சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German parliament approves health reform

ஜேர்மனிய பாராளுமன்றம் மருத்துவ காப்புறுதி சீர்திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுக்கிறது

By Dietmar Henning and Lena Sokoll
17 November 2010

Use this version to print | Send feedback

கடந்த வெள்ளியன்று ஜேர்மனிய பாராளுமன்றம் “2011 மருத்துவ காப்புறுதிச் சீர்திருத்தம்” என்பதை சட்டமாக இயற்றியது. இது சுகாதார முறையில் இரு தட்டுமுறை ஏற்படவும், சட்டபூர்வமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தனியார்மயமாக்கப்படுவதற்கும் வழி வகுக்கிறது. சீர்திருத்தத்தின் மையக்கரு வரம்பற்ற கட்டாய கட்டணங்கள் அல்லது மொத்தத்தில் அதிக பணம் ஒவ்வொருவரிடம் இருந்தும் வசூலிக்கப்படுவது ஆகும். அரசாங்கம் கட்டாயக் கட்டணம் என்ற சொல்லை தவிர்த்துள்ளது. இதற்குக் காரணம் எந்த அளவு சொல்லிற்கு செல்வாக்கு இல்லை என்பது அதற்குத் தெரியும்.

இச்சமீபத்திய மருத்துவப் பாதுகாப்புச் சீர்திருத்தம் குறைந்த, நடுத்தர வருமானங்கள் உடைய தொழிலாளர்கள் மீது கூடுதலான சுமையை சுமத்துவதுடன், முதலாளிகளுக்கும் மருத்துவக் காப்பீட்டாளர்களுக்கும் நலன்களைக் கொடுக்கிறது. முதலாவதாக, சட்டப்பூர்வ மருத்துவ காப்பீட்டுத் தவணைக் கட்டணங்கள் அடுத்த ஆண்டு மொத்த ஊதியங்களில் 14.9இல் இருந்து 15.5 சதவிகிதம் என்று உயரும். ஊழியர்கள் 8. 2 சதவிகிதம் கொடுக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டிற்கு முதலாளிகளின் பங்குத்தொகை 7.3 சதவிகிதமாக முடக்கப்படுகின்றன. மேலும் வருங்காலச் செலவு அதிகரிப்புக்கள் ஊழியர்களால் மட்டுமே கொடுக்கப்படும்.

காப்புறுதிக்கு கொடுக்கும் விகித அதிகரிப்பு என்பது மொத்த மாதச் சம்பளம் 1,000 யூரோக்கள் பெறுவோருக்கு 79 யூரோக்களுக்குப் பதிலாக இனி 82 யூரோவாகும். கட்டாய சட்டபூர்வ மருத்துவக்காப்பீட்டுக் கட்டண அதிகரிப்பாக தொழிலாளர்கள் 3 யூரோக்கள் கொடுக்க வேண்டும் என்பதாகும். இதையொட்டி 2,000 அல்லது 3,000 யூரோக்கள் மொத்த ஊதியம் பெறுவோர் 6 அல்லது 9 யூரோக்கள் ஒவ்வொரு மாதமும் அதிகம் கொடுக்க வேண்டும். ஆனால் உயர்மட்ட வருமானங்கள் பெறுவோரிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. இந்தத் தரம் 3,750ல் என 3,712.50 எனத் தொடக்கத்தில் குறைக்கப்பட்டது. அதாவது அதிக ஊதியம் பெறுவோர் விகிதாசாரப்படி குறைவாக செலுத்துவர்.

மருத்துவ பாதுகாப்பின் உண்மையான செலவுகளுக்கு இந்த மேலதிக கொடுப்பனவுகள் ஈடு செய்யாது என்று கருதப்படும்போது, மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்கள் கூடுதல் செலுத்துமதிகள் எனப்படும் கட்டணங்களை வசூலிக்கும். உண்மையில் இது அனைவருக்குமான ஒரு கட்டாய கொடுப்பனவு திட்டத்தைத்தான் அறிமுகப்படுத்துகிறது; பெரும்பாலான மக்கள் அதை நிராகரிக்கின்றனர். குறைந்த பட்சம் 2005 தேர்தலில் இருந்தாவது இந்நிலை உள்ளது. அனைவருக்குமான கட்டாயக் கட்டண முறைக்கு அழைப்புவிடுவது தேர்தலில் தோல்வியை உறுதிபடுத்திவிடும்.

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விட மேலதிக காப்புறுதி ஒன்று பற்றிய திட்டம் உண்மை வருமானத்தைப் பற்றிக் கவலையின்றி ஒரு தொகை பணமாகக் கொடுக்கவேண்டியிருப்பதால், குறைந்த, நடுத்தர சம்பளம் பெறுபவர்கள் விகாதாசாரத்தில் அதிக வருமானம் உடையவர்களைவிட அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும். இயற்றப்பட்டுள்ள சட்டம் கட்டாயக் கட்டண விதி பின்னர் விரிவாக்கப்படுவதையும் அனுமதிக்கிறது. அத்தகைய மேலதிக காப்புறுதியின் உண்மையான அளவிற்கு உயர்ந்தபட்ச வரம்பு ஏதும் இருக்காது.

சில மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கனவே தாம் 2011க்கு அதிக கட்டணம் வசூலிக்க தேவை என்றும் இல்லாவிடில் 2010ல் கட்டண அதிகரிப்பு இருக்கும் என்று அறிவித்துள்ளன. 24 மில்லியன் மக்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் மருத்துவக்காப்பீட்டு நிறுவனங்களின் சங்கம் ஒன்று இதை நியாயப்படுத்தும் வகையில் அக்டோபர் இறுதியில் அரசாங்கம் முன்வைத்துள்ள மருத்துவப்பாதுகாப்பு சீர்திருத்தங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட மாறுதல்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த மாற்றங்களின்கீழ், கிட்டத்தட்ட சட்டபூர்வ மருத்துவ காப்பீட்டு முறையில் தொடர்புடைய 150,000 டாக்டர்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள 1 பில்லியன் யூரோ அதிகரிப்பையும் விடக் கூடுதலாக 120 மில்லியன் யூரோக்களைப் பெறுவர். மருத்துவமனைகள் கூடுதலாக 400 மில்லியன் யூரோக்களைப் பெறும், பல்மருத்துவர்கள் கிட்டத்தட்ட 24 மில்லியன் யூரோக்களைப் பெறுவர். இந்தக் கூடுதலான 547 மில்லியன் மருத்துவக்காப்பீட்டு நிறுவனங்களால் வசூலிக்கப்பட வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், தனிநபர் கட்டணம் செலுத்துவோர் கட்டாயக் கட்டணங்களின் மூலம் இந்த கொடுப்பனவுகளை செலுத்துவர்.

அரசாங்கத்தின் சமூக-விரோதக் கொள்கைகள் பற்றிய குறைகூறலை மழுங்கச் செய்யும் விதத்தில் சுகாதார மந்திரி பிலிப் ரோஸ்லர் (Free Democratic Party-FDP) “சமூக இழப்பீட்டுத் தொகையை” சுட்டிக்காட்டினார்; இது குறைவூதியக்காரர்களுக்கு உதவி அளிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இத்திட்டம் மிகவும் பூச்சிமெழுகியதுதான். ஏனெனில் “சராசரி கூடுதல் கொடுப்பனவு” மொத்த வருமானத்தில் 2 சதவிகிதத்திற்கும் அதிகம் என்றால், தனிநபர் வேறுபாட்டை வரிமுறைமூலம் நிதி பெறப்படவதில் இருந்து சமூக இழப்பைப் பெற்றிருப்பார். இவ்விதத்தில், சராசரிக் கூடுதல் கொடுக்குமதி 20 யூரோக்கள் என்று இருந்தால், 1,000 யூரோக்கும் குறைவாக மொத்த மாத வருமானம் பெறுபவர் இழப்பீட்டு நிதியைப் பெற்றிருப்பார்.

இங்குள்ள தந்திரம் “சராசரி” என்றும் சொல்லில் உள்ளது. காப்பீட்டுத்திட்டத்தின் தனிநபர் உறுப்பினர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு 2 சதவிகிதத்தையும் விட அதிகமாகவே இருக்கும், அவர்கள் காப்பீட்டு நிறுவனம் மற்ற நிதிகளின் மொத்த சராசரியை இட அதிகமான கொடுப்பனவை கோரினால். இதைத்தவிர, சமூக இழப்பீட்டுத்தொகைக்கு வரிமுறை மூலம் நிதி கிடைக்கும். எனவே எவ்வித அரசாங்க நிதியளிப்பைத்தான் நம்பியிருக்கவேண்டியிருக்கும்.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாற்றங்களில் அதிக திருப்தி அடைந்துள்ளனர். தனியார் மருத்துவ காப்புறுதியான PKV இன் வலைத் தளமான pkv-private-krankenversichenung.net ல் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்: “2011 குளிர்கால மருத்துவ பாதுகாப்புச் சீர்திருத்தம் தனியார் மருத்துவக்காப்பீடு என்பது தெளிவு.” உயர்ந்த வருமானம் உடையவர்கள் இப்பொழுது எளிதில் தனியார் மருத்துவக்காப்பீட்டிற்கு மாற்றிக் கொள்ள முடியும்; அதற்குத் தேவையான நிரூபணம் ஓராண்டிற்கு முன் இருந்த கட்டாயக் காப்பிட்டு வரம்பைவிட வருமானம் அதிகம் என்று காட்டுவதுதான். முன்பு, வருமானத்திற்குச் சான்று மூன்று தொடர்ச்சியான ஆண்டுகள் பற்றிக் காட்டப்படவேண்டும்; அப்பொழுதுதான் கட்டாயக் காப்பீட்டில் இருந்து விதிவிலக்கு அனுமதிக்கப்பட்டது. ஒரு நபர் தனியார் மருத்துவக்காப்பீட்டிற்கு மாற்றிக் கொள்ள முடியும். கட்டாயக் காப்பீட்டிற்காக மாதாந்த வருமான வரம்பு தற்போதைய 4,162.50 ல் இருந்து 4,125 மொத்த வருமானத்திற்கு குறைக்கப்பட்டுவிடும்.

“தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் நீண்டகால நோய்வாய்ப்படல் அல்லது முதிய நோயாளிகளை ஏற்கமாட்டார்கள் என்பதால், அல்லது கணிசமாக கூடுதல் கட்டணம் கொடுத்தால்தான் ஏற்பர்” என்று PKV வலைத்தளம் கூறுகிறது; “செலவுகளை உயர்த்தும்” போக்குடைய தனிநபர்கள் சட்டப்பூர்வ மருத்துவப்பாதுகாப்பு திட்டத்திலேயே தொடர்ந்து இருப்பர், ஆனால் “குறைந்த செலவுகளைக்” கொடுக்கும் நோயாளிகள் தனியார் மருத்துவக் காப்பீட்டிற்கு மாற்றிக் கொள்ள முடியும்-இதையொட்டி தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் “2011 மருத்துவ காப்புறுதிச் சீர்திருத்தத் திட்டத்தில் தெளிவான வெற்றி பெற்றுள்ளனர்.”

இதில் இழப்பு அடைபவர்களும் தெளிவாக அடையாளம் காணப்பட முடியும். சட்டபூர்வ மருத்துவ காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துள்ள 70 மில்லியன் பேர்தான் அவர்கள். கூட்டாட்சிக் காப்பீட்டு அலுவலகம் அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 11 பில்லியன் யூரோக்கள் பற்றாக்குறையை எதிர்பார்க்கிறது. அது பின்னர் தொழிலாளர்களிடம் இருந்து கட்டாயக் கட்டண வசூல் மூலம் ஈடுசெய்யப்பட்டுவிடும்.

ஒரு நீண்டகால முறையில், எல்லா வல்லுனர்களுமே மருத்துவப் பாதுகாப்புச் செலவுகள் உயரும், அதேபோல் கட்டாயக் கட்டணங்களும் உயரும் என்று நம்புகின்றனர். இதைத்தான் கூட்டாட்சி அரசாங்கமும் வெளிப்படையாகப் பெற முயல்கிறது. சுகாதார மந்திரி ரோஸ்லர் கடந்த வாரம் பாராளுமன்ற விவாதத்தில் கூறியது போல், “கூட்டணி திட்டமிட்ட பொருளாதாரத்தில் இருந்து விலகிக் கொள்ள விரும்புகிறது.”

முதலாளிகளாலும் ஊழியர்களாலும் சம அளவில் கொடுக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ மருத்துவ காப்பீட்டு முறையான வருமானத்தை அடித்தளமாக கொண்ட இத்திட்டம் பற்றிய இச்சட்டங்கள் உண்மையில் 19ம் நூற்றாண்டில் சான்ஸ்லர் பிஸ்மார்க் காலத்திய சமூகக் கொள்கைக்குத் திரும்புகின்றன. ரோஸ்லருக்கும் தற்பொழுதைய அரசாங்கத்திற்கும் ஒரு சோசலிச ''திட்டமிட்ட பொருளாதாரம்'' எனக்கருதப்படும் இதற்கு தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தில் இடமில்லை.

ரோஸ்லரின் சொற்கள் இந்தப் பெரும் செல்வாக்கற்ற அரசாங்கத் திட்டத்தை பெரும் முயற்சியுடன் நியாயப்படுத்துவதாக உள்ளது. ஆனால் அவர் வெற்றிபெறுவாரா என்பதில் சில சந்தேகம் உள்ளது. மீண்டும் மீண்டும் கருத்துக் கணிப்புக்கள் மக்களில் தெளிவான பெரும்பான்மையினர் தற்போதைய மருத்துவப்பாதுகாப்புச் சீர்திருத்தத்தை நிராகரிக்கின்றனர், மற்றும் அனைவருக்கும் பொதுவான கட்டண திட்டம் மற்றும் மருத்துவத்துறை சேமிப்புக்களைத் தளமாக கொண்ட முறைக்கு மாற்றும் திட்டங்களையும் எதிர்க்கின்றனர் எனக் காட்டுகின்றன. அதுவும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களை நடத்துபவர்கள் பெரும் இலாபங்கள் அடையும் வகையில் மாற்றுவதற்கு.

ஆனால் மருத்துவ சீர்திருத்தத்தை தொடர்ந்து ரோஸ்லர் இப்பொழுது கட்டாயச் சட்டபூர்வ முதியோர் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்படல் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்திருப்பது ஒரு எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். Hamburger Abendblatt ல் கடந்த வாரம் வெளியிட்ட கருத்துக்களில் அவர் இது அடுத்த ஆண்டு வருவதற்கான திட்டங்கள் உள்ளன என்று கூறியுள்ளார். இதிலும்கூட, அவர் மையத்திட்டம் பாதுகாப்புக் காப்பீட்டை அறிமுகப்படுத்துவதின் மூலம் தனியார்மயத்திற்கு ஊக்கம் தருவது என்று குறிப்பிட்டுள்ளார்: “தற்போதுள்ள காப்பீட்டுமுறைக்கு நிதியளிக்கப்பட துணையாக முதியோர் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்படல் பாதுகாப்பு காப்புறுதி திட்டம் ஒன்று வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”

இப்பொழுது நீண்டகாலப் பாதுகாப்புக் காப்பீட்டு முறைக்கு பணம் கொடுப்பவர்கள் “தங்களுக்காக பணத்தைச் சேமிக்கவில்லை, ஆனால் தற்பொழுது நலம் பெற்றுவரும் தலைமுறைக்காகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.” என்று ரோஸ்லர் புகார் கூறியுள்ளார். இந்த இடைத்-தலைமுறைகளுக்கான சமூகக் காப்பீட்டிற்கு நிதி அளிப்பது-ஓய்வூதியத் திட்டமும் அதே கொள்கையில் அடிப்படையில்தான் செயல்படுகிறது-ரோஸ்லருக்கு ஒரு முள்தைப்பது போல் உள்ளது. சமூகத்தை சமூகப்பாதுகாப்புத் துறையிலும் ஆழ்த்துவதற்குத்தான் அவர் விருப்பம் கொண்டுள்ளார்-இதற்காக அவர் “திட்டமிட்ட பொருளாதாரத்தை” எதிர்த்து, தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு புதிய இலாப ஆதாரங்களை திறந்துவிட முயற்சிக்கிறார்.