சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The decay of American democracy

அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவு

Patrick Martin
2 November 2010

Use this version to print | Send feedback

இப்போது பெருந்தன்மையுடன் நிறைவு பெற்று வரும் அமெரிக்காவின் 2010 தேர்தல் பிரச்சாரம் அமெரிக்க இரு-கட்சி முறை அரசியல் மூடத்தன நிலைக்குள் இன்னும் ஆழமாய் வீழ்வதைக் குறித்து நிற்கிறது. அமெரிக்க மக்களை எதிர்கொண்டு நிற்கும் பிரதான பிரச்சினைகளான பெருமந்த நிலைக்குப் பிந்தைய மோசமான பொருளாதார நெருக்கடி, இரண்டு போர்கள், பரவும் வறுமை, பட்டினி மற்றும் வீடின்மை, வீட்டு ஏலம் என்னும் கொள்ளை நோய், ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரிக்கும் தாக்குதல்கள், அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான சுற்றுச்சூழல் பெருங்கேடு ஆகிய இவை எதுவுமே தீவிரமாய் விவாதத்திற்கு வரவில்லை. அநேகமானவை கொஞ்சம் கூட விவாதிக்கப்படவே இல்லை.

அதற்குப் பதிலாய் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பரஸ்பர சேறிறைப்பு, வெற்று வார்த்தைகள், திசைதிருப்பல்கள் மற்றும் அமெரிக்க தேர்தல்களின் பரிதாப வரலாற்றிலும் முன்கண்டிராத அளவில் முற்றுமுதலான பொய்யுரைகள் இவற்றைக் கொண்ட சண்டையில் தான் ஈடுபட்டிருந்தனர். இரண்டு கட்சிகளாலும், ஒரு வேட்பாளர்களின் கூட்டத்தை இன்னொரு கூட்டத்தின் சார்பாய் சேறிறைப்பதற்கு உருவாக்கப்பட்ட பல்வேறு பெருநிறுவன-ஆதரவு குழுக்களாலும் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டது.

இந்த தொகையின் பெரும் பகுதி சென்ற வார இறுதியில் உச்சத்தை எட்டிய தொலைக்காட்சி வழி தாக்குதல் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டிருந்தது. துஷ்டத்தனம், திரும்பப் திரும்ப சொல்லுவது மற்றும் வெளிப்படையாய் நேர்மையின்மை ஆகியவற்றால் அழுக்கடைந்த மூளையை மரத்துப் போகச் செய்கின்ற குறுக்கீடுகள் இன்றி ஒரு செய்தி நிகழ்ச்சியையோ, நாடகத்தையோ, நகைச்சுவையையோ அல்லது விளையாட்டு நிகழ்ச்சியையோ பார்ப்பது என்பது சாத்தியமில்லாததாய் இருந்தது.

நெவெடாவில், இப்போதிருக்கும் ஜனநாயகக் கட்சி செனட்டரான ஹாரி ரேய்ட், சிறுவர் சிறுமியரிடம் பாலியல் விஷமங்கள் புரிந்திருந்த சிறைவாசிகளுக்கு இலவச வியாகரா வழங்குவதை ஆதரித்ததாக பார்வையாளர்களிடம் கூறப்பட்டது. கெண்டகியில், அமெரிக்க செனட்டுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் கல்லூரியில் சகமாணவியை நிர்ப்பந்தப்படுத்தி ஆக்வா புத்தா (Aqua Buddha) என்பதான சிலையை வழிபடச் செய்ததாக பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இலினியாஸில், செனட்டுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் “தாதாக்களின் வங்கியாளர்” என்பதாய் தூற்றப்பட்டார். மிச்சிகனில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற வேட்பாளர் தனது வணிக பங்குதாரர்களை 6 மில்லியன் டாலர் தொகையில் ஏமாற்றிய மோசடி பேர்வழியாய் அடையாளம் காட்டப்பட்டார்.

2010 தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் பொருட்டு ஒரே நாளில் உருவாக்கப்பட்ட “சுதந்திரமான” குழுக்கள் தான் தொலைக்காட்சி விளம்பர நேரத்தில் பெரும்பகுதியை வாங்கியிருந்தன. இவை பெரும்பாலும் ஒரு பணக்கார கொடையாளி, ஒரு பெருநிறுவன தூண்டல்குழு, அல்லது பெரிய சங்கங்களில் ஒன்றினால் உருவாக்கப்பட்டிருந்தன. ”வளமைக்காக அமெரிக்கர்கள்”, “வேலைக்காக அமெரிக்கர்கள்”, “அமெரிக்க குடும்பங்கள் முதலில்” என்றெல்லாம் தீங்கற்றதாய் தோன்றும் மறைப்புப் பெயரின் கீழ் அந்தக் குழு பின் ஒரு வேட்பாளர் மீது சேறு வீசுவதற்கும் இன்னொரு வேட்பாளருக்கு விளம்பரமளிப்பதற்குமான நோக்கத்தோடு தொலைக்காட்சி நேரத்தை வாங்குகிறது.

இந்த விளம்பர தடுப்பின் முக்கிய வேலை என்னவென்றால் பார்க்கும் பார்வையாளர்களைக் குழப்புவதும் அரசியல் பிரச்சினைகள் குறித்த பொருத்தமான பிரதிபலிப்பை ஏறக்குறைய சாத்தியமில்லாது செய்வதும் தான். ஒரு அறிவார்ந்த மட்டத்தில் வாக்காளர்களுடன் பேசுவதற்கு இரண்டு கட்சிகளுக்குமே விருப்பமில்லை. அதற்குப் பதிலாய் பார்வையாளர்களை எதிர் வேட்பாளர்கள் மீதான உணர்ச்சிமயமான தாக்குதல்களைக் கொண்டு திகைக்கச் செய்யவே அவற்றின் ஊடகத் தொடர்பாளர்களும் விளம்பரதாரர்களும் தலைப்படுகின்றனர், விளம்பரமளிப்பவர்களின் உண்மை நோக்கம் மறைக்கப்படுகிறது. 2010 பிரச்சாரத்தின் புத்திஜீவித்தன மட்டத்தின் பாதாள நிலை என்பது ஏதோ அவை இல்லாதபட்சத்தில் ஆரோக்கியமான தேர்தல் நிகழ்முறையாய் இருந்திருக்கும் என்று சொல்லத்தக்க வகையிலான வெறுமனே ஒரு விசித்திரமான அல்லது கதம்பமான அம்சம் அல்ல. அடிப்படையில் அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயகத்தின் திவால் தன்மையின் வெளிப்பாடே இது.

இரண்டு பெரும் வணிகக் கட்சிகளும் அமெரிக்க மக்களிடம் நேரடியாகவும் நேர்மையாகவும் பேசுவதென்பது சாத்தியமற்றதாகும். ஏனென்றால் குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவருமே நிதியப்பிரபுத்துவத்தையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். பரந்துபட்ட மக்களின் நலன்களுக்கு நேரெதிரான நலன்களைக் கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலான கூட்டமே இது.

இரண்டு கட்சிகளின் விளம்பரத்தனம் பழையதாகவும் நம்பமுடியாத வகையிலும் ஆகியிருக்கிறது. டிரில்லியன் கணக்கான தொகைகளை கருவூலத்தில் இருந்து வங்கிகளை மீட்பதற்கு எடுத்துக் கொடுத்தபோது வோல் ஸ்ட்ரீட்டின் சாட்டையாகவே தனது நிர்வாகம் இருந்ததாக ஒபாமா நடிக்கிறார். குடியரசுக் கட்சியோ தங்கள் பங்கிற்கு இந்த வங்கிப் பிணையெடுப்பிற்கு எதிராக கர்ஜிக்கிறது, ஆனால் அந்த பிணையெடுப்பு வெளியேறிய புஷ் நிர்வாகத்தால் வடிவமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சி தலைமையால் உறுதி செய்யப்பட்ட நடவடிக்கையே ஆகும்.

போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் போன்ற பிரச்சினைகளில் எந்த செறிந்த விவாதமும் இல்லாதிருப்பது உத்தியோகபூர்வமாக வழிமொழியப்படும் அரசியல் நிகழ்முறையின் சிதைந்த மற்றும் பொய்யான தன்மையை விளங்கப்படுத்துவதாக இருக்கிறது. எந்த அதிமுக்கிய பிரச்சினைகள் மீதான முடிவுகளிலும் இரு கட்சியுமே மக்கள் விருப்பத்திற்கு வளையப் போவதில்லை.

தாயகத்தில் பாரிய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் புஷ் போருக்குச் சென்றார். “அமைதி” வேட்பாளராய் முன்நிறுத்தப்பட்டு 2008 தேர்தலில் வென்ற ஒபாமா அதன்பின் ஆப்கானிஸ்தானில் போரை அதிகப்படுத்தினார். இதேபோல் ஜனநாயக உரிமைகள் மீதான பிரச்சினைகளில், அமெரிக்க போலிஸ் அரசுக்கான சாரக்கட்டாய் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் அதிகாரங்களை தொடர்ந்து அதிகரிப்பதற்கு இரண்டு கட்சிகளுமே உறுதிபூண்டுள்ளன.

அமெரிக்க உச்சநீதிமன்றம் 2000 ஜனாதிபதி தேர்தலில் ஆக மோசமான வகையில் தலையிட்டதும், ஜோர்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் அமர்த்தப்படுவதற்கு ஜனநாயகக் கட்சியினர் அடிபணிந்ததும் நடந்து ஒரு முழு தசாப்தம் சென்று விட்டது. அந்த சமயத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென இனியும் எந்த குறிப்பிட்ட பகுதியும் இல்லை என்பதான முடிவினை உலக சோசலிச வலைத் தளம் வரைந்தது.

அதன் பின் தொடர்ச்சியான பல தேர்தல்கள் பின் தொடர்ந்தன, ஒவ்வொன்றும் முந்தையதைக் காட்டிலும் ஆழமான கேலிக்கூத்தாகவே அமைந்தது. ஈராக் போருக்கு நெருக்கியடித்த சூழலில் 2002 தேர்தல் நடத்தப்பட்டது, சதாம் உசேன் தூக்கியெறியப்படாது போனால் அமெரிக்க நகரங்களில் “காளான் மேகங்கள்” (குண்டுவெடிப்புப் புகை) உருவாகலாம் என புஷ் நிர்வாகம் எச்சரித்தது.

2004 தேர்தலில், அமெரிக்க மக்களின் போர் எதிர்ப்பு மனோநிலைக்கு தங்களது முதுகைக் காண்பித்த ஜனநாயகக் கட்சியினர் ஈராக்கில் இராணுவ வெற்றிக்கு உறுதியளித்த ஒரு வேட்பாளரை நிறுத்தினர்.

2006ல், ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் கட்டுப்பாடு கொண்டிருந்தனர், ஈராக் போருக்கான எதிர்ப்பே இதன் முக்கியக் காரணம். ஆனால் புஷ் நிர்வாகமோ போரை அதிகப்படுத்தியது, ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான நாடாளுமன்றமோ நிதிகளை வெட்டவோ அல்லது குருதியாறு ஓடுவதை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவோ மறுத்தது.

2008 ஜனாதிபதி தேர்தலில், ஒபாமா வெற்றி என்பது ஊடகங்களின் கைப்புரட்டு மற்றும் பிரமை உருவாக்கத்தின் வெற்றியாகும். அமெரிக்க செனட்டில் நான்கு வருடங்கள் இருந்ததைத் தவிர ஏறக்குறைய யாராலும் அறியப்படாதிருந்த ஒரு வேட்பாளரை ஜனநாயகக் கட்சியில் இருந்த அதிகாரத் தரகர்களும் பணமுதலைகளும் தேர்வு செய்து வளர்த்தனர், பின் அவரை “நம்பிக்கை”யையும் “மாற்றத்தையும்” கொண்டு வரத்தக்க ஒரு புதுமுக கிளர்ச்சியாளராய் முன்நிறுத்தினர். இந்த ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதி ஜனநாயகத்தின் முற்போக்கு வளர்ச்சியில் ஒரு மைல்கல்லைக் குறித்ததாக வந்த கொண்டாட்ட அறிவிப்புகளிடையே அவர் நாற்காலியில் அமர்ந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின், அந்த பிரமை விலகிப்போயிருப்பது முன்னெப்போதையும் விட ஆழமுற்றதாய் அமைந்திருக்கிறது.

ஆயினும் இந்த வருடங்களின் வாழ்க்கை வீணாகக் கழிந்து விடவில்லை. இரண்டு கட்சிகளும் தேர்தல் சமயத்தில் என்னதான் வாய்ஜாலம் காட்டினாலும், இரண்டுமே பெருநிறுவன அமெரிக்காவுக்கான பிரதிநிதிகளாகவே நிற்கின்றன என்பதை பத்து மில்லியன்கணக்கான மக்களின் மனம், தங்களது கடின அனுபவத்தின் அடிப்படையில், புரிந்து கொள்கிறது. உழைக்கும் மக்களுக்கு அடிப்படையான புதியதொரு பாதை அவசியமாக உள்ளது என்பதான புரிதல் வளர்ந்து வருகிறது.

முதலாளித்துவ அரசியல்வாதிகள் தங்களது பெருநிறுவன முதலாளிகளால் வாங்கப்படுவதற்கும் விற்கப்படுவதற்கும் வழிவகை செய்து தரும் விதிகளை தட்டி நெளிப்பதற்கான தேர்தல் பிரச்சார செலவின ”சீர்திருத்தம்” மற்றும் பிற முயற்சிகள் போன்ற வகைமுறைகளின் ஊடாக அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் சீரழிந்த ஊழலடைந்த தன்மையில் இருந்து வெளிவருவதற்கு எந்த வழியும் இல்லை.

வெகுஜனங்கள் மாபெரும் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களுக்குள் நுழைவதன் மூலமாக மட்டுமே அமெரிக்க அரசியல் சுத்திகரிக்கப்பட முடியும். கீழிருந்து எழும் ஒரு உண்மையான வெகுஜன இயக்கம் தேநீர் விருந்து போன்ற மக்கள் விருப்பமாய் போலியாய் காட்டப்படும் திசைதிருப்பல்கள் உள்பட அமெரிக்க அரசியல் வாழ்வில் உள்ள மோசடியான, உண்மையற்ற, செயற்கையான, இட்டுக் கட்டப்பட்ட மற்றும் போலியான அனைத்தையும் தூள்தூளாக்கும்.

உழைக்கும் மக்களும் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒரு சோசலிச மற்றும் ஏகாதிபத்திய-விரோத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தங்களின், தங்களால், தங்களுக்காக தமது சொந்த சுயாதீனமான அரசியல் கட்சியைக் கட்டுவதே தொழிலாள வர்க்கத்தின் முன்னிருக்கும் ஒரே பாதை ஆகும். இந்த கொள்கைக்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.