சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Resolution of the Socialist Equality Party Congress

Twenty-Five Years Since the Split with the Workers Revolutionary Party

சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டின் தீர்மானம்

தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவிற்குப் பின் 25 ஆண்டுகள்.

30 August 2010

Use this version to print | Send feedback

ஆகஸ்ட் 11-15, 2010ல் சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) முதலாவது முறையாக அதன் தேசிய மாநாட்டை மிச்சிகன் ஆன் ஆர்பரில் நடத்தியது. மாநாட்டின் தீர்மானங்கள், அறிக்கைகளை உலக சோசலிச வலைத் தளம் வெளியிடுகிறது. மாநாட்டின் முதல் நாளில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானம் “தொழிலாளர் புரட்சிக் கட்சியிடமிருந்து பிளவிற்கு 25 ஆண்டுகளுக்கு பின்” என்பதில் இருந்து தொடர்கிறோம். முன்னதாக உலக சோசலிச வலைத் தளம் “லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலையில் இருந்து 75 ஆண்டுகளுக்குப் பின்” என்ற தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

***

சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாடு அதன் உளமார்ந்த புரட்சிகர வாழ்த்துக்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளின் அதன் சக சிந்தனையாளர்களுக்கும், தோழர்களுக்கும் தெரிவிக்கிறது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் மார்க்சிசத்தின் அபிவிருத்திக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு நிறைவு வேளையில் சோசலிச சமத்துவக் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டு அனைத்துலகக் குழுவிற்கும் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கும் இடையே பிளவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் முடிவதைக் குறிக்கிறது. இந்த அரசியல் போராட்டமானது ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அசாதாரண வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது எமது மகாநாட்டின் அடிப்படையாக உள்ள கொள்கைரீதியான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளங்களாக பாதுகாத்து வளமடையச் செய்கிறது.

1985-86 இன் பிளவு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான்காம் அகிலத்திற்குள் இருந்த திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் உச்சக்கட்டமாகும். 1953ம் ஆண்டு மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு தலைமை தாங்கியவரும் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் நிறுவனருமான ஜேம்ஸ் பி. கனன் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் கோரிய பெரும் திருத்தல்வாதங்களை எதிர்த்தார். நான்காம் அகிலத்தை உடைப்பதற்கான பப்லோ மற்றும் மண்டேலின் முயற்சியை எதிர்கொண்ட கனன் தன்னுடைய “பகிரங்கக் கடிதத்தின்” மூலம் உலகெங்கிலும் இருக்கும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை திருத்தல்வாத வேலைத்திட்டத்திற்கு எதிராக ஐக்கியப்படுத்தி அனைத்துலகக் குழுவை நிறுவினார். பப்லோவாதப் போக்கு, ஒரு குட்டி முதலாளித்துவ, சந்தர்ப்பவாத எதிர்ப்பினை நான்காம் அகிலத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்திற்கு எதிராக பிரதிநிதித்துவப்படுத்தியது. “பழைய ட்ரொட்ஸ்கிசத்தை குப்பையில் எறியப்போவதாக” பகிரங்கமாக அதன் நோக்கத்தை அறிவித்து, அது நான்காம் அகிலத்தின் புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்தையும் அதன் தொழிலாள வர்க்கத்துடனான நோக்குநிலையையும் நிராகரித்தது. லியோன் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட அக்டோபர் புரட்சிக்கு வழிகாட்டிய அதிகாரத்திற்கான போராட்ட வரலாற்று வேலைத்திட்டத்தின் அடிப்படையை அது நிராகரித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்திய ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம் மற்றும் முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்கான ஒரு பிற்சேர்க்கையாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை இத் திருத்தல்வாதப்போக்கு பலவீனப்படுத்த முற்பட்டது.

SWP 1950 களில் பப்லோ மற்றும் மண்டேலுடன் பிளவுற்ற காலத்தில் கொண்டிருந்த கொள்கைகளில் இருந்து பின்வாங்கியது. 1953 பிளவிற்கு வழிவகுத்த முக்கிய வேலைத்திட்ட பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க மறுத்து, SWP 1963ல் திருத்தல்வாதிகளுடன் கொள்கையற்ற மறு ஐக்கியத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்தக் காட்டிக் கொடுப்பு அனைத்துலகக் குழுவின் ஜெரி ஹீலியின் தலைமையிலிருந்த பிரிட்டிஷ் பிரிவினால் எதிர்க்கப்பட்டது. சர்வதேச அரசியல் சக்திகளின் உறவானது திருத்தல்வாதிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், கொள்கையற்ற கோட்பாடுகளுக்கு எதிரான ஹீலியின் போராட்டம், நான்காம் அகிலம் கலைக்கப்படுவதை தடுத்து அனைத்துலகக் குழுவிற்கு புதிய சக்திகளைக் கொண்டு வந்தது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் நிகழ்த்திய போராட்டத்தில் இருந்து நேரடியாக வேர்க்கஸ் லீக் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) 1966ல் நிறுவப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் மற்றய பிரிவுகள் இலங்கை, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வளர்ச்சியுற்றன. 1970களில் பிரிட்டிஷ் பிரிவானது தொழிலாளர் புரட்சிக் கட்சி என்று புதிதாக பெயரிடப்பட்டதுடன், பப்லோவாதிகளுடன் நெருக்கமாக ஒத்திருந்த அரசியல் கருத்தாய்வுகள் பக்கம் நகர்ந்தது. பிரிட்டிஷ் தலைமை பெருகிய முறையில் தேசியவாத நோக்குநிலையை ஏற்றது. சர்வதேச இயக்கத்தை அது இங்கிலாந்தில் உள்ள கட்சியின் வளர்ச்சிக்கு ஒரு இணைப்பு என்று தான் கருதத் தலைப்பட்டது.

தன்னுடைய இந்தப் பாதையை தொடர்கையில், தொழிலாளர் புரட்சிக் கட்சி அமெரிக்காவின் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கஸ் லீக்கிடமிருந்து உறுதியான எதிர்ப்பை எதிர்கொண்டது. அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் ஒரு எதிர்போக்கைத்தான் வளர்த்து வந்தனர். 1970 கள் முழுவதும் வேர்க்கஸ் லீக்கானது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்கள் உய்த்து உணரப்படுவதை, குறிப்பாக பப்லோ-மண்டேல் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை அதன் மையப் பணியாக தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதை உறுதியாகச் செயல்படுத்தியது.

1982ல் ஆரம்பித்த இந்த எதிர்ப்பு ஒரு பகிரங்க வெளிப்பாட்டை வேர்க்கஸ் லீக்கின் தேசிய செயலாளராக இருந்த தோழர் டேவிட் நோர்த்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட முழுத் திறனாய்வில், WRP யின் கோட்பாடுகள் மற்றும் அரசியல் திசைவிலகல்கள் பற்றியதில் கண்டது. WRP ஆனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை கைவிட்டுவிட்டது என்பதை நோர்த் அம்பலப்படுத்தியதோடு, அதேபோல் பப்லோவாத இயக்கத்தின் சீரழிவிற்கு இணையான வழிவகைகளில் அது முதலாளித்துவ தேசியவாதத்தை ஏற்றது என்பதையும் அம்பலப்படுத்தினார். WRP யின் அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் ஹீலியின் அகநிலைக் கருத்துவாதப் போக்கில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் அபிவிருத்தி செய்யப்பட்ட சடவாத மெய்யியலின் சிதைவிற்கு உட்படுத்தப்பட்டதற்கிடையே இருந்த உறவுகள் பற்றியும் பகுத்தாராய்ந்தார். இந்தக் கோட்பாட்டு சீரழிவு மார்க்சிசத்தின் மீதான பரந்த தாக்குதலுக்கு இணையாக இருந்தது. குறிப்பாக வரலாற்று சடவாதம் பற்றியதாகும். இவை “மேலைத்தேச மார்க்சிசம்” என்று அழைக்கப்பட்ட பிராங்க்பேர்ட் பள்ளியின் செல்வாக்கின் கீழ் நடத்தப்பட்டன.

இத்தகைய பப்லோவாதத்தின் பக்கம் திரும்பிச் சென்றதற்கான தீவிர கோட்பாட்டு அரசியல் திறனாய்வுகளை, 1982 அக்டோபர் முதல் 1984 பெப்ருவரி வரை வேர்க்கஸ் லீக்கினால் எழுப்பியதை, விவாதிக்க ஹீலி மறுத்ததானது WRP க்குள் பெருகிய அரசியல் பிரச்சினைகளை கடக்கும் வாய்ப்பைக் குறைத்துவிட்டது. இதையொட்டி அமைப்பு தொடர்பான நெருக்கடிக்கு அரங்கம் அமைக்கப்பட்டது. அது 1985 கோடை காலத்தில் பிரிட்டிஷ் பிரிவிற்குள் வெடித்தது. இந்நிலையில், முந்தைய மூன்று ஆண்டுகளில் நோர்த் அபிவிருத்தி செய்திருந்த திறனாய்வு விரைவில் அனைத்துலகக் குழுவின் ஆதரவைப் பெற்று அனைத்துலகக் குழுவிற்குள் ஒரு புதிய ட்ரொட்ஸ்கிச பெரும்பான்மை உருவகத்தைப் பெறுவதற்கு அடித்தளமாயிற்று. இது WRP யின் தலைமையில் இருந்த சந்தர்ப்பவாதிகளை ஒரு தற்காப்பு நிலைக்கு இட்டுச்சென்றது.

அனைத்துலகக் குழுவிடம் இருந்து முறித்துக்கொண்ட அனைவரும் விரைவில் வலதிற்கு மாறி பின்னர் சிதைவுற்றனர். WRP யின் உடைவில் இருந்து வெளிப்பட்ட ஒரே உயிர்வாழக்கூடிய அரசியல் போக்கானது, டேவ் ஹைலண்டின் தலைமையில் பிரிட்டிஷ் தோழர்களை கொண்ட ஒரு பாரிய குழுவை தோற்றுவித்தது. அவர் அனைத்துலகக் குழுவின் பெரும்பான்மைக்கும் மற்றும் சர்வதேச முன்னோக்கிற்கும் ஆதரவைக் கொடுத்திருந்தார்.

தொழிலாள வர்க்கத்திற்கும் மார்க்சிசத்திற்குமான பிளவின் முக்கியத்துவம் அதன் உடனடித் தன்மையில் வெடித்த பெரும் வரலாற்று நிகழ்வுகளினது எதிர்பார்ப்பில் நிரூபணமானதுதான். 1953ல் பப்லோவாதிகளுடன் பிளவு ஸ்ராலினிசத்தின் வரலாற்றுத் தன்மை வாய்ந்த நெருக்கடிக்கு முன்னே நடந்தது போல், 1953ல் கிழக்கு ஜேர்மனியில் தொழிலாளர்கள் எழுச்சி, 1956ல் ஹங்கேரி, போலந்தில் தொழிலாளர் எழுச்சிகள் மற்றும் ஸ்ராலினுடைய பல குற்றங்களை அம்பலப்படுத்திய குருச்ஷேவின் உரை ஆகியவை இணைந்து இருந்தது போல், WRP உடனான பிளவும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடி அதன் இறுதிக் காலத்தில் நுழைந்தபோது ஏற்பட்டது. அது பின்னர் அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்து முதலாளித்துவத்தை மீட்க வழிவகை செய்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் சரிவு தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒவ்வொரு தலைமையையும் பீடித்திருந்த பரந்த நெருக்கடியின் ஒரு பகுதியாகும் --ஸ்ராலினிஸ்டுகளிலிருந்து சீர்திருத்தவாதிகள் மற்றும் அமெரிக்காவில் இருந்த கம்யூனிச எதிர்ப்பு AFL-CIO அதிகாரத்துவம் வரை-- இவை அனைத்தும் தங்களை தேசிய வேலைத்திட்டத்தில் தான் இருத்திக் கொண்டன. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக முதலாளித்துவ உற்பத்தி முறையில் முன்னோடியில்லாத வகையிலான பூகோள ஒருங்கிணைப்பு இந்த தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டங்களை காலம் கடந்தவை என்று அம்பலப்படுத்திவிட்டது.

பிளவின் அடிப்படை எல்லைக்கோடு ஒருபுறத்தில் புரட்சிகர சர்வதேசியவாதம், மறுபுறத்தில் தேசிய சந்தர்ப்பவாதம் என்று இருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளின் பெரும்பான்மையானது சர்வதேசியத்தை பாதுகாத்து, இயக்கத்தைப் புறநிலையில் உள்ள ஆழ்ந்த மாற்றங்களுக்கு ஏற்பவும், பெரும் புரட்சிகரத் திறனுடனும் இணைத்தது. பிளவைத் தொடர்ந்து பெரும் கோட்பாட்டு மற்றும் அரசியல் ஆவணங்கள் அனைத்துலகக் குழுவினால் தயாரிக்கப்பட்டவை வெளிவந்தன. இவை ஒரு புரட்சிகர சர்வதேச முன்னோக்கிற்கான சக்திவாய்ந்த புதுப்பித்தலுக்கு அஸ்திவாரங்களை தோற்றுவித்தன.

இதன் முக்கிய அரசியல் ஆண்டு நிகழ்வை நடத்துகையில், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள தோழர்களின் பெரும் பங்களிப்பிற்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. அவர்கள் 1985-86 போராட்டத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஜேர்மனிய பிரிவின் பீட்டர் சுவார்ட்ஸ் மற்றும் உலி ரிப்பேர்ட், ஆஸ்திரேலிய பிரிவின் நிக் பீம்ஸ், WRP சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக பிரிட்டனில் எதிர்ப்பிற்கு தலைமை தாங்கிய டேவ் ஹைலன்ட் மற்றும் கிறிஸ் மார்ஸ்டன் ஆகியோர்.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பிளவு ஆண்டு நிறைவைக் குறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியின் இலங்கையின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரியாவின் நினைவிற்கும் புகழாரம் சூட்டுகிறது. டிசம்பர் 1987ல் 39 வயதிலே நிகழ்ந்த அவருடைய மறைவு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்த அதன் பெரும் தலைவர்களில் ஒருவரை எடுத்துக் கொண்டுவிட்டது.

1964ல் லங்கா சம சமாஜக் கட்சியின் பெரும் காட்டிக் கொடுப்பிற்கு முற்றிலும் எதிரான விதத்தில் அரசியல் கொள்கைகளை உறுதிப்படுத்திய தோழர் கீர்த்தி நிரந்தரப் புரட்சி முன்னோக்கைக் விட்டுக்கொடுக்காது பாதுகாத்தவர் ஆவார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இது அவரை WRP தலைமையுடன் மோதலுக்கு இட்டுச்சென்றது. WRP ஆனது இன்னும் வெளிப்படையாக ஸ்ராலினிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தை ஏற்ற நிலையில் இருந்தது. 1985ல் தோழர் கீர்த்தி ட்ரொட்ஸ்கிசத்திற்கு தன் பெரிய பங்களிப்பைக் கொடுக்கும் விதத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பெரும்பாலான பிரிவுகளை WRP இன் தேசிய சந்தர்ப்பவாத தலைமைக்கு எதிராக அணிதிரட்டி, தன்னுடைய பப்லோவாதத்திற்கு எதிரான நீண்டகால போராட்ட அனுபவத்தையும் இந்தப் போராட்டதிற்குள் கொண்டு வந்தார்.

1985-86 பிளவின் நீண்டகாலவிளைவுடைய தாக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் கடக்கப்படும் போதும் இன்னும் தெளிவாகின்றன. 1986-86 பிளவு அனைத்துலகக் குழுவை நடைமுறையில் ஐக்கியப்பட்ட சர்வதேச இயக்கமாக மாற்றுவதை கொண்டுவர முடிந்தது. இது சோசலிச சமத்துவக் கட்சி நிறுவப்படவும், உலக சோசலிச வலைத் தள அபிவிருத்திக்கும் வழிவகுத்தது.

இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே உலகில் தன்னுடைய பணியை மார்க்சிச வேலைத்திட்டம், கோட்பாடு, கொள்கைகள் மற்றும் மரபின் அடிப்படையில் பின்பற்றும் கட்சி ஆகும். உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடித் தன்மைகளின் கீழ், ஒரு புதிய சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி வரவிருக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் பதாகையின் கீழ் பெரிதும் முழு நனவுடைய, சுய தியாகமும் போர்க்குணம் மிக்கதுமான தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளை ஈர்த்தெடுக்கும்.