சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Striking Detroit Symphony musicians continue efforts to win public support

போராடிவரும் டெட்ராய்ட் சிம்பொனி இசைக்கலைஞர்கள் பொதுமக்களின் ஆதரவைப் பெற தொடர்ந்து முயல்கிறார்கள்

By Shannon Jones
23 November 2010

Use this version to print | Send feedback

அக்டோபர் 4 இல் இருந்து போராடிவரும், டெட்ராய்ட் சிம்பொனி இசைக்கலைஞர்கள் புளும்பீல்ட் ஹில்ஷில் உள்ள Temple Beth EI இல் உற்சாகம் மிக்க பார்வையாளர்கள் முன்னிலையில் நவம்பர் 21 அன்று ஓர் இசைநிகழ்ச்சியை நடத்தினர். தற்போது எட்டாவது வாரத்திற்கு வந்திருக்கும் அவர்களின் வெளிநடப்புகளில், இது DSO இசைக்கலைஞர்களால் ஆதரவுகோரி நடத்தப்பட்ட நான்காவது இசை நிகழ்ச்சியாக இருந்தது.The performance at Beth El Temple [Photo: Hart Hollman]

மொசார்ட் மற்றும் செக்கோவ்ஸ்க்யின் தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்குறிப்புகளை கொண்ட அந்த இசைநிகழ்ச்சிக்கு, இஸ்ரேலில் பிறந்தவரான யுரேல் சேகல் இசைக்குழு வழிநடத்தும் விருந்தினராக இருந்து தலைமை தாங்கினார். யுரேல் சேகல் தற்போது இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஜேக்கப்ஸ் ஸ்கூல் ஆப் மியூசிக்கில் இருக்கிறார். அவருடைய பல சாதனைகளுக்கு மத்தியில், நியூயோர்க்கில் நடந்த பிரபலமான chautauqua விழாவின் இசை இயக்குனராகவும் சேகல் பணியாற்றினார். மேலும் அவரே நிறுவிய மற்றும் எட்டு ஆண்டுகள் அவர் தலைமையேற்று நடத்திய ஓர் இசைக்குழுவான ஜப்பானின் ஒசாக்காவிலுள்ள சென்சூரி ஆர்கெஸ்ட்ராவில் மதிப்பார்ந்த இசைக்குழு வழிநடத்துனராகவும் அவர் இருக்கிறார்.

ஒபோய், ஹார்ன், கிளாரினெட், பாஸ்சூன் ஆகிய இசைக்கருவிகளைக் கொண்டு மொசாட்டின் சின்போர்னியா இசைக்குறிப்புகளைத் தனித்து வாசிக்கும் டொனால்டு பேகர், கார்ல் பிடூச், தியோடர் ஓயென் மற்றும் இராபர்ட் வில்லியம் ஆகியோர் முறையே சிறந்த இசையை வெளிப்படுத்தினார்கள். இசைக்குழு E Flat Major இசைக்குறிப்புகளை அற்புதமாக வாசித்தது. நிகழ்வின் இரண்டாவது பாதியில் செக்கோவ்ஸ்க்யின் சிம்பொனி எண் 5 சிறப்பாக வாசிக்கப்பட்டது.

இசைநிகழ்ச்சியை தொடர்ந்து சேகல் பார்வையாளர்களிடையே உரை நிகழ்த்தினார். இதுபோன்ற அற்புதமான ஓர் இசைக்குழுவிற்கு தலைமையேற்க வாய்ப்பு கிடைத்ததை, தமக்கு கிடைத்த கௌரவமாக உணர்வதாக கூறிய அவர், DSO இசைக்கலைஞர்களின் தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்குத் தம்முடைய ஆதரவையும் தெரிவித்தார்.

 

Guest conductor Uriel Segal

DSO இசைக்கலைஞர்கள் அடுத்த மாதம் ஆதரவு கோருவதற்கான மேலும் மூன்று இசைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்கள்: புளும்பீல்ட் ஹில்ஷில் டிசம்பர் 3ஆம் தேதியும், வாரெனில் டிசம்பர் 12ஆம் தேதியும், ரோசெஸ்டர் ஹில்ஸில் டிசம்பர் 14ஆம் தேதியும் அவை நடைபெற உள்ளன. டெட்ராய்டின் வேய்ன் மாகாண பல்கலைக்கழகத்தின் இசை ஆய்வுத்துறையின் இயக்குனர் மேஸ்ட்ரோ கிய்ப்ரோஸ் மர்கொவ் அந்த மூன்று நிகழ்வுகளையும் நடத்த உள்ளார். முந்தைய அனைத்து இசைநிகழ்ச்சிகளையும் போன்றே, இவற்றிலும் அரங்க உதவியாளர்கள் அவர்களின் சேவைகளை அளிக்க இருக்கிறார்கள்.

ஒரு முன்னணி இசைக்குழுவான DSOஐ அழிக்கக்கூடிய டெட்ராய்டில் உள்ள முரண்பாடு பெரும் மானியக் கோரிக்கைகளை உட்கொண்டிருக்கின்றன. முப்பத்திமூன்று சதவீத சம்பள குறைப்பு, மருத்துவம், ஓய்வூதியம் மற்றும் ஏனைய நலன்களில் குறைப்பு ஆகியவற்றுடன் புதிதாக சேரும் இசைக்கருவி வாசிப்பாளர்களுக்கு 42 சதவீத ஊதியக்குறைப்பு ஆகியவற்றை நிர்வாகம் திணிக்க விரும்புகிறது. இசைக்குழு உறுப்பினர்கள் இசை-வாசிப்பிற்கு அப்பாற்பட்டு வேறு அனைத்து விதமான வேலைகளையும் எவ்வித கூடுதல் பலனையும் எதிர்பார்க்காமல் செய்யக்கோரும் வகையில் வேலை விதிகளில் பெரும் மாற்றங்களைச் செய்யவும் நிர்வாகம் விரும்புகிறது.

இசைக்கலைஞர்கள் மற்றும் இசைவாசிப்பாளர்கள் சங்கங்களின் அமெரிக்க கூட்டமைப்பு அதன் பங்கிற்கு, மூன்றாம் ஆண்டில் பகுதியாக மீளமைவு செய்யப்பட்ட நிலையில், 22 சதவீத அதன் சொந்த ஊதிய வெட்டை அளித்து கொண்டிருக்கிறது.

நவம்பர் 15இல், DSOஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Vienna Boys பாடகர் குழுவை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சியில், போராடிவரும் இசைக்கலைஞர்கள் ஒரு தைரியமான ஆர்பாட்டத்தை நடத்தினர். நிர்வாகத்திற்கும் இசைக்கருவி வாசிப்பாளர்களுக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடந்த ஒரு கூட்டம் ஒன்பது மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், நிர்வாகம் அதன் முறையீடுகளில் எந்த மாற்றத்தையும் செய்யாததால், முறிந்து போனது. உத்தியோகபூர்வமற்ற கூட்டங்கள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலுக்கு எதிராக அவற்றை பாதுகாப்பதற்கான ஒரு பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தங்களின் போராட்டத்தைப் பார்ப்பதாக பல DSO இசைக்கலைஞர்கள் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இவர்களின் தைரியமான நிலைப்பாடு அமெரிக்காவில் உள்ள ஏனைய கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் ஈர்த்துள்ளது. நிர்வாகத்தின் வெறும் குறுகிய-புத்தியோ அல்லது அலட்சியமோ மட்டும் இந்த வேலைநிறுத்தத்தில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. மாறாக கலையை பெறுநிறுவன இலாபங்களுக்கான ஒரு வடிகாலாக பார்க்கும் ஓர் உத்தியோகபூர்வ மனோபாவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதில் அவர்கள் மேலும் மேலும் உடன்படுகிறார்கள்.

இசைக்கலைஞர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் உலக சோசலிச வலைத் தளத்தின் மற்றும் சோசலிச சமத்துவ கட்சியின் ஆதரவாளர்களும் ஞாயிறன்று இரவு மனப்பூர்வமாக விவாதித்தார்கள். இவர்கள், The Detroit Symphony Strike and the Defense of Culture in the US என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள கலைப்பிரிவின் ஆசிரியர் டேவிட் வோல்ஷால் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஓர் உரையின் எழுத்து வடிவத்தைக் கொண்ட, Mehring Booksஆல் வெளியிடப்பட்ட, ஒரு புதிய வெளியீட்டின் நகல்களை விற்பனை செய்தனர்.

பல DSO இசைக்கலைஞர்கள் தாங்கள் அதை ஏற்கனவே இணையத்தில் வாசித்திருந்ததாக தெரிவித்தனர். “நீங்கள் மட்டும் தான் இதைக் குறித்து மிகவும் ஆழமாக எழுதி வருகிறீர்கள்" என்று கூறி, ஒரு வயலின் வாசிப்பாளர் பலமுறை கேட்டிருந்த ஓர் உணர்வை ஞாயிறன்று மீண்டும் வெளிப்படுத்தினார்.

நவம்பர் 21இல் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் பல DSO இசைக்கலைஞர்களுடனும், ஆதரவாளர்களுடனும் உலக சோசலிச வலைத் தளம் பேசியது.

 

Violin teacher Sylvia Casterton

வயலின் கற்றுத்தரும் ஓர் ஆசிரியையான சில்வியா கஸ்டெர்டோன், தம்முடைய ஆதரவை வெளிப்படுத்த வந்திருப்பதாக தெரிவித்தார். “நான் நிச்சயமாக இசைவாசிப்பாளர்களின் பக்கம் தான் இருக்கிறேன். நான் ஒரு வயலின் வாசிப்பாளர். ஆகவே அவர்களின் நிலையை நான் அறிவேன்.”

இப்போதிருக்கும் மனோபாவம் DSO இசைக்கருவி வாசிப்பாளர்கள் குறித்தது மட்டுமல்ல. இது அனைத்து இசைக்கலைஞர்களையும் பாதித்து வருகிறது. சில இசைக்கலைஞர்கள், பெரும்பாலும் சிறந்த இசைக்கலைஞர்களும் கூட தங்களின் வேலைகளையும், வாய்ப்புகளையும் இழந்து வருகிறார்கள்.”

அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்க முயலும் ஓர் இசைக்கலைஞராக, தனிப்பட்டமுறையில் இந்த போராட்டத்தை நான் நேர்மையோடு ஏற்றுக் கொள்கிறேன். அவர்களுக்கு என்ன நடக்கும்? இசையிலிருந்து அவர்கள் விலக்கப்படுவார்களா அல்லது அவர்கள் வேறு மாநிலத்துக்கு செல்வார்களா?

ஒரு DSO திரொம்பொன் வாசிப்பாளரான ராண்டி ஹவேஸ் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில், “கடுமையான வெட்டுக்களுக்கு இசைக்கலைஞர்கள் உடன்படவில்லை என்றால் திவால்நிலையை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்று நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்ட Louisville இசைக்குழுவின் இசைக்கருவி வாசிப்பாளர்களைத் தமக்குத் தெரியும் என்று அவர் கூறினார். “பிற இசைக்குழுக்களில் இருக்கும் இசை வாசிப்பாளர்களையும் எங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தளவிற்கு இது ஒரு சிறிய சமூகம் தான். இங்கே என்ன நடந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் கவனித்து கொண்டிருக்கிறார்கள். இதில் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.”

DSO வயலின் வாசிப்பாளர் Caroline Coade கூறுகையில், இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து யுரேல் சேகலினால் அளிக்கப்பட்ட கருத்துக்களோடு தாம் உடன்படுவதாக தெரிவித்தார். “இந்த இசைக்குழுவிற்கு ஆதரவாக அவர் மிக தைரியமாக வந்திருக்கிறார். இந்த நகரத்திற்கும், மாநிலத்திற்கும், ஒட்டுமொத்தமாக இந்த நாட்டிற்கே கூட மிக அவசியமாக இருக்கும் இசைக்குழுவின் முக்கியத்துவம் மற்றும் தரத்தைக் குறித்து அவர் குறிப்பிட்டது உண்மையிலேயே மிகவும் தைரியமான அறிவிப்பாக இருந்தது.”

ஒரு முன்னணி DSO இசைக்கலைஞர் கூறியதாவது: “நாங்கள் மீண்டும் திரும்பி வருவோம் என்று நம்புகிறோம். நாங்கள் இசையால் சமூகத்துடன் இணைந்திருக்கவே முயன்று வருகிறோம்.”

செய்தியிதழ்களின் கருத்துரைக்கும் பக்கத்தில், 'டெட்ராய்டிற்கு இந்த இசைக்குழு தேவையில்லை' என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அந்த நிலைப்பாட்டை நீங்கள் எடுக்கலாம். ஆனால் அது எங்கே போய் முடியும்?”

நான் நான்கு அல்லது ஐந்து வேலைநிறுத்தங்களில் பங்கெடுத்து இருக்கிறேன். ஆனால் இது தான் மிகவும் தெளிவாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.”

DSO நிர்வாகத்தால் முறையிடப்பட்ட பல மாற்றங்கள் ஆத்திரமூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டதாக அவர் உணர்ந்தார். “உடனிருக்கும் அனைவரையும் உள்ளடக்கி வடிவமைக்கப்பட்ட ஓர் ஒத்திகை செயல்முறையை, முன்னணி வாசிப்பாளர்களின் நிகழ்முறை கொண்டிருக்கிறது. இந்த நிகழ்முறையைப் பறிக்கும் எந்த எண்ணமும்வாசிப்பாளர்கள் உதவிகரமாக இருப்பதென்பது திடீரென்று வெளியேற்றப்படாமல் இருப்பதற்கு மட்டுமே பாதுகாப்பை அளிக்கும்அதிகாரத்தைப் பறிக்கும் ஒரு வெட்கக்கேடான விஷயமாகும்.”

நாங்கள் எங்கள் குடும்பத்திற்காகவும், எங்கள் மாணவர்களுக்காகவும் போராடி வருகிறோம். இசைவாசிப்பிற்கு ஒரு சிறந்த இசைக்குழு இல்லையென்றால், அவர்களுக்கு வேறெந்த இடமும் இருக்காது.”