சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

US issues terror alert for European cities

ஐரோப்பிய பயணங்களுக்கு அமெரிக்கா பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கைகளை விநியோகிக்கிறது

By Patrick Martin
5 October 2010

Use this version to print | Send feedback

ஐரோப்பிய கண்டத்தில் பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கு பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை ஞாயிறன்று விநியோகித்துள்ளது. முன்கண்டிராத இத்தகையதொரு நடவடிக்கை பீதியைப் பரப்புவதற்காக திட்டமிடப்பட்டதாக தோன்றுகிறதே அன்றி யாரும் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியாகி விடக் கூடாது எனத் தடுப்பதற்கான நோக்கம் எதுவும் உண்மையில் இல்லை. ஜேர்மனியின் ராம்ஸ்ரைனிலுள்ள அமெரிக்க விமானப் படை தளத்திலுள்ள படையினருக்கு ஒரு வார கால ஊரடங்கை அளித்திருக்கும் பென்டகன், ”ஒரு அச்சுறுத்தல் நிலைக்கான பதிலிறுப்பாக” படையினர் தளத்திற்கு வெளியே தங்கள் சீருடைகளை அணியக் கூடாதெனவும் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டன், ஜப்பான், சுவீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளும் இதனைப் பின்பற்றி ஐரோப்பாவுக்கு பயணம் செய்யும் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கைகளை விநியோகித்துள்ளன. இவை அனைத்திலுமே, ஐரோப்பாவின் மக்கள் போக்குவரத்து மையங்களிலும் சுற்றுலா புகழ்பெற்ற இடங்களிலும் பயங்கரவாதத் தாக்குதலுக்கான அபாயம் பெருகியுள்ளதாக அமெரிக்க எச்சரிக்கையை அவர்கள் மேற்கோளாய் காட்டுகின்றனர்.

அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து வந்த உண்மையான அறிக்கை எந்த வித குறிப்பான விவரங்களும் இன்றி, “பயங்கரவாத தாக்குதல்களுக்கான சாத்தியம்” குறித்து தான் பேசுகிறது. “அல்கெய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுவதைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நடப்பு விவரங்கள் காட்டுகின்றன” என்று வெளியுறவுத்துறை கூறியது.

ஒசாமா பின் லேடன் 1996ல் அமெரிக்காவிற்கு எதிராக “போர் பிரகடனம்” வெளியிட்டது முதல் ஒவ்வொரு நாளும் இது உண்மையாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்கிற நிலையில், இப்போதைய எச்சரிக்கைக்கு ஏதேனும் புற அடிப்படை உள்ளதா அல்லது ஒரு புதிய அச்சுறுத்தலைக் குறிக்கிறதா என்பதெல்லாம் தெளிவாய் இல்லை.

ஐரோப்பாவில் பயணம் செய்யும் அமெரிக்கர்கள் “தங்களின் சுற்றுப்புறம் குறித்த முழு விழிப்புடன் நடந்து கொள்ள ஒவ்வொரு முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ள வேண்டும், அத்துடன் தங்களை பயணத்தின் போது பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறது வெளியுறவுத் துறை. ஆயினும் கூடுதலான வழிகாட்டல் கோரி வற்புறுத்திய போது அதன் செய்தியாளர், ‘ஏதேனும் வெடித்தாலோ அல்லது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தாலோ எதிர்திசையில் ஓடுவது தவிர பயணிகள் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை’ என்று ஒப்புக் கொண்டார்.

அமெரிக்க ஊடகங்களில், குறிப்பாக தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தால், எந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய குழுக்கள் இரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும், மற்றும் ஈபிள் கோபுரம் போன்ற சுற்றுலாப் புகழ் மையங்களிலும் தற்கொலை தாக்குதல்களில் ”மும்பை-பாணி” தாக்குதலில் ஈடுபடலாம் என்பது மாதிரியான செய்திகள் நிரம்பி வழிகின்றன. “மும்பை-பாணி” என்று இங்கு அவர்கள் குறிப்பிடுவது இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்தியாவின் நிதி மைய நகரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து. அதில் எந்திரத்துப்பாக்கி ஏந்திய 10 பேர் சிறு ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி விடுதிகளிலும் முக்கிய இரயில் நிலையத்திலும் 166 பேரைக் கொன்றனர், 300க்கும் அதிகமானோரை காயத்திற்குள்ளாக்கினர்.

வலதுசாரி ஃபாக்ஸ் நியூஸ் இலக்குகள் குறித்த ஒரு திகிலூட்டும் கணக்குடன் பாதை காட்டியது. ஈபிள் கோபுரம், நோத்ர்டாம் கதீட்ரல், பேர்லினில் உள்ள பிராண்டன்பேர்க் வாயில் மற்றும் அந்நகரின் முக்கிய இரயில் நிலையம் மற்றும் தொலைக்காட்சி கோபுரம் ஆகியவை அந்த இலக்குகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

எதிர்பார்க்கப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அறிக்கைகளை பிரான்சின் செய்தி நிறுவனமான AFPக்கு உறுதி செய்த பெயர்கூறப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர், அச்சுறுத்தல் “நம்பத்தகுந்தது என்றாலும் குறிப்பானதல்ல” என்றார். தொடர்ந்து அவர் கூறினார், “உதாரணமாக, ஒரு விடயம் துல்லியமாய் எங்கு நடக்கலாம் என்பதை தெளிவாய்க் கூறி விட முடியவில்லை. அதே சமயத்தில், மக்கள் தங்களது சிந்தனைகளை இங்கிலாந்து, பிரான்சு அல்லது ஜேர்மனியுடன் மட்டும் சுருக்கிக் கொள்ள முடியாது.”

அமெரிக்க எச்சரிக்கைக்குப் பின்னர், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு பயணம் செய்யும் இங்கிலாந்தின் குடிமக்களுக்கான தங்களது எச்சரிக்கை அளவினை “அதிகம்” என்பதாய் பிரிட்டிஷ் அதிகாரிகள் உயர்த்தினர். சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இதேபோன்றதொரு எச்சரிக்கையை திங்களன்று விநியோகித்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த பயணிகள் “பொது இடங்களில், பொதுக் கட்டிடங்களில் மற்றும் அதைச் சுற்றிய இடங்களில், சுற்றுலாப் புகழிடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் மற்றும் பெரும் கூட்டங்கள் கொண்ட மற்ற இடங்களில்” கவனமாய் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. சென்ற வாரத்தில் சுவீடனுக்குள் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் குறித்து ஒரு உச்சகட்ட எச்சரிக்கையை சுவீடன் பாதுகாப்பு சேவை அமைப்பு விநியோகித்தது, சுவீடனில் உள்ள இஸ்லாமிய குழுக்களின் நடவடிக்கைகளில் குறிப்பிட்டுக் காட்ட முடியாத “நடவடிக்கை மாற்றங்களை” இதற்குக் காரணமாகக் கூறியது.

திங்களன்று ஜப்பானின் வெளியுறவு அமைச்சகத்தால் விநியோகிக்கப்பட்ட எச்சரிக்கையும் இதேபோன்று தெளிவற்றதாய் இருந்தது. “மிகவும் அசாதாரணமான இந்த எச்சரிக்கை எந்த குறிப்பிட்ட உளவுத் துறை கண்டுபிடிப்பின் மூலம் தூண்டப்பட்டதல்ல, மாறாக முந்தைய அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் எச்சரிக்கைகளில் இருந்து பெறப்பட்டது” என்று ஒரு ஜப்பானிய அதிகாரி கார்டியன் பிரிட்டிஷ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

கனேடிய அரசாங்கம் ஐரோப்பாவுக்கு பயணிக்கும் கனடா நாட்டினரை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியது. அதுவும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க எச்சரிக்கைகளையே காரணமாய் தெரிவித்தது.

பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், அமெரிக்கா தொடக்கிவைத்த இந்த எச்சரிக்கை “பிரான்ஸ் மக்களுக்கு நாமே பொதுவாக அளிக்கும் பரிந்துரைகளின் வரிசையிலானது” என்றது. ரோமா மற்றும் முஸ்லீம் குடியேற்ற மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களினாலும், ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு செய்யப்படும் அவப்பெயருடனான முயற்சிகளினாலும் ஆழமான அரசியல் நெருக்கடியில் இருக்கும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கம் திசைதிருப்பும் முயற்சியாக பயங்கரவாத தடுப்பு பீதி கிளப்புவதை தழுவிக் கொண்டிருக்கிறது.

சகாராவில் ஐந்து பிரெஞ்சு நாட்டினர் கடத்தப்பட்டதை அடுத்து பயங்கரவாதம் குறித்த பொதுமக்களின் பீதியை கிளறி விடுவதற்கு தொடர்ச்சியான முயற்சி இருந்தது. இந்த ஐந்து பேரில் ஒருவர், இஸ்லாமிய மெக்ரெபின் அல்கெய்தா மூலம் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. பேர்னார்ட் ஸ்குவார்சினி என்னும் ஒரு உயர் உளவுத்துறை அதிகாரி மூன்று வாரங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரான்சில் தாக்குதல் அச்சம் “இதனை விட பெரிதாய் ஒருபோதும் இருந்ததில்லை” என்றார். பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கூறி சுற்றுலாப் புகழிடங்களில் முதலிடம் பெற்றதான ஈபிள் கோபுரத்தை அரசாங்கம் கடந்த மாதத்தில் இருமுறை மூடியது. ஆயினும், ஐரோப்பிய கண்டத்தின் மற்ற பகுதிகளெங்கும் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட இந்த பயங்கரவாத பீதியை நோக்கிய ஒரு கூடுதல் ஐயுறவு கொண்ட கண்ணோட்டமே நிலவுகிறது. ஜேர்மனியில் போலிஸ் துறையை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் உள்துறை அமைச்சகம் கூறுகையில், ”உடனடியாய் தாக்குதல்கள் அச்சத்திற்கான எந்த திட்டவட்டமான அறிகுறிகளும்” இதுவரை தங்களிடம் இல்லை என்றதோடு, “திட்டவட்டமான அபாயங்கள் குறித்த தனது மதிப்பீட்டை அரசாங்கம் மாற்றுவதற்கான எந்த காரணமும் இப்போது இல்லை” என்று கூறி முடித்தார்.

பயங்கரவாத பீதி எங்கிருந்து கிளம்பியது என்பது குறித்து ஜேர்மன் சஞ்சிகையான Der Spiegel நீளமானதொரு விவரத்தை வெளியிட்டது. பஸ்தூன் வம்சாவளியைச் சேர்ந்த அகமது சித்திக் என்கிற ஒரே ஒரு ஜேர்மன் குடியுரிமைவாசி ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு இப்போது அமெரிக்க பிடியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் “சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு பிரிவுகளால்” விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த சஞ்சிகை கூறியது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால், பக்ராமில் உள்ள பெரும் அமெரிக்க விமானப் படைத் தளத்தின் சிறையான “கருப்பு தளத்தில்” அவர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார். தான் பாகிஸ்தானில் ஒரு உயர் மட்ட அல்கெய்தா நபரை சந்தித்ததாகவும் அப்போது ஐரோப்பாவில் தாக்குதல் நடத்துவதற்கான பின்லேடனிடம் இருந்தான வழிகாட்டல்கள் தன்னிடம் கூறப்பட்டதாகவும் சித்திக் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் சித்திகை விசாரணை செய்ய தாங்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் சித்திக் அமெரிக்க விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் ஜேர்மன் அதிகாரிகள் கூறியதாக திங்களன்று CNN அறிக்கை கூறியது. “ஒவ்வொரு நாளும் சித்திக் புதிய, உறுதிப்படுத்தப்படாத விவரங்களை வெளிப்படுத்தி வருவதாக ஜேர்மன் உளவுத் துறையினர் கூறினர்” என்று அந்த அறிக்கை தெரிவித்தது. இவ்வாறிருந்தும், நாட்டின் பாதுகாப்பு அளவை அதிகப்படுத்தும் எந்த திட்டங்களும் இல்லை என்பதாக ஜேர்மன் அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்காவின் இந்த ஊடக பரபரப்புகள் எல்லாம், 2005 ஜூலை 7 அன்று லண்டன் போக்குவரத்து அமைப்பில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 52 உயிர்கள் பலியான சம்பவத்திற்குப் பின்னர் ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க, பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடந்திருக்கவில்லை என்கின்ற உண்மையை, உதாசீனப்படுத்தி வந்திருக்கின்றன. நடைமுறை பாதிப்பைப் பொறுத்தவரை, ஐரோப்பாவிற்கு ஆண்டுதோறும் பயணம் செய்யும் 10.6 மில்லியன் அமெரிக்கர்களுக்கோ, அல்லது ஒரு சமயத்தில் அங்கு பயணத்தில் இருக்கும் நூறாயிரக்கணக்கான மக்களுக்கோ இந்த பயங்கரவாத எச்சரிக்கை என்பது எந்த விதமான பலனும் அளிக்கவல்லதில்லை. பயணத் திட்டங்களை பரந்த அளவில் இரத்து செய்வதற்கு இட்டுச் செல்லக் கூடிய உயர் மட்ட எச்சரிக்கையான “பயங்கரவாத எச்சரிக்கையை” வெளியுறவுத் துறை விநியோகிக்கவில்லை.

அமெரிக்காவில் தேசிய தேர்தல் ஒன்றிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு முன் வருகிற இந்த எச்சரிக்கையின் காலப்பொருத்தம் அரசியல் காரணத்தை சூசகப்படுத்துகிறது. ஜனாதிபதி ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பல தேர்தலுக்கு-முந்தைய கணிப்புகளில் பின்தங்கி இருக்கிறது, பிரதிநிதிகள் அவை, அமெரிக்க செனட், அல்லது இரண்டின் கட்டுப்பாட்டையும் அக்கட்சி இழக்கக் கூடும். அமெரிக்காவில், ஒபாமாவை பரபரப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் “படைத் தலைவராக” சித்தரிக்க நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் மிகவும் சிரமமெடுத்துக் கொண்டிருந்தார். ஒபாமா “அச்சுறுத்தல் தகவல்களை நாளாந்திர அடிப்படையில் கவனித்து வருகிறார், அத்துடன் பயணிகளுக்கான எச்சரிக்கை குறித்து முழுமையாய் அவரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது” என்று வெள்ளை மாளிகை ஊடகங்களுக்கு ஞாயிறன்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்தது. வெள்ளியன்று இரவும் சனியன்று காலையும் ஒபாமா தனது தேசிய பாதுகாப்பு அணியின் கூட்டங்களைக் கூட்டியிருந்தார் என்றும், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியுறவுத்துறை தனது எச்சரிக்கையை விநியோகிக்கும் முன்பாக அவரிடம் நிலைமை விவரிக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புஷ் நிர்வாகம் 2002, 2004, மற்றும் 2006 தேர்தல்களுக்கு முன்பாக பயங்கரவாத பீதிகளை பெருமளவு பயன்படுத்தியிருந்தது; ஞாயிறன்று விநியோகிக்கப்பட்ட எச்சரிக்கை போன்ற வடிவங்களிலோ, அல்லது ஒசாமா பின்லேடன் மற்றும் பிற அல்கெய்தா நபர்களிடம் இருந்தான காணொளி அல்லது ஒலிவழி அறிக்கைகள் போன்றோ வெளியாயின. அவை பெரும்பாலும் வாக்குப்பதிவுக்கு முந்தைய வாரஇறுதியில் வெளிவந்தன.

அட்லாண்டிக் கடந்த அச்சுறுத்தலுக்குக் கொடுக்கப்பட்ட அதீதமான விளம்பரம் அமெரிக்காவில் போலிஸ் நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. FBI மற்றும் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி டிபார்ட்மெண்ட் (DHS) ஞாயிறன்று உள்ளூர் போலிஸ் அமைப்புகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அமெரிக்க இலக்குகளுக்கான குறிப்பான அச்சுறுத்தல் ஏதும் இல்லை என அறிவித்தது. ஆனால் “அமெரிக்காவிற்கு சட்டபூர்வமாக அணுகல் திறன்” உடையவர்களை “சிறிய ஆயுதங்கள், தனியான துப்பாக்கிகள் மற்றும் சிறிய அளவு தந்திரங்கள்” கொண்டு தாக்குதல் நடத்தச் செய்வதற்கு ஈர்க்க அல்கெய்தா தலைப்படக் கூடும் என்று அது எச்சரித்தது.

இத்தகையதொரு எச்சரிக்கை அமெரிக்காவில் இருக்கும் ஏறக்குறைய எவரொருவருக்கும் பொருந்தும் வகையானதாக பொதுப்பட்டதாய் உள்ளது. மினியாபொலிஸ் மற்றும் சிகாகோவில் போரெதிர்ப்பு ஆர்வலர்களின் வீடுகளில் எப்பிஐ சோதனைகள் மேற்கொண்ட - 1960கள் மற்றும் 1970களில் ஜே.எட்கர் ஹூவர் காலத்தில் நடந்த அட்டூழியங்களுக்கு பின்னர் இத்தகையதொரு சம்பவம் நடந்ததில்லை - இரண்டு வாரங்களின் பின் இது வந்தது. ”காரணமில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களை, கண்ணால் அளவெடுத்துக் கொண்டிருப்பவர்களை, நோட்டமிட்டுக் கொண்டிருப்பவர்களை” கண்காணிக்குமாறு உள்ளூர் போலிசை எப்பிஐ மற்றும் DHS எச்சரிக்கை வலியுறுத்தியது.

பயங்கரவாத பீதியானது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக செலுத்தப்படும் அசுரத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பாவெங்கிலும் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் பெருகிக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலைக்குள்ளாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தங்களது வலது-சாரிக் கொள்கைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பார்ப்பதற்கும் மற்றும் ஒடுக்குதல் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பயம் மற்றும் பீதியான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கும் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு தெளிவான அரசியல் காரணங்கள் உள்ளன.

கூடுதல் ஊக்கக் காரணமாக, பாகிஸ்தானுக்குள்ளும் அமெரிக்க மக்களிடையேயும் எதிர்ப்பு பெருகும் நிலைமைகளின் கீழ் பாகிஸ்தானில் இலக்குகளின் மீது அமெரிக்கா குண்டுவீசியும் ஏவுகணைகள் எறிந்தும் தாக்குதல் நடத்துவதை அதிகரிப்பதை நியாயப்படுத்தவும் பயங்கரவாத பீதி பயன்படுத்தப்படுகிறது. கூறப்படும் பயங்கரவாத சதி ஆப்கானிஸ்தான் எல்லை கடந்த பாகிஸ்தானின் பழங்குடி பகுதிகளில் அமைந்திருக்கும் அல்கெய்தா தளங்களில் தயாரிக்கப்படுகின்றன என்றும், பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்திருப்பது குறைந்தபட்சம் இந்த கூறப்படும் அச்சுறுத்தலுக்கு ஒரு பகுதி பதிலிறுப்பாகவேனும் இருக்கிறது என்றும் ஊடக அறிக்கைகள் கூறிக் கொள்கின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான காலனித்துவ-பாணியிலான போரில் பங்கு பெறுவதற்கு அல்லது ஆதரவளிப்பதற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் பாரிய வெகுஜன எதிர்ப்புக்கும் முகம்கொடுத்து வருகின்றன.

பாகிஸ்தானின் கூட்டாட்சி நிர்வாக பழங்குடிப் பகுதி (FATA) மாவட்டமான வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் - ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பின்னர் அங்கிருந்து ஓடிய அல்கெய்தா தலைவர்களின் புகலிடமாக இந்த இடம் திகழ்வதாக அமெரிக்கா கூறுகிறது - அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் வரை கொல்லப்பட்டதாக திங்களன்று பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர். மிர் அலி நகரத்தில் ஏவுகணைகள் ஒரு கட்டிடத்தை நாசப்படுத்தின.