சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

An additional comment on Inside Job, the documentary about the financial meltdown

நிதியியல் நிலைமுறிவைக் குறித்த ஆவணப்படமான Inside Job மீது மேலும் ஒரு கருத்துரை

Alan Whyte
11 November 2010

Use this version to print | Send feedback

2008 நிதியியல் முறிவைக் குறித்த ஆவணப்படமான சார்லஸ் பெர்குசனின் Inside Job திரைப்படத்தை நான் சமீபத்தில் பார்த்தேன். ஜோஆன் லோறியரின் விமர்சனம் மிகச் சரியாக படத்தின் பலங்களையும், குறைகளையும் விளக்குகிறது என்றே நான் கருதுகிறேன்.   

முக்கியமான "உரையாற்றும் பிரபலங்களின்" நேர்காணல்களுடனும், பல்வேறு காங்கிரஸ் விவாதக் காட்சிகளுடனும் —சில முக்கிய புள்ளிவிபரங்களை விளக்கப்படங்களின் உதவியுடன் விளக்கும் காட்சிகளுடனும்— இப்படம் தற்போதைய பொருளாதார நிலைமுறிவு எவ்வாறு ஏற்பட்டது என்பதை ஆராய்கிறது

பெருவியாபாரங்களுடன் வெளிப்படையாக அறிவுஜீவித்தனமான விபச்சாரத்தில் ஈடுபட்டதைத் தவிர வேறு ஒன்றையும் செய்திராத கல்விதுறை பிரமுகர்களுக்கும், வரவிருந்த நிதியியல் பேராபாயத்தைக் குறித்து எச்சரித்த பொருளாதார நிபுணர்களுக்கும் இடையிலான முரண்பாட்டில் இத்திரைப்படம் திட்டமிட்டே கவனம் செலுத்துவதால், இந்த நேர்காணல்கள் பெரும் உணர்வுப்பூர்வமான முறையீட்டைச் செய்கின்றன.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நலன்களுக்காக நெறிமுறைகளைத் தளர்த்துவதில் முக்கிய ஆதரவாளராக இருந்த, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இளங்கலை வணிக பயிலகத்தின் தற்போதைய தலைவர் கிளென் ஹுப்பர்ட்டின் ஒரு முக்கிய நேர்காணல் Inside Job படத்தில் இடம்பெற்றிருப்பதை திருமதி. லோறியர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அந்த சந்திப்பு ஹூப்பர்ட்டினாலேயே சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது. கேள்விகள் கடுமையான போது, அந்த நேர்காணலுக்கு அனுமதி அளித்ததன் மூலம் தான் ஒரு தவறைச் செய்துவிட்டதாக வெளிப்படையாகவே அவரே எரிச்சல்படுகிறார். மேலும் தாம் அவர்களை அலுவலகத்தை விட்டு விரட்டுவதற்கு முன்னால் மூன்றே மூன்று நிமிடங்கள் அளிப்பதாக அவர் திரைப்படத்துறையினரிடம் கூறுகிறார். அளிக்கப்பட்டிருக்கும் அந்த நேரத்திற்குள் நேர்காணல் செய்பவர் அவருடைய முக்கிய கேள்வியைக் கேட்டுக் கொள்ளுமாறு அவர் கோபத்தின் உச்சியிலிருந்து அறிவிக்கிறார்.

எவ்வாறிருப்பினும், ஏதோவொரு பெரும் தவறு நடந்துவிட்டது; அதை நாம் சரிசெய்தாக வேண்டும் என்று கதையாசிரியர் மட் டேமன் இறுதியில் கூறும்போது, படத்தின் பலவீனம் முற்றிலுமாக வெளிப்படுகிறது.  

ஆனால், 'எது தவறாக போனது?', அதாவது இந்த பெரும் அமைப்புரீதியிலான பொருளாதார நிலைமுறிவு ஏன் நிகழ்ந்தது? என்ற முக்கியமான கேள்வி பதிலளிக்கப்படாமலேயே இருக்கிறது. நிதியியல் நெறிமுறைகளில் இருந்த குளறுபடி அல்லது அவை தளர்த்தப்பட்டது தான் பிரச்சினைக்குக் காரணம்; நெறிமுறைகள் தளர்த்தப்படாமல் இருந்திருந்தால் தற்போதைய நெருக்கடி ஒருபோதும் நிகழ்ந்திருக்காது என்பதே படத்தின் அடிப்படை கருத்தாக இருக்கிறது. பொருளாதாரத்தை மறு-சீரமைப்பு செய்வதே அரசாங்கத்திற்கு முன்னிருக்கும் வெளிப்படையான தீர்வு என்பதையே இந்த கருத்து பின்தொடர்கிறது.

இப்படத்தில் பேட்டி அளித்திருந்த நிதியியல் துறை விமர்சகர்களும் ஏனைய பலரும், முதலாளித்துவம் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள நெறிமுறையைச் சீர்படுத்துவது தான் தீர்வு என்று குறிப்பிடுகிறார்கள். சந்தை தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே எல்லா மனிதர்களுக்கும் பலனளிக்கும் வகையில் அது செயல்பட முடியும் என்று சிலசமயம் மறைமுகமாகவும், சிலசமயம் வெளிப்படையாகவும் குறிப்பிடப்படும் ஊகத்தின்கீழ் அவர்கள் வேலை செய்கிறார்கள். எவ்வாறிருப்பினும், உண்மையில், 'கட்டுப்பாடற்ற சந்தை' முதலாளித்துவ உயர்தட்டின் நலன்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது என்பதுடன் இது அமைப்புமுறையின் இயல்பிலேயே வேரூன்றியுள்ளது.

இதே கண்ணோட்டத்தை கொண்டவர்களும், திரைப்படத்தில் நேர்காணல் செய்யப்பட்டவர்களுமான  நூரியல் ரூபினி மற்றும் ரகுராம் ஜி. ராஜன் ஆகிய இருவருவரின் சில எழுத்துக்களைப் பார்ப்பதும் மதிப்புடையதாக இருக்கக்கூடும்.

ஸ்டீபன் மிஹ்முடன் இணைந்து எழுதப்பட்ட Crisis Economics (2010) எனும் ரூபினியின் புத்தகத்தில் அதன் ஆசிரியர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள்: “அரசாங்க தயவிற்குத் தங்களின் வாழ்நாள் முழுவதும் அவை கடன்பட்டிருக்கின்றன என்றபோதினும், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வங்கிகள் அதிகபட்ச போனஸ்களை வழங்கி வருகின்றன. மிகவும் துரதிருஷ்டவசமாக... இது சீர்திருத்தத்தின் தேவையைக் குறைக்கிறது என்பதும் உண்மை தான்.” (பக்கம் 183)      

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதர வல்லுனரான ராஜன்—Inside Job குறிப்பிடுவதைப் போல2005இல் எழுதிய ஓர் அறிக்கையின் மூலம் நெருக்கடியை முன்கணித்த தனிநபர்களில் ஒருவராக இருக்கிறார். Fault Lines (2010) என்ற தலைப்பிலான அவருடைய சமீபத்திய புத்தகத்தில் அவர் எழுதுகிறார், “முன்கணிப்பை ஆராயந்து கொண்டிருப்பதற்கு மாறாக, இந்த நெருக்கடியை நாம் சீர்திருத்தத்திற்கான ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.” (பக்கம். 155)  

Inside Job படத்தில் நேர்காணல் செய்யப்படாதவராக இருந்தாலும் கூட, பொருளாதாரத்தில் நோபல் விருது பெற்றவரான ஜோசப் ஷிடிக்லிட்ஜ் அவருடைய Free Fall (2010) எனும் சமீபத்திய புத்தகத்தில், இதே கண்ணோட்டத்தைப் பின்வரும் பத்தியில் தொகுத்தளிப்பதாக இருக்கிறது:    

“1945 முதல் 1971 வரையிலான கால் நூற்றாண்டில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கூட, அது விதிவிலக்காக இருந்தது. 1962 இல் பிரேசிலில் நிகழ்ந்த வங்கி நெருக்கடி தவிர உலகில் வேறு எங்கும் வங்கியியல் நெருக்கடி ஏற்படவில்லை. இந்த காலக்கட்டத்திற்கு முன்பும், பின்னரும் பொருளாதார வாழ்க்கையின் ஒரு முறைப்பட்ட தன்மை இருந்தது. இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இருந்த அந்த கால் நூற்றாண்டு ஏன் நெருக்கடியில் இருந்து விடுபட்டு இருந்தது என்பதற்கு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வர்டோன் பயிலகத்தின் பிரான்க்ளி ஆலனும், நியூயோர்க் பல்கலைக் கழகத்தின் டக்ளஸ் கேலும் ஒரு விளக்கத்தை அளிக்கிறார்கள். அதாவது: முறையாக நெறிமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகம் உணர்ந்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட உயர் வளர்ச்சி விகிதத்திற்கு இந்த ஸ்திரப்பாடும் ஒரு காரணியாக இருந்திருக்கக்கூடும். அரசாங்க தலையீடு இன்னும் ஸ்திரமான பொருளாதாரத்தை ஏற்படுத்தி இருந்தது—அத்துடன் அந்த சகாப்தத்தில் நிலவிய பெரும் சமத்துவத்திலும் மற்றும் விரைவான வளர்ச்சியிலும் கூட இது பங்களிப்பை அளித்திருக்கக்கூடும்.” (பக்கம் 240) 

1971 இல் என்ன நடந்தது என்பது குறித்து ஸ்டிக்லிட்ஜ் அவருடைய புத்தகத்தில் ஒன்றும் குறிப்பிடவில்லை என்பதை இந்த பத்தி வெளிச்சமிட்டு காட்டுகிறது. யுத்தத்திற்குப் பிந்தைய பொருளாதார அமைப்புமுறையில் உருவான, 1944 இன் பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையை அந்த ஆண்டின் (1971) ஆகஸ்டில் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் முறித்தார். அன்னிய நாடுகளிடம் இருந்த அமெரிக்க செலாவணியைக் கொண்டு தங்க பரிவர்த்தனை தொடராமல் இருப்பதைத் தடுக்க, முக்கியமாக தங்கத்தைத் தாங்கி நிற்பதிலிருந்து அமெரிக்க டாலரை விலக்கி வைக்க, நிக்சன் நிர்வாகம் இவ்வாறு செய்தது. அதேசமயம் இந்த நடவடிக்கை நாடுகளுக்கு இடையிலான ஒரே செலாவணி பரிவர்த்தனைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.  

1971 இல் எடுக்கப்பட்ட இந்த படுபாதாளமான முடிவு, நிக்சனின் மீது திணிக்கப்பட்டிருந்தது. இது தேவையான அளவிற்குத் தங்கத்தைத் தாங்கிப்பிடிப்பதோடு இணைந்து நிற்காமல், யுத்தத்திற்குப் பின்னர் டாலர்களை அச்சிடுவதற்கான ஒரு விளைவை ஏற்படுத்தியது. அத்துடன் இது ஊக மூலதன வடிவத்தின் வளர்ச்சியில் வேரூன்றி இருந்த அமெரிக்க பொருளாதாரத்தின் விரிவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. தங்கள் வசமிருந்த டாலர்களுக்கு இணையாக தங்கத்தை பெற விரும்பிய நாடுகளின் கோரிக்கையை பூர்த்தி செய்ய Fort Knox இல் போதிய தங்கக்கட்டிகள் இல்லாத நிலைமை, ஆகஸ்ட் 1971 இல் ஏற்பட்டிருந்தது.  

விளைபொருட்களின் உயர்வு, பெரும் பொருளாதார நெருக்கடிகள், தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பிரமிப்பூட்டும் உயர்வு (அல்லது அமெரிக்க டாலர் மதிப்பின் வீழ்ச்சி), உழைக்கும் மக்களின் உண்மையான சம்பளத்தில் தொடர்ச்சியான குறைப்பு மற்றும் அதிகரித்து வந்த பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றை 1971க்கு பின்னர் தொடர்ந்து வந்த காலக்கட்டம் சந்தித்தது வெறும் ஒரு விபத்து அல்ல.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நெறிமுறைகளைத் தளர்த்தியது தற்போதைய நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. அதற்கு முற்றிலும் முரணாக—முதலாளித்துவத்திற்கு உள்ளேயே இருக்கும் புறநிலை பொருளாதார முரண்பாடுகளே, உழைக்கும் மக்களை விலையாக கொடுத்து நிதியியல் முதலாளித்துவத்தின் சக்தியை அதிகரித்துக் கொள்வதற்காக, ஆளும் உயர்தட்டால் நெறிமுறையைத் தளர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், அது குறித்த உணர்வையும் உருவாக்கியது.