சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Tens of thousands in Germany protest “Stuttgart 21” railway project

“ஸ்ருட்கார்ட் 21” தொடரூர்ந்துத் திட்டத்தை எதிர்த்து ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

By Peter Schwarz
20 September 2010

Use this version to print | Send feedback

ஸ்ருட்கார்ட் முக்கிய தொடரூர்ந்து நிலையத்தை திருத்திக்கட்டுவது குறித்த பூசல் இப்பொழுது ஜேர்மனிய அரசியல் அமைப்புமுழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சான்ஸ்லர் மேர்க்கெல் தன்னுடைய அரசியல் தலைவிதியை நேரடியாக இந்த விவாதத்திற்குரிய “ஸ்ருட்கார்ட் 21”திட்டத்துடன் பிணைத்துள்ளார். இப்பிரச்சினை பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைச் சமீபத்திய வாரங்களில் தெருக்களுக்கு வரவைத்துள்ளது.

பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட விவாதத்தின்போது மேர்க்கெல் ஸ்ருட்கார்ட்டின் புதிய முக்கிய தொடரூர்ந்து நிலையம் பல பில்லியன் செலவில் கட்டப்படுவதைக் பாதுகாத்துப் பேசினார். இதற்காக ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் நிராகரித்தார்; ஏனெனில் அடுத்த மார்ச் மாதம் மாநிலத் தேர்தல்கள் வருகின்றன என்றும் அதுவே “ஸ்ருட்கார்ட் 21’ திட்டம் பற்றிய பொதுஜன வாக்கெடுப்பிற்கு ஒப்பாகும் என்று கூறிவிட்டார்.

1952 ல் இருந்து தொடர்ந்து அதிகாரத்தில் இருந்துவந்துள்ள பாடன் வூட்டெம்பேர்க் மாநில தேர்தல்களில் தோற்றால் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மேர்க்கெல் CDU தலைவர், மற்றும் சான்ஸ்லர் என்ற தன் பதவியைத் தொடர்வது அநேகமாக இயலாமற் போய்விடும்.

பாடன் வூட்டெம்பேர்க் மாநிலத்தின் தலைநகரான ஸ்ருட்கார்ட் பல மாதங்களாக அலையென எதிர்ப்புக்களைக் கொண்டுள்ளது; இத்தகைய எதிர்ப்புக்கள் ஜேர்மனியில் 1970, 1980 களின் சமாதானம் மற்றும் அணுவாயுத எதிர்ப்பு இயக்கத்திற்குப் பின் காணப்பட்டதில்லை. ஒவ்வொரு வாரமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்திய தொடரூர்ந்து நிலையத்திற்கு முன் நின்று அது தகர்க்கப்படுவதைத் தடுப்பதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையில் பல கணக்கிலடங்கா சிறிய எதிர்ப்புக்களும் “Schwabenstreich” எனப்பட்டவை, மாலை 7 மணிக்கு ஒவ்வொரு நாளும் கால்களைத் தரையில் உதைத்தல், தட்டு, பானைகளை ஓசைப்படுத்துதல், வாகன ஒலிப்பான்களை உரத்து ஒலித்தல் ஆகியவையும் நடந்தேறின. பல நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கட்டிடப்பகுதியில் நுழைந்து அதை ஆக்கிரமித்துதிருந்த போது பொலிசுடன் மோதல்களும் நிகழ்ந்தன.

இதில் பங்கு பெற்றவர்கள் பல சமூகத் தட்டுக்களில் இருந்து வந்தவர்கள்; அவர்களுள் மத்தியதர, மத்தியதர உயரடுக்கினரும் இருந்தனர். “ஒரு முதலாளித்துவ எழுச்சி” என்று Der Spiegel இதை விவரித்தது. நடிகர்கள், கட்டிடக்கலை வல்லுனர்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்று பலரும் இதில் தீவிரமாக உள்ளனர். முன்னாள் Daimler நிறுவன உயரதிகாரி எட்சார்ட் ராய்ட்டர் கூட கட்டமைப்பு முடக்கப்பட வேண்டும், ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அழைப்புவிடுத்த மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

தெருக்களுக்குப் பலரைக் கொண்டு வந்த்தற்கு பலவித உந்துதல்கள் உள்ளன.

பொதுவாக ஒரு பல மில்லியன்கள் செலவாகும் “ஸ்ருட்கார்ட் 21’' சிறப்புத் திட்டம், ஆனால் சில நலன்களையே கொண்டுவரும் என்று கருதப்படுகிறது; அதே நேரத்தில் பொதுப் போக்குவரத்தை அபிவிருத்திசெய்வது, பள்ளிகள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அமைப்பது போன்ற அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய பல உள்கட்டுமானங்கள் வேலைகள் பணம் இல்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வமாக தொடரூர்ந்து நிலையத்தை நிலத்தடிக்கு நகர்த்துவது மற்றும் நகரத்தின் கீழே விமான நிலையத்திற்கு ஒரு நிலத்தடிப்பாதையை அமைத்தல் என்பதற்கு 4.1 பில்லியன் யூரோக்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது நகரவை, மாநிலம் மற்றும் கூட்டாட்சி அரசாங்கங்களால் கொடுக்கப்படும்: அதைத்தவிர ஜேர்மனிய தேசிய தொடரூர்ந்து நிறுவனமான Deutsche Bahn உம் பகிர்ந்து கொள்ளும். ஆரம்பத்தில் இது 2.6 பில்லியன் யூரோக்கள் “மட்டுமே” செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. வல்லுனர்கள் இப்பொழுது உல்ம் நகரத்திற்கு புதிய அதிவிரைவு தொடரூர்ந்துபாதை அமைக்கப்படுவது உட்பட மொத்தச் செலவு 10 பில்லியன் யூரோக்கள் ஆகும் என்று நம்புகின்றனர். இதற்கு காரணம் கடினமான நிலப்பகுதி நிலைமையாகும்.

சரக்குப் போக்குவரத்து விரிவாக்கம், சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் நெரிசலைத் தவிர்ப்பதற்கு என்ற விதத்தில் புதிய கட்டமைப்பு, சீரமைப்புத் திட்டங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல்தான் உள்ளூர் போக்குவரத்து திட்டங்களும் நகரவை, மாநிலத்தின் முக்கிய முதலீடுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

புதிய மாறி ஏறும் நிலையம் தற்பொழுதுள்ள 17 என்பதற்குப் பதிலாக எட்டு தடங்களை மட்டுமே கொண்டிருக்கும். எதிர்ப்பாளர்கள் நகர்ப் போக்குவரத்தில் நெரிசல் பெருகும் என்றும் அஞ்சுகின்றனர். ஸ்ருட்கார்ட் அதிவிரைவு பாரிஸ்-புடாபெஸ்ட் அதிவிரைவுப் பாதையுடன் பிணைக்கப்படும் என்றாலும், நீண்டதூரப் பயணங்கள் சில நேரம் குறையும் என்றாலும், நகர்ப்பகுதிகளில் உள்ள பிராந்தியப் போக்குவரத்து சிக்கலுக்குட்படும். புதிய தொடரூர்ந்து நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட திறனையொட்டி ஸ்விஸ் கூட்டாட்சி தொடரூர்ந்துகளின் வெற்றிக்குக் கணிசமான பங்களித்துள்ள புதிய ஒருங்கிணைந்த கால அட்டவணை, குறுகியகால மாற்றுநேர வசதி கொடுப்பது வழங்கமுடியாது.

திட்டத்தை முன்வைக்கும் நகரத் திட்ட அதிகாரிகளின் வாதங்கள் எதிர்ப்பாளர்களை நம்ப வைக்க முடியாதுள்ளது. நிலத்திற்கு மேல் உள்ள பெரிய பகுதி பழைய நிலையத்தின் தடங்களை அகற்றுவதின் மூலம் காலியாகும்; அவை புதிய கடைகள் வளாகங்கள் மற்றும் அடுக்கு வீடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் Deutsche Bahn அதிக இலாபத்தை ஈட்ட முற்படுகிறது. ஆனால் இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று கூறவதற்கு இல்லை. பாரிய கட்டமைப்புப் பணிகள் பல ஆண்டுகள் நகரத்தை ஓசையிலும், புழுதியிலும் ஆழ்த்தும்.

“ஸ்ருட்கார்ட் 21” ன் எதிர்ப்பாளர்கள் சுற்றுச் சூழல், பாதுகாப்பு ஆகிய கவலைகளாலும் உந்துதல் பெற்றுள்ளனர். இப்பொழுது ஐரோப்பாவில் இரண்டாவது பெரியதாக உள்ள நிலத்தடி நீர் மற்றும் ஸ்ருட்கார்டின் தாதுப்பொருள் நிறைந்த நீரூற்றுக்களின் தரம் தொடரூர்ந்து நிலத்தடிபாதைகளுக்காக நிலத்தடி நீரோட்டங்கள் குழப்பப்பட்டால் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. தற்பொழுது ஒருபக்கப் பிரிவு இடிக்கப்படும் தொடரூர்ந்து நிலையம் ஒரு கலாச்சார நினைவு என்றும் போற்றப்படுகிறது. நகரத்தின் பல பூங்காப் பகுதிகளில் உள்ள மரங்களும் புதிய கட்டிடவேலைகளால் பாதிப்பிற்கு உட்படும்.

இறுதியாக பொறியியல் வல்லுனர்கள் மண்ணின் உயர்ந்தளவிலான அன்ஹைட்ரைட் தாதுப்பொளுள் பல பாதுகாப்பு ஆபத்துக்களை எழுப்பும் என்று அஞ்சுகின்றனர். இத்தாதுப்பொருள் ஈரப்பசைக்கு உட்பட்டால் 50 சதவிகிதம் விரிவடைந்து, அதன் வழியில் வரும் எதையும் தகர்த்துவிடும். இக்காரணத்திற்காகத்தான் புதிய தொடரூர்ந்து நிலையம் கட்டுவதற்கான போட்டியில் கூட்டுவெற்றி பெற்ற கட்டிடக்கலை வல்லுனர் Frei Otto திட்டத்தில் இருந்து விலகிவிட்டார். ஆனால் அவருடைய வரக்கூடிய ஆபத்துக்கள் பற்றிய எச்சரிக்கைகள் செவிடர் காதில் கூறியதுபோல் உள்ளன.

ஆனால் இக்காரணிகள் அனைத்தும் ஏன் பல்லாயிரக்கணக்கான மக்கள் 15 ஆண்டுகளாக திட்டமிடப்படுவதை எதிர்த்து நிற்கின்றனர் என்பதை விளக்கப் போதுமானவை அல்ல. இறுதித் துரும்பு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீண்பெருமையும், திமிர்த்தனப் போக்கும்தான் என்று உள்ளது. “ஸ்ருட்கார்ட் 21” ஒரு “எதையும் பொருட்படுத்தாத தன்னலக்குழுப் பொருளாதாரத்திற்கு உவமையாகிவிட்டது, சிறிதும் கவலைப்படாத திமிர்பிடித்த வர்க்கத்தின் மொத்த உருவகமாக உள்ளது” என்று Frankfurther Rundschau பத்திரிகை எழுதியுள்ளது.

இத்திட்டமிடல் எவ்வித பொது விவாதமும் இன்று நடைபெற்றது. கடந்த 60 ஆண்டுகால CDU ஆட்சியில் தோன்றியுள்ள Spastzle தொடர்பு [ஒரு உள்ளூர் சிறப்பு உணவு வகை] வகையை ஒட்டி இது நடந்துள்ளது. Frankfurter Rundschau கருத்துப்படி, “இதில் பழைய மாநிலப் பிரதம மந்திரிகள், மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர்கள், நகரமுதல்வர்கள், வங்கியாளர்கள், முதலாளிகள் ஆகியவர்கள் அடங்குவர். இவர்களில் 11 பேர் தற்செயலாக Stutgart 21 ஆதரவாளர் குழுவில் காணப்படமுடியும். அல்லது ஸ்ருட்கார்ட் நகரவை நிதிய இயக்குனர் மிகையில் வொல் தற்போதைய தொடரூர்ந்து நிலையத்தின் வடக்குப் பிரிவு கட்டிடத்தை தகர்ப்பதற்கான ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலும் இருகின்றார்.”

60,000 பேர் கையெழுத்திட்ட ஒரு மனு, 21,000 கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை நிராகரித்த அதே திமிர்ப்போக்கினால் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. சமூக ஜனநாயகக் கட்சியும்(SPD) இந்த “spatzle தொடர்பு” என்னும் சேற்றில் ஆழ்ந்துள்ளது. இது “ஸ்ருட்கார்ட் 21” க்கு முழு ஆதரவைக் கொடுத்திருந்தது, ஆனால் எதிர்ப்பு மிகவும் வெளிப்படையானதும் தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளது. இப்பொழுது அது திட்டம் பற்றி ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்காமல் ஒரு வாக்கெடுப்பிற்கு அழைப்புவிடுகின்றது.

“ஸ்ருட்கார்ட் 21” எதிர்ப்புக்கள் கற்பனையும், பலம்மிகுந்தவையாக இருந்தாலும், அவற்றின் முன்னோக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். பசுமைக்கட்சிதான் இதில் ஆதாயம் பெறுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. Infratest Dimap சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பு கட்சிக்கு 27% ஆதரவு என்று காட்டுகிறது; இது ஆளும் CDU வை விட எட்டு புள்ளிகள்தான் குறைவு, ஆனால் SPD (21 புள்ளிகளை) யை விட அதிகம். தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு 5 சதவிகிதம் கிடைத்துள்ளது; இது கட்சி போதுமான வாக்குளை மாநிலச் சட்ட மன்றத்தில் நுழைவதற்குப் பெறுமா என்ற வினாவை எழுப்புகிறது.

இப்போக்குத் தொடர்ந்தால் பசுமைவாதிகள் முதல் முறையாக அடுத்த மாதம் SPD உடைய ஆதரவுடன் மாநிலப் பிரதமரை நியமிக்கும் வாய்ப்பைப் பெறுவர். அவர்களுக்கு ஸ்ருட்கார்ட் நகரசபை தலைவர் பதவியும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது; இந்த நிலையை கட்சி ஏற்கனவே Konstaz, Freiburg, Tubingen நகரங்களில் கொண்டுள்ளது.

“ஸ்ருட்கார்ட் 21”இன் விளைவாக ஒருவேளை மேர்க்கெல் வீழ்த்தப்பட்டால், 2005ல் அதிகாரத்தில் இருந்து வீழ்ச்சியுற்ற பின்னர், கூட்டாட்சி அரசாங்கத்திற்கு திரும்பும் வாய்ப்பாகவும் பசுமைவாதிகள் இதை முக்கியமாகக் காண்கின்றனர். அவர்கள் தங்களை எதிர்ப்பு இயக்கத்தின் தலைமையில் இருத்திக் கொண்டுள்ளது முதலாளித்துவ ஆட்சியையும் அல்லது CDU ஆட்சியை பாதுகாக்கவுமாகும். CDU உடனும் அதன் பவேரியச் சகோதரிக் கட்சியான CSU உடனும் கூடத்தான் ஆட்சி அமைக்க அவர்கள் தயார். இராணுவ சீர்திருத்தம் போன்ற சில விடயங்களில் பசுமைவாதிகள் ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ள வலதுசாரிகளான பாதுகாப்பு மந்திரி தியோடர் சூ கூட்டன்பேர்க் (CSU) போன்றவர்களுடன் SPD அல்லது CDUவின் சில பிரிவுகளிலும் பார்க்க நெருக்கமாக உள்ளனர். .

ஸ்வாபியன் பகுதியின் முக்கிய பசுமைவாதியும், Tubingen நகரசபை தலைவரான பொரிஸ் பால்மர் CDU உடன் ஒரு கூட்டணிக்கான ஆதரவாளர்களில் ஒருவராவார். “புதிய பொருளாதாரத்திற்கு நமக்குப் பெருவணிகத்தின் ஆதரவும் தேவை. இதன் பின் உள்ள அரசியல் ஒன்றாக இருந்தாலும் அது SPD என்பதை விட CDU உடன் இருந்தால் எளிது: ” என்று அவர் taz பத்திரிகையிடம் இடம் கூறினார்.

“ஸ்ருட்கார்ட் 21” ஐத் தாங்கள் நிராகரிப்பதற்கு பசுமைவாதிகள் மாநிலப் பாராளுமன்றப் பிரிவின் தலைவர் யூர்கன் ரிட்டீனின் சொற்களில் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர்: “ஒவ்வொரு யூரோவையும் நீங்கள் ஒருமுறைதான் செலவழிக்க முடியும்.” இது ஒரு கிராமப்புற ஸ்வாபிய வீட்டிற்கு வெளிப்படையாக தெரியும், ஆனால் பொருளாதாரம் முழுவதற்கும் பொருத்தமற்றது என்பது வெளிப்படை. பசுமைவாதிகள் இதே வாதங்களைத்தான் ஷ்ரோடர் சகாப்தத்தில் சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கப் பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் சேமித்த யூரோக்கள் அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தில் சேரவில்லை, மாறாக செல்வந்தர்களினதும் சக்திவாய்ந்தவர்களினதும் பணப்பைக்குள் சென்றடைந்தன.

இரு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் ஒன்ற அல்ல 750 பில்லியன் யூரோக்களை அதுவும் தன்னிடத்தில் இல்லாத பணத்தின் மூலம் வங்கிகளை மீட்க செலவழித்தது. தாங்கள் காப்பாற்ற முற்பட்ட அதே வங்கிகளிடம் இருந்து அதிக வட்டிக்கு பணம் கடன் வாங்கப்பட்டது. அந்த வங்கிகளுக்கோ கூட்டாட்சி வங்கியான Bundesbank இடம் இருந்து மிகக் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தது. தற்கால பொருளாதாரத்தில் பணப்புழக்கம் டிரிட்டினின் வெற்றுப் பேச்சில் உள்ளதைவிட மிகவும் சிக்கல் வாய்ந்தது என்பதற்கு இந்த உதாரணம் மட்டுமே போதும்.

கடன்மூலம் நிதியளிக்கப்படுவது உட்பட நீண்டகால, பெரிய உள்கட்டுமானத் திட்டங்கள் இரு நிபந்தனைகள் பூர்த்தியானால்தான் சமூக மதிப்பினை கொண்டிருக்கும்: முதலாவது வங்கிகள் மற்றும் தனிநபர் இலாபம் ஈட்டுபவர்கள் பொருளாதார வாழ்வின் மீது கொண்டிருக்கும் இரும்புப்பிடி முறிக்கப்பட வேண்டும்; அவர்கள் கொண்டிருக்கும் அனைத்து ஆதாரங்களும் சமூகமயமாக்கப்படல் வேண்டும். இரண்டாவதாக, பொதுமக்கள் திட்டமிடுதல், முடிவெடுத்தல் ஆகியவற்றின் ஜனநாயக முறைப்படி ஈடுபாடு கொள்ள வேண்டும்.

பசுமை வாதிகள் முதல் நிபந்தனையை கடுமையாக நிராகரிக்கின்றனர்; ஏனெனில் அதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் தேவைப்படும். எனவே அவர்கள் இரண்டாவதையும் செய்வதற்கில்லை (அதாவது மக்கள் ஜனநாயக முறையில் பங்கு பெறுவது என்பதை). இதற்கு மீண்டும் மீண்டும் அவர்கள் உறுதியளித்தாலும் நடைமுறையில் இவ்வாறுதான் உள்ளது.

தங்கள் 40 ஆண்டுகால வரலாற்றில் பசுமைவாதிகள் பலமுறையும் தாங்கள் அரசாங்கப் பொறுப்பை எடுத்துக்கொண்டதும் வணிகச் செல்வாக்குக் குழுவின் விசுவாசமான ஊழியர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். போர் எதிர்ப்பு, சுற்றுச் சூழல் இயக்கத்தின் தோள்களில் ஏறி மிக உயர்ந்த அரசாங்கப் பதவிகளைப் பிடித்த பின்னர், அவர்கள் போருக்கு ஆதரவாளர்களாவும், ஷ்ரோடரின் செயற்பட்டியல் 2010, மற்றும் தொழில்துறை “சீர்திருத்தங்களுக்கு” ஆதரவாளர்களாவும் போயினர். இவை அனைத்தும் பெரும் ஆர்ப்பாட்டங்கள், வெகுஜன எதிர்ப்புக்கள் என்று மக்கள் எதிர்ப்பைமீறி செயல்படுத்தப்பட்ன.

ஸ்ருட்கார்ட்டிலும் அவர்கள் வேறுவிதமாக நடந்துவிடப்போவதில்லை. “ஸ்ருட்கார்ட் 21” க்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தின் தோள்களில் அமர்ந்து அரசாங்க அதிகாரத்திற்கு உயர்வதில் அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் துரதிருஷ்டவசமாக திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்ய முடியாது என்று வாதிடுவர். இதைத்தான் அவர்கள் ஏற்கனவே ஹாம்பேர்க்கில் மூர்பர்க் நிலக்கரிச் சக்தி ஆலையிலும், எல்பே ஆறு தூர்வாரப்படுவதிலும் செய்தனர். இவற்றை அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் நிராகரித்திருந்தனர். ஆனால் CDU உடன் மந்திரி அதிகாரப் பதவிகள் வந்ததும் அதைக் காற்றில் பறக்க விட்டனர்.

நீடித்த நகர, சுற்றுச் சூழலுக்கான போராட்டத்திற்கு கற்பனை நயம் மிகுந்த எதிர்ப்பையும் விட அதிகம் தேவைப்படும். இதற்கு தொழிலாளர்கள், இளைஞர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் அனைத்து சமூக, ஜனநாயக வெற்றிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தளத்தைக் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டம் அவசியமாகும். இதனை பசுமைவாதிகள், SPD, இடது கட்சி இன்னும் பிற முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து முழுமையாக சுயாதீனமான ஒரு அரசியல் இயக்கம் வழிநடத்த வேண்டும்.