சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

Nick Beams report to SEP founding congress

சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரசுக்கான நிக் பீம்ஸ் அறிக்கை

Use this version to print 

பின்வருவது சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) தேசிய செயலாளரான நிக் பீம்ஸ் ஜனவரி 21 முதல் 25 வரை சிட்னியில் நடந்த அதன்ஸ்தாபக காங்கிரசில் வழங்கிய ஆரம்ப அறிக்கை ஆகும்.

1. ஆகஸ்ட் 2008 இல் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபகம் மற்றும் இந்த ஸ்தாபக காங்கிரசுக்கான தயாரிப்புகள் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அனைத்து பிற பிரிவுகளிலும் செய்யப்படும் தயாரிப்புக்களிலும் நமது சர்வதேச இயக்கம் முழுவதிலும் முன்னோக்குகள் பற்றிய நமது அனைத்து விவாதத்திலும் நாங்கள் வரலாற்று ஆய்வினைத்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக வலியுறுத்தியுள்ளோம். வரலாற்று நிகழ்வுபோக்கின் தர்க்கத்தை வெளிப்படுத்தி எமது கட்சியை அதனுடன் ஒருங்கிணைக்க வைக்க நாங்கள் தலைப்படுகின்றோம். ஒவ்வொரு புள்ளியிலும் நிகழ்வுகளை அவற்றின் வரலாற்று உள்ளடக்கத்தில் இணைத்துக் காண்பதற்கும், இந்த நிகழ்வுகளை வடிவமைக்க செய்திருக்கின்ற மற்றும் மேலெழச் செய்திருக்கின்ற நிகழ்முறைகளை புரிந்து கொள்வதற்கும், அந்த வழியில் வருங்காலத்திற்கு தயாரிப்பு செய்கின்றோம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கடந்த காலத்திற்குள் ஆழமாய் பயணிப்பதன் மூலம் வருங்காலத்திற்கான எங்களது முன்னோக்குகளை நாங்கள் தயாரிக்கின்றோம். இந்த வேலை வழிமுறை பல்வேறு முன்னாள்-இடது, முன்னாள்-தீவிரவாதப்போக்குகள் அனைத்தினாலும் முழுமையாக எதிர்க்கப்படுகிறது. இதனை நாம் முன்னர் திறனாய்வு செய்திருக்கிறோம், அதனை மீண்டும் இந்த அறிக்கையில் பின்னர் நான் குறிப்பிடுவேன்.

2. வரலாற்று ஆய்வு மற்றும் மறு ஆய்வின் இந்த நிகழ்வுபோக்கு ஒருதடவை செய்வதால் அத்தோடு முடிந்து விடுகிற ஒரு பணி அன்று. சில அன்று புரிந்து கொள்ள முடியாதவை, இன்னும் சில ஒரு பாதி மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தவை அல்லது முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத பிரச்சினைகள் மற்றும் நிகழ்வுபோக்குகளை தெளிவுபடுத்திக் கொள்வதற்கும் மற்றும் அவற்றை மேலும் புரிந்து கொள்வதற்கும் வரலாற்றுக்குள் மீண்டும் சென்று ஆய்வதை நாங்கள் தொடர்ந்து செய்கிறோம்.

நிக் பீம்ஸ் உரையாற்றுகிறார்

3. இந்த பணியில் நமது சொந்த நடைமுறையின், நமது சொந்த இயக்கத்தின் மற்றும் நாம் எடுத்துக் கொண்டிருக்கும் போராட்டத்தின் புறநிலை தர்க்கத்தை புரிந்து கொள்வதை விடவும் முக்கியமானதொரு பணி இல்லை, ஏனென்றால், ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில், நாம் நமது தோள்களில் "மனித குலத்தின் தலைவிதியின் ஒரு துகளை" சுமந்து கொண்டிருக்கிறோம். இந்த ஸ்தாபக காங்கிரசில் நமது சொந்த வரலாற்று அபிவிருத்தி மீதான தர்க்கத்தை புரிந்து கொள்ளவும், கண்டுகொள்ளவும், அதாவது நமது கட்சியின் உருவாக்கத்திற்கு மூலகாரணமாக அமைந்திருந்த வரலாற்று நிகழ்வுபோக்கினை (இவற்றில் சில மிகவும் நீடித்ததன்மை கொண்டிருந்தன) வெளிப்படுத்துவது, மற்றும் அதன் மூலம் நாம் இப்போது வந்திருக்கும் நிலையின் முக்கியத்துவத்தையும் மற்றும் வருங்காலத்தில் நமக்கு முன்னால் உள்ள பணிகளையும் புரிந்து கொள்வதற்கு நாம் முயல்கிறோம். நமது முன்னோக்குகள் பற்றிய வரைவில் ஆஸ்திரேலிய தொழிலாளர் இயக்கத்தில் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்திக்கும் மார்க்சிசத்திற்கான போராட்டத்திற்கும் இடையிலான சிக்கலான உறவை அடையாளம் காண்பதற்கும், எந்த வகையில் குறிப்பிட்ட மற்றும் பிரத்தியோகமான தேசிய அம்சங்கள், ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில், உலக நிகழ்வுப்போக்கின் அடிப்படை அம்சங்களின் ஒரு மூல சேர்க்கையாக இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்கும் நாங்கள் முயன்றிருக்கிறோம்.

4. இந்த பிரச்சினைகளை சில தேதிகளை நினைவுகூர்வதன் மூலம் தெளிவாக்கலாம் என நினைக்கிறேன். 38 வருடங்களுக்கு முன்னால், ஏப்ரல் 1972ல், சோசலிச தொழிலாளர் கழகம் (Socialist Labour League) ஸ்தாபிக்கப்பட்டு, அதே ஆண்டு நவம்பரில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவாக ஆனது. அதற்கு 38 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமையை நினைத்துப் பாருங்கள். 1934ம் ஆண்டில், உலகம் ஆழமான பொருளாதார மந்த நிலையில் இருந்தது, போர் மேகங்கள் துரிதமாய் சூழ்ந்து கொண்டிருந்தன, ஜேர்மனியில் நிகழ்ந்த பேரழிவு கொணரும் நிகழ்வுகளைத் தொடர்ந்து நான்காம் அகிலத்தைக் கட்டுவதற்கு ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பு இந்த வெகுதூரத்திலுள்ள மண்ணிலும் கூட பிரதிபலிப்பை பெற்றிருந்தது. அடுத்த 38 ஆண்டு காலத்தில், எப்படி 1972 முதல் இன்றுவரையான காலத்தில் நிகழ்ந்திருக்கிறதோ அதைப் போல உலகம் பிரமாண்டமான மாற்றத்தைக் காண வேண்டியதாய் இருந்தது. எதிர்வரும் காலகட்டத்தில், மாபெரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் எழுச்சிகளின் வடிவத்தை எடுக்கின்ற பரந்த மாற்றங்களை நமக்கு முன்கணிக்கத் தெரிய வேண்டும் என்பதோடு அதற்கு தயாரித்துக் கொள்ளவும் வேண்டும் - இங்கு தான் இந்த காங்கிரசின் முக்கியத்துவம் தங்கியிருக்கிறது.

5. நான்காம் அகிலத்தின் போராட்டத்தில் ஒரு பெரிய ஆண்டுநிறைவு அனுசரிப்பை இந்த ஆண்டு காணவிருக்கிறது என்று சுட்டிக் காட்டுவதுடன் இப்பகுப்பாய்வுக்கு திரும்ப நான் விரும்புகிறேன். பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தேசியவாத சந்தர்ப்பவாதிகளுடனான உடைவு ஒவ்வொரு ஆண்டும் செல்லச்செல்ல வரலாற்று முக்கியத்துவம் பெருகும் ஒரு நிகழ்வாக இது இருக்கிறது. அது நிகழ்ந்து 25 ஆண்டு நிறைவுறுகிறது.

6. இந்த கால் நூற்றாண்டில் எத்தகையதொரு நிகழ்வுகளின் தொடர்ச்சி நிகழ்ந்தேறியிருக்கின்றது. 1985ம் ஆண்டின் ஆரம்பத்தில், இந்த மாதத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 10 வது காங்கிரசுக்காக பிரதிநிதிகள் கூடியிருந்தனர். அது மிகப் பெரும் நெருக்கடி குறித்ததான ஒரு கூட்டம். தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வலது நோக்கிய அரசியல் நோக்குநிலை குறித்து டேவிட் நோர்த் மற்றும் தொழிலாளர் கழகம் (Workers League) எழுப்பிய விமர்சனங்கள் அடக்கப்பட்டிருந்தன என்பதான உண்மையில் இருந்து இந்த நெருக்கடி எழுந்திருந்தது. ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாக அரசியல் வரைபடம் முற்றிலுமாய் மாறி விட்டிருந்தது - சக்திகளின் சமநிலை அதிரடியாய் மாறியது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கலைத்து விட எதிர்பார்த்த சந்தர்ப்பவாத சக்திகள் தோற்கடிக்கப்பட்டன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மையத்தில் உண்மையான மார்க்சிசத்தை மீள்ஸ்தாபிதம் செய்வதற்கும் அதனை அரசியல்ரீதியாக மறுஆயுதபாணியாக்குவதற்குமான ஒரு போராட்டம் தொடங்கியிருந்தது. பெரும் குழப்பம், மோதல் மற்றும் அமளிக்கு இடையே இந்த நெருக்கடியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மிகத் தீர்மானமாய் செயல்பட முடிந்ததென்றால் அதன் காரணம், அதற்கு முன்னான காலகட்டத்தில் அபிவிருத்தி செய்திருந்த ஒரு முன்னோக்கினை அது மீண்டும் அபிவிருத்தி செய்திருந்தது. மாபெரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் காலகட்டத்தில் நாம் நுழைகின்ற சமயத்தில் அது நமக்கு ஒரு மாபெரும் படிப்பினையாய் இருக்கிறது.

7. சந்தர்ப்பவாதிகள் மீதான மார்க்சிஸ்டுகளின் வெற்றிக்கு ஒரு ஆழமான முக்கியத்துவம் இருந்தது. நமது எதிரிகள், நேரடியாக ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களையும் தொழிலாளர் இயக்கத்தின் மீதான அவர்களது தொடர்ந்த ஆதிக்கத்தில் தமது அடித்தளத்தை கொள்ள முயன்றனர். ஆனால், பின்வந்த நிகழ்வுகள் காட்டியது போல, இந்த அமைப்புகள் எல்லாம் நொருங்கிக் கொண்டிருந்தன. 1985ம் ஆண்டில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் கோர்பச்சேவை தலைமைக்கு கொண்டு வந்திருந்தது, 1991 இறுதியில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டிருந்தது.

8. அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட பிளவின் முக்கியத்துவம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டு போகிறது என்று நான் குறிப்பிட்டேன். அதன் காரணம் இன்று சமூகப் புரட்சியின் ஒரு புதிய காலகட்டத்தை உருவாக்கியிருக்கும் உலக முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார அடித்தளத்தில் ஏற்பட்டிருக்கும் பரந்த மாற்றங்களின் விளைவும், அரசியல் மேற்கட்டுமானத்தில் விளைந்திருக்கக் கூடிய வெளிப்பாடும் தான் இந்த போராட்டம். இந்த நிகழ்வுப்போக்குகள் தங்களது ஆரம்ப வெளிப்பாட்டை ஸ்ராலினிச ஆட்சிகளின் சீர்குலைவில் கண்டன. ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், ரஷ்ய புரட்சியால் திறந்து விடப்பட்டிருந்த வரலாற்று காலகட்டம் ஒரு முடிவுக்கு வந்து விட்டிருந்தது. இதன் பொருள், "வரலாற்றின் முடிவு" ஆய்வுத் தத்துவத்தை உபதேசித்தவர்கள் தொடர்ந்து கூறி வந்தது போல, சமூக புரட்சி கடந்த காலத்திற்கான விடயமாகிவிட்டது என்பதல்ல. மாறாக, ஸ்ராலினிச ஆட்சிகளின் நிலைக்குலைவுக்கு இட்டுச் சென்ற அதே நிகழ்வுப்போக்குகள் ரஷ்ய புரட்சியின் எல்லைக்கும் அப்பாற்பட்டதும் மற்றும் தீவிரமானதுமான சமூக புரட்சிக்கான ஒரு புதிய காலகட்டத்திற்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன என்பதாகும். அது அந்த சமயத்தில் உடனடியாய் வெளிப்பட்டதாய் இருக்கவில்லை என்பது உண்மையே. மீண்டும் ஒரு தடவை அது எடுத்துக்காட்டுவது என்னவென்றால், ஒருவரது அரசியல், உடனடித் தோற்றங்களில் இருந்து பெறப்படும் முடிவுகளை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்படாமல் நிகழ்வுகளின் புறநிலையான வரலாற்று தர்க்கத்தை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்படுவது அவசியமாகும் என்பதையே. புறநிலைமைகள் மற்றும் நமது சொந்த இயக்கம் ஆகிய இரண்டிலுமே கடந்த 25 ஆண்டுகள் தயாரிப்பு காலகட்டமாக இருந்திருக்கின்றன. இப்போது ஒரு புதிய கட்டம் எட்டப்பட்டிருக்கிறது. இந்த வகையில் தான் இந்த காலகட்டத்தில் அனைத்துலகக் குழுவின் பணியையும்சோசலிச சமத்துவக் கட்சி ஸ்தாபக காங்கிரசுகளை நடத்தி நாம் நுழைந்து கொண்டிருக்கும் புதிய சூழ்நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

9. கடந்த 25 ஆண்டுகளின் மிகஆழமான சமூக-பொருளாதார நிகழ்வுப்போக்கு உற்பத்தியின் பூகோளமயமாக்கமாகும். இது மிக தொலைதூர தாக்கம் கொண்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளுடன் உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்பை உருமாற்றியிருக்கும் ஒரு நிகழ்வுமுறையாகும். இந்த உருமாற்றத்தின் சில அம்சங்களையும் அவை நமது முன்னோக்குகளின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களையும் நோக்கி இப்போது திரும்பலாம்.

10. முதலாவதாக, உலகளாவிய தொழிலாள வர்க்கம் ஒரு முன்கண்டிராத அளவிலான ஒருங்கிணைப்பைக் கண்டிருப்பதை பார்த்திருக்கிறோம். இது உலக சோசலிசப் புரட்சி குறித்த நமது முன்னோக்கிற்கு பெரும் வரலாற்று முக்கியத்துவம் படைத்ததொரு உண்மையாகும். கடந்த 25 ஆண்டு காலத்தில் இந்தியாவும் சீனாவும் உலக மூலதனச் சுற்றுகளில் ஒருங்கிணைந்ததன் மூலம் உலகளாவிய தொழிலாளர் எண்ணிக்கை சக்தியின் அளவு இரட்டிப்பாகி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு, ஒவ்வொரு முதலாளித்துவ உருமாற்றம் அமுலாக்கப்படும்போதும் கைகோர்த்து வருவதான மூர்க்கத்தனம் மற்றும் வன்முறை அனைத்துடனும் தான் நிகழ்த்தப்பட்டது என்பது உண்மையே. மார்க்ஸ் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பாத்திரம் குறித்து 1850களில் எழுதுகையில், "கீழ்த்தரமான நலன்களால் தூண்டப்பட்டு" ஒரு சமூகப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததாக விளக்கினார். "ஆனால் பிரச்சினை அதுவல்ல" என்று தொடர்ந்த அவர், "பிரச்சினை என்னவெனில், மனிதகுலம் தனது தலைவிதியை ஆசியாவின் சமூக நிலையில் ஒரு அடிப்படைப் புரட்சியின்றி பூர்த்தி செய்ய முடியுமா என்பது தான்? முடியாதென்றால், இங்கிலாந்தின் குற்றங்கள் என்னவாகவிருப்பினும், அந்த புரட்சியைக் கொண்டு வருவதில் வரலாற்றின் ஒரு நனவற்ற கருவியாக இருந்தது அந்நாடே" என்றார். 1858ம் ஆண்டில் ஏங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் மீண்டும் இந்த பிரச்சினைக்கு அவர் திரும்பினார்: "முதலாளித்துவ சமூகத்தின் குறிப்பிட்ட பணியாக இருப்பது உலகச் சந்தையை குறைந்தபட்சம் முக்கிய விடயங்களிலாவது ஸ்தாபிப்பதும், மற்றும் அந்த உலகச் சந்தையை அடித்தளமாகக் கொண்ட உற்பத்தியை உருவாக்குவதும்தான்". மார்க்ஸ் இந்த வரிகளை எழுதிய சமயத்தில் அந்த நிகழ்வுப்போக்கானது சற்று குறிப்பிடத்தகுந்த தூரம் முன்னே செல்ல வேண்டியிருந்திருந்தது ஆனால் இன்றோ உழைப்பின் ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய சந்தையின் அபிவிருத்தியை கருதிப் பார்த்தால் குறிப்பிட்டதொரு பொருளில் அது தனது பூர்த்தி நிலையை எட்டிவிட்டதெனலாம். சமூகப் புரட்சியின் உலகளாவிய தன்மையை கருதிப் பார்க்கையில், "முதலாளித்துவ சமூகத்தின் இயக்கமானது மிகப் பெரியதொரு பரப்பில் இன்னமும் ஏறுமுகத்தில் இருக்கின்றதான" நிலைமைகளின் கீழ் ஐரோப்பாவில் ஒரு சோசலிசப் புரட்சி நடப்பது சாத்தியமாகுமா என்றும் கூட மார்க்ஸ் சிந்தித்தார்.

11. பிப்ரவரி 1926ல் தான் வழங்கிய பிரபலமான ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மீதான அறிக்கையில் ட்ரொட்ஸ்கி இந்த கேள்விக்கு திரும்பினார். அக்டோபர் புரட்சி முடிந்த ஒன்பது வருடங்களுக்கு பின்னர், சோவியத் ஒன்றியம் இன்னும் தனிமைப்பட்டுத் தான் இருந்தது. அப்படியானால், இந்த புரட்சியின் அடித்தளமாக அமைந்த உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கு சற்று முதிர்ச்சியற்று இருந்தது என பொருள் கொள்ளலாமா? இந்த கேள்விக்கு விடைகாண ட்ரொட்ஸ்கி உலக நிலைமை குறித்து ஒரு திறனாய்வு செய்தார். ஐரோப்பிய முதலாளித்துவம் பிற்போக்குத்தனம் என்னும் வார்த்தையின் முழுமையான அர்த்தத்திற்கு மாறியிருந்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஆசியா நிலைமை என்ன, அங்கு என்ன முன்னோக்குகள் இருந்தன? அமெரிக்க முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியை தெளிவாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தது, ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் முதலாளித்துவம் அப்போது தான் தனது ஊடுருவலை தொடக்கியிருந்தது. "முடிவு பின்வருமாறு தோன்றுகிறது: முதலாளித்துவம் ஐரோப்பாவில் தனது உயிர்வாழ்வை முடித்துவிட்டுள்ளது. அமெரிக்காவில் அது உற்பத்தி சக்திகளை இன்னும் அபிவிருத்தி செய்துகொண்டிருக்கிறது, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் அது தனக்கு முன்னே சில நூற்றாண்டுகளுக்கு இல்லையென்றாலும் சில தசாப்தங்களுக்கேனும் செயல்பாட்டுக்கான ஒரு பரந்த கன்னிப் பரப்பை கொண்டிருக்கிறது. இது தான் உண்மையான நிலையா? அவ்வாறானால், தோழர்களே, அதன் அர்த்தம் உலக அளவில் முதலாளித்துவம் தனது பணியை இன்னும் முடித்திருக்கவில்லை." நிச்சயமாக ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டியதை போல "முதலாளித்துவம் உலக பொருளாதாரத்தின் அடிப்படையில் செயல்பட்டது - உலகின் எந்த பகுதியும் தனிமைப்பட்டதாக கருதப்பட முடியாது" என்பது தான் அதிமுக்கிய பிரச்சினை என்பது உண்மையே. ஆம், அமெரிக்க முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியை தொடர முயன்றபோதும், ஆயினும் அதன் உள்நாட்டு சந்தை எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அமெரிக்கா, உள்நாட்டு சமநிலையின் அடிப்படையில் மட்டும் இனியும் தன்னை பராமரித்துக் கொள்ள முடியவில்லை. மாறாக ஒரு உலக சமநிலை அவசியப்பட்டது. அமெரிக்கா ஸ்திரமற்ற ஐரோப்பாவை சார்ந்திருந்தது, அதே சமயத்தில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் முதலாளித்துவத்தின் ஊடுருவலானது தன்னுடன் சேர்த்து ஏகாதிபத்தியம் மற்றும் காலனித்துவத்திற்கு எதிரான பரந்த போராட்டங்களையும் முன்கொண்டு வந்தது. அடுத்த காலகட்டத்தில் வெடித்த புரட்சிகர போராட்டங்களில் ட்ரொட்ஸ்கியின் உலகப் புரட்சி முன்னோக்கு முழுமையாய் நிரூபணம் பெற்றது. இறுதியாய் முதலாளித்துவம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடிந்தமை தனது உள்ளார்ந்த பலத்தினால் அல்ல மாறாக தொழிலாள வர்க்க தலைமைகளின் காட்டிக் கொடுப்பின் விளைவாகத் தான் ஒரு குறிப்பிட்ட சமநிலை எட்டப்பட்டது. ஐரோப்பா மறுகட்டுமானம் செய்யப்பட்டது, அமெரிக்க முதலாளித்துவம் உலக பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட முடிந்தது, அத்துடன் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினரினது மற்றும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வுப்போக்கு இந்தியாவிலும் சீனாவிலும் தனது மிகவும் இடதுசாரி வடிவங்களை எடுத்தது. ஆனால், இப்போது இந்த சமநிலை முற்றிலுமாய் தகர்க்கப்பட்டிருக்கிறது. உற்பத்தியின் அன்றாட நிகழ்வுமுறைகளாலும் மூலதனத்தின் இயக்கத்தாலும் இணைக்கப்பட்ட ஒரு உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி வந்திருக்கிறது. அத்துடன் உலகெங்கிலுமான வெகுஜன மக்கள் முன்னெப்போதையும் விட அதிகமான அளவில் புதிய மற்றும் சக்தி வாய்ந்த தகவல்தொடர்பு சாதனங்களால் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இது நமது பணிக்கு ஆழமான முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய விதிவிலக்குவாதத்தின் மீதான பிரச்சினையில் வேலை செய்கையில் நமது முன்னோக்கு ஆவணத்திற்கு நாம் கணிசமான சக்தியை செலவிட்டோம். ஒரு சோசலிச இயக்கத்தின் அபிவிருத்திக்கு எவை தடைக்கற்களாய் இருக்கின்றன? கடந்த 38 ஆண்டுகளின் மிகக் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று என்னவெனில், அனைத்து தேசிய சந்தர்ப்பவாதிகளும் தங்களது அடித்தளத்தை கொண்டிருந்த புறநிலை நிலைமைகள் முற்றாக உடைந்துபோயுள்ளதாகும். கடந்தகாலத்தில், உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியலின் ஆதிக்கத்தைப் புரிந்து கொள்வது சற்று சிரமமானதாய் இருந்தது. இன்று அது வாழ்க்கையின் ஒரு வெளிப்படையானதொரு உண்மையாக இருக்கிறது. அதற்காக போராட்டத்தின் அளவு குறைந்து விட்டதாய் அர்த்தமல்ல, மாறாக நமது போக்கு இந்த போராட்டத்தை மாற்றமடைந்த நிலைமைகளின் கீழ் எடுத்துக் கொள்கிறது என்பதையை அது குறிக்கிறது.

12. உற்பத்தியின் பூகோளமயமாக்கலால் எழுந்த உருமாற்றத்தின் இரண்டாவது முக்கிய அம்சத்திற்கு, அதாவது அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு, நம்மை அழைத்து வருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு சோவியத் ஒன்றியம் உடைந்தபோது நமது இயக்கம் மட்டும் தான், அதன் மறைவு போருக்குப் பிந்தைய ஒட்டுமொத்த ஒழுங்கின் உடைவின் ஆரம்ப வெளிப்பாடு என்பதையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான நெருக்கடிக்கு ஒரு சகுனம் என்பதையும் விளக்கியது. நடப்பு நிலைமையை நடப்பு தசாப்தத்தின் ஆரம்ப காலத்தோடு வித்தியாசப்படுத்தி பாருங்கள். பத்துவருடங்களுக்கு முன்பு, எல்லா பேச்சும் அமெரிக்காவின் சவால்விட முடியாத மேலாதிக்கம் குறித்ததாய், ஒருதுருவ காலகட்டம் (Unipolar moment) குறித்ததாய் இருந்தது. அமெரிக்கா என்பது அசைக்கமுடியாத ஒரு தேசமாய் இருந்தது. இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சி என்பது வாழ்க்கையில் வெளிப்படையாய் ஒப்புக்கொள்ளப்பட்ட அரசியல் உண்மையாய் இருக்கிறது - இந்த உண்மை ஆழமாக ஸ்திரம் குலைக்கும் பின்விளைவுகள் கொண்டதாகும்.

13. இந்த வீழ்ச்சி அமெரிக்க பொருளாதாரத்திலேயே வேர் கொண்டிருக்கிறது என்பது பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மையாகும். ரஷ்ய புரட்சி முதலான காலத்தை நாம் எடுத்துப் பார்ப்போமாயின், சோசலிசப் புரட்சியின் அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் பெரும் புறநிலைக் காரணியாக அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார வலிமை இருந்து வந்திருக்கிறது. 1920களில் அப்போதும் உற்பத்தி சக்திகளை அபிவிருத்தி செய்ய அமெரிக்க முதலாளித்துவத்தால் இயன்றது என்கின்ற உண்மையை ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டினார். பல்வேறு தொடர்ச்சியான அரசியல் காரணிகளின் - அதிமுக்கியமாக தொழிலாள வர்க்கத்தின் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ராலினிச தலைமைகளின் காட்டிக் கொடுப்புகள் - காரணமாக, இந்த திறனானது பலமில்லியன் கணக்கான மக்களின் பெரும் அழிவு மற்றும் மரணத்தின் அடித்தளத்தின் மீது இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய உலக முதலாளித்துவ ஒழுங்கினை மறுகட்டுமானம் செய்வதற்கும் பயன்படுத்தப்பட முடிந்தது. இது நடப்பு நிலைமையுடன் மிகவும் மாறானதாக இருக்கிறது. உலக பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி என்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் மக்கிய மற்றும் அழுகிய வடிவத்தில் எழுந்திருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒருகாலத்தில், ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ அமைப்பையும் ஸ்திரப்படுத்திய அமெரிக்க முதலாளித்துவம் இப்போது மிகவும் ஸ்திரம்குலைக்கும் காரணியாக மாறியிருக்கிறது. உலகளவிலான தனது நிலையை தக்கவைத்துக் கொள்வதற்காக தனது இராணுவ வலிமையைப் பயன்படுத்த அது தலைப்படுகிறது, இதன் மூலம் மனிதகுலத்தை மூன்றாம் உலகப் போருக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது.

14. 2007-2008 இல் வெடித்த உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு நான் இப்போது வருகிறேன், கடந்த 25 ஆண்டுகாலத்தில் உற்பத்தி மற்றும் நிதியின் பூகோளமயமாக்கலில் இருந்து இது எழுந்தது. இந்த நெருக்கடியின் மிக குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 1960களின் பிற்பகுதி மற்றும் 1970களின் ஆரம்ப பகுதியில் உலக முதலாளித்துவத்தை உலுக்கிய இலாபவிகித நெருக்கடியை தீர்த்துக்கொள்ள உருவாக்கப்பட்ட அதே இயங்குமுறைகள் மற்றும் நிகழ்வுப்போக்குகளில் இருந்து தான் இது அபிவிருத்தியுற்றது.

15. 2007-2008 நெருக்கடியானது, முந்தைய 20-25 ஆண்டுகளில் நிதிமயமாக்கலின் அடிப்படையில் - மற்ற நாடுகளுக்கெல்லாம் மேலாக இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் - எழுந்த மூலதனத் திரட்டின் ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையும், சீனா, இந்தியா மற்றும் பொதுவாக ஆசியாவில் மலிவு உழைப்பை சுரண்டுவதையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. கடந்த சுமார் ஒன்பது மாதங்களில், வரலாற்றின் மிகப்பெரிய அரசாங்க நிதிகளை நிதியமைப்புக்குள் செலுத்துவதன் மூலம் நிதிய உடைவு தடுத்துவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் அடித்தளத்தில் உள்ள பிரச்சினைகள் எதற்கும் தீர்வு காணப்பட்டிருக்கவில்லை. உண்மையில், அவை இன்னும் உக்கிரமடைகின்றன.

16. பாங்க் ஆஃப் இங்கிலாந்து தயாரித்த ஒரு ஆய்வறிக்கை கூறுவதன் படி, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இந்த நெருக்கடி காலத்தில் வங்கிகளுக்கு உதவ அளிக்கப்பட்ட தொகை மட்டும் 14 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) ஏறக்குறைய கால்பகுதி ஆகும். அறிக்கை தயாரிப்பாளர்கள் குறிப்பிடுவதைப் போல, இந்த தலையீட்டு உதவி "வங்கி அமைப்புக்கான இதற்கு முந்தைய எந்த அரசாங்க உதவியையும் சிறியதாக்கி விடுகிறது".

17. நெருக்கடியை தீர்ப்பதில் இருந்து தூர விலகி இந்த தலையீடானது முதலில் இந்த நெருக்கடிக்கு இட்டுச் சென்ற நிதி ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சியை இன்னும் கூடுதல் விசித்தரமான வடிவத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது. அமெரிக்க நிலைமையை எடுத்துப் பாருங்கள். அமெரிக்க கருவூலம் மற்றும் அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளின் விளைவால், பெரும் வங்கிகள் ஏறக்குறைய பூஜ்ய வட்டியில் கணக்கிலடங்கா தொகை பணத்தைப் பெற்று தங்களது இலாபங்களை பாரியளவு அதிகரித்துக்கொள்ள முடிந்திருக்கின்றது. ஜனவரி 12 இல் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் ரொபேர்ட் ரெய்க் எழுதுகையில் குறிப்பிட்டார்: "வோல் ஸ்ட்ரீட் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து நரகங்களினதும் நிலையைக் கண்டு ஒரு வருடத்திற்கும் அதிகமாய் ஆகி விட்டது, ஆயினும் குறிப்பிடத்தகுந்த வகையில், மீண்டும் எல்லா நரகங்களும் கட்டவிழ்த்து விடப்படாமல் தடுக்க ஏறக்குறைய எதுவுமே செய்யப்பட்டிருக்கவில்லை. உண்மையில், உங்கள் கண்களை மூடினால் நீங்கள் மீண்டும் 2007 இன் காட்டலைகளுக்குத் திரும்ப முடியும். வங்கியாளர்கள் இன்னும் வெறித்தனமான பணயங்களை செய்கிறார்கள், இன்னும் புதிய வருமானங்களை (Derivatives) உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள், இன்னும் குவியலான கடன்களை கொண்டிருக்கிறார்கள். மத்திய வங்கிக் கூட்டமைப்பின் உதவியால் பெரிய வங்கிகளுக்கு 2007 இனைப்போல் பணத்தை எளிதாக பெற்றுக்கொள்ள முடிவதால் வங்கி இலாபங்கள் உயர்ந்திருப்பதுடன், மேலதிககொடுப்பனவுகள் பொருளாதார எழுச்சியின் உச்சத்தில் இருந்த சமயம் போல் மிகத் தாராளமாய் இருக்கின்றன." ஐந்து பெரிய வங்கிகள் அவற்றின் போட்டியாளர்கள் சிலர் அகற்றப்பட்டதால் வலிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு வருங்காலத்திலும் மீட்பு உதவிகள் மூலம் ஆதரிக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரான சைமன் ஜோன்சன் கூறியது போல "கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய சாகச முதலீட்டுக்கான தனியார் முதலீட்டு நிதியமாக (Hedge Fund) மாறியிருக்கிறது." இப்போது காங்கிரசில் பரிசீலிக்கப்படும் சட்ட மசோதாவின் படி, மத்திய வங்கிக் கூட்டமைப்பு நிதியத்தை வங்கிகளுக்கு 4,000 பில்லியன் டாலர் வரை வழங்குவதற்கு அதிகாரம் உள்ளதாக இருக்கும். இது சென்ற வருடத்தில் நிதிச் சந்தைகளுக்குள் செலுத்தப்பட்டதை விட இருமடங்கானதாகும். வங்கிகள் எல்லாம் அமெரிக்க பொருளாதாரத்தில் சற்று புத்துயிர் கிட்டியதால் இலாபத்தை அடையவில்லை. மந்தநிலை தொடங்கியதில் இருந்து, ஏழு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். கடந்த தசாப்தத்தில் வேலைவாய்ப்பில் எந்த நிகர அதிகரிப்பும் இல்லை என்பதோடு உண்மையான சராசரி ஊதியங்கள் சரிவு கண்டுள்ளன.

18. இந்த உலக நெருக்கடியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, மத்திய வங்கிகளால் வட்டிவிகிதங்களை குறைப்பதன் மூலமாக மீட்சியைக் கொண்டுவர இயலாதிருந்ததாகும். அக்டோபர் 1987 பங்குச் சந்தையின் பாதாள வீழ்ச்சி நிகழ்வுக்குப் பின்னர் தொடர்ச்சியாக வந்த நிதி நெருக்கடி சமயங்களில் அது தான் நடந்திருந்தது. வட்டி விகிதங்களைக் குறைத்ததானது மெக்சிகன் பங்குப்பத்திர நெருக்கடி, ஆசிய பொருளாதார நெருக்கடி, தொழில்நுட்ப குமிழி உடைவு (Tech bubble) ஆகியவற்றில் வெற்றியை தந்தது, ஆனால் 2007-2008 இல் அந்த கொள்கை தோல்வியுற்றது. மார்ச் 2009 முதல், உத்தியோகபூர்வ மத்திய வட்டி விகிதம் ஏறக்குறைய பூச்சியமாக இருக்கும் நிலையில், "அளவுரீதியான தளர்வு (Quantitative easing)" என்று அழைக்கப்படும் ஒரு கொள்கையில் மத்திய வங்கிக் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கிறது. அரசாங்க கடன்களை மத்திய வங்கி கொள்முதல் செய்வதன் மூலமாக நிதி அமைப்புக்குள் பாரிய பணப் புழக்கத்தை செலுத்துவதென்பதை இந்த கொள்கை அடக்கியிருக்கிறது. இந்த கொள்கையின் மூலம் ஏறக்குறைய 2 ட்ரில்லியன் டாலர் தொகை நிதியஅமைப்புக்குள் செலுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணம் எதற்கு பயன்பட்டிருக்கிறது? பெரிய வங்கிகளுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை கட்டணமாய் பெற்றுத் தரக் கூடிய நிதி செயல்பாடுகளின் மூலம் அரசாங்க கடன்களை கொள்முதல் செய்வதற்கே என்பது தான் சுருக்கமான பதில், இது பணம் மற்றும் கடன்களில் ஒரு பிரம்மாண்டமான உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.

19. அமெரிக்காவில் 2009ம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 12 சதவீதத்தை எட்டியிருக்கிறது. 1.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு புதிய கடன்கள் இதற்கு நிதியாதாரம் அளிக்க அவசியப்பட்டது. சீனர்கள் 100 பில்லியன் டாலர்கள் வரையிலும், பிற அந்நிய முதலீட்டாளர்கள் மொத்தமாய் 20 சதவீதம் வரையிலும் இப்பத்திரங்களை வாங்கினர். எஞ்சியவை மத்திய வங்கிக்கூட்டமைப்பின் மூலம் வாங்கப்பட்டது. அமெரிக்க கருவூல பத்திரங்கள் அரசாங்க கடனுக்கு நிதியாதாரமளிக்க விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் இந்த கடன் அந்நிய மூலதனம் மூலம் வாங்கப்படுவதை காட்டிலும், மத்திய வங்கிக் கூட்டமைப்பு மூலம் பெருகிய முறையில் வாங்கப்படுகிறது, அது டாலர்களை அதிகமாய் அச்சிடுகிறது, அல்லது இன்னும் துல்லியமாய் கூறுவதானால், கடன் பத்திரங்களை வாங்குவதற்கு பெருமளவிலான கூடுதல் பணத்தை மின்னணு முறையில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுப்போக்கை அதனாலேயே காப்பாற்றப்பட முடியாது. இந்தத்தடவை அரசாங்க கடன் பத்திரம் என்ற ஒரு புதிய நிதிக் குமிழியை உருவாக்கியதன் மூலம் நிதி அமைப்பானது தொடர்ந்தும் நீந்திக்கொண்டிருக்கின்றது.

20. 1990கள் மற்றும் கடந்த தசாப்த காலங்களில் அபிவிருத்தி செய்யப்பட்ட மூலதனத் திரட்டு அமைப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தது. அவை அமெரிக்க பொருளாதாரத்தின் நிதிமயமாக்கம் மற்றும் சீன பொருளாதாரத்தின் விரிவாக்கம் என்பனவாகும். சீன அரசாங்கம் இந்த நெருக்கடிக்கு 570 பில்லியன் டாலர் ஊக்குவிப்பு தொகை மூலம் பதிலிறுப்பு செய்தது. இந்த செலவினம், வங்கி கடன் விரிவாக்கத்துடன் இணைந்து சீனாவில் ஒரு மிகப் பிரம்மாண்டமான மூலதனக் குமிழியை உருவாக்கியிருக்கிறது. அநேக மதிப்பீடுகளின் படி, 2009ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சுமார் 90 சதவீதம் கடன்பத்திரம் மற்றும் அரசாங்க செலவின விரிவாக்கத்தால் நிதியாதாரம் பெற்ற அசையா சொத்து முதலீடுகளின் விளைவு ஆகும். சீன வங்கி கடன் வழங்கல் 1.35 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாய் அதிகரித்தது. ஆனால் இது சீனப் பொருளாதாரத்தில் வெடிப்பு மிகுந்த முரண்பாடுகள் திரட்சியுறுவதற்கு இட்டுச் செல்கிறது. இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி புள்ளிவிவரத்தின் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது. கடந்த 12 மாதங்களில் ஏற்றுமதி 17.8 சதவீதமாக அதிகரித்திருக்கும் சமயத்தில் இறக்குமதி 56 சதவீதம் அதிகரித்திருக்கிறது. சீனப் பொருளாதாரம் பாரிய உள்முக உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு எழுச்சியின் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. ஃபைனான்சியல் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு சமீப கருத்து தெரிவித்தது: சொத்து முதலீடு இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 50 சதவீதத்தை அடக்கியிருக்கிறது - ஜப்பானின் பொருளாதார விரிவாக்க வருடங்களில் அதன் 30 சதவீதத்துடன் இது ஒப்பிடத்தக்கதாய் இருக்கிறது. காலவரையறையின்றி இது இவ்வாறே தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. ஃபைனான்சியல் டைம்ஸ் விளக்கியதைப் போல, "எப்படி முடிவில் உடைந்து போகாத ஒரு குமிழி இருந்ததில்லையோ அதைப் போலவே ஒரு காற்றுப் போன நிலை பின்தொடராத முதலீட்டு எழுச்சி என்பதும் இருந்ததில்லை. சீனாவின் முதலீட்டுக்கும்- மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 1960களின் ஜப்பான் அளவுக்கு வீழ்ச்சி காணுமானால் (பத்து வருடங்களுக்கு முன்பு சீனாவில் அத்தகைய நிலை இருந்தது என்பதால் இது ஒரு அபத்தமான சிந்தனையாக இருக்க முடியாது) அதன் தாக்கம் பேரழிவு தருவதாய் இருக்கும். சீனாவே சரிவைச் சந்தித்து அனைத்து வங்கி நெருக்கடிகளின் மிகப்பெரிதானதை சந்திக்க நேரும். இது பண்ட ஏற்றுமதியாளர்களையும் மற்ற எழுச்சியுறும் பொருளாதாரங்களையும் ஒரு தொடர் சரிவுடன் தாக்கும். சீன மிகைத்திறனின் (Overcapacity) பணச் சுருக்க விளைவானது எல்லா இடங்களிலும் உணரத்தக்கதாகி, உலக வர்த்தக அமைப்பையே அபாயத்திற்குள்ளாக்கக் கூடும்." இன்னொரு ஆய்வு இவ்வாறு எச்சரிக்கிறது: "சீனாவில் வந்து கொண்டிருக்கும் மந்தநிலை அமெரிக்க அடமானக்கடன் மற்றும் வீட்டுக்கடன் எழுச்சி தலைகீழாய் மாறியது போன்ற அதே வகையில் உலகச் சந்தைகளுக்கு இன்னுமொரு திருப்புமுனை நிகழ்வாகும் சாத்தியம் இருக்கிறது".

21. இந்த பகுப்பாய்வு ஆஸ்திரேலியாவுக்கு குறிப்பான பொருத்தத்தைக் கொண்டுள்ளது. சில வழிகளில், ஆஸ்திரேலிய முதலாளித்துவம் உலகப் பொருளாதார நெருக்கடியின் முதலாவது தாக்குதலில் இருந்து தனிமைப்பட்டதாய் இருந்தது. இது ஆஸ்திரேலிய விதிவிலக்குவாதத்தின் மறுஎழுச்சிக்கு வழிவகுத்தது. ஆஸ்திரேலிய வங்கிகள் மீதான வலிமையான கட்டுப்பாடு, உலகின் மற்ற பகுதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக தான் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பைத் தணித்ததாக கூறப்பட்டது. உண்மையில், நெருக்கடியின் பாதிப்பு என்பது ஆஸ்திரேலிய முதலாளித்துவம் குணாதிசயப்படுத்தும் உலக நிகழ்வுப்போக்குகளின் சேர்க்கை மூலமே தீர்மானிக்கப்பட்டது. வங்கிகளைக் காப்பாற்றியது வலிமையான கட்டுப்பாடுகள் இல்லை, மாறாக அமெரிக்க நிதிச் சந்தைகளுக்குள் பணத்தை செலுத்துவதை விடவும் வெளிநாடுகளில் இருந்து பெற்ற பணத்தை ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு வீட்டுவசதிச் சந்தையில் அவர்கள் முதலீடு செய்தனர் என்கின்ற உண்மை தான். அத்துடன், சீனாவுக்கான தலைமை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் சீன அரசாங்கத்தின் மிகப் பிரம்மாண்டமான பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பினால் நேரடியாக அனுகூலம் பெற்றது. ஆனால் இவ்வாறு தங்கியுள்ள நிலைமை காட்டுவது என்னவென்றால், சீனப் பொருளாதாரத்தில் ஒரு நெருக்கடி தேவையில்லை, ஒரு குறிப்பிடத்தக்க சரிவு நிகழ்ந்தால் கூட அது ஆஸ்திரேலியாவில் வெடிப்புமிக்க சக்தியுடன் எதிரொலிக்கும்.

22. இந்த பொருளாதார நெருக்கடி குறித்த நமது ஆய்வில், இந்த வடிவத்தில் முதலாளித்துவத்தின் பரந்த மறுகட்டமைப்பு நிகழ்ந்தேறி வருகிறது என்பதையும், அந்த மறுகட்டமைப்பு தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள்ளாக்குவதை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் நாம் தெளிவுபடுத்தியிருக்கிறோம். ஆளும் வர்க்கமானது பழைய வழிகளில் ஆட்சி செய்ய முடியாது, அதேபோல் தொழிலாள வர்க்கமும் உருவாக்கப்படும் புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஒழுங்கின் கீழ் வாழ முடியாது. சமூகப் புரட்சிக்கான புற நிலைமைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

23. முதலாளித்துவ மறுகட்டமைப்பு நிகழ்வுப்போக்கு ஏற்கனவே ஓரளவு நடைபெற்றுவிட்டது. வங்கிகள் மீட்பு நடவடிக்கை அரசாங்க கடனில் முன்கண்டிராத அதிகரிப்புக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது இப்போது தொழிலாள வர்க்கத்தின் மூலமே செலுத்தப்பட்டாக வேண்டும். 2007 முதல், பொருளாதார அபிவிருத்திக்கும் கூட்டுழைப்புக்குமான அமைப்பு (OECD) நாடுகளில் அரசாங்க வரவு-செலவுப் பற்றாக்குறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது, இப்போது 8 சதவீதத்திற்கும் அதிகமானதொரு நிலையில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதத்திற்கு நிகரான ஒரு தொகை மொத்த அரசாங்க கடனில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. மொத்த அரசாங்க கடனானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதம் ஏற்கனவே அதிகரிப்பு கண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதத்திற்கும் அதிகமான ஒரு தொகையளவில் நிற்கிறது.

24. இந்த பாரிய கடன்களின் பாதிப்பு முதலாளித்துவ நிதிரீதியான செய்தித்தொடர்பாளர்களின் வார்த்தைகள் மூலம் மிகத் தெளிவாய் வெளிவந்தது. உதாரணமாக, UBS முதலீட்டு வங்கியில் மூத்த பொருளாதார ஆலோசகராய் இருக்கும் ஜோர்ஜ் மேக்னஸ் "நெடிய நிதிக் கட்டுப்பாட்டின் வலி" குறித்து எழுதுகிறார். "பணக்கார உலகத்திற்கு இறையாண்மை கடன் (வெளிநாட்டு நாணயங்களில் விநியோகிக்கப்பட்ட அரசாங்க கடன் பத்திரங்களுக்கு திரும்ப நிதியளிக்க இயலாமை) பயங்கரம் மீண்டும் திரும்பியிருக்கும்" அளவுக்கு நெருக்கடி மிகக் கடுமையாய் உள்ளதென்கிறார். அதாவது, பெரிய முதலாளித்துவ நாடுகள் செலுத்த திணறும் அளவுக்கு கடனில் மிகப் பெரும் அதிகரிப்பு நிகழ்கிறது. யார் இதற்கு செலுத்த வேண்டும் என்பதில் மேக்னஸுக்கு எந்த சந்தேகமும் இல்லை, அதனால் தான் அவர் "பணக்காரர்களிடம் இருந்து பிடுங்குங்கள்" என்பதெல்லாம் இனியும் வேலைக்கு உதவாது என்று வலியுறுத்துகிறார். தி மெக்கென்சி குளோபல் இன்ஸ்டிடியூட் சென்ற வாரம் வெளியிட்ட உலகளாவிய நிதி கையாளுகை மீதான அறிக்கையில், அடுத்த தசாப்தத்திற்கான வெட்டுக்கள் குறித்த ஒரு கடுமையான சூழல் குறித்து சுட்டிக் காட்டியது. ஃபைனான்சியல் டைம்ஸ் பொருளாதார கருத்துரையாளரான மார்ட்டின் வொல்ஃப், பிரிட்டனின் நிலைமை குறித்து குறிப்பிடுகையில், இங்கிலாந்து அது நினைத்ததை விடவும் வறுமையில் இருப்பதாகவும் "இழப்புகளை பகிர்ந்து கொள்வது தொடர்பான போராட்டம் மிக மூர்க்கமானதாய் அமையப் போகிறது" என்றும் குறிப்பிட்டார். இந்த போராட்டத்தின் அரசியல் தாக்கங்கள் குறித்து இப்போது ஆளும் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது. அரசாங்க கடன் வளர்ச்சியுறுவது குறித்தும் அதனைக் குறைப்பதற்கான அழுத்தும் தேவை குறித்தும் வெளியானதொரு சமீப கட்டுரையில் ஃபைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளரான கிலியான் டெட் இவ்வாறு குறிப்பிட்டார்: "கடினமான எண்ணிக்கை மட்டுமே முழுக்கதையையும் சொல்லி விடவில்லை என்பது தெளிவாகிக் கொண்டிருக்கிறது. வரும் காலங்களில் அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போவது கடனின் அளவு மட்டுமல்ல, மாறாக அரசாங்கங்கள் அதனைக் குறைப்பதற்கு ஒரு பகுத்தறிவான வழியில் (அதிகபட்ச சிறந்ததாய்) அரசியல் ஸ்திரமின்மையை அல்லது (மோசமான நிலையை) முழு வீச்சுடனான புரட்சியை கட்டவிழ்த்து விடாமல் அமுலாக்க முடியுமா என்பது தான்."

25. பொருளாதார நிலைமுறிவின் முதல் கட்டம் கடந்திருக்கிறது. ஆனால் பழைய இயல்புநிலைக்கு திரும்ப முடியவில்லை. மாறாக காத்திருப்பது என்னவென்றால் இன்னும் கூடுதலான பொருளாதார சூறாவளிகளும், எல்லாவற்றுக்கும் மேலாய், சமூக மற்றும் வர்க்க மோதல்களின் எழுச்சியும் மற்றும் சமூகப் புரட்சியும் தான். புரட்சிகர மோதல்களுக்கான சென்ற காலகட்டமான 1968-75 காலம், ஆஸ்திரேலியா உள்ளிட, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் தனது சொந்த தலைமைகள் மூலம் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியில் நுழைவதில் இருந்து தடுக்கப்பட்ட சமயத்தில் முடிந்தது. இதனையடுத்து, முதலாளித்துவ வர்க்கம் தனது ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் அதன்பின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு தாக்குதலை தொடுக்கவும் இயலுமானதாக இருந்தது. போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பொருளாதார முரண்பாடுகளை தீர்க்கும் முயற்சியாக உலக பொருளாதாரத்தின் மீது ஒரு பிரம்மாண்டமான மறுகட்டமைப்பை அது முன்னெடுத்தது. இப்போது அதே மறுகட்டமைப்பு உலக முதலாளித்துவ அமைப்பின் அனைத்து முரண்பாடுகளையும் தீவிரத்தின் ஒரு புதிய உச்சிக்கு உயர்த்தியிருப்பதோடு, மீண்டுமொருமுறை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முன்பாக அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்வைத்திருக்கிறது. எனவே இந்த புள்ளியில் எழும் கேள்வி இது தான்: தொழிலாள வர்க்கத்திற்கும் கடந்தகால புரட்சிகர கிளர்ச்சிக் காலகட்டத்தில் அதனை அதிகாரத்திற்கான போட்டியில் இருந்து தடுத்த அமைப்புகளுக்கும் இடையிலான உறவு என்ன? தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள் மீது பூகோளமயமாக்கத்தின் தாக்கம் என்னவாய் இருந்திருக்கிறது?

26. சோசலிச இயக்க அபிவிருத்தியின் நிலைப்பாட்டில் இருந்து கடந்த 25 வருடங்கள் பல சமயங்களில் "கடினமான" காலகட்டமாக குணாதிசயப்படுத்தப்படுகின்றன. ஆனால் இத்தகையதொரு குணாதிசயமாக்கல் மேல்மட்டமான தோற்றத்தினாலேயே கணிக்கப்பட்டது. பெரும் சிரமங்களும் பிரச்சினைகளும் இருந்திருக்கின்றன தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நிகழ்ந்து கொண்டிருக்கும் முக்கியமான நிகழ்முறைகளை வெளிப்படுத்துவதற்கு ஆழமாக ஆராய்வது அவசியமாகும். இந்த சிக்கல்கள் எல்லாம், இருபதாம் நூற்றாண்டு முழுவதும் தொழிலாளர் இயக்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய பழைய அமைப்புகளின் சிதைவு மற்றும் சிதறல் ஆகிய கூடுதல் ஆழமான நிகழ்முறைகளின் ஆரம்ப வெளிப்பாடாய் இருந்தன. உண்மை தான், நமது இயக்கம் கடந்த காலத்தில் கூடுதல் ஆதரவைப் பெற்றிருந்திருக்கலாம், ஆனாலும் கூடுதல் வர்க்க நனவுடனான தொழிலாளர்களிடம் இருந்து நமது போக்கிற்கு கிடைத்த ஆதரவானது நமது கட்சியை ஒரு பரந்த தொழிலாளர் இயக்கத்தின் மிக இடதுசாரி பாகமாகக் கண்டவர்களிடம் இருந்து தான் நமக்குக் கிடைத்தது என்பதை நான் துணிச்சலோடு சொல்லுவேன். அந்த இயக்கம் இப்போது இல்லாததுடன், அதன் உடைவு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. ஆனால், இறுதிப் பகுப்பாய்வில், அந்த சிதைவு வேதனைமிகுந்த நிகழ்வுப்போக்காயினும் ஒரு அவசியமாக இருந்தது, ஏனெனில் சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிச அமைப்புகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட பழைய தொழிலாளர் இயக்கம் தான் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு அடிபணியச் செய்வதற்கான கருவியாக செயல்பட்டது. எனவே நமது கடமையானது தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கத்தை மறுகட்டமைப்பு செய்வதற்குக் குறைந்த எதுவும் இல்லை. பழைய அமைப்புகள் நொருங்குதல் என்பது இந்த கடமையை சாதிப்பதற்கு அவசியமான ஒரு முன்நிபந்தனையாக இருக்கிறது.

27. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்த சந்தர்ப்பவாதிகளை ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் வென்றதானது அரசியல் சக்திகளின் சமநிலையில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தை பிரதிபலித்தது என்பதை நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். வெறுமனே எங்களுடைய வாதங்கள் உண்மையானதாக இருந்தது, அவர்களுடையது போலியாக இருந்தது என்பது மட்டுமல்ல. அது முழுக்க உண்மை தான். ஆயினும், 1953ம் ஆண்டின் பகிரங்கக் கடிதமும் முழுக்க உண்மையானதாகவே இருந்தது, அதேபோல் தான் SWP மறுஇணைவுக்கு எதிரான பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் 1963ம் ஆண்டின் ஆவணங்களும் இருந்தன. ஆனால் இந்தப் போராட்டங்களில் சந்தர்ப்பவாதிகளை நம்மால் தோற்கடிக்கவியலாமல் இருந்தது. 1985-86 பிளவில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வெற்றியும் அதனையடுத்த 25 வருடங்களில் நமது போக்கு வலிமைப்பட்டதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையில் மாறியிருந்த உறவின் ஒரு வெளிப்பாடு ஆகும். ஆரம்பத்தில் பழைய அமைப்புகளின் உருக்குலைவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இந்த மாறிய உறவு, நமது இயக்கத்தின் வளர்ச்சியாக உடனடியாக பிரதிபலிக்கவில்லை. ஆனால் இந்த காலகட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது, அத்துடன் நமது வரலாறு, வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகளின் தெளிவில் நமது கட்சிகளின் ஸ்தாபகம் ஒரு புதிய காலகட்டம் திறக்கப்படுவதை அடையாளம் காட்டுகிறது. இது வெறுமனே நம்மால் நமது வேலைத்திட்டத்தை தெளிவாக சூத்திரப்படுத்த முடிந்திருக்கிறது மற்றும் நீண்டகாலமாய் தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளை தெளிவுபடுத்த முடிந்திருக்கிறது என்பது மட்டுமல்ல. இதனை நம்மால் செய்ய முடிந்திருக்கிறது என்கிற உண்மையே அதனுள் ஒரு புறநிலை முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது. அறிவுகூர்மையுள்ள ஆந்தை இருள் வரும்போது தான் பறக்கிறது, அதாவது ஒரு காலகட்டம் முடிந்து புதியதொன்று தொடங்கும் போதுதான்.

28. எமது இயக்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட மாற்றம், இறுதிப் பகுப்பாய்வில், ஒரு நூற்றாண்டின் கடந்த கால் பகுதி காலத்தில் சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தில் ஏற்பட்டிருக்கும் பரந்த மாற்றங்களின் விளைபொருள் ஆகும். தொழிலாளர் இயக்கத்தின் பழைய அமைப்புகள் தங்களை தேசிய சீர்திருத்தவாதத்தின் ஒரு வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்டு நிறுத்திக் கொண்டிருந்தன, அதனால் இத்தகையதொரு வேலைத்திட்டம் சாத்தியமாயிருந்த மட்டத்திற்கு அவற்றால் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ ஒழுங்கிற்கு அடிபணியச் செய்ய முடிந்தது. ஆனால் உற்பத்தியின் பூகோளமயமாக்கம் இந்த வேலைத்திட்டத்தை தகர்த்தது. தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற்கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் பகிரங்க முகவர்களாக செயல்படுகின்றன. சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவுக்கு பின்னர் இந்த நிகழ்வுப்போக்கு மீதான எங்களது ஆய்வை இன்னும் ஆழப்படுத்த தொடங்கினோம். அந்த நிகழ்வு முன்நிறுத்திய கேள்வி: உலகின் மிகப்பெரிய தொழிலாளர் அதிகாரத்துவம் நொருங்கிப் போனால், மற்ற அனைவருக்கும் இதன் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும்? அவற்றின் பாத்திரம் தொடர்பான நமது மதிப்பீடு "இடதுகள்" என்று அழைத்துக் கொள்பவர்களிடம் இருந்து, எப்படி சோசலிச சமத்துவக் கட்சி தொழிற்சங்கங்களை நிராகரிக்கலாம் என்றும் தேர்தல்களில் ஆஸ்திரேலிய தொழிற் கட்சிக்கு வாக்களிக்க பரிந்துரை செய்ய மறுப்பதன் மூலம் எத்தகையதொரு குற்றத்தை தொழிலாள வர்க்கத்திற்கு, சோசலிசத்திற்கு, மற்றும் புனிதமான ஒவ்வொன்றுக்கும் எதிராக நாங்கள் இழைக்கிறோம் என்றும் பாரிய கூக்குரல்மிக்க புலம்பலை வரவழைத்தது. நமது பகுப்பாய்வு முழுக்க சரியென நிரூபணமாகியுள்ளது. லெனின் ஒருமுறை கூறினார், ஒவ்வொரு நெருக்கடியின் மதிப்பு என்னவென்றால் அது ஒரு நிகழ்வின் மூடத்தனமான அம்சங்களையெல்லாம் தோலுரித்து அதன் அடிப்படையான குணாதிசயங்களை வெளிக்கொண்டுவருவதுதான். ஒரு உதாரணத்தை குறிப்பிட வேண்டுமென்றால், அமெரிக்காவில் நெருக்கடியானது நிச்சயமாக ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) அடிப்படையான குணாதிசயத்தை வெளிப்படுத்தியிருக்கிறது, தொழிலாள வர்க்கத்தை அடக்கும் இந்த தொழிற்சங்கம் வாகன நிறுவனங்களின் நிறைவேற்று நிர்வாகக் குழுக்களில் இடம் பிடித்துக் கொள்கிறது.

29. மிக முக்கியமாக, கடந்த கால்நூற்றாண்டு காலம் அனைத்து பப்லோவாத போக்குகள் மற்றும் அதன் வாரிசுகளின் அத்தியாவசிய பாத்திரத்தையும், 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஸ்தாபகம் மற்றும் அடுத்து வந்த காலத்தில் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக அதன் தளர்ச்சியற்ற போராட்டம் ஆகியவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தையும் தெளிவாக்கியிருக்கிறது. ஒரு காலத்தின் "இடது" போக்குகள் அனைத்தும் இப்போது உத்தியோகபூர்வ முதலாளித்துவ அரசியல் கட்டமைப்புக்குள் நுழைவதற்கான மறுகுழுவாக்கத்தை ஒருங்கிணைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. சில இடங்களில், மிகக் குறிப்பாய் பிரேசில் மற்றும் இத்தாலியில், அவர்கள் ஏற்கனவே அதனைச் செய்து விட்டார்கள். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பப்லோவாதிகளின் 16வது உலக காங்கிரசுக்கான ஆவணங்களில் இந்த முன்னோக்கு மிகத் தெளிவுற எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில், பிரான்சில் உள்ள பப்லோவாத பிரிவான LCR முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியான NPA க்குள் கலைக்கப்பட்டது. இப்போது இந்த முன்னோக்கு இன்னும் பரந்த வகையில் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

30. அவர்களது ஆவணங்களை ஒருவர் படிக்கத் தொடங்கிய உடனேயே அவர்களது கூச்சமற்ற தேசியவாத கண்ணோட்டத்தை கண்டு திகைக்கலாம். கடந்த காலத்தில் பப்லோவாதத்தின் அடிப்படையான தேசியவாத கண்ணோட்டத்தை சுட்டிக்காட்ட, மரபுவழியான சொற்றொடர்களாக தோன்றுவனவற்றின் மேல்தோலை அகற்றியே காண வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அவர்கள் பகிரங்கமாகப் பிரகடனம் செய்கின்றனர். "நமது அகிலம்" என்கின்ற தலைப்பிலான ஒரு ஆவணத்தில் அவர்கள் எழுதுகின்றனர்: "ஒருவர் தன்னை ஒவ்வொரு தேசிய உள்ளடக்கத்தில் வேரூன்றிக் கொள்வதின் மூலமும், பிராந்திய தொழிலாளர் இயக்கத்தின் அனைத்து நீரோட்டங்களுடைய சிறந்த மரபுகளையும் எடுத்துக் கொள்வதன் மூலமும் தான் சோசலிசப் புரட்சிக்காக போராடும் அமைப்புகளை அவர் கட்ட முடியும்." அடுத்த வாக்கியம் சொல்கிறது: "காஸ்ட்ரோவாதம், மாவோவாதம், சாண்டினிஸ்மோ, புரட்சிகர மக்கள் வாதம், விடுதலை இறையியல், மற்றும் பிற ஆகிய இந்நூற்றாண்டின் பிரதான புரட்சிகர அனுபவங்களில் பங்கேற்பது மற்றும் அவற்றில் இருந்து கற்றுக் கொள்வது ஆகிய பொருளும் இதில் அடங்கும்."

31. பரந்த முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சிகளை கட்டுவதன் மூலமாக முதலாளித்துவ-எதிர்ப்பு தொழிலாளர் இயக்கத்தை மறுஒழுங்கமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்வதை அவர்கள் தங்கள் முன்னோக்காக நிறுத்துகின்றனர். இத்தகையதொரு பரந்தஎன்பது பப்லோவாத இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளால் ஆற்றப்பட்ட பாத்திரம் மற்றும் பிரதான காங்கிரசு ஆவணத்தில் முன்வைக்கப்படும் முன்னோக்குகள் இரண்டின் மூலமும் சுட்டிக் காட்டப்படுகிறது. "வேறுபட்ட பாதைகளின் வழியான பொதுவான இலக்கு என்பது பரந்த முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சிகள் குறித்ததாகும். மறுகுழுவாக்கம் அல்லது புரட்சிகர நீரோட்டங்களின் பழைய சூத்திரங்களை மட்டும் எடுத்துக் கொள்வது பற்றிய பிரச்சினை மட்டுமல்ல இது. வெறுமனே புரட்சிகரமாக இருப்பனவற்றுக்கு பின்னாலிருக்கும் சக்திகளை ஒரே பக்கத்திற்கு கொண்டு வருவது தான் இலட்சியம் ஆகும்," என்று அது தெரிவிக்கிறது.

32. அவர்கள் எழுதுகின்றனர், இந்த நிகழ்போக்கின் பாதையில் ஒரு புதிய அகிலம் குறித்த கேள்வி முன்வைக்கப்படும், ஆனால் அது நான்காம் அகிலமாய் இருக்காது, அவசியமாயிருக்கும் புதிய அகிலமாக தன்னை பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்வதற்கான உரிமை அதற்கு இல்லை. இத்தகையதொரு அகிலம் எவ்வாறு கட்டப்பட வேண்டும்? அந்த ஆவணம் விளக்குகிறது, "நாம் செயல்படுகிறோம், செயல்பட்டுக் கொண்டே இருப்போம் அது சித்தாந்தரீதியான அல்லது வரலாற்று தெரிவுகளின் விடயங்களில் நிறுத்தப்பட்டு விடாதவகையில், ஏனெனில் அவை பிளவுகளிலும் பிரிவுகளுக்கும் இட்டுச் செல்லக் கூடிய வாய்ப்புகளே அதிகம்." அப்படியானால் யார் பங்கெடுக்கப் போகிறார்கள்? இந்த புதிய அகிலம் பல்வேறு மூலங்களில் இருந்தும் திரட்ட வேண்டும்: "பல்வேறு வகையைச் சேர்ந்த ட்ரொட்ஸ்கிசவாதிகள், விடுதலையாளர்கள், புரட்சிகர ஒருங்கிணைப்பாளர்கள், புரட்சிகர தேசியவாதிகள், இடது சீர்திருத்தவாதிகள்." "புதிய சர்வதேச குழுவாக்கங்களின் முன்னோக்கில் கூடும் மையங்களுக்கான ஏற்பாட்டாளர்பாத்திரத்தை" நான்காம் அகிலம் ஆற்ற வேண்டும் என்று இந்த ஆவணம் வலியுறுத்துகிறது.

33. இவை அனைத்தின் அரசியல் அர்த்தம் மிகத் தெளிவானது. பப்லோவாதிகளின் ஆவணம் குறிப்பிடுவது போல, 1992ம் ஆண்டு முதல், அதாவது சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து, அவர்கள் "புதிய காலகட்டம், புதிய வேலைத்திட்டம், புதிய கட்சி" என்னும் மும்மடிப்பு கொள்கையை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். அரசியல் அதிகாரத்திற்கான போட்டியில் தொழிலாள வர்க்கத்தை தடுக்க முதலாளித்துவம் நேரடியாக நம்பி வந்திருக்கிற அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சிதைவு, சிதறல் மற்றும் உருக்குலைவை கடந்த காலகட்டம் கண்டிருக்கிறது. புதிய இயங்குமுறைகள் கட்டுமானம் செய்யப்பட வேண்டும் என்பது தான் பப்லோவாதிகளின் வேலைத்திட்டம். கிளீஃப் சுலோட்டர், தான் ஒரு மார்க்சிஸ்டாய் இருந்த காலத்தில், புரட்சிகர போராட்டத்தின் அடுத்த காலகட்டத்தில் முதலாளித்துவம் நான்காம் அகிலத்தில் இருந்து முறித்துக் கொண்ட திருத்தல்வாத அமைப்புகளின் மீது நேரடியாக நம்பிக்கை வைக்க நேரும் என்று வலியுறுத்தினார். அந்த கணிப்பு இன்று பூரணப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

34. நிறைவேற்றப்படுவதற்கு இங்கு வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தான், எமது சர்வதேச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக கட்டுவதற்கு, ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளை பயன்படுத்திக் கூறுவதானால், "ஒரே ஒரு உலகளாவிய மையத்தையும் ஒரே ஒரு உலகளாவிய அரசியல் நோக்குநிலையையும் கொண்ட புரட்சிகர செயல்பாட்டுக்கான ஒரே ஒரு சர்வதேச பாட்டாளி வர்க்க அமைப்பாக" உருவாக்குவதற்கு நாம் முன்னேறவிருக்கிறோம். இந்த ஆவணங்கள்