World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Genius Within: The Inner Life of Glenn Gould

திரைப்படத்தின் ஓர் உள்ளார்ந்த பார்வை

By Joanne Laurier
10 September 2010

Back to screen version

அமெரிக்காவின் பல நகரங்களில் விரைவில் Genius Within: The Inner Life of Glenn Gould ஆவணப்படம் வெளியிடப்பட உள்ள நிலையில், 2009ஆம் ஆண்டு டொரோண்டோ திரைப்பட விழாவைப் பற்றிய கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கருத்துரை வெளியிடப்படுகிறது.

கனடாவின் ஆவணப்பட இயக்குனர்களான மெக்கேல் ஹோஜர் மற்றும் பீட்டர் ரேமாண்ட்டின் Genius Within: The Inner Life of Glenn Gould ஆவணப்படம் இதற்கு முன்னர் பார்த்திராத கௌல்டின் அடிச்சுவடுகளையும், அத்துடன் நூற்றுக்கணக்கான புகைப்படங்களையும், அவருடைய பிரத்யேக வீட்டின் மற்றும் கலைக்கூட பதிவுகளின் துணுக்குகளையும் கொண்ட ஒரு தொகுப்பாக இருக்கிறது. இதில் இடம்பெற்று கருத்துக்களைக் கூறும் முக்கிய பிரபலங்களில் ஒருசிலரின் பெயரைக் குறிப்பிடுவதானால், பிரபல இசை அமைப்பாளரும், பியானோ வாசிப்பாளரும், இசை நிகழ்ச்சியாளருமான லூகாஸ் இஃபோஸின் மனைவியும், ஓர் ஓவியருமான கார்னீலியா இஃபோஸ், ஒரு ஹங்கேரிய பெண் பாடகியான ரோக்ஸோலானா ரோஸ்லாக், பாப் இசை பாடகி பெடூலா கிளார்க் மற்றும் ரஷ்ய இசை நிகழ்ச்சியாளரும், பியானோ வாசிப்பாளருமான விளாடிமீர் அஸ்கினாஜி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பியானோ வாசிப்பாளர்களில் ஒருவரான கௌல்ட் (1932-1982) மிக அசாதாரணமானவராகவும், தனித்துவம் பெற்றவராகவும் இருந்தார். இந்த ஆவணப்படம் அவருடைய வாழ்க்கையையும், தொழிலையும் ஆராய்கிறது. மேலும் 1957இல் மாஸ்கோ மற்றும் லெனின்கிரார்டில் அவர் நிகழ்த்தியிருந்த வரலாற்று சிறப்புமிக்க எட்டு இசை-நிகழ்ச்சிகளையும் இந்த ஆவணப்படம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இவற்றில் கௌல்ட், ஓர் உற்சாகமான பரந்த மக்கள் கூட்டத்தினரின் முன்னிலையில் பாஹ் (Bach – இவர் கலை, கலாச்சாரங்களுக்கு விரோதமான ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால், மதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஓர் இசையமைப்பாளராக பார்க்கப்பட்டவர்) இசையை நிகழ்த்தினார். கௌல்டும், சோவியத் பியானோ வாசிப்பாளரான ஸ்வட்டோஸ்லவ் ரிச்டரும் இணைந்திருக்கும் புகைப்படம், இரண்டு தலைச்சிறந்த இசையமைப்பாளர்களின் சந்திப்பை ஆவணப்படுத்தி உள்ளது.

பெரும் சர்ச்சைக்குரிய இசைநிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட, 1962 நியூயோர்க் பெல்ஹர்மோனிக் இசைநிகழ்ச்சியும் இப்படத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக கையாளப்பட்டிருக்கிறது. கௌல்டை அறிமுகப்படுத்துகையில் இசைநிகழ்ச்சியாளர் லியானோர்ட் பெர்ன்ஸ்டினால் அளிக்கப்பட்ட கருத்துக்கள் மிகவும் பிரபலமானவை: “கலவரப்பட வேண்டாம். திரு. கௌல்ட் இங்கே தான் இருக்கிறார்... நீங்கள் கேட்க இருப்பதை, இன்னும் வேறுவிதமாக நான் கூறுவதானால், பிரஹ்ம்ஸ் டி மேனர்* இசை நிகழ்ச்சியின் மரபுகளைக் கடந்த இசையை, நான் இதுவரை கேட்டிருக்காத அல்லது அதற்காக கனவு கண்டு கொண்டிருந்த முற்றிலும் வித்தியாசமான ஓர் இசைநிகழ்ச்சியைக் கேட்க இருக்கிறீர்கள். ... ஆனால், 'ஓர் இசை நிகழ்ச்சியில், கதாநாயகர் யார், இசைப்பவரா அல்லது இசை நிகழ்ச்சியாளரா?' என்ற நீண்ட-கால கேள்வி மட்டும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ... ஓர் சிந்தனைக் கலைஞராக விளங்கும் இந்த அசாதாரண கலைஞரிடமிருந்து ஏதோவொன்றை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள முடியும்.”

சமீபத்தில் வெளிவந்திருந்த கார்னீலியா இஃபோஸூடனான கௌல்டின் ஐந்து வருட விவகாரம், முன்கூட்டி தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக படத்தில் இடம் பெற்றுள்ளது. (அவருடைய கணவரும், இசையமைப்பாளரும், இசைநிகழ்ச்சியாளரும் மற்றும் பியானோ வாசிப்பாளருமான லூகாஸ் இஃபோஸ் 2009 பெப்ரவரியில் தான் இறந்தார்). இஃபோஸ் அவருடைய குழந்தையுடன் பேசுவது போல கௌல்டுடன் அன்பாக பேசுகிறார். அவருடைய கணவரின் இசையால் ஈர்க்கப்பட்டவராக கௌல்ட் இருந்தார். கார்னீலியா மற்றும் லூகாஸ் இருவரின் குடும்பங்களும் நாஜி ஜேர்மனியிலிருந்து வெளியேறி இருந்தன.

ஒலிப்பதிவு கூடத்திற்காக பொது இசைநிகழ்ச்சிகள் நடத்தப் போவதில்லை என்று 1964இல் அவர் எடுத்த தீர்மானமும் Genius Withinஇல் எடுத்தாளப்பட்டிருக்கிறது. கௌல்டின் தொழில்வாழ்வில் ஏறத்தாழ முக்கியத்துவமிக்க சம்பவமாக அது கருதப்படுகிறது. உணர்வுபூர்வமான காரணிகளுக்கு அப்பாற்பட்டு, டொரோண்டோவில் பிறந்த அந்த பியானோ வாசிப்பாளர், ஓர் இசைநிகழ்ச்சியாளருக்கும், இரசிகர்களுக்கும் இடையிலான உறவை அவருடைய பார்வையாளருக்கும், ஓர் எருது அடக்கும் வீரருக்கும் (bullfighter) இடையிலான தன்மைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். இந்த உவமை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஒலிப்பதிவு மிகவும் ஜனநாயகத்தன்மையோடும், ஒவ்வொருவரும் கையாளக்கூடிய தொழில்நுட்பத்தோடும், அதன் காலத்தில் உணர்வுபூர்வமாகவும் இருந்ததாக அவர் கருதினார்.

கார்னீலியா இஃபோஸ் கூறுகையில்:“போலித்தனமான எதுவுமே அவருக்குத் தொல்லை அளித்தது,” மேலும் பிரபலத்தை விரும்பாத தன்மையும், இனி அரங்கம் ஏறப்போவதில்லை என்ற அவருடைய முடிவில் பங்கு வகித்தது. கௌல்ட்டின் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பும், அவர் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்த மருத்துவ சிகிச்சைகளும் அவருக்கும், இஃபோஸிற்கும் இடையிலான உறவை முடிவுக்குக் கொண்டு வந்தன.“ஈடிணையற்ற மனிதர்" என்று கௌல்டைக் குறிப்பிட்டிருக்கும் இப்படம், அவருடைய இசை மேதமைக்கு அப்பாற்பட்டு, கவர்ந்திழுப்பதில் கௌல்ட் என்ன வித்தையைக் கொண்டிருந்தார்? என்று கேள்வியை எழுப்புகிறதோயொழிய, அதற்கான பதிலை அளிக்கவில்லை.

1960கள் குறித்தும், ஒரு தட்டுத்தடுமாறிய வகையில் தன்னுடைய கலையை ஆழமாக கையிலெடுத்த ஒரு மனிதரைக் குறித்து சுவாரசியமான கேள்விகளை எழுப்புவதிலும் Genius Within மேலோட்டமாக இருக்கிறது. ஆனால் அந்த கலைஞரின் காலகட்டத்தில் எழுச்சிகளுடன் முரண்பாடாக இருந்தவைகளை, மிக ஆழமான விதத்தில், தொடர்புபடுத்தி இன்னும் செய்திருக்கலாம்.