத்தை முற்றுமுழுதாக கைவிடுவதாக ஆகிவிடும். ஆகவே, இதுவொரு நனவுபூர்வமான செயல்பாடாக மட்டுமே இருக்க முடியும் என்பதுடன், அது தவிர்க்கமுடியாத வகையில் வரலாற்று நிகழ்வுபோக்கின் நனவுபூர்வமான பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் மார்க்சிச கட்சியின் தலைமை தேவைப்படுகிறது. வேறெந்த கட்சியாலும் இது முடியாது. தொழிலாளர் இயக்கத்தினுள் இருக்கும் வேறெந்த போக்கிலும், ஒரு திருப்திகரமான மாற்றீட்டை உணர முடியாது. அந்தக் காரணத்திற்காகவே, ஏனைய அனைத்து கட்சிகள் மற்றும் போக்குகளை நோக்கிய எங்களின் அணுகுமுறை சமாதானப்படுத்தமுடியாத எதிர்ப்புடையதாக இருக்கிறது."[73]

165. அமெரிக்க மத்தியதர வர்க்க தீவிர சூழலை சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) அதிகளவில் ஏற்றுக் கொண்டிருந்ததால், 1961 வாக்கில், அது இந்த கண்ணோட்டத்தைக் கைவிட்டிருந்தது. இப்போது அது கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியைப் பற்றி, அது "நனவில்லாத மார்க்சிசவாதிகளால்" உருவாக்கப்பட்டது என்று கூறி, அதையொரு "தொழிலாளர் அரசாக" புகழ்ந்துரைத்தது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இதை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை முற்றுமுழுதாக நிராகரிப்பாகதாகவும், புரட்சிகர தலைமையின் நெருக்கடியைத் தீர்க்க வேண்டிய அவசியத்தையும் வெளிப்படுத்தினார்கள். மேலும் அதற்கு முட்டுக்கொடுத்து கொண்டிருந்த புறநிலை முறையையும் எடுத்துக்காட்டினார்கள். சோசலிச தொழிலாளர் கட்சியின் முன்னோக்குகளின் தீர்மானத்தை விமர்சித்து, கிளிஃப் சுலோட்டர் எழுதியதாவது: ''அதாவது சோசலிச தொழிலாளர் கட்சியின் தீர்மானத்தின் அடிப்படைப் பலவீனம் ஒரு தவறான புறநிலைவாதத்தினால் பிரதியீடு செய்ததாகும். அதாவது மார்க்சிச முறையின் தவறான 'புறநிலைவாதப்படுத்தலால்'. இந்த அணுகுமுறை பப்லோவாதிகள் எடுத்த அதேபோன்ற முடிவுகளுக்கு இட்டுச்சென்றது. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற தன்னுடைய பகுப்பாய்வில் லெனின், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரமும், அதன் கட்சியும் இரண்டுமே முக்கியமானதாகும் என்று வரையறுத்தார். எவ்வாறிருப்பினும், 'புறநிலைவாதத்தின்' பாதுகாவர்கள் பாட்டாளிகளின் போராட்டத்தில் அவர்களுக்கான மார்க்சிச தலைமையின் தேவையை பொருட்படுத்தாது, 'புறநிலை காரணிகளின்' பலம் மிகவும் சிறப்பாக இருப்பதால், தொழிலாள வர்க்கத்தின் புரட்சி எட்டப்படும், முதலாளித்துவத்தின் அதிகாரம் தூக்கி எறியப்படும் என்று வரையறுத்தார்கள். ஒரு மார்க்சிச தலைமை கட்டமைக்கப்படாத வரையில், தங்களால் புரட்சியைத் தள்ளிப்போட முடியாது என்ற பெருந்திரளான மக்களின் 'பொறுமையின்மை' குறித்து சோசலிச தொழிலாளர் கட்சியின் தீர்மானங்களின் உருவாக்கங்களை விட வேறெந்த அர்த்தத்தையும் இதனுடன் இணைப்பதென்பது மிகவும் சிரமமாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் தற்போதிருக்கும் தலைமைகள், 'புரட்சியின் தர்க்கத்தாலேயே', அதிகாரத்திற்கான பாட்டாளிகளின் போராட்டத்தின் புரட்சிகர தலைமையை ஏற்க தள்ளப்படுவார்கள் என்பதையே இது குறிக்கிறது. சோசலிச தொழிலாளர் கட்சிஇந்த தத்துவத்தை முழுவதுமாக அபிவிருத்தி செய்யவில்லை, ஆனால் கியூபா மீதான அதன் மனோபாவத்தில் அது இந்த கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும், சோவியத் அதிகாரத்துவமும் 'ஒரு புரட்சிகர நிலைநோக்கை' முன்னிறுத்த வேண்டும் என்ற பப்லோவாதிகளின் 1950 களின் தொடக்கத்திலிருந்த கருத்தின் அடித்தளம், முக்கியமாக இந்த அணுகுமுறையை தொடர்ந்து வந்ததாகும். சோசலிச தொழிலாளர் கட்சியின் தீர்மானம் இறுதி வரைக்கும் சிந்திக்கப்பட வேண்டுமானால் அதிலிருக்கும் இந்த திசைமாற்றத்தை ஒரு மார்க்சிச பகுப்பாய்வு குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். கியூபாவில் இருக்கும் குட்டி-முதலாளித்துவ தலைமை, பாட்டாளிகளை அதிகாரத்திற்கு கொண்டு வர, புறநிலை தர்க்கத்தால் (objective logic) தள்ளப்படுகிறதென்றால், இந்த மாதிரியான நிகழ்வுகள் எவ்வாறு சாத்தியமாகின்றன என்பதையும் மற்றும் வர்க்கம், கட்சி மற்றும் அதிகாரம் ஆகியவற்றிற்கு இடையிலான உறவு பற்றிய லெனினிச தத்துவத்தை கவனத்திற்கு எடுக்கவேண்டியதில்லை என்பதையும் எடுத்துக்காட்டும் நிகழ்கால உலக நிலைமையின் ஒரு பகுப்பாய்வை முன்வைக்கவேண்டும் என்று நாம் கோர வேண்டும், "[74]

166. ஜனவரி 2, 1961ல் தேதியிடப்பட்ட சோசலிச தொழிலாளர் கட்சிக்கான ஒரு கடிதத்தில், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகள் பின்வருமாறு எச்சரித்தார்கள்: "புரட்சிகரப் போராட்டம் எதிர்கொண்டிருக்கும் மிக பயங்கரமான ஆபத்தான கலைப்புவாதம் ஏகாதிபத்தியத்தின் வலிமைக்கோ அல்லது தொழிலாளர் இயக்கத்தினுள் இருக்கும் அதிகாரத்துவ அமைப்புகளுக்கோ அல்லது இரண்டிற்கும் அடிபணியச்செய்வதிலிருந்து எழுகின்றது. இப்போதையும்விட தெளிவாக 1953ல், சர்வதேச மார்க்சிச இயக்கத்திற்குள் இருக்கும் இந்த கலைப்புவாதப்போக்கை பப்லோவாதம் பிரதிநிதித்துவப்படுத்தியது... தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமான மூலோபாயத்திலிருந்தும், புரட்சிகர கட்சிகளின் கட்டமைப்பிலிருந்தும் பெறப்படும் எவ்வித பின்னடைவும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாகத்தில் ஓர் உலக வரலாற்று பெருந்தவறின் முக்கியத்துவத்தை கையில் எடுக்கும்... இது ஏனென்றால் ட்ரொட்ஸ்கிசத்திற்கு முன்னாலேயே திறந்திருந்த வாய்ப்புகளின் பரிமாணத்தினால் ஆகும். ஆகவே திரிபுவாதத்திற்கும் மற்றும் அதன் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக கோடுகளை வரைவதற்கு நமக்கு உடனடியாக தேவைப்படுவதென்னவென்றால் அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவின் தேவையே ஆகும். ட்ரொட்ஸ்கிசத்திற்குள் பப்லோவாத திரிபுவாதம் ஒரு போக்காக மதிக்கப்பட்டிருந்து முடிவிற்குவந்துவிட்டதை துல்லியமாக வரைந்து காட்டுவதற்கு இதுவே சரியான நேரமாகும். இது செய்யப்படாதவரை, இப்போது ஆரம்பித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு நாம் தயாராக முடியாது."[75]

167. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் நிலவிவந்த முரண்பாடுகள் முழுவதிலும், 1953ல் பப்லோ மற்றும் மண்டேலுடனான பிளவிற்கு இட்டு சென்ற வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படை பிரச்சினைகளை மீழாய்வு செய்ய சோசலிச தொழிலாளர் கட்சிமறுத்தது. 1963ல் அக் கட்சி அதன் அரசியல் நிலைப்பாடுகளின் தர்க்கத்தினால் பப்லோவாதிகளுடனும் தம்மை மறுஐக்கியப்பட்டுத்தி கொண்டது. மறுஐக்கியத்தின் தாக்கங்களில் தம்மை வெளிப்படுத்திகாட்ட நீண்ட தூரம் செல்லவேண்டியிருக்கவில்லை. 1964ல், பப்லோவாத அகிலத்தின் இலங்கைப் பிரிவான லங்கா சமசமாஜ கட்சி திருமதி.பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்திற்குள்- நுழைந்தது---"ட்ரொட்ஸ்கிஸ்டுகள்" என்று கூறிக்கொண்ட ஒரு கட்சி, முதலாளித்துவ கட்சியுடன் இது போன்ற ஒரு நேரடியான பாத்திரத்தை வகித்தது அதுவே முதல் முறையாகும். லங்கா சம சமாஜ கட்சியின் பெரிய காட்டிக்கொடுப்பு பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் முக்கிய வர்க்க தர்க்கத்தை வெளிப்படையாக காட்டியது.

168. மிகச்சிக்கலான சூழ்நிலையில் 1966ம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாம் காங்கிரஸில் பப்லோவாத மறுஐக்கியத்தின் பாடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. முந்தைய தசாப்தத்தின் பப்லோவாதத்தின் மீதான கணக்குகளை தீர்த்துகட்ட, நான்காம் அகிலத்தின் பெரும்பான்மை பிரிவுகள் பொறுப்பேற்றிருந்தன. காங்கிரசின் ஆயத்தகாலத்தில், நான்காம் அகிலம் அழிக்கப்பட்டுவிட்டது, ஆகவே அது "மீண்டும் கட்டியமைக்கப்பட" வேண்டும் என்றவொரு நிலைமை உருவாகி இருந்தது. இந்த கருத்தை எதிர்த்து, "அதனால் மட்டுமே திரிபுவாதத்திற்கு எதிராக தத்துவார்த்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் போராட முடியும் என்பதற்காகவும், அதனால்தான் தவிர்க்க முடியாமல் புரட்சிகர தலைமையை கட்டியமைக்க முடியும் என்பதற்காகவும் நான்காம் அகிலத்தின் வரலாற்று தொடர்ச்சி அனைத்துலகக் குழுவால் உறுதி செய்யப்பட்டது" என்று குறிப்பிட்டு, திரிபுவாதத்திற்கு எதிரான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தீர்மானம் உறுதிப்படுத்தியது.

169. காங்கிரசை தொடர்ந்து, சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் ஒரு சிறுபான்மையினரால் அமெரிக்காவில் தொழிலாளர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது, அது பப்லோவாதிகளுடனான கட்சியின் மறுஐக்கியத்தை எதிர்த்தது. ஜெரி ஹீலியின் வழிகாட்டுதலின்கீழ், டிம் வொல்ஃபோர்த்தின் தலைமையிலான ஒரு குழு லங்கா சமஜமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பின் மீது விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரியது, இதனால் தான் 1964ம் ஆண்டு சோசலிச தொழிலாளர் கட்சியில் இருந்து அது வெளியேற்றப்பட்டது. முன்னதாக வெளியேற்றப்பட்டிருந்த ஜேம்ஸ் ரொபேர்ட்சன் தலைமையிலான மற்றொரு குழு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அரசியல் பிரச்சினைகளின் ஒரு தெளிவிற்காகவும், சாத்தியப்பட்டால், வொல்ஃபோர்த் மற்றும் ரொபேர்ட்சன் குழுக்களுக்கு இடையில் ஒரு கோட்பாட்டுரீதியான ஒருங்கிணைப்பைக் கொண்டு வர வேலை செய்தார்கள். அது சாத்தியப்படாது என்பது நிரூபணமானது. மூன்றாம் காங்கிரஸில் வெளிப்படையாகவே பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை தாக்கிய ரொபேர்ட்சன், ஒரு குட்டி-முதலாளித்துவ, ஸ்ராலினிச சார்பு பிரிவை, ஸ்பார்டசிஸ்டை (Spartacist) ஸ்தாபிக்கச் சென்றார். நவம்பர் 1966ல், வொல்ஃபோர்த் தலைமையிலான போக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான அரசியல் ஐக்கியத்துடன் அமெரிக்காவில் புதிய ட்ரொட்ஸ்கிச கட்சியாக தொழிலாளர் கழகத்தை ஸ்தாபித்தது. இலங்கையில், லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பை எதிர்த்த லங்கா சமசமாஜ கட்சிக்குள்ளேயே இருந்த ஒரு குழு லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு தொடர்பான பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பிரதிபலிப்பிற்கு தமது அனுகூலத்தை காட்டியது. அவர்கள், பப்லோவாதத்தின் விளைவாகவே லங்கா சம சமாஜ கட்சி கலைக்கப்பட்டது, அதற்கெதிராக ஒரு சர்வதேச போராட்டத்தை நடத்தவேண்டிய அவசியம் இருப்பதாக விவரித்தார்கள். இந்த போக்கு 1968ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கைப் பிரிவாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபிக்க சென்றது.

170. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான Organisation Communiste Internationale (OCI), 1966 காங்கிரஸில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) நிலைப்பாடுகளுக்கு ஆதரவளித்த போதும், விரைவிலேயே அது நான்காம் அகிலம் "மறுகட்டுமானம்" செய்ய வேண்டும் என்று வாதிட்டது. இந்த சூத்திரமாக்கலுக்கு பின்னணியில் ஒரு மத்தியவாத திருப்பம் இருந்தது. ஜூன் 1967ல் OCI க்கு எழுதிய ஒரு கடிதத்தில், பிரான்சில் வளர்ந்து வந்த தீவிரத்தன்மையின் அறிகுறிகளை சோசலிச தொழிலாளர் கழகம் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டியது, "இந்த சூழ்நிலைக்கு ஒரு புரட்சிகர கட்சி ஒரு புரட்சிகர வழியில் பிரதிபலிப்பைக் காட்டாது, மாறாக போராட்டத்தின் மட்டத்திற்கு தம்மை அடிபணியச்செய்து, தொழிலாளர்களை அவர்களின் அனுபவத்தால் பழைய தலைமைகளின் கீழ் கட்டுப்படுத்திக்கொள்ளவும், அதாவது வெளிப்படையான ஆரம்ப குழப்பத்திலேயே தடுக்கப்பட்டிருக்கிறார்கள்" என்ற ஓர் அபாயம் இது போன்ற வேளைகளில் இருந்ததாக கூறி எச்சரித்தது. சுயாதீனமான கட்சிக்கான மற்றும் இடைமருவு வேலைத்திட்டங்களுக்கான போராட்டத்தை நிராகரிப்பதானது, பொதுவாக தொழிலாள வர்க்கத்திற்கு நெருக்கமாக செல்வது, போராட்டத்தில் இருப்பவர்கள் அனைவருடனும் ஐக்கியப்படுவது, இறுதி மாற்றீடுகளை முன்வைக்காது, படிப்பினைகளை கைவிடுவது" என்றவகையில் பொய்கோலம் பூணுகிறது.[76] 1966 காங்கிரஸின் பகுப்பாய்வையும், திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மையக்கருவையும் நிராகரித்த OCI இன் சூத்திரமயமாக்கல், இந்த பின்புலத்தில் இருந்து ஆராயப்பட வேண்டும். SLL க்கும், OCI க்கும் இடையிலான வேறுபாடுகள், குறிப்பாக மே-ஜூன் 1968க்குப் பின்னர் அதிகரித்தன, இதில் OCI ஒரு மத்தியவாத நிலைநோக்கைப் பின்பற்றியது, இது 1971ல் ஒரு பிளவிற்கு இட்டுச் சென்றது. ஜேர்மனியில், 1965ல் OCI ஆல் உருவாக்கப்பட்டு, Internationale Arbeiter Korrespondenz (IAK) இல் இருந்த ஒரு சிறுபான்மை போக்கு, சோசலிச தொழிலாளர் கழகத்தின் விமர்சனங்களுக்கு ஆதரவு அளித்ததுடன், செப்டம்பர் 1971ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாக Bund Sozialistischer Arbeiter (BSA) ஐ உருவாக்கியது.

தொடரும்

பின்குறிப்புகள்:

72. The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, op. cit., p. 11–12. [back]

73. The Heritage We Defend, op. cit., pp. 249–250. [back]

74. Ibid., pp. 380–381. [back]

75. Ibid., p. 376. [back]

76. ‘Reply to the OCI by the Central Committee of the SLL, June 19, 1967’, Trotskyism versus Revisionism Volume Five, London, New Park, 1975, pp. 113-14. [back]