சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian High Court abets Hindu supremacists with Babri Masjid ruling

பாபர் மசூதி தீர்ப்பு: இந்து மேலாதிக்கவாதிகளுக்கு இந்திய உயர்நீதி மன்றம் துணைபோகிறது

By Sarath Kumara and Keith Jones
2 October 2010

Use this version to print | Send feedback

இந்து மேலாதிக்க தத்துவம் மற்றும் வன்முறைக்கு அங்கீகாரமளிக்கும் ஒரு முடிவாக, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ நீதிபதிகள் குழு வியாழனன்று அளித்த தீர்ப்பில், அயோத்தியில் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடம் மூன்று பாகமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும், நிலத்தில் மிகவும் முக்கியமான பகுதி உள்ளிட்ட மூன்றில் இரண்டு பகுதி இந்து வகுப்புவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தீர்ப்பின்படி, நிலத்தின் மூன்றாம் பாகத்திற்கான உரிமை சுன்னி (முஸ்லீம்) வக்பு வாரியத்திடம் வழங்கப்படும்.

1992 டிசம்பரில், இப்போது போல் அப்போதும் இந்தியாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ இந்து பரிஷத் (உலக இந்து குழு), மற்றும் சங் பரிவார் (ஆர்எஸ்எஸ் வலைப்பின்னல்) என்றழைக்கப்படுவதன் மற்ற அங்கத்துவ அமைப்புகளால் திரட்டப்பட்ட வலது சாரி இந்து கர சேவகர்கள் ஆயிரக்கணக்கானோர் 450 வருட பழைமை வாய்ந்த மசூதியை இடித்துத் தள்ளி, 1947ல் இந்தியத் துணைக்கண்டம் வகுப்புவாதப் பிரிவினைக்கு ஆட்பட்டபோது நிகழ்ந்த மதக் கலவரத்திற்கு பின் மதக் கலவரத்தின் மிக மரணகரமானதொரு அலையைத் தூண்டினர். குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர், இந்த எண்ணிக்கை 3,000 ஆக இருக்கும் என்றும் சில மதிப்பீடுகள் கூறுகின்றன. இவர்களில் அநேகரும் ஏழை முஸ்லீம்கள்.

இந்தியாவில் இந்துக்கள் மற்றும் இந்துக் கலாச்சாரத்தின் மேலாதிக்கத்தை விளங்கப்படுத்த பாபர் மசூதியின் இடத்தில் புராண இந்து கடவுளான இராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி பாஜக தலைவர் லால் அத்வானி நாடு முழுவதும் மேற்கொண்ட ஒரு அவதூறுப் பிரச்சாரத்தின் உச்ச நிகழ்வாகவே மசூதி இடிப்பு நிகழ்ந்தது.

பாபர் மசூதியைப் பாதுகாக்க இந்திய உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக உத்தரவிட்டிருந்த நிலையிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக அரசாங்கம் நிறுத்தியிருந்த ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்த்த நிலையில் மசூதி இடிப்பு அரங்கேறியது. 1992ல் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியும், ‘இயல்பான நிலைமைகளில் சட்டம் ஒழுங்கிற்கு மாநிலங்களே அரசியல்சட்டரீதியாக பொறுப்பானவை’ என்கிற காரணத்தைச் சொல்லி, பாபர் மசூதி தரைமட்டமாக்கப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியது.

இதனையடுத்து 1998ல் பல கட்சி கூட்டணியின் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தது; ஆறு வருடங்களுக்கு வணிக-ஆதரவு அமெரிக்க-ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமை நடத்தியது. ஆனால் தனது கூட்டணிக் கட்சிகளின் - இவை மதச் சார்பின்மையை பக்தி சிரத்தையுடன் பின்பற்றுவதாகவும் பாஜகவின் ஆதிக்ககுணத்துடனான ராமஜன்மபூமி பிரச்சாரத்தை எதிர்ப்பதாகவும் கூறிக் கொள்ளும் பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகள் - எதிர்ப்பின் காரணமாக, பாஜகவால் ’பாபர் மசூதியின் சாம்பலின் மீது ராமர் கோவிலை கட்டியெழுப்புவோம்’ என்கிற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தவியலாமல் போனது.

ஆயினும், பாஜகவும் இந்து வலதுகளும் அயோத்தியில் இந்து கோவிலைக் கட்டுவது ஒரு பெரும் தேசிய இலட்சியம் என்பதாக தொடர்ந்து பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் இருந்தே, பாபர் மசூதியின் இடஉரிமை தொடர்பான பல்வேறு வழக்குகளும் இந்து வலதின் ஆர்ப்பாட்டத்துடன் பிரிக்கவியலாமல் பிணைந்து பட்டு இருந்திருக்கின்றன.

முதலாம் வழக்கு 1950 ஜனவரியில் தொடுக்கப்பட்டது. இந்து மகா சபையால் (HMS) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மதவாதப் பரப்புரையின் பகுதியாக ராமர் மற்றும் சீதை தெய்வசிலைகள் பாபர் மசூதிக்குள் கடத்திக் கொண்டு வைக்கப்பட்ட பின் வெகு சில வாரங்களில் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. பாஜகவின் தத்துவார்த்த முன்னோடியான இந்து மகா சபை பிரிவினையைத் தொடர்ந்த உடனடி காலத்தில் இந்தியாவை ஒரு இந்து ராச்சியமாக அறிவிக்க பிரச்சாரம் செய்த அமைப்பாகும். அதன் பிரதான தத்துவாசிரியரான வி.டி.சாவர்கர், ’முஸ்லீம்கள் இந்திய தேசத்தின் பாகம் அல்ல, அவர்களுக்கு குடியுரிமைகள் மறுக்கப்பட வேண்டும், ஏனென்றால் அவர்களின் புனித மண்ணை இத்துணைக் கண்டத்தில் காண முடியாது’ என்று பல வருடங்களாக வாதிட்டு வந்தவர் ஆவார்.

1949-50ல் அயோத்தியில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் இந்து மகா சபையின் ஆதரவாளரயாய் இருந்தார். மசூதியில் இருந்து அந்த சிலைகளை அகற்றுவதற்கு காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அளித்த உத்தரவை உதாசீனப்படுத்திய அவர், அதற்கு மாறாய் அந்த சிலைகள் இருந்த இடத்தில் இருந்து 300 கஜ தூரத்திற்குள்ளாக முஸ்லீம்கள் வரக் கூடாது என்று தடை விதித்ததோடு, இந்துக்கள் மசூதிக்குள் நுழைவதற்கும் அச்சிலைகளை வணங்குவதற்கும் ஊக்கமளித்தார்.

மாஜிஸ்ட்ரேட்டை நீக்கியதன் மூலம் (அவர் அதன்பின் பாஜக உருவாவதற்கு முன்பிருந்த ஜன சங்கத்தின் மாநில சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்) பதிலிறுப்பு செய்த காங்கிரஸ் அரசாங்கம் பாபர் மசூதியின் வாயில்களை பூட்டுவதற்கு உத்தரவிட்டதோடு அந்த பகுதியை சர்ச்சைக்குரியதாய் அறிவித்தது.

வியாழனன்று வந்திருக்கும் தீர்ப்பில், அந்த சிலைகள் இருந்த அதாவது பாபர் மசூதியின் மையக் குவிமுகட்டுப் பகுதிக்கு நேர் கீழாய் அமைந்த இடத்தின் பகுதிக்கான உரிமையை இந்து மகா சபையிடம் அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு நிச்சயமாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.

ஆயினும், தீர்ப்பும் அதற்கு ஆதரவான வகையில் ஊடக மற்றும் அரசியல் எதிர்வினையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனென்றால் இந்தியாவின் அரசு ஸ்தாபனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆளும் உயர்தட்டினர் அனைவரும் நாட்டின் ஸ்தாபக அரசியல்சட்டத்தில் உபதேசிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற-ஜனநாயகக் கோட்பாடுகளை மறுதலித்துள்ளதை இவை விளங்கப்படுத்துகின்றன.

பாபர் மசூதி இடம் முஸ்லீம்களுக்கு சொந்தமானதல்ல என்று கூறுகிற சட்ட வாதம் இரண்டு முழுப் பிற்போக்கான கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதன்படி

நிலம் இந்துக்களுக்கு சட்டபூர்வமாக சொந்தமானதாக இருக்க வேண்டும், இருக்கிறது ஏனென்றால்

* இந்து வழிபாட்டில் மூன்று மிக முக்கிய கடவுள்களில் ஒருவரான பகவான் விஷ்ணுவின் அவதாரமான ராம பகவான் பிறந்த இடம் இது. *

* அத்துடன் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக மொகலாய சக்கரவர்த்தியான பாபர் உத்தரவின் பேரில் கட்டப்பட்ட இந்த மசூதியானது முன்னாளில் ஒரு இந்து கோவில் அல்லது கோவில்கள் இருந்த இடத்தின் மேல் நின்று கொண்டிருக்கிறது.

சட்டபூர்வமாய் யாருக்கு நிலம் சொந்தம் என்கிற கேள்வியில் லக்னோ நீதிபதிகள் குழுவின் மூன்று உறுப்பினர்களும் 2-1 என்ற கணக்கில் பிளவுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த நீதிபதி தனது சகாக்களை விடவும் இன்னும் முழுமையாக இந்து வலதின் கூற்றுகளைத் தழுவிக் கொண்டிருந்தார். சர்ச்சைக்குரிய அனைத்து நிலமும் இந்து குழுக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறிய அவரது தீர்ப்பு, முஸ்லீம்களை காயப்படுத்தும் நோக்கத்துடனான வார்த்தைகளுடன், பாபர் மசூதி ஒருபோதும் முறையான மசூதியாக இருக்கவில்லை என்று கூறியது.

ஆனால் நீதிபதிகளின் தீர்ப்பிலான வித்தியாசங்கள் என்னவாய் இருந்தாலும், அனைத்து நீதிபதிகளுமே இந்து மேலாதிக்க தத்துவத்திற்கும் மதரீதியான மூடிமறைத்தல்வாதத்திற்கும் சட்டபூர்வமான சக்தியை அளித்துள்ளனர்.

பாபர் மசூதி இடம் உண்மையில் இராமர் பிறந்த இடமே -அவர் ஒரு புராணப் பாத்திரமே என்பது குறித்து கவலையில்லை - என்றும் சர்ச்சைக்குரிய இடத்தின் உரிமைத்துவத்தை தீர்மானிப்பதில் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் ஒருமனதாக அறிவித்துள்ளனர்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு இந்து கோவில் இருந்ததா என்பதும் ஒரு பெரும் சட்ட முக்கியத்துவம் உடைய அம்சம் என்றும் நீதிபதிகள் கூறினர். பாபர் மசூதிப் பிரச்சினையில் மத்தியகால இந்திய வரலாறு பற்றி எதுவுமில்லை, மாறாக 20 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வகுப்புவாத அரசியலின் எழுச்சியைக் குறித்த எல்லாமும் தான் இருக்கிறது என்கிற அத்தியாவசியமான அரசியல் உண்மையை இது உதாசீனப்படுத்துகிறது என்பது மட்டுமல்ல. பாபர் மசூதியை “மீண்டும் கைப்பற்றுவதற்கான” அவசியம் குறித்த இந்து வலதின் வற்புறுத்தலை அங்கீகரிப்பதை இது ஏற்றுக் கொள்கிறது. இந்த பிற்போக்கான கருத்தானது, சில ஆண்ட வம்சங்களின் மத பிணைப்பையே இந்திய வரலாற்றின் அச்சாணியாக மாற்றி உருவாக்கிய இந்திய வரலாறு குறித்த வரலாற்றுவகையில்லாத வகுப்புவாத சித்திரத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பதோடு, முஸ்லீம்கள் தெற்கு ஆசியாவில் 1200 ஆண்டுகளுக்கும் அதிகமாய் இருந்து வருகிறார்கள் என்ற போதிலும், அவர்களை “வந்தேறிகளாகவும்” “சுயநல சிந்தனையுடன் தொல்லை தருபவர்களாகவும்” சித்தரிக்கும் நோக்கத்துடனானது.

பாஜகவும் இந்து வலதுகளும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளதில் ஆச்சரியமில்லை. பாஜகவின் உயர் தலைமையில் தொடரும் எல்.கே.அத்வானி இந்த தீர்ப்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நோக்கிய ஒரு “முக்கியமான தீர்ப்பு” என்று கூறினார்.

இந்துக்களின் நம்பிக்கை “நீதித்துறையால் வழிமொழியப்பட்டிருப்பதாக” விஸ்வ இந்து பரிஷத் கூறியது. இந்த இடத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கான உரிமை இந்து மதவாத குழுக்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், “இந்த மொத்த பகுதியிலும் ஒரு மாபெரும் கோவிலை கட்டுகின்ற வகையில்” சர்ச்சைக்குரிய இடத்தின் அனைத்து பகுதியையும் அத்துடன் அதனைச் சுற்றி மத்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் மற்ற நிலங்களையும் இந்து மதவாத மற்றும் அடிப்படைவாத குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விஸ்வ இந்து பரிஷத்தின் வேண்டுகோளை அதன் தலைவர் பிரவீன் தொகாடியா தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.

இந்தியாவின் நடப்பு கூட்டணி அரசாங்கத்தின் தலைமை சக்தியான காங்கிரஸ் கட்சி தீர்ப்பை புகழ்ந்தது. “நாம் அனைவரும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும், வரவேற்க வேண்டும்” என்று காங்கிரசின் ஊடகங்களுக்கான தலைமை செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திரிவேதி கூறினார்; காங்கிரஸ் எதிர்ப்பதாகக் கூறும் இந்து மேலாதிக்கவாதிகள் மற்றும் வகுப்புவாதிகளுக்கு இது ஒரு பரிசாக அமைந்திருப்பது குறித்து அக்கட்சிக்கு கவலையில்லை. ஒரு அடிப்படையான சட்ட உண்மையை ஒப்புக் கொள்கின்ற வகையில், தீர்ப்பை எதிர்ப்பவர்கள் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியும் என திரிவேதி தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பு பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தியிருப்பதாகக் கருதலாமா என்கிற கேள்விக்கு, இந்து ஆதிக்கவாதிகளை கோபப்படுத்த விரும்பாமல் நழுவிய திரிவேதி, தீர்ப்பு “சரியா தவறா என்கிற தீர்ப்புக்கு” தான் செல்ல விரும்பவில்லை என்று கூறினார். வெள்ளியன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கும் நீதி மன்றத் தீர்ப்புக்கும் தூரமிருப்பதாகக் காட்டும் முகமாக, தீர்ப்பு உச்சநீதிமன்றத்திற்கு அநேகமாக செல்லும் என்கிற நிலை இருப்பதால் அது குறித்து ”இப்போது கருத்து கூற அவசியமில்லை” என்றார். ஆயினும் இந்த தீர்ப்பானது எந்த வகையிலும் பாபர் மசூதி இடிப்பு “ஒரு குற்ற நடவடிக்கை” என்பதான உண்மையை மாற்றி விடவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால் ஒரு முதுமொழி சொல்வது போல, பரிமாறப்படும் பொருளில் தானே இலட்சணம் காணப்பட முடியும். பாஜகவின் துரிதமான வகுப்புவாதமயத்தை காங்கிரஸ் அவ்வப்போது கண்டித்தாலும், பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டதற்கும் 2002 குஜராத் படுகொலைக்கும் உரம் போட்டதற்கும் ஏற்பாடு செய்ததற்கும் பொறுப்பானவர்களை கூண்டில் நிறுத்துவதில் காங்கிரஸ் அரசாங்கங்கள் முழுமையாகத் தோல்வியுற்றிருக்கின்றன.

இந்தியாவின் இடது முன்னணியில் ஆதிக்கம் செலுத்துகின்ற கட்சியாக இருக்கும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பதிலிறுப்பாக ஒரு கோழைத்தனமான அறிக்கையை வழங்கியது. தீர்ப்பு “முழுமையாக படிக்கப்பட வேண்டியிருக்கிறது” எனவும் “தீர்ப்பின் தன்மை குறித்து கேள்விகள் இருக்கலாம்” (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது) எனவும் அது கூறியது. இந்து வகுப்புவாதத்திற்கு பலியான ஏராளமானோர்க்கு நீதி வழங்கத் தவறியதோடு மட்டுமன்றி தொழிலாளர் மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீது தாக்குதலைக் குவிப்பதிலும் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கும் இந்திய நீதித் துறை மீது இக்கட்சி முழு நம்பிக்கை கொண்டிருப்பதாக அதன் அறிக்கை தெரிவித்தது: “நமது அரசியல்சட்டத்திற்குட்பட்ட மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருப்பது உட்பட்ட நீதிமன்ற நடைமுறை ஒன்றே பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி என்கிற நிலையையே சிபிஐ (எம்) பராமரிக்கிறது.”

பெரும்பாலும், இந்தியாவின் பெரும் செய்தித்தாள்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்தன. பாபர் மசூதிக்கு இந்து வலதுசாரிகள் மற்றும் சுன்னி வக்பு வாரியம் ஆகிய இரு தரப்பும் கொண்டிருக்கும் உரிமையை நீதிபதிகள் பகுதியாய் அங்கீகரித்திருப்பதால் “யாருக்கும் இழப்பில்லை” என்பதாய் அவை கருத்துத் தெரிவித்தன.

ஆனால், நிலத்திற்கு இந்து வலதின் உரிமை கோரலானது முழுமையாக சட்டவிரோதமானது என்பதும், அந்த கோரலுக்கு உறுதிவழங்கியிருப்பதன் மூலம் 1992ன் பயங்கர குற்றத்தை தண்டனைக்குட்படுத்தாமல் விடுவிக்க நீதிமன்றம் ஏற்பாடு செய்திருக்கிறது, அத்துடன் முஸ்லீம்களையும் மற்ற சிறுபான்மையினரையும் “உரிய இடத்தில்” வைப்பதற்கு புதிய வகுப்புவாத கோரிக்கைகளை எழுப்புவதற்கும் இந்து வலதிற்கு உரிமம் வழங்கியுள்ளது என்பதுமே உண்மையாகும்.

“உண்மைகளின் அடிப்படை இல்லை”, “பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை”, மற்றும் ”முக்கிய விளிம்பு நிலை சமயங்களில் ....சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்ட நிர்ணயங்களுக்கு பதில் கூறப் பொறுப்பாக முடியாது” என்பதான கூற்றுகளின் பேரில் “மதநம்பிக்கை மற்றும் விசுவாச”த்தை நீதிமன்றம் தனது தீர்ப்புக்கான அடிப்படையாகக் கொண்டுள்ளது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது கடும் கவலையை வெளிப்படுத்தியது.

”ஒரு சட்டச் சிக்கலை தீர்க்கும் போது மதநம்பிக்கையும் விசுவாசமும் காரணிகளாகக் கொண்டுவரப்பட்டது என்றால், நிச்சயமாக நீங்கள் பெரும்பான்மைவாத கருத்துருவின் வழுக்கல் பாதையில் வேகமாய் காலடி எடுத்து வைக்கிறீர்கள்” என்று தொடர்ந்தது டைம்ஸ்.

இந்தியாவின் மிக முக்கிய தாரளவாத நாளிதழ்களில் ஒன்றான ஹிந்து பத்திரிகை “குழம்பச் செய்யும் சமரசம் பயனளிக்கலாம்” (Intriguing Compromise Could Work) என்பதான தலைப்பில் வெளியிட்ட தலையங்கத்தில், இந்த தீர்ப்பு “ஆழமான சட்ட பிரதிபலிப்பை” அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பதையும் “சட்டத்தையும், சமயங்களில், தர்க்கத்தையும் கூட நீட்சி செய்து கொள்ளத் தலைப்பட்டிருக்கிறது” என்பதையும் ஒப்புக் கொண்டது. பகவான் ராமரை ஒரு வரலாற்று மற்றும் சட்ட பாத்திரமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதற்கு எந்த குறிப்பான கண்டனமும் இல்லை. ”மசூதியின் மைய குவிமுகட்டுக்கு நேர்கீழே திடீரென்று (1949ல்) ஒருநாளிரவில் சிலைகளை வைத்தவர்களையும் 1992ல் மசூதியை தரைமட்டமாக்கியவர்களையும் பகுதியாய் உற்சாகப்படுத்தும் விதமாய் தீர்ப்பு காணப்படக் கூடும்” என்று தலையங்கம் ஒப்புக் கொண்டது. ஆயினும், “எத்தரப்பும் முழுமையாய் வெற்றி பெற்றதாக கூறிக் கொள்வதில் இருந்தோ முழுமையான தோல்விக்குள் மூழ்கடிக்கப்பட்டதாக கருதுவதில் இருந்தோ தடுத்திருப்பதான” காரணத்தால் இந்த தீர்ப்பை ஹிந்து வரவேற்றுள்ளது. பயனில்லாத பாபர் மசூதி-ராமர் கோவில் சண்டையில் இருந்து கடந்து செல்வதற்கான நேரமும் இது என்று அத்தலையங்கம் மேலும் சொல்கிறது.

ஆனால், மத அமைதியைக் கூட விடுங்கள், நீதியானது பிற்போக்குவாதத்தை அங்கீகரிப்பதன் மூலமும் அதனைப் போற்றுவதன் மூலமும் வழங்கப்பட்டு விட முடியாது. மேலும், இந்து வலதுகளும் இந்திய முஸ்லீம்களும் இத்தீர்ப்பை ஒரு சமரசமாகக் காண்கிறார்கள் என்பதான ஹிந்து பத்திரிகையின் கூற்று திட்டமிட்ட திரித்தலாகும். முதல் தரப்பு வெற்றி குறித்து நாளுக்கு நாள் பெருகும் வன்ம உணர்ச்சியுடன் கூவிக் கொண்டிருக்கிறார்கள், அதே சமயத்தில் முஸ்லீம்களோ “மதச் சார்பற்ற” இந்தியாவில் தாங்கள் இரண்டாம்தரக் குடிமகன்களே என்பதற்கான இன்னுமொரு நிரூபணமாய் தீர்ப்பினைக் காண்கின்றனர்.

சமீபத்திய தேர்தல்களில் உத்தரப் பிரதேச முஸ்லீம்களின் அநேக வாக்குகளை வென்ற ஒரு கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் நேற்று மாலை கூறினார்: “சட்டம் மற்றும் ஆதாரத்தைக் காட்டிலும் நம்பிக்கைக்கு முன்னுரிமை அளித்திருக்கும் நீதிமன்ற தீர்ப்பில் நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன். இது நாட்டிற்கும், அரசியல்சட்டத்திற்கும் நீதித் துறைக்கும் கூட நல்லதல்ல. நாட்டின் முஸ்லீம்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாய் உணர்கின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்திலும் ஒரு விரக்தியான உணர்வு நிலவுகிறது.”