சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Behind the Democratic debacle

ஜனநாயகக் கட்சியின் அரசியல் தகர்வின் பின்னணியில்

Joseph Kishore
4 November 2010

Use this version to print | Send feedback

இடைக்காலத் தேர்தல்கள் நடந்து ஒரே நாளுக்கு பின்னர், அமெரிக்கச் செய்தி ஊடகம், அரசியல் அமைப்புமுறையில் அனைவராலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒரு கருத்தைச் சுற்றி இணைந்து விரைவாக கூறியது: அதாவது குடியரசுக் கட்சியின் வெற்றி ஒபாமா நிர்வாகத்தின் இடதுசாரித்தனம் என்று கருதக்கூடிய கொள்கைகள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதே அது. புதன்கிழமை தன் செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமாவே இப்பகுப்பாய்வை ஏற்று குடியரக் கட்சியுடன் நெருக்கமாக ஒத்துழைப்பதாக உறுதியளித்து செல்வந்தர்களுக்கான வரிக்குறைப்புக்களில் சில சமரசம் கொண்டு பெருநிறுவன அமெரிக்காவுடன் தன் உறவுகளை முன்னேற்ற இருப்பதாகவும் கூறினார்.

இக்கூற்றின் அடித்தளத்தில் இரு விளக்கங்கள் உள்ளன, இரண்டுமே தவறானவை: 1) தன்னுடைய முதல் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்தில் பெருநிறுவன-எதிர்ப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினார். 2) மக்கள் முழுவதும் தேர்தலைப் பயன்படுத்தி முதலாளித்திற்கும் பெருவணிகத்திற்கும் பெரும் உறுதிப்பாட்டைக் கொடுத்துள்ளனர். இந்த விளக்கங்கள் இரண்டுமே முட்டாள்த்தனமானது மட்டுமல்லாது அடிப்படை உண்மைகளுக்கு மாறானவையுமாகும்.

வெள்ளமென வந்துள்ள அரசியல் கருத்துக்களில் முக்கிய செய்தி ஊடகப் பிரிவில் இருந்து எவரும் இன்னும் கூடுதலாக ஏற்கும் தன்மையுடைய விளக்கத்தை தெரிவிக்கவில்லை. “நம்பிக்கை” மற்றும் “மாற்றத்தில் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்ற கருத்துக்களின் உரிமைக்காவலனாக காட்டிக்கொண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர், ஒபாமா தன்னுடைய பெருவணிக மற்றும் போர்ச் சார்பு கொள்கைகள் மூலம் அவருக்கு வாக்களித்த மக்கட்தொகையின் பெரும் பிரிவுகளை விரோதப்படுத்தவும் அரசியல் ரீதியாக உருக்குலைக்க வைப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பதே அது.

ஒபாமாவிற்கு தேர்தலில் வெற்றியை கொடுத்த நிகழ்ச்சியான செப்டம்பர் 2008 வோல் ஸ்ட்ரீட் சரிவு, புஷ் நிர்வாகத்தின்மீது எஞ்சியிருந்த நம்பகத் தன்மையைச் சிதைத்து, முதலாளித்துவ முறையையே ஆழ்ந்த இழிவிற்கு உட்படுத்தியது. முற்போக்கான சீர்திருத்தத்திற்கு பெரும் ஆதரவு உறுதியுடன் ஒபாமா பதவிக்கு வந்தார்.

நிர்வாகத்தின் விடையிறுப்பு வங்கிகளைப் பாதுகாக்க விரைவதாக இருந்தது. அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே ஒபாமா பிணை எடுப்புக்களுக்குத் தன் நிபந்தனையற்ற ஆதரவை வெளிப்படுத்தி, பின் அவர் அவற்றை விரிவுபடுத்தினார். நிதிய மூலதனத்தின் நலன்களுடைய மேலாதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு நிர்வாகத்தை அவர் இணைத்தார். இது அவருடைய பொருளாதார ஆலோசகராக லோரன்ஸ் சம்மர்ஸ் மற்றும் நிதி மந்திரியாக டிமோதி கீத்னர் ஆகியோரை தெரிவுசெய்தன் மூலம் அடையாளம் காட்டப்பட்டது.

நிர்வாக உயர் அதிகாரரிகளுக்கான ஊதியங்களில் எந்தவிதமான தடைகளையும் நிர்வாகம் எதிர்த்ததுடன் பொருளாதார பேரழிவிற்கு காரணமானவர்கள் குற்றவிசாரணைக்கு அல்லது பொருளாதார தடைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தையும் நிராகரித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் செல்வம் படைத்த தனிநபர்கள் தேசிய வருமானத்தில் தங்கள் பங்கை பரந்த அளவில் விரிவாக்கியுள்ளது மட்டுமின்றி, பெரிய வங்கிகளும் மிக அதிக ஊதியத் தொகைகளை அவர்களுக்கு கொடுக்கவுள்ளன.

பொருளாதார நெருக்கடி பெருமந்த நிலைக்குப் பின் காணப்படாத வகையில் ஒரு வேலைகள் நெருக்கடிக்கு வழிவகுத்தது. நெருக்கடிக் காலம் முழுவதும் ஒபாமா வேலையின்மை மட்டங்கள் “சற்றே சுணங்கிவரும் அடையாளக்காட்டியாக” உள்ளன என்ற கூற்றைக் கணக்கிலடங்காமல் மீண்டும் மீண்டும் கூறினார்.

வோல் ஸ்ட்ரீட்டைப் பிணை எடுத்த பின் ஒபாமா ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் நிறுவனங்கள் கட்டாய திவாலுக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்காணித்து தொழிலாளர்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் பிற நலன்களில் ஆழ்ந்த வெட்டுக்களை ஏற்க வேண்டும் என்று கோரினார். இதன் விளைவாக கார்ப் பெருநிறுவனங்கிளன் இலாபங்கள் பெரிதும் உயர்ந்தன. அதே நேரத்தில் கார்த் தொழிலாளர்களின் ஊதியங்கள் மீதான தாகக்குதல்கள் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஊதியக் குறைப்பிற்கு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வருவதற்கு முன்மாதிரி ஆயிற்று.

இதன் விளைவுகள் தொழில்துறை மையமான மேற்குப்பகுதியில் ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவுச் சரிவில் காணப்படலாம். இப்பகுதியில் பாதிக்கும் மேலான தொகுதிகள் பிரதிநிதிகள் மன்றத்தில் ஜனநாயகக் கட்சியினரால் இழக்கப்பட்டுள்ளன. கார்தயாரிப்பு தொழிலில் ஒரு மையமான மிச்சிகனில் குடியரசுக் கட்சியினர் மாநில மற்றும் உள்ளூராட்சிப் பதவிகளை பெரிதும் கைப்பற்றினர். அங்கோ வாக்காளர் பதிவு 45 சதவிகிதம் என்றுதான் இருந்தது. 2008ல் ஒபாமாவிற்குப் அதிகமாக வாக்களித்திருந்த டெட்ரோயிட்டில் வாக்களிப்பதற்கு ஐந்தில் ஒரு வாக்காளர்தான் வந்திருந்தார்.

ஒபாமாவுடன் தொடர்புபடுத்தப்படும் முக்கிய உள்நாட்டுத் திட்டம் சுகாதாரப் பாதுகாப்பு முறையாகும். இச்சட்டவரைவு முற்றிலும் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் நிறுவனங்களுக்காகவே இயற்றப்பட்டுள்ளது. “இருகட்சி ஒற்றுமைக்காக” ஒபாமா “பொதுமக்கள் விருப்பத் தேர்வு” உட்பட முற்போக்கான சீர்திருத்தம் எதையும் கைவிட்டுள்ளார். குறிப்பாக முதிய வாக்காளர்கள் மிகச்சரியான முறையில் முழு நடவடிக்கையையும் மருத்துவப் பாதுகாப்பு நலன்களைக் குறைத்தல், பங்கீட்டுமுறையில் மருத்துவப்பாதுகாப்பளிப்பது என்று நன்கு உணர்ந்துள்ளனர். இதையொட்டி 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாக்குகளில் 18 சதவிகிதம் என்று உயர்ந்த முறையில் குடியரசுக் கட்சிக்கு வாக்குகள் கிட்டன.

வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, ஒபாமா அதிகாரத்திற்கு வந்ததே போருக்கு மக்கள் காட்டிய எதிர்ப்பு அலையை ஒட்டித்தான். 2008 ஜனநாயகக் கட்சியின் தொடக்க தேர்தல்களில் அவருடைய முக்கிய வாதம் போட்டியாளர் ஹில்லாரி கிளின்டனுக்கு எதிராக தான் ஈராக்கிய போருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று கூறியதுதான். ஆனால் பதவியேற்றதும் ஒபாமா விரைவில் புஷ்ஷின் கீழ் போருக்குப் பொறுப்பாக இருந்தவர்களையே மீண்டும் நியமிக்க செயல்பட்டார். இதில் பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ் மற்றும் ஜெனரல் டேவிட் பெட்ரீயஸும் அடங்குவர். அவருடைய நிர்வாகம் ஈராக் ஆக்கிரமிப்பை தொடர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் போர்களை பெரிதும் விரிவாக்கியது, யேமன், ஈரானுக்கு எதிராக புதிய போர்களை அச்சுறுத்தியது மற்றும் CIA ஆளில்லா விமானங்கள் உலெகெங்கிலும் மக்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தியது.

2002ல் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் போர் பற்றி பிரச்சினை ஆதிக்கப் பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகளினால் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிப்பதின் மூலம் போரை நிறுத்த முடியாது என்பது தெளிவாகிக் கொண்டு வருகிறது. போருக்கு எதிராக உணர்வு குறிப்பாக உள்ள இளைஞர்களிடையே செவ்வாயன்று வாக்களிக்க வந்தவர்கள் எண்ணிக்கையை குறைந்துவிட்டது. 18 முதல் 29 வயதுவரை உள்ள வாக்காளர்கள் 2008 தேர்தலில் 18% என்று இருந்த நிலையில், இத்தேர்தலில் அவர்கள் 10% தான் வாக்குப் போட்டனர்.

ஒபாமாவின் முதல் இரு ஆண்டுகள் வலதுசாரி கொள்கைப் பட்டியல்களில் பின்வருபவையும் சேர்க்கப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள்மீது நடத்தப்படுத்தும் தாக்குதல் விரிவுபடுத்தப்படும், சித்திரவதை மற்றும் உள்நாட்டு ஒற்று வேலைக்குப் பொறுப்பானவர்கள் குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கப்பட்டது. பெரும் எரிசக்தி நிறுவனமான பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் (BP) இலாபங்கள் பாதுகாக்கப்பட்டது. அதுவோ அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரழிவிற்கு காரணம் ஆகும். மில்லியன் கணக்கானவர்களை அவர்களுடைய வீடுகளில் இருந்து அகற்றும் அதே வங்கிகள் செய்துள்ள பாரிய மோசடிகள் பற்றிச் சான்றுகள் இருந்தும் வீடுகள் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

பெருவணிகங்களின் இருகட்சி முறைக்கு வெளியே எந்த எதிர்ப்பையும் தவிர்க்கும் அமெரிக்க அரசியலின் தனியியல்பான நிலைமைகள்படி ஜனநாயகக் கட்சிக்கு எதிரான அதிருப்தி குடியரசுக் கட்சிக்கு வெற்றி என்ற விதத்தில்தான் வெளிப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவுத் தளம் வாக்களிப்பதில் குறைந்துவிட்டதை பயன்படுத்தியதுடன், குடியரசுக் கட்சியினர் ஒபாமாவின் காட்டிக்கொடுப்புக்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது; அவரிடம் கொள்கை இல்லாத நிலை ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் தாராளவாத ஆதரவாளர்களை சூழ்ந்துள்ள நேர்மையற்ற தன்மை மற்றும் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்தியது. குடியரசுக் கட்சியினரில் வனப்புரை மக்களின் பல பிரிவுகளிலும் எதிரொலித்தபோதும் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

ஒபாமா நிர்வாகத்தின் தோல்வி ஒரு தனிநபரின் தோல்வியால் ஏற்பட்டது அல்ல. இது முழு அரசியல், பொருளாதார முறையின் தோல்வியைப் பற்றிய வெளிப்பாடு ஆகும். நீண்டகாலப் பொருளாதாரச்சரிவு உள்ள நிலையில், அமெரிக்க முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தின் மீது எப்பொழுதும் அதிகரித்து வரும் தாக்குதல்களைத் தவிர முதலாளித்துவ நெருக்கடிக்கு வேறு விடையிறுப்பைக் காணவில்லை.

ஒபாமாவிற்கு ஆதரவு கொடுக்கும் தொழிற்சங்கங்களும், மற்றும் ஏராளமான தராளவாத மற்றும் மத்தியதர வர்க்க அமைப்புக்களும் குடியரசுக் கட்சியினரின் வெற்றியை சுட்டிக்காட்டி மீண்டும் ஜனநாயகக் கட்சி ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவர். வலதுசாரிச் சக்திகளின் வளர்ச்சி ஜனநாயகக் கட்சியை தேர்ந்தெடுப்பதின் நிறுத்தப்படும் என்பதின் மூலம் ஊக்கம் பெறும் என்னும் கூற்று உண்மைக்கு முற்றிலும் முரணானது. ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவை அதிகரிப்பது என்பது அதன் தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளுக்கு உதவும், அதே நேரத்தில் இன்னும் கூடுதலான வலதுசாரிக் கொள்கைகள் முன்னணிக்கு வருவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும்.

இத்தேர்தல்கள் ஒரு எச்சரிக்கையெனக் காணப்படவேண்டும். இரு கட்சிகள் உட்பட அரசியல் கட்டமைப்பு இன்னும் வலதிற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல்களுக்கு பின்னர் உள்ள நிலை வேலைகள், ஊதியங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தும், ஜனநாயக உரிமைகளின் இன்னும் அரிப்பை ஏற்படுத்தும், போரை விரிவாக்கும்-அதில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத விளைவுகளை கொண்ட உலக மோதல் ஒன்றிற்கான தயாரிப்பும் அடங்கும்.

இந்த நெருக்கடியின் நடுவே, அமெரிக்க அரசியல் ஒரு நோய்வாய்ப்பட்ட தன்மையைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு பல் தொற்றிற்கு வகை செய்வது போல், மில்லியன் கணக்கான மக்கள் உணர்ந்துள்ள சீற்றமும் அதிருப்பதியும் உண்மையான வெளிப்பாடு இல்லாமல் மறுக்கப்படுகின்றன. தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சி மற்றும் முதலாளித்துவ இருகட்சி முறை என்னும் வடிவமைப்பிற்குள் பொறியென அகப்பட்டுக் கொண்டுள்ள நிலையில், வலதுசாரிதான் நிலைமையை தனக்கு சாதகமாக சுரண்டிக்கொள்ள முனைகிறது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் இத்தாக்கங்கள் பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் முதலாளித்துவ அரசியல் மூலம் முன்னேற்றப் பாதைக்கு வாய்ப்பு இல்லை. சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன புரட்சிகர இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதுதான் தேவையாகும். இதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் தொழிலாளர்கள், இளைஞர்களின் பரந்த பிரிவுகளுக்கு எடுத்துச் செல்ல போராடும் முன்னோக்காகும்.