சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

As US “recovery” collapses, White House rules out social relief

அமெரிக்கப் பொருளாதார “மீட்பு” சரிகையில், வெள்ளை மாளிகை சமூக உதவி நிதிகளை மறுக்கிறது

Barry Grey
1 September 2010

Use this version to print | Send feedback

சமீபத்திய வாரங்களில் அமெரிக்க வீடுகளின் விற்பனைகள் சரிவைக் கண்டுள்ளன, உற்பத்தித் துறையில் வலுவற்ற நிலையைக் காண்கின்றன, வேலையின்மையில் உள்ளோர் உதவி கோருதலில் ஏற்றத்தைக் காண்கின்றன, வெள்ளியன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 2.4 சதவிகிதத்தில் இருந்து 1.6 சதவிகிதமாக வீழ்ச்சியும் அடைந்தது.

கடைசி புள்ளிவிவரம் பெருமந்த நிலைக்குப் பின் மிக அதிக அளவில் இருக்கும் வேலையின்மை விகிதத்தைக் குறைக்கத் தேவையான பொருளாதார விரிவாக்க விகிதத்தை விட மிகவும் குறைவு ஆகும். மாறாகப் பொருளாதார வளர்ச்சியின் தீவிரக் குறைப்பு என்பது வேலையின்மை விகிதத்தை இன்னும் அதிகமாக்கும் வாய்ப்பைத்தான் கொண்டுள்ளது.

மாதத்தின் பின் மாதமாக வெகுஜன வேலையின்மை பெருகியதுடன், மாநில மற்றும் உள்ளூர் மட்டத்தில் சமூக நலச் சேவைகளில் பெரும் குறைப்புக்களால் இடர்கள் அதிகமாகியுள்ள நிலையில், தனியார் மற்றும் பொதுத் துறைகளில் ஊதியக்குறைப்புக்கள் பெருகியுள்ள நிலையும் ஏற்கனவே பல மில்லியன் அமெரிக்கர்களுக்கு சமூகப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மில்லியன் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வீடுகள் முன்கூட்டியே விற்பனைக்கு வருவதை ஒட்டி வீடுகளை இழக்கின்றனர். பட்டினியும், வீடற்ற நிலையும் உயர்கின்றன.

மந்த நிலையானது ஆறு அமெரிக்கர்களில் ஒருவர் வாழ்க்கை நடத்துவதற்கே அரசாங்கத்தின் உதவியை நம்பியிருக்கும் விளைவைக் கொடுத்துள்ளது என்று திங்களன்று USA Today தகவல் தெரிவிக்கிறது. வறியவர்கள் மற்றும் இயலாத 50 மில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் மருத்துவ உதவிக்காக கூட்டாட்சி-மாநில சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தில் தங்கியுள்ளனர். இது டிசம்பர் 2007ல் மந்த நிலை தொடங்கியதில் இருந்து குறைந்தபட்சம் 17 சதவிகிதம் அதிகம் ஆகும்.

40 மில்லியனுக்கும் மேலான மக்கள் உணவு முத்திரை உதவியைப் பெறுகின்றனர், இது சரிவு ஆரம்பித்ததிலிருந்து 50 சதவிகிதம் அதிகம் ஆகும். கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர்கள் வேலையின்மை நலன்களைப் பெறுகின்றனர், இது 2007 எண்ணிக்கையைப் போல் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம் ஆகும். 4.4 மில்லியன் மக்கள் பொதுநல உதவியில் உள்ளனர், இது மந்த நிலை தொடங்கியதிலிருந்து 18 சதவிகித அதிகரிப்பு ஆகும்.

தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் செல்வந்தர்கள் இன்னும் அதிக செல்வக் கொழிப்பை பெற்றுள்ளனர். பெருநிறுவன இலாபங்கள் பெரிதும் உயர்ந்துள்ளன, காரணம் ஆட்கள் குறைப்பு மற்றும் செலவினக்குறைப்புக்கள் ஆகும். பங்குச் சந்தை 2009ல் இலையுதிர் காலத்தில் கொண்டிருந்த மிக மோசமான நிலையில் இருந்து மீண்டுவிட்டிருக்கிறது. பெரும் நிர்வாகிகள் தங்களுக்கு 7 மற்றும் 8 இலக்க ஊதியத் தொகுப்பைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

வோல் ஸ்ட்ரீட்டின் பொறுப்பற்ற தன்மை, குற்றம் சார்ந்த தன்மை ஆகியவற்றால் ஏற்பட்ட நிதிய நெருக்கடி வெடித்து இரு ஆண்டுகளுக்குப் பின்னர், நிதிய உயரடுக்கிற்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள பெரும் பிளவு எப்பொழுதையும் விட அதிகமாகிவிட்டது. செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட்டின் மீட்சியானது நியூ யோர்க் நகரத்தில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே மேலும் துருவப்படுத்தலை அதிகரித்துள்ளது என்று எழுதியுள்ளது. நிர்வாக மட்ட தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்த ஊதியத்தை விடச் சராசரி ஊதியம் 11 சதவிகிதம் அதிகம் என்றுள்ள நிலையில் நிர்வாக மட்டமற்ற தொழிலாளர்களின் சராசரி வருமானம் 10.4 சதவிகிதம், அதாவது 472 டாலருக்கு குறைந்துவிட்டது.

பிந்தைய புள்ளி விபரமும் உத்தியோகபூர்வ நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கான வறுமைக்கோட்டு வருமானமான ஆண்டிற்கு 22,000 டாலர் என்பதில் இருந்து சற்றே கூடுதலாகத்தான் உள்ளது. இந்த அபத்தமான குறைபாடுடைய முன்னேற்ற நிலை நியூ யோர்க் நகரத்தில் அதன் அர்த்தம் மிக வறுமை நிலைக்கு அருகில் இருப்பதாகும்.

ஒபாமா நிர்வாகம், மற்றும் முழு அரசியல் நடைமுறையும் “மீட்பு” எனப்பட்டதின் சரிவிற்கு காட்டும் விடையிறுப்பு வேலைகளைத் தோற்றுவிக்க கணிசமான செலவு செய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை உடனடியாக நிராகரிப்பதாகத்தான் உள்ளது.

வெள்ளை மாளிகையிலிருந்து திங்களன்று ரோசாப் பூங்காவில் பேசிய ஒபாமா அவருடைய 30 பில்லியன் டாலர் சிறுவணிக சட்டத்தைக் குடியரசுக் கட்சியினர் நிறுத்திவைத்ததுதான் காரணம் என்று குறை கூற முற்பட்டுள்ளார்—இதுவே ஒரு பெயரளவு நடவடிக்கை, முக்கியமாக வரிக் குறைப்புக்கள் மற்றும் சிறு, பெருவணிகங்களுக்கும் “சமூக” வங்கி என்று அழைக்கப்படுபவற்றிற்கும் கொடுக்கப்படுவது. இதற்கும் மேலாக அவர் இன்னும் அதிக வரிக் குறைப்புக்கள் வணிகத்திற்கு, புதுப்பிக்கப்படக்கூடிய விசைத் திட்டங்களுக்கு ஊக்கம் என்றும் பேசியுள்ளார்; பொருளாதாரத்தை மீட்க “வெள்ளித் தோட்டா” ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரொபேர்ட் கிப்ஸ் பெரும் முன்முயற்சிகள் ஏதும் இரா என்பதை ஒப்புக்கொண்ட விதத்தில், “செய்யக்கூடியது இவ்வளவுதான்” என்றார். பெருவணிகத்திற்கு வேலையில்லாத தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க பொது நிதிகள் வழங்கப்பட மாட்டாது என்று அவர் உத்தரவாதம் கொடுத்து, நிர்வாகத்தில் “இலக்கு வைக்கப்பட்ட முயற்சிகள் தனியார்துறை முதலீடு மட்டும் செய்வதோடு இல்லாமல் வேலை கொடுக்கும் சூழ்நிலையை தோற்றுவிப்பதாக” இருக்கும் என்றும் கூறினார்.

ஞாயிறன்று தலையங்கத்திற்கு எதிர்ப் பக்க கட்டுரை ஒன்றில் நியூ யோர் டைம்ஸ் எழுதியது: “அரசியல் உலகில் ஒரு அபூர்வமான ஒருமித்த உணர்வு வந்துள்ளது: வருங்காலம் பெரிதும் சிவப்பு மையில் எழுதப்பட்டுள்ளது, கடன் வாங்குதல் அவை வேலையை தோற்றுவித்தலுக்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் என்று கூறினாலும் காங்கிரஸ் தேர்தல்களுக்கு முந்தைய மாதங்களில் அரசியல் அளவில் பெரும் இடர்களைக் கொடுத்துவிடும். இதன் விளைவு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே பணத்தை தீவிரமாகச் செலவழிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயாராக இல்லை.”

ஓராண்டிற்கு முன்தான் ஒபாமா தன்னால் “என்ன முடியுமோ அனைத்தையும்” வங்கிகள் பிணை எடுப்பிற்கு செய்வதாக அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அதைத்தான் அவர் செய்தார், டிரில்லியன் கணக்கில் மக்களின் வரிப்பண டாலர்களை வோல் ஸ்ட்ரீட்டின் சூதாட்டக் கடன்களை தீர்ப்பதற்காக. அதே நேரத்தில் அவர், CEO (தலைமை நிறைவைற்று அதிகாரிகள்) சம்பளத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தார், பெருநிறுவனக் குற்றவாளிகளை அவர்கள் தோற்றுவித்த பேரழிவிற்குப் பொறுப்பாக்க மறுத்து விட்டார்.

இதன்பின் அவர் தலையிட்டு ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லரைத் திவால்தன்மைக்குக் கட்டாயப்படுத்தினார். புதிதாக சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு 50 சதவிகித ஊதியக் குறைப்பைச் சுமத்தினார். அதுவே பெருநிறுவன மற்றும் அரசாங்க ஊதியங்கள் குறைப்பிற்கு அடையாளமாயிற்று, இப்பொழுது அது தீவிரமாகியுள்ளது.

இப்பொழுது வேலைகளுக்கோ, பள்ளிகளுக்கோ, வீடுகளுக்கோ, வேலையற்றோரின் உதவிநிதிக்கோ “பணம் இல்லை” என்று கூறப்படுகிறது. இது அமெரிக்க வங்கிகளும் பெருநிறுவனங்களும் 1 டிரில்லியன் டாலருக்கும் மேலான பொது நிதிக்குவிப்பின் மீது அமர்ந்திருக்கும் நிலையில் கூறப்படுகிறது.

நிர்வாகமும் சட்டமன்ற ஜனநாயகவாதிகளும் நவம்பர் தேர்தல்களுக்கு முன்பு கடும் சிக்கன நடவடிக்கை வேண்டும் என்று கோரும் விதத்தில் தீவிர ஊக்கப் பொது நடவடிக்கைகளில் ஈடுபடத் தடையைக் கொண்டுள்ளனர் என்று செய்தி ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. இது ஒரு மோசடி ஆகும்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு மக்கள் தளம் இருக்கிறது என்பதற்கு முற்றிலும் மாறாக எதிரிடையனதுதான் உண்மை. இது ஜூன் மாதம் எடுக்கப்பட்ட கால கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அது 60 சதவிகித்தினர் அரசாங்கம் ஊக்கப்பொதி அளித்து வேலைகளை தோற்றுவிப்பதற்கு ஆதரவு கொடுத்தனர் என்று கூறியுள்ளது; இம்மாதம் நடந்த கருத்துக் கணிப்பு 85 சதவிகிதத்தினர் பற்றாக்குறையை குறைப்பதற்காக சமூகப் பாதுகாப்புக்களை குறைக்க வேண்டும் என்பதை எதிர்க்கின்றனர் என்பதையும் காட்டியுள்ளது.

ஒபாமாவின் 862 பில்லியன் டாலர் 2009 ஊக்கப் பொதிக்கும் அவருடைய நிர்வாகத்தின் வெளிப்படையான இன்றைய சிக்கன மாறுதலுக்கும் இடையே முரண்பாடு ஏதும் இல்லை. இரண்டுமே அமெரிக்க நிதிய பெருவணிக உயரடுக்கின் இரக்கமற்ற வர்க்கக் கொள்கை செயல்படுத்தவதைத்தான் பிரதிபலிக்கின்றன.

கடந்த பெப்ருவரி ஊக்கப் பொதிச்சட்டம்—பெரும்பாலும் வரிக் குறைப்புக்கள் மற்றும் வணிகத்திற்கு பிற ஊக்கங்கள் நிறைந்தவை—கவனத்துடன் நுகர்வோர் செலவுச் சரிவைக் குறைக்கும் வடிவமைப்பைக் கொண்டவை; அதனால் ஒரு சமூக வெடிப்புத்தன்மை தவிர்க்கப்படும்; அரசாங்கம் “முக்கிய தெருவிற்கு” ஏதோ செய்வதான ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படும்—இதையொட்டி வங்கிப் பிணைப்பை நடத்த அவகாசம் கிடைக்கும், மேலும் பெருநிறுவன இலாபங்கள், பங்குச் சந்தை புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான நிலைமைகளும் தோற்றுவிக்கப்படும்.

இந்த இலக்குகள் அநேகமாக அடையப்பட்ட நிலையில், குறைந்தபட்சம் தற்போதைக்கேனும், ஆளும் வர்க்கம் வேலையின்மை விகிதத்தை உயர்த்தியே வைத்திருக்கவும், வேலையின்மையைப் பயன்படுத்தி நிரந்தரமாக அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்கள், நிலைமைகளை 1930 களில் இருந்ததற்கு ஒப்பாகக் குறைக்கவும் தீவிரமாக உள்ளது; அதேபோல் அமெரிக்க தொழிலாளர்களுக்கும் மிகப் பெரிய அளவில் சீனாவிலும் பிற “எழுச்சியுறும் பொருளாதாரங்களிலும்” பெரும் சுரண்டலுக்கு உட்படும் தொழிலாளர்களுக்கு இடையே தொழிலாளர் செலவினங்களின் இடைவெளி குறைக்கப்படவும் முயற்சிகள் நடக்கின்றன.

இத்தான் சுருக்கமாக ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை; இரு பெரு வணிகக் கட்சிகளின் கொள்கையும் இதுதான் —தந்திரோபாயங்கள் அவற்றிடையே வேறுபட்டிருந்தாலும். நொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பையும் பெருகும் சீற்றத்தையும் அடக்குவதற்கும், வெகுஜன எதிர்ப்பைத் தடுப்பதற்கும் தொழிற்சங்கங்களை அவை நம்பியுள்ளன. ஆளும் வர்க்கத்தின் வர்கப் போர் கொள்கைக்கு தொழிற்சங்கங்கள் முழு ஆதரவைக் கொடுக்கின்றன—இதுதான் AFL-CIO, Service Employees International Union ஆல் கடந்த வாரம் அவை ஒன்று சேர்ந்து இடைக்கால தேர்தல்களுக்கு ஜனநாயகக் கட்சிக்கு 80 மில்லியன் டாலர் நிதி திரட்டுவோம் என்ற அறிவிப்பின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

தொழிற்சங்கங்களால் பரந்த சமூகப் போராட்டங்களின் வெடிப்பைத் தடுக்க இயலாது. ஏற்கனவே வரவிருக்கும் கொந்தளிப்புக்களின் முதல் அடையாளங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன; இவை தொழிலாளர்கள் பெருநிறுவன தொழிற்சங்கக் கருவிகளுக்கு எதிராக நவடிக்கையில் ஈடுபடுவர் என்பதைக் காட்டுகின்றன. அதுதான் கடந்த மாதம் ஜெனரல் மோட்டார்ஸின் இந்தியானாபொலிஸ் உலோக பொருத்தும் ஆலை ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்தின் முயற்சியான 50 சதவிகித ஊதிய வெட்டைச் சுமத்துவதை நிராகரித்ததின் முக்கியத்துவம் ஆகும்.

தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்கங்களிடம் இருந்து முறித்துக் கொண்டு ஜனநாயக முறையில் அடிமட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைத்து ஆலை ஆக்கிரமிப்புக்கள், பணிநீக்கங்கள், ஆலை முடல்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் இவற்றிற்கு ஏற்பாடு செய்து, முழுத் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவையும் அணிதிரட்ட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது. இத்தொழில்துறை நடவடிக்கை ஒபாமா, பெரு வணிகத்தின் இரு கட்சிகள் இவற்றிற்கு எதிரான அரசியல் போராட்டத்துடன் இணைந்து, நிதியப் பிரபுத்துவத்தின் இடுக்கிப்பிடியை உடைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வேலையற்ற தொழிலாளருக்கும் கௌரவமான வேலையை அளிக்க பொதுப் பணிகள் திட்டம் அவசரமாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுகிறோம். பள்ளிகள் கட்ட, வசதியுடன் வாங்க/வாடகைக்கு இருக்கக் கூடிய வீடுகள் கட்ட, மருத்துவமனைகள் கட்ட, பொது உள்கட்டுமானத்தை மறுகட்டமைக்க மில்லியன் கணக்கானவர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அத்தகைய திட்டத்திற்கான ஆதராங்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதின் மூலம் பெறப்பட முடியும் மற்றும் பெற வேண்டும்--இது வங்கியாளர்கள், ஒதுக்குநிதி (Hedge fund) உரிமையாளர்கள் மற்றும் பெருநிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரிகள் (CEO) ஆகியோரிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பொருளாதார வாழ்வு மறுசீரமைக்கப்பட வேண்டும்.