சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Sri Lankan constitutional changes entrench autocratic rule

இலங்கை அரசியலமைப்பு மாற்றங்கள் எதேச்சதிகார ஆட்சியை பலப்படுத்துகின்றன

Wije Dias
21 September 2010

Use this version to print | Send feedback

இலங்கை பாராளுமன்றத்தில் இந்த மாத முற்பகுதியில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள், பூகோள நிதி மூலதனம் கோரும் சிக்கன வேலைத் திட்டத்தை திணிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ள வழிமுறைகள் பற்றி இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.

செப்டெம்பர் 8 அன்று நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தம், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான முழுமையாக வளர்ந்த பொலிஸ் அரசை நோக்கிய இன்னுமொரு நகர்வாகும். ஏற்கனவே அவருக்கு உள்ள விரிவான நிறைவேற்று அதிகாரங்களுக்கு மேலதிகமாக, இப்போது பிரதான அரச அதிகாரிகளை நியமிப்பதற்கு அவருக்கு சுதந்திரம் இருப்பதோடு அவரால் கால வரையறையின்றி அதிகாரத்தில் இருக்கவும் முடியும்.

2005 கடைப்பகுதியில் இருந்து இராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சிபுரிந்து வருகின்றார். அதிகாரத்துக்கு வந்து ஏழே மாதங்களில், சர்வதேச ரீதியில் மத்தியஸ்தம் வகிக்கப்பட்டு 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை விளைபயனுள்ள வித்தத்தில் கிழித்தெறிந்து, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்தார். அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன், இராஜபக்ஷ யுத்தத்தை 2009 மே மாதம் முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்த யுத்தத்தில் பத்தாயிரக்கணக்கான சிவிலியன்கள் பலியாகினர்.

இராஜபக்ஷவின் யுத்தமானது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடியான தாக்குதலையும் இணைத்துக்கொண்டுள்ளது. தனது அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்திய அவர், பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சு போன்ற பிரதான பதவிகளை தன்வசம் வைத்திருந்ததோடு இராணுவத்தின் முப்படைத் தளபதியாகவும் இருக்கின்றார். உறவினர்கள், ஜெனரல்கள், விசுவாசிகள் மற்றும் பொறுக்கி எடுக்கப்பட்ட அரச அதிகாரிகளின் குழு ஒன்றின் ஊடாக அவர் ஆட்சி செய்கின்ற நிலையில், பாராளுமன்றமும் அமைச்சரவையும் மேலும் மேலும் ஓரங்கட்டப்படுகின்றன. இன்னமும் அமுலில் உள்ள அவசரகால நிலைமைகளின் கீழ், இந்த அரசாங்கம் ஆயிரக்கணக்கானவர்களை, பிரதானமாக தமிழர்களை விசாரணையின்றி தடுத்து வைத்துள்ளது. பாதுகாப்புப் படைகளுடன் கூட்டாக செயற்படும் அரசாங்க-சார்பு கொலைப்படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் “காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்” அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயர்மட்ட நியமனங்களை மேற்பார்வை செய்வதற்கான அரசியலமைப்புச் சபையை அமைக்கக் கோரும், மற்றும் பொலிஸ், பொதுச் சேவை, தேர்தல்கள், நிதித்துறை சேவைகள் மற்றும் மோசடி விசாரணைகளை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன சபைகளை ஸ்தாபிக்க கோரும் 17வது திருத்தச் சட்டத்தை 18வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்கின்றது. இராஜபக்ஷவின் கீழ், 17வது திருத்தம் ஒரு இறந்த கடிதமாக இருந்தது. உயர் நீதிமன்றம் அரசியலமைப்புச் சபையை ஸ்தாபிக்குமாறு அவருக்கு கட்டளையிட்ட போது, அந்த தீர்ப்பை இராஜபக்ஷ அலட்சியம் செய்தார். அந்த அரசியலமைப்புச் சபை, இப்போது ஒரு பாராளுமன்ற சபையால் பதிலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆலோசனை கூற மட்டுமே முடியும், ஆனால் ஜனாதிபதியின் நியமனங்களை மீற முடியாது.

இந்த அரசியலமைப்பு மாற்றங்கள், ஆறாண்டுகால ஜனாதிபதி பதவியை ஒருவர் இருமுறைக்கு மேல் வைத்திருக்காமல் மட்டுப்படுத்தும் விதியையும் அகற்றுகின்றது. அமைச்சர்களை பதவி விலக்கவும், நிறைவேற்று அதிகாரங்களை அமுல்படுத்தவும் மற்றும் கட்டளையின் மூலம் ஆட்சி செய்யவும் விரிவான அதிகாரங்களைக் கொண்டுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஸ்தாபிப்பதற்கு வெகுஜனங்கள் மத்தியில் பரந்தளவு எதிர்ப்பு இருந்த காரணத்தாலேயே, 1978 அரசியலமைப்பில் பதவிக் காலத்தை இருமுறைக்கு மட்டுப்படுத்தும் விதி சேர்க்கப்பட்டது. அத்தகைய சக்திவாய்ந்த பதவியின் நன்மைகளை எடுத்துக்கொண்டால், வாழ்க்கைப் பூராவும் ஜனாதிபதியாக இருப்பதற்கு இராஜபக்ஷவுக்கு இப்போது கதவு திறந்துவிடப்பட்டுள்ளது.

இராஜபக்ஷ இந்த திருத்தத்தை ஒரு அவசர மசோதாவாகவே பாராளுமன்றத்தின் ஊடாக நகர்த்தினார். இதன் மூலம் வெகுஜனங்கள் மத்தியிலான கலந்துரையாடல் தடுக்கப்பட்டதோடு பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஒழுங்குகள் அனைத்தையும் மீறிய ஒரு நகைப்புக்கிடமான சில மணித்தியால விவாதத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. அரசியலமைப்பிலான பெரும் மாற்றங்கள் கருத்துக்கணிப்பின் மூலம் ஒப்புதலளிக்கப்பட வேண்டியதாக இருந்த போதிலும், இந்த விடயத்தில் அது தேவையில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசியலமைப்பு மாற்றங்களை துரிதப்படுத்தும் அரசாங்கத்தின் இயலுமை, பாராளுமன்ற எதிர்க் கட்சியின் செயலற்ற பண்பிலேயே தங்கியிருந்தது. புலிகளின் தோல்வியை பயன்படுத்திக்கொண்ட இராஜபக்ஷ, ஜனவரியில் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக வெற்றி பெற்றதோடு, ஏப்பிரலில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களிலும் மிகப் பெரும்பான்மையை வென்றார். அநேகமான வாக்காளர்கள் எதிர்க் கட்சிகளுக்கு மாற்றீடு இல்லை என்பதைக் கண்டதாலேயே இது சாத்தியமானது. இராஜபக்ஷவின் இனவாத யுத்தம், அவரது ஜனநாயக விரோத வழிமுறைகள் மற்றும் அவரது சந்தை-சார்பு பொருளாதார வேலைத் திட்டத்தையும் எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) ஆதரித்தன.

அரசியலமைப்பில் மாற்றம் செய்யத் தேவையான மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற சிறிய பற்றாக்குறையே நிலவிய நிலையில், இராஜபக்ஷ அரசாங்க பதவிகள் மற்றும் ஏனைய நன்மைகளையும் வழங்கி யூ.என்.பி. மற்றும் ஏனைய பல சிறு கட்சிகளில் இருந்து தேவையானளவு உறுப்பினர்களை இலகுவாக தம்பக்கம் இழுத்துக்கொண்டார். 1978 அரசியலமைப்புக்குப் பொறுப்பான மற்றும் ஜனநாயக விரோத வழிமுறைகளுக்கு இழிபுகழ்பெற்ற யூ.என்.பி., அரசியலமைப்பு மாற்றத்துக்கான வாக்கெடுப்பை பகிஷ்கரித்தது. 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரித்த ஜே.வி.பி, ஒரு வலுவற்ற மறியல் போராட்டம் ஒன்றை நடத்தியது. மசோதாவுக்கு எதிராக 17 வாக்குகளே அளிக்கப்பட்டன.

இந்த வாக்கெடுப்பு, உழைக்கும் மக்களுக்கும் ஒட்டு மொத்த கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துக்கும் இடையிலான ஆழமான பிளவை மட்டுமே கோடிட்டுக் காட்டுகின்றது. ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், புறக்கணிப்பு வீதமானது 40 சதவிகிதம் என்ற பிரமாண்டமான எண்ணிக்கையை எட்டியிருந்தது. டெயிலி மிரர் பத்திரிகை கூட, “அவர் (இராஜபக்ஷ) மசோதாவுக்கு [18வது திருத்தத்துக்கு] ஆதரவாக மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பாராளுமன்ற பெரும்பான்மையை திரட்டிக்கொண்டார் என்பது உண்மை. எவ்வாறெனினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் நிறைந்து வழியும் பெரும்பான்மையானது தவறானது என நாட்டுமக்களில் பெரும்பான்மையானவர்கள் சிந்திக்கின்றனர்,” என அதன் ஆசிரியர் தலைப்பில் எழுதியிருந்தது.

இராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் திருத்தத்துக்கான காரணத்தையிட்டு முழுதும் வெளிப்படையாக உள்ளனர். அது, இலங்கையை “தெற்காசியாவின் அதிசயமாக” மாற்றுவதற்கும் தேசத்தை கட்டியெழுப்புவதற்குமான ஒரு “பொருளாதார யுத்தத்தை” முன்னெடுப்பதற்காக அதிகாரத்தில் “ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை” பலப்படுத்துவதற்கேயாகும். லீ குவான் யூ வின் 30 ஆண்டுகால ஆட்சி மற்றும் சிங்கப்பூரில் அவரது எதேச்சதிகார அரசாங்கத்துடன் ஒப்பிடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

எவ்வாறெனினும், 1960கள் மற்றும் 1970களில் சிங்கப்பூர் போல் இலங்கை 2010ல் இல்லை. யுத்தத்தால் கடன் சுமை கொண்டுள்ள மற்றும் பூகோள நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை அரசாங்கமானது, உலகில் உள்ள ஏனைய அரசாங்கங்களைப் போலவே கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிக்கவேண்டிய நெருக்குவாரத்தில் உள்ளது. வாழ்க்கைத் தரம் சீரழிந்து வருவது தொடர்பாக உழைக்கும் மக்கள் மத்தியில் வெடிக்கவுள்ள தவிர்க்க முடியாத எதிர்ப்பைத் தடுக்கத் தயாராகும் வகையில் இராஜபக்ஷ அதிகாரத்தில் தனது பிடியை பலப்படுத்துகின்றார்.

“ஸ்திரமான” மற்றும் “பலமான” அரசாங்கத்துக்கு அழைப்பு விடுப்பது இலங்கைக்கு மட்டும் உரிய விடயம் அல்ல. அரசாங்கங்களின் கொள்கைகளால் ஏற்படுத்தப்படும் சமூக நெருக்கடி பற்றி வெகுஜனங்கள் மத்தியில் தெளிவும் எதிர்ப்பும் வளர்ச்சிகாண்பதை அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் நிலையில், அரசியல் ஸ்திரமின்மை மேலாதிக்கத்துக்கு வருகின்றது. ஆஸ்திரேலியாவில் நடந்த நான்கு மாதகால அரசியல் கொந்தளிப்பு, 70 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு தொங்கு பாராளுமன்றத்தை விளைவாக்கியது. பசுமைக் கட்சியினரின் ஆதரவிலான லேபர் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக இடம்பெற்ற சூழ்ச்சித் திட்டங்களில், இதுவரை பெரும் வர்த்தகர்களும் ஊடகங்களும் கவலை கொண்டுள்ளது போல், மேலும் சந்தை-சார்பு “மறுசீரமைப்புக்களை” அமுல்படுத்த “அரசியல் உறுதிப்பாட்டுக்கான” தேவையே பிரதான விவகாரமாக இருந்து வருகின்றது.

இதே போல், கடந்த மே மாதத்திலும், பிரிட்டிஷ் பொது தேர்தலும் ஒரு தொங்கு பாராளுமன்றத்தை உருவாக்கியது. லேபர் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் என்ற முறையில் ஒரு பக்கம் ஒதுங்கிய கோர்டன் பிரௌன் பிரகடனம் செய்ததாவது: “பலமான ஸ்திரமான அரசாங்கமொன்று இன்றியமையாதது என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். அது எதிர்வரவுள்ள சவால்களை சமாளிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெறக்கூடியதாகவும் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.” இப்போது, ஒரு கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயகக் கூட்டணி, தாட்சருக்குக் கீழ் மேற்கொள்ளப்பட்ட இழிபுகழ்பெற்ற செலவு வெட்டுக்களுக்கும் அப்பால் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களை திணிக்கின்றது.

சமூக பதட்ட நிலைமைகள் கூர்மையடைகின்ற நிலையில், பாராளுமன்ற முறையின் மூலம் மிகவும் அபகீர்த்தியான கொள்கைகளை திணிப்பதற்கு ஆளும் வர்க்கத்துக்கு உள்ள இயலுமை மேலும் சிக்கலுக்குள்ளாவதோடு, அது எதேச்சதிகாரத்துக்குத் திரும்புவதுடன் பாராளுமன்றத்துக்குப் புறம்பான ஆட்சி வடிவங்கள் உருவாக்கப்படும். குறிப்பிடத்தக்க வகையில், பேர்லின் ஹம்பொல்ட் பல்கலைக்கழகத்தின பேராசிரியர் ஹேர்பிரைட் மங்க்லர், இந்த ஆண்டு முற்பகுதியில் ஒரு நீண்ட கட்டுரையுடன், “ஜனநாயகத்தை காலியாக்குதல்” மற்றும் எதேச்சதிகார ஆட்சி வழிமுறைக்கான நோக்கம் சம்பந்தமாக, “சர்வாதிகார” விவகாரத்தை பொதுக் கலந்துரையாடலுக்கு விட்டார்.

1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பூகோள பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் விரிவடைந்து வருகின்ற நிலையில், உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருப்பது என்ன என்பது பற்றிய ஒரு முன்னறிவிப்பே இலங்கையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உச்சகட்ட சீரழிவாகும். பிற்படுத்தப்பட்ட முதலாளித்துவ நாடுகளிலும் சரி முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் சரி, ஒரே அரசியல் மாற்று மருந்தாக இருப்பது, ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான சக்தியாக தொழிலாள வர்க்கம் எழுச்சி பெறுவதேயாகும். ஜனநாயக உரிமைகளைக் காப்பதானது, உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராக ஒரு சில செல்வந்தர்களின் நலன்களைக் காக்கும் முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசும் போராட்டத்துடன் பிணைந்துள்ளது.