சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Defying police attacks, Foxconn workers in India continue strike

இந்தியாவில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் போலிஸ் தாக்குதலை எதிர்த்து நின்று வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்

By Sasi Kumar and Nanda Kumar
29 September 2010

Use this version to print | Send feedback

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு தொழிற்சாலையில், போலிசாரின் கடுமையான தாக்குதல்களையும் தாண்டி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்கின்றனர். செப்டம்பர் 24 அன்று, போலிசார் தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தில் தாக்குதல் நடத்தினர். பலரும் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு 1,200 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் தடுத்து வைக்கப்பட்டிருந்து, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


இந்தியாவின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்

சமீப மாதங்களில் ஸ்ரீபெரும்புதூரில் போலிசாரால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது உள்ளிருப்புப் போராட்டமாகும் இது. ஜூன் மாதத்தில், கொரிய நிறுவனமான ஹூண்டாய் வாகன தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளர்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.

உலகெங்கிலும் 920,000 ஊழியர்களை கொண்டிருக்கும் பாக்ஸ்கான் நிறுவனம், அதன் சீன சென்ஷென் ஆலையில் 10 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து, தனது ஆலைகளுக்குள் இருக்கும் ஆக மோசமான தொழிற்சூழலுக்கென சமீபத்தில் சர்வதேச அளவில் இழிபுகழ் ஈட்டியது. (காணவும்: “பாக்ஸ்கான் தற்கொலைகள் சீனாவின் தொழிலக நிலைமைகளை வெளிச்சம் போடுகின்றன”)

பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் 7,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஹூண்டாய் மற்றும் நோக்கியா ஆகிய நிறுவனங்களுக்கு பின்னர் தமிழகத்தில் தொழிற்துறையில் மிக அதிக எண்ணிக்கையிலானோரை வேலையிலமர்த்தியிருக்கும் மூன்றாம் நிறுவனம் ஆகும் இது. இந்தியாவில் பரந்த அளவில் நடைமுறையில் இருக்கும் ஒரு போராட்ட வடிவமான உள்ளிருப்புப் போராட்டத்தை இத்தொழிற்சாலையில் தொழிலாளர்கள் செப்டம்பர் 21 அன்று தொடக்கினர். நிர்வாகம் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தொழிலாளர் சங்கம் (FITS) என்னும் தங்களது ஸ்ராலினிச இந்திய மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

இந்த போராட்டத்திற்கு முன்பாக நிர்வாகமானது தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (FITMS) என்னும் ஒரு போட்டி தொழிற்சங்கத்தை தான் தாங்கள் அங்கீகரிக்க முடியும் என்று தொழிலாளர்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்தது. இந்த தொழிற்சங்கம் தமிழகத்தில் கூட்டணி மூலம் ஆட்சி நடத்தும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவிலானதாகும். இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் திமுக அங்கம் வகிக்கிறது.

மாநிலத்தில் அனைத்து தொழிலாளர் பிரச்சினைகளிலும் திமுக பகிரங்கமாக நிர்வாகத்தின் பின்னால் நின்று வந்திருக்கிறது என்பதோடு தொழிலாளர்களின் போராட்டங்களை உடைப்பதற்கு மிருகத்தனமான தந்திரோபாயங்களை பயன்படுத்துவதற்கும் அது தயங்கியதில்லை. பிராந்திய மற்றும் தேசிய அரசியல் கட்சிகளுக்கு சொந்தமான தொழிற்சங்கங்களின் முழு சீரழிந்த தன்மையின் காரணமாக, ஸ்ராலினிச சிஐடியு ஏராளமான போராட்டங்களில் தலைமைப் பாத்திரத்தை பெற முடிந்து வந்திருக்கிறது. ஆயினும், இறுதியில் தொழிலாளர்களின் கோபத்தைத் தணித்து விடுவதற்கான ஒரு பாதுகாப்பு தடுக்கி போலத்தான் அது செயல்பட்டு வந்திருக்கிறது. சிஐடியு ஏராளமான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, போர்க்குணம் தொனிக்கும் வார்த்தைஜாலங்களை பயன்படுத்தியுள்ளபோதிலும் அவையெல்லாம் இந்த போராட்டங்களை தனிமைப்படுத்தவும் அவற்றை தோல்விக்கு இட்டுச் செல்லவுமே உபயோகப்பட்டிருக்கின்றன.

மறியல் போராட்டம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு அடுத்த நாளே சிஐடியு ஆதரவு சங்கம் அப்போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது. தொழிலாளர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் எனத் தீர்மானத்துடன் இருந்த பாக்ஸ்கான் நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. தொழிலாளர்களின் ஊதியத்தில் எட்டு நாள் ஊதியம் பிடித்துக் கொள்ளப்படும் என ஒரு அறிவிக்கை ஒட்டப்பட்டதும் இதில் அடங்கும். ஆத்திரமூட்டும் இந்த நடவடிக்கைக்கான பதிலிறுப்பாக இரவுச்சுற்று பணியில் இருந்த தொழிலாளர்கள் இன்னுமொரு வேலைநிறுத்தப் போராட்டத்தை செப்டம்பர் 23 அன்று தொடக்கினர். இதனையடுத்து தொழிலாளர்கள் சட்டரீதியாக கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என நிறுவனம் மிரட்டியது. தனது ”வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள்ளாக இத்தகைய சட்டவிரோத வேலைநிறுத்தமோ, கூட்டம் கூடுவதோ, ஆர்ப்பாட்டமோ, மற்றவர்களைத் தடுப்பதோ, ஆள் மற்றும் பொருள் நகர்வுக்கு இடையூறு செய்வதோ மற்றும் இத்தகைய இடையூறான வேறு எந்த நடவடிக்கைகளோ தொழிலாளர்கள் நடத்துவதற்கு தடைவிதிக்கும் ஆணையை நீதிமன்றத்தில் இருந்து” பெற்றிருப்பதாக கூறும் ஒரு அறிவிக்கையை நிறுவனம் விநியோகித்தது.

கிளர்ச்சி செய்த தொழிலாளர்கள் கொஞ்சமும் அசையவில்லை, அவர்கள் செப்டம்பர் 24 வெள்ளியன்று போலிஸ் தாக்குதலுக்கு உள்ளான உள்ளிருப்புப் போராட்டத்தின் மூலம் தங்களது எதிர்ப்பை அதிகப்படுத்தினர்.

இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறி ஒரு மூத்த பாக்ஸ்கான் அதிகாரி தாக்குதலுக்கு நியாயம் கற்பித்தார். “சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்திருக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் எட்டு வார முன்னறிவிப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்திய தொழிற் சங்கங்களுக்கான மையமோ (சிஐடியு) சுமார் இரண்டு வார கால முன்னறிவிப்புத்தான் கொடுத்திருந்த்து”.

இந்திய ஆளும் தட்டு வர்த்தக முதலீட்டினை ஈர்ப்பதற்காக சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திருக்கிறது. இந்த மண்டலங்களில் எல்லாம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் பணத்தினாலான உள்கட்டமைப்பு, தளர்வான அல்லது சுத்தமாய் இராத பாதுகாப்பு நிர்ணயங்கள், வரி விலக்குகள், மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாய், மலிவு உழைப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்தியாவில் பொதுவாகவே வேலைச்சூழல் என்பது மிருகத்தனமாய் இருக்கும் என்கிற நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளோ அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மோசமானவையாக அமைந்திருக்கின்றன.

ஜூலை மாதத்தில், அருகிலிருந்த பாக்ஸ்கான் ஆலையில் 250 தொழிலாளர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதானது. சுகாதாரரீதியான அபாயங்களை அறிந்திருந்தும் வேலை செய்யும் இடங்களில் நிறுவனம் தாராளமாய் தெளித்திருந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை சுவாசித்த பின் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆலையில் போதுமான காற்றோட்ட வசதியும் இல்லை. இதனால் தொழிலாளர்கள் மாசுபட்ட காற்றில் மட்டுமன்றி, பிராந்தியத்தின் தகிக்கும் வெப்பத்திலும் அல்லாட நேரிடுகிறது.

அதிகரிக்கும் உணவுப்பொருள் விலைகள், வேலை இழப்புகள், தனியார்மயமாக்கம் மற்றும் விரிவடையும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றால் தொழிலாளர்களின் கோபம் அதிகரித்து வருகிறது. ஏதாவதொரு முதலாளித்துவ கட்சிக்கு நெருக்குதல் கொடுக்கும் நோக்கத்துடனான தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்பட்ட எதிர்ப்புகளின் மட்டத்திற்குள் இந்த கோபத்தை கட்டுப்படுத்தி வைப்பதற்கு ஸ்ராலினிஸ்டுகள் தலைப்படுகின்றனர்.

கருணாநிதி குடும்பத்தாரால் தலைமை நடத்தப்படும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் எதிரிக் கட்சியான நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய தமிழகத்தின் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு பிற்போக்குவாத கட்சிகளுக்கு இடையே ஸ்ராலினிச சிபிஎம் மாறி மாறி கூட்டணி வைத்து வந்திருக்கிறது.

ஜெயலலிதா தீவிரமான தொழிலாளர்-விரோத அரசியல்வாதியாக இருந்தபோதிலும் “மக்கள் பிரச்சினைகளில்” இணைந்து போராட சிபிஎம் அவரை அணுகியிருக்கிறது. 2003ம் ஆண்டில் கூடுதல் ஊதியம் மற்றும் நல ஆதாயங்கள் கோரி வேலைநிறுத்தம் செய்த நூறாயிரக்கணக்கான அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்தார் ஜெயலலிதா. (காணவும்: இந்தியா: தமிழக அரசாங்கம் தொழிலாளர்களை வேட்டையாடுவதை தொடர்கிறது”). ஆயினும் 2011ல் வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயல்வதிலிருந்து சிபிஎம் கட்சியை இது தடுக்கவில்லை.

செப்டம்பர் 7 வேலைநிறுத்தத்திற்கு இந்திய தொழிலாள வர்க்கம் அளித்த பாரிய ஆதரவு அதன் கோபமும் போர்க்குணமும் பெருகிக் கொண்டிருப்பதற்கு சாட்சியம் கூறுகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமையடித்துக் கொண்டிருக்க, ஏற்கனவே அபாயமான வாழ்க்கை நிலைமைகளைக் கொண்டிருந்த தொழிலாள வர்க்கமோ ஒரு பக்கம் உணவுப் பொருட்களின் கடிவாளமற்ற விலை அதிகரிப்பு இன்னொரு பக்கம் வருவாய் வீழ்ச்சி என இருபக்க நெருக்குதல்களால் பிழியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாக்ஸ்கான் ஆலைக்கு உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் சென்றபோது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆலையின் வாயில்கதவுகளுக்கு வெளியே கூடியிருந்தனர். சீருடை அணியாத போலிசார் உட்பட பெருமளவில் போலிசார் குவிக்கப்பட்டு சூழ்நிலையே அச்சுறுத்துவதாக இருந்தது. இதனால் தொழிலாளர்கள் தங்கள் முதல் பெயர்களை மட்டுமே கூறிப் பேசினர்.

24 வயது ஸ்ரீகாந்த் உ.சோ.வ.த.விடம் கூறினார்: “நான் இந்த நிறுவனத்தில் நான்கு வருடங்களாய் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மாதம் 4,800 ரூபாய் ($104) சம்பளம். இந்த நிறுவனத்தின் ஊதியங்கள் 2,900 ரூபாயில் ($63) இருந்து 4,800 ரூபாய் வரை இருக்கும். ஏறும் விலைவாசிக்கு இந்த ஊதியங்கள் மிகக் குறைவானவை. நிர்வாகத்திற்கு சாதகமான சங்கத்தையே நிறுவனம் விரும்புகிறது. அந்த சங்கத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அந்த தொழிற்சங்கத்திடம் பேசுமாறு நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது.”

ஆலைக்குள் இருக்கும் மோசமான நிலைமைகள் குறித்தும் அந்த இளம் தொழிலாளர் பேசினார். “மலிவு உழைப்பைச் சுரண்டும் பொருட்டு பல கிராமங்களில் இருந்தும் தொழிலாளர்கள் பேருந்து மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இந்த தொழிலாளர்கள் ஏழை விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களில் இருந்து வருபவர்கள். ஒவ்வொரு நாளும் போக்குவரத்திலேயே அவர்களுக்கு ஆறு மணி நேரம் கூடுதலாய் போய் விடுகிறது. ஆலை வளாகங்களுக்குள் தொழிலாளர்களுக்கு உணவக வசதி இல்லை.”

”நாங்கள் காலவரையற்று போராடி வரும் நிலையிலும் சுமார் 400 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.”

தொழிற்சங்க செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக 23 தொழிலாளர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்திருப்பதாக ஸ்ரீகாந்த் தெரிவித்தார். “சேமநல நிதி (PF) மற்றும் ஊழியர் சமூக காப்பீடு (ESI) ஆகியவற்றைத் தவிர எங்களுக்கு வேறு எந்த நல உதவிகளும் கிடையாது.”

23 வயது காசி கூறினார்: “இலக்குகள் நிர்ணயித்து கடுமையாக வேலை செய்ய எங்களைப் பணிக்கிறார்கள். எங்களது பிரதான கோரிக்கை ஊதிய உயர்வும் எங்கள் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதும் தான். ரூ 15,000 ($326) மாத சம்பளம், பிடித்தங்கள் போக, வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகையாக ரூ. 10,000 ($217) தான் நாங்கள் கேட்கிறோம். எங்களது தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படாத பட்சத்தில் எங்களது போராட்டம் தொடரும்.”

20 வயதான பெண் தொழிலாளரான சுசிலா கூறினார்: “மறியல் போராட்டத்தின் போது போலிசாரால் நான் தாக்கப்பட்டேன். போலிசார் தாக்கியதில் இன்னொரு தொழிலாளருக்கு இரத்தம் கொட்டியது. நான் கைது செய்யப்பட்டேன்.” அவரைத் துன்புறுத்திய போலிஸ் “நீ வருவது வேலைக்கா அல்லது வேறெதுக்குமா?” என்று கேட்டு ஆத்திரமூட்டியதாய் அவர் தெரிவித்தார்.

இன்னொரு பெண் தொழிலாளர் கூறினார்: “இந்த நிறுவனத்தில் நான் நான்கு வருடங்களாக வேலை செய்கிறேன். எனக்கு 3000 ரூபாய் ($65) சம்பளம். என் கணவர் இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவரது சம்பளம் மாதம் 5,000 ரூபாய் ($108). ஏறும் விலைவாசியில் எங்கள் இருவரது சம்பளத்தையும் சேர்த்தும் எங்களது குடும்பத்தை நடத்துவதென்பது சிரமமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் பயமாய் இருக்கிறது.”

தொழிலாளர்களின் மனஉணர்வுகளும் போர்க்குண மனோநிலையும் இருந்தபோதிலும், ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிஐடியு இந்த போராட்டத்தை கருக்கலைத்து, நிர்வாகம் அதனது விருப்பத்தை திணிக்க அனுமதிக்கக் கூடிய அபாயம் அனைத்தும் இருக்கிறது.