சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

NATO summit reveals cracks in Atlantic Alliance

நேட்டோ உச்சிமாநாடு அட்லான்டிக் உடன்பாட்டில் விரிசல்களை வெளிப்படுத்துகிறது

By Peter Schwarz
22 November 2010

Use this version to print | Send feedback

நவம்பர் 20 அன்று லிஸ்பனில் நேட்டோ ஒரு புதிய மூலோபாயக் கருத்தை ஏற்றது. இது அதன் 61 ஆண்டுகால இராணுவ உடன்பாட்டில் ஏழாவதும், 1999ல் இருந்து முதலாவதும் ஆகும்.

உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பல மாதங்கள் தயாரிப்புக்களும், விவாதங்களும் இருந்தன. முன்னாள் அமெரிக்க வெளிவிவகார செயலர் மாடலீன் ஆல்பிரைட் தலைமையில் ஒரு வல்லுனர்கள் குழு மே மாதமே புதிய மூலோபாயத்திற்கான பரிந்துரைகளை வெளியிட்டிருந்தது.

ஒரு நீடித்த இழுபறிக்குப் பின்னர் மூலோபாயக் கருத்து இப்பொழுது ஏற்கப்பட்டு, லிஸ்பனில் பகிரங்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உச்சிமாநாட்டில் கலந்து கொள்பவர்கள் அதை வரலாற்றுத் தன்மை நிறைந்தது என்று கொண்டாடியுள்ளனர். ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் கூறினார்: “இந்த உச்சி மாநாடு வரலாற்றில் இடம் பெறும். மூலோபாய அணுகுமுறை தெளிவாக உள்ளது, நாம் அனைவரும் ஒரு நிலைப்பாட்டில் இருந்துதான் பணிபுரிகிறோம் என்பதைக் காட்டுகிறது.”

உண்மையில் இந்த 11 பக்க ஆவணம் உலகின் மிகப் பெரிய இராணுவ உடன்பாட்டில் 28 உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல்களை ஓரளவிற்குத்தான்  மூடிமறைக்க முடிந்துள்ளது. பல மாறுபட்ட நலன்களுக்கு இடையே ஒரு சொல்லளவு சமரசத்தைத்தான் இது கொண்டுள்ளது. கடைசி நிமிடத்தில்தான் பல கருத்துக்கள் பற்றி வெவ்வேறு பிரிவுகள் உடன்பட முடிந்தது.

இராணுவம் இன்னும் மிக முக்கியமான பங்கை அரசியல், சமூக வாழ்வில் கொள்ள வேண்டும் என்பதுதான் உச்சிமாநாட்டின் ஒருமனதான முடிவு ஆகும். மரபார்ந்த, மற்றும் அணுவாயுதங்கள் என்ற முறையில் கூட்டுப் பாதுகாப்பைத் தவிர, புதிய மூலோபாயம் பலவிதங்களில் சர்வதேச தலையீடுகளை, நேட்டோ ஏற்கனவே முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடத்தியது போலவும், இப்பொழுது ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கக் கொம்பு மற்றும் உலகின் பிற இடங்களில் நடத்துவது போலவும் செயல்படுத்த அனுமதிக்கிறது.

பல்வேறுவகைப்பட்ட காரணங்களின் மூலோபாயக் கருத்தின் பட்டியலானது எதிர்காலத்தில் யுத்தத்திற்கான ஒரு பொய்க் காரணத்தை கொடுக்க நேட்டோவிற்கு சேவை செய்யும். அவைகளாக இருப்பன, பலிஸ்டிக் ஏவுகணைகளின் பெருக்கம், அணுவாயுதப் பெருக்கம் மற்றும் மக்கள்திரளை அழிக்கும் மற்றய ஆயுதங்களின் பெருக்கம்,’ ‘உறுதிப்பாடின்மை, அதிதீவிரவாத, தீவிரவாதம் மற்றும் பன்னாட்டு சட்டவிரோத செயற்பாடுகளின் வளர்ச்சி அதாவது ஆயுத, போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல்கள், மேலும் முக்கிய தகவல்தொடர்பு, போக்குவரத்து, சர்வதேச வர்த்தக மாற்றுப் பாதைகள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தங்கியிருக்கும் வளங்களை சீர்குலைத்தல் மற்றும் தாக்குதல் நடத்துதல்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலும்கூட இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். “முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் ஆதாரத் தடைகள், சுகாதார இடர்கள், காலநிலை மாற்றங்கள், தணிணீர்த் தட்டுப்பாடு மற்றும் பெருகிய எரிசக்தித் தேவைகள் போன்றவை நேட்டோவிற்கு அக்கறையுள்ள இடங்களின் வருங்காலப் பாதுகாப்புச் சூழ்நிலையை மேலும் உருவாக்கும், இவை நேட்டோவின் திட்டமிடுதல், செயற்பாடுகள் ஆகியவற்றைக் கணிசமாகப் பாதிக்கும் திறன் உடையவை என்று ஆவணம் கூறுகிறது.

முன்பு பொதுவாக இராணுவத்தின் பிடிகளுக்கு பெரும்பாலும் முற்றிலும் அப்பால் இருந்த புதிய பகுதிகளிலும் நேட்டோ தீவிரமாகச் செயல்படும். இவற்றுள் சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் திறன், அவற்றைக் கண்டுபிடித்து அவற்றிற்கு எதிராகக் பாதுகாத்தல், தகவல்களை மீட்டல் ஆகிய திறன்கள் அடங்கும் என்பதுடன் வெளிப்பட்டுவரும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களின் பாதிப்புக்களும் மதிப்பீடு செய்யப்படும்.”

தொடர்பாடல் துறையில் முக்கிய வழிவகைகளான இணையம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவையும் இராணுவத்தின் நேரடிச் செல்வாக்கு, கட்டுப்பாட்டின்கீழ் இதேபோல் கொண்டுவரப்படும். இவற்றின் விளைவு ஜனநாயக உரிமைகளை அரித்தல், இராணுவம் உள்நாட்டு அரசியலில் ஈடுபடுதல், இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறைகளை இணைத்தல் என இருக்கும்.

லிஸ்பன் உச்சிமாநாட்டில் பங்கு பெற்ற நாடுகள் பொதுவாக இராணுவத்தின் பெருகும் பங்கு பற்றி உடன்பட்டாலும், உடன்பாட்டின் மூலோபாயத் தடை பற்றி கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவை கணிசமான இடரில்தான் மறைக்கப்பட்டன. குறிப்பாக ஷ்யாவிடம் அணுகுமுறை பற்றி ஆழ்ந்த வேறுபாடுகள் உள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளானது வார்சோ உடன்பாடு, சோவியத் ஒன்றியம் ஆகியவை சரிந்தபின் அட்லான்டிக் உடன்பாட்டில் சேர்ந்தவை, ஷ்யாவிற்கு எதிராக பிரதேசப் பாதுகாப்பு உடன்பாடாக நேட்டோ இருக்க வேண்டிய பங்கைப் பற்றி வலியுறுத்தியுள்ளன. ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவம் வலுவாக நிலை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஜேர்மனி அல்லது பிரான்ஸுக்கும் ஷ்யாவிற்கும் இடையே ஒருவேளை நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டால் அதற்கு எதிரான பாதுகாப்பு இதுதான் என அவை கருதுகின்றன.

ஆனால் கிழக்கு ஐரோப்பாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளைக் கொண்டு, ஷ்யாவிடம் எரிசக்தி வழங்குதலுக்கு நம்பியிருக்கும் ஜேர்மனி நேட்டோவிற்கும் ஷ்யாவிற்கும் இடையே நல்ல உறவுகள் வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது. உலகின் இரு பெரிய அணுவாயுத நாடுகளுக்கு நடுவே மீண்டும் சிக்கிக் கொள்வதை அது தவிர்க்க விரும்புகிறது. பனிப் போர்க்காலத்தில் அதனுடைய வலுவின் அளவு வெளி நடவடிக்கைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் வாஷிங்டன் ஷ்யாவை பெரும் அழுத்தத்தில் ஆழ்த்தியது. இது நேட்டோவை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தியது, அதற்காக ஒரு ஏவுகணைக் கேடயத்தை கட்டமைப்பதற்குத் திட்டமிட்டது, மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் வண்ணப் புரட்சிகள் என்று அழைக்கப்பட்டவற்றிற்கு ஆதரவைக் கொடுத்தது. “பழைய”, “புதிய ஐரோப்பாவிற்கு இடையே இருந்த முரண்பாடுகளை அமெரிக்கா தன் நிலையை ஐரோப்பாவில் வலுப்படுத்தப் பயன்படுத்திக் கொண்டது. உக்ரைன் மற்றும் ஜோர்ஜியாவை நேட்டோவிற்குள் சேர்ப்பது என்பது மாஸ்கோவின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. 2008ம் ஆண்டு ஜோர்ஜியாவில் ஷ்யாவிற்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையேயான ஆயுதமேந்திய மோதல் மிகக் குறுகிய விதத்தில்தான் தவிர்க்கப்பட்டது.

ஒபாமாவின்கீழ் ஷ்யாவும் அமெரிக்காவும் மீண்டும் ஒருமித்து உள்ளன. முதலில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஷ்யாவின் ஆதரவை விரும்புகிறது. ஓரளவிற்கு சீனாவுடன் மோதலில் அதிக கவனம் செலுத்துவதால் பெய்ஜிங் பக்கம் சாயாமல் இருக்கவும் ஷ்யா விரும்புகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒபாமாவும் ஷ் ஜனாதிபதி மெட்வெடேவும் START என்னும் புதிய உடன்பாட்டில் கையெழுத்திட்டு மூலோபாய அணுசக்தி ஆயுதங்களை வரம்பிற்குள் கொண்டுவருகின்றன.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு சலுகை என்னும் முறையில், புதிய நேட்டோ மூலோபாயம் வட அட்லான்டிக் உடன்பாட்டின் 5வது விதியின் கீழ் கூட்டுப் பாதுகாப்பு பற்றித் தெளிவான உறுதியை அளிக்கிறது. 5வது விதி அனைத்து நேட்டோ நாடுகளும் ஒரு நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தப்பட்டால் மற்ற உறுப்பு நாடுகள் இராணுவ உதவியை அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தைக் கொடுத்துள்ளது.

உதாரணமாக, ஷ்யாவிற்கும் நேட்டோவில் இருக்கும் பால்டிக் உறுப்பு நாடுகள் எதற்கேனும் மோதல் வந்தால், இனவழிச் சிறுபான்மை பற்றிய தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்தால், நேட்டோ ஷ்யாவிற்கு எதிராக இராணுவரீதியாகத் தலையிடும்  கட்டாயத்தில் உள்ளது. நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் எல்லையில் இருக்கும் மோல்டோவா, அதன் பிரிவினை மாநிலம் டிரான்ஸ்நிஸ்ட்ரியா ஷ்யா இராணுவப் பாதுகாப்பின்கீழ் இருக்கும் நிலையில், மோதலுக்கான மற்றொரு ஆதாரமாக அமையலாம்.

புதிய மூலோபாயம் உக்ரைன் மற்றும் ஜோர்ஜியா ஆகியவை நேட்டோவில் சேரக்கூடிய வாய்ப்பையும் காட்டுகிறது. “அனைத்து ஐரோப்பிய ஜனநாயக நாடுகளும், நேட்டோவின் தரங்களைக் கொண்டவற்றிற்கு உடன்பாட்டில் உறுப்பினர் தன்மைக்கான கதவு திறந்தே இருக்கும் என்று அது வலியுறுத்தியுள்ளது. அதன் நோக்கம் உக்ரைன் மற்றும் ஜோர்ஜியாவுடன் பங்காளித்தனங்களைத் தொடர்ந்து, வளர்ப்பதும் ஆகும் என்றும் கூறியுள்ளது.

விவாதத்திற்குரிய ஏவுகணைப் பாதுகாப்புக் கேடயம் கூட 2020ல் கட்டப்படவுள்ளதுபுஷ் திட்டமிட்டபடி ஒரு அமெரிக்கத் திட்டம் என்று இல்லாமல் ஒரு நேட்டோ கட்டமைப்பாக. மூலோபாயக் கருத்து ஒரு ஏவுகணைத் தாக்குதல் ஆபத்தை எந்த நாடு கொடுக்கும் என்ற வினாவை எழுப்பவில்லை. ஏனெனில் ஈரானைப் பெயரிடக்கூடாது என்று துருக்கி வலுவாக வற்புறுத்தியுள்ளது.

ஷ்யாவிற்கு உறுதியளிக்கும் வகையில் மாஸ்கோவும் ஏவுகணைப் பாதுகாப்புக் கேடயத்தில் சேருமாறு அழைக்கப்பட்டுள்ளது. ஷ் ஜனாதிபதி ட்மிட்ரி மெட்வெடேவ் லிஸ்பனுக்கு வந்து, இதற்கு நேரிய வகையில் வரவேற்பு கொடுத்துள்ளார். சில தகவல்களின்படி அவர் நேட்டோவிற்கு ஆப்கானிஸ்தானிற்குச் செல்லவேண்டிய இராணுவத் தளவாடங்களுக்காக கூடுதலான  ஷ் போக்குவரத்தை அணுகும் சலுகையைக் கொடுத்துள்ளார்.

குறிப்பாக ஜேர்மனியில் இந்த ஷ்யாவுடனான ஒத்துழைப்பு வரலாற்றுத் திருப்புமுனை என்று கொண்டாடப்பட்டது. “நேட்டோவின் தலைமைச் செயலர் Rasmussen இதை ஒரு முன்னோடியில்லாத நடவடிக்கை என்று விவரித்தார். “வரலாற்றில் முதல் தடவையாக நேட்டோ நாடுகளும் ஷ்யாவும் தங்கள் பாதுகாப்பில் ஒத்துழைத்துக் கொண்டிருக்கின்றன என்று அவர் கூறினார்.

உண்மையில் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஷ் ஜனாதிபதியே உறுதியாக எதையும் கூறவில்லை. இன்னும் கூடுதலான பேச்சுக்களுக்குத் தான் தயார் என்று கூறிய அவர் எச்சரிக்கையும் கொடுத்தார்: “நாங்கள் ஒரு சமமான தன்மையில்தான் தொடர்பு கொள்ளுவோம், இல்லாவிடில் இதில் பங்கு பெறமாட்டோம்.” மேலும் ஷ்யாவிலுள்ள அரசியல், இராணுவ உயரடுக்குகளில் பல பிரிவுகள், பிரதம மந்திரி விளாடிமிர் புட்டின் உட்பட, நேட்டோவின் ஒத்துழைப்பு பற்றி அவநம்பிக்கைத்தன்மைதான் கொண்டுள்ளனர்.

சமீபத்திய அமெரிக்கத் தேர்தல்களை அடுத்து, ஷ்யாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பு என்னும் கருத்திற்கு எதிரானவர்கள் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளனர். ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட  START க்கு காங்கிரஸ் ஒப்புதல் கொடுக்குமா என்பது கேள்விக்கு உரியதுதான். ஜேர்மனியிலும் இது கவலையை எழுப்பியுள்ளது.

ஆயுதம் களைதலுக்கு உதட்டளவு ஆதரவு கொடுத்தாலும், புதிய நேட்டோ மூலோபாயம் அணுசக்கித் தடுப்பு முறையில் உறுதியாக உள்ளது. நேட்டோ அணுவாயுதங்கள் இல்லா உலகத்திற்கான சூழ்நிலையை உருவாக்குதலை நோக்கமாகக் கொண்டு தொடர்கிறது.” என்று அது தொடங்கினாலும், அடுத்த சொற்றொடரில், “உலகில் அணுவாயுதங்கள் இருக்கும் வரை, நேட்டோவும் ஒரு அணுவாயுத சக்தியாகத்தான் இருக்கும் என்று கூறுகிறது.

அணுவாயுதம் இல்லாத உலகத்திற்கு உறுதி என்பது ஜேர்மனியின் வலியுறுத்தலின் பேரில் சேர்க்கப்பட்டது. அணுவாயுதம் இல்லாத நாடு என்னும் முறையில் அது ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க அணுவாயுதங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அப்பொழுதுதான் அது அமெரிக்காவின் மீது கொண்டுள்ள இராணுவரீதியான நம்பியிருக்கும் நிலை குறையும்.

ஆனால் தன்னுடைய சொந்த அணுவாயுதங்களைக் கொண்டுள்ள பிரான்ஸ் அதைக் கைவிட மறுக்கிறது. தன்னுடைய அணுவாயுதத் திறனை அது வலுவானசக்தி, ஐரோப்பாவில் தன்னுடைய அதிகார  நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவது என்று கருதுகிறது. நேட்டோ இது பற்றி ஏதும் கூறக்கூடாது என்றும் சொல்லுகிறது. குறிப்பாக ஐரோப்பிய ஏவுகணைத் தடுப்புக் கேடயம் அணுவாயுதத் தடுப்பு முறைக்கு மாற்றீடு என்று விவரிக்கப்படுவதை பிரான்ஸ் எதிர்க்கிறது. ஜேர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையே உள்ள மோதல் ஜனாதிபதி சார்க்கோசி மற்றும் சான்ஸ்லர் மேர்க்கெல் உச்சிமாநாட்டு நேரத்தில் பேசியபோது தீர்க்கப்பட்டது.